Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு

செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு

 
 

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.

செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 06 மணியளவில் குறித்த பிள்ளையார் சிலையை அடித்து உடைத்து வீசப்பட்டுள்ளதை உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் நேற்று (12) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.

மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்தகாலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்தை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இப் பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விசக்கிரிமிகள் யாராக இருந்தாலம் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமாக வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.
 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

http://tamil.adaderana.lk/news.php?nid=125641

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.


86473245_860258451091654_898237713549885

செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் கோவில் அமைக்கப்படுள்ளது.


86277758_230240071326662_307664972599105


இன்று காலை 06 மணியளவில் இச்சம்பவத்தை  உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலையை அடித்து  உடைத்து வீசியுள்ளதை அவதானித்துள்ளனர்.


86334755_198537297919016_653321565893767

சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.


86278704_187911752568557_856898457045880

மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்தகாலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்புரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.


"86277758_230240071326662_307664972599105


இப் பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விஷமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமான வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.


86266329_501681793830666_614199470721702


86257505_680213822514390_354400218996382


https://www.virakesari.lk/article/75506

  • கருத்துக்கள உறவுகள்

 நானே சிலரை ஏவி, புத்தசிலையை உடைக்க வைத்து, மத உணர்வை எதிர்ப்பை தூண்டி ஆலயத்தில் குண்டுவைத்து, அங்கு ஒரு பயத்தையும் எதிர்ப்பையும்  எழுப்பி குளிர் காண  முயற்சித்து முடியாமல் போகவே, நானே ஒரு மாயையை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்கள் தாக்கினார்கள் என்று கதையை சோடித்து,வாக்கு அள்ளியதுபோல் நீங்களும் செய்யுங்கள். என்று எஜமான் தன் அடிமைகளுக்கு போதித்திருப்பார். அண்மையில் மாதா சுரூபம்விஷமிகளால் உடைப்பு என்ற செய்தி வந்தது. எதிர்பார்ப்பு பயனளிக்காமல் போகவே    தொடர்ந்து பிள்ளையார் பலி. இவர்களின் அரசியலுக்கு புத்தர், மாதா, பிள்ளையார். எதை சாதிக்கப்போகிறார்கள்? தேவசாபத்தையே தேடப் போகிறார்கள். பிரிவினையில் ஆட்சி அமைக்க முயல்பவர், நாட்டை சுடுகாடாய் ஆக்குகிறார். நாட்டை ஆள்வதற்கு தகுதி அற்றவரே.

மாவனெல்லையில் புத்தர் சிலையையே உடைத்தவர்கள்  இவர்கள்। மாதா சொரூபத்தை உடைப்பதும் பிள்ளையார் சிலையை உடைப்பதும் இவர்களுக்கு பெரிய காரியம் இல்லை। 

  • கருத்துக்கள உறவுகள்

தெருப்பிள்ளையாரையும் விட்டு வைக்கிறாங்கள் இல்லை. பாவம் அந்த மனுசன்.. ஒரு ஓரமா இருந்து தானும் தன்பாடும் என்றிருக்க..

இப்ப தேர்தல் நேரம்.. இப்படிப் பலதும் நடக்கும்.. உது தானே அங்க அரசியல்.

என்ன அல்காவுக்கு சிலை இல்லை.. யாருமே உடைக்கமாட்டாங்கள் என்ற துணிவும் காரணமாக இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.