Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் மீண்டும் வன்முறை- பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் - பலர் காயம்

Featured Replies

ஜேர்மனியில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட  ஊர்வலமொன்றிற்குள் நபர் ஒருவர் வாகனத்தை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

வோல்க்மார்சென் என்ற நகரில் இந்த சம்;பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது திட்டமிட்ட சம்பவமா என்பதை உடனடியாக சொல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


german_carv2.jpeg

ரோஸ் திங்கட்கிழமை என்ற நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே நபர் ஒருவர் தனது வாகனத்தை செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் இடம்பெறவிருந்த அனைத்து ரோஸ்திங்கட்கிழமை ஊர்வலங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதிதடையை தாண்டி குறிப்பிட்ட நபர் தனது வாகனத்தை செலுத்தினார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


"german_car1.jpeg

கடந்த வாரம் இடம்பெற்ற இனவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஜேர்மனி இன்னமும் மீளாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/76403

  • கருத்துக்கள உறவுகள்

arnival-crowd-in-German-town.jpg

மேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்

மேற்கு ஜேர்மனிய நகரமான (Volkmarsen) போக்மாசனில் நடைபெற்ற களியாட்ட விழா ஒன்றில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள் என்றும் அவர்களில் சிலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஜேர்மன் பத்திரிகை பில்ட் (Bild) தெரிவித்துள்ளது.

வெள்ளி நிற மேர்சிடிஸ் கார் ஒன்று பிளாஸ்டிக் தடுப்புக்களைக் கடந்து வேகமாகச் சென்று மக்கள் கூட்டம் மீது மோதியுள்ளது. ஜேர்மன் நேரம் இன்று பிற்பகல் 2:30 க்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

29 வயதுடைய ஜேர்மன் பிரஜையான காரின் சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். எனினும் தாக்குதலின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சாரதி கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கினார் என்று தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை அடுத்து அனைத்துக் களியாட்ட விழாக்களையும் ரத்துச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Volkmarsen.jpg

http://athavannews.com/மேற்கு-ஜேர்மனியில்-மக்கள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.