Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

’மருந்தகங்கள் 3 நாள்களுக்குத் திறக்கப்படும்’
Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:00 - 0      - 13

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள், நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திறக்கப்படவுள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்கள்-3-நாள்களுக்குத்-திறக்கப்படும்/175-247789

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளா மூவரும் மருதானை,யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் 146 பேர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 18 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தற்போது 126 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு, மருத்துவ கண்காணிப்பில் 231 பேர் உள்ளனர்.

அத்தோடு, இருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79093

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

கொரோனா நோயாளி தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கு நோய் அறிகுறி
 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:29

தங்காலை பிரதேசத்தில் சுற்றுலா  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய இருவர் நோய் அறிகுறிகளுடன் இன்று (01) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென,  தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்குச் சென்றிருந்த குறித்த நபர், கடந்த 15,16,17  ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-நயள-தஙகயரநத-ஹடடலல-இரவரகக-நய-அறகற/175-247775

  • தொடங்கியவர்

இலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி!

இவர் கொரொனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார்.

மருதானைப்பகுதியில் இன்று மாலை அடையாளம் காணப்பட்ட 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/79110

  • தொடங்கியவர்

பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்: டொக்டர் சத்தியமூர்த்தி

2020 ஏப்ரல் 02 , மு.ப. 01:05

கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பது பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

தனது பேஸ்புக்கில் இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு:

பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில், மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆகவே, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள். ஆகவே, கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பதமககள-அவதனமக-இரககவம-டகடர-சததயமரதத/71-247803

  • தொடங்கியவர்

யாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கையில் கிடைத்துள்ள நிலையில் மூவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மத போதகர் மேலதிக சிசிக்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிதாக இனங்காணப்பட்ட இருவரும் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அறியமுடிகிறது.

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களே பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

https://www.virakesari.lk/article/79111

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய பொருட் பிரச்சினை குறித்து அறிவிக்க எண்கள்

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு விசேட ஜனாதிபதி செயலணி ஊடக ஒருங்கிணைப்புத் தலைமை அலுவலர், பேராசிரியர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.

எண்கள்,

  • 0113456200
  • 0113456201
  • 0113456202
  • 0113456203
  • 0113456204
  •  

https://newuthayan.com/அத்தியாவசிய-பொருட்-பிரச்/

  • தொடங்கியவர்

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-247814

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், காலணிகள், குழந்தை மற்றும் வெளிப்புறம்

  • தொடங்கியவர்

thumb_02-04-2020.gif

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது

In இலங்கை     April 2, 2020 11:25 am GMT     0 Comments     1032     by : Litharsan

Vavuniya-Hospital.jpg

வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/

  • தொடங்கியவர்

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு! |

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 21 பேர் குணமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79148

  • தொடங்கியவர்

உயிரிழந்தவரின் மருமகன், பேரனுக்கு கொரோனா பாதிப்பு
 2020 ஏப்ரல் 02 , பி.ப. 07:08

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உயிரிழந்தவரின்-மருமகன்-பேரனுக்கு-கொரோனா-பாதிப்பு/175-247859

  • தொடங்கியவர்

tm_infographic-safe-distancing-at-markets.jpg

 

tm_infographic_sg-clean_when-taking-public-transport.jpg

 

tm_infographic-safe-distancing-at-workplaces.jpg

slide39d52040065b54a20b4f75e1c5f6607c6.jpeg?sfvrsn=a6e74ee6_6

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபரும் இன்று உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறககளளன-மறறமரவரம-உயரழநதர/175-247870

  • தொடங்கியவர்

வீட்டிலேயே இருப்பது உயிர்களைக் காக்கும்

நீங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவலாம்.

•இடைவெளியைப் பராமரிப்பது COVID-19 பரவலைக் குறைக்கிறது

•வைரஸ் பெரும்பாலும் இருமல்கள் தும்மல்கள் வழியாகவே பரவுகிறது

•நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைப் பராமரிக்க நீங்கள் உதவலாம்

மூலம்: www.who.int

 
  • தொடங்கியவர்

கொரோனா சந்தேகநபர்களுக்காக ’Mankiwwa’ செயலி அறிமுகம்

'Mankiwwa' என்ற செயலியைப் பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்கள் எனச் சந்தேகிப்பவர்கள் குறித்து அறிவிக்க முடியுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.;

தற்போது கம்பஹா, குளியாப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளுடன் இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய கால இடைவெளியில் நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகளுடனும் இந்த செயலி இணைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சமூகத்தில் மறைந்து வாழ்வார்களாயின், இவ்வாறான நபர்கள் குறித்து சுகாதாரப் பிரிவினரை தெளிவுப்படுத்தவும் அவர்கள் குறித்து சுகாதார பிரிவினருக்கு அறிவிப்பதற்காகவும் பல தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இதற்காக புதிய செயலி ஒன்றையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-சநதகநபரகளககக-Mankiwwa-சயல-அறமகம/175-247902

 

  • தொடங்கியவர்

யாழ். அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று (03.04.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 18 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/79187

  • தொடங்கியவர்

கொரோனா சோதனை இன்று முதல் தீவிரம்

கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை, இன்று (03) முதல் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-சோதனை-இன்று-முதல்-தீவிரம்/175-247914

  • தொடங்கியவர்

இலங்கையில் இன்று இரு கொவிட் 19 தொற்றாளர்கள் குணம்பெற்றனர் : ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

இலங்கையில் இன்று (03.04.2020) மாலை 7 மணிவரை மேலும் இரு கொவிட்-19 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் ஒரு கொவிட் 19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தற்போது கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்கள் 152 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/79225

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேவைகள்:

வைத்தியசாலையின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாத்தொற்று என சந்தேகப்படக்கூடிய நோய்அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கவும், பரிசோதிக்கவும் கொரோன்த்தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும்,செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலை தடுத்தல், சுயபாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது.

யாழ் மருத்துவபீட மாணவர்களின உதவியுடன் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் தமக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் நேரடியாக வீட்டில் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வனர்த்த நிலைமையில் வைத்தியசாலை ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து வசதிகள், உணவுப்பொருட்கள் வழங்கல், தங்குமிட வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறாக இந்த கடினமான சூழ்நிலையிலும்
அனைவரும் முழு வினைத்திறனுடன் செயற்படுவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தகவல்:
வைத்தியர் த.சத்தியமூர்த்தி,
யாழ் போதான வைத்தியசாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.