Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்!

கொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/79568

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம்! தற்போது வெளியான தகவல்

கொரோனா வைரஸ் உடலில் நுழைந்த பின்னர் சிலருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 20 நாட்கள் எடுப்பதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் தற்போது மாற்றமடைந்துள்ளது.

சிலருக்கு 20 நாட்களின் பின்னரே குறித்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல்

https://www.ibctamil.com/srilanka/80/140854?ref=home-imp-parsely

 

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/38347

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 47 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றுக்குள்ளான-மேலும்-மூவர்-குணமடைந்தனர்/175-248266

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

’நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்’

எம்.ஏ.றமீஸ்

வீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை ஊடக இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  “வீட்டுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வசம்பு, பெருங்காயம் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றை நாம் பயன்படுத்தும் நுழைவாயில்களில் கட்டித் தொங்க வைப்பதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“அதுமாத்திரமல்லாமல், பெருங்காயம், வசம்பு போன்றவற்றை பட்டி ஒன்றில் தயார் செய்து அதனை தனது கைகளில் கட்டிக் கொள்ள முடியும். இவற்றை நாம் உடல்களில் கட்டியிருக்கும் காலப்பகுதிகளில் நோய்த் தொற்றிலிருந்து எம்மை நாம் பெரிதும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலை நிறைவடையும் வரையிலாவது எமது வீடுகளில் காலை மாலை வேளைகளில் வேப்பிலை, வேப்பம் பட்டை, மர மஞ்சள் போன்றவற்றை புகையாக்கி அதனை வீடுகளில் பிடித்து நோய்க் கிருமிகளை அழித்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“இதுதவிர, எம்மால் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, மஞ்சள், வசம்பு, மரமஞ்சள், துளசி இலை போன்றவற்றை நன்கு அவித்து அவற்றை சாறாக்கி காலை, மாலை வேளைகளில் பருகிக் கொள்ள முடியும்.

“அதேவேளை, நாம் ஒவ்வொரு தினமும் அதிமான தடவைகள் வெந்நீரை பருகிக் கொள்ள வேண்டும். வெந்நீர் பருவதை நாம் வழக்கமாகிக் கொண்டால், பல்வேறான நோய்களில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். வெந்நீருடன் தேசிக்காய் இலை, துளசி இலை போன்றவற்றை ஆவியாக பிடிக்க முடியும்.

“கருஞ்சீரகத்துடன் போதியளவு தேனைக் கலந்து அவற்றையும் நாம் உண்ண முடியும். பல்வேறான நோய்களுக்கான நிவாரணியாக இவற்றை நாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக உள்ளது.

“தேசிக்காய் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் கொண்டுள்ளதால் அப்பானத்தை நாம் தினமும் பருகிக் கொள்ள முடியும். இதுபோன்று எமது வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு நாம் எமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

“நோய்த் தொற்றுகளில் இருந்தும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், இப்பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய வைத்தியவர்களுடன் இணைந்து, நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராச்சி வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியத்துறை பணிப்பாளருக்கு முன்மொழிவொன்றைத் தயார் செய்து அனுப்பி வைத்துள்ளது” என்றார். 

http://www.tamilmirror.lk/அம்பாறை/நோய்-எதிர்ப்பு-சக்தியை-பெருக்கி-கொரோனாவிலிருந்து-பாதுகாப்போம்/74-248256

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

மருந்தகங்களை திறக்க அனுமதி
Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:01 - 0      - 2


நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்களை-திறக்க-அனுமதி/175-248279

  • தொடங்கியவர்

thumb_09-04-2020.gif

  • தொடங்கியவர்

மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்

ஊரடங்கு நேரத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் நபர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தவதற்காக, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு கட்;டாயமாக அனுப்பப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நாளையிலிருந்து செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மாவட்டங்களுக்கிடையில்-பயணிப்பவர்கள்-14-நாள்கள்-தனிமைப்படுத்தப்படுவர்/175-248287

 

  • தொடங்கியவர்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு

கொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குருநாகல்-போதனா-வைத்தியசாலையின்-அவசர-சிகிச்சைப்-பிரிவுக்குப்-பூட்டு/175-248304

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தகங்களுக்கு இனி விடுமுறையல்ல;சகல தினங்களிலும் திறந்திருக்கும்

மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள ஒசுசல உள்ளிட்ட தனியார் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன

 

http://thinakkural.lk/article/38393

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140909?ref=imp-news

  • தொடங்கியவர்

24 மணித்தியாலத்தில் எவரும் பதிவாகவில்லை
Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:07 - 0      - 15

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுடைய எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸால்  நாட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 54 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணித்தியாலத்தில்-எவரும்-பதிவாகவில்லை/175-248361

  • தொடங்கியவர்

திருகோணமலையில் 1,452 பேர் சுய தனிமையில்

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1452 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன நேற்று (09) தெரிவித்தார். 

கொவிட் -19 தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். 

அதன்படி இதுவரை வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1,452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676 பேரினதும் உள்நாட்டுலிருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

அத்துடன் 10 சந்தேகத்துக்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் குறித்த தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் தொடராக இதனைப்பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருகோணமலையில்-1-452-பேர்-சுய-தனிமையில்/75-248336

  • தொடங்கியவர்

thumb_10-04-2020.gif

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஏழு பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வு

மேலும் ஏழு கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஜாஎலையில் ஆறு பேரும் தெஹிவளையில் ஒருவரும் அடையாளங்காணப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

 

http://thinakkural.lk/article/38486

 

  • தொடங்கியவர்

thumb_11-04-2020.gif

  • தொடங்கியவர்

திருக்கோவில் பிரதேசத்திற்குள் உட்செல்வதற்கோ, வெளிச் செல்வதற்கோ தடை

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளி பிரதேசத்தில் இருந்து உடசெல்லவோ அங்கிருந்து இருந்து வெளி பிரதேசத்திற்கு பொது மக்கள் செல்லவோ இன்று (11.04.2020) முதல் இருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர். ஆர் டபிள்யூ .கமல்ராஜ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர் பிரதேச சுகாதார பணிப்பாளர் பொதுசுகாதார உத்தியோகத்தர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளிளை பேணுவதற்காக பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு விநாயகபுரம் பொதுசந்தையிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திலும், தம்பிலுவில் பொது சந்தை பகுதியில் நிரந்தரமாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என மூன்று பிரதேசங்களில் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், போன்றவை தவிர ஏனைய கடைகள் மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் அந்த பிரதேச மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் எனைய பிரதேச சந்தைகளுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்ய தடை விதிப்பு,திருக்கோவில் பிரதேசத்திற்கு உள்நுளையும் வீதிகளான தாண்டியடி சாகாமம், மற்றும் அக்கரைப்பற்று பிரதேச எல்லை பகுதிகளில் இராணுவ, பொலிஸ் வீதி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்திற்குள் ஏனைய பிரதேச மக்கள் உட்செல்லவே அங்கிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்லவே முடியாதவாறு சோதனை நடவடிக்கை இடம்பெறும் அதேவேளை சேபாதனைச் சாவடியில் வைத்து அங்கு வருவபர்களுக்கு மேல் தொற்று நீக்கி வீசப்படும் .

இதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்கா பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் விளையாட்டு கழகங்களுடைய இளைஞர்கள் ஈடுபட்வுள்ளதுடன் இந்த நோய் தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி தொடர்ச்சியாக தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/79744

  • தொடங்கியவர்

 

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

Coronavirus-Testing.jpg

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-16/

  • தொடங்கியவர்

யாழில் 332 போ் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறவுள்ளனர்

(தி.சோபிதன்)

யாழ்.அாியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போில் 14 போ் தவிா்ந்த மிகுதி 332 போ் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றாா்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன் போது மேலும் அவா் கூறுகையில்,

சுவிஸ் போதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இவா்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 போ் பலாலியில் தனிமை படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். குறித்த 20 பேருக்கும் நடத்தப்பட்ட பாிசோதனையில் கொரோனா தொற்றுள்ள 6 போ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி 14 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

அவா்களுக்கு அடுத்தகட்ட பாிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது. குறித்த 14 போ் தவிா்ந்த 332 பேருக்கும் இறுதி பாிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவாா்கள் என பணிப்பாளா் மேலும் கூறியுள்ளாா்.

https://www.virakesari.lk/article/79775

  • தொடங்கியவர்

thumb_12-04-2020.gif

  • தொடங்கியவர்

’கொரோனா தடுப்பூசிக்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்’
Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 09:08 - 0      - 4

கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் தயாரிக்க முடியுமென, பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட்,  இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
குறித்த தடுப்பூசியை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தடபபசகக-5-மதஙகள-கததரகக-வணடம/175-248426

https://www.bloomberg.com/news/articles/2020-04-11/coronavirus-vaccine-could-be-ready-in-six-months-times

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.