Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணம் பாதுகாப்பாகவே உள்ளது; தேவையற்ற அச்சம் வேண்டாம்…!

 

வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எனத் தெரிவித்துள்ளார். எனினும், கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது. இது உலகளாவிய தொற்று நோய் என்றும் தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (15) இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது….

கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க்காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சனையில்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், மற்றவர்களிற்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்று வடக்கில் எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது. என்றாலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள். இது பற்றி என்னால் தெளிவாக கூற முடியா விட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே எந்த வழியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாக கூற முடியாது. ஆனால், அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களிற்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது எனவும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/வட-மாகாணம்-பாதுகாப்பாகவே/

 

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (15.04.2020) பிற்பகல் 4.30 மணிவரையான 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றையதினம் 2 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தனர்.

நேற்றுவரை 233 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 163 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது 144 பேர் வைத்தியசாலையில் நோய்த் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்கள்.

அதேவேளை, இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 63 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/80013

  • தொடங்கியவர்

enclinfo11.jpg

 

enclinfo06.jpg

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்றைய தினம் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 63 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்-எண்ணிக்கை-அதிகரிப்பு/175-248617

  • தொடங்கியவர்

வடக்கில் மேலும் இருவருக்கு தொற்று

23 பேருக்கு இன்று (15) மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, யாழ். போதனா வைத்தியசாலையில் 4பேரும், பலாலி தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் 3பேரும், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7பேரும், நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் 2பேரும், முழங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் 7பேருமாக 23 பேருக்கு, இன்று பரிசோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடககல-மலம-இரவரகக-தறற/71-248627

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் தொற்றில்லை; ’தேவையற்ற அச்சம் தேவையில்லை’

கிளிநொச்சி மாவட்டத்தில், எவருக்கும் கொரோனா  தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர், இது தொடர்பில், மாவட்ட மக்களன் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. முழங்காவில் - நாச்சிக்குடா கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத்  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு, இம்மாதம் 13ஆம்  திகதியன்று, ஜா-எல, மட்டக்குளி, ராகம பிரதேசங்களிலிருந்து, 32 பேர் அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர்களில் அறுவருக்கே, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவியதை அடுத்து, அவர்களிடத்தே அச்சம் ஏற்பட்டது என்றும் தெரிவித்த அவர், கிளிநொச்சியில் இதுவரைக்கும், எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன என்றும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

அத்துடன், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, நோய் வரும் முன் காக்கும் பணிக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/களநசசயல-தறறலல-தவயறற-அசசம-தவயலல/72-248635

  • தொடங்கியவர்

’இலங்கை கொரோனாவின் உச்சகட்டத்தை கடந்து வருகிறது’

இலங்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் உச்ச கட்டத்தைக் கடந்து வருவதாக சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தற்போது உலகம் முழுதும் கொரோனா தொற்றால் 126,757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் கடந்த சில வாரங்களில் அரசாங்கம் எடுத்த சரியான முடிவுகள் காரணமாக, புதிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்கள், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து மாத்திரமே அடையாளம் காணப்படுகிறார்கள் என்றும் நாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாத்திரம் (14) 15 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும்  இவர்களில் 8 பேர், சுவிஸ் போதகரால் நடத்தப்பட்ட ஆராதனைகளில் கலந்துகொண்டவர்கள் என்றும், இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த 15 தொற்றாளர்களுடன் நாட்டில் மொத்தமாக 233 பேர் கொரோனா தொற்றாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளனரென்றும் 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதாகவும் 63 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-கொரோனாவின்-உச்சகட்டத்தை-கடந்து-வருகிறது/175-248632

  • தொடங்கியவர்

‘நூரளை மாவட்டத்தில் கொரோனா தொற்றில்லை’

எம்.கிருஸ்ணா

நுவரெலியா மாவட்டத்தில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலில் எவ்வித  உண்மையும் இல்லை என்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர்கூட, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என்றும் நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால், இன்று (15) வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவலில் கூட, இவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை என்றும்  சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

எனவே இது குறித்து, நுவரெலியா மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதார துறையின் அறிவுறுத்தியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/மலையகம்/நரள-மவடடததல-கரன-தறறலல/76-248639

  • தொடங்கியவர்

thumb_16-04-2020.gif

  • தொடங்கியவர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையில் சிறந்த முன்னேற்றம்

உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட, இலங்கையில் சிறந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

இதன் காரணமாகவே, இவ்வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/80044

  • தொடங்கியவர்

Image

  • கருத்துக்கள உறவுகள்

கிராண்ட்பாஸ் தனிமைப்படுத்தப்பட்டது

1581663310-road-closed-2.jpg?189db0&189db0

 

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதி அதி அபாய பகுதியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கிராண்ட்பாஸ்-வீதி-முடக்க/

 

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி வைப்பு
Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:28 
எம்.எம்.அஹமட் அனாம்

கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பு, கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், இன்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் என  பலர் கலந்துகொண்டனர்.

அத்தோடு கொரோனா நோயில் இருந்து மக்களையும் பிரதேசத்தையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதுத் தொடர்பிலான சுவரொட்டிகளும் பொது இடங்களில் ஒட்டப்பட்டன.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/இலவசமாக-முகக்-கவசங்கள்-வழங்கி-வைப்பு/73-248697

6 hours ago, உடையார் said:

கிராண்ட்பாஸ் தனிமைப்படுத்தப்பட்டது

1581663310-road-closed-2.jpg?189db0&189db0

 

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதி அதி அபாய பகுதியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கிராண்ட்பாஸ்-வீதி-முடக்க/

 

நான் 16 இல் இருந்து 18 வரை வாழ்ந்து சுற்றித் திரிந்த இடம்.

  • தொடங்கியவர்

9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று

அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த சிறுமி ஏற்கெனவே குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/9-வயது-சிறுமிக்கு-கொரோனா-தொற்று/175-248708

  • தொடங்கியவர்

பேருவளையில் 65 பேருக்கு இன்று பீ.சி.ஆர் சோதனை

கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில பிரதேசங்களைச் சேர்ந்த 65 பேருக்கு இன்று (16) பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

image_90546d3bd9.jpg

முதலாவது தொற்றாளரின் மனைவி, குழந்தை, மனைவியின் தாய், தந்தை உள்ளிட்ட நால்வரும் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 219 பேர், புணானை தனிமைப்படுத்தல்  நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 17 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-65-பேருக்கு-இன்று-பீ-சி-ஆர்-சோதனை/175-248710

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் PCR இயந்திரம் கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகளை “பேக்” ஐடியில் விமர்சித்த 8 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாக அதிகாரிகளை போலி முகநூல் மூலமாக விமர்சித்து வந்த ஆசாமிகள் எட்டுப் பேர் இன்று (16) மாலை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி முகநூல்கணக்கில் செயற்பட்டு வந்தநபர்கள் தொடர்ச்சியாக அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை, உத்தியோகத்தர்களை விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். (150)

 

https://newuthayan.com/அரச-அதிகாரிகளை-பேக்-ஐடி/

  • தொடங்கியவர்

24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை
Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 08:28 


கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்த ஐந்து பேர் நேற்று (16) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக காணப்படுகின்றது.

இதுவரை இலங்கையில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/24-மண-நரததல-கவட19-தறறளர-இலல/150-248715

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ், எப்போதுதான் முடிவுக்கு வரும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

 

  • தொடங்கியவர்

thumb_17-04-2020_1.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.