Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு…!

கொரோனா தொற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 265 நபர்களின் PCR பரிசோதனை அறிக்கைகள் இன்று (17) கிடைக்கப் பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) கருத்துரைக்கையில் இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குளான 238 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/இராணுவத்-தளபதியின்-விசேட/

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 05:12 -

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது.

புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்கு-கொரோனா-தொற்று/175-248760

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று (17) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றிலிருந்து-77-பேர்-குணமடைந்தனர்/175-248770

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றில் பலியான சகோதரர்கள்

ro.jpg

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த  திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/38972

  • தொடங்கியவர்

18.04.2020. 7 am
.........................

வவுனியா மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு ( Contact Screening) கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில்மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

Dr. Thangamuthu Sathiyamoorthy

கொட்டாஞ்சேனையில் அடையாளம் காணப்பட்ட 2ஆவது நபரால் பார்மசி ஒன்றுக்கு சீல் : எரிக்கப்பட்ட முகக்கவசங்கள்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பெண் ஒருவரும் அவரது மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்கள் குறித்து பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

குறித்த பெண்ணுக்கு எவ்வாறு இந்த நோய் தொற்றியது தொடர்பிலும், குறித்த பெண்ணின் மகனால் பார்மசி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துள்ள.

இது தொடர்பான விரிவான தகவல்கள்..

கொட்டாஞ்சேனை - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் முத்த மகனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

எனினும் 2 ஆம் மகனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

குறிப்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்துவரும் சுகாதாரத் துறை அவருக்கு இந்தியா யாத்திரை செல்லும் போது விமானத்தில் வைத்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக யாத்திரை செல்லும் போது விமானத்தில் அவருக்கு அருகே இருந்த ஆசனத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருந்ததாகவும், அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தாக்கம் இருந்து அதனூடாக இந்த பெண்ணுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அப்பெண்ணுக்கு கடந்த மார்ச் 27 ஆம் திகதியே இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள போதும் அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதால் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று அப்பெண்ணின் 2 ஆம் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், அவரால் கொஹுவலை - சரணங்கர வீதியில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு விற்பனைக்காக கையளிக்கப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை பொலிஸார் நேற்று தீயிட்டு அழித்துள்ளதுடன், அந்த பாமசிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி குறித்த நபரால் 550 முகக் கவசங்கள் விற்பனைக்காக அந்த பாமசிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதுவும் இன்று வரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந் நிலையில் அந்த பாமசியின் உரிமையாளரும் இரு உதவியாளர்களும் நேற்று முதல் வெள்ளவத்தை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/141435?ref=imp-news

மேலும் நால்வருக்கு கொரோனா, 09 பேர் குணமடைந்தனர்..!

Coronavirus-Blood-Test.jpg

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் 09 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மேலும்-நால்வருக்கு-கொரோ-2/

  • தொடங்கியவர்

கொழும்பில் 49 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவடடத்தில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கல்முனை, காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்தளவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொழும்பில்-49-பேருக்கு-கொரோனா-தொற்று/175-248784

  • தொடங்கியவர்

thumb_18-04-2020_1.gif

  • தொடங்கியவர்

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

‘வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை படிப்படியாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இக்காலப்பகுதியில் நமது சேவை நிலையங்களிற்கு சமூகமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பேஸ்புக் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
  
நாம் பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகளின் மூலமே இந்த முடிவை எடுத்ததோடு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய  மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைக்கு அமைய செயற்படுவதன் மூலமே இந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பதிவிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வெளியில்-நடமாடுவதை-தவிர்த்துக்கொள்ள-வேண்டும்/175-248819

  • தொடங்கியவர்

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது
Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 12:10 - 0      - 27
 

இலங்கையில் மேலும் ஆறு பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இப்புதிய தொற்றுக்களானவை வெலிசறையிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 254ஆக உயர்ந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-COVID-19-தொற்றுக்குள்ளானோரின்-எண்ணிக்கை-250ஐத்-தாண்டியுள்ளது/175-248825

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்


யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

 
அதே நேரத்தில் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற குறித்த இருவரும் தொடர்ந்தும் 13 நாட்கள் அவர்களது வீடுகளிலேயே இருப்பார்கள்.

http://thinakkural.lk/article/39026

  • கருத்துக்கள உறவுகள்

இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (18) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 161 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 254 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர் 254
இப்போது சிகிச்சை பெறுவோர் 161
குணமடைந்தோர் 86
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) 17
 
  • தொடங்கியவர்

களுத்துறையில் 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் நேற்று (18) வரை 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 14 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/களுத்துறையில்-50-கொரோனா-தொற்றாளர்கள்-பதிவு/175-248855

  • தொடங்கியவர்

thumb_19-04-2020.gif

  • தொடங்கியவர்

எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயம் : எச்சரிக்கும் நிபுணர்கள்..!

கொரோனா தொற்றினால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறது. 

அதேபோல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் இந்த முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக பாரதூரமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய முகக்கவசங்களை பொதுமக்கள் சாதாரண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபயாம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு, கொரோனா தொற்றினால் பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவைப் பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார். அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்..

அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும்.

அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான். எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/80308

  • தொடங்கியவர்

சிகை_அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள்

நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அறிவுறுத்தல்கள்:

1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் #சமூக_இடைவெளியைப் பேணவும்.

2. முடி திருத்துநர்கள் கட்டாயமாக #முகக்_கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

3. முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் #கைகளை சரியான முறையில் #ஓடும்_நீரில் #சவர்க்காரம் கொண்டு #கழுவ வேண்டும்.

4. மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.

5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் #ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி #தொற்று_நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

6. #போர்வை, #துவாய், #பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (19.04.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை 269 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 166 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 122 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/80315

  • தொடங்கியவர்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா தொற்றுடைய நபர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் இன்று (19) வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று தீவிரத் தன்மை குறைவடைந்து வந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொதுமக்களுக்கு-எச்சரிக்கை/175-248885

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

திரு எஸ் கே நாதன் அவர்கள் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பை வழங்கினார்.

வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்திற்கு தேவையான Video Laryngoscope இரண்டினை அண்மையில் வழங்கினர்.இவற்றின் பெறுமதி 3.5 மில்லியன் ரூபாய்கள்.

இது தவிர கொரேனா தடுப்புக்கான தற்காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கும் இதனோடு தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் அன்பளிப்பை வழங்கினார்.

திரு. நாதன் வடபகுதியில் கடந்த பல வருடங்களாக பல உதவித் திட்டங்களை செய்து வருவது யாவரும் அறிந்ததே.

குறிப்பாக இக்காலப்பகுதியில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருவதை யாவரும் நன்கு அறிவார்கள்.

அவருடைய சேவையை பாராட்டுவதில் யாழ் வைத்தியசாலை சமூகமும் பெருமை படுகின்றது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இருவருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு!

 

இலங்கையில் கொரோனாத் தொற்றுடையோர் மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் மூலம் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மேலும்-இருவருக்கு-கொரோ/

  • தொடங்கியவர்

ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (19) இனங்காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவுக்குச் சென்று மார்ச் மாதம் 12 ஆம் திகதி நாடு திரும்பிய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் குடும்ப உறவினர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒர-கடமபததல-10-பரகக-கரன/175-248908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.