Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

வடக்கில் அடுத்த கட்டமாக வெளிநாடு, வெளிமாவட்டங்களிலிருந்து வருவோருக்கும் பரிசோதனை - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

1253272909717606401

யாழில் சிறிய நடுத்தர தொழிற்சாலைகளை மீள இயக்கமுடியும் - யாழ்.வணிகர் கழகம்

https://www.virakesari.lk/article/80581

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு ; வெலிசறை கடற்படை முகாமுக்கு சீல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 368ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதையடுத்து, குறிப்பிட்ட கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 30 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 368ஆக அதிகரித்துள்ளது.

 

  • தொடங்கியவர்

நாட்டுக்குள் தொற்று தீவிரம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

அத்துடன், நாளாந்தம் 1000 வரையில் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் பரவலைத் தடுக்கும் விசேட செயற்பாட்டு மய்யத்தால், நேற்று (23) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, ஆசிரி, நவலோக, டேடன்ஸ், லங்கா ஆகிய தனியார் வைத்தியசாலைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்கமைய நாளாந்தம் 1,000 பரிசோதனைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்கள் ஆகியவற்றில் இருந்து தினமும் சுமார் 800 பேர் பரிசோதிக்கப்படுவதாகவும், அவர்களின் மாதிரிகளை அரசாங்கத் சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் பரிசோதித்து வருவதாகவும் கூறினார்.

“இந்நிலையில், அதிகமான மக்கள் தொற்றுநோயைக் கண்டறிய முடியும் என்ற நோக்கில் இந்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையடுத்தே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ சி ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நடடககள-தறற-தவரம/175-249172

  • தொடங்கியவர்

முசலி பிரதேச சபையின் தவிசாளருக்கும் தனிமைப்படுத்தல்

மன்னார் - முசலி பிரதேச சபையின் தவிசாளர், புத்தளம் 4ஆம் மைல்கல் பகுதியிலுள்ள அவரது வீட்டில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி சந்ர பெர்ணான்டோ தெரிவித்தார்.

அவரது குடும்பத்தாரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தர்.

அப்துல் கபூர் மொஹொமட் சுபியானும் அவரது குடும்பமுமே, இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முசலி பிரதேச சபைக்கு உரித்தான கெப் ரக வாகனத்தில், அவர் தமது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் திரும்பியதாகவும் இது தொடர்பில், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம், புத்தளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, வைத்தியர், பொலிஸ் குழுவினர் அவரது வீட்டுக்குச் சென்று, தவிசாளரையும் அவரது குடும்பத்தாரையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரியவருகிறது.

தவிசாளர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவருகிறது.

http://www.tamilmirror.lk/வன்னி/முசலி-பிரதேச-சபையின்-தவிசாளருக்கும்-தனிமைப்படுத்தல்/72-249171

  • தொடங்கியவர்

thumb_24-04-2020.gif

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

இதுவரை பதிவான 47 பேர் குறித்த தகவல்

நாட்டில் இன்றைய தினத்தில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படுகிறது.

இவர்களில் 11 பேர் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 30 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்கள் என்பதுடன், 5 பேர் வெலிசர முகாமில் இருந்து விடுமுறை பெற்று சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இறுதியாக கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் இரத்தினபுரி, குருநாகல்-பொல்கஹாவெல, குருநாகல்-கீனியாபொல,  பதுளை-கிராதுருகோட்டை,  கண்டி, தம்புள்ளை, மருதானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/இதுவரை-பதிவான-47-பேர்-குறித்த-தகவல்/175-249220

  • தொடங்கியவர்

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417

இலங்கையில் COVID-19 தொற்றுள்ளதாக இன்றிரவு 10.45 மணியளவில் இன்னொருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 417ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று மாத்திரம் இலங்கையில் 49 புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் இலங்கையில் நாளொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகமான தொற்றுக்கள் இன்றாகும்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-COVID-19-தொற்றுக்குள்ளானோரின்-எண்ணிக்கை-417/175-249225

  • தொடங்கியவர்

enclinfo12__3_.jpg

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் கொரோனா தொற்று

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் நேற்று (24) இரவு இனங்காணப்பட்ட 416 ஆவது தொற்றாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா தொற்றினால் 420 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொதுச்-சுகாதாரப்-பரிசோதகருக்கும்-கொரோனா-தொற்று/175-249231

  • தொடங்கியவர்

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வாய்ப்பு

ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (25) தெரிவித்துள்ளது. 

அத்தகைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக 1அல்லது 2 என்ற இலக்கங்களை  கொண்டுள்ளவர்கள் மாத்திரம்  திங்கட்கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் செவ்வாய்க்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் புதன்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வியாழக்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/அடையாள-அட்டையின்-இறுதி-இலக்கத்தின்படி-வாய்ப்பு/175-249243

ஸ்ரீலங்காவில் இன்றும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 15 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 420 இலிருந்து 435 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை 116 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141892?ref=imp-news

UPDATE கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரிப்பு

In இலங்கை     April 25, 2020 2:00 pm GMT     0 Comments     1144     by : Benitlas

நாட்டில் மேலும் 05 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-32/

  • தொடங்கியவர்

அரச அலுவலகங்களுக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை அளவிட நடவடிக்கை
Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:03 - 0      - 2

வ.சக்தி , ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரசாங்கத்தின் அரிவுறுத்தல்களுக்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களுக்கு சமுகமளிக்கும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில், அலுவலகங்களுக்கு வருகை தருகின்றவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காணப்படலாம் என்ற அடிப்படையில் அலுவலகத்துக்குள் அனுமதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பயன்படுத்துவதற்காக வெப்ப அளவீட்டுக் கருவிகள், மாவட்டச் செயலாலரால் மாவட்டச் செயலகத்தில் வைத்து அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்  நேற்று (24) வழங்கப்பட்டன. 

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர். 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/அரச-அலுவலகங்களுக்கு-வருவோரின்-உடல்-வெப்பநிலையை-அளவிட-நடவடிக்கை/73-249248

  • தொடங்கியவர்

முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையில், முதியோர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களையும் பாதுகாத்து விழிப்புணர்வடையச் செய்யும் நிகழ்வு, அம்பாறை நகரில் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் சரண முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/முதியோர்-இல்லங்களில்-விழிப்புணர்வு/74-249221

  • கருத்துக்கள உறவுகள்

large.0-04-06-68b28d0173548ce3b75f0413f4d2cd211420081011f34d44224a2c664de5d26b_83dd24da.jpg.09320a06a85cb488f02bf02f4b266e8f.jpg

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்

94433755_1555434137957841_1281948292183228416_n.jpg

  • தொடங்கியவர்

கொழும்பு உள்ளிட்ட 04 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை  ஊரடங்கு சட்டமானது நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, ஏனைய சகல மாவட்டங்களிலும் ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கழமப-உளளடட-04-மவடடஙகளல-ஊரடஙக-உததரவ-நடபப/150-249240

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது. 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-8-பரகக-கரன-தறற/175-249261

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கில் வெளியே செல்ல விசித்திர அனுமதி!

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

  • IMG_20200425_193555.png?189db0&189db0

இதன்படி ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும்.

இதுபோன்ற பொருட்களை வாங்க, ஒருவர் உள்ளூர் சந்தைக்குச் சென்று அருகிலுள்ள கடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

 

https://newuthayan.com/ஊரடங்கில்-வெளியே-செல்/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஊரடங்கில் வெளியே செல்ல விசித்திர அனுமதி!

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

  • IMG_20200425_193555.png?189db0&189db0

இதன்படி ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும்.

இதுபோன்ற பொருட்களை வாங்க, ஒருவர் உள்ளூர் சந்தைக்குச் சென்று அருகிலுள்ள கடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

இந்த முறையால்... சந்தையில் கூடும் மக்களை, பெருமளவில்  குறைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு 462 ஆக உயர்வு;கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் உயரும் எண்ணிக்கை

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. கொழும்பு சுகாதார மாவட்டப் பிரிவில் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் 120 பேர் இதுவரை நாடளாவிய ரீதியில் குணமடைந்துள்ள அதேவேளை,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது.

 

http://thinakkural.lk/article/39425

  • தொடங்கியவர்

enclinfo16-01.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிக்கை 505 ஆகியது!

இலங்கையில் இன்று (26) இதுவரை 45 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 378 ஆக காணப்படுகிறது.

 

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523ஆக உயர்ந்தது

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றிரவு 11.58 மணி போல 523ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙகயல-COVID-19-தறறககளளனரன-எணணகக-523ஆக-உயரநதத/175-249310

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.