Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா?- வெளியானது தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

COVID-19-4.jpg

கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா?- வெளியானது தகவல்!

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் பலரும் சொல்வதுபோல் இது மனிதன் உருவாக்கியது அல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை எட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேரை இந்நோய் தாக்கியுள்ளது.

இந்த சூழலில் சமீப நாட்களாக இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனத்திலிருந்து உருவானதாகவும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும்கூட கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை மறுத்துள்ளனர்.

இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பான ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து உறுதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்க்ரிப்ஸில் இதற்கான ஆராய்ச்சியில் தொடர்புடைய நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இது இயற்கையாக உருவானது என்று தெரிவித்துள்ளார்.

COVID-19-3.jpg

2003ஆம் ஆண்டில் வெளியான சீனாவில் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) தொற்றுநோயுடன் கொரோனா வைரஸ் அறியப்பட்டது. இதன் இன்னொரு வடிவமாக 2012இல் சவுதி அரேபியாவில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியுடன் (MERS) இந்நோய் பரவியது.

தற்போது உருவாகியுள்ள கொரோனா வைரஸ் 150இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

தொற்றுநோய் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS – CoV – 2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனா வைரஸ் தரவை உலக அளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர்.

பல ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆண்டர்சன் மற்றும் கூட்டுப் பணியாளர்கள் இந்த வரிசைமுறை தரவைப் பயன்படுத்தி SARS – CoV – 2 இன் தோற்றம் மற்றும் பரிணாமத்தை ஆராய்வதன் மூலம் வைரஸ் பற்றிய பல கதைகளை உருவாக்கும் ஆய்வுப் பாதைகளை நோக்கி அவர்கள் கவனத்தை முடுக்கி விட்டனர்.

இதுகுறித்து நேச்சர் மெடிசின் (Nature Medicine) என்ற அமெரிக்க இதழ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கையில்,

“கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவிய பெரிய அளவிலான கோவிட்-19 தொற்றுநோய் மனிதர்களுக்கு எதிரான மாபெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 என்பது மனிதன் உருவாக்கியதல்ல.

கொரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே பரவிவந்த சார்ஸ் கோவி-2 என்ற நோய்க் கிருமிகளின் அடுத்தகட்ட இயற்கை பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.

COVID-19-2-1.jpg

கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சார்ஸ், கோவி-2 மற்றும் தொடர்புடைய வைரஸ்களிலிருந்து பொது மரபணு வரிசைத் தரவுகளின் பகுப்பாய்வின்படி ஆய்வகம் தவிர வேறுவிதமாக செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்ற கூற்றுக்கும் ஆதாரமில்லை.

கிருமியின் உள்ளடக்குகளில் அமைந்துள்ள ஸ்பைக் புரதங்களுக்கான மரபணு வார்ப்புருவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள ஆயுதம் போன்ற சுருள்கள் மனித மற்றும் விலங்கு உயிரணுக்களின் வெளிப்புறச் சுவர்களை எளிதாகப் பிடிக்கவும் ஊடுருவவும் பயன்படுத்துகின்றன.

யாராவது ஒரு புதிய கொரோனா வைரஸை ஒரு நோய்க்கிருமியாக வடிவமைக்க முயன்றால், அவர்கள் அதை நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸின் முதுகெலும்பிலிருந்து கட்டியிருப்பார்கள்.

ஆனால், இது இயற்கையாக உருவானது என்பதற்கு சார்ஸ் கோவி-2வின் முதுகெலும்பு – அதன் ஒட்டுமொத்த மூலக்கூறு கட்டமைப்பின் தரவுகளால் உருவாகியுள்ளது. இது கிருமிகளையும் உள்ளடக்கிய இயற்கையின் பரிணாம வளர்ச்சியாகும்.

ஆனால் விஞ்ஞானிகள் ஏற்கெனவே அறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலிருந்து தற்போது காணப்பட்டுள்ள கரோனா வைரஸ்களான SARS – CoV-2வின் முதுகெலும்பு கணிசமாக வேறுபடுவதாகவும், பெரும்பாலும் வெளவால்கள் மற்றும் பாங்கோலின்களில் காணப்படும் தொடர்புடைய வைரஸ்களை ஒத்திருப்பதாகவும் கண்டறிந்தனர்.

வௌவாலிலிருந்து நேரடியாக மனிதனுக்கு மாறியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், மனிதப் பரிமாற்றம், வெளவால்களுக்கும் மனிதர்களுக்குமிடையேயான ஒரு இடைநிலைப் புரவலன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க வேண்டியள்ளது” என நேச்சர் மெடிசின் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-உருவானதா-உர/

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அறிவுலகம் சாத்திரங்கள்மேல் நம்பிக்கை உள்ளவர்களை உதாசீனப் படுத்தினாலும், மனிதனால் அறியமுடியாத, எதனால் எங்கிருந்து அழிவுகளும், துன்பங்களும் வருகிறன என்று அறியமுடியாது கலங்கிநிற்கும் வேளையில், சாத்திரங்கள் மெய்யோ, பொய்யோ அவனுக்கு ஒரு ஆறுதலைத் தேடிக்கொடுப்பதை மறுக்கமுடியாது. எனக்கும் அதில் நம்பிக்கை இல்லையென்றாலும், வாட்சொப்மூலம் எனக்குவந்த ஒரு செய்தியால் சிறிது ஆறுதல் எற்பட்டதை களத்திலும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு 29.5 வருடங்களுக்கும், சனிகிரகம் (சனி) உத்தராட்சத்திரத்திற்கு வரும்போது, ஒரு வகை வைரசு சனிக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும்.

கொரோனா வைரசு 25/12/2019 அன்று சனிக் கிரகத்திலிருந்து பயணித்து 10/01/2020 அன்று பூமியை அடைந்தது, மேலும் இந்த வைரசு 25 ° அட்சரேகை முதல் 35 ° அட்சரேகை வரை வீழ்ச்சியடைவதற்கு இடையில் அதிக தீவிரத்தை கொண்டுள்ளது. அத்துடன் ஏனைய இடங்களிலும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞான சோதிடத்தின் படி இந்த வைரசு 25/05/2020 வரை தாக்கத்தை ஏற்படுத்தி வரும்,  பின்னர் அது மெதுவாக குறைந்து 20/07/2020 க்கு முன் மறைந்துவிடும்.

இந்தியா முழுவதும் நவபாசாண சிவலிங்கங்கள் இருப்பதால் இந்த வைரசிலிருந்து வரும் பாதிப்பைத் தவிர்க்க இந்திய நிலம் மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது.

மூலம், பூராடம், உத்திராடம், மிருகசீரிடம், உத்திரம் மற்றும் புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்டவர்கள் இந்த வைரசிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

கொரோனா வைரசு 25/12/2019 அன்று சனிக் கிரகத்திலிருந்து பயணித்து 10/01/2020 அன்று பூமியை அடைந்தது, மேலும் இந்த வைரசு 25 ° அட்சரேகை முதல் 35 ° அட்சரேகை வரை வீழ்ச்சியடைவதற்கு இடையில் அதிக தீவிரத்தை கொண்டுள்ளது.

6-AD4629-F-A2-E2-4368-B73-F-150-B291-B17

55 minutes ago, Paanch said:

ஒவ்வொரு 29.5 வருடங்களுக்கும், சனிகிரகம் (சனி) உத்தராட்சத்திரத்திற்கு வரும்போது, ஒரு வகை வைரசு சனிக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும்.

கொரோனா வைரசு 25/12/2019 அன்று சனிக் கிரகத்திலிருந்து பயணித்து 10/01/2020 அன்று பூமியை அடைந்தது, மேலும் இந்த வைரசு 25 ° அட்சரேகை முதல் 35 ° அட்சரேகை வரை வீழ்ச்சியடைவதற்கு இடையில் அதிக தீவிரத்தை கொண்டுள்ளது. அத்துடன் ஏனைய இடங்களிலும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞான சோதிடத்தின் படி இந்த வைரசு 25/05/2020 வரை தாக்கத்தை ஏற்படுத்தி வரும்,  பின்னர் அது மெதுவாக குறைந்து 20/07/2020 க்கு முன் மறைந்துவிடும்.

இந்தியா முழுவதும் நவபாசாண சிவலிங்கங்கள் இருப்பதால் இந்த வைரசிலிருந்து வரும் பாதிப்பைத் தவிர்க்க இந்திய நிலம் மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது.

இது அப்பட்டமான கட்டுக் கதை என்று உங்களுக்கே புரியவில்லையா ?

1. இது எந்தத் திகதியில் எழுதப்பட்டது ? கொரோனாவுக்கு முன்னராகவா ?
2. கொரோனா உருவானது நவம்பர் 2019.
3. கிருமி என்றொரு உயிரினம் இருப்பதாக 17 நூற்றாண்டுக்கு முன் யாருக்கும் தெரியாது. குறிப்பாக சித்தர் ஆயுர்வேத வைத்தியர்களுக்கு.
4. இந்தியாவில் நவபாசாண சிவலிங்கங்கள் ஏனைய வைரசுகளை ஏன் ஒன்றும் செய்யவில்லை. குறிப்பாக எயிட்ஸ் கிருமி அதிகமாக உள்ள இடம் இந்தியா.
5. சனி பூமி ஆகியவற்றின் சுற்றுப் பாதைகள் வேறானவை.  29.5 வருட இடைவெளியை சீராக வைத்திருக்க முடியாது.😀
6. சனியிலிருந்து புறப்பட்டு எவ்வாறு 2 வாரங்களில் பூமியை வந்தடையும் ?
7. 20/07/2020 இந்தத் திகதிக்கு முன் கொரோனா பூமியில் முற்றாக அழிந்துவிட்டால் யாழில் எழுதுவதையே விட்டுவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

இது அப்பட்டமான கட்டுக் கதை என்று உங்களுக்கே புரியவில்லையா ?

 

1 hour ago, Paanch said:

மனிதனால் அறியமுடியாத, எதனால் எங்கிருந்து அழிவுகளும், துன்பங்களும் வருகிறன என்று அறியமுடியாது கலங்கிநிற்கும் வேளையில், சாத்திரங்கள் மெய்யோ, பொய்யோ அவனுக்கு ஒரு ஆறுதலைத் தேடிக்கொடுப்பதை மறுக்கமுடியாது. எனக்கும் அதில் நம்பிக்கை இல்லையென்றாலும், வாட்சொப்மூலம் எனக்குவந்த ஒரு செய்தியால் சிறிது ஆறுதல் எற்பட்டதை களத்திலும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதி பயங்கர உயிர்கொல்லி வைரஸ்சுகள் விண்வெளியில் இருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

21 minutes ago, குமாரசாமி said:

அதி பயங்கர உயிர்கொல்லி வைரஸ்சுகள் விண்வெளியில் இருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

அனேகமாக அம்புலிமாமாவில் படித்திருப்பீர்கள் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, tulpen said:

அனேகமாக அம்புலிமாமாவில் படித்திருப்பீர்கள் . 

நீங்கள் அம்புலிமாமா நினைப்பிலையே திரியுற ஆக்கள்.
எதுக்கும் விண்வெளி பற்றிய நூல்களை எடுத்து படியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.