Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்காவில் ஊரடங்குச்சட்டத்தை நீக்கும் முயற்சியில் அரசு

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்குச்சட்டத்தை பகுதி பகுதியாக நீக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களைப் பொறுத்தே மேற்படி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்நதவர்கள் புத்தாண்டுக்கு தமது இடங்களுக்கு செல்ல அரசாங்கத்திடம் போக்குவரத்து வசதிகளை கோரியுள்ளதாகவும் அவ்வாறு அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிளால் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/141018?ref=imp-news

  • Replies 111
  • Views 9.8k
  • Created
  • Last Reply

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு – அறிவிப்பு இதோ

In இலங்கை     April 11, 2020 2:23 pm GMT     0 Comments     1025     by : Jeyachandran Vithushan

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-தொடர்ந்/

ஊரடங்கு வேளையில் பொலிஸாரை ஏமாற்றி செல்ல முற்பட்டவர்கள் கைது!

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறைச்சாலை அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்திய நபர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறைச்சாலை அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்திய நபர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடபொல - கல்தொல பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரியவர்கள் இன்று சிற்றூர்ந்து ஒன்றில் பயணித்த போது, காவற்துறையினரால் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, தான் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக தெரிவித்துள்ள சிற்றூர்ந்தின் சாரதி, சிறைச்சாலை அடையாள அட்டையினையும் காண்பித்துள்ளார்.

எனினும், அந்த அட்டையாள அட்டையின் தரவுகளின் அடிப்படையில் குறித்த சந்தேகத்திற்குரியவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருடன் சிற்றூர்ந்தில் பயணித்த பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 23 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6,072 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141088

  • தொடங்கியவர்

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்வோருக்கு இதுதான் கதி! காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 26 ஆயிரத்து 600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 6 ஆயிரத்து 799 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்யாமல் மக்களை வீட்டிலேயே முடங்கி இருக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கபடப்டுவரும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறி சுற்றி திரிவோர் இவ்வாறு கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141193

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாள் மாலை 4 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய கொரோனா தொற்று பரவல் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுககு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141237

  • தொடங்கியவர்

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

curfew123-720x450.jpg

19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஆகிய விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-உத்தரவு-தொடர்பான/

19 மாவட்டங்களில் மீண்டும் அமுலானது ஊரடங்கு – 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்!

In இலங்கை     April 16, 2020 10:39 am GMT     0 Comments     1487     by : Benitlas

நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், 20ஆம் திகதி காலை 6.00 மணிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அத்துடன், கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/19-மாவட்டங்களில்-மீண்டும்/

ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது – GMO

In இலங்கை     April 16, 2020 9:28 am GMT     0 Comments     1199     by : Benitlas

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ “கொவிட் -19”  எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏனைய நாடுகளில் போல எமது நாட்டில் பரவவில்லை என்பது உண்மையே.

ஏனைய நாடுகள் அனைத்திலும் ஆயிரக் கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்ற நிலையில் எமது நாட்டில் இதுவரை ஏழுபேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களும் குறைவாகவே உள்ளனர். ஆகவே எமது மருத்துவ நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது. ஆனால் அதற்காக இப்போதே அனைத்தையும் கைவிட்டுவிட முடியாது.

“கொவிட் -19 ” எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று என்பது ஏனைய நோய்களை போல் கருதப்படக்கூடிய ஒன்றல்ல. இப்போது மிகக் குறைவாக தொற்றுநோய் பரவல் காணப்பட்டாலும் அடுத்த சுற்றுகளில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே இப்போது முன்னெடுக்கும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தாக வேண்டும். இதில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாகவே எம்மால் நிலைமைகளை சரிவர கையாள முடிந்தது. ஆகவே இப்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்றால் மீண்டும் நாட்டில் “கொவிட் -19” கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

அவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த வேண்டுமாயின் இப்போது கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களையும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய நபர்களையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்து அவர்களை மேலும் பரிசோதனை செய்து அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஊரடங்கை தளர்த்த வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தை-தளர்த்த/

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

In இலங்கை     April 17, 2020 10:49 am GMT     0 Comments     2594     by : Benitlas

021-13.jpg

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுப்போக்குவரத்து சேவைகளை வழக்கம் போல ஆரம்பித்தால் கடைப்பிடிப்ப வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், சில பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்படி,

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு வழங்கிய வழிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துதல்,ஒவ்வொரு நிலையத்திலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அளவிடவும், எந்தவொரு நபருக்கும் காய்ச்சல், இருமல் இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறையின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குதல்.

ரயில்வே கட்டளைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல். அதன்படி, ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ துப்புவது, ரயில் நிலையத்திலோ அல்லது முற்றத்திலோ வர்த்தகம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்படும்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலின் படி, கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மீது ஒரு மீற்றர் இடைவெளி போன்ற சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல்.

ஒவ்வொரு ரயில் நிலையம், மற்றும் பேருந்து ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கிருமி நீக்கம் செய்வது.

அத்தியாவசிய தேவைகள் இல்லாதவர்கள் ரயில்களிலோ பேருந்துகளிலோ அனுமதிக்கப்படுவதில்லை ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து, ஒழுங்கு முறையொன்று தயாரிக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ரயில்வே துறை, இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் வாகன பதிவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/போக்குவரத்து-சேவையை-20ஆம்/

  • தொடங்கியவர்

20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு!

curfew123-720x450.jpg

கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

யாழிலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்.

எனினும் கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை, அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் , பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

http://athavannews.com/20-ஆம்-திகதி-முதல்-18-மாவட்டங்/

  • தொடங்கியவர்

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதே ஜனாதிபதி

Gotabhaya-Rajapaksa.jpg

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பது மற்றும் சமூக பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயற்படுவதும் கட்டயமாகுமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த 4 வாரங்களாக அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

http://athavannews.com/ஊரடங்கு-உத்தரவை-தளர்த்து/

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் திடீர் மாற்றம்! முழுமையான நேர விபரங்கள் வெளியிடப்பட்டது

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமை தொடர்பில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களில் தற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறித்த மாவட்டங்களில், 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

ஊரடங்கு உத்தரவை மீறிய 34,000க்கு அதிகமானோர் கைது

நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 34,500 க்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த  காலப்பகுதியில் 8,800 க்கு மேற்பட்ட வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 168 வாகனங்களை பொலிஸார கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஊரடஙக-உததரவ-மறய-34-000கக-அதகமனர-கத/175-249023

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டமானது 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141714?ref=home-imp-flag

ஸ்ரீலங்கா மேலும் முடக்கப்படுமா? இன்று வெளிவரும் விசேட அறிவித்தல்

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.

நேற்று மட்டும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தனர்.

அதிலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று காலை பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் தளபதி ஆகியோரை சந்திக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடல் நடத்த உள்ளனர்.

இதன்பின் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு 27ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கொரோனாவின் தாக்கம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141792?ref=imp-news

இன்று இரவு மீண்டும் அமுலாகின்றது ஊரடங்கு!

In இலங்கை     April 24, 2020 7:29 am GMT     0 Comments     2667     by : Benitlas

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு மீளவும் அமுலுக்கு வரவுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது.

தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகின்றது.

இந்தநிலையிலேயே கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகிறது.

இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊரடங்கு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தளர்த்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்த முக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஊரங்கு சட்டம் நீடிக்கப்படும் என கூறப்படுகின்றது.

இதுகுறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இன்று-இரவு-மீண்டும்-அமுல/

  • தொடங்கியவர்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை

Police-Raid-on-Jaffna-Coronavirus-Alert-Situation.jpg

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் நேற்றிரவு 8 மணி முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

http://athavannews.com/இன்றும்-நாளையும்-நாடளாவி/

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு நீடிப்பு : ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதுடன் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேபோல் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே 5 ஆம் திகதி தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141890?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

ஊரடங்கு வேளையில் மண்வெட்டியுடன் சுற்ற வேண்டாம்; இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை, ஆயினும் பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் சவளக்கடை மற்றும் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர்கள், பிரதே சபை உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு சனிக்கிழமை (25) மாலை மத்தியமுகாம் தொழிற்பயிற்சி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட 24ம் படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வது ஒன்று கூடுவது ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் இராணுவ தளபதியினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் மாத்திரம் பள்ளிவாசல்களுக்கு சென்று ஒலி பெருக்கிகள் மூலம் மத பிரசங்கங்களை ஜும்மா பள்ளிகளில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதித்து செயற்பட வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்த காரணத்தினால் ஏனைய பிரதேசத்திற்கு பரவாமல் இருந்தது அது போன்று நாம் மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் .

பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் அலுவலகத்திற்கு செல்வது போன்று ஆடைகளுடன் வீதியில் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை வழங்கப்பட்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141933

நாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் இன்று விசேட நடவடிக்கை!

ஊரடங்கு உத்தரவு நாளை காலை நீக்கப்பட்ட பின்னர் நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஹட்டன் நகரம் முழுவதும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை ஊடாகவே இதற்கான செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி பஸ் தரிப்பிடம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், இரசாயன திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன. அதேவேளை, ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் ஹட்டன் நகருக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/141956?ref=imp-news

சற்றுமுன் வெளியான அறிக்கை : நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141970?ref=home-imp-flag

நம்புங்கள்!!

லீவில் உள்ள படையினர் தங்கள் முகாம்களுக்கு திரும்புவதற்கு வசதியாகவே ஏப்ரல் 27 திங்கள் சிறீலங்கா தழுவி ஊரடங்கு அமுல் 🙏

  • தொடங்கியவர்

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிப்பு

sanakkiyan-news-10.jpg

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன் பொதுப்போக்குவரத்தும் இடம்பெறாது என் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வவுனியாவில்-வர்த்தக-நிலை/

 

ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்களை வீதிக்கு இறக்கினால் நிலைமை மோசமாகும் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

ஊரடங்கை தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வைரஸ் பரவலானது அதன் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அடுத்தது சமூக பரவலாக மாறலாம்.

மீண்டும் மக்களை வீதிக்கு இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதே உண்மையாகும்.

எனினும் நாட்டில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டது என கூற முடியாது. இவ்வாறான தொற்றுநோய் நீண்டகாலம் செயற்பாட்டில் இருக்கும்.

எனவே உடனடியாக நாட்டினை வழமைக்கு கொண்டுவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சமூகத்தில் பரவல் ஆரம்பித்தால் அதன் பின்னர் நோய் எவ்வாறு பரவுகின்றது, யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறிய முடியாது.

இது சமூகத்தில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காம சீனா போன்ற நாடுகளுக்கு நேர்ந்ததும் அதுவே. இந்த சமூக பரவல் இலங்கையில் ஏற்பட்டால் நிலைமைகளை கட்டுப்படுத்த கடினமாக அமையும்.

ஏனைய நோய்களை போல் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது குறித்து எம்மால் கணிப்பிட முடியாதுள்ளது.

எவ்வளவு காலம் செயற்பாட்டில் இருக்கும், மீண்டும் இரண்டாம் மூன்றாம் சுற்றில் தாக்கம் செலுத்துமா, தன்மைகள் எவ்வாறானது என்ற எதுவுமே தெரியாத நிலையில் தான் உலகம் பூராகவும் இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் நாம் ஆரம்பம் தொடக்கம் கடினமான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தினால் பரவல் வேகத்தை இப்போது வரையில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கம் செலுத்தும் என்பது குறித்து எதிர்வுகூற முடியாது. ஆனால் நோய் பரவலுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/142050?ref=home-imp-flag

 

ஊரடங்கு தளர்த்தப்படும் தினம் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட தகவல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது.

அந்த வகையில் ஸ்ரீலங்காவில் ஊரடங்கு முழுமையாக எப்போது நீக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“தொடர்ந்து 28 நாட்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லாவிட்டால் மட்டுமே தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க முடியும்” என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் எதிர்வரும் 1ஆம் திகதி அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மே மாதம் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142049?ref=imp-news

மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் மக்களின் நடமாட்டம் குறைவு!

In இலங்கை     April 28, 2020 10:08 am GMT     0 Comments     1125     by : Litharsan

மன்னார் மாவட்டத்தில் இன்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்களுடைய நடமாட்டம் நகரப் பகுதிகளில் குறைவாகவே காணப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அபாய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் மக்கள் ஆர்வம் காட்டாமையையும் அவதனிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே, மரக்கறி உற்பத்திகளின் விலை குறைவாக காணப்பட்டமையினால் மக்கள் அதிகளவில் மரக்கறி கொள்வனவில் ஈடுபட்டனர்.

அத்துடன், அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவுக்கு மக்கள் என வெளியே வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதேநேரத்தில், அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் முகக் கவசங்கள் அணிந்தும் சுகாதார முறைகளைப் பின்பற்றியிருந்தனர்.

Curfew-Released-Situation-in-Mannar-1-1.

Curfew-Released-Situation-in-Mannar-2-1.

Curfew-Released-Situation-in-Mannar-3-1.

Curfew-Released-Situation-in-Mannar-4-1.

Curfew-Released-Situation-in-Mannar-5-1.

நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

In இலங்கை     April 29, 2020 7:39 am GMT     0 Comments     1176     by : Jeyachandran Vithushan

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது 2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் மின்சார, நீர், தொலைபேசி கட்டங்களை செலுத்தும் நடவடிக்கைகள் போன்ற வழமையான செயற்பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

http://athavannews.com/நாடுமுழுவதும்-அனைத்து-தப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.