Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... ஒரே நாளில் 660 பேர் பலி - அதிரும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... ஒரே நாளில் 660 பேர் பலி - அதிரும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப்
 
நியூயார்க்:
 
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. 
 
உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 27 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 474 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://www.worldometers.info/coronavirus/

Country,
Other
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Total
Recovered
Active
Cases
Serious,
Critical
Tot Cases/
1M pop
Deaths/
1M pop
Reported
1st case
World 935,022 +76,667 47,189 +4,880 193,989 693,844 35,478 120.0 6.1 Jan 10
USA 214,836 +26,306 5,099 +1,046 8,878 200,859 5,005 649 15 Jan 20
Italy 110,574 +4,782 13,155 +727 16,847 80,572 4,035 1,829 218 Jan 29
Spain 104,118 +8,195 9,387 +923 22,647 72,084 5,872 2,227 201 Jan 30
China 81,554   3,312   76,238 2,004 466 57 2 Jan 10
Germany 77,981 +6,173 931 +156 18,700 58,350 3,408 931 11 Jan 26
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தான் நாம் இருக்கிறோம்....இறைவா காப்பாற்று..

  • கருத்துக்கள உறவுகள்

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

நேற்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலை பார்த்து படமெடுக்க நிற்பவர்களைப் பார்த்தால் இப்போதைக்கு அடங்குமாப் போல தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் திணறும் அமெரிக்கா! தியாகங்களை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது- பகிரங்கப்படுத்திய ட்ரம்ப்

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

“அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம்.

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும்.

அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்

நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள்

மிகச்சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அமெரிக்கா கொரோனா வைரஸுக்கு எதிராகப் பணியாற்றி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான மருத்துவம், சிகிச்சை, தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறோம்

மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம்.

கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது.

மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பத்து லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பலியானவர்களின் எண்ணிக்கையானது ஐம்பதாயிரத்து 3218 பேராக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராயிரத்து 88 பேர் பலியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/usa/80/140447?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் ஜ‌யா , கொரோனா ஒரு மில்லிய‌ன‌ தாண்டி விட்ட‌து / போன‌ கிழ‌மையும் இந்த‌ கிழ‌மையும் அதிவேக‌மாய் ப‌ர‌வ‌ தொட‌ங்கிட்டுது 😓

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.