Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத் தளம் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: 34 கடற்படையிர் பலி- 4 போராளிகள் வீரச்சாவ

Featured Replies

ராடார் ஒன்டும் கைப்பற்ற பட்டுள்ளது.

nedu1.jpg

nedu14.jpg

nedu2.jpg

nedu3.jpg

nedu4.jpg

nedu5.jpg

nedu6.jpg

nedu7.jpg

nedu8.jpg

nedu9.jpg

ஆகாயமும் கடலும் செல்வதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் சீனாக்காரன் கூறுவதையும் அமெரிக்க இங்கிலாந்துக் காரர்கள் கூறுவதையும் இந்தியா கூறுவதையும் எப்படி இந்த இலங்கைப் பேரின அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியும். ஒன்றை மட்டும் இவர்களால் செய்ய முடிகின்றது. நடைபெறுகின்ற இழப்புக்களைத் தற்காலிகமாக

மூடிமறைக்க முடிகின்றது. அவர்கள் தரப்புச் செய்திகளைப் பார்த்தால் இதையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பயங்கரமான அடி போல்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 34 பேரின் ஆயுதங்களையும் விட்டுட்டு ஆக 06 பேரின் ஆயுதங்களை தான் எடுத்தீர்களா? ஏன் மிகுதி வேண்டாமா? :P :P :P :P :P

புதினத்தின் மூன்றாவது இணைப்பில் இருந்து ஆயூத விபரங்கள்

மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் ராடார் - 01, 50 கலிபர் துப்பாக்கி - 03, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் - 02, ஆர்பிஜி - 01, ரி-56 2 ரக துப்பாக்கிகள் - 08, ஏகே எல்எம்ஜி - 01, 50 கலிபர் துப்பாக்கிகளுக்கான ரவைகள் உட்பட போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், இராணுவத் தளபாடங்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

20070524001kp1.jpg

20070524002do8.jpg

நெடுந்தீவு கடற்படைத் தள பிரதேசத்தின் ஒரு பகுதி

20070524003vz0.jpg

20070524004vj9.jpg

-புதினம்

தென்னிந்திய ஊடகமான தற்ஸ் தமிழில் வந்த செய்தி

விடுதலைப் புலிகள் அதிரடி தாக்குதல், 35 கடற்படை பலி

கொழும்பு - மே 24, 2007: யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

வான் புலிகள் பிரிவின் அதிரடித் தாக்குதலால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள இலங்கை படைகளுக்கு நேற்று நள்ளிரவு விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவிடமிருந்து பெரும் தாக்குதலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில், உள்ள கடற்படை முகாமை நோக்கி 15 கடல் புலிகள் படகுகள் விரைந்து வந்தன. அவற்றில் 3 படகுகளில் ஏராளமான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த புலிகள் அதில் இருந்தனர்.

நெடுந்தீவு முகாம் மீது புலிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். அதே நேரத்தில் தரை மார்க்கமாக பீரங்கித் தாக்குதலிலும் புலிகள் குதித்தனர். இதனால் பொறியில் அகப்பட்ட எலி போல ஆனது இலங்கை கடற்படையினரின் நிலை.

விடிய விடிய இந்த சண்டை நடந்தது. காலை வரை தொடர்ந்த இந்த சண்டையின் இறுதியில், 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். புலிகள் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஒரு படகும் சேதமடைந்தது.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த புலிகள், கடற்படை முகாமில் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களது பகுதிக்குச் சென்று விட்டனர்.

-தற்ஸ் தமிழ்

Edited by கந்தப்பு

தமிழீழ தாயகத்திற்காக வீர காவியமான மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்!

கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

முற்றாக அழித்துவிட்டோம் 35 கடற்படையினர் பலி! விடுதலைப் புலிகள் அறிவிப்பு

நெடுந்தீவில் உள்ள கடற்படைத் தளங்களில் ஒன்று நேற்று தங்களால் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்த னர்.

கடற்புலிகளின் சிறப்புத் தாக்குதல் படகு அணிகள் நெடுந்தீவின் தெற் குப் பகுதியில் தரையிறங்கி, குறிப்பிட்ட முகாமை அதிகாலை 1.20 மணிக்கு முற்றுகை இட்டு தமது தாக்குதலைத் தொடங்கின

நெடுந்தீவின் தெற்கு முனையில் உள்ள கோபுரத்தை மையமாக வைத்து அமைக் கப்பட்ட தளம் மீது கடற்புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி அதிகாலை 2.45 மணிக்கு அதனை முற்றாக அழித்தனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான கடற்படைத்தளம் இந்தப் பகுதியில் அண்மையில் தான் நிறுவப்பட்டது என்றும் கடல், வான்பிராந்தியங்களை கண்காணிக்கும் விசேட ராடர் கண்காணிப்பு மையமாக அது செயற்பட்டது என்றும் பாதுகாப்பு வட்டாரத் தகவல்களிலிருந்து அறிய முடிந்தது.

தொடர்ச்சியாக கடற்புலிகள் கடற்படைத்தளத்தின் மீது தீவிரமாக நடத் திய தாக்குதலையடுத்து அதிகாலை 2.45 மணிக்கு தளத்தை முற்றாகத் தாக் கியழித்தனர். அப்போது கடற்படையி னர் டோராப் பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகளில் அப்பகுதிக்கு வந் தனர். இவற்றுக்கு எதிராகவும் கடற்புலி கள் தாக்குதலைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலின்போது "டோராப்' பீரங்கிப் படகு ஒன்று கரையோர முருகைக்கற் பாறைகளில் மோதி முற்றாக சேதம டைந்தது.

மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப்பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படை யினரின் 50 கலிபர் துப்பாக்கி 02, பி. கே. எல் எம் ஜி துப்பாக்கிகள் 02, ஆர் பி ஜி 01, ரி 56 ரக துப்பாக்கிகள் 02 உட்பட போர் ஆயுதங்கள், வெடிபொருள் கள் ஆகியவற்றைக் கைப்பற்றி வெற் றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடற்படைத்தளத்தில் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்கக் காணப்பட்டுள்ளன. இந்த எண்ணிகையை கடற்புலிகள் தளத்தில் இருந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா கடற்படையினரின் பெரும் பாதுகாப்புப் பகுதியில் உள்ள நெடுந் தீவு கடற்படை தென்பகுதித் தளத்தை கடற்புலிகள் தகர்த்து அழித்த தாக்கு தலில் கடற்புலிகள் 4 பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உதயன்

தாக்குதலை முறியடித்து மீண்டும் அங்கு நிலைகொண்டு விட்டோம் படைத்தரப்பினர் தகவல்

கடற்புலிகளின் தாக்குதலை எமது கடற்படையினர் முறியடித்துவிட்ட னர். கடற்படையினர் தரப்பில் 10 பேர் வரையானோரே உயிரிழந்திருக்கக் கூடும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நெடுந்தீவில் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படைப் பிரிவு மீண் டும் அந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைப் பேச் சாளர் நேற்று மாலை தெரிவித்தார். நெடுந்தீவு என்பது சுமார் 46இல் இருந்து 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டது.

அங்கு கடற்படையினரின் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் தென்கோடிப் பகுதியில் உள்ள கடற்படைப் பிரிவு நேற்று அதிகாலை 1.15 மணிக்கு புலி களின் தாக்குதலுக்கு உள்ளானது.

விடுதலைப் புலிகள் 18 படகுகளில் வந்து தாக்குதல்களை நடத்தியுள்ள னர். இவற்றில் 6 படகுகள் தற்கொலை குண்டுதாரிகளைக் கொண்ட படகு கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது

கடற்படையின் டோறாப் படகுகளும் மற்றும் விரைந்து சென்று தாக்கும் படகு களும் புலிகளின் படகுகளை எதிர் கொண்டு தாக்குதல்களை நடத்தின. கடற்படையினர் இந்த மோதலில் புலி களின் இரண்டு படகுகளை முழுமை யாக அழித்துவிட்டனர்.

கடற்புலிகளின் படகுகளை

விமானங்கள் அழித்தன

புலிகளின் படகுகள் திரும்பிச் செல் லும்போது அந்தப் படகுகளை விமா னப் படை விமானங்கள் இடை மறித்து குண்டு வீசி இரண்டு படகுகளை அழித் துள்ளன. மேலும் இரண்டு படகுகள் சேத மாகியுள்ளன.

கடற்படைப்பிரிவு மீண்டும் அந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டது.

உதயன்

கேக்கிறவன் கேணையணா இருந்தா வானத்தில கோழி பறக்குது என்று சொல்வாங்கப்பா :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25_05_2007_014_001_001.jpg

25_05_2007_014_002.jpg

thinamalar

மக்கள் தொலைக்காட்சி வைத்திருக்கும் தமிழக மக்கள் ஈழத்தின் உண்மையான நிகழ்வுகளை அறிவதாக சொல்கிறார்கள். அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் ஈழப் பிரச்சனை என்றவுடன் வலு உசாராக போராளிகளின் சாகசங்களைப் பற்றி கதைக்கிறார்களாம்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அதிகமாகவே இருக்கும். முகாமை முழுமையாக தமது கட்டுபாட்டில் வைத்திருந்ததாகக் கூறும் புலிகள் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றியுருக்க வாய்புள்ளது. படத்தில் ரடார் கருவியின் ஸ்கிறீன் மட்டுமே காணப்படுகிறது.

இத் தாக்குதலின் நோக்கமும் மர்மமாகவே உள்ளது.

நேற்றையதினம் அதிகாலை நெடுந்தீவு கடற்படை முகாம் மீது புலிகள் மேற்கொள்ள முயன்ற தாக்குதல் முயற்சியின்போது கொல்லப்பட்ட புலிகளில் 7பேருடைய பெயர்களை தேசிய பாதுகாப்பு ஊடக மைய்யம் வெளியிட்டுள்ளது. புலிகளின் தொலைத் தொடர்பை இடைமறித்து கேட்டபோது முகிலன் என்று அழைக்கப்படும் வீரசிங்கம் ஜங்கரன்இ சுகிர்தன் என்று அழைக்கப்படும் பாஞ்சாளன் சுகந்தன்இ ஸ்ரீமாறன் என்று அழைக்கப்படும் சந்திரசேகரன் மய+ரன்இ தமிழ்வேந்தன்இ தினிவிழி என்று அழைக்கப்படும் செபஸ்தியாம்பிள்ளை மேரி கனிஷ்ராஇ தாலைத்தென்றல் என்று அழைக்கப்படும் கதிரிப்பிள்ளை மரியாகௌரிஇ காதல் மைந்தன் என்று அழைக்கப்படும் பிரான்ஸிஸ் யுனி குமார் ஆகியோரது பெயர்கள் புலிகளின் தொலைத் தொடர்பினை இடைமறித்து கேட்டபோது தெரியவந்துள்ளதாகவும் இவ் மோதலில் 18 புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இத் தாக்குதலின் நோக்கமும் மர்மமாகவே உள்ளது.

தனித்து இருக்கின்ற இலக்குகள் மீது தாக்குதல் நெருக்கடி கொடுப்பது என்பது எதிரிக்கு ஒன்று, அம் முகாமைப் பாதுகாக்க அதிக பலத்தை பாவிக்கத் தூண்டுவது. அல்லது, அத்தளத்தில் இருந்து தானாகவே வெளியேற வைக்க முனையும் செயற்பாடு

நெடுந்தீவு என்பது தனித்து இருக்கின்ற ஒரு தீவு. ....... :icon_idea:

எனவே எதிரிக்கு 2 முடிவுகளை இது எடுக்க வைக்கும். எனிப் படைப்பலத்தை அஙகே கூட்டுவான். அல்லது, தீவை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறும் முடிவை எடுப்பான்.

நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடாரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்: கொழும்பு ஊடகம்

கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடார் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடார்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்திருந்தார்.

நெடுந்தீவை மீட்பதற்கு இரு பற்றலியன் துருப்புக்கள் தயார்படுத்தப்பட்டன. அந்தப் பகுதிக்கு காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் இருந்து 10 டோராக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மேற்கு கரையிலான நடமாட்டங்களை கண்காணித்த ராடார் நிலை அழிக்கப்பட்டுள்ளது. சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடுக்கடலில் உள்ள தமது கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும் திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் உள்ளதனால் அது படையினரின் மேற்கு கரையோர கண்காணிப்புக்களுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.eelampage.com/

யாழ் இராணுவத் தளபதி நேரடிப் பார்வையில் நெடுந்தீவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்

நெடுந்தீவின் தென்புற கடைற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கடற்கரையோரம் முழுவதும் காலவரண்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுந்தீவின் புதிய கடற்படைத் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சனிக்கிழமையும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் கடல்ரோந்து நடவடிக்கைகளையும் கடற்படையினர் அதிகரித்துள்ளனர். இதே நேரம் தென்மராட்சியிலிருந்து ஒரு தொகுதி படையினர் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு தேடுதல் நடடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/

24.05.07 காலை அன்று காலை நெடுந்தீவு கடற்படை முகாம் மீதான கடற்புலிகளின் துணிகரத் தாக்குதல் காணொளியில் ....

Edited by முரசு

நெடுந்தீவு தாக்குதல் சிங்கள படைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Sunday, 27 May 2007

எதிரிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக நெடுந்தீவு கடற்படைத்தள அழிப்புத் தாக்குதல் அமைந்துள்ளது என்று கடற்புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அருணன் தெரிவித்தார்.

கடற்படைத்தள அழிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிய மாவீரர்களின் வீரவணக்க கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். ஏதிரி எதிர்பாராத இடத்தில் இந்த அதிரடித் தாக்குதலை கடற்புலிகள் நடத்தியுள்ளனர். தமிழ் மக்கள் மீது அழிப்புத் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்ற சிங்களப்படைத் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்து அழிவை ஏற்படுத்தி அவர்களின் கனரக ஆயதங்களை கைப்பற்றி கடற்புலிகள் வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

29 கடல் மைல்கள் தொலைவிலுள்ள கடற்படைத்தளத்திற்கு புலிகளின் சிறப்பு அணித்தரையிரங்கி அதிரடித் தாக்குதலை நடத்தி எதிரிக்கு அழிவை ஏற்படுத்திய இத் தாக்குதல் மிக முக்கியமான பதிவாகும் என்றும் யாழ். மாவட்ட கடற்புலிகளின் பொறுப்பாளர் அருணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.