Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

14 hours ago, Maruthankerny said:

இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா 
இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள் 
மனதையே கொள்ளை கொண்டுவிடும் 

சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன் 
எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... முன்பு அடிக்கடி கேட்பதுண்டு 
அனேமாக வேலைக்கு செல்லும்போது இவருடைய பாடல்களையே கேட்டுக்கொண்டு செல்வேன்.


ரெஹ்மா வின் குரலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது 

கண்ணைமூடி கொண்டு கேட்டு பாருங்கள் 

 

நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனவொன்று நான் கண்டேன்....
இறையாட்சி மலரக் கண்டேன்...
இறையாட்சி மலரக் கண்டேன்...

இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இறையாட்சி மலரக் கண்டேன்
எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் 
இன்பக் கனவொன்று நான் கண்டேன் (2)

1.இயேசுவின் அருகினில் ஏழைகள்
அமரக் கண்டேன்
இறை அன்பினில்
அகிலமே ஒன்றென உணர்ந்து
நின்றேன் (2)
பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள்
பலரைக் கண்டேன் - 2
பிறர்நலம் பேணிடும் பணியில் எனை
இணைத்தேன்
எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன்.

2.அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என
அறிந்தேன் 
அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டுகொண்டேன்.(2)
நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன். -2
நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன்.
அன்பின் நிறைவை நான் கண்டேன்.
 

வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும்.

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
   பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
      கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
         எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் அண்ணா
நான் சின்ன‌னில் கேட்ட‌ ப‌க்கிதி பாட‌ல் தேவை கிடைத்தால் இணைக்கிறீங்க‌ளா

பாட‌ல் 
ச‌க்தியை நோக்க‌ ச‌ர‌வ‌ன‌ப‌வான் நித்த‌மும்...........இப்ப‌டி தான் அந்த பாட்டு தொட‌ங்கும் ,

யாழ்பாண‌த்து பெருமாள் கோயிலில் ந‌ல்ல‌ ந‌ல்ல‌ ப‌க்தி பாட‌ல்க‌ள் சிறு வ‌ய‌தில் கேட்டு இருக்கிறேன் பாட்டு ஆர‌ம்ப‌ வ‌ரி நினைவில்லை அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உங்களின் பக்தி கண்டு யாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்....... நீங்கள் குறிப்பிட்ட வரிகள் 1:10 ல் இருந்து வருகின்றது பண்ணோடு பாடி இன்புறுக......!  👍

29 minutes ago, பையன்26 said:

உடையார் அண்ணா
நான் சின்ன‌னில் கேட்ட‌ ப‌க்கிதி பாட‌ல் தேவை கிடைத்தால் இணைக்கிறீங்க‌ளா

பாட‌ல் 
ச‌க்தியை நோக்க‌ ச‌ர‌வ‌ன‌ப‌வான் நித்த‌மும்...........இப்ப‌டி தான் அந்த பாட்டு தொட‌ங்கும் ,

யாழ்பாண‌த்து பெருமாள் கோயிலில் ந‌ல்ல‌ ந‌ல்ல‌ ப‌க்தி பாட‌ல்க‌ள் சிறு வ‌ய‌தில் கேட்டு இருக்கிறேன் பாட்டு ஆர‌ம்ப‌ வ‌ரி நினைவில்லை அண்ணா 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Album : Skanda Shasti Kavacham

Song: Thuthiporku val vinai pom

Lyrics : Traditional

 

டைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனிஒளி யொவ்வும்
குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறுஇரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்துஅணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று
உன் திருவடியை உறுதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேர் இள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழூபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நல் துணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தோதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்குச் செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணல் எரி
தணல்எரி தணல்எரி தணல்அது ஆக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தறணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத்ட் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா குகனே ! கதிர்வே லவனே !
கார்த்திகை மைந்தா ; கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே ! சங்கரன் புதல்வா !
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா !
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா !
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா !
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப்பாட
எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை
முருகனைப் படினேன் ஆடினேன்
பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன்
பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க, மலைக்குரு வாழ்க !
வாழ்க வாழ்க, மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
கலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்பர் சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றவர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்குரு சங்காரத்தடி
அற்ந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
என்னைத்தடுத்து ஆட்கொள்ள எந்தனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேன பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இரும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலா போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓர் அரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா......... சரணம்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

 

உங்களின் பக்தி கண்டு யாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்....... நீங்கள் குறிப்பிட்ட வரிகள் 1:10 ல் இருந்து வருகின்றது பண்ணோடு பாடி இன்புறுக......!  👍

 

இணைப்புக்கு ந‌ன்றி சுவி அண்ணா 🙏🙏🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

வந்தது வந்தது ரமலான்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2
 உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார் 
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார் 
அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க 

தீயின் நடுவில் தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை 
தோல்வி நிலையில் துவண்டு வாடும் 
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் 2
கரத்தில் தாங்கிடுவார் 
அன்பின் கரத்தில் தாங்கிடுவார்


 தூரதேசம் வாழ்க்கைபயணம்
 தேவன் ஏசு உன்னை தொடரும்
 பாவம் யாவும் பறந்து போகும்
 பரமன் அன்பில் பனியை போல
 வாழும் காலம் முழுதும் உன்னில் -2
 வசந்தம் வீசிடுமே 
அன்பின் வசந்தம் வீசிடுமே

மாறாதது மாறாதது

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சொல்ல சொல்ல தித்திக்குமே 

முரளிதர கோபாலா முகுந்தா 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Singer SPB.

Music V.Kvmar

ஆஹா என்ன ஒரு அருமையான பக்தி பாடல் பக்தி  பாடல்களில் இதுவும் எனக்கு மிகவும் பிடித்த மான பாடல்,எனக்கு மட்டும் அல்ல இங்கு நிறையப்பேருக்கு இந்த பாடல் பிடிக்கும் என நினைக்கிறேன் தமிழாலே கனிப்பாகும் தரவா...
குமரா உன் அருள் தேடி வரவா..

 

தணிகை வாழும் முருகா...

உன்னை காண காண வருவேன்....
என்னை காத்து காத்து அருள்வாய்....
திரு தணிகை வாழும் முருகா..
உன்னை காண காண வருவேன்....
என்னை காத்து காத்து அருள்வாய்....
பாடல் பதிவேற்றம் @Rithinreema

ஆறுபடை உனது, ஏறு மயில் அழகு

தேடாத மனம் எந்த மனமோ.......
ஆறுபடை உனது, ஏறு மயில் அழகு
தேடாத மனம் எந்த மனமோ....
வேல் கொண்டு விளையாடும் முருகா...
வேதாந்த கலை ஞான தலைவா....
திறுநீரில் தவழ்ந்தாடும் பாலா..
உன்னை பாடிப் பாடி மகிழ்வேன்
திரு தணிகை வாழும் முருகா....
உன்னை காண காண வருவேன்....
என்னை காத்து காத்து அருள்வாய்..


ஆறு முகம் அழகு அருபழம் முருகு

சொல்லாத நாள் என்ன நாளோ.....
தேனோடு திணை மாவும் தரவா.....
தமிழாலே கனிப்பாகும் தரவா.....
தேனோடு திணை மாவும் தரவா....
தமிழாலே கனிப்பாகும் தரவா...
குமரா உன் அருள் தேடி வரவா..
எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்
திரு தணிகை வாழும் முருகா...
உன்னை காண காண வருவேன்....
என்னை காத்து காத்து அருள்வாய்....
என்னை காத்து காத்து அருள்வாய்....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ajmer Dargah Shariff |Hazarath Khwaja Garib Nawaz|Nagore Sadham

 

Bho Shambo - Saradha Raaghav

தென்னாடுடைய சிவனே போற்றி!

 


எங்கும் சிவாய எதிலும் சிவாய
யாதும் சிவாய யாவும் சிவாய
உடலும் சிவாய உயிரும் சிவாய

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

S.P . பாலசுப்ரமணியம் பாடிய மிக அருமையான மற்றுமொரு இனிய பாடல் இந்த பாடல் கூட சிலரின் பழைய நினைவுகளை திரும்ப.....

 

தேவாதி தேவ திருமலை வாச பாடினேன் உன்னை
ஸ்ரீ வெங்கடசா ஸ்ரீ வெங்கடசா தேவாதி தேவ
ஏழுமலை ஏறி உந்தன் புகழ் பாடி

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Enthavinai Aanalum 1974

T. M. Sounderarajan

 

 

எந்த வினை ஆனாலும் வந்த வழியே இடர்
நிந்தை கணிந்தருள்வாய் ஸ்ரீ வெங்கடேசா

இந்த பக்த்தி பாடலும் ஊரில் கோவில்களில் திருவிழாக்காலங்களில் அதிகாலையிலேயே அல்லது ஒரு வேளையாவது ஒலிக்காமல் இருக்காது மனசுக்கு இதமான பாடல்..............

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லாஹ்வை நாம் தொழுதால்

பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Geethai Sonna Kannan

Sirkazhi Govindarajan

நீலமேனி கோலம் காண
கண்கள் மறுக்குமோ
அவன் நிமிர்ந்த தோளும்
விரிந்த மார்பும்
நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும்
மீசை அழகும்
வெற்றி ரகசியம்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2).............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Annal Nabi Ponmugathai

Rabiyul Awwal

அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே

நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே
அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே
யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது
உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Genre: Devotional
Lord: Murugan
Language: Tamil
Singer: T. M. Sounderarajan

அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆஆ..

உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகாஆஆஆ....
அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆ
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகாஆஆஆ....
அழகென்ற சொல்லுக்கு முருகாஆஆ




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.