Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக, னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை, கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய, மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு, பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய, முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த, அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை, இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள், பெருமாளே.

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனைத்  தேடி வந்த ராதையும் நானே 
காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே .....!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயங்கள் எல்லாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்

1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்

2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை எழுத்தை மாற்றிவிடும் பிள்ளையார் சுழி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஓர் தியாகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய......

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!

அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!

மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!

இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!

குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1

அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1


அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2


அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3


வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4

வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5


எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7


யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8

இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9

ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10


சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11

வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12

முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13

காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14

கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15

என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16

உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17

அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18

எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருசெந்தூர் இது திருசெந்தூர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
தினகரன் கோடி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
குங்கும பூவாய் பங்கயப் பாவை
வேங்கடரமனின் பூங்கொடி வாராய்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
அக்கறையோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கு பிடித்த பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

எனக்கு பிடித்த பாடல்

எனக்கும் தான், நல்ல பாடல்

அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பம் பண்ண ஆள் இல்லையே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜக மாயை - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும்
இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
திரு நாமம் புகல்பவரே

நாளென் செயும்வினை தானென் செயும்
எனை நாடிவந்த கோளென் செயும்

நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்

குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறி

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே

தனியேர கத்தின் முருகோனே
சமர்வேலெ டுத்த பெருமாளே

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள  திருவண்ணாமலையில் பிறந்தவர் . இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் ,தாயார் பெயர் முத்தம்மை . இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். 
 தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது. 
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன. 
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“  திருவாசகத்திற்கு  இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகம்:   கானடா 

ஶ்ரீ கோமதி 
உனையே நம்பினேன்
எனையாளும் அம்மா 
ஈஸ்வரி நீயே
ஶ்ரீ கோமதி உனையே நம்பினேன் அம்மா 

மகிமை என்ன சொல்வேன் மாயா ஸ்வரூபிணி 
மங்களமாகவே 
மனதில் வாரும் அம்மா 

(ஶ்ரீ கோமதி )

பங்கஜாட்சி நீயே 
பரமதயாளு நீயே 
எங்கும் நீதி பெற்ற 
எந்தன் பிரியாய் நீயே
 கோமதிதாய் 
என்றுகூறிய
 பேர்களுக்கு 
குலதெய்வமாய் வந்து 
குறைகளைத் தீர்ப்பாயே 
ஶ்ரீ கோமதி 

( ஶ்ரீ கோமதி )

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை அயீஷா ரலி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு - 2
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2

அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2
இம்மாநிலத்தில் இவள் போல் - 2
இரங்கும் தாயும் உளரோ - 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
குழு அ அ அ அ ஆ....
 
இசை பல்லவி
 
ஆண் அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
 
குழு அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
 
ஆண் சாம வேதம் ஓதும் நீலகண்டன்
வாம பாதம் வாழும் ஈஸ்வரி
காமகோடி பீடம் ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் சங்கரி
தீயசக்தி உன் தளத்தில் மாய
தெய்வசக்தி மாநிலத்தில் வாழ
வருகவருக வந்து வரமருளே
        
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
 
குழு அ அ அ ஆ.... அ அ அ ஆ.... 
அ அ அ அ ஆ.... அ அ அ அ ஆ.... ( இசை )
 
குழு ஆ....அ....ஆ....அ.... 
 
இசை சரணம் - 1 
 
ஆண் பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில் நீங்காத
ஓம்காரி நீயே
பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில்
அருளாட்சி புரிகின்ற தாயே
 
நான்கு வேதமும் பஞ்ச பூதமும் 
ஆறு காலங்கள் ( இசை )
 
ஏழு லோகமும் எட்டுத் திக்குமும் 
ஏற்கும் பாதங்கள் ( இசை )
 
தேவர் தம்மோடு மூவரும் இடைவிடாது  
பணியும் கருணைக் கடலே ( இசை )
 
பாவம் மேலோங்குமோ தருமம் கீழாகுமோ
 
குழு ஒஓ....ஒஓ....ஒஓ....  ஒஓ....ஒஓ....ஒஓ....
 
ஆண் பூமி தடுமாறவே பேய்கள் நடமாடுமோ
 
குழு ஒ ஒ ஒ ஓ.... ஒ ஒ ஒ ஓ....
 
ஆண் வினையில் விளையும் பகையும் துயரும் பொடிபட
வருகவருக வந்து வரமருளே
 
அபிராமியே உமா மகேஸ்வரி
சிவகாமியே கலா ஜடாதரி
 
குழு ஆ....ஆ....ஆ....ஆ.... அ....ஆ....அ....ஆ.... ஆ....
 
இசை சரணம் - 2
 
ஆண் காஞ்சி நகர் வாழும் காமாட்சியே ( இசை )
 
கையில் கிளி ஏந்தும் மீனாட்சியே ( இசை )
 
ஏழு உலகுனது அரசாட்சியே
என்ன நடந்தாலும் நீ சாட்சியே
மூடனுக்கும் வாழ்வளித்த தாயே ( இசை )
 
மூலமான ஆதி சக்தி நீயே ( இசை )
 
மகிஷாசுரன் செய்த வினை தீர்த்தவள் ( இசை )
 
முருகேசனின் கையில் வேல் சேர்த்தவள் ( இசை )
 
அபிராமி பட்டர்க்கும் நூல் தந்தவள் ( இசை )
 
சம்பந்தன் அழும் போது பால் தந்தவள் ( இசை )
 
வேண்டும் வரம் தர தேவி திருமுகம்
மீண்டும் மலர்ந்திடுமோ
ஈன இருளிடை ஞான ஒளிவர
பொழுது புலர்ந்திடுமோ
  
பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக
சிம்மமேறி வருக சீற்றமோடு வருக
சூலி  நீலி அம்மா தாயே ஜனனி
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை பல்லவி

ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரம் ஆயிரம் பல்லவிகள்
ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் அதில்
ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும்
ஓங்கார நாதமாம் சபரிமலை அதில்
ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும்
ஓங்கார நாதமாம் சபரிமலை  

இசை சரணம் - 1

நீலாகாசமும் மரகத பூமியும் 
ஆனந்த சங்கீத தாரையாக 
நீலாகாசமும் மரகத பூமியும் 
ஆனந்த சங்கீத தாரையாக

அர்ச்சனை மந்திரமும் ஜீவ நாளங்களும் 
உன் முன்னால் கைகூப்பி தொழுதிடவே 
மனமுருகி மெய் மறந்து நின்றேனே நான் 
ஊமை அமுதம் ருசித்தது போல் 

ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் 

இசை சரணம் - 2

கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் 
சிந்திய கண்ணீர் உறைந்ததாவா
கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் 
சிந்திய கண்ணீர் உறைந்ததாவா

அருளொளி மணிகண்டன் பாதங்கள் அலங்கரிக்க 
துளசி இலை கண்ட பாக்கியம் 
தர்சன பாக்கியமாம் தீர்த்த முன்டேனே நான் 
ஊமை இனிப்பு உண்டது போல் 

ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் அதில்
ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும்
ஓங்கார நாதமாம் சபரிமலை அதில்
ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும்
ஓங்கார நாதமாம் சபரிமலை 

ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரம் ஆயிரம் பல்லவிகள் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குலலின் மீதியிலே

        இசை        பல்லவி

புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி
இரு பொன்னிர விழியை இமை கொண்டு மூடி புது கதை கூருது என் தோழி
மன்னன் செவியில் குண்டலம் ஆட மயக்கம் பெருகுது என் தோழி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மன்னன் செவியில் குண்டலம் ஆட மயக்கம் பெருகுது என் தோழி
அவன் மங்கள கன்னத்தில் சங்கதி பேச மாயம் பெருகுது என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி

        இசை        சரணம் - 1

நெற்றியில் ஆடுது இலவேனில் தலை நேரில் ஆடுது மயில் சீலி (இசை)
நெற்றியில் ஆடுது இலவேனில் தலை நேரில் ஆடுது மயில் சீலி
சிரு குற்றம் இல்லாதொரு முத்தாரம் அவன் கூந்தலில் ஆடுது என் தோழி
சுற்றி இருக்குது பட்டாடை உயர் சுடர்விழி வீசுது கருமேனி
அந்த கொற்றாமரயின் புன்னகைக்கு நான் பொங்கி எழுந்தேன் என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி

        இசை        சரணம் - 2

எத்தனை பேருக்கு வசமானாய் அவன் இதயம் கடலடி என் தோழி (இசை)
எத்தனை பேருக்கு வசமானாய் அவன் இதயம் கடலடி என் தோழி
ஒளிர் முத்துமணி திரல்கள் தியது தவன் மோதனமார்பினன் என் தோழி
தத்துவ,ம் நாயகன் கால் முதல் தலை வரை தனி நிறம் அன்றோ என் தோழி
அடி இத்தனை கிழனம் எழிலும் படைத்தவன் இவனை போல் எவர் என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி

        இசை        சரணம் - 3

நேற்று நடந்ததை நினைவினில் வைத்து நெஞ்சம் மகிழ்வது என்ன பிழை (இசை)
நேற்று நடந்ததை நினைவினில் வைத்து நெஞ்சம் மகிழ்வது என்ன பிழை
தினம் அற்றார் மனது ஆசை கனவுகள் ஆயிரம் வந்தது என்னவளே
மாற்றம் ஏனடி மன்னன் எனை விட்டு மங்கையர் கலையுடன் நிலை செய்தான்
அவன் தோற்றம் நின்றலை சுட்டு விட்டும் அதை சொல்லும் வகை ஏது என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி
இரு பொன்னிர விழியை இமை கொண்டு மூடி புது கதை கூருது என் தோழி
புல்லாங்குலலின் மீதியிலே அவன் பூவிதழ் பதிந்தது என் தோழி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளதினில் நினைத்த எல்லாம்
உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே;
உண்மை அறிவான பொருளே!
பரிவாகவே அநந்தந் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்,
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ?
குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குகா! சண்முகா!
கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள்
கொடுத்(து)ஆள்வை முத்தையனே!
மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி
மணவனே! என் துணைவனே!
வன்னமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.

==========================================

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருவாக அருவாக உருஅருவாக. ஒவ்வொருவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையில்லாத இறைவா எனக்கு 
கருணை புரிவாயே
இம்மை வாழ்வில் இறைவா எனக்கு 
அருளை பொழிவாயே
இறைவா அருளை பொழிவாயே
மருளும் நரகை இறைவா எனக்கு 
மருள வைப்பாயே
மறுமை வாழ்வில் இறைவா எனக்கு 
உன்னைத் தருவாயே
இறைவா உன்னைத் தருவாயே

பிறந்த உயிர்கள் சுவைக்கும் மனிதா 
இறப்பைப் படைத்தானே
இறந்த உடல்கள் நடக்கும் மனிதா 
மறுமை திடல் தானே
சுமந்த தாயின் சுமைகள் மனிதா 
இறங்கும் நாள் தானே
நிறைந்த அமல்கள் சுமப்பாய் மனிதா 
மஹ்ஷர் வெளிதானே
மனிதா மஹ்ஷர் வெளிதானே

நபியின் வழியில் நடந்தால் மனமே 
வாழ்வு சிறந்திடுமே
நபியின் ஸலவாத்ததனில் மனமே 
வளங்கள் பெருகிடுமே
நபியை காண்பதற்கே மனமே 
கண்கள் ஏங்கிடுமே
நபியை கண்ட உடனே மனமே 
கல்பும் குளிர்ந்திடுமே
மனமே கல்பும் குளிர்ந்திடுமே

உயிரை எடுக்கும் மலக்கே வருவீர் 
அழைக்க ஒருநாளே
உதட்டில் ஒலிக்கும் மலக்கே கலிமா 
இறைவன் அருளாளே
உவந்து வருவேன் மலக்கே இறையை 
காண அந்நாளே
உவகை கொள்வேன் மலக்கே அந்நாள் 
எந்தன் மணநாளே
மலக்கே எந்தன் மணநாளே

இறுதித்தூதர் நபியே எனக்கு 
கருணை புரிவீரே
இறையின் முன்பு நபியே எனக்கு 
பரிந்து உரைப்பீரே
பானம் அருந்த நபியே எனக்கு 
அள்ளித் தருவீரே
பாலம் கடக்க நபியே எனக்கு 
உதவி செய்வீரே
நபியே உதவி செய்வீரே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.