Jump to content

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து  தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!

biscut-tea-jpg.jpg

உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம்  மதுரை .  இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை.

கோன் வகை பனி கூழ்  சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில்  உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் உள்ள கொப்பி கடையில் இந்த  விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்திருக்கிறது. அறிமுகம் செய்த இரு நாள்களிலேயே கோப்பைகள் அனைத்தும் முழுமையாக தீா்ந்து போகும் அளவுக்கு வாடிக்கையாளா்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த விசுகொத்து கோப்பை 10 நிமிடங்கள் வரை சூடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்.எஸ்.பதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் விவேக் சபாபதி பேசும் போது.. "மதுரை மேலமாசி வீதியில் எங்களது கடை 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் தேத்தண்ணீர் கோப்பைகளுக்கு பதிலாக விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை அறிமுகம் செய்துள்ளோம். கோன் வகை பனி கூழ் தயாரிப்பைப் போன்று இருந்தாலும், தேத்தண்ணீர் அல்லது கொப்பியின் சூடு தாங்கும் வகையில் 'வேபா் விசுகொத்து' தயாரிக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் எங்களுக்கு இந்த கோப்பையை வழங்குகிறது. இரு நாள்களுக்கு முன்பு விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தேத்தண்ணீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாடிக்கையாளா்களிடையே அதிகரித்த வரவேற்பு காரணமாக, ஒரு வாரத்துக்கு வைத்திருந்த கோப்பை இருப்பு இரு நாள்களிலேயே தீா்ந்துவிட்டன. ஏற்கெனவே இவ்வகை கோப்பைக்கு ஒடா் செய்திருந்தும், சென்னையில் பொது முடக்கம் காரணமாக, வந்து சேருவதற்கு தாமதமாகி வருகிறது. ஆகவே, வரும் நாள்களில் கோப்பை கிடைத்த பிறகே வாடிக்கையாளா்களுக்கு அதில் வழங்க முடியும் என்றார்.

https://tamil.asianetnews.com/life-style/he-biscuit-tea-cup-in-madurai-is-a-shock-to-the-people-of-madurai--qc8cko

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து  தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!

 

நல்ல முயற்ச்சி👍

சுட சுட குடிச்சிடனும் 10 நிமிடத்துகுள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிளாஸ்ரிக் பொருட்களை.... தவிர்ப்பதற்கு, நல்லதொரு முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல முயற்சி இது. தலைப்புக்கு சிறிதும் தொடர்பில்லையே இதில் எங்கே வருகிறது அதிர்ச்சி?????😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல முயற்சி இது. தலைப்புக்கு சிறிதும் தொடர்பில்லையே இதில் எங்கே வருகிறது அதிர்ச்சி?????😡

இந்த செய்தியை வாசிப்பதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்டது...😆

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.