Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன உளைச்சல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

ஒரு இனத்தின் பங்காளனாகவும் உரித்தாளனாகவும் நியாயமாகச் சிந்திக்கும் உங்கள் வினாக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நேசிக்கும் பல லட்சம் தமிழ் உறவுகளின் வினாவென்றே கொள்ளமுடியும்.  2009இன் பின் இன்றுவரை மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியாத பலர் இன்றும் கவலைதோய்ந்த முகங்களோடு அமைதியாகத் தாமுண்டு தமது வேலையுண்டு என்று ஒதுங்கியிருக்கும் நிலை தொடர்கிறது. கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிவிடும் என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், யதார்த்தத்தில் அது சாத்தியமா? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மௌனமாக உறங்குவதும்; தனிமையில் அது விழித்து வினா எழுப்புவதுமாகவே காலங்களை நகர்த்துகிறது. நாம் உண்டு உருண்டு உழவுசெய்து வளர்ந்த நிலங்கள் எம்மிடமில்லை என்பது எவளவு வலி நிறைந்தது என்பது புலம்பெயர் உறவுகளால் புரியமுடியாததல்ல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிவிட மனங்கள் மாற்றங்களுள் மறைந்து விடுகிறது. அது இயல்பானதும் கூட. பெருவிருட்சமே வீழ்ந்தபின் சிறு புற்களால் நிமிரமுடியுமா என்ற நம்பிக்கையீனங்கள் ஒருபுறமும்  புலத்திலும் தாய்நிலத்திலுமான கடந்த பதினொரு ஆண்டுகால நகர்வுகள் மறுபுறமுமாக மக்களைக் கலக்கிக் குழப்பிக் கலைத்து வைத்திருக்கிறது. யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்கட்டத்தில் புலத்திலே, ஆங்காங்கே சில இளையோர்கள் அகிம்சை ரீதியில் போராடியபோதும், யுத்தநிறைவின் பின் அவர்கள்போன்றோரை ஒருங்கிணைத்து அரவணைத்து அணியம்செய்யவும் வழிகாட்டவும் திராணியற்ற புலம்பெயர் சூழல். தாயகத்திலே நாடாளுமன்றக் கதிரைகளை நோக்கிய சூழல் மறுபுறமாக யாரையும் எதையும் புரிந்துகொள்ள முடியாத புதிர்நிலை அரசியலைக் கொண்டே அகவொடுக்க நிலைக்கு எமது மக்களை, எமது தலைமைகள் வழியாகவே மேற்குலகும் சிங்களமும் அழைத்துச் செல்வதில் இருந்தே உங்களின் பலவினாக்கள் தோற்றம் பெற்றுள்ளதென்பதே எனது அவதானிப்பாகும். ஆனால் இந்த உலகில் வாழும் உயிரிகளுக்கான பாத்திரம் என்ன என்பதை சூழலும் காலமுமே நிர்ணயம் செய்யுமென்பதை அண்மைய கொரொனோக் காலநிலை தெள்ளளெனச் சுட்டிநிற்கிறது. 

தம்மைத் தாம் வெல்ல வேண்டிய சூழலில் தமிழினம் இன்று நிற்கிறது. வீழ்ந்தவர்கள் வீழ்ந்துகிடந்தவாறு  எழமுயற்சிக்காதிருந்தால்; குறைந்தபட்சம் கையையாவதுநீட்டாது யாரும் கைகோடுக்க வரமாட்டார்கள் என்பதே உண்மைநிலை. இதனைத் தமிழினம் சிந்திக்காதவாறு சிதைந்துபோவதே இன்றை கையறுநிலை.  மே18 நினைவு நிகழ்வு இந்த ஆண்டு நகரங்கள்தோறும் நடைபெற்றது. நிகழ்வுக்காகச் சென்றபோது யேர்மன் அன்பரொருவர் அந்தச் செயற்பாட்டாளர்களுக்குக் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டுவது பொருத்தமென நினைக்கிறேன். இதனை, அதாவது இன அழிப்பை நீங்கள் சரியாகப் பரப்புரை செய்து யேர்மன் மக்களுக்குத் தெரியப்படுத்தித் தொடர்ந்து முன்னெடுங்கள். அப்போது உங்களது நியாயமான போராட்டம் வெல்லும் என்றார். இங்கே போராடுதல் என்பது அனைத்துவழிகளிலும் அனைத்து வெளிகளிலும் நிகழ வேண்டிய காலம். ஆனால் நாமோ யாரோ போராடக்காசைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோராதலால் நானுட்பட இன்றும் அதே எதிர்பார்ப்போடு நகர்கின்றோம்.  

 தமிழ்த் தேசியவாதிகளாக நேற்றிருந்தோர் இன்று சிங்களத்தின் ஏவலாளர்களாக நிற்கின்றனர். தமிழினத்தின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படும்போது  தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும். இதுவே சிங்களத்தின் பெருவிருப்பமாகும். இந்த விருப்பை ஒருவகையிற் தமிழ்த் தலைமைகளே தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றனர்.   

ஆனால் இவற்றையும் கடந்து ஈழத்தீவிலே காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான(அதில் முழு ஈழத்தமிழருக்கான நீதியும் மறைந்துள்ளதையும் மனங்கொள்ள வேண்டும்) நீதியைக் கோரிச் சலிப்பின்றிப் போராடும் ஒரு தரப்பும் உள்ளதென்பதும் சிறுநம்பிக்கையளிப்பதாக உள்ளதையும் நோக்க வேண்டும். விடுதலைக்கான தேவை இருக்கும்வரை போராட்டங்கள் தொடரும் என்பதை இந்த உலகு கடந்தே வருகிறது. இந்த உலகிலே ஒரு சிறிய மக்கட்தொகையைக் கொண்ட இனமாக இருக்கும் நாம் சரியான மதிப்பீடுகளை செய்வதும் மாற்றுவழிகளைத் தேடுவதுமே எமது இருப்புக்கான வழியாகும். புலத்திலே உள்ள இளைய தலைமுறை சிறந்த ஆற்றலாளர்களாக வளர்ந்த வரும் சூழலில் அவர்களுக்கு எமது தேசம் தேசியம் சார்ந்து சரியான புரிதலை ஏற்படுத்தின் நியாயத்தை அவர்களே இந்த நாடுகள் புரியும்வகையிற் பேசுவார்கள் என்பதே நம்பிக்கை. 


இதனை உயிரீகங்களூடாகக் கட்டமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் களநிலை மாறினாலும் போராட வேண்டிய கட்டாயம் இன்றும் அப்படியேதான் உள்ளதென்பதை தமிழினம் புரிந்துகொண்டதாலேயே தமது வாக்கினூடாகவேணும் பதிலளிக்க முனைகிறது. மாவீரர் தினத்திலும் மே18இலும் தடைகளைத் தாண்டிக் திரள்கிறது. இன்று எம்முன் இருப்பது எம்மால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வதும் எமது பிள்ளைகளை குறைந்தபட்சம் இன மொழிப் பற்றுடையோராய் உருவாக்கிவிடுதலுமே.      

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரஞ்சித்
        முதலில் ஒரு மாவீரன் குடும்பத்தவராக உங்களைப் பார்ப்பதில் பெருமையடைகிறேன்.தலை வணங்குகிறேன்.
        சாதாரணமாக இனவிடுதலை போராட்டம் என்று கீழ்மட்ட உதவிகள் செய்தவர்களில் இருந்து எல்லோருக்குமே இன்னமும் நம்ப முடியாமல் என்ன ?எப்படி ? உண்மையா என்று தெரியவில்லை.தெளிவில்லை.
        உங்களை மாதிரி எனக்கும் பல நேரங்களில் இப்படியான சிந்தனைகள்.எங்காவது அடி வளவிற்குள் போய் நின்று ஐயோ என்று கத்தி குளற வேண்டும் போல இருக்கும்.
        ஊரிலே நடப்பதைப் பார்க்க விடுதலை வேட்கை இன்னும் இன்னும் கூடுகிறது.
இன்னும் இவ்வளவு கஸ்டம் துன்பம் சித்திரவதைகளையும் தாண்டி நல்ல தலைமை இருந்தால் போராடக் கூடியவர்களையும் கண்டேன்.நடைமுறைக்கு சாத்தியமில்லாது போனாலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
       பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.
          எனவே எமக்கு மட்டுமல்ல புலிகளுக்கு எதிராக நின்றவர்களுக்கும் இன்றைய நிலையில் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
          என்னைப் பொறுத்த வரை சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது.
 

சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது. இயன்றவரை தியானம் &  வேறுவழிகளில் மனதை திசைதிருப்பினால் நல்லது. இன்றுவரை நம்ப முடியாமலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

அருமையான கருத்து... அக்னியஷ்த்ரா.

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லதொரு கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நொச்சி அண்ணா!, “ தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும்” இந்த  உணர்வைத்தான் நான் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் உணர்வது. 

அதே நேரத்தில் எங்களுக்கு நடந்தவற்றை பேசாமல் எழுதாமல் விடுவதும் இயலாத ஒன்று..இரண்டு உணர்வுகளுக்கிடையில் சிக்கிதவித்தாலும், பரப்புரைகளை செய்வதுடன் இப்போதையநிலையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அவரவரிற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இருப்பைதக்கவைத்துகொள்ளவும், மன உளைச்சலை குறைக்கவும் உதவும் நடவடிக்கைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 04:00, அக்னியஷ்த்ரா said:

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

பாதுகாப்பாக இருந்து இந்தக் குருடர்கள் யானையைத் தடவிப்பார்க்கவும் இந்தியா தான் உயிரோடு இருக்கும்வரை விடாது. யானைக்கு மதம் அதிகரிக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்கும்.😲

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.