Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ)

July 5, 2020

%E0%AE%A4%E0%AF%80-05-768x1024.jpgகொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன.

WhatsApp-Image-2020-07-05-at-12.31.17-PM

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள்.

அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.

%E0%AE%A4%E0%AF%80-07-1024x576.jpg%E0%AE%A4%E0%AF%80-04.jpeg%E0%AE%A4%E0%AF%80-02-768x1024.jpg

http://thinakkural.lk/article/51870

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலி வீதிக்கு பூட்டு

வெள்ளவத்தை பகுதியிலுள்ள புடவை நிலையமொன்றில் இடம்பெற்ற தீ பரவல் காரணமாக, குறித்த வீதியிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

xxz.jpg

வெள்ளவத்தை, புடவை வர்த்தக நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி, ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

83537671_200640711286429_676862584260544

https://www.virakesari.lk/article/85154

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை தீ : 4 வர்த்தக நிலையங்கள் நாசம் - முழு விபரம் இதோ !

(எம்.எப்.எம்.பஸீர்)

வௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலைய தொடரொன்றில்  இன்று பரவிய தீயினால் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றாக தீக்கிரையகையுள்ளன. டப்ளியூ. ஏ. சில்வா மாவத்தைச் சந்திக்கு அருகே உள்ள துணிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதால் இவ்வனர்த்தம் சம்பவித்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் கூறினார்.  துணி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வி ற்பனைச்செய்யும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகவும்,  இதன்போது  உயிர்ச் சேதங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

DSC_0019.jpg

 எவ்வாறாயினும் பாரிய தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர், இதன்போது காயமடைந்து கொழும்பு   தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில போதன அவைத்தியசாலை) சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தீயணைப்பு படையின் இயந்திர சேவைகள் பிரிவின் வீரர் ஒருவரே இவ்வாறு  சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

DSC_0064.jpg

 இன்று  முற்பகல் 11.45 மணியளவில், வெள்ளவத்தை, டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை சந்திக்கருகில் உள்ள  துணிக் கடை ஒன்றில் தீ பரவ ஆரம்பித்துள்ளது.  இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு அரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின்  5 தீயணைப்பு வாகனங்கள், தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் அகியன  இதன்போது ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

DSC_0070.jpg

 இந்த நடவடிக்கைகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்தது.

 இதன்போது ஸ்தலத்துக்கு இரானுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வ உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின்  உயர் அதிகாரிகளும் பொலிஸ்  திணைக்கள உயர் அதிகாரிகளும்  சென்று நிலைமைகளை அவதானித்தனர். 

DSC_0061.jpg

தீபரவலையடுத்து, தெஹிவளை திசையில்  இருந்து கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியானது, இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை சந்தி வரை மூடப்பட்டது. இதனால் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களை கரையோர வீதி ஊடாக கொழும்பை நோக்கி பயணிக்க தேவையான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாக காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.

DSC_0055.jpg

 இந் நிலையில் இன்று மாலை வரை, தீ பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் நாளை குறித்த பகுதிக்கு சென்று தீக்கிரையான வர்த்தக நிலையங்களை பார்வையிட்டு காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

DSC_0016.jpg

 அத்துடன் குறித்த நான்கு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையானமையினால் ஏற்பட்ட நட்டம், துல்லியமாக கணக்கிடப்படாத நிலையில்,  பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

https://www.virakesari.lk/article/85207

  • கருத்துக்கள உறவுகள்

அந்த Chinese gift palace  80 வருடங்களாக பரம்பரை வியாபாரமாக Hong kong  குடும்பத்தால் நடத்தப்பட்டு வந்தது. எமது வீட்டுக்கு மிக அருகில் தான். பள்ளித்தோழிகளோடு birthday பார்ட்டிகளுக்கு ப்ரெசென்ட் வேண்ட அங்குதான் செல்வேன். நிறைய கலைப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருள்களும் இருக்கும். காலையில் செய்தி கேள்விப்பட்டதும் அந்தக்கடை தப்பவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டேன். அது, Royal பேக்கரி , Gayalords , Bombay sweet house , Seequeens என்று ஒருசில கடைகள் மட்டுமே 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.  அநேகமா கடை உரிமையாளர்கள் தான் நடத்துகிறார்கள். நான் இப்பொழுது போகும்போது சிலர் மிகவும் வயசாகி இன்னும் கடையில் இருக்கிறார்கள். Royal பேக்கரி உரிமையாளர்கள் அண்ணன் , தம்பி இருவரும் 1970 இல் இருந்து பார்த்துவருகிறேன். 1983 கலவரத்தின் போது BBC இங்கு அளித்த பேட்டியில் துணிவாக சிங்களவராக இருந்தும் சிங்களவர்களை எதிர்த்து பேட்டி கொடுத்தவர்கள். அரசாங்கம் மக்களை தூண்டிவிட்டு தமது சிறுபான்மை இனத்தை கொன்று குவிப்பது தம்போன்ற சிங்கள மக்களுக்கு ஒருபோதும் சம்மதம் இல்லையென்று நல்ல ஒரு பேட்டி கொடுத்திருந்தார்கள். அந்தப்பேட்டியை save பண்ணி வைத்திருந்தேன். பிறகு காணாமல் போய்விட்டது. 

25 minutes ago, nilmini said:

வெள்ளவத்தை ஒரு மறக்க முடியத ஒரு பிரதேசம்.... குறிப்பாக 70கள் தொடக்கம் 2000ம் ஆண்டு வரை.  அதற்கென தனி மதிப்பு உள்ளது. பல கடைகள் இப்பொழுது இல்லாவிட்டாலும் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் வெள்ளவத்தையின் அடிப்படை பண்புகள் மாறாமல் இருப்பது சிறப்பு. நீங்கள் முன்னர் இருந்த Zellers , Mangala,  Omega in, Sappaire என்பவற்றை மறந்து விட்டிர்கள். இதில் Omega Inn உரிமையாளர்கள் சிங்கள அடிப்படைவாத கட்சிகளுடன் தொடர்பை பேணுவதால் இனவாதம் பிடித்தவர்கள் என நினைக்கிறேன். Gaylord இப்பொழுது மூடி விட்டார்கள் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

உண்மைதான் வெள்ளவத்தைக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. மங்கள ரெக்கோர்டிங் பார் என்றுதான் 1980 களில் திறந்தார்கள். Zellers ice-cream மற்றும் biscuits மறக்கமுடியாது. Elephant  house இல் தான் நெக்டோ , ஒரேஞ் பார்லி , லெமனேட் , கிரீம் சோடா , இஞ்சி சோடா வேண்டுறது.ஆரம்பித்தில்  Fussles லேனில் இருந்து St .Lawrence இல் படித்தேன். அப்போதிருந்த தமிழ் பலசரக்கு கடைகள் பெயர் ஒன்றும் நினைவுக்கு வருகுதில்லை . Milk board , Maaning place உடன் இருந்த நிறையக்கடைகள் ஒன்றுமே இப்ப இல்லை . பின்னர் 1980 இல் இருந்து Arethusa லைனில் Sapphire ஹொட்டேலுக்கு அடுத்த வீடு. அவர்களுக்குத்தான் வீடு வித்தது . இப்ப வீடெல்லாம் உடைத்து வேறு  என்னவோ கட்டி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2020 at 05:36, nilmini said:

நில்மினி.... உங்களுக்கு  வெள்ளவத்தையில், காலி வீதியில் உள்ள...
 "மயூரி" உணவகத்தை தெரியுமா?

பத்மினி சிதம்பரநாதன் தான்... அந்தக் கடை உணவுகள் சுவையாக இருக்கும் என்று சொன்னார்.
இலங்கைக்கு செல்லும் போது...அங்கு தான், கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடுவேன்.

திரும்பி வரும் போது... வெளிநாட்டுக்கு, கொண்டு செல்லக் கூடிய....   
இறால் பொரியல், நண்டுப் பொரியல், கணவாய் பொரியல், மீன் / சுறா  பொரியல்,
கொத்து ரொட்டி எல்லாவற்றையும்... விசேடமாக தயாரித்து... 
காற்றுப் புகாத பைகளில் அடைத்து... தருவார்கள்.
இப்ப அதை நினைக்க வாயூறுது.   :)

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2020 at 22:34, தமிழ் சிறி said:

நில்மினி.... உங்களுக்கு  வெள்ளவத்தையில், காலி வீதியில் உள்ள...
 "மயூரி" உணவகத்தை தெரியுமா?

பத்மினி சிதம்பரநாதன் தான்... அந்தக் கடை உணவுகள் சுவையாக இருக்கும் என்று சொன்னார்.
இலங்கைக்கு செல்லும் போது...அங்கு தான், கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடுவேன்.

திரும்பி வரும் போது... வெளிநாட்டுக்கு, கொண்டு செல்லக் கூடிய....   
இறால் பொரியல், நண்டுப் பொரியல், கணவாய் பொரியல், மீன் / சுறா  பொரியல்,
கொத்து ரொட்டி எல்லாவற்றையும்... விசேடமாக தயாரித்து... 
காற்றுப் புகாத பைகளில் அடைத்து... தருவார்கள்.
இப்ப அதை நினைக்க வாயூறுது.   :)

மயூரி கடை தெரியும் சிறி. றஞ்சு மாமா வேண்டித்தந்து இங்கயும் கொண்டு வந்தனான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.