Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுள் தாண்டி வாழும் வித்தை: உடலுறுப்பு தானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் தாண்டி வாழும் வித்தை: உடலுறுப்பு தானம்

கடைசித் தருணங்கள்..

C/F/19: "முன் ஆசனத்தில் ஆசனப் பட்டி அணியாமல் இருந்திருக்கிறார். விபத்தில் தூக்கி வீசப் பட்டு தலைக் காயம், அனுமதிக்கப் பட்ட பின்னர் சடுதியான மூளை இறப்பு. இறந்த நேரம்...."

B/M/45: "மயங்கிய நிலையில் வீட்டின் படுக்கையறையில் காணப்பட்டவரை, அவசர சேவையினர் உயிர்ப்பிக்க முயற்சித்தனர். இதயத் துடிப்பு மீண்டது, மருத்துவமனையில் மூளை இறப்பு உறுதி செய்யப் பட்டது. இறந்த நேரம்..."

H/M/23: "GSW (gunshot wound). அனுமதிக்கப்பட்ட நேரம் 2.20; இறப்பு உறுதி செய்யப்பட்டது 07:20 ..."

என்னுடைய ஆய்வுப் பணிகளின் முக்கியமான அங்கம், இறந்த மனிதர்களிடமிருந்து கிடைக்கும் சுவாசப் பைகளை உடலுக்கு வெளியே சிறிது நாட்கள் உயிருடன் வைத்து அதன் மூலம் சுவாச நோய்கள் தொடர்பான ஆய்வுகள் செய்வது. மேலே நீங்கள் காண்பது கடந்த ஆண்டில் நாம் கையாண்ட 3 சுவாசப் பைகளின் சொந்தக் காரர்களின் இறுதிக் கணத்தை விபரிக்கும் மருத்துவக் குறிப்புகள். இந்த நல்ல மனிதர்களின் இறுதிக் கணங்கள் பல்வேறு மாதிரியாக இருந்தாலும் ஒரு விடயத்தில் இவர்கள் ஒரே குடையின் கீழ் வருகிறார்கள்: உடல் உறுப்பு தானம் என்பதே அந்த மாபெரும் மனித நேயக் குடை!

உட ல் உறுப்பு தானங்கள் உயிர் காக்கின்றன...

உடல் உறுப்பு தானங்களால் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களின் உயிர்கள் காக்கப் படுகின்றன. மேலே நான் குறிப்பிட்டிருப்பது போல, ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறு எண்ணிக்கையான சுவாசப் பைகள் வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 2000 வரையான சுவாசப் பைகள் பல்வேறு சுவாச நோய்களால் பாதிக்கப் பட்டோரில் உறுப்பு மாற்ற சிகிச்சை மூலம் பொருத்தப் படுகின்றன. வாழ்வதற்கு சில மாதங்களே வழங்க பட்ட நிலையில் இருக்கும் நோயாளிகள் நாடுகளின் உறுப்பு மாற்ற சேவையில் பதிந்து விட்டுக் காத்திருந்து இந்த உறுப்புகளைப் பெற்றுக் கொள்வர். இந்த உறுப்பு மாற்றங்கள் ஊழலுக்குட்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மேற்கு நாடுகளில் இந்த காத்திருப்புப் பட்டியல் கணிணி மயப் படுத்தப் பட்டிருக்கிறது. காத்திருக்கும் நோயாளியின் நோய்த் தீவிரம், வயது, போன்ற காரணிகளைக் கொண்டு கணிணியே தானம் கிடைத்த  உறுப்பை  யார் பெறுவர் என்று தீர்மானிக்கிறது. அதன் பிறகு மருத்துவர்களின் பணி ஆரம்பிக்கிறது. 

இறந்த பின் செய்யும் உடலுறுப்புத் தானங்களுக்கு உங்கள் அனுமதியைக் கொடுப்பது இலகுவானது. பல நாடுகளில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் போதே இந்த முடிவை நீங்கள் எடுத்து அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். பல நாடுகளில் மரணமானவரின் உரிமையுடைய உறவினரே இந்த முடிவை இறப்பிற்குப் பிறகு எடுக்க முடியும். 

இவையெல்லாம் மரணத்தோடு தொடர்பு பட்ட somber ஆன விடயங்கள், முடிவுகள்! ஆனால், உறுப்பு மாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு உயிர் கொடுக்கும் வழியாக எம்மை உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்து கொள்வது சிறப்பான செயல்! 

இறக்காமலே உயிர் காக்கும் தானங்கள்

இதயம், சுவாசப்பைகள், ஈரல் , தோல், கருப்பை, .இப்படியான உறுப்புகள் இறந்த பின்னர் தானமாகக் கொடுக்கப் படுகின்றன. ஆனால் உயிரோடிருக்கும் போதே நாம் தானம் செய்யக் கூடிய எங்கள் உடற்கூறுகளும் இருக்கின்றன, அவையும் பல்லாயிரம் பேர்களின் உயிரை உடல் நலத்தை காக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன. 

மிக இலகுவான தானம்..இரத்த தானம்.

அனேகமாகனோர் இலகுவாகச் செய்யக் கூடிய இரத்த தானம் உறுப்பு மாற்றம் எனக் கொள்ள முடியாவிட்டாலும் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு உடற்கூற்றுத் தானம். விபத்துக்குள்ளாகி இரத்த இழப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இரத்தத்தை ஈடு செய்ய  இரத்தம் பயன்படுவதை அனைவரும் அறிவோம். உண்மையில் தானமாகக் கிடைக்கும் இரத்தத்தில் இருந்து அதன் கூறுகளைப் பிரித்தெடுத்து பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் வழக்கப் படுகின்றன. உதாரணமாக குருதியுறைதலில் குறைபாடுடைய நோயுடையோரில் குருதிப் பெருக்கைக் கட்டுப் படுத்த, இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிறு தட்டுகளைப் (platelets) பிரித்தெடுத்து ஏற்றுவதன் மூலம் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து உயிரோடு மீண்டு தம் குடும்பங்களுடன் சேர்கின்றனர். எனவே உங்கள் இரத்தக் கொடை என்பது ஒரு வலுவான உயிர்காப்பு மருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

என்பு மச்சை தானம்

எங்கள் என்புகளின் நடுவே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு இழையம் என்பு மச்சை (bone marrow). மச்சையில் இருக்கும் பல்வேறு கலங்கள் எங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகளை உருவாக்குவதால் உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத பணியைச் செய்கிறது. 1986 இல், சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் அணு ஆலை வெடிப்பில், அதற்கு மிக அருகில் இருந்த பலர் இரண்டு மூன்று நாட்களில் இறந்து போனார்கள். அணுசக்திக் கதிர்வீச்சு, அவர்களில் என்பு மச்சையைத் தாக்கித் துடைத்தழித்து விட்டமையே அவர்களின் சடுதியான மரணத்திற்கு காரணம். மச்சையின் இன்றியமையாத தன்மையை எடுத்துக் காட்டும் உதாரணம் இது.  சில நோய் நிலைகளில் மச்சையின் தொழில்பாடு பாதிக்கப் படும் போது இரத்தப் புற்று நோய் வகைகளும், இரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். இத்தகைய நோயாளிகளின் உயிர்காக்க தானமாகக் கொடுக்கப் படும் மச்சை பயன்படுகிறது. 

மச்சை தானம் செய்யும் நடைமுறை ஏனைய உறுப்புகளை விட வித்தியாசமானது. இதற்கென இருக்கும் ஒரு அமைப்பில் (registry) உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் பதிவாளர்களுக்கு டி.என்.ஏ யைப் பரிசோதிக்கும் வசதியை அந்த அமைப்பு செய்து கொடுக்கும். இந்த டி.என்.ஏ தகவலை வைத்துக் கொண்டு தேவையான நேரம் உங்களைத் தொடர்பு கொள்வர். 

பிறக்கும் போதே ஆரம்பிக்கும் தானம்: தொப்புள் கொடி தானம்

சிசுவை தாயோடு இணைக்கும் தொப்புள் கொடி (umbilical cord) ஒரு அதிசயமான உறுப்பு. தொப்புள் கொடியினுள் காணப்படும் இரத்தம் (cord blood) உட்பட்ட இழையங்களில், என்பு மச்சைக்கு ஈடான வலுவுள்ள கலங்கள் காணப்படுகின்றன. கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் இந்த தொப்புள் கொடியை தானமாக வழங்கும் ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. சில இரத்தப் புற்று நோய்களில் நோயாளிகளின் இரத்த உற்பத்தியைப் புதுப்பிக்க இந்த தொப்புள் கொடி இரத்தத்தின் கலங்கள் பயன்படுத்த பட முடியும். தொப்புள் கொடி தானத்தின் இன்னுமொரு நன்மை, பிறக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தில் தேவையேற்படின், இவ்வாறு சேமிக்கப் பட்ட தொப்புள் கொடியின் இரத்தத்தையே சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். Autologous transplant எனப்படும் இத்தகைய உடற்கூறு மாற்றச் சிகிச்சையில் ஏனைய உறுப்பு மாற்றச் சிகிச்சைகளில் இருக்கும் பக்க விளைவுகள் இல்லை.

உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் தொப்புள் கொடி தானம், பிற்காலத் தேவைக்காக தொப்புள் கொடி இரத்தத்தைச் சேமித்தல் என்பன பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொடரும் கணங்கள்..

மேலேயுள்ள எந்த வகையான உடலுறுப்பு/உடற்கூறு தானமும் இன்னொரு உயிரின் ஆயுள் நீட்சிக்கு உதவுவதால், உங்கள் ஆயுளின் எல்லை கடந்து வாழும் ஒரு வழியாக இந்தத் தானங்கள் இருக்கின்றன. எனவே மரணம் முற்றுப் புள்ளி வைக்காத வாழ்வு உங்களுடையது!
 

-ஜஸ்ரின் 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிண்ணா..நேரம் கிடைக்கும் போது மேலும், பல தகவல்களை எடுத்து வருவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கன நாட்கள் யோசிப்பது பதியவேண்டுமென்று, அப்படியே நாள் பின் தள்ளி போய்விட்டது, இன்று  உங்கள் பதிவை பார்த்தபின்,  இனி பிற் போடக்கூடது, பதிந்துவிட்டேன் 

You have chosen to donate all your organs.

Your new physical card will arrive within four weeks.

 

 

Edited by உடையார்

15 hours ago, Justin said:

மேலேயுள்ள எந்த வகையான உடலுறுப்பு/உடற்கூறு தானமும் இன்னொரு உயிரின் ஆயுள் நீட்சிக்கு உதவுவதால், உங்கள் ஆயுளின் எல்லை கடந்து வாழும் ஒரு வழியாக இந்தத் தானங்கள் இருக்கின்றன. எனவே மரணம் முற்றுப் புள்ளி வைக்காத வாழ்வு உங்களுடையது!

-ஜஸ்ரின் 

நல்லதொரு ஆக்கம் யஸ்ரின் அண்ணா!  நாம் இறந்தபின்பு எமது உறுப்புக்களை நெருப்புக்கும் புழு பூச்சிகளுக்கும் இரையாக்காமல் அவற்றை தானம் செய்து பல உயிர்களை வாழவைக்கமுடியும்.

இங்கு Health Card apply பண்ணும் போதும் எமக்கு தானம் செய்ய விருப்பமா என்று கேட்பதால் பலர் எழுதி கொடுத்துள்ளார்கள். எமது health card ன் பின் பக்கத்தில் Donor என்று போட்டுவிடுவார்கள். மிகவும் வரவேற்கபடவேண்டிய விடயம்.

நாம் இல்லாமல் போனபின்பு எமது தானத்தால் ஒரு சிலருக்கு வாழ்வு கிடைக்குமென்றால் அதைவிட மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதில் வரப்போகின்றது.

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் Justin அண்ணா, பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

 

நல்லதொரு பதிவு. சாரதி பதிவுபத்திரம் செய்யும் போது பதிந்ததாக ஞாபகம். ஆனால் இந்த திரியை பார்த்தவுடன் மீண்டும் பதிந்துள்ளேன். நன்றிகள் 

https://www.organdonation.nhs.uk/register-your-decision/register-your-details/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயலில் காட்டியவர்களுக்கும் வாசித்தவர்களுக்கும் நன்றி.

விழிப்புணர்வை  ஏற்படுத்துவதே நோக்கம். இந்த என்பு மச்சை தானத்தைப் பொறுத்தவரை தென்னாசியர்கள் தானம் செய்யப் பதிந்து கொள்வது அமெரிக்காவில் மிகவும் குறைவு, ஏனைய மேற்கு நாடுகளில் எப்படி எனத் தெரியாது. இதனால் தென்னாசியர்களுக்கு என்பு மச்சை தானம் தேவைப் படும் போது 100 வீத பொருத்தம் உடைய கொடையாளிகளைக் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது. எனவே இயலுமானோர் 18 முதல் 44 வயதானோர் பதிந்து கொண்டால் எங்கள் சமூகத்தில் தேவை வரும் போது உயிர் காக்கலாம்.

நன்றி ஜஸ்ரின். மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் எழுதிக் கொடுத்து விட்டேன்.பயன்படுத்துவதும் விடுவதும் உடலை பொறுப்பு எடுப்பவரகளைப் பொறுத்தது.😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.