Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன்

Ayngaranesan-01-720x450.jpg

நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று ராஜபக்ஷ சகோதரர்கள் அசுரப்பலம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சி, அதில் வெற்றி பெற்றுள்ளவர்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்து நிலைப்பாடு, பேரினவாதக் கட்சிகளின் ஒத்தோடித் தமிழ்க்கட்சிகள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குப்பலம் வருங்காலத்தில் தமிழ்த் தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு ஆளாகவிருப்பதைக் கட்டியங்கூறி நிற்கின்றன என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக்குழுவாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தது. இது தொடர்பாகப் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், ”தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கும் சூழ்நிலையிலேயே  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு முன்பிருந்தே தேர்தல் கூட்டாக மாத்திரம் அமையாமல் தமிழ்த்தேசியக் கொள்கை மீது பற்றுறுதி கொண்ட கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நானும் பங்கு கொண்டிருந்தேன்.

அது கைகூடாத நிலையிலேயே, சுயேச்சை அணியாகப் போட்டியிடுவதிலுள்ள சவால்களை நாம் தெரிந்து கொண்டிருந்தும், இத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சை அணியாகப் போட்டியிடும் தவிர்க்க முடியாத முடிவை நாம் எடுக்க நேரிட்டது. எனினும், சுயேச்சைகளுக்கு வழங்கும் வாக்குகள் வீணானது என்ற பலத்த பரப்புரைகளுக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தொகையினர் எங்களை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் கட்சிகள், சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 33 அணிகளில் 11ஆவது இடத்தை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களைவிடக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுப் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கிறார். இங்கு பணநாயகம் வென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ஆனால், இதனைச் சலுகை அரசியலுக்கான வெற்றியாக மாத்திரமே குறுக்கிப் பார்த்துவிட முடியாது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முளைவிட்டு எழுச்சி பெற்றமைக்கான காரணங்கள் தெரியாத, போரின் வலியை அனுபவித்திராத ஒரு இளைய தலைமுறை இன்று வாக்காளர்களாகியிருக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் தமிழ்த் தேசிய நீக்கத்திற்கு இலகுவில் வயப்பட்டு வருகிறார்கள் என்பதும் ஒரு காரணமாகும் இதற்கான கூட்டுப்பொறுப்பை தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டாகவேண்டும்.

யாழ்ப்பாணத்தில்  மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட எமது அணிக்கு 2128 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இதைவிடப் பன்மடங்கு அதிகமாக மாம்பழம் சின்னத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்த எமது முகவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். படித்த மாவட்டம் எனப் பெருமை கொள்ளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சரியான முறையில் வாக்களிக்காததன் காரணமாக 35000 வாக்குகள் வரையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தபால்மூல வாக்குகளும் இதில் அடக்கம். விருப்புவாக்கு முறையால் குழப்பம் அடைந்திருக்கும் மக்களுக்கு வாக்களிக்கும் முறை தொடர்பாக தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் எல்லோரையுமே சாரும்.

எவ்வாறெனினும், இத்தேர்தலில் தமது நெஞ்சங்களில் எமக்கு ஆசனங்களை வழங்கிய ஆயிரக்;கணக்கானவர்களுக்கும், இத்தேர்தலில் எமக்காக உழைத்த பசுமை உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். அத்தோடு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்; தொடர்ந்தும்; தமிழ்த் தேசியப் பயணத்தில் தடம்மாறாது பயணிக்கும் என்பதையும், தேவைகளின் அடிப்படையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் என்பதையும் உறுதிபடத் தெரிவிக்கின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

by : Vithushagan

http://athavannews.com/தமிழினத்தின்-கூட்டு-ஆன்ம/

இப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு ஒரு கட்சியை தொடங்கினாள் தமிழ் தேசியம் செழித்தோங்கும்.

இனி இங்கு சிலபேர் ஆறறிவு, ஏலறிவு , சொம்பு தூக்கி எண்டு எதை எதையோ எழுதுவார்கள். அப்படி எழுதினவுடன் ஈழம் கிடைக்கும் எண்டு நினைப்பவர்களும் உண்டு.

தமிழ்த் தேசியம் பேசுவதில்தான் பிரிவேற்படுகிறது. பேசுகின்ற தமிழ்த்தேசியம் மக்களுக்குப் புரிகின்றதா?

Just now, Iraivan said:

தமிழ்த் தேசியம் பேசுவதில்தான் பிரிவேற்படுகிறது. பேசுகின்ற தமிழ்த்தேசியம் மக்களுக்குப் புரிகின்றதா?

அதனால்தான் மக்கள் இப்போது புரியும் வழியை நோக்கி போய்க்கொண்ண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Robinson cruso said:

இப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு ஒரு கட்சியை தொடங்கினாள் தமிழ் தேசியம் செழித்தோங்கும்

ஏன் வயிறு எரிகிறீர்கள்? விரும்பினால் நீங்களும் ஒன்றைத் தொடங்குங்கள். தடுக்கவா போகிறார்கள்?

Just now, satan said:

ஏன் வயிறு எரிகிறீர்கள்? விரும்பினால் நீங்களும் ஒன்றைத் தொடங்குங்கள். தடுக்கவா போகிறார்கள்?

Just now, satan said:

நீங்கள் யாரவது உங்கள் பொக்கிஷத்தை திறந்து வெளிநாட்டிலிருந்து பணத்தை அனுப்பினால் உங்கள் பெயரிலேயே ஒரு கட்சியை தொடங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை.

தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்போடு உள்ளதால் தான் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு அதிக்கப்படியான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அங்கஜன்.. டக்கி.. பிள்ளையான்.. கருணா.. இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள்.. மொத்தமாக நிராகரிக்கப்பட்ட வாக்குகளோடு ஒப்பிடும் போது சிறிய சதவீதமே.

எனக்குத் தெரிந்த பலரே வாக்குச் சீட்டை வேண்டும் என்று கீறி விட்டு வந்திருக்கிறார்கள். காரணம்.. அவர்களுக்கு தமிழ் தேசிய ஆன்மாவை புரிந்து கொண்டோர்.. பிரிந்து நிற்பது பிடிக்கவில்லை. அதாவது தேர்தலை புறக்கணிக்காது நிராகரித்துள்ளனர்.

டக்கிளஸ்.. அங்கஜன் போன்றோர் பெற்ற விருப்பு வாக்குகளின் பின்னால் உள்ள நம்பகத்தன்மை பற்றி சுமந்திரனின் சுத்துமாத்து முன்னுரிமை பெற்றதால் பேசப்படுவதில்லை. டக்கிளஸ் தேர்தல் தில்லுமுல்லில் வல்லவர். அதேபோல்.. மகிந்தவுக்கு வடக்குக் கிழக்கில் தனது ஆதரவு பெருகிறது என்று காட்ட வேண்டிய தேவை. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த.. பெரும் வர்த்தகப் பெரும்புள்ளி பவதாரணி உட்பட பலர் அங்கஜனுக்கு சார்ப்பாக களமிறக்கப்பட்டனர்.

பவதாரணிக்கு.. இதோ வெற்றி என்று கருத்துக்கணிப்பு அது இதென்று.. செய்தியும் விட்டுத்தான் பார்த்தனர். பவதாரணி அம்மையாரும்... ஏதோ டேவிட் கம்ரோன் ரேஞ்சில்..  இடம்பெயர்ந்து இன்னும் குடிசைகளில் வாழும் வலிகாமம் மக்களை சொகுசு வாகனத்தில் சென்று சந்தித்து வாக்குக் கேட்டார். அதற்கு அந்த மக்கள் சொன்னது.. எமது வாழ்விடப் பிரச்சனை.. மீள் குடியேற்றம்... அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைக்கு முடிவு கட்டித் தருவீர்கள் என்றால்.. எங்கள் வாக்கு உங்களுக்கே. 

இப்படித்தான் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து அடிமைப்படுத்தி ஏழ்மைப்படுத்தி போதையூட்டி.. தமக்கான வெற்றிகளுக்கான வாக்கு மந்தைக் கூட்டமாக வைத்துள்ளனர்.. இந்த டக்கிளஸ்.. அங்கஜன்.. பிள்ளையான்.. கருணா.. மற்றும் சம் சும் கும்பலினர்.

இவர்களுக்கு மக்களின் அன்றாடப் பிரச்சனை குறித்தும் அக்கறை இல்லை.. நீண்ட கால உரிமைப் பிரச்சனை குறித்தும் அக்கறையில்லை. தென்னிலங்கை சிங்கள பெளத்த எஜமானர்களின் தேவைகளை தமிழர்களிடத்தில்.. தமிழர்களின் நிலத்தில் பூர்த்தி செய்து கொடுப்பதே நோக்கம்.  இதனை அன்றாட வாழ்வுக்கு வழியில்லாத மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வாய்ப்பில்லை.

ஆனால்.. உரிமை பற்றி புரிந்து கொண்ட மக்கள்.. உரிமைக்கு முதன்மை அளிப்பதை தெளிவாகக் காண்கிறோம்.  அதேபோல்.. எமக்குள் பிரிவினையை விரும்பாத மக்களுக்கு வாக்குகளை சிதற விட்டு தண்டனை கொடுக்க முனைவதையும் காண்கிறோம். இப்படி 3 விதமாக மக்களின் வாக்குகள் சிதறுவதோடு.. இன்னொரு பிரிவினர் தேர்தலை புறக்கணிக்காமல் நிராகரிக்கவும் விளைகின்றனர். 

இந்த எல்லா வகை மக்களையும் தமிழ் தேசியத்தின் பால் கட்டி வைக்கனும் என்றால்..

விடுதலைப்புலிகளின் அரசியல் சமூக அணுகுமுறை அவசியம்.

1. மக்களின் அன்றாட வாழ்வியல் சமூகப் பிரச்சனைகளை தீவிரமாக எதிர்கொள்வதும்.. அவற்றிற்கு இயன்ற வரை குறுகிய கால.. நீண்ட கால தீர்வுகளை தேடுவதும்.

2. அதன் பின் மக்களின்நம்பிக்கை கட்டி வளர்க்கப்பட்ட தளத்தில் இருந்து கொண்டு மக்களின் உரிமைக்காக உண்மையாக உழைப்பது. அதில் தமிழ் தேசிய உணர்வூட்டல் தானே எழும். அதை நாம் எழுப்ப வேண்டிய அவசியமில்லை.

மகிந்த.. சஜித் கும்பலால்.. எப்படி சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை சந்ததிக்கும் கடத்த முடியும் என்றால்.. ஏன் எம்மால் முடியாது. ஆனால்... மகிந்த கும்பலுக்கு விழுந்த வாக்குகள்.. ரணில் மீதான அதிருப்தியின் காரணமும் இன்றைய இலங்கையின் பலவீனமான பொருண்மிய நிலையும் ஒரு காரணம். வெறும் சிங்கள பெளத்த பெருந்தேசிய வாக்குகள் அல்ல அவை. சிங்கள மக்கள் கடந்த நல்லாட்சி காலத்தில் கொண்டிருந்த அதிருப்தியும் மகிந்த கும்பலுக்கான வாக்காகி உள்ளது. அதுவும் அந்தக் கும்பல் செய்த கொடூர ஊழல்களை சமூகக் கொடுமைகளை..மறந்து அல்லது தவிர்க்க முடியாமல் தவிர்த்து. 

Edited by nedukkalapoovan

5 minutes ago, nedukkalapoovan said:

எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை.

தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்போடு உள்ளதால் தான் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு அதிக்கப்படியான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அங்கஜன்.. டக்கி.. பிள்ளையான்.. கருணா.. இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள்.. மொத்தமாக நிராகரிக்கப்பட்ட வாக்குகளோடு ஒப்பிடும் போது சிறிய சதவீதமே.

எனக்குத் தெரிந்த பலரே வாக்குச் சீட்டை வேண்டும் என்று கீறி விட்டு வந்திருக்கிறார்கள். காரணம்.. அவர்களுக்கு தமிழ் தேசிய ஆன்மாவை புரிந்து கொண்டோர்.. பிரிந்து நிற்பது பிடிக்கவில்லை. அதாவது தேர்தலை புறக்கணிக்காது நிராகரித்துள்ளனர்.

டக்கிளஸ்.. அங்கஜன் போன்றோர் பெற்ற விருப்பு வாக்குகளின் பின்னால் உள்ள நம்பகத்தன்மை பற்றி சுமந்திரனின் சுத்துமாத்து முன்னுரிமை பெற்றதால் பேசப்படுவதில்லை. டக்கிளஸ் தேர்தல் தில்லுமுல்லில் வல்லவர். அதேபோல்.. மகிந்தவுக்கு வடக்குக் கிழக்கில் தனது ஆதரவு பெருகிறது என்று காட்ட வேண்டிய தேவை. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த.. பெரும் வர்த்தகப் பெரும்புள்ளி பவதாரணி உட்பட பலர் அங்கஜனுக்கு சார்ப்பாக களமிறக்கப்பட்டனர்.

பவதாரணிக்கு.. இதோ வெற்றி என்று கருத்துக்கணிப்பு அது இதென்று.. செய்தியும் விட்டுத்தான் பார்த்தனர். பவதாரணி அம்மையாரும்... ஏதோ டேவிட் கம்ரோன் ரேஞ்சில்..  இடம்பெயர்ந்து இன்னும் குடிசைகளில் வாழும் வலிகாகம் மக்களை செகுசு வாகனத்தில் சென்று சந்தித்து வாக்குக் கேட்டார். அதற்கு அந்த மக்கள் சொன்னது.. எமது வாழ்விடப் பிரச்சனை.. மீள் குடியேற்றம்... அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைக்கு முடிவு கட்டித் தருவீர்கள் என்றால்.. எங்கள் வாக்கு உங்களுக்கே. 

இப்படித்தான் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து அடிமைப்படுத்தி ஏழ்மைப்படுத்தி போதையூட்டி.. தமக்கான வெற்றிகளுக்கான வாக்கு மந்தைக் கூட்டமாக வைத்துள்ளனர்.. இந்த டக்கிளஸ்.. அங்கஜன்.. பிள்ளையான்.. கருணா.. மற்றும் சம் சும் கும்பலினர்.

இவர்களுக்கு மக்களின் அன்றாடப் பிரச்சனை குறித்தும் அக்கறை இல்லை.. நீண்ட கால உரிமைப் பிரச்சனை குறித்தும் அக்கறையில்லை. தென்னிலங்கை சிங்கள பெளத்த எஜமானர்களின் தேவைகளை தமிழர்களிடத்தில்.. தமிழர்களின் நிலத்தில் பூர்த்தி செய்து கொடுப்பதே நோக்கம்.  இதனை அன்றாட வாழ்வுக்கு வழியில்லாத மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வாய்ப்பில்லை.

ஆனால்.. உரிமை பற்றி புரிந்து கொண்ட மக்கள்.. உரிமைக்கு முதன்மை அளிப்பதை தெளிவாகக் காண்கிறோம்.  அதேபோல்.. எமக்குள் பிரிவினையை விரும்பாத மக்களுக்கு வாக்குகளை சிதற விட்டு தண்டனை கொடுக்க முனைவதையும் காண்கிறோம். இப்படி 3 விதமாக மக்களின் வாக்குகள் சிதறுவதோடு.. இன்னொரு பிரிவினர் தேர்தலை புறக்கணிக்காமல் நிராகரிக்கவும் விளைகின்றனர். 

இந்த எல்லா வகை மக்களையும் தமிழ் தேசியத்தின் பால் கட்டி வைக்கனும் என்றால்..

விடுதலைப்புலிகளின் அரசியல் சமூக அணுகுமுறை அவசியம்.

1. மக்களின் அன்றாட வாழ்வியல் சமூகப் பிரச்சனைகளை தீவிரமாக எதிர்கொள்வதும்.. அவற்றிற்கு இயன்ற வரை குறுகிய கால.. நீண்ட கால தீர்வுகளை தேடுவதும்.

2. அதன் பின் மக்களின்நம்பிக்கை கட்டி வளர்க்கப்பட்ட தளத்தில் இருந்து கொண்டு மக்களின் உரிமைக்காக உண்மையாக உழைப்பது. அதில் தமிழ் தேசிய உணர்வூட்டல் தானே எழும். அதை நாம் எழுப்ப வேண்டிய அவசியமில்லை.

மகிந்த.. சஜித் கும்பலால்.. எப்படி சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை சந்ததிக்கும் கடத்த முடியும் என்றால்.. ஏன் எம்மால் முடியாது. ஆனால்... மகிந்த கும்பலுக்கு விழுந்த வாக்குகள்.. ரணில் மீதான அதிருப்தியின் காரணமும் இன்றைய இலங்கையின் பலவீனமான பொருண்மிய நிலையும் ஒரு காரணம். வெறும் சிங்கள பெளத்த பெருந்தேசிய வாக்குகள் அல்ல அவை. சிங்கள மக்கள் கடந்த நல்லாட்சி காலத்தில் கொண்டிருந்த அதிருப்தியும் மகிந்த கும்பலுக்கான வாக்காகி உள்ளது. அதுவும் அந்தக் கும்பல் செய்த கொடூர ஊழல்களை சமூகக் கொடுமைகளை..மறந்து அல்லது தவிர்க்க முடியாமல் தவிர்த்து. 

நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். தேர்தலை பொறுத்த வரைக்கும் அதை நிரூபிக்காத வரைக்கும் அப்படி செய்திருப்பார்கள், இப்படி செய்திருப்பார்கள் என்று ஊகத்தின் அடிப்படையில் கூற முடியாது.

அந்தந்த வாக்குகள் அப்படியே இருக்கின்றன. எனவே மீண்டும் எண்ணப்படலாம், சடடப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அரச சார்பான வாக்குகள் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகளைவிட குறைவாக இருந்தாலும் , இம்முறை குறிப்பிடக்கூடிய முன்னேற்றத்தை அவர்கள் கண்டிருக்கிறார்கள். சில வேளைகளில் இதன் தொடர்ச்சியாக வரும் தேர்தல்களில் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

மக்கள் எப்போதும் தங்களை தியாகம் செய்து கொண்டு இப்படியே தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் அன்றாட தேவைகள், பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள் என ஆயிரம் உண்டு.

எதுவும் ஒரு காலத்தை தாண்டிய பின்னர் வலு இழந்து விடும். இவை எல்லாவற்றையும் கவனித்து தமிழ் தேசியத்தை தியாகத்துடன் செய்ய வேண்டும்.. மற்றப்படி சுயநல அரசியல் செய்து ஆளுக்கொரு கட்சி தொடங்கி வியாபாரம் செய்தால் , அது நடக்காத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Robinson cruso said:

உங்களின் இந்தக் கருத்தோடு உடன்படுகிறேன். இது தான் தேவை.. தமிழ் தேசியம் பற்றி அக்கறைப் படும் அனைவரிடத்திலும். 

Edited by nedukkalapoovan

30 minutes ago, Robinson cruso said:

மக்கள் எப்போதும் தங்களை தியாகம் செய்து கொண்டு இப்படியே தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் அன்றாட தேவைகள், பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள் என ஆயிரம் உண்டு.

எதுவும் ஒரு காலத்தை தாண்டிய பின்னர் வலு இழந்து விடும். இவை எல்லாவற்றையும் கவனித்து தமிழ் தேசியத்தை தியாகத்துடன் செய்ய வேண்டும்.. மற்றப்படி சுயநல அரசியல் செய்து ஆளுக்கொரு கட்சி தொடங்கி வியாபாரம் செய்தால் , அது நடக்காத காரியம்.

சுயநல அரசியல் இல்லாமல் இருக்க வேணும் என்றால் பொருள் /புகழ் தேவையும்   /மரணபயமும்  இருக்கக் கூடாது.   அது காணாமல் போய்விட்ட்து 😒

1 minute ago, Hana said:

சுயநல அரசியல் இல்லாமல் இருக்க வேணும் என்றால் பொருள் /புகழ் தேவையும்   /மரணபயமும்  இருக்கக் கூடாது.   அது காணாமல் போய்விட்ட்து 😒

இப்போது பணம் , புகழ், வசதி வாய்ப்புக்களுக்காகத்தான் அரசியல். இப்போது நடக்கிற கூத்துக்களை பார்த்தாலே விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

நீங்கள் யாரவது உங்கள் பொக்கிஷத்தை திறந்து வெளிநாட்டிலிருந்து பணத்தை அனுப்பினால் உங்கள் பெயரிலேயே ஒரு கட்சியை தொடங்குகிறேன்.

அடுத்தவனின் பணத்தில் கட்சி  ஆரம்பித்து, மக்களை விலைக்கு வாங்கி சிங்களத்துக்கு முண்டு குடுக்க?  

6 hours ago, satan said:

அடுத்தவனின் பணத்தில் கட்சி  ஆரம்பித்து, மக்களை விலைக்கு வாங்கி சிங்களத்துக்கு முண்டு குடுக்க?  

சாத்தானுக்கு இன்னும் அரசியல் விளங்கவில்லை போல தெரிகின்றது. உங்களுக்கு ஆறறிவு, எழறிவு , எடடறிவு இருக்கும்போது எப்படி விளங்காமல் போனது?
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.