Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகல் கனவு காணக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பகல் கனவு காணக் கூடாது’

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாடிமன்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம், பகல் கனவு காணக் கூடாதெனவும் கூறினார்.

வவுனியாவில், நேற்று  (25) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற ஆரம்ப உரையில், இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி கூறவில்லையெனவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லையெனவும் சாடினார்.

தற்போதும் பெரும்பான்மையின மக்களுக்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், அவரது உரை அமைந்துள்ளதெனவும், செல்வம் குற்றஞ்சாட்டினார்.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லையெனத் தெரிவித்த அவர், இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனரெனவும் அதைவிட கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானதெனவும் கூறினார்.

எனவே, எதிர்வரும் காலங்களில், அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளதெனவும், செல்வம் கூறினார்.

அத்துடன், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லையெனத் தெரிவித்த அவர், ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம், அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு, மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படுமெனவும் கூறினார்.

“எந்தவோர் உரிமையையும் வழங்காது, அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். 

“ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில், அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது” எனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பகல-கனவ-கணக-கடத/72-254819

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

‘பகல் கனவு காணக் கூடாது’

-

எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். 

http://www.tamilmirror.lk/வன்னி/பகல-கனவ-கணக-கடத/72-254819

அடி விழுந்தால் தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிகிறுது.

On 26/8/2020 at 11:17, nunavilan said:

‘பகல் கனவு காணக் கூடாது’

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாடிமன்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம், பகல் கனவு காணக் கூடாதெனவும் கூறினார்.

வவுனியாவில், நேற்று  (25) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற ஆரம்ப உரையில், இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி கூறவில்லையெனவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லையெனவும் சாடினார்.

தற்போதும் பெரும்பான்மையின மக்களுக்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், அவரது உரை அமைந்துள்ளதெனவும், செல்வம் குற்றஞ்சாட்டினார்.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லையெனத் தெரிவித்த அவர், இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனரெனவும் அதைவிட கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானதெனவும் கூறினார்.

எனவே, எதிர்வரும் காலங்களில், அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளதெனவும், செல்வம் கூறினார்.

அத்துடன், தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லையெனத் தெரிவித்த அவர், ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம், அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு, மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படுமெனவும் கூறினார்.

“எந்தவோர் உரிமையையும் வழங்காது, அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். 

“ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில், அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது” எனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பகல-கனவ-கணக-கடத/72-254819

வாயால வெட்டி வீழ்த்துவத்தில் வல்லவர் இந்த **** அடைக்கலம். 86 ஆம் ஆண்டு இடமபெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் அங்கு போய் காணியை துப்பரவு செய்தபோது அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளார். வன இலாகா அதிகாரிகள் அவர்களது விவசாய பூமியை கையகப்படுத்தி உள்ளனர்.

இந்த மக்களின் வாக்குகளால் வந்த அடைக்கலத்துக்கு இதுவெல்லாம் தெரியாது. தேர்தல் முடியும்வரைதான் மக்கள் தேவை.

அரசாங்கம் பகல் கனவு காண்பது இருக்கட்டும், நீங்கள் பகல் கனவு காணாமல் இருந்தால் நல்லது.  

  • கருத்துக்கள உறவுகள்

குருசோ,

உங்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை. அந்த தொனி இருந்தால் மன்னிக்கவும்.

சரியோ பிழையோ மக்களால் மீண்டும் மீண்டும் தெரிவு செய்யபடும் ஒரு பிரதிநிதியை, அவரோ, அவர் சார்ந்த எவரும் மீதோ வழக்கு தீர்க்கப்படாத நிலையில், “****” அடைக்கலம் என்று எழுதுவது சரியாக படவில்லை. 

மனதில் பட்டதை சொல்கிறேன். மிகுதி உங்கள் விருப்பம்.

14 hours ago, goshan_che said:

இது ஒரு நாளும் தீர்க்கப்படாது. இது ஒரு வெளிப்படையான ரகசியம்.அதாவது ஊரறிந்த ரகசியம். ஆனால் அவரை பிடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

இது ஒரு நாளும் தீர்க்கப்படாது. இது ஒரு வெளிப்படையான ரகசியம்.அதாவது ஊரறிந்த ரகசியம். ஆனால் அவரை பிடிக்க முடியாது.

உங்கள் இஸ்டம் மனதில் பட்டதை சொன்னேன்.

Just now, goshan_che said:

உங்கள் இஸ்டம் மனதில் பட்டதை சொன்னேன்.

நீங்கள் ஒரு மூத்த பதிவாளர், எனவே உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். சரியோ , பிழையோ மக்களால் தெரிந்தெடுக்கப்படடபடியால் அந்த வார்த்தை பாவிப்பதும் சரியாக இல்லை. இருந்தாலும் இப்படி மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.