Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தழுவிய பூரண கர்தாலுக்கு ஆதரவு

இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ளெியிடப்பட்ட அறிக்கையில்,

இராணுவ கெடுபிடிகள் சம காலத்தில் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையானது பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இதனை அரசாங்கமும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பின் படி குற்றவியல் நடைமுறை கோவையின் பொது தொல்லைகள் ஏற்பாடுகளின் கீழ், நினைவேந்தல் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பேச்சுச்சுதந்திரம், மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்பன யாப்பின் வழி வழங்கப்பட்டாலும் வடக்கு கிழக்கில் இவை மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இறந்தவர்களை நினைவுகூருவது என்பது உலக அளவிலும் உள்ளக அளவிலும் ஒரு கலாசாரம் சார்ந்த உரிமையாகவும் அரசியல் உரிமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான சர்வதேச பொறிமுறையான நிலைமாறு கால நீதிப் பொறிமுறையும் ஒன்றாகும். நிலைமாறு கால நீதியை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இறந்தோரை நினைவுகூருவதற்கான தடையை நீதிமன்றம் பிறப்பித்தமையானது சர்வதேச நீதிப்பொறிமுறையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அண்மைக்காலமாக பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் சிதைவுற செய்திருக்கிறது. குறிப்பாக பொலிஸ் ஊடாக நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்த இன்றைய அரசாங்கம் இலங்கையினுடைய நீதித்துறை மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த காரணமாக மாற்றியிருக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மக்கள் மீது திணிக்காமல் இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை ஏற்று அங்கிகரிக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் இத்தகைய நினைவேந்தலை தடுக்க முயல்வது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஒரு முழுமையான நீதிப்பொறிமுறையின் கீழ் மலர்ந்திருக்கும் இந்த புதிய அரசாங்கம், தமிழ் மக்களையும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம், சுதந்திரம், இறைமை போன்ற அம்சங்களுடன் நீண்ட சமாதான நோக்குடன் பயணிக்கும் எண்ணப்பாங்கில் நீடித்த சமாதானமும் மீள் நல்லிணக்கமும் இலங்கையில் நிலைபெற வழிசெய்ய வேண்டும்.

எனவே தமிழ் மக்களுக்கான நீதியையும் இறந்தவர்களையும் அவர்களது உறவுகள் மற்றும் அவர்களது மனநிலையையும் வெளிப்பாட்டையும் அரசு கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்ற வகையில் நாளைய தினம் 28.09.2020 வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கப் போராட்டத்துக்கு கல்விச்செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகள் முதலியவற்றை புறக்கணித்து
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவை வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

 

http://www.ilakku.org/வடகிழக்கு-தழுவிய-பூரண-கர/

 

அஞ்சலி செலுத்துவது ஒரு போராட்டமாகியுள்ளது, நாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்த அவரது அறிக்கை வருமாறு;

“தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்றைய தினம் 26.09.2020 அன்று சாவகச்சேரியில் ஓர் உண்ணாநேன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணா நோன்பு நடைபெற்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டு வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால் இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறு பட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த சூழலில்தான் இந்த உண்ணாநேன்பைத் தொடர்ந்து வட – கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம்.”

 

http://www.ilakku.org/அஞ்சலி-செலுத்துவது-ஒரு-ப/

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருப்பவர்கள் இருந்து போகட்டும் ஆனால் உண்ண உணவின்றி வேலைக்கு போகும் ஏழைகளின் வாழ்வே முடங்கும் 
இலங்கை அரசை இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்த டமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை அரச அலுவலங்கள் அனைத்திலும் சைன் பண்ணி தங்களை அரச சார்பானவர்கள் என மக்கள் காட்டுவார்கள் அதில் முதலாவது ஆசிரியர் சங்கம் வந்து கைஒப்பம் இடுவார்கள் இட்டதன் பின்னர் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளிக்க வில்லை என்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம்- கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல கட்சிகள் பொது அமைப்புக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றது.

இதைத்தொடர்ந்து,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,“அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.

இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.

இச் சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளைய தினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும்இ மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்களஇ தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.

ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு (வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் பொருளாளரும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத் தலைவருமான வே.செல்வகாந்தன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறான அடக்குமுறைகளையும் தாண்டி வெற்றியடைந்ததை தொடர்ந்து நாளைய தினம் தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் இனமே ஒன்றுசேர்ந்திருக்கிறது என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுகிறோம்.

இந்த போராட்டத்தை வலுவழக்கச் செய்வதற்கும் சிறுமைப்படுத்துவதற்கும் தமிழ் இன விரோதிகள் உட்பட சிங்களப் பேரினவாதத்தின் அரச இயந்திரமும் சேர்ந்து முயற்சிக்கும் என்பதை நாங்கள் அறவோம். இருந்தாலும் தன்மானம் மிக்க தமிழர்களாக நாங்கள் ஒன்றுபட்டோம் என்பதை நாளை இந்த உலகம் பார்க்கும். அதற்காக ஒவ்வொரு கூட்டுறவாளனும் எந்த எல்லைவரை சென்றேனும் வெற்றிபெற செய்வதற்காக எங்கள் ஒவ்வொருவரையும் அர்பணிப்பணித்து களங்காணுவோம். எனவே இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு கூட்டுறவாளனும் மக்களை விழிப்படையச்செய்கின்ற வரலாற்றுக் கடமையை ஆற்றுமாறு அறைகூவல் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

http://www.ilakku.org/இனமான-உணர்வோடு-ஒன்றுபடுவ/

வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்; நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி போராட்டம்

 

தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன

http://thinakkural.lk/article/73337

உணர்வோடு ஒன்றாய் எழுவோம்! – கஜதீபன்

இனமான உணர்வோடு நாளைய (28) கதவடைப்பு போராட்டத்தில் ஒன்றுபடுமாறு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை கதவடைப்பு போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


 
“கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.


 
அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.

இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.

இச்சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளையதினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்கள, தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.

ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://newuthayan.com/உணர்வோடு-ஒன்றாய்-எழுவோம்/

 

வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம்!

 

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.

அதற்கமைய யாழ்ப்பாணத்திலும் இன்று முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுடன், பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாகவே உள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக  வர்த்தக நிலையங்கள், சேவை சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன.

மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் விற்பனை இடம்பெற்று வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன், அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.

பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை இன்மையால், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

அரச திணைக்களங்கள் மற்றும் உணவகங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன், பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்ததாகவம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வவுனியாவில் முற்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன், பாடசாலைகளுக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகைதந்திருந்தனர் என்றும் எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

அதேபோல முல்லைத்தீவில் அரச நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் வணிக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதற்கமைய அங்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளதாகவும் வணிக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கில்-முழு-கதவடைப்பு/

  •  

அரசின் அடாவடியை எதிர்த்து யாழ்ப்பாணம் முடங்கியது!

IMG-20200928-WA0003-960x720.jpg?189db0&189db0

 

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியதுடன், யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொது மக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள், எனினும் நேற்றைய தினம் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக அரசுடன் இயங்கும் சிலர் யாழில் போராட்டம் முன்னெடுத்த போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு; முற்றாக முடங்கிய கிளிநொச்சி!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் இன்றைய தினம் பூரண கர்த்தாலால் முற்றாக முடங்கியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சியில் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள், சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவை கருதி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இருப்பினும் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.

பாடசாலைகளிற்கும் குறைந்தளவு மாணவர்களே சென்றிருப்பதாகவும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/151315

அரசுக்கு எதிராக முல்லையில் முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்!

 

 

IMG_20200928_111302.jpg?189db0&189db0

 

 

 

IMG_20200928_111302.jpg?189db0&189db0

https://newuthayan.com/அரசுக்கு-எதிராக-முல்லையி/

அரசுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு!

 

 

IMG-20200928-WA0014-960x720.jpg?189db0&189db0

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் – ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைய திறந்தா மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பினம்.. அந்த பக்கம் கடைய மூடின சனநாய்கம் தழைதோங்குது என்பினம் .. தெரியுமப்பா உங்கட (அரச தரப்பு ) டகால்டி எல்லாம்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.