Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture2.png

பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்..

இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது.. :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

Picture2.png

பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்..

இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது.. :)

 

 

இவர்களை பற்றித்தான் திண்ணையில் சொன்னீர்களா? உண்மையில் மிகவும் ரசிக்க கூடிய நகைச்சுவை இவர்களுடயது. நெட்டையும், குட்டையுமாக இருவர் தூள் பண்ணுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

இவர்களை பற்றித்தான் திண்ணையில் சொன்னீர்களா...?

...

ஆமாம்.. இவர்களின் சில காணொளிகள் மிகவும் ரசிக்கக் கூடியதாக உள்ளன.பெரும்பாலும் பாரிஸ் நகர 'லாசப்பல்' பகுதியில் படமெடுத்துள்ளார்களென எண்ணுகிறேன். அடிக்கடி தமிழ்க் கடைகளை பார்க்க முடிகிறது.

மேலேயுள்ள காணொளியில் அந்த அம்மணி, "இளசுகளை நம்பலாம், ஆனால் இந்த 50 வயசு கடந்த முக்கால் கிழடுகளை நம்ப முடியாது..!" என முத்தாய்ப்பாக இடித்துரைத்துவிட்டு செல்வது அருமை.😜🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனை பொய் சொன்னாலும், அத்தனையையும் மனைவி கண்டு பிடித்துவிடுவார். 😁



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசி மட்ட்டுமல்ல தேங்காய், வெங்காயம் என்பவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறதாக கூறுகிறார்கள் இதனை நிவர்த்தி செய்ய இறக்குமதி, மானியங்கள், சீரான வினியோகத்தின் மூலம் விலை உயர்வை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு அரசிற்கு பெருந்தொகை பணம் செலவாகும், தற்போதுள்ள இலங்கை  பொருளாதார நிலையில் இது சாத்தியமா? ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள்  இலங்கை அரசிற்கு நன் கொடை வழங்குவதாக கூறப்படுகிறது, அதன் அளவு மிக சிறிதாக இருக்கிறது. இதில் இந்த நீண்டகால திட்டத்திற்கு அரசிற்கு பணம் திரட்டலில் சிக்கல் நிலவும், நான் நினைக்கிறேன் அரசு உடனடியாக அவசரகால பாதீட்டினை கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் நிலமை மோசமாகி விடலாம், தாமதித்தால் தவிக்க நேரிடலாம். புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கு தேவையான நிதியுதவியினை செய்வதன் மூலம் இந்த அரசிற்கும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஏற்பட போகும் பேரிடரினை தவிர்க்கலாம்.  அதே நேரம் விவசாயிகளின் நலன், நாட்டின் நலன் என்பவற்றினை கருத்திற்கொண்டு செய்யப்படும் நீண்டகால திட்டங்களுக்கும் புலம் பெயர் தமிழர்களும் வெளிநாட்டின் நன் கொடையின் மூலம் அதற்கான  நிதியினை பெறலாம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்த அரசினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும்.
    • மரமொன்றின் மேலேறி வேவுபார்க்கும் வேவுப்புலி   ஓயாத அலைகள் - 1 இற்கான வேவின் போது      
    • அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம் இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம். ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள்  மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து.  தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன். ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம், அலுவலகம் என்று அர்த்தமில்லை,  அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை .   அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம்  என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன். இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும்  அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால்  விதிவிட்ட வழி.
    • இனவாதத்தை அல்ல இனவாதிகளை. தமிழர் நாம் ஒன்றுசேர்ந்து வாக்களித்து அரியாசனம் ஏறிய தலைமைகளே, நமக்கு ஒன்றும் தரவில்லை. மாறாக நமது மண்ணை பல துறைகளாக பிரிந்து நின்று ஆக்கிரமித்து, வளங்களை சுரண்டி, எங்களை நுழையவிடாது தடுத்தது. நமது அரசியல் தலைவர்களே எதுவும் செய்யவில்லை. விகாரை கட்டும்போது எங்கே போனார்கள்? திறப்புவிழா செய்யும்போது எங்கே போனார்கள் என்று கேள்வி கேக்கிறார்கள். ஆனால் அனுரா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறார். அவரால் எதுவும் செய்யமுடியும். கடைசி நேரத்தில் சுமந்திரன் விசர்க்கூத்தாடாமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இந்தளவுக்கு அனுராவை வாக்களித்து தெரிந்திருக்க மாட்டார்கள். தமிழரின் வாக்குகள் இல்லாவிட்டாலும் அவர் ஜனாதிபதியாவதை நம்மால் தடுத்திருக்க முடியாது. இருந்தாலும் அவரின் வெற்றியை நானோ நீங்களோ மாற்றமுடியாது, அவர் செய்வதை தடுக்கவும் முடியாது. அவர் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கிறார். அவருக்கு அதிக பொறுப்புண்டு, பெருமை பேசவல்ல. ஆனால் கடந்த தலைவர்களை விட ஏதோ செய்ய முயற்சிக்கிறார், அதை நம்புவதைவிட நமக்கு வேறொரு தெரிவில்லை. நீங்கள் பொங்கியெழுவதாலோ அல்லது நான் வழிவதாலோ எதுவும் மாற்ற முடியாது.  முன்னைய ஆட்சியாளர்களிடம் உங்களுக்கு இல்லாத கோபம் அனுரா மீது மட்டும் எதற்கு? நாம் விரும்பினாலோ, இல்லையோ அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலேயே இருப்பார். நல்லது செய்தால் தொடர்வார், இல்லையேல் வீழ்வார். எதற்காக அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? வசை பாடுகிறீர்கள்? தருவதை பெற்றுக்கொண்டு மிகுதியையும் பெற முயற்சிப்போம். இவர் வெல்வார் என அவரே நினைத்திருக்க மாட்டார் ஆனாலும் வென்றார். ஆகவே அவர் மனமும் மாறலாமல்லவா? சுமந்திரன் தோற்பேன் என நினைத்தா சன்னதமாடினார்? அவரது ஆட்டமே வேறு வழியின்றி மக்களை அனுரா பக்கம் தள்ளியது.  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரே ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி. நாங்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். இருந்தாலும் இவரது ஆட்சிக்குப்பின்  யார் வந்தாலும், இவரை விட நல்லது செய்வார் யாருமில்லை. எல்லோரும் பலதடவை ஆட்சியை நிர்வகித்தவர்கள், எங்கள் வாக்குகளின் உதவியோடு. இவரோ முதற்தடவையாக ஆட்சியேற்றிருக்கிறார். பாப்போம்!        
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.