Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

கோசான் சொல்வது போல்... மன வியாதிக்கு, 
வேறு பல காரணிகளும் இருக்கலாம்... என்பதே சரியென்று நினைக்கின்றேன். 
ஆனால்... அது, எது என்பதுதான் தெரியவில்லை.

########################################

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!  | Athavan News

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின் தகவல்களைத் தொடர்ந்து அவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால், சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் எனவும் குழந்தை 3 வயது மதிக்கத்தக்கது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகல்கள் சில வெளியாகியுள்ளன.

அயலவர்களின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதில் 42 வயதான குகராஜ் சிதம்பரநாதன் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய தமிழர்களான இந்த தம்பதி, அயலவர்களுடன் மிக நெருக்கமாக பழகியதாகவும், சிறந்த குடும்பமாக விளங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல நாள் நள்ளிரவு தாண்டியும் வாக்குவாதம் நீடித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பூர்னாவின் உறவினர் ஒருவரே ஞாயிறன்று பொலிசாரின் உதவியை நாடி, கடந்த ஒரு மாத காலமாக பூர்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார், பூர்னாவின் குடியிருப்புக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பொலிசார் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூற முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள பொலிசார், இவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் தகவல் அறிவிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/லண்டனில்-சடலமாக-கண்டெடுக/

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!

இது என்ன என்று இந்த நியூஸ் எழுதியவருக்கு மட்டுமே தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2020 at 00:01, goshan_che said:

நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மனம் சம்பந்தமான நோய்கள் சகலதுமே ஆடம்பர வாழ்வுக்கு ஏங்குவதாலும், அளவுக்கு மீறி ஆசைப்படுவதாலும் அதன் வழி வந்த விரக்தியாலும் மட்டுமே வருவதில்லை.

மிக தெளிவாக, யதார்த்தமாக, ஆடம்பர எதிர்பார்ப்பு, விரக்தி இல்லாமல் வாழ்ந்த பலரும் கூட மன நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Depression,  anxiety, stress disorders போன்றவை ஏற்பட இப்படி வாழ்கை பற்றிய மிகை எதிர்பார்ப்பு காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் schizophrenia, bipolar போன்ற வியாதிகளுக்கு வாழ்வு பற்றிய மிகையான எதிர்பார்பும், விரக்தியும் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாக எனக்குப் படவில்லை.

நான் ஒன்றும் மனோதத்துவம் படித்தவன் இல்லை. ஆனால் 

மனநோய்= லண்டன் கடுகதி வாழ்கை+  ஆடம்பரம்+மிகை எதிர்பார்பு+விரக்தி எனும் சமன்பாடு எல்லா இடங்களிலும் பொருந்தும் என நான் நினைக்கவில்லை.

முற்றிலும் உண்மை.

On 8/10/2020 at 04:44, தமிழ் சிறி said:

கோசான் சொல்வது போல்... மன வியாதிக்கு, 
வேறு பல காரணிகளும் இருக்கலாம்... என்பதே சரியென்று நினைக்கின்றேன். 
ஆனால்... அது, எது என்பதுதான் தெரியவில்லை.

இவற்றினால் பீடிக்கப்பட்டவரோடு நெருக்கமாக உள்ள அனுபவத்தினால் சொல்கிறேன்.  

நான் மருத்துவ துறை அல்ல. இது எனது தனிப்பட்ட அனுபவமே. 

மன நிலை, மதி நிலை சமநிலை என்பது மயிரிழையிலும்ம்  மெலிதான இழையில் சமநிலையில் வைத்திருப்பது போன்றது. 

schizophrenia ஆக இருபதற்கே சந்தர்ப்பம் இருக்கிறது. 

மருந்து எடுப்பதில் இருந்த வாக்கு வாதமும் அதற்கான  அறிகுறி.

வாக்குவாதம் (ஏதாவது ஓர் வித அழுத்தம்), அவரின் மண்டையை (அதை என்னால் வர்ணிக்க முடியாது, அவரவர்  சொல்லும் போதே அதை உணர முடியும்).

இறுதியில்  அவர்கள் பகையளிகள் என்று மனப் பிரமையும், காதுக்குள் ஒலியும், அவர்களின் ஒவொரு அசைவும் அவரை கொலை செய்ய முனையும் தோற்றமும் அவருக்கு  ஏற்பட்டு  இருக்கும்.   

கொலை செய்த பின்பும், அவர்களோடு இருந்தது என்பதும், அவர்கள் தனது பகையாளிகள் எனும் பிரமையும், காதுக்குள் கேட்கும் சத்தங்களும் அவருக்கு இருந்து கொண்டே இருகிறது என்பதை உணர்த்துகிறது.      

இத்தகைய வருத்தம் உள்ளவர்களை, சாதரணமாக அடையாளம் காணமுடியாது.    

பழகும் போது ஒரு வேறுபாடும் அறிய முடியாது. அவர்களும் அதை மறைப்பார்கள். 

தொடர்ச்சியான பழக்கம், அவதானம் மூலமே, இது தெரிய வரும்.

உங்களின் அக்கறையை தெரியப்படுத்தினால், உங்களுக்கு வருத்தம் உள்ளதாக சொல்வார்கள், தம்மை வேண்டும் என்றே ககுற்றம் குறை கண்டு பிடிப்பதாக சொல்வார்கள்.

இது மூளையில்  chemical சமநிலை குழப்பத்தால் ஏற்படுவது. 

வாழ்நாள் முழுவதும் மறுத்து எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தன்னிலையை யதார்த்தத்தில் இருந்து மாற்றி உருவாகி உள்ள யதார்த்தமே உண்மையானது என ஏனையோரை நம்ப வைக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டவரை வாக்கு வாததுக்கு தூண்டக் கூடியது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இவற்றினால் பீடிக்கப்பட்டவரோடு நெருக்கமாக உள்ள அனுபவத்தினால் சொல்கிறேன்.  நான் மருத்துவ துறை அல்ல. இது எனது தனிப்பட்ட அனுபவமே. 

மன நிலை, மதி நிலை சமநிலை என்பது மயிரிழையிலும்ம்  மெலிதான இழையில் சமநிலையில் வைத்திருப்பது போன்றது. 

schizophrenia ஆக இருபதற்கே சந்தர்ப்பம் இருக்கிறது. 

மருந்து எடுப்பதில் இருந்த வாக்கு வாதமும் அதற்கான  அறிகுறி.

வாக்குவாதம் (ஏதாவது ஓர் வித அழுத்தம்), அவரின் மண்டையை (அதை என்னால் வர்ணிக்க முடியாது, அவரவர்  சொல்லும் போதே அதை உணர முடியும்).

இறுதியில்  அவர்கள் பகையளிகள் என்று மனப் பிரமையும், அவர்கள் தாக்க வருவது போன்ற காட்சிகள் தெரிவதும்  காதுக்குள் ஒலியும், அவர்களின் ஒவொரு அசைவும் அவரை கொலை செய்ய முனையும் தோற்றமும் அவருக்கு  ஏற்பட்டு  இருக்கும்.   

கொலை செய்த பின்பும், அவர்களோடு இருந்தது என்பதும், அவர்கள் தனது பகையாளிகள் எனும் பிரமையும், காதுக்குள் கேட்கும் சத்தங்களும் அவருக்கு இருந்து கொண்டே இருகிறது என்பதை உணர்த்துகிறது.      

இத்தகைய வருத்தம் உள்ளவர்களை, சாதரணமாக அடையாளம் காணமுடியாது.    

பழகும் போது ஒரு வேறுபாடும் அறிய முடியாது. அவர்களும் அதை மறைப்பார்கள். 

தொடர்ச்சியான பழக்கம், அவதானம் மூலமே, இது தெரிய வரும்.

உங்களின் அக்கறையை தெரியப்படுத்தினால், உங்களுக்கு வருத்தம் உள்ளதாக சொல்வார்கள், தம்மை வேண்டும் என்றே ககுற்றம் குறை கண்டு பிடிப்பதாக சொல்வார்கள்.

இது மூளையில்  chemical சமநிலை குழப்பத்தால் ஏற்படுவது. 

வாழ்நாள் முழுவதும் மறுத்து எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தன்னிலையை யதார்த்தத்தில் இருந்து மாற்றி உருவாகி உள்ள யதார்த்தமே உண்மையானது என ஏனையோரை நம்ப வைக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டவரை வாக்கு வாததுக்கு தூண்டக் கூடியது.    
 
Kadancha....  மிக அருமையான விளக்கம். 👍

  • கருத்துக்கள உறவுகள்

சுவை, மணம், உணர்வுகள் (சூடு, கூறின், எரிவு, காம உணர்வுகளும்) போன்றவையும் இந்த வருத்தமுள்ளவர்களுக்கு அழுத்தம், அல்லது ஆதரவான உணர்வாக இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

உதாரணமாக, வெள்ளையரில் இந்த நோயுள்ளர்வர்களால், பொதுவாக  உறைப்பான (hot spicy) வாசம் அவர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கும். 

நான் அறிந்தவரையில், இப்பொது ஊசி மூலம் 4-6 கிழமைக்கு ஒரு தடவை மருந்து எடுக்க கூடிய வசதிகள் இருக்கிறது.

ஆனால், அதற்கு நோயுள்ளவர் சாதாரண வாழுவதற்கு வாயால் எடுக்கப்படும் மருந்தின் விளைவு போதாது எனும் மருத்துவ அறிக்கை தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்ட தட்ட இரு கிழமை எப்படி  உடல்கள் துர்நாற்றம் வீசாமல் இருந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

கிட்ட தட்ட இரு கிழமை எப்படி  உடல்கள் துர்நாற்றம் வீசாமல் இருந்தது?

சில,  மனித உடல்களிலிருந்து ... துர் நாற்றம் வரமாட்டுதாம் என கேள்விப் பட்டேன். 
இது, எவ்வளவு  உண்மை என்று, எனக்குத் தெரியாது.

இதற்கு உதராணமாக... 25 வருடங்களுக்கு முன்பு வந்த, 
ஜேர்மன் Bild (Zeitung) பத்திரிகை செய்தி ஒன்றை,
உங்களுடன் பகிர்வது..  நல்லது என நினைக்கின்றேன்.

குளிர்காலமான நேரத்தில்... மூன்று மாடிக்  கட்டிடம் ஒன்றில் உள்ள,
ஒரு வீட்டில்... தனியே வசித்து வந்த, முதியவர் ஒருவர்...
தனது வரவேற்பறையில்... 
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, இறந்து விட்டார்.

அவர், அயலகர்களுடன் தொடர்பு இல்லாததால்...
அவரின், தபால் பெட்டி.... பல விளம்பரங்களால்.. 
நிரம்பி வழிவதை பார்த்த, அயலவர்கள்... ஒரு மாதம், கடந்து...  
காவல் துறைக்கு அறிவிக்க... அவர்கள் வந்து, கதவை உடைத்து..
திறந்து பார்த்த போது...

முதியவர்... சோபாவில் மரணமாகி, ஒரு மாதம் கடந்திருந்தது.
இவ்வளவிற்கும்... தொலைக்காட்சி, உயிர்ப்புடன் ஓடிக் கொண்டிருந்தது. 
அவரின் உடலிருந்து.. துர் நாற்றமும், வரவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இங்கே குளிர் நாடுகளில் இருக்கும் double/triple glazing யன்னல்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எனது பல்கலைகழக நாட்களில் என்னோடு கூட வேலை செய்தவர் ஒருவர் முன்னர் இப்படியான சடலங்களை அகற்றும் வேலை செய்தவர். அவர் சொல்லும் கதைகளை கேட்டால் 1 கிழமைக்கு சாப்பிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.