Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று”. என வேதனை தெரிவித்துள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/11151304/1963753/vairamuthu-condemns-village-president-insulted-issue.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சுயஇலாபத்திற்காக சாதியை வளர்க்கும் திமுக!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்து திமுக | எங்கே போனது சமூகநீதி | சாட்டை | நாட்டுநடப்பு |

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவில் சாதிக்கொடுமை? | ராஜவேல்

 

  • கருத்துக்கள உறவுகள்

தெற்குத்திட்டை: ஊராட்சித் தலைவியின் நாற்காலியில் அமர்ந்த சாதிவெறி! - தீர்வு என்ன?

spacer.png

 

ச.மோகன்

நாகரிகத்தின் வளர்ச்சி இன்னும் சாதியை எட்டிப் பார்க்கவில்லை. சாதிச் செருக்கும், இறுமாப்பும், ஆணவமும், வன்மமும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியை அவர்க்குரிய நாற்காலியில் உட்கார விடாமல் தரையில் உட்கார வைத்துள்ளது. உத்தரப் பிரதேசம் ஹத்ராசில் பட்டியலினப் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட துயர நிகழ்வின் அதிர்வலைகள் அடங்கும் முன் தமிழ்நாட்டில் தெற்குத்திட்டை ஊராட்சியில் இந்த அவமானம் அரங்கேறியிருக்கிறது. இச்செயல் கணினி யுகத்திலும் நாகரிகச் சமூகம் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளதையே பிரகடனப்படுத்துகிறது.

நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம்,தெற்குத்திட்டை ஊராட்சியில் 1600 வன்னியர் குடும்பங்களும் 100 ஆதிதிராவிடர்-பறையர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். புவனகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த தெற்குத்திட்டை ஊராட்சி வன்னியர் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி ஆகும். இது வரை இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக இருந்துள்ளது. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தான் தெற்குத்திட்டை ஊராட்சி முதன் முறையாக பெண்களுக்கான தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ், மிகுந்த செல்வாக்கு உடையவர் ஆவார். எனவே வன்னியர் சாதியைச் சேர்ந்த மோகன்ராஜ் தனக்கு விசுவாசமான பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஊராட்சி மன்றத் தலைவியாகப் போட்டியிட வைக்கத் தீர்மானிக்கிறார்.

spacer.png

அதன்படி தெற்குத்திட்டை ஊராட்சியில் ஒன்றாவது வார்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை ஊராட்சிமன்றத் தலைவியாக நிறுத்தி வெற்றிபெறச் செய்கிறார். தெற்குத்திட்டை ஊராட்சியில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. இதில் ஒன்றாவது வார்டில் பறையர் சாதியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் தவிர்த்து மற்ற வார்டு உறுப்பினர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் மோகன்ராஜ் இரண்டாவது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்று தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத்தின் துணைதலைவராக ஒருமனதாகத் தெரிவு செய்யப்படுகிறார்.

ஊராட்சி மன்றத் தலைவிக்கு நாற்காலி மறுப்பு

தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினர் சுகன்யா கூறும்போது,

spacer.png

“தெற்குத்திட்டை ஊராட்சியில் இதுவரை இரண்டு கிராமசபைக் கூட்டமும், இரண்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்க் கூட்டமும் ஆக மொத்தம் நான்கு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நான்கு கூட்டத்திலும் ஆறு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் , வன்னியர் சாதியைச் சேர்ந்த நான்கு வார்டு உறுப்பினர்கள், வன்னியர் சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றச் செயலர் சிந்துஜா ஆகிய ஆறு பேரும் அமர்ந்து கொள்வார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியும், நானும் பறையர் சாதியைச் சேர்ந்தோர் என்பதால் எங்களுக்கு வேண்டுமென்றே நாற்காலி போட மாட்டார்கள். எனவே நாங்கள் இருவரும் வேறுவழியின்றி தரையில் அமர்ந்து ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பங்கு பெறுவோம்” என்று கூறினார்.

ஊராட்சி மன்றத் தலைவி தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு

தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி கூறும்போது,” கடந்த ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று மிகுந்த ஆவலுடன் தேசியக் கொடி ஏற்றச் சென்றேன். என் கணவர் உட்பட உறவினர் சிலர் என்னுடன் வந்திருந்தனர். இதே போன்று பஞ்சாயத்து துணைத் தலைவர் மோகன் ராஜ் அவரது உறவினர்களுடன் வந்திருந்தார். கொடியேற்றும் நேரத்தில் மோகன்ராஜ் அவருடைய அப்பாவை அழைத்துக் கொடி ஏற்றச் சொன்னார். நான் திகைத்துப் போய் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தேன். என் உறவுக்காரர்கள் என்னிடம் நீயேன் கொடி ஏற்றவில்லை என்று கேட்டபோது எனக்கு அழுகை வந்தது. எதுவும் சொல்லமுடியாமல் அழுது கொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன்” என்று கூறினார்.

நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் அறைக்குப் பூட்டு

தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரியின் கணவர் சரவணக்குமார் கூறும் போது, “ உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே பட்டியலின மக்கள் வாழும் ஒன்றாவது வார்டில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் பழுதடைந்து இருந்தது. வார்டு மெம்பரும், பஞ்சாயத்துத் தலைவியும் ஒன்றாவது வார்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் மக்கள் நீண்ட காலமாக இருக்கும் தண்ணீர் பிரச்சனை குறித்து முறையிட்டார்கள். உடனே பஞ்சயத்துத் தலைவி இதில் தலையிட்டு மோட்டார் பழுது நீக்கி, மோட்டார் இருக்கும் அறையின் சாவியை வார்டு மெம்பர் சுகன்யாவிடம் கொடுத்துப் பராமரிக்கக் கூறினார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவர் மோகன்ராஜ் , ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமார் இருவரும் அங்கு வந்து மோட்டார் அறையின் பூட்டை உடைத்து, புதிய பூட்டு போட்டு அதன் சாவியைப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சங்கர் என்பவரிடம் கொடுத்தனர். பின்னர் ராஜேஸ்வரியிடம் வந்து நீ பேருக்குத்தான் பஞ்சாயத்துத் தலைவி. இந்த பஞ்சாயத்தில் எல்லாமே நான் தான் என்று மிரட்டிச் சென்றார்” என்று கூறினார்.

 

பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பிடம் முறையீடு

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாபு கூறும்போது, “ பஞ்சாயத்துத் துணைத் தலைவரின் நடவடிக்கைகள் எல்லாமே சாதி வன்மத்துடன் பஞ்சாயத்துத் தலைவியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இருந்துள்ளன. இச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இது குறித்து பட்டியல் சாதிப் பஞ்சாயத்துக் கூட்டமைப்பிடம் ராஜேஸ்வரியும் அவரது கணவரும் முறையிட்டுள்ளனர். அப்போது தரையில் உட்கார வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக இருந்த ஜூலை 17அன்று நடைபெற்ற பஞ்சாயத்துக் கூட்டத்தின் புகைப்படத்தைக் காண்பித்தனர். அதுவே சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி கடலூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது” என்று கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் காணப்பெறும் சாதி இறுக்கம் பற்றி அவர் மேலும் கூறும்பொது,” இங்கு மேலோட்டமாகப் பார்க்கும் போது சாதிப் பிரச்சனை இருப்பது போல் தெரியாது. இரண்டு சமூகத்தின் இன்றைய தலைமுறை ஒருவருக்கொருவர் அண்ணன் –தம்பி, மாமா-மச்சான் என்ற உறவு முறையில் பேசிக் கொள்வர். ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் வன்னியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு எதிர்வினை ஆற்றுவார்கள். காலம் மாறுகிறது. நாகரிகம் மாறுகிறது. ஆனால் சாதி இறுக்கம் குறையவில்லை. மாறாகக் கூடுகிறது” என்று யதார்த்தமாய்க் கூறினார்.

spacer.png

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015- பிரிவு3(1)(m), 3(1)(r) இன் கீழ் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி மன்றச் செயலர் சிந்துஜா, ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊராட்சித் தலைவி அவரது குடும்பம், ஒன்றாவது வார்டு உறுப்பினர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

இதுகாறும் இத்தகைய குற்றங்கள் நடப்பதும் அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. அன்று 2003 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் சொட்டதட்டி ஊராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய பட்டியல்சாதி ஊராட்சித் தலைவர் ராஜூ என்பவர் செருப்பால் தாக்கப்பட்டார். இன்று கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டையில் தேசியக்கொடி ஏற்ற பெண் ஊராட்சித் தலைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர்க்கு நேர்ந்த கதி மாவட்ட ஆட்சியரின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய சாதி வன்மப் பாகுபாடுகளைத் தடுக்க முன் நடவடிக்கைகள் எடுக்கப் பெறல் காலத்தின் அவசியம்.

spacer.png

தனித் தொகுதிகளின் நடைமுறை சாத்தியம்

பட்டியல் சாதியினர் பெரும்பான்மையாக இருக்கும் தனித்தொகுதியில் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. எனவே பட்டியலின மக்களை அதிகாரப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பெறும் தனித்தொகுதிகளின் நடைமுறைச் சாத்தியத்தை அரசதிகாரம் கவனத்திற் கொள்ள வேண்டும். தனித் தொகுதி என்பது அம்மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியாக இருப்பதை அரசு அதிகாரிகள் கவனத்திற் கொள்ளல் அவசியமாகும்.

தனித் தொகுதி ஊராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் சாதி ஆதிக்கத் தலையீடுகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப் பெறல் வேண்டும். அப்போது தான் நீளும் சாதி ஆதிக்கத்திற்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

தேசிய பட்டியல் சாதி ஆணையம் தனித் தொகுதி ஊராட்சிகளின் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகத் தனித் தொகுதி ஊராட்சிகளில் காணப்பெறும் பிரச்சனைகள் மீது இதுவரை வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றைக் கவனத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும்.

தனித் தொகுதி ஊராட்சி மன்றத் தலைவர்களின் செயல்நிலை பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மாதாந்திர அறிக்கை வெளியிட வேண்டும். குறிப்பாக விடுதலை நாள், குடியரசு நாள், கிராமசபைக் கூட்டம் போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் உரிமை, அதிகார வரம்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளும், திறன் வளர்ப்பு பற்றிய சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கபெறல் வேண்டும்.

தொற்று நோய் போன்று பரவி வரும் சாதி வன்மத்தை மட்டுப்படுத்த அரசு இது போன்று ஆக்கப்பூர்வ வழிமுறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ச.மோகன், தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.
 

 

https://minnambalam.com/public/2020/10/13/10/therkuthittai-village-president-seated-floor-because-dalit-full-coverage

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 00:44, உடையார் said:

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று”. என வேதனை தெரிவித்துள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/11151304/1963753/vairamuthu-condemns-village-president-insulted-issue.vpf

ஐயா வைரமுத்தரே.... நீங்கள்பேராதரவு தரும் திமுக கட்சிக்காரரின் வேலை தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/10/2020 at 01:44, உடையார் said:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.

 

4 hours ago, கிருபன் said:

தெற்குத்திட்டை: ஊராட்சித் தலைவியின் நாற்காலியில் அமர்ந்த சாதிவெறி! - தீர்வு என்ன?

 

3 hours ago, Nathamuni said:

ஐயா வைரமுத்தரே.... நீங்கள்பேராதரவு தரும் திமுக கட்சிக்காரரின் வேலை தான்...

தமிழ்நாட்டில் சாதி வெறியையும்,சாதி பேதங்களையும் ஒழிக்க நாம் தமிழர் கட்சியின் அரசியல் கொள்கைகளே உகந்தது. 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு நடக்கும் சாதித் தீண்டாமை - தடுப்பது எப்படி?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.