Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் இருதரப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்காக (U.S.-India 2+2 Ministerial Dialogue) வரும் மைக் பொம்பியோ, தொடர்ந்து கொழும்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இருதரப்பு சந்திப்பிற்கென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் வருகைதரவுள்ளார் ஆனால் அவர் இலங்கைக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எதுவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எஸ்பர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தெலைபேசியில் உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொம்பியோவின் கொழும்பு விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது மற்றும் சுதந்திரமான இந்தோ- பசுபிக் பிராந்தியம் (Free and open Indo-Pacific region) தொடர்பிலும் பொம்பியோ கவனம் செலுத்துவார் என்று, ராஜாங்கச் செயலகம் தெரிவித்திருக்கின்றது. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமான உறவு வலுவடைந்தது. இவ்வாறானதொரு பின்னனியில் அப்போதைய ராஜாங்கச் செயலர் ஹெரி, 2015 மேமாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க வெளிவிவகார விடயங்களை கையாளுவதில் ராஜாங்கச் செயல் பதவி என்பது, அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு உயர் பொறுப்பாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் அமெரிக்க ராஜாங்கச் செயலர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கின்றது.

1972இல், அப்போதைய அமெரிக்க ராஜாங்கச் செயலர் வில்லியம் றொகர்ஸ் (William Pierce Rogers) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இந்தியாவற்கு விஜயம் செய்திருந்த அப்போதைய ராஜாங்கச் செயலர் கோலின் பவல் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். ஆனால் அதனை அரசியல் ரீதியில் முக்கியமான விஜயம் என்று கூறமுடியாது. இந்த அடிப்படையில் நோக்கினால், 1972இற்கு பின்னர் இடம்பெற்ற முக்கியமானதொரு அமெரிக்க உயர் விஜயமாக, ஜோன் ஹெரியின் விஜயம் அமைந்திருந்தது. அதன் பின்னர் தற்போது பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையிலேயே பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுமூகமான உறவுகள் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது கொழும்பிற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் உதவியிருந்தது. 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக பட்டியல்படுத்தி, தடைசெய்தது. இதில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பங்கு முதன்மையானது. அமெரிக்க தடையை தொடர்ந்தே ஏனைய மேற்குலக நாடுகளும் விடுலைப் புலிகள் அமைப்பை தடை செய்தன. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்க தடையென்பதே கொழும்மை பொறுத்தவரையில் ஒரு மிகப் பெரிய உதவிதான். உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவிற்கு எதிராக செயற்பட்டதில்லை. தமிழ் இயக்கங்களில் அமெரிக்காவிற்கு எதிராக ஒருவர் செயற்பட்டார் என்றால், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை மட்டும்தான் குறிப்பிடலாம். 1984ம் ஆண்டு, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயிற்கு (CIA) வேலைசெய்பவர்கள் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஸ்டான்லி அலன் மற்றும் மேரி எலிசபெத் (Stanley Allen and Mary Elizabeth) என்னும் அமெரிக்க தம்பதியை யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தி, கப்பம் கேட்டிருந்தனர். பேராசிரியர் சூரியநாரயணன் அண்மையில் வெளியிட்ட ஹக்சர் இந்தியாஸ் சிறிலங்கா பொலிசி என்னும் நூலில் இந்த விபரங்களை பதிவுசெய்திருக்கின்றார். இந்த ஒரேயொரு சம்பவம்தான், தமிழ் இயக்கம் ஒன்று அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையாகும்.

http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/Mike-Pompeo-resize.jpg

இறுதி யுத்தத்தின் போது அமெரிக்கா புலிகளின் தலைமையை காப்பாற்றுவதற்கு உதவ விரும்பியதாகவும் ஆனால் இந்தியாவை மீறி அதனைச் செய்யமுடியவில்லை என்றும் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு, ஆனால் அந்தக் கதையில் எந்தளவு உண்மையிருக்கின்றது என்பது இன்றுவரையில் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமையை காப்பாற்றுவதால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம்? உண்மையிலேயே அமெரிக்கா அவ்வாறு எண்ணியிருந்தால் இந்தியாவை மீறியும் அதனை செய்திருக்க முடியும். இப்போது இதெல்லாம் ஒரு விடயமுமல்ல.

அமெரிக்காவில் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியினர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கொழும்புடனான உறவுகள் நெருக்கடிக்குள்ளானது. ஓபாமா நிர்வாகம் மனித உரிமைகள் சார்ந்து ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பயணிக்கும் முக்கிய கொள்கை மாற்றம் ஒன்றை மேற்கொண்டது. அப்போது ராஜாங்கச் செயலராக இருந்த ஹிலாரி கிளின்ரன் இதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 2011இல் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கட்டுரை ஒன்றில், அமெரிக்காவின் தலைமைத்துவத்திற்காக ஆசியா ஏங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னயில்தான், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீது, அமெரிக்காவின் பார்வை திரும்பியது. இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மனித உரிமைகள் மீதான அமெரிக்காவின் உலகளாவிய கரிசனை. இரண்டு ஆசியா தொடர்பான அமெரிக்க கொள்கை. ஆனால் மகிந்த ராஜபக்ச நிர்வாகம் அமெரிக்க அழுத்தங்களுடன் மோதும் கொள்கை நிலைப்பாட்டையே மேற்கொண்டது. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தலையீடுகளை முற்றிலுமாக நிராகரித்தது. அதாவது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கொழும்பு ஆசியாவில் அமரிக்காவின் தலைமைத்துவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை தமிழர்கள் வரவேற்றனர் – ஆதரித்தனர். இப்போதும்.

இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. ஆனாலும் ஆட்சி மாற்றம் இலங்கைத் தீவில் அமெரிக்க நலன்களை பாதுகாத்ததாக கூறமுடியாது. எம்.சி.சி (Millennium Challenge Corporation (MCC) உடன்பாடு இப்போதும் தென்னிலங்கை அரசியலில் விவாதப் பொருளாகவே இருக்கின்றது. சேபா (status of forces agreement (SOFA) உடன்பாட்டை அமெரிக்காவினால் முன்தள்ள முடியவில்லை. ஆட்சி மாற்றத்தினால் இவற்றை செய்திருக்க முடியும் ஆனால் அது ஏன் நடைபெறவில்லை? ஆனால் ஆட்சி மாற்றம் தலைகீழான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றது. மேற்குலகின் நண்பர் என்று கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன அரசாங்கத்திற்கு வழங்கியது. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2015இல் இந்திய – அமெரிக்க தரப்பு ஆதரவளித்த ஆட்சி மாற்றம் ஒரு ராஜதந்திர தவறாக என்னும் கேள்வியே தற்போது எஞ்சிக்கிடக்கின்றது.

சீனாவை இதயத்தில் வைத்திருப்பவர்கள் என்று கருதப்படும் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியை – அதிலும் தனிச்சிங்கள பெரும்பாண்மையில் கைப்பற்றியிருக்கும் சூழலில்தான், மைக் பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது. அண்மைக்காலமாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான முறுகல் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனா எழுச்சியடைவது நீண்டகால நோக்கில் அமெரிக்காவின் உலக தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்னும் பார்வை அமெரிக்க ராஜதந்திர சமூகத்தின் மத்தியில் உண்டு.

இந்த பின்புலத்தில்தான் அமெரிக்கா, சுதந்திர திறந்த – இத்தோ பசுபிக் பிராந்திய கொள்கையை முன்னிறுத்துகின்றது. இந்தோ பசுபிப் கொள்கை என்பதே சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்கும் தந்திரோயம்தான். இந்தோ – பசுபிக் கொள்கையில் இந்தியாவே பிரதான பங்காளி. இந்தோ பசுபிக் கொள்கையை சிலர் ஹொலிவுட்டிலிருந்து பொலிவுட்டுக் என்றும் கூறுவதுண்டு. அமெரிக்காவில் நிர்வாகங்கள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையில் பெரியளவில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்வதில்லை. ஒபாமா நிர்வாகம் ஆசிய மையக் கொள்கையை முன்தள்ளியது. ஆசியாவில் அமெரிக்காவின் உலகளாவிய தலைமைத்துவத்தை மீளவும் உறுதிசெய்வதுதான் ஆசிய மையக் கொள்கையின் இலக்கு. இந்த கொள்கையின் அடுத்த கட்ட நகர்வுதான் இந்தோ – பசுபிக் கொள்கை. ஒரு வேளை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி தோல்விடைந்தாலும் கூட, வரப்போகும் ஜோ பைடன் நிர்வாகத்தின் சீனா தொடர்பான அணுகுமுறையிலும் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. ஆனால் பைடன் வெற்றிபெற்றால் அமெரிக்கா இந்தோ – பசுபிக் கொள்கையை முன்னெடுக்கும் அதே வேளை, ஆசிய நாடுகளின் மனித உரிமைகள் விடயத்திலும் கூடுதல் கரிசனையை காண்பிக்கும். மீண்டும் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் கொள்கை நிலைப்பாட்டை எடுக்கும். டொனால் றம்பின் அணுகுமுறைகளால் ஜக்கிய நாடுகள் சபையை சீனா கையகப்படுத்திவிடும் ஆபத்துள்ளதாகவும் சில அமெரிக்க கொள்கைசார் ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பின்புலத்தில் இலங்கையின் இறுதி யுத்த விவகாரம் மீண்டும் அமெரிக்க நிகழ்ச்சிநிரலில் இடம்பிடிக்கும்.

http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/usa-sri-lanka-1.jpg

மைக் பொம்பியோவின் விஜயத்தின் போது அவர் சுதந்திர இந்தோ – பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் தனது கரிசனையை நிச்சயம் வெளிப்படுத்துவார். பொம்பியோ போடப்போகும் அடித்தளத்தில்தான் அடுத்து வரவுள்ள அமெரிக்க நிர்வாகம் – பயணிக்கும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும். இலங்கையில் சீனா வலுவாக காலூன்றியுள்ள நிலையில், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் கொள்கைக்கான தளம், இலங்கையில் பலவீனமாகவே இருக்கின்றது. அமெரிக்க எதிர்பார்ப்புக்கள் இலங்கையில் தொடர்ந்தும் நிறைவேறாமல் இருப்பதானது பிறிதொரு வகையில் அமெரிக்கா முன்தள்ளும் சுதந்திர – திறந்த இந்தோ – பசுபிக் கொள்கையில் ஏற்படும் ஒரு ஆசியப் பின்னடைவாகும். சீனா அதிகம் இலங்கைக்குள் காலூன்றியிருக்கும் நிலையில் சேபா உடன்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. சோபா உடன்பாடு அடிப்படையில் இராணுவ ரீதியான ஒன்று. இதன் மூலம் அமெரிக்க படைகள் இலக்கைக்குள் வந்து செல்ல முடியும். ஒரு காலத்தில் அமெரிக்க படைகள் இலங்கைக்குள் வருவதை இந்தியா விரும்பவில்லை. அது அன்றைய பனிப்போர் கால பிரச்சினை. இன்று இந்தியாவின் நலன்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சீனா அதிகம் காலூன்றிவிட்ட நிலையில், அதனை சமநிலைப்படுத்துவதற்கான உபாயங்களில் இந்தியா ஒரு போதுமே பாராமுகமாக இருக்க முடியாது. இந்த பின்புலத்தில் சோபா அல்லது வேறு ஏதோவொரு வகையில் அமெரிக்காவின் பிரசன்னம் இலங்கையில் இருப்பது இந்தோ – பசுபிக் கொள்கைக்கு கட்டாயமானது. இ;ல்லாவிட்டால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை பிரயோகித்து இந்திய படைகள் இலங்கையில் நிலைகொள்ளும் உபாயம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கள் தள்ளாடுவதுதானது திறந்த இந்தோ – பசுபிக் கொள்கைக்கான ஒரு ஆசியப் பின்னடைவாகவும் அமைந்துவிடலாம். ஏனெனில் ஒரு சிறிய நாட்டில் சீனாவை தோற்கடிக்க அமெரிக்காவினால் முடியாவிட்டால், ஆசியாவில் எவ்வாறு அமெரிக்காவினால் அதன் தலைமைத்துவத்தை உறுதிசெய்ய முடியுமென்னும் கேள்வி எழலாம். இந்த அடிப்படையில் சோபா மற்றும் எம்.சி.சி உடன்பாடு தொடர்ந்தும் இழுபடுவது தொடர்பில் மைக் பொம்பியோ இறுக்கமாக எதிர்வினையாற்றுவாரா? பொம்பியோவின் விஜயத்தின் போது ஒரு வேளை அவர் ஈழத் தமிழ் தலைவர்களை சந்தித்தால் அதுவும் கொழும்பிற்கான ஒரு செய்தியாகவே அமையலாம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/பொம்பியோவின்-வருகையும்/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சீன தூதரகம், பொம்பியோ வருகை  தொடர்பில் காட்டமாக அறிக்கை விட்டுள்ளது.

வழமைக்கு மாறாக உள்ளது. ஆனாலும் கொழுவுவது நல்லதே.

http://www.dailymirror.lk/breaking_news/US-has-made-various-request-for-Pompeos-visit-including-emergent-road-construction-China/108-198744

  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திரா கட்டுரையை எழுதியபின் வாசித்துப் பார்ப்பதேயில்லை போலிருக்கிறது 😏

பறட்டைக் காட்டுக்கு கறட்டை ஓணான் ராஜா .....ம்ம் 😫

பொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்

 

Mike-Pompeo-2-1024x577.jpg
 தி. திபாகரன்

ரண்டாம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது.

கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள அரசியல் பொருளியல் அதிகாரப் போட்டியின் கொதிநிலையின் உச்சத்தை வெளிப்படுகிறது.

அமெரிக்காவின் ‘‘இந்தோ — பசுபிக் பிராந்திய” அரசியல் புவியியல் ( Political Geogaphy) நல்லனும் இந்தியாவினுடைய “புவிசார் அரசியல் (Geopolitics) நலனும்” இணைதிருக்கின்ற ஒரு சந்தியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பயணமாகத்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் அமைகின்றது.

இற்றை வரையான காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரத் தன்மையையும், இந்தியப் பாதுகாப்பு சார்ந்த இந்தியாவின் புவிசார் அரசியலையும், அகன்ற இந்து சமுத்திரம் சார்ந்த வகையில் இந்தியாவின் அரசியல் – பொருளியல் – இராணுவ நலனையும் இந்தியாவால் ஓரளவு கையாளக் கூடியதாக இருந்தது.

ஆனால் இந்நிலைமையை இன்று சீனா உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் புவியியல் (Political Geography) மாற்றியமைத்துவிட்டது. இந்தியாவின் கையை மீறி சீனாவின் அரசியல் புவியியல் இந்து சமுத்திரத்தில் நுழைந்துவிட்ட நிலையில் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னை பலப்படுத்த அமெரிக்க வல்லரசுடன் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தோன்றியுள்ளது.

உலக அரசியல் போக்கில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் புவிசார் அரசியலில் இருந்து தங்களைப் பாதுகாக்க முடியாத நிலமை ஏற்படுகின்றபோது இயற்கையாக இருக்கின்ற அமைப்புக்களோடும் நிகழ்வுகளோடும் கூடவே தமது தேவைக்கேற்ப செயற்கையான மாற்றங்களை அரசியல் ரீதியாக புவியியல் அமைப்பின் மீது உருவாக்கி தமக்கான நலன்களை இலக்கு வைப்பதையே அரசியல் புவியியல் என்கிறோம்.

இயற்கையான புவியியல் அமைப்பின்படி சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்ல. அவ்வாறு இயற்கையாக இந்து சமுத்திரத்தில் ஒரு நாடாக அமையாத சீனா தற்போது அரசியல் புவியியல் மீது அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றத்துக்கு ஏற்ப இன்று அது தன்னை ஒரு இந்து சமுத்திரப் பிராந்திய நாட்டுக்குரிய நிலைக்கு உரியதாக்கி வருகிறது.

அதாவது இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகத்தையும் மற்றும் மியன்மாரில் அமைந்திருக்கும் கோகோதீவுகளையும் இலங்கைத்தீவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா தனது பிடிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தின் பின்தள நாடாக சீனா இன்று தன்னை ஆகிக்கொண்டுவிட்டது.

hambanthotai.jpg

அம்பாந்தோட்டை துறைமுகம்

அது எப்படியெனில் இயற்கையான புவியியல் அமைப்பினால் சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்லாத நிலையில் இந்து சமுத்திர நாடான பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தோடு சீனாவை இணைக்கும் வகையில் சீனாவில் இருந்து நேரடியாக பெருந்தெரு ஒன்றை அமைத்து அது சமுத்திரத்துள் நுளைக்கிறது. அவ்வாறு மியான்மாரின் கோகோ தீவிலிருந்து நிலக்கீழ் வழியாக எண்ணெய் குழாய்களை அமைத்து சீனாவுக்கு நேரடியாக எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. சீனாவின் இவ்விரு அரசியல் பொருளியற் செயற்பாடுகளும் இந்தியாவின் புவிசார் அரசியலை புறந்தள்ளி சீனாவுக்கான புதிய அரசியல்ப் புவியியல் சூழலை உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சீனா ஆளுகை செய்ய தொடங்கிவிட்டது.

அத்தோடு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டதோடு கொழும்பில் கடல் நகரம் ஒன்றியம் மிகப் பிரமாண்டமான அளவில் சீனா மேற்கொண்டு வருகிறது. இங்கே குவாதர் – அம்பாந்தோட்டை – கொக்கோ தீவுகள் என்ற மூன்று புள்ளிகளை இணைத்து அமைக்கப்படும் வலையமைப்பு இந்து சமுத்திரத்தில் இந்தியாவை வளைப்பதாய் காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவை முற்றுகைக்குள் வைக்கக்கூடியதான இராணுவப் பலம்வாய்ந்த ஒரு புதிய அரசியற் புவியியலை சீனா தோற்றுவித்திருக்கிறது.

port-city.jpg

கொழும்பில் உருவாகும் துறைமுக நகரம்

சீனா தனது அரசியல் பொருளாதார பலத்தின் மூலம் சேர்க்கையாக உருவாக்கியிருக்கும் இந்து சமுத்திர அரசியற் புவியியல் முற்றுகையை உடைத்து இந்து சமுத்திரத்தில் இந்தியா தனது இராணுவ கேந்திர புவிசார் நலனையும் பரந்த இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் நலனையும் தக்கவைக்க வேண்டுமென்றால் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் நலனை அனுசரித்து கூட்டு இணைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்தப் பின்னணியிற்தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்காகவும் பேசவருகிறார் என்பது புலனாகும். அதாவது இலங்கை விடயத்தில் இந்திய அரசு பேச முற்படும் விடயங்களை சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தினால் இலகுவாக எதிர்கொண்டுவிடுவர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஊடாக தனது நிலையை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டெனத் தெரிகிறது.

பண்டைய நாட்களில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 21 , 196 கி மீ. நீளமான சீனப்பெருஞ்சுவர் ஒரு அரசியல் புவியியல் ஏற்பாடாகும் . பனாமா கால்வாய், சுயஸ் கால்வாய், இன்று அமெரிக்கா கட்ட முனையும் மெக்சிகோ சுவர், இந்தோ — பசுபிக் பிராந்தியம், இலங்கையில் கிழக்கு மாகாணம் மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளுக்கான சிங்களக் குடியேற்றம் என்பனவெல்லாம் அரசியல் புவியியல் என்கின் விளக்கத்துக்குள் உள்ளடக்கப்பட கூடியவை.

full19715.jpg

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் மைக் போம்பியோ

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தோ — பசிபிக் பிராந்திய நாடுகளான மாலைதீவு , இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இன்றைய காலத்தில் பயணம் செய்வது என்பதை ஈழத் தமிழர் கூர்ந்து கவனித்து செயற்பட தயாராக வேண்டும். இந்து சமுத்திரத்தில் நிகழப்போகும் மாற்றங்களுக்கான கட்டியம் கூறலாகவே இதனை நோக்கவேண்டும்.

இன்று 27 ஆம் திகதியும் நாளையும் இலங்கைக்கு ராஜாங்க விஜயத்தை மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணம் மற்றும் அமெரிக்காவின் விருப்பிற்கு எதிராக இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களை முன் கூட்டியே கூறத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்க அமைச்சரின் பயணத்தின் நோக்கம் சீனாவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து ஓரம் கட்டுவதற்கான செயற்திட்டம் என்பதனை இலங்கை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. தற்போது சீனாவை இலங்கை கைவிடத் தயாரில்லை. அதே நேரத்தில் இந்தியாவை அணைக்கவும் அது உண்மையில் உள்ளார்ந்த அர்த்தத்தில் தயார் இல்லை.

ஏனெனில் இற்றை வரையான காலத்தில் இலங்கையில் இருந்து வந்த இந்தியாவினது புவிசார் அரசியலின் மேலாண்மை தற்போது கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அது எப்படியெனில்,

  1. இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழர்களே இந்தியாவின் பலம். அந்தப் பலத்தை கிழக்கில் மேற்கொள்ளும் சிங்கள குடியேற்றங்களின் மூலம் நிலத்தை கபளீகரம் செய்து விட்டது.
  2. அடுத்து வடக்கின் எல்லையோரப் பகுதிகளை புதிய குடியேற்றங்கள் மூலம் கபளீகரம் செய்ய தொடங்கிவிட்டது.
  3. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் படு மோசமாக இனப் படுகொலை செய்து தோற்கடித்து விட்டது.
  4. சீனா உருவாகியிருக்கும் குவாதர்- அம்பாந்தோட்டை- கோக்கோ தீவுகள் ஆகியவற்றை இணைத்து இந்தியாவை முற்றுகைக்கு உள்ளாகியுள்ள சீனாவின் புதிய அரசியல் புவியியல் வியூகமானது இலங்கைக்கு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இப்பின்னணியிற்தான் இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிர்த்து துணிச்சலாக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை பயன்படுத்தி இலங்கையில் சீனா ஆழமாக வேரூன்றிவிட்டது. இந்த யுத்தத்தில் ராஜபக்ஷக்களுக்கு உறுதுணையாக நின்று இனப்படுகொலையின் வாயிலாக ராஜபக்சக்ளைப் பலப்படுத்தி அதன் மூலம் இலங்கையை சீனச் சார்பு நிலைப்பாட்டிற்கு சீனாவால் இட்டுச்செல்ல முடிந்தது.

இதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வலுவான காலூன்றலூக்கும் வழியமைத்து விட்டவர்கள் .

இன்றைய சூழமைவில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் முகப்பில் வளமான கேந்திரத்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் வாழ்வதனால் அவர்களும் ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாக உள்ளனர் . இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய இறுதிப் பலமாகும்.

மொத்தத்தில் கடந்த காலப் படிப்பினைகளுக்கூடாக முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் வளர்ச்சியடைந்த சீன — சிங்கள — ராஜபக்சக்கள் உறவு தற்போது தமிழின அழிப்பை நோக்கி பெரு விருட்சமாக மேலும் வளர்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தம்மைக் தற்காப்பதற்கான குறைந்தபட்ச இடைவெளியை சரிவரப் புரிந்து கையிலெடுக்க வேண்டும்.

இந்நிலையில் சீன– சிங்கள உறவு ஒருபக்கமும் இந்திய — அமெரிக்க உறவு இன்னொரு பக்கமும் இருக்கும் இரு முனைகள் கொண்ட முரண்பாட்டின் மத்தியில் தற்போது தமிழ் மக்களுக்கு சாதமாக காணப்படும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்த தமிழ் தலைவர்கள் தயாராக வேண்டும்.

1-2-21.jpg

மைக் போட்பியோ புதுடில்லி வந்திறங்கிய போது..

தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு என்பதை இக்கட்டத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரிடம் ஈழத் தமிழ்த் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். ஈழத் தமிழர் விவகாரம் இத்தகைய சந்திப்புகளின் போது முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக எடுத்து பேசப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க தரப்புக்கு ஈழத் தமிழர்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த வகையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தை ஈழத் தமிழர்கள் தமக்கு அப்பாலான ஏதோ ஒரு பிறத்தி விவகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

 

https://thinakkural.lk/article/83442

7 hours ago, செண்பகம் said:

இந்த யுத்தத்தில் ராஜபக்ஷக்களுக்கு உறுதுணையாக நின்று இனப்படுகொலையின் வாயிலாக ராஜபக்சக்ளைப் பலப்படுத்தி அதன் மூலம் இலங்கையை சீனச் சார்பு நிலைப்பாட்டிற்கு சீனாவால் இட்டுச்செல்ல முடிந்தது.

இதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வலுவான காலூன்றலூக்கும் வழியமைத்து விட்டவர்கள் .


தினக்குரல் ஆய்வாளர்களே, நீங்கள் உங்களை ஏமாற்ற இப்படி எழுதிவிட்டு போகலாம். சிவ சங்கர் மேனன் எழுதிய புத்தகத்தையும் (Choices: Inside the Making of India’s Foreign Policy) அபர்ணா பாண்டேயின் நூலையும் (From Chanakya to Modi) வாசித்துவிட்டு வந்து  எழுதுங்கள்.சீனா இலங்கையில் காலூன்ற முக்கிய காரணம் அன்று ராஜிவ் காந்தி இலங்கை விவகாரத்தை கையாண்ட விதம். ராஜீவின்  தவறான அணுகுமுறைகள் பற்றி  அபர்ணா பாண்டேயும் ஹரிஷ் கபூரும் (India’s Foreign Policy, 1947–92: Shadows and Substance) தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் வந்த அரசுகளும் அவர் விட்ட அதே தவறை தொரடர்ந்ததுடன் எமது ஈழக்கோரிக்கையால் தமிழ்நாடு பிரிந்துவிடும்  என்ற கோணத்தில் பார்த்தத்தினால் பல தவறுகள் நடந்தன.  சிவ சங்கர் மேனன்  தனது நூலில் இலங்கையின் இறுதியுதம் பற்றிய அத்தியாயதில் (Chapter 4) தமிழ்நாடு பிரிவினை ஒரு முக்கிய காரணம் என்று  குறிப்பிடத்துடன் மேலதிகமாக புலிகளின் முடிவுக்கு இந்திய பங்களிப்பு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  பரிணப் முகர்ஜீ, மேனன், நாராயணன் கூட்டு எவ்வாறு ராஜபக்ஷக்களுடன் இறுதியுத காலத்தின் ஒன்றாக வேலைசெய்தனர் என்று புத்தகத்தில் உள்ளது.

இதோ அவர் எழுதியது:

"we must engage in order to defend our interest in keeping Sri Lanka free of antagonistic outside influences while also trying to prevent the growth of Tamil extremism and separatism that could affect Tamilnadu. "

"But no matter what one might think of its internal politics, Sri Lanka today is a better place without the LTTE and the civil war. And India contributed to making that outcome possible."  Source: Choices: Inside the Making of India’s Foreign Policy by Shivshankar Menon

புலிகளை அளிப்பதில் தனது பங்கு பற்றி மார் தட்டிய இந்தியா அவர்கள் போனபின் அங்கு தனக்கு அனுகூலமான நிலையை ஏட்படுத்த தவறிவிட்டது. இதே நிலைமையை தான் ஈராக்கிலும் சதாமை விழுத்திவிட்டு பின்னர் Bremmer என்பவர் சதாம் சார்பு இராணுவத்தை கலைத்து விட்டார் பின்னர் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் கொழுந்துவிட்டு இன்று வரை எரிந்துகொண்டிருக்கின்றது. இலங்கையில் அது ராஜபக்ஷக்கள் ஒரு நிரந்தர சர்வாதிகார முறைமையை உருவாக்க இந்தியாவின் தவறுகள் வழிசெய்துள்ளன. இன்று சீன யார்ப்பணம் வரை வந்துவிட்டார்கள். அவர்கள் அவளவுதூரம் வர இந்தியா விட்ட strategic blunders காரணம்.

 

7 hours ago, செண்பகம் said:

இன்றைய சூழமைவில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் முகப்பில் வளமான கேந்திரத்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் வாழ்வதனால் அவர்களும் ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாக உள்ளனர் . இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய இறுதிப் பலமாகும்.

தவறான முடிவுரை. தமிழர் தரப்பு அந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எந்த வித ஆதிக்கத்தையும் செலுத்தக்கூடிய வகையில் அரசியல், ஆயுத அல்லது பொருளாதார பலம் இன்று அற்றவர்கள். அந்த பலம் ஒரு காலத்தில் இருந்தது. உதாரணமாக குர்திஷ் இனத்தினரை எடுத்தால் அவர்கள் அரசியல் மற்றும் ஆயுத பலம் கொண்டு பொருளாதார வளங்கள் (எண்ணை வயல்கள்) மீது ஆதிக்கம் செலுத்த கூடியவாறு ஒன்றிணைத்து தமது இருப்பை எதிரிகள் சூழ்ந்திருந்தாலும் தக்க வைக்கும் தந்திரோபாயம் காரணமாக பூகோள சக்திகளுக்கு வேண்டப்படுபவர்கள் ஆகிவிட்டனர். அதே வேளை அவர்களுக்கு எதிரே நடந்த மனிதஉரிமை மீறல்களை அவர்கள் தங்கள் இனத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு அரசியல் அரணாக மாற்றி பலரின் அனுதாபத்தை தக்கவைத்துக்கொண்டார்கள்.

2009இங்கு பின்னர் இந்த கட்டுரையில்  குறிப்பிடப்படியே தமிழர் தங்கள் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தமுடியாத வகையில் அரசு மிக உறுதியாக காலூன்றியுள்ளது. அத்துடன் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் உலகை உலுப்பியபோதும் அதன் பின்னர் அது தொடர்பான சர்வதேச முன்னெடுப்புகள் நடந்த பொது தமிழ் தரப்பின் ஒரு பகுதி புலன் (புலம்) பெயர்த்தவர்களும்  சேர்ந்து  அதன் தாக்கத்தை மளுக்கடிப்பதின் முன் நின்றதுடன் அதை மழுங்கடிக்க துணை நின்ற சர்வதேச சிக்கலுக்கு துணைபோயினர். அரசியலில் இருந்து ஓரம் கடப்பட்டிருக்க வேண்டிய போர்க்குற்றவாளிகள் இன்று மிகப்பலம் பொருந்திய அரசிய குடும்பமாக உருவாக்க பெரிய பாக்களிப்பை செய்தவர்கள் நாங்கள். அதனால் இன்று அந்த கூட்டமும் சர்வதேச பிராந்திய சக்திகளும் மூக்குடைபட்டு நிக்கின்றனர். அவர்கள் மூடுடைப்பட அவர்களே காரணம் என்பதை ஏற்க ஈகோ விடாது. ஆனால் சுயபரிசோதை இல்லாமல் எங்களுக்கு விமோசனம் இல்லை!

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பியோவின் விஜயத்தை தமிழர்கள் தமக்கு அப்பாலான விவகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது

 
mike-pompeo-696x390.jpg
 31 Views

இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது.

கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள அரசியல் பொருளியல் அதிகாரப் போட்டியின் கொதிநிலையின் உச்சத்தை வெளிப்படுகிறது.

அமெரிக்காவின் ‘‘இந்தோ — பசுபிக் பிராந்திய” அரசியல் புவியியல் ( Political Geogaphy) நல்லனும்” இந்தியாவினுடைய “புவிசார் அரசியல்( Geopolitics) நலனும்” இணைதிருக்கின்ற ஒரு சந்தியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பயணமாகத்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் அமைகின்றது.

இற்றை வரையான காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திர தன்மையையும், இந்தியப் பாதுகாப்பு சார்ந்த இந்தியாவின் புவிசார் அரசியலையும், அகன்ற இந்து சமுத்திரம் சார்ந்த வகையில் இந்தியாவின் அரசியல் – பொருளியல் -இராணுவ நலனையும் இந்தியாவால் ஓரளவு கையாளக் கூடியதாக இருந்தது.

ஆனால் இந்நிலைமையை இன்று சீனா உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் புவியியல் (Political Geography) மாற்றியமைத்துவிட்டது. இந்தியாவின் கையை மீறி சீனாவின் அரசியல் புவியியல் இந்து சமுத்திரத்தில் நுழைந்துவிட்ட நிலையில் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னை பலப்படுத்த அமெரிக்க வல்லரசுடன் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தோன்றியுள்ளது.

உலக அரசியல் போக்கில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் புவிசார் அரசியலில் இருந்து தங்களைப் பாதுகாக்க முடியாத நிலமை ஏற்படுகின்றபோது இயற்கையாக இருக்கின்ற அமைப்புக்களோடும் நிகழ்வுகளோடும் கூடவே தமது தேவைக்கேற்ப செயற்கையான மாற்றங்களை அரசியல் ரீதியாக புவியியல் அமைப்பின் மீது உருவாக்கி தமக்கான நலன்களை இலக்கு வைப்பதையே அரசியல் புவியியல் என்கிறோம்.

இயற்கையான புவியியல் அமைப்பின்படி சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்ல. அவ்வாறு இயற்கையாக இந்து சமுத்திரத்தில் ஒரு நாடாக அமையாத சீனா தற்போது அரசியல் புவியியல் மீது அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றத்துக்கு ஏற்ப இன்று அது தன்னை ஒரு இந்து சமுத்திரப் பிராந்திய நாட்டுக்குரிய நிலைக்கு உரியதாக்கி வருகிறது.

அதாவது இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் பாகிஸ்தானிலுள்ள குவாதர் துறைமுகத்தையும் மற்றும் மியன்மாரில் அமைந்திருக்கும் கோகோதீவுகளையும் இலங்கைத்தீவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா தனது பிடிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தின் பின்தள நாடாக சீனா இன்று தன்னை ஆகிக்கொண்டுவிட்டது.

south-china-sea.jpgஅது எப்படியெனில் இயற்கையான புவியியல் அமைப்பினால் சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்லாத நிலையில் இந்து சமுத்திர நாடான பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தோடு சீனாவை இணைக்கும் வகையில் சீனாவில் இருந்து நேரடியாக பெருந்தெரு ஒன்றை அமைத்து அது சமுத்திரத்துள் நுளைக்கிறது. அவ்வாறு மியான்மாரின் கோகோ தீவிலிருந்து நிலக்கீழ் வழியாக எண்ணெய் குழாய்களை அமைத்து சீனாவுக்கு நேரடியாக எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. சீனாவின் இவ்விரு அரசியல் பொருளியற் செயற்பாடுகளும் இந்தியாவின் புவிசார் அரசியலை புறந்தள்ளி சீனாவுக்கான புதிய அரசியல்ப் புவியியல் சூழலை உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சீனா ஆளுகை செய்ய தொடங்கிவிட்டது.

அத்தோடு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டதோடு கொழும்பில் கடல் நகரம் ஒன்றியம் மிகப் பிரமாண்டமான அளவில் சீனா மேற்கொண்டு வருகிறது. இங்கே குவாதர் – அம்பாந்தோட்டை – கொக்கோ தீவுகள் என்ற மூன்று புள்ளிகளை இணைத்து அமைக்கப்படும் வலையமைப்பு இந்து சமுத்திரத்தில் இந்தியாவை வளைப்பதாய் காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவை முற்றுகைக்குள் வைக்கக்கூடியதான இராணுவப் பலம்வாய்ந்த ஒரு புதிய அரசியற் புவியியலை சீனா தோற்றுவித்திருக்கிறது.

சீனா தனது அரசியல் பொருளாதார பலத்தின் மூலம் சேர்க்கையாக உருவாக்கியிருக்கும் இந்து சமுத்திர அரசியற் புவியியல் முற்றுகையை உடைத்து இந்து சமுத்திரத்தில் இந்தியா தனது இராணுவ கேந்திர புவிசார் நலனையும் பரந்த இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் நலனையும் தக்கவைக்க வேண்டுமென்றால் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் நலனை அனுசரித்து கூட்டு இணைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்தப் பின்னணியிற்தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்காகவும் பேசவருகிறார் என்பது புலனாகும். அதாவது இலங்கை விடயத்தில் இந்திய அரசு பேச முற்படும் விடயங்களை சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தினால் இலகுவாக எதிர்கொண்டுவிடுவர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஊடாக தனது நிலையை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டெனத் தெரிகிறது.

பண்டைய நாட்களில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 21 , 196 கி மீ. நீளமான சீனப்பெருஞ்சுவர் ஒரு அரசியல் புவியியல் ஏற்பாடாகும் . பனாமா கால்வாய், சுயஸ் கால்வாய், இன்று அமெரிக்கா கட்ட முனையும் மெக்சிகோ சுவர், இந்தோ – பசுபிக் பிராந்தியம், இலங்கையில் கிழக்கு மாகாணம் மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளுக்கான சிங்களக் குடியேற்றம் என்பனவெல்லாம் அரசியல் புவியியல் என்கின் விளக்கத்துக்குள் உள்ளடக்கப்பட கூடியவை

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தோ – பசிபிக் பிராந்திய நாடுகளான மாலைதீவு , இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இன்றைய காலத்தில் பயணம் செய்வது என்பதை ஈழத் தமிழர் கூர்ந்து கவனித்து செயற்பட தயாராக வேண்டும். இந்து சமுத்திரத்தில் நிகழப்போகும் மாற்றங்களுக்கான கட்டியம் கூறலாகவே இதனை நோக்கவேண்டும்.

china-Park-1.jpgஒக்டோபர் 28 ஆம் திகதி இலங்கைக்கு ராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணம் மற்றும் அமெரிக்காவின் விருப்பிற்கு எதிராக இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களை முன் கூட்டியே கூறத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்க அமைச்சரின் பயணத்தின் நோக்கம் சீனாவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து ஓரம் கட்டுவதற்கான செயற்திட்டம் என்பதனை சிங்களதேசம் புரிந்து கொண்டிருக்கிறது. தற்போது சீனாவை இலங்கை கைவிடத் தயாரில்லை. அதே நேரத்தில் இந்தியாவை அணைக்கவும் அது உண்மையில் உள்ளார்ந்த அர்த்தத்தில் தயார் இல்லை.

ஏனெனில் இற்றை வரையான காலத்தில் இலங்கையில் இருந்து வந்த இந்தியாவினது புவிசார் அரசியலின் மேலாண்மை தற்போது கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அது எப்படியெனில்

1)இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழர்களே இந்தியாவின் பலம். அந்தப் பலத்தை கிழக்கில் மேற்கொள்ளும் சிங்கள குடியேற்றங்களின் மூலம் நிலத்தை கபளீகரம் செய்து விட்டது.

2) அடுத்து வடக்கின் எல்லையோரப் பகுதிகளை புதிய குடியேற்றங்கள் மூலம் கபளீகரம் செய்ய தொடங்கிவிட்டது.

3) ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் படு மோசமாக இனப்படுகொலை செய்து தோற்கடித்து விட்டது

4)சீனா உருவாகியிருக்கும் குவாதர்- அம்பாந்தோட்டை- கோக்கோ தீவுகள் ஆகியவற்றை இணைத்து இந்தியாவை முற்றுகைக்கு உள்ளாகியுள்ள சீனாவின் புதிய அரசியல் புவியியல் வியூகமானது இலங்கைக்கு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது. இப்பின்னணியிற்தான் இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிர்த்து துணிச்சலாக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை பயன்படுத்தி இலங்கையில் சீனா ஆழமாக வேரூன்றிவிட்டது. இந்த யுத்தத்தில் ராஜபக்ஷக்களுக்கு உறுதுணையாக நின்று இனப்படுகொலையின் வாயிலாக ராஜபக்சக்ளைப் பலப்படுத்தி அதன் மூலம் இலங்கையை சீனச் சார்பு நிலைப்பாட்டிற்கு சீனாவால் இட்டுச்செல்ல முடிந்தது.

இதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வலுவான காலூன்றலூக்கும் வழியமைத்து விட்டவர்கள் .

இன்றைய சூழமைவில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் முகப்பில் வளமான கேந்திரத்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் வாழ்வதனால் அவர்களும் ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாக உள்ளனர் . இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய இறுதிப் பலமாகும்.

மொத்தத்தில் கடந்த காலப் படிப்பினைகளுக்கூடாக முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் வளர்ச்சியடைந்த சீன — சிங்கள — ராஜபக்சக்கள் உறவு தற்போது தமிழின அழிப்பை நோக்கி பெரு விருட்சமாக மேலும் வளர்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தம்மைக் தற்காப்பதற்கான குறைந்தபட்ச இடைவெளியை சரிவரப் புரிந்து கையிலெடுக்க வேண்டும்.

இந்நிலையில் சீன– சிங்கள உறவு ஒருபக்கமும் இந்திய — அமெரிக்க உறவு இன்னொரு பக்கமும் இருக்கும் இரு முனைகள் கொண்ட முரண்பாட்டின் மத்தியில் தற்போது தமிழ் மக்களுக்கு சாதமாக காணப்படும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்த தமிழ் தலைவர்கள் தயாராக வேண்டும்.

தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு என்பதை இக்கட்டத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சரிடம் ஈழத் தமிழ்த் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். ஈழத் தமிழர் விவகாரம் இத்தகைய சந்திப்புகளின் போது முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக எடுத்து பேசப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க தரப்புக்கு ஈழத் தமிழர்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த வகையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திரு . மைக் பொம்பியோவின் விஜயத்தை ஈழத் தமிழர்கள் தமக்கு அப்பாலான ஏதோ ஒரு பிறத்தி விவகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நன்றி
தி. திபாகரன்,27-10-2020.

https://www.ilakku.org/பொம்பியோவின்-விஜயத்தை-தம/

 

 

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதியினை மையப்படுத்தி அமெரிக்க வெளியுறவுச் செயலர் பொம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விடயத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

mike-in-lanka2-300x183.jpg

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பது போல், சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலை என்பது, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு இத்துறைமுகதளத்தை சீனம் இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதவுரிமை மீறல்களிலும், சுற்றுசூழலை வலிந்து அழிவுப்பதிலும், சீனத்தின் நடத்தை என்பது உலகறிந்த விடயம் என்பதும், சீனம் இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய அச்சம் அறிவார்ந்த ஒன்றெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்தச் சிக்கல்களைக் கவனிக்க உங்கள் பதவிப் பொறுப்பின் அதிகாரத்தையும் விருப்புரிமையையும் பயன்படுத்துவது குறித்துக் கருதிப் பார்க்கும் படி சிறிலங்காவுக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல்,  அம்பாந்தோட்டைதுறைமுகத்தைச் சீனம் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய வியடங்களில் சிறிலங்காவை நேரடியாக கேள்விக்குட்படுத்துமாறு கோரியுள்ளது.

Rudrakumaran-TGTE-1-1-300x168.jpg

மேலும் அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கு எழுதிய கடித்தில், இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, 70 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, சிறிலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்பத்தக்க சான்றுகள் இருப்பதாக, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 2015ம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் தந்த சிறிலங்கா பற்றிய புலனாய்வு (OISL) அறிக்கையில் முதன்மையாக சிறிலங்கா அரசு அமைப்புசார் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை அமைதிக்கும் நீதிக்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆகச் சிறந்த தீர்வாக, ஸ்காட்லாந்திலும், எரித்ரியாவிலும், கொசாவோவிலும் நடத்தப்பட்டது போல் தமிழர்களுக்கான ஒரு பொதுவாக்கெடுப்பே என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் வி.உருத்திரகுமாரன், சுட்டிகாட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/83769

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது – பொம்பியோவின் கருத்துக்கு சீனத் தூதரகம் பதிலடி

 
china-dragan.600.png
 59 Views

இலங்கையுடனான இராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களைப் போடுகின்றது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையை சீனா வேட்டையாடுகின்றது என்று இன்று கொழும்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர்மைக் பொம்பியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனத் தூதரகம் ருவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தனது 2 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் இருந்து புறப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று கொழும்பில் வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுகிறது என்றும் கூறினார்.

அமெரிக்கா ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருவதாகவும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான கூட்டணியை முன்னோக்கிக் கொண்டு செல்லவிரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டில், “இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கின்றோம். உங்கள் Alien VS Preadator விளையாட்டு அழைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.

 

https://www.ilakku.org/அமெரிக்கா-இரட்டை-வேடம்-ப/

பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ

இலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.

mike-dinesh-300x225.jpg
நட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தியாவிற்கும் இங்கும் சுற்றுப்பயணம மேற்கொண்டுள்ளேன் இனி மாலைதீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் செல்லப்போகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயக நாடுகள் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பாதைகள் குறித்து பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

mike-spea-225x300.jpg
இ;ந்த ஜனநாயக நாடுகள் மக்கள் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்லலாம் என்பது குறித்தும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான திறமை குறித்தும் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன , இவையே இலங்கை மக்கள் அமெரிக்காவுடன் பகிரவிரும்பும் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

gota-pom-300x200.jpg
மனித உரிமைகள் மதிக்கப்படும் அமைதியான தேசமொன்றில் அனைத்து மதப்பிரிவினரும் வாழ்வதை அமெரிக்கா விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

gota-pom1-300x200.jpg
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைவருக்குமான ஜனாதிபதி நான் என தெரிவித்தார் இரண்டு நாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்லும் இந்த வேளையில் அமெரிக்காவின் வார்த்தைகள் உண்மையானவையாக மாறும் என எதிர்பார்க்கின்றது எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்
பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்ற தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்

https://thinakkural.lk/article/83945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.