Jump to content

லெப்டினன்ட் கேணல் அகிலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் கேணல் அகிலா

Commander-Lieutenant-Colonel-Agila.jpg

லெப்டினன்ட் கேணல் அகிலா: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.

எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது.

அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான்.

எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான போராளி.

அகிலாக்கா எல்லாப் போராளிகளையும் தொட்டுச்சென்ற அவரது நினைவுகள். இழப்பை நெஞ்சம் ஏற்க மறுக்கும் பெயர் கூற முடியாத சதனைகளுக்குள்ளும், இன்னும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிப்போன உண்மைகளுக்குள்ளும் அவர் ஆற்றிய பங்கு, அவரது உழைப்பு….. இவை அவரை இனங்காட்ட முடியாத பக்கங்கள். எழுத்திலே வடிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள்.

அவர் இயக்கத்துக்கென சேவையாற்ற புறப்பட்ட காலங்கள் மிக நெருக்கடியானவை. போராட்ட உத்வேகங்க்கொண்ட பெண்களணி ஒன்று, தங்கள் தங்கள் குடும்பங்களுக்குள்ளே போராட்டம் நடத்தி வெளியே வந்து இந்தத் தேசத்துக்காய் தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கியது. லெப்.கேணல் திலீபணினால் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரப் பறவைகள்’ அணிக்குள் அவர்கள் ஒன்று திரண்டனர். இருண்மைச் சக்திக்குள் உறங்கிக் கிடந்த மனங்களைத் தட்டியெழுப்ப அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டனர். அந்த அணிக்குள் அகிலாவும் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று தொட்டு இன்றுவரை தனது செயல்களினால் மட்டும் தன்னை இனங்காட்டி வந்தார்.

அவரது துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவைகள் எப்போதுமே இலக்குத் தவறியதில்லை. பெயர் சொல்லக் கூடிய இலக்காளர். அந்த இலக்குத் தவறாத தன்மை அவரது போராட்ட வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவியிருந்தது. எந்த வேலையாயினும் செய்து முடிக்கின்ற வரையில் அவரது அயராத உழைப்பு, செய்து முடிக்க வேண்டும் என்ற ஓர்மம் அவரிடம் தனித்துவமாக விளங்கியது.

எல்லாவற்றையும் விட அவரிடமிருந்த பிரச்சனைகளை அணுகினர முறை வித்தியாசமானது. இந்த வேலையை எப்படிச் செய்வது? குறித்த நாட்களுக்குள் செய்து முடிக்க முடியுமா? யோசித்து யோசித்து மண்டையைப் போட்டுக் குழப்பிப் போய் அவர் முன்னாள் நின்றால், இவ்வளவு நேரமும் இதற்காக போய் நின்றோம் என்ற மாதிரி செய்கின்ற வேலை இலகுவானதாகிவிடும். ஒவ்வொரு போராளியையும் சுயமாக வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த நம்மைக்கையும் செயலாற்றலும்…….. எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் அவரை ஆழ இருத்தி விட்டது. எந்த வேலையாக ஓடி அலைந்து திரிந்தாலும் நித்திரையின்றிய இரவுகளைச் சந்தித்தாலும் தானே நேரம் ஒதுக்கி, போராளிகளுக்கு கல்வியூட்டிய அந்த நாட்கள்………. எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவரது கொள்கை செயலுருப்பெற்றபோது, முகாமில் அனேகமான போராளிகள் இயந்திரங்களைத் திருத்துவதிலிருந்து எவ்வாறு சுவையாகச் சமைப்பது என்பது வரை கற்றிருந்தனர்.

அவருக்குரிய வரலாற்றின் முகவுரைக்கு எடுத்துக் கொண்ட சில வரிகள் இவை. இந்த அறிமுகத்துக்குரிய லெப்.கேணல் அகிலாவின் கடைசி மூச்சு 30.10.1995ல் சூரியக்கதிர் படர்ந்த காலைப்பொழுதோடு கலந்து போனது. வலிகாமத்தின் மிகப்பெரிய சமருக்குள் ஊரெழுவின் சிவப்பு மண்ணுக்குள் குருதிதோய எங்கள் அகிலாக்கா கலந்து போனார்.

நெஞ்சை விட்டகலாத நினைவுகளிலிருந்து…
நன்றி: களத்தில் இதழ் (12.06.1996).

https://thesakkatru.com/lieutenant-colonel-agila-in-charge-of-women-in-intelligence/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் 

Link to comment
Share on other sites

  • 11 months later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.