Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் கிழக்கில் மிகுதியாக வாழும் இஸ்லாமியர்களின் தாய்மொழி என்ன???

அவர்கள் தமிழர்களா???

அவர்கள் ஏன் தங்களை தமிழர் என்று கூறிக்கொள்ளாமல் தனி இனமாக பார்க்கிறார்கள்???

ஈழ இஸ்லாமியர் தமிழுக்கு தொண்டாற்றியதுண்டா??

கிழக்கு ஈழத்தில்மட்டும் அல்ல. ஈழம் முழுவதும் வாழும் இஸ்லாமியரின் தாய்மொழி தமிழ். அவர்களின் வீட்டு மொழி தமிழ்.

இஸ்லாமியர் ஏன் தம்மைத் தனி இனமாகப் பார்க்கிறார்கள்? இது ஈழத்தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் சேர். பொன் ராமநாதன் போன்றோர் சிங்கள முஸ்லிம் கலவரங்களின்போது சிங்களவர் பக்கம் சார்ந்ததனால் விளைந்த வரலாற்றுத் தவறுகள்.

ஈழ இஸ்லாமியர் தமிழுக்குத் தொண்டர்ற்றியதுண்டு. உமறுப்புலவர் இரட்சணீய யாத்ரீகம் எழுதியது ஒரு உதாரணம்.

  • Replies 124
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நகைப்புக்கிடமாக இருக்கிறது உங்கள் பல கருத்துக்கள். நீங்கள் சொன்னவற்றில் பார்ப்பனீயம் என்பதை பவுத்த பேரின வாதாம் என்றும் திராவிடர் என்பதை தமிழர் என்றும் பார்ப்பனர் என்பதி சிங்களவர் என்றும் போட்டால், ஹேல உறுமைய சொல்லும் 'தமிழர்களுக்கு இங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, இங்கு புலிகளின் பயங்கரவாதாம் தான் பிரச்சினை' என்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்காது.

இங்கே சிங்கள தரப்போது ஏன் இவர்களின் பிராமண மீதான வெறியை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை வந்தது. எமக்கு எதிராகவும், வன்முறைரீதியாகவும் துன்புறுத்தும் ஒரு தரப்போடு( சிங்களபெளத்தவாதம்) தங்களுக்குப் பிடிக்காத பார்ப்பானத்துவத்தை ஒப்பீடு செய்வதன் மூலம், தங்களின் செயலை நியாயப்படுத்தும் செயலே அன்றி அங்கே எவ்வித பொருத்தமும் இருந்ததாக இல்லை.

இதே மாதிரி எங்களாலும் ஒப்பீடு செய்யமுடியும்.

அதிக வேலை வாய்புக்களைச் சதவீத அடிப்படையில் முன்பு வைத்திருந்த தமிழ் இனத்தை பார்ப்பானருக்கும், சனத்தொகையில் அதிகமாக இருந்தும் வேலைவாய்ப்புப் பெறாமல் இருந்த சிங்களவர்களைத் திராவிடக்கட்சி சார்ந்தவர்களாகவும் ஒப்பிட்டால், தமிழீழத் தேசியப்போராட்டம் என்பது பிராமணர்களின் உரிமைப் போராட்டமாகவும் மாறும்.

இது சரியா பிழையா என்பதல்ல. ஆனால் ஒப்பீடு செய்வது என்பது எல்லோரும் தங்களின் விருப்பத்துக்கு அமைய செய்வதில் கஸ்டமான விடயமே இல்லை.

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெரியாரும் திராவிட இயக்கங்களும் தோன்ற முதல் தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் பார்ப்பனர்கள்,அரச அதிகாரம் இருந்தது பார்ப்பனர்கள் கையில்.கல்வி வேலை வாய்ப்பு எல்லாமுமே பார்ப்பனர்கள் மயமாக இருந்தது.சனத்தொகையில் மூன்று சத வீதமானவர்கள் பொருளாதரத்தில் தொண்ணூறு சதவீதத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.பார்ப்பனீயம் இல்லாது விட்டால் திராவிடம் தோன்றி இருக்காது.எவ்வாறு சிங்களப்பேரினவாதாம் இல்லாமல் தமிழ் தேசியம் தோன்றி இருக்காதோ, அதே போல்.

இது தான் மேலே சொன்னது போல 75 வீதமாகச் சிங்கள தரப்பு இருந்தபோதும் தமிழர்கள் அதிகளவு வேலைவாய்ப்புடனும், கல்வி, வேலைவாய்ப்பு, என்று சுமார் 50 வீதத்துக்கு மேல் உயர்பதவிகளை ஆக்கிரமித்திருந்தது என்பது இங்கே பார்ப்பானருக்கு தாங்கள் சொன்ன விதத்தை ஒப்பீடு செய்வதன் மூலமும், பின்னர் சிங்கள தரப்பு பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி, தொடக்கம் இனத்துவ வேலைவாய்ப்புக் கொண்டு வந்தது என்பது திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் கொண்டு வந்திருந்த இடஒதுக்கீட்டிற்கும் உதாரணமாகச் சொல்ல முடியும்.

என்ன! ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்தாதார்கள். பிராமணர்கள் போராவில்லை.

திராவிடம் என்பது இப்போதையை தமிழத் தேசியத்தைப்போல்.பார்ப்பனீயம

மீண்டும் மீண்டும் பெரியாரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் ....... பெரியார் பற்றி அரைகுறையாக அறிந்து வைத்துக்கொண்டு ..... அவர் முழு உலகிலும் உள்ள மக்களுக்காக ஏன் போரிடவில்லை என்றெல்லாம் விதண்டாவாதம் வேறு..... அவர் சொத்துக்கள் ஊழல் செய்து சம்பாதிக்கவில்லை ....

சொத்துக்களை அரசியலில் வந்து இழந்தவர்.....

அவர் போராடியது தமிழக மக்களுக்காக..... ஏன் செட்டியாரை எதிர்க்கவில்லை அவரை எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் எல்லாம்???????????????????????

Edited by வேலவன்

பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால் ...... இந்தியை நாங்கள் ஏற்றிருப்போம் ..... பசுத்தோல் உரிப்பவர்களை அடித்தே கொன்றிருப்போம்..... நாங்களும் தமிழ் ஸமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்போம்..... தமிழர் ராவண வம்சம் என்போம்(முக்கியமாக ஈழத்தமிழர்)ஏனென்றால் ராவணன் சைவனாம்.

திருமண அழைப்பிதழை ....விவாகப்பத்திரிக்கை என்போம் ....சில தமிழ் எழுத்துக்களைக்கூட குழம்பித்தான் எழுதுவோம் மலையாளம் போல... ஆந்திராவில் இன்னும் உள்ளது போல் தேவதாசிகளை ஆராதிப்போம்... பொட்டு கட்டியும் விடுவோம் இல்லையென்றால் சாமி குத்தம் அல்லவா

இன்னும் நிறைய கூத்தெல்லாம் உண்டு......... ஆமாம் பெரியார் ஈழத்தமிழர்க்கு என்ன கேடு செய்தார்....??????????????????????????????????????????????

Edited by வேலவன்

இங்கே எந்தளவுக்கு நீங்கள் சாதியம் இல்லை பார்ப்பனீயம் இல்லை என்று சொல்கிறீர்களோ ,இன்னொரு பக்கத்தில் அதையே உதாரணமாக் காட்டி, பார்த்தீர்களா யாழ்ப்பாண வேளாளரின் தமிழ்த் தேசியத்தை என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியத்தால் விடுதலை கிடைக்காது, அவர்கள் தங்களை 'தலித்துக்கள்' என்று அடையாளம் காட்டி ,'பவுதர்களாக' மாற வேண்டும் என்று சொல்லும் ஒரு அரசியல் நிலைப்பாடும் வளர்ந்து வருவதையும் கவனியுங்கள்.

சாதிய மத வேறுபாடுகளைக் கடந்த ஒன்று பட்ட கோட்பாடகவே 'திராவிடம்' என்கிற கோட்பாட்டை பெரியார் வளர்த்தார்.அவர் பின்னால் வந்தவர்கள் அதனை உயர் சாதியினரின் எகபோக அரசியற் உடமையாக மாற்றி விட்டனர்.அதனாலையே இன்று 'தலித்தியம்' என்னும் கோட்பாடாக தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியற் சக்திகள் , திரவிடம், தமிழ்த் தேசியம் என்னும் அடையாளங்களைத் துறந்து ,வளர்ந்து வருகின்றன.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சைவ வேளாளத்தை தூக்கிப் பிடிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தலித்தியமும் வளர்ந்து வருகிறது என்பது தான் இன்றைய அரசியல் நிலை.தமிழ்த் தேசிய அடையளாத்தை கோட்பாட்டு ரீதியாக நிலைத்து வைத்திருக்க வேண்டும் என்றால், அதனை சாதிய மத ரீதியான அடையாளத்திற்கு அடிபணியாத ஒரு அரசியற் கோட்பாடாக அடையாளமாக இனங்காணுவது அவசியம்.

திராவிடத்திற்க்கு நிகழ்ந்த சீரழிவு தமிழத்தேசியத்திற்க்கும் நிகழமால் இருக்க வேண்டும் என்றால், தமிழ்த் தேசியம் என்பது சாதிய சமய பிரதேச வாதங்களைக் கடந்த ஒரு அரசியற் கோட்பாடாக , அரசியற் சக்தியாக இருக்க வேண்டும்.இதற்கு முன் நிபந்தனையாக இருப்பது சைவ வேளாளத்தையும் நாவலரின் சற் சூத்திர சைவத் தமிழ் அடையாளத்தையும் அதன் எச்ச சொச்சங்களையும் தமிழ்த் தேசியத்தில் இருந்து பிரித்து எறிந்து விடுவதே.

எவ்வாறு தமிழர்களுகுப் பிரச்சினைகள் ஒடுக்கு முறைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்வது தமிழ்த் தேசியத்திற்கான முன் நிபந்தனையாக இருக்கிறதோ , அதே போல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழத்தில் அடக்கப்பட்டனர் என்பதையும், பிரதேச ரீதியான பாகுபாடுகள் யாழ்ப்பாணத்தவரால் நிகழ்த்தப்பட்டன என்பதையும் ஏற்றுக்கொண்டு இவற்றை அகற்றுவதற்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக தமிழ்த் தேசியம் இருக்கிறது என்பதை நிலை நிறுத்துவது, தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதற்கான முன் நிபந்தனையாக இருக்கிறது.

இவ்வாறு அரசியல் ரீதியாக்ச் சிந்திச்சு செயலற்றாமல் வெறுமனே 'சோபா சக்தியையோ' ,'அ மாக்சயோ' துரோகிகள் என்று அழைப்பதாலோ, தனி நபர்கள் மேல் வசை மாறிப் பொழிவதாலோ , தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க முடியாது என்பதே அரசியல் நிதர்சனம்.அரசியல் ரீதியான கோட்பாட்டின் பிழைகளே அரசியல் இயக்கங்களை வளர்க்கின்றன.

குறுந் தேசிய இன வேறி சமய வெறிகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களுக்குமான விடுதலையைத் தரும் கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை நீங்கள் பார்க்காதவரை, அதற்கு எதிரான அரசியற் சக்திகள் காலம் காலமாக வளர்ந்து வரும்.வரலாற்று இயங்கியல் என்பது அதுவே.யாழ்க்களத்தில் சிலரால் எழுதப்படும் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்தை ஒரு இன வெறிக் கோட்பாடாகவும், யாழ் உயர் சாதியினரின் போரட்டாமாகவுமே காட்ட உதவும்.இவர்கள் வரலாற்றையும், அரசியலையும் கற்றலே இவர்களை இவ்வாறான குறுகிய பார்வையிகளில் இருந்து விடுவிக்கும்.அதற்கு வாசிப்பும், வாசிப்பதை உள்வாங்கும் அடிப்படை குணாம்சியம் அவசியம்.தாம் பிடிச்ச முயலுக்கும் மூன்று கால் என்னும் விதண்டா வாதமும், மத வெறியின் மயக்கமும், சிறு வயது முதல் புகட்டப்பட்ட கோட்பாடுகளையே உண்மை என்று எண்ணும் மூட நம்பிக்கையும் இருக்கும் இடத்து சுய சிந்தனை என்பதுவோ அறிவுத் தேடலோ ,பகுத்து அறிவதோ இல்லமலையே இருக்கும்.

இங்கே நாங்கள் பிராமணீயத்திற்கு ஆதரவாகவோ, சைவ வேளாளருக்கு ஆதரவாகவோ கருத்து எழுதவில்லை. திராவிடமும் வேண்டாம் பார்ப்ணீயமும் வேண்டாம், தலித் இசமும் வேண்டாம் எல்லோரும் தமிழராக ஒன்றிணைவோம் என்று தான் சொல்கிறோம்.

தமிழீழத்திற்கு சம்பந்தம் இல்லாத பெரியார் கொள்கைகளை நீங்கள் தான் கொண்டுவந்து இங்கு திணிக்கீறீர்கள். தமிழகத்தில் உள்ளது போல் ஈழத்தில் பிராமணீய ஆதிக்கம் உள்ளதா? இல்லை தமிழீழம் கிடைத்ததும் பிள்ளையாருக்கு செருப்பு மாலை அணிவித்து கோவில் மதில்களில் கடவுள் இல்லை என்று எழுதிவைக்கப் போகிறீர்களா?

தமிழீழத்தில் தமிழால் ஒன்றுபடுவோம். அங்கே இந்துக்கள் கோவில்களுக்கு செல்லட்டும். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்லட்டும். மூஸ்லீம்கள் மசூதிகளுக்கு சென்று 5 வேளையும் கூட தொழட்டும். கடவுள் இல்லை என்பவர்கள் தாயையும் தந்தையயுமே வணங்கட்டுமே.

தமிழீழத்தில் சாதி என்றே சொல்லே அற்ற, மதவிகாரங்கள் இல்லாத, அறிவில் செழித்த, தெளிவான அரசியல் பொருளாதார கொள்கைகள் கொண்ட மக்கள் ஆட்சி நிறுவுவோம்.

இது எங்கள் தலைவர் பொழுது போகாமல் தொடங்கிய போராட்டம் இல்லை. இதில் சாதிபேதமில்லாமல் தமிழர் இரத்தமும் சதையும் கலந்திருக்கிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நகைப்புக்கிடமாக இருக்கிறது உங்கள் பல கருத்துக்கள். நீங்கள் சொன்னவற்றில் பார்ப்பனீயம் என்பதை பவுத்த பேரின வாதாம் என்றும் திராவிடர் என்பதை தமிழர் என்றும் பார்ப்பனர் என்பதி சிங்களவர் என்றும் போட்டால், ஹேல உறுமைய சொல்லும் 'தமிழர்களுக்கு இங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, இங்கு புலிகளின் பயங்கரவாதாம் தான் பிரச்சினை' என்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்காது.

இங்கே சிங்கள தரப்போது ஏன் இவர்களின் பிராமண மீதான வெறியை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை வந்தது. எமக்கு எதிராகவும், வன்முறைரீதியாகவும் துன்புறுத்தும் ஒரு தரப்போடு( சிங்களபெளத்தவாதம்) தங்களுக்குப் பிடிக்காத பார்ப்பானத்துவத்தை ஒப்பீடு செய்வதன் மூலம், தங்களின் செயலை நியாயப்படுத்தும் செயலே அன்றி அங்கே எவ்வித பொருத்தமும் இருந்ததாக இல்லை.

இதே மாதிரி எங்களாலும் ஒப்பீடு செய்யமுடியும்.

அதிக வேலை வாய்புக்களைச் சதவீத அடிப்படையில் முன்பு வைத்திருந்த தமிழ் இனத்தை பார்ப்பானருக்கும், சனத்தொகையில் அதிகமாக இருந்தும் வேலைவாய்ப்புப் பெறாமல் இருந்த சிங்களவர்களைத் திராவிடக்கட்சி சார்ந்தவர்களாகவும் ஒப்பிட்டால், தமிழீழத் தேசியப்போராட்டம் என்பது பிராமணர்களின் உரிமைப் போராட்டமாகவும் மாறும்.

இது சரியா பிழையா என்பதல்ல. ஆனால் ஒப்பீடு செய்வது என்பது எல்லோரும் தங்களின் விருப்பத்துக்கு அமைய செய்வதில் கஸ்டமான விடயமே இல்லை.

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெரியாரும் திராவிட இயக்கங்களும் தோன்ற முதல் தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் பார்ப்பனர்கள்,அரச அதிகாரம் இருந்தது பார்ப்பனர்கள் கையில்.கல்வி வேலை வாய்ப்பு எல்லாமுமே பார்ப்பனர்கள் மயமாக இருந்தது.சனத்தொகையில் மூன்று சத வீதமானவர்கள் பொருளாதரத்தில் தொண்ணூறு சதவீதத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.பார்ப்பனீயம் இல்லாது விட்டால் திராவிடம் தோன்றி இருக்காது.எவ்வாறு சிங்களப்பேரினவாதாம் இல்லாமல் தமிழ் தேசியம் தோன்றி இருக்காதோ, அதே போல்.

இது தான் மேலே சொன்னது போல 75 வீதமாகச் சிங்கள தரப்பு இருந்தபோதும் தமிழர்கள் அதிகளவு வேலைவாய்ப்புடனும், கல்வி, வேலைவாய்ப்பு, என்று சுமார் 50 வீதத்துக்கு மேல் உயர்பதவிகளை ஆக்கிரமித்திருந்தது என்பது இங்கே பார்ப்பானருக்கு தாங்கள் சொன்ன விதத்தை ஒப்பீடு செய்வதன் மூலமும், பின்னர் சிங்கள தரப்பு பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி, தொடக்கம் இனத்துவ வேலைவாய்ப்புக் கொண்டு வந்தது என்பது திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் கொண்டு வந்திருந்த இடஒதுக்கீட்டிற்கும் உதாரணமாகச் சொல்ல முடியும்.

என்ன! ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்தாதார்கள். பிராமணர்கள் போராவில்லை.

திராவிடம் என்பது இப்போதையை தமிழத் தேசியத்தைப்போல்.பார்ப்பனீயம

நாரதரே நீங்கள் சொல்லும் திராவிடம் என்ற சொல்லே திராவிட சொல் அல்ல. அதற்கு என்ன அர்த்தம் என்றும் அறுதியாக எவருக்கும் தெரியாது. ஏன் நீங்கள் வைத்திருக்கும் நாரதர் என்ற பெயரும் கூட வடமொழி சொல் தான். கீழே பெரியார் புரட்சி என்ற பெயரால் செய்த புரட்டுக்கள் சில தரப்பட்டுள்ளன.

'திரவிடமென்பது என்ன சொல் என்கிறீர்கள்? திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்கிறீர்கள், பின்னர் திராவிடம் என்றால் திராவிடச் சொல் இல்லை என்று எழுதுகிறீர்களே? ஒன்றை இன்னது என்று தெரியாமல் அதனை இது அல்ல என்று எவ்வாறு சொல்வீர்கள்?முரணாக இல்லை.

நாரதர் என்பது ஒரு கதாபத்திரத்தின் பெயர், கலகக்காரன் என்பதன் குறியீடு.தமிழைத் தூய தமிழாகப் பாவிப்பதற்கும் ஒரு புராணக்கதையில் வரும் கற்பனைப் பாத்திரதின் பெயரை இடுவதற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குப் படவில்லை. நாரதர் இல்லாவிட்டால் ஹோமர் என்று பெயர் வைத்து விட்டுப்போகிறேன்.தமிழ் மொழி கலப்பற்று இருக்க வேண்டும் என்று விரும்பும் நான் மற்ற மொழிகள் மீது வெறுப்பை உமிழும் வெறியன் இல்லை.

1. நீங்கள் சொல்வது போல் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே பிராமணியத்திற்கெதிராக போராட முனைந்ததாக் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் என்ன செய்திருக்க வேண்டும் அகில இந்தியாவிலும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். தெற்கே விந்திய மலைக்கு அப்பால் வாழும் திராவிடர்களுக்காக மட்டும் அல்ல. வடக்கே வாழும் தாழ்த்தப்பட்ட ஆரியர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து இருக்க வேண்டும்.

பெரியார் எங்கோ இந்தியாவின் கோடியில் இருக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் போரட வில்லை என்பதற்காக தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகப் போராடக் கூடாது என்று சொல்வது அபத்தம் ஆனதாகப் படவில்லையா?

2. நீங்கள் சொல்லும் பெரியார் வடக்கே என்ன மற்ற தென் மாநிலங்களில் உள்ள மக்களை கூட ஒன்றிணைத்து போராடுவதில் வெற்றிபெறவில்லை. நீதிக்கட்சி தொடங்கி, பிரிட்டிசாரை ஆதரித்து, காந்தியை எதிர்த்து இந்திய சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்து விட்டு, பின்னாளில் அப்படி செய்தது தப்பு என்று ஒப்புக்கொண்டவர் தான் பெரியார்.

பெரியார் தன் வாழ் நாளில் தான் விட்ட பிழைகளை எற்றுக்கொண்ட உயரிய மனிதர் என்பது இதில் இருந்து புலனாகவில்லையா? இந்திய விடுதலை எல்லா மக்களிற்க்கும் ஆனது இல்லை என்பதாலையே அதனைப் புறக்கணித்தார்.பின் நாளில் அதற்காக வருதப்படார் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அது பற்றி நான் அறியவில்லை.அதற்கான காரணம் என்ன என்பதையும், நீங்க்கள் சொல்லுவத் ஆதரச் சுட்டியையும் தந்தீதீர்கள் என்றால் படித்து அறிந்து கொள்கிறேன்.

3. பார்ப்பனீயத்தால் அடக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்ட திராவிடத்தை கையில் எடுத்தார் என்று சொல்கிறீர்களே, ஏன் செட்டியார்களும், சைவப்பிள்ளைகளும், ஆங்கிலேயருக்கு தமிழரை காட்டி கொடுத்த ஆற்காடு நவாப்களும் ஏழைத்தமிழரை அடக்கி ஆளவில்லையா? அவர்களுக்கு எதிராகவும் ஏன் அதைவிடவும் மைசூர் மகாராஜாவுக்கும்ம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும், இன்னும் ஏழைகளின் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை சுருட்டி வைத்துக் கொண்ட ஜமீன்களுக்கும் எதிராக அல்லவா இருந்திருக்க வேண்டும் உங்கள் பெரியாரின் வர்க்க போராட்டம். பெரியாரின் தனிப்பட்ட சொத்துக்கள் அந்த காலத்திலேயே எத்தனை கோடிகள் பெறும் என்று தெரியுமா உங்களுக்கு. அதே காலங்களில் அக்ரகாரங்களில் கோயில் பிரசாதத்தையே நம்பி வாழ்ந்த எத்தனை ஏழை பிராமணர்கள் இருந்தார்கள் என்பது தெரியுமா?

விதிவிலக்குகள் அரசியற் சக்திகள் கிடையாது.அன்று இருந்த பிரதானமான ஒடுக்குமுறை பார்ப்பனீயமே அதற்க்கு எதிராகவே திராவிடம் என்னும் அரசியற் கோட்பாடு கட்டியமைக்கப்பட்டது.அரசியலு

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் பெரியாரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் ....... பெரியார் பற்றி அரைகுறையாக அறிந்து வைத்துக்கொண்டு ..... அவர் முழு உலகிலும் உள்ள மக்களுக்காக ஏன் போரிடவில்லை என்றெல்லாம் விதண்டாவாதம் வேறு..... அவர் சொத்துக்கள் ஊழல் செய்து சம்பாதிக்கவில்லை ....

சொத்துக்களை அரசியலில் வந்து இழந்தவர்.....

அவர் போராடியது தமிழக மக்களுக்காக..... ஏன் செட்டியாரை எதிர்க்கவில்லை அவரை எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் எல்லாம்???????????????????????

ராமசாமி சொத்தை இழந்தாரோ, பெற்றாரோ என்பது எல்லாம் தேவைவயில்லாத ஒன்று. ஆனால் இன்றைக்குத் தமிழ் தேசியம் என்று அனைத்து மக்களையும் ஒன்று திரட்ட முடியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு அவர் என்பதை மறுக்க முடியுமா?

பார்ப்பானி, திராவிடர் பிரச்சனை இந்த 100 வருடங்களாக மாறிமாறிக் கத்துவதிலேயே முடிகின்றதே தவிர, ஏதாவது உருப்படியாக முடிகின்றதா?

அவருக்குள்ள பிரச்சனை என்பது வேறு. ஆனால் நீங்கள் கண்மண் தெரியாமல் அவர் தமிழ் தேசியத்தின் தந்தை என்று ஏமாத்து வித்தை போடுகின்றீர்கள். உங்களுடைய எந்தக் கொள்கையும் முதலில் மற்றவரகளைப் பாதிக்காத வகையில் பார்க்கத் தெரிந்த கொள்ளுங்கள்.

பெரியார் தோன்றாமல் இருந்து இருந்தால் கழுதையாகக்கூட இருந்திருக்க மாட்டார்கள் தமிழர்கள்.....

உங்களுக்கு தமிழர்கள் முன்னெடுத்த சமத்துவ போராட்டங்களான

தோள்சேலை போராட்டம் .... கோவில் நுழைவு போராட்டம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை பின் ஏன் தெரியாத விஷயத்தில் மூக்கை நுழக்கிறீர்கள்???

அதற்கு முன்பிருந்த தமிழக நிலமையும் தெரியவில்லை???

ஈழத்தமிழர் பார்ப்பனர் போல சிங்களவரை உறிஞ்சி வாழ்ந்தீர்களா????

அவர்களால் கட்டப்பட்ட கோவில்களிலே பூசாரியாக இருந்து அவர்களை கோவிலுக்குள் விட மறுத்தீர்களா???

அவர்கள் குளங்களிலே அவர்கள் குளிப்பதை தடுத்தீர்களா??

அவர்கள் கல்வி கற்பதை தடுத்தீர்களா??

பெரியாரா இடஒதுக்கீடு கொண்டு வந்தார்???

ஈழத்தமிழரை பார்ப்பனரோடு ஒப்பிடுவது மிகவும் வேதனைக்குரியது

பெரியார் பிறந்ததால் தான் தமிழர்கள் ஒன்றுபட முடிய வில்லையா????

தூயவனின் கண்டுபிடிப்பு இது................................................................

பெரியார் கொள்கைகள் உங்களை எந்த வகையில் பாதித்தது????????????

பெரியாருக்கும் ஈழத்துக்கும் என்ன சம்ப்பந்தம் நாங்கள் கன்னடனை தலைவனாக ஏற்றுக்கொண்ட மூடர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.....

பெரியார் பற்றி வசைபாட உங்களுக்கு உரிமையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால் ...... இந்தியை நாங்கள் ஏற்றிருப்போம் ..... பசுத்தோல் உரிப்பவர்களை அடித்தே கொன்றிருப்போம்..... நாங்களும் தமிழ் ஸமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்போம்..... தமிழர் ராவண வம்சம் என்போம்(முக்கியமாக ஈழத்தமிழர்)ஏனென்றால் ராவணன் சைவனாம்.

திருமண அழைப்பிதழை ....விவாகப்பத்திரிக்கை என்போம் ....சில தமிழ் எழுத்துக்களைக்கூட குழம்பித்தான் எழுதுவோம் மலையாளம் போல... ஆந்திராவில் இன்னும் உள்ளது போல் தேவதாசிகளை ஆராதிப்போம்... பொட்டு கட்டியும் விடுவோம் இல்லையென்றால் சாமி குத்தம் அல்லவா

இன்னும் நிறைய கூத்தெல்லாம் உண்டு......... ஆமாம் பெரியார் ஈழத்தமிழர்க்கு என்ன கேடு செய்தார்....??????????????????????????????????????????????

பெரியார் கொள்கை மக்களிடம் முழுமையாக எடுபட்டிருந்தால்.......... தமிழனுக்குள் குத்துவெட்டு்ககளைச் சந்திக்கின்றோம். தனித்தமிழ் நாடு கேட்கப் போய் அரைகுறை வேலை பார்த்தால் உப்போது கழிப்பறை போவத்குக் கூட உரிமைப் போராட்டம் செய்ய வேண்டியிருக்கின்றது. தமிழில் ஆங்கிலத்தை கலந்து அதன் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். தமிழனை காட்டுமிராண்டிகளாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். தமிழன் என்ற உணர்வை தமிழனுக்கு இப்போது தான் பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். திருமணப் பத்திரிகைகளை வெடிங் காட் என்று அழைக்கின்றோம். தமிழில் புதுப்புதுச் சொல் என்ற பார்வையில் காஸ்மலாம், கம்மனாண்டி, என்று அரிய பல சொற்களை உருவாக்குவோம். நிர்வாணமான கும்மியடித்துக் கொண்டு திரிவோம். விபச்சாரிகள் வீடுவீடாக அலைவோம். 4, 5 பொண்டாட்டிகள் வைத்திருப்போம். (வைப்பாட்டிக்குக் கணக்கில்லை) அதை விட முக்கியமாக கிழட்டு வயதில் இளம் குமரியைக் கட்டி கூத்தடிந்திருப்போம்

ஈழத்தமிழருக்கு என்ன செய்தார் என்று கேட்டிருந்தீர்கள் நல்ல கேள்வி. அதைப் பொதுப்படையாக தமிழருக்கு என்ன செய்தார் என்று கேளுங்கள். ஒன்றுமே செய்யாதிருக்க தமிழ் தேசியத்தை இவருக்கு ஏன் முடிச்சுப் போடுறீங்கள்.

( நீங்கள் இப்போது தமிழ் என்ற ஒருமைப்பாட்டிற்கு வராமல், ஈழத்தமிழ் இந்தியத் தமிழ் என்ற பிரிவினைச் சிந்தனையோடு திரிகின்றீர்கள் என்பதைப் புரிய முடிகின்றது.வாழ்க ஒற்றுமை. நாங்கள் இவ்வளவு நேரம் அப்படியான சிந்தனை கொண்டு கருத்தெழுத வில்லை)

Edited by தூயவன்

பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால் ...... இந்தியை நாங்கள் ஏற்றிருப்போம் ..... பசுத்தோல் உரிப்பவர்களை அடித்தே கொன்றிருப்போம்..... நாங்களும் தமிழ் ஸமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்போம்..... தமிழர் ராவண வம்சம் என்போம்(முக்கியமாக ஈழத்தமிழர்)ஏனென்றால் ராவணன் சைவனாம்.

திருமண அழைப்பிதழை ....விவாகப்பத்திரிக்கை என்போம் ....சில தமிழ் எழுத்துக்களைக்கூட குழம்பித்தான் எழுதுவோம் மலையாளம் போல... ஆந்திராவில் இன்னும் உள்ளது போல் தேவதாசிகளை ஆராதிப்போம்... பொட்டு கட்டியும் விடுவோம் இல்லையென்றால் சாமி குத்தம் அல்லவா

இன்னும் நிறைய கூத்தெல்லாம் உண்டு......... ஆமாம் பெரியார் ஈழத்தமிழர்க்கு என்ன கேடு செய்தார்....??????????????????????????????????????????????

நான் வேதம் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் வேதங்கள் சொல்லவில்லை. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்குமான உறவு 5000 வருடம் பழமையானது. ஆதியில் இரண்டு மொழிகளுமே அரசர்களால் சமனாகவே பார்க்கப்பட்டது. தமிழ் அரசுகளின் வீழ்ச்சிக்கு பிறகு கிட்டத்தட்ட 13ம் நூற்றண்டுக்குப் பிறகு தமிழகம் அந்நியர்களினினதும் சமஸ்தானங்களினதும் ஆட்சிக்குள் போய் விட்டது. அதனால் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகள் தான் நீங்கள் சொன்ன பிரச்சினைகளுக்கு காரணம். அதில் சில பிராமணர்கள், வேதம் சொன்னதை திரித்து சொல்லிய போலிகள் குளிர் காய்ந்திருக்கலாம்.

ஆனால் தமிழர்கள் சாம்ராஜ்யங்களை நிர்வகித்த காலம் முதல்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும் தான் கூறி வந்திருக்கிறார்கள்

பெரியாரின் கடவுள் மறுப்பை பண்டைய தமிழர்கள் செய்ததாக நான் அறிந்தவரை ஆதாரம் இல்லை

Edited by vettri-vel

இங்கே நாங்கள் பிராமணீயத்திற்கு ஆதரவாகவோ, சைவ வேளாளருக்கு ஆதரவாகவோ கருத்து எழுதவில்லை. திராவிடமும் வேண்டாம் பார்ப்ணீயமும் வேண்டாம், தலித் இசமும் வேண்டாம் எல்லோரும் தமிழராக ஒன்றிணைவோம் என்று தான் சொல்கிறோம்.

தமிழீழத்திற்கு சம்பந்தம் இல்லாத பெரியார் கொள்கைகளை நீங்கள் தான் கொண்டுவந்து இங்கு திணிக்கீறீர்கள். தமிழகத்தில் உள்ளது போல் ஈழத்தில் பிராமணீய ஆதிக்கம் உள்ளதா? இல்லை தமிழீழம் கிடைத்ததும் பிள்ளையாருக்கு செருப்பு மாலை அணிவித்து கோவில் மதில்களில் கடவுள் இல்லை என்று எழுதிவைக்கப் போகிறீர்களா?

தமிழீழத்தில் தமிழால் ஒன்றுபடுவோம். அங்கே இந்துக்கள் கோவில்களுக்கு செல்லட்டும். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்லட்டும். மூஸ்லீம்கள் மசூதிகளுக்கு சென்று 5 வேளையும் கூட தொழட்டும். கடவுள் இல்லை என்பவர்கள் தாயையும் தந்தையயுமே வணங்கட்டுமே.

தமிழீழத்தில் சாதி என்றே சொல்லே அற்ற, மதவிகாரங்கள் இல்லாத, அறிவில் செழித்த, தெளிவான அரசியல் பொருளாதார கொள்கைகள் கொண்ட மக்கள் ஆட்சி நிறுவுவோம்.

இது எங்கள் தலைவர் பொழுது போகாமல் தொடங்கிய போராட்டம் இல்லை. இதில் சாதிபேதமில்லாமல் தமிழர் இரத்தமும் சதையும் கலந்திருக்கிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

வெற்றி வேல் இந்தக் கருத்தடலை மீண்டும் வாசியுங்கள் , இந்து ராம் ஏன் பார்ப்பனர் என்றும் ஏன் அவர் ஈழத்திற்க்கு எதிராக இருகிறார் என்பதுவும் என்றே ஆரம்பிதிருக்கிறது.தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு ஏன் பெரியார் அவசியமாக இருகிறார் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க முடியும் நீங்கள் அல்ல. நீங்கள் தான் இங்கு பெரியார் பற்றிக் கதைக்கிறீர்கள், நாங்கள் அல்ல.பெரியார் இன்ன பிழை செய்தார் இன்ன பிழை செய்தார் என்று ஏன் கதைகிறீர்கள்.பின்னர் பெரியார் பற்றி நாங்கள் கதைத்தால் பெரியார் ஈழத்திர்க்கு அவசியம் இல்லை எங்கிறீர்கள்.

இந்திய உபகண்டத்தில் இருந்து வந்தது தான் சைவ சமயம் அதே உபகண்டத்தில் இருந்து வருவது தான் பார்ப்பனீயமும் சாதியமும்.அதே உபகண்டத்தில் இருந்து வருவது தான் பெரியாரின் திராவிடமும்.சைவ சமயத்தையும் சாதியத்தையும் ஏற்றுக் கொல்ளத் தயராகும் நீங்கள் ஏன் பெரியாரைக் கதைத்தால் மட்டும் ஈழத்திற்க்கும் பெரியாருக்கும் சம்பன்ந்தம் இல்லை என்று கூறுகிறீர்கள்.

ஈழத்தில் சாதி இல்லை மத ரீதியான பாகுபாடுகள் இல்லை என்றால் ஈழத்தில் பெரியார் அவசியம் இல்லைத் தான்.ஆனால் துரதிஸ்ட்ட வசமாக் இந்திய உபகண்டத்தின் வரலார்று நிகழ்வுகளோடு நாங்கல் பல் நெடுங்காலமகப் பின்னிப் பிணைந்து உள்ளோம்.உப கண்டத்தில் நிகழும் மார்றங்கள் எங்கள் சமூகத்தில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்துகின்றன.ஈழமும் இந்திய உபகண்டமும் ஒரு பொதுப் பண்பாட்டுப் பிரதேசம் என்பது வரலாற்றி ஆய்வாளர்களின் முடிபு, எமது முடிபு மட்டும் அல்ல. நீங்கள் எவ்வாறு அகத்தியரையும் ரசராசனையிம் இளங்கோவையும் ஞானசம்பந்தரையும் ஈழத்த்துடன் இணைகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரியாரையும் நாங்கள் இணைக்கிறோம்.

எந்தளவுக்கு ஈழத்தில் சதியா பாகுபாடுகள் இல்லை மத ரீதியான பிரதேச ரீதியான பாகுபாடுகள் இல்லை?ஒன்றை இல்லை என்று மறுதலைப்பதால் மட்டும் அவை இல்லாது போய் விடாது.ஒன்றை இருப்பதாக் ஏற்றுகொள்வதே அதனை அழித்து ஒழிப்பதற்கான் முதற்படி.ஈழத்தில் சாதிகள் ஒழிந்து மதப்பிரிவினைகள் ஒழிய வேண்டும் என்றால், பெரியார் ஏற்படுத்திய சாதிகள் அற்ற மத அடையாளாம் அற்ற தமிழ்த் தேசிய அடையாளம் அவசியமாக இருக்கிறது.

சாதி பேதம் அற்ற தமிழ் ஈழத்தை உருவாக்க சாதி பேதங்களைக் கழைவது அவசியம்.சாதி பேதங்களை முன் நிறுத்தும் கோட்பாடுகளைக் களைவது அவசியம்.சம பந்தி போசனத்தை வன்மையாக எதிர்த்த நாவலரைச் சொல்லிக் கொண்டு தமிழ்த் தேசியம் வளர்ப்பது, ஆகுதியான பல் ஆயிரம் தாழ்த்தப்பட்ட போரளிகளின் ஈகையை கொச்சைப்படுதுவதாக அமையும்.அதனால் தான் சாதிய மத வேறுபாடுகளைக் கடந்த பெரியார் உருவாக்கிய தமிழ்த் தேசியம் எமக்கு அவசியம் ஆக இருக்கிறது.

தமிழர்களின் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் பெரியாரை விட்டு விட்டு நடக்க முடியாது.

அது ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தும்.

சிங்களவர்கள் பௌத்தத்தை முன்னிறுத்துகின்ற போது ஈழத் தமிழர்கள் இயல்பாகவே சைவத்தை முன்னிறுத்தி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் அந்தத் தன்மை காணப்பட்டது.

ஆனால் இன்றைக்கு ஈழப் போராட்டம் போகின்ற திசையைப் பாருங்கள்

ஒரு உதாரணம் சொல்கிறேன்

சில வாரங்களுக்கு முன்பு வன்னியில் திருக்குறள் விழா நடத்தினார்கள். விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் துணைப் பொறுப்பாளர் தங்கன் "தமிழர் திருமணம்" என்ற நூலை வெளியிட்டார்.

அந்த நூல் காட்டுகின்ற திருமணத்தில் சமஸ்கிருதம் இல்லை, பார்ப்பான் இல்லை, மதமும் இல்லை.

அத்துடன் அந்த விழாவில் திருக்குறள் ஓதி திருமணம் செய்து கொண்டவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.

ஆரியர்களின் வெற்றியைப் பாடிய கம்பனுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த தமிழர்களை திருவள்ளுவருக்கு விழா எடுக்கச் செய்ததில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

பார்ப்பான் இல்லாத, மந்திரம் இல்லாத திருமணங்களை நடத்தி வைத்ததும் யார் என்று உங்களுக்கு தெரியும்.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. என்னால் நிறைய உதாரணங்களை காட்ட முடியும். பெரியாரை விட்டுவிட்டு தமிழர்களின் எந்த ஒரு போராட்டமும் நடக்க முடியாது.

வேறொரு விடயத்தையும் சொல்ல வேண்டும்.

பார்ப்பனர்கள் வேற்று நாட்டவர்களுக்கு கீழ் வேலை செய்ய சம்மதிப்பார்கள். காரணம் அவர்கள் எந்த வர்ணத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் தாழ்த்தப்பட்ட ஒருவரின் கீழ் பணி புரிய மாட்டார்கள். அவர் இந்துவாக இருந்தாலும் கூட.

வேதம் கற்ற வெற்றி வேலுக்கு வர்ணாஸ்ரம தர்மா என்றால் என்ன என்று தெரியுமா......

தூயவன் 1800 களில் தமிழகத்தில் நிகழ்ந்த போராட்டங்களை கழிவறை நுழைவுப்போராட்டம் என்று கொச்சைப்படுத்த வேண்டாம் ....... தமிழக வரலாறு தெரியாமல் நீங்கள் தமிழர்களை பிரிவில்லாமல் பாவிப்பதாக கூறுவது ஏற்புடயதில்லை...

பெரியார் தமது விழிப்புணர்வு போரில் வெற்றி பெற இயலவில்லை அதற்கு காரணம் இன்னும் விழிப்புணர்வு தேவை.... நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் தோன்றாமல் இருந்து இருந்தால் கழுதையாகக்கூட இருந்திருக்க மாட்டார்கள் தமிழர்கள்.....

உங்களுக்கு தமிழர்கள் முன்னெடுத்த சமத்துவ போராட்டங்களான

தோள்சேலை போராட்டம் .... கோவில் நுழைவு போராட்டம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை பின் ஏன் தெரியாத விஷயத்தில் மூக்கை நுழக்கிறீர்கள்???

அதற்கு முன்பிருந்த தமிழக நிலமையும் தெரியவில்லை???

இவர் இல்லாமல் போயிருந்தால் மக்கள் இல்லாமலே போயிருப்பார்கள் என்பது சினிமானத்தனமான ஹரோலிசம். தோள்சேலைப் போராட்டம் என்பது வெள்ளையன் கூட இருந்த பிரச்சனை. அக்காலத்தில் பெண்கள் மேலாடை குறித்து அக்கறைப்படாத காலம். இபாதூன் பாபா கூட தன் கடற்பிரயாணத்தில் இந்திய பற்றிக் குறிப்பிடும்போது, இடுப்புக்கு கீழ் தான் ஆடை அணிந்ததாகக் குறிபபிடுகின்றார். பின்

ஈழத்தமிழர் பார்ப்பனர் போல சிங்களவரை உறிஞ்சி வாழ்ந்தீர்களா????

அவர்களால் கட்டப்பட்ட கோவில்களிலே பூசாரியாக இருந்து அவர்களை கோவிலுக்குள் விட மறுத்தீர்களா???

அவர்கள் குளங்களிலே அவர்கள் குளிப்பதை தடுத்தீர்களா??

அவர்கள் கல்வி கற்பதை தடுத்தீர்களா??

பெரியாரா இடஒதுக்கீடு கொண்டு வந்தார்???

ஈழத்தமிழரை பார்ப்பனரோடு ஒப்பிடுவது மிகவும் வேதனைக்குரியது

பெரியார் பிறந்ததால் தான் தமிழர்கள் ஒன்றுபட முடிய வில்லையா????

தூயவனின் கண்டுபிடிப்பு இது................................................................

சிங்களவர் தமிழர் தங்களின் வேலைவாய்ப்புக்களைத் தட்டிப் பற்றிக்கின்றார்கள் என்ற சிந்தித்ததால் தான், அவர்கள் சட்டங்கள் மூலம் முடக்கினார்கள். அதைத் தடுக்க இனரீதியாக, மதரீதியாக, சாதிரீதியாக திராவிடக் கட்சிகள் கொண்டிருந்த பதவி குறித்தான சட்ட மூலம் போலத் தான் சிங்கள அரசின் பிரதேசரீதியான ஒடுக்குமுறை.

இங்கே இதே கேள்வியைச் சிங்கள அரசு மீதும் கேட்கலாம். தமிழர்கள் சிங்களவர்கள் கற்ற வேண்டாம் என்று தடுத்தார்களார்களா? அல்லது வேலைக்கு இணைவதைத் தடுத்தார்களா? இல்லையே!

ஆனால் திராவிடக்கட்சிகள் போலத் தான் சிங்கள அரசும் சிந்தித்தது. அதனால் தான் பறிப்பினை மேற்கொண்டது.

தமிழர்கள் ஒற்றுமைப்படவில்லை என்பது உண்மை தான். தமிழ்நாட்டில் இப்படி அடித்துக் கொள்வதைப் போல மற்றய மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்கின்றார்களா என்ன?

பெரியார் கொள்கைகள் உங்களை எந்த வகையில் பாதித்தது????????????

பெரியாருக்கும் ஈழத்துக்கும் என்ன சம்ப்பந்தம் நாங்கள் கன்னடனை தலைவனாக ஏற்றுக்கொண்ட மூடர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.....

பெரியார் பற்றி வசைபாட உங்களுக்கு உரிமையில்லை

நல்லது வேலவன்

ஒரு பிரதேசவாத சிந்தனையோடு நீங்கள் இருக்கின்றபோது இதையும் மீறி என்னால் என்ன சொல்லிட முடியும். உண்மையில் பெரியாரால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் கற்குவியலில் இருந்து பேசுகின்றோம். அது சிதைந்து போனால் உமக்கென்ன என்று கேட்கின்றீர்கள் நல்லது.

ராமசாமியைப் பற்றி கதைக்க எமக்கு உரிமையில்லை என்றால் எம் பக்தி முறை பற்றிக் கதைக்கவோ, அல்லது எம் தமிழ் பற்றியும், அதன் தலைமை யார் என்று பற்றியும் கதைக்கின்ற உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது, உங்களது கொள்கை எந்தக் குப்பையாகவும் இருக்கட்டும். ஆனால் அதை எங்களின் மனங்களைப் பாதிக்கின்றது போலச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

வெற்றி வேல் இந்தக் கருத்தடலை மீண்டும் வாசியுங்கள் , இந்து ராம் ஏன் பார்ப்பனர் என்றும் ஏன் அவர் ஈழத்திற்க்கு எதிராக இருகிறார் என்பதுவும் என்றே ஆரம்பிதிருக்கிறது.தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு ஏன் பெரியார் அவசியமாக இருகிறார் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க முடியும் நீங்கள் அல்ல. நீங்கள் தான் இங்கு பெரியார் பற்றிக் கதைக்கிறீர்கள், நாங்கள் அல்ல.பெரியார் இன்ன பிழை செய்தார் இன்ன பிழை செய்தார் என்று ஏன் கதைகிறீர்கள்.பின்னர் பெரியார் பற்றி நாங்கள் கதைத்தால் பெரியார் ஈழத்திர்க்கு அவசியம் இல்லை எங்கிறீர்கள்.

இந்திய உபகண்டத்தில் இருந்து வந்தது தான் சைவ சமயம் அதே உபகண்டத்தில் இருந்து வருவது தான் பார்ப்பனீயமும் சாதியமும்.அதே உபகண்டத்தில் இருந்து வருவது தான் பெரியாரின் திராவிடமும்.சைவ சமயத்தையும் சாதியத்தையும் ஏற்றுக் கொல்ளத் தயராகும் நீங்கள் ஏன் பெரியாரைக் கதைத்தால் மட்டும் ஈழத்திற்க்கும் பெரியாருக்கும் சம்பன்ந்தம் இல்லை என்று கூறுகிறீர்கள்.

ஈழத்தில் சாதி இல்லை மத ரீதியான பாகுபாடுகள் இல்லை என்றால் ஈழத்தில் பெரியார் அவசியம் இல்லைத் தான்.ஆனால் துரதிஸ்ட்ட வசமாக் இந்திய உபகண்டத்தின் வரலார்று நிகழ்வுகளோடு நாங்கல் பல் நெடுங்காலமகப் பின்னிப் பிணைந்து உள்ளோம்.உப கண்டத்தில் நிகழும் மார்றங்கள் எங்கள் சமூகத்தில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்துகின்றன.ஈழமும் இந்திய உபகண்டமும் ஒரு பொதுப் பண்பாட்டுப் பிரதேசம் என்பது வரலாற்றி ஆய்வாளர்களின் முடிபு, எமது முடிபு மட்டும் அல்ல. நீங்கள் எவ்வாறு அகத்தியரையும் ரசராசனையிம் இளங்கோவையும் ஞானசம்பந்தரையும் ஈழத்த்துடன் இணைகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரியாரையும் நாங்கள் இணைக்கிறோம்.

எந்தளவுக்கு ஈழத்தில் சதியா பாகுபாடுகள் இல்லை மத ரீதியான பிரதேச ரீதியான பாகுபாடுகள் இல்லை?ஒன்றை இல்லை என்று மறுதலைப்பதால் மட்டும் அவை இல்லாது போய் விடாது.ஒன்றை இருப்பதாக் ஏற்றுகொள்வதே அதனை அழித்து ஒழிப்பதற்கான் முதற்படி.ஈழத்தில் சாதிகள் ஒழிந்து மதப்பிரிவினைகள் ஒழிய வேண்டும் என்றால், பெரியார் ஏற்படுத்திய சாதிகள் அற்ற மத அடையாளாம் அற்ற தமிழ்த் தேசிய அடையாளம் அவசியமாக இருக்கிறது.

சாதி பேதம் அற்ற தமிழ் ஈழத்தை உருவாக்க சாதி பேதங்களைக் கழைவது அவசியம்.சாதி பேதங்களை முன் நிறுத்தும் கோட்பாடுகளைக் களைவது அவசியம்.சம பந்தி போசனத்தை வன்மையாக எதிர்த்த நாவலரைச் சொல்லிக் கொண்டு தமிழ்த் தேசியம் வளர்ப்பது, ஆகுதியான பல் ஆயிரம் தாழ்த்தப்பட்ட போரளிகளின் ஈகையை கொச்சைப்படுதுவதாக அமையும்.அதனால் தான் சாதிய மத வேறுபாடுகளைக் கடந்த பெரியார் உருவாக்கிய தமிழ்த் தேசியம் எமக்கு அவசியம் ஆக இருக்கிறது.

50 வருடங்களுக்குப் பிறகும் பெரியார் கொள்கைகளிலேயே ஆட்சி சுழலும் தமிழகத்தின் நிலையை பார்த்த பின்னும், தமிழீழத்தில் பெரியார் கொள்கையா?

தமிழன் தீமிதிப்பதை மூடப்பழக்கம் என்று சொன்னவர்கள் இன்று அதே ஏழைத்தமிழனை நடுத்தெருவில் தீக்குளிக்க வைக்கிறார்கள். கடவுளை வணங்க வேண்டாம் என்று சொன்னவர்கள், தங்கள் கால்களில் தமிழன் விழுந்து வணங்கும் அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முடிந்தால் தமிழகம் சென்று நான்கு மசூதி சுவர்களில் கடவுள் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் தமிழீழம் திரும்பி வந்(தால்)து பெரியார் கொள்கையை வளர்க்கலாம்.

தமிழீழத்தின் ஒரே கொள்கை எங்கள் தலைவர் பிரபாகரின் கொள்கை தான். வேறு எங்கிருந்தும் கொள்கை கடன் வாங்கும் வரட்சியில் விடுதலை புலிகள் இல்லை

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

50 வருடங்களுக்குப் பிறகு பெரியார் கொள்கைகளிலேயே ஆட்சி சுழலும் தமிழகத்தின் நிலையை பார்த்த பின்னும், தமிழீழத்தில் பெரியார் கொள்கையா?

தமிழன் தீமிதிப்பதை மூடப்பழக்கம் என்று சொன்னவர்கள் இன்று அதே ஏழைத்தமிழனை நடுத்தெருவில் தீக்குளிக்க வைக்கிறார்கள். கடவுளை வணங்க வேண்டாம் என்று சொன்னவர்கள், தங்கள் கால்களில் தமிழன் விழுந்து வணங்கும் அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முடிந்தால் தமிழகம் சென்று நான்கு மசூதி சுவர்களில் கடவுள் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் தமிழீழம் திரும்பி வந்(தால்)து பெரியார் கொள்கையை வளர்க்கலாம்.

தமிழீழத்தின் ஒரே கொள்கை எங்கள் தலைவர் பிரபாகரின் கொள்கை தான். வேறு எங்கிருந்தும் கொள்கை கடன் வாங்கும் வரட்சியில் விடுதலை புலிகள் இல்லை

முதலில் பெண்டாட்டிமார்களையாவது தங்களின் கொள்கைக்குள் வரவைக்க முதலில் செய்யச் சொல்ல வேண்டும்.

உலகின் பல திசைகளில் இருந்து பெறப்பட்டு நல்ல கொள்கைகள் உருவாக்கப்படும்.

விடுதலைப் புலிகள் "சோசிலச தமிழீழம்" என்று அன்றைக்கு சொன்னது முற்று முழதான சொந்த சிந்தனை அல்ல. இன்றைய அவர்களுடைய கொள்கைகளும் உலக ஒழுங்கிற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நல்ல கொள்கைகளை கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

தலைவரின் கொள்கையில் பெரியார் கொள்கைகளும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன

வேதம் கற்ற வெற்றி வேலுக்கு வர்ணாஸ்ரம தர்மா என்றால் என்ன என்று தெரியுமா......

தூயவன் 1800 களில் தமிழகத்தில் நிகழ்ந்த போராட்டங்களை கழிவறை நுழைவுப்போராட்டம் என்று கொச்சைப்படுத்த வேண்டாம் ....... தமிழக வரலாறு தெரியாமல் நீங்கள் தமிழர்களை பிரிவில்லாமல் பாவிப்பதாக கூறுவது ஏற்புடயதில்லை...

பெரியார் தமது விழிப்புணர்வு போரில் வெற்றி பெற இயலவில்லை அதற்கு காரணம் இன்னும் விழிப்புணர்வு தேவை.... நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் இல்லை

வேதங்களில் வர்ணாசிரமம் பிறப்பால் ஏற்படுத்தப்படும் பிரிவாக சொல்லப்படவில்லை. வருணங்களுக்கிடையிலான திருமண உறவுகளும் தடை செய்யப்படவில்லை. அது பின்னாளில் வந்த மனு செய்த சதி. காலப்போக்கில் எல்லா தத்துவங்களும் திரிபடையும் வாய்ப்பு உள்ளது. 2000 வருடத்திற்கு முன் தோன்றிய பைபிளில் கூட பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆனால் யேசு கிறிஸ்துவின் தத்துவங்களில் எந்த முரண்பாடும் இருந்திருக்காது. மக்கள் விளங்கிக்கொண்ட முறையில் வந்தது தான் மேற்சொன்ன முரண்பாடுகள்

தோள்சேலைப்போராட்டம் பற்றித்தெரியவில்லை என்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்..... வீணாக அதை வெள்ளையரோடு தொடர்புபடுத்த வேண்டாம்...... 1800 களில் தமிழ்ப்பெண்கள் இடுப்புக்கு கீழே மட்டும் தான் ஆடை அணிந்தனரா???

பெரியாருக்கு முன் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி தெரியாமல் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு..... நாங்கள் பிரதேச வாதத்தில் பேசுகிறோம் என்றால் ............... என்ன செய்வது...

எனக்கு ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் தெரியாது ஆனால் ஆதரிப்பதன் காரணம் எங்கள் ரத்தம் எங்களோடு மரபியல் ஒற்றுமை உள்ள ஒனம் ஒடுக்கப்படுவது என்பதால் தான்..... போராட்டத்தின் தலைமையை என்றும் எங்கள் தலைமையாகவே கருதுகிறோம்...

னீங்கள் தான் பிரதேச வாதத்தோடு பெரியார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகிறீர்கள்

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வேதங்களில் வர்ணாசிரமம் பிறப்பால் ஏற்படுத்தப்படும் பிரிவாக சொல்லப்படவில்லை. வருணங்களுக்கிடையிலான திருமண உறவுகளும் தடை செய்யப்படவில்லை. அது பின்னாளில் வந்த மனு செய்த சதி. காலப்போக்கில் எல்லா தத்துவங்களும் திரிபடையும் வாய்ப்பு உள்ளது. 2000 வருடத்திற்கு முன் தோன்றிய பைபிளில் கூட பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆனால் யேசு கிறிஸ்துவின் தத்துவங்களில் எந்த முரண்பாடும் இருந்திருக்காது. மக்கள் விளங்கிக்கொண்ட முறையில் வந்தது தான் மேற்சொன்ன முரண்பாடுகள்

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ராமசாமியின் கொள்கை கூட அரசியல் சாக்கடையில் சிதைந்து போனது என்பதை ஒத்துக் கொள்கின்ற இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த வேதக்கொள்கையில் சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று கண்ணீர் வடிக்கின்றார்கள்.

மனுநீதி வகுத்தாலும், அதற்குள் வகுத்தவன் தானும் அடிபணியப்பழகியிருந்தான் என்பது தான் சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மை. :lol:

உலகின் பல திசைகளில் இருந்து பெறப்பட்டு நல்ல கொள்கைகள் உருவாக்கப்படும்.

விடுதலைப் புலிகள் "சோசிலச தமிழீழம்" என்று அன்றைக்கு சொன்னது முற்று முழதான சொந்த சிந்தனை அல்ல. இன்றைய அவர்களுடைய கொள்கைகளும் உலக ஒழுங்கிற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நல்ல கொள்கைகளை கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

தலைவரின் கொள்கையில் பெரியார் கொள்கைகளும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன

நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். தலைவர் கொள்கையில் பெரியார் கொள்கைகளுக்கும் இடம் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக கடவுள் மறுப்பு இல்லை. மத சுதந்திரம் பேணப்படும். தமிழர் பண்பாட்டையும், சமுக அரசியல், பொருளாதார வளர்ச்சியையும் சமத்துவத்தையும் மையப்படுத்தியதே தலைவரின் கொள்கைகள்

எங்கள் தலைவர் போல் மக்கள் தலைவனை 1000 வருடத்திற்கு முன் வேண்டுமானால் தமிழ்நிலம் கண்டிருக்கும். சென்ற நூற்றாண்டில் அல்ல

Edited by vettri-vel

பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை மட்டும் பிடித்துக்கொண்டு அழுவது தேவையற்றது ஏனென்றால் நானும் அதை ஏற்கவில்லை....

தமிழீழ தேசியத்தலைவர் பெரியாரின் கனவுகளை நனவாக்குகிறார் (அவர் என்ன கனவு கண்டார் என்பதே பலருக்கு புரியவில்லை என்பது தான் வேதனை)

சான்று ஈழத்தில் சாதியை ஒழிப்பார் பிரபாகரன்,அடிமைபடுத்தப்பட்ட பெண்விடுதலை.... செய்து வருகிறார் தலைவர் எங்கள் ரத்தம் பிரபாகரன்......

பெரியார் சொன்னது போல் பெண்கள் சரி சமமாக விடுதலையில் பங்கெடுக்கின்றனர் ...உடை பேதம் இல்லை ....கள்ளுண்ணாமை பொன்ற பெரியார் கொள்கைகள் ஈழத்தில் மட்டுமே அமலாக்கப்படுகின்றன....துரோகிக

  • கருத்துக்கள உறவுகள்

தோள்சேலைப்போராட்டம் பற்றித்தெரியவில்லை என்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்..... வீணாக அதை வெள்ளையரோடு தொடர்புபடுத்த வேண்டாம்...... 1800 களில் தமிழ்ப்பெண்கள் இடுப்புக்கு கீழே மட்டும் தான் ஆடை அணிந்தனரா???

பெரியாருக்கு முன் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி தெரியாமல் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு..... நாங்கள் பிரதேச வாதத்தில் பேசுகிறோம் என்றால் ............... என்ன செய்வது...

எனக்கு ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் தெரியாது ஆனால் ஆதரிப்பதன் காரணம் எங்கள் ரத்தம் எங்களோடு மரபியல் ஒற்றுமை உள்ள ஒனம் ஒடுக்கப்படுவது என்பதால் தான்..... போராட்டத்தின் தலைமையை என்றும் எங்கள் தலைமையாகவே கருதுகிறோம்...

நீங்கள் தான் பிரதேச வாதத்தோடு பெரியார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகிறீர்கள்

உங்களுக்குத் தான் தெரியவில்லை என்றால் இபான் பதூதாவின் பிரயாணங்கள் பற்றிய கட்டுரை எடுத்துப்படியுங்கள். குழந்தைகளைக் கறுப்பு நிறமாக்குவற்கு எண்ணைக்குளியல் செய்வித்து, அவர்களையும் கடவுள்சிலை போல கறுப்பு நிறமாக்கினார்கள் என்று தொடர்கின்றது.

பல தடவை திரும்பச் சொல்லியாகி விட்டது. தென்னிந்தியாவில் நடந்த சாதிக் கொடுமைகளால் பலன் அனுபவித்தவர்கள் பார்ப்பாணர்கள் மட்டுமல்ல, இதர மேல்தட்டு சழுதாயமும்(நாயக்கர் உற்பட) தான் என்று. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு பார்ப்பானிகள் என்று ஒரு சமூகத்தை மட்டும் குதறிக்கடித்தால் அது அம் இனம் மீதான வெறியாக இருக்குமே தவிர, சமூகப் பற்றுக்கிடையாது.

ஏன் அதைச் சமூகப் போராட்டம் என்று ஏமாற்ற வேண்டும்?

உங்களின் ஈழப்போராட்டம் மீதான ஆதரவுக்கு நன்றிகள். அந்த போராட்டத்தை நடத்தும் புலிகளுக்கே அது போய்ச் சேர வேண்டும். இங்கே நாங்கள் கதைப்பது தனிமனித அடிப்படையிலானது.

ராமசாமி தமிழர் இல்லை என்பதால் தான் அவரைத் தமிழரின் தலைவராக ஏற்கமுடியவில்லை.

'திரவிடமென்பது என்ன சொல் என்கிறீர்கள்? திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்கிறீர்கள், பின்னர் திராவிடம் என்றால் திராவிடச் சொல் இல்லை என்று எழுதுகிறீர்களே? ஒன்றை இன்னது என்று தெரியாமல் அதனை இது அல்ல என்று எவ்வாறு சொல்வீர்கள்?முரணாக இல்லை.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் திராவிடம் என்ற சொல்லே தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிகிறது. தமிழ் சொல்லே இல்லாத ஒரு சொல்லால் தமிழர்களை அடையாளப்படுத்த எவ்வளவு பகுத்தறிவு வேண்டும் என்றும் தெரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.