Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் அடிமை என்பதை ஈழத்தில் பல இயக்கங்கள் மற்கொண்டவை தான். பெண் சமத்துவம் என்று தமிழகத்திலும், தாயகத்திலும் நடத்திய அவர்களின் கூத்து மிகமிக அதிகம். ஆனால் தலைவர் கலாச்சாரக் கட்டமைப்பை உடைக்க முயலவில்லை. ஆண்களுக்குக் கற்பில்லை என்றால் பெண்களுக்கும் கற்புத் தேவையில்லை என்று முழக்கமிடவில்லை.

அதை மாறி ஆண்கள் கூட தாயகத்தில் ஒழுக்கமாக இருக்க வேணடும் என்று தான் சட்டம் வகுத்துள்ளார்.

  • Replies 124
  • Views 10k
  • Created
  • Last Reply

நீங்கள் கூறுவது போல் பார்ப்பனர் மட்டுமல்ல .... ஏனைய உயர் சாதியினரும் சாதிக்கொடுமைகளுக்கு காரணம் ..... ஆனால் எல்லாமே பார்ப்பனர்கள் வகுத்துக்கொடுத்த சட்டங்களால் வந்த வினை... நான் கூட அப்படி ஆதிக்கம் செலுத்திய ஒரு சாதியில் தோன்றியதற்காக இன்றும் வெட்கப்படுகிறேன்.....

அதற்கு பெரியார் என்ன செய்ய முடியும் அவர் பார்ப்பனர்களை எதிர்த்தார் என்பதை விட பார்ப்பனீயத்தை எதிர்த்தார் என்பதே சரி..... ஏனைய மக்கள் செய்த சாதிக்கொடுமைகளும் பார்ப்பனீயத்தில் அடக்கம்...

அவர் பார்ப்பனர் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ளவில்லை..... ராஜாஜி அவர் நண்பராகெவே இருந்தார்.

தோள்சேலைப்போராட்டம் என்பது எனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்தில் 1800 களில் நடந்தது....

அப்போது தாழ்ந்த வகுப்பினர் தோளில் சேலை அணிவதை பார்ப்பனர் நேரடியாகவே தடுத்துள்ளனர்....

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் திராவிடம் என்ற சொல்லே தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிகிறது. தமிழ் சொல்லே இல்லாத ஒரு சொல்லால் தமிழர்களை அடையாளப்படுத்த எவ்வளவு பகுத்தறிவு வேண்டும் என்றும் தெரிகிறது

அவ்வாறே நாஸ்திகவாதிகள் என்ற சொல்லைப் பாவிப்பார்கள். அது கூட வடசொல்.

அவ்வாறே தலித்தியம், தலித் என்று ஆரியசொல்லைப் பாவிப்பார்கள்.

பொதுவாகப் பார்க்கப் போனால் திராவிடத்துவம் என்பது தமிழனைத் தாழ்த்துவதாகவே அமைந்திருக்கும். புராணங்களிலும், கதைகளிலும் வரும் வில்லன்களைத் தமிழன் என்று சொல்லுவதன் மூலம், தமிழனைக் கெட்டவனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இராவணன், சூரன், உற்பட்ட பலர்.

அவ்வாறே தலித் என்று கேவலப்படுத்தப்பட்ட ஒரு சொல்லைத் தங்களுக்குத் தாங்களே இட்டுக் கொள்வதன் மூலம், தமிழன் அடிமையானவன் என்ற சிந்தனைக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார்கள்.

இந்த இலட்சணத்தில் தமிழன் எப்படி உயர்வடையக் கூடும்?

பெரியார் எதிர்மறையாக பேசியதன் காரணம் .... அப்பொழுது தான் அதன் விளைவுகள் தாக்கம் ஏற்படுத்தும்....

பெரியார் ஆணுக்கும் கற்பு வேண்டும் என்று பேசியிருந்தால் யார் அதை காதில் வாங்கியிருப்பர்.....

ஆணுக்கு கற்பு தேவையில்லையெனில் பெண்ணிற்கும் தேவையில்லை என்றால் அந்த பெண்ணிற்கு கற்பு தேவையில்லை என்பது பரபரப்பாகும்... கருத்து பிரபலமாகும்..விழிப்பு வரும்

தலைவர் பிரபாகரனைடம் இன்று ஒரு நாட்டிற்குரிய க்கட்டமைப்பு உள்ளது செயல் படுத்துகிறார்.

பார்ப்பனர்களே தமிழர்களை ராவண வம்சம் என்று குறிப்பிடுவர்

தூயவனுக்கு பார்ப்பன கயமைத்தனம் அது எவ்வாறு தமிழரை அடிமைப்படுத்த எண்ணியது என்றெல்லாம் முழுமையாகத்தெரியவில்லை........... பெரும்பாலான பார்ப்பனர்கள் தம்மைத்தமிழராக பாவிப்பதில்லை .... எனக்கு பல பிராமண வகுப்பைச்சேர்ந்த நண்பர்கள் உண்டு அவர்களோடு நன்கு பழகியதாலேயே... அவர்களைப்பற்றிய எண்ணங்கள் இவ்வாறு தோன்றின..

நீங்கள் கூறுவது போல் பார்ப்பனர் மட்டுமல்ல .... ஏனைய உயர் சாதியினரும் சாதிக்கொடுமைகளுக்கு காரணம் ..... ஆனால் எல்லாமே பார்ப்பனர்கள் வகுத்துக்கொடுத்த சட்டங்களால் வந்த வினை... நான் கூட அப்படி ஆதிக்கம் செலுத்திய ஒரு சாதியில் தோன்றியதற்காக இன்றும் வெட்கப்படுகிறேன்.....

அதற்கு பெரியார் என்ன செய்ய முடியும் அவர் பார்ப்பனர்களை எதிர்த்தார் என்பதை விட பார்ப்பனீயத்தை எதிர்த்தார் என்பதே சரி..... ஏனைய மக்கள் செய்த சாதிக்கொடுமைகளும் பார்ப்பனீயத்தில் அடக்கம்...

அவர் பார்ப்பனர் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ளவில்லை..... ராஜாஜி அவர் நண்பராகெவே இருந்தார்.

தோள்சேலைப்போராட்டம் என்பது எனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்தில் 1800 களில் நடந்தது....

அப்போது தாழ்ந்த வகுப்பினர் தோளில் சேலை அணிவதை பார்ப்பனர் நேரடியாகவே தடுத்துள்ளனர்....

நீங்கள் சொல்வது சரிதான் படித்த தலைவர்கள் சாதாரண மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும் கவனமாக சொல்லி கொடுக்கவேண்டும்.

சாதி மேலாதிக்கத்தை தான் பார்ப்பனியம் என்று அழைப்பீர்கள் ஆனால்

பிராமணர்களை விடுங்கள் கள்ளரும், மறவரும் கூட தம்மைவிட குறைந்தவரோடு கலப்பு திருமணம் செய்து விடுவார்களா? அப்போது அது பார்ப்பனீயம் இல்லையா?

தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேர் பார்ப்பனீயத்தை தீவிரமாக கடைபிடித்துக்கொண்டே பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு பார்ப்பன கயமைத்தனம் அது எவ்வாறு தமிழரை அடிமைப்படுத்த எண்ணியது என்றெல்லாம் முழுமையாகத்தெரியவில்லை........... பெரும்பாலான பார்ப்பனர்கள் தம்மைத்தமிழராக பாவிப்பதில்லை .... எனக்கு பல பிராமண வகுப்பைச்சேர்ந்த நண்பர்கள் உண்டு அவர்களோடு நன்கு பழகியதாலேயே... அவர்களைப்பற்றிய எண்ணங்கள் இவ்வாறு தோன்றின..

வழமை போல எனக்கு என்ன தெரியும் என்று தான் சொல்லவருகின்றீர்களே தவிர, மற்றய விடயங்கள் பற்றி எவ்வித பதிலையும் காணோம்.

வழமை போல என் வாயை மூடவைக்க வழி தேடுகின்றீர்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

ராமசாமி பார்ப்பானப் பிரச்சனையாகக் கிளப்பிய பின்னர் தான் அவர்கள் அப்படி மாறிவிட்டிருக்கலாம். உங்களை எங்களுக்கு எதிரி என்று திட்டினால் நீங்கள் எதிரியாகவே நடக்கமாட்டீர்களா என்ன?

தூயவனுக்கு பார்ப்பன கயமைத்தனம் அது எவ்வாறு தமிழரை அடிமைப்படுத்த எண்ணியது என்றெல்லாம் முழுமையாகத்தெரியவில்லை........... பெரும்பாலான பார்ப்பனர்கள் தம்மைத்தமிழராக பாவிப்பதில்லை .... எனக்கு பல பிராமண வகுப்பைச்சேர்ந்த நண்பர்கள் உண்டு அவர்களோடு நன்கு பழகியதாலேயே... அவர்களைப்பற்றிய எண்ணங்கள் இவ்வாறு தோன்றின..

அதை தான் நாமும் சொல்கிறோம். அவனை பார்ப்பான் பார்ப்பான் என்று பிரித்துப் பார்க்காமல் அவர்களிடமும் தமிழ் பற்று ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். தமிழ் பற்றில் சிறந்த பிராமணர்கள் முன்னாளில் நிறைய இருந்து தான் இருக்கிறார்கள். இடையில் வந்த இந்த பிரிவினைக்கு இந்த பகுத்தறிவு வாதிகளும் ஒர் காரணம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே

என்று பாடிய ஞானசம்பந்தரும் பிராமணர் தான்.

பக்கத்தில் இருக்கும் மசூதியில் எங்கிருந்தோ வந்த அரபு மொழியில் தொழுகை செய்வது இவர்கள் கண்ணில் உருத்தவில்லை. தேவாலயங்களில் ஆங்கிலத்திலும் லத்தீனிலும் பூஜை செய்வது உருத்தவில்லை. வடமொழியை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள். தமிழில் பூசைகள் நிச்சயம் நடக்கட்டும். தமிழும் சைவமும் இரண்டறக் கலந்தவை. ஆனால் வடமொழியை நாம் எதிரியாக பார்க்கத் தேவை இல்லை.

Edited by vettri-vel

தூயவன் என்னை எதிரி என்று திட்டினால்...... நான் தூயவனுக்கு எதிரி ஆவேனே தவிர தமிழன்னைக்கு எதிரி ஆக மாட்டேன் அல்லவா....

பெரியார் தான் பார்ப்பனர்களை தமிழரிடமிருந்து பிரித்தார் என்பது எவரும் ஏற்றுக்கொள்ள முடியாதது...

ஈழத்தில் பார்ப்பனர்கள் இப்போதும் உண்டா??

:lol: நாம் இந்து ராமிடமும் நாராயணனிடமும் கேட்போம் .... நாமெல்லாம் தமிழ்த்தாயின் புதல்வர்கள் நீங்கள் ஏன் தமிழர் விரோத போக்கோடு செயல்படுகிறீர் என்று

காலம் பதில் சொல்லும்

தூயவன் என்னை எதிரி என்று திட்டினால்...... நான் தூயவனுக்கு எதிரி ஆவேனே தவிர தமிழன்னைக்கு எதிரி ஆக மாட்டேன் அல்லவா....

பெரியார் தான் பார்ப்பனர்களை தமிழரிடமிருந்து பிரித்தார் என்பது எவரும் ஏற்றுக்கொள்ள முடியாதது...

ஈழத்தில் பார்ப்பனர்கள் இப்போதும் உண்டா??

ஐயா வேலவரே இதோ நான் இருக்கிறேன். என்னை தமிழனாக ஒப்புக்கொள்ள உங்கள் பகுத்தறிவு இடம் தருமோ தராதோ. வேதங்களின் சரியான விதிகளின் படி நான் இப்போது சத்திரியன். புரிந்தால் சரி.

பிறப்பால் வருவதல்ல வருணம். அந்த பெயரை பாருங்கள். வர்ணம் - வர்ணம் என்றால் நிறம். நிறங்கள் மாறத்தக்கதல்லவா. அதை தான் வேதம் சொல்கிறது. வர்ணம் வாழ்க்கை முறைக்கேற்ப மாறிப்போய்விடும் என்றே வேதம் சொல்கிறது

அதென்ன' வேதங்களின் சரியான விதியின் படி நான் இப்போது சத்திரியன்' , புரியவில்லையே இன்னும் கொன்சம் விளக்கமாகச் சொல்லுங்களே நீங்கள் யார் என்று?

50 வருடங்களுக்குப் பிறகும் பெரியார் கொள்கைகளிலேயே ஆட்சி சுழலும் தமிழகத்தின் நிலையை பார்த்த பின்னும், தமிழீழத்தில் பெரியார் கொள்கையா?

தமிழன் தீமிதிப்பதை மூடப்பழக்கம் என்று சொன்னவர்கள் இன்று அதே ஏழைத்தமிழனை நடுத்தெருவில் தீக்குளிக்க வைக்கிறார்கள். கடவுளை வணங்க வேண்டாம் என்று சொன்னவர்கள், தங்கள் கால்களில் தமிழன் விழுந்து வணங்கும் அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முடிந்தால் தமிழகம் சென்று நான்கு மசூதி சுவர்களில் கடவுள் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் தமிழீழம் திரும்பி வந்(தால்)து பெரியார் கொள்கையை வளர்க்கலாம்.

தமிழீழத்தின் ஒரே கொள்கை எங்கள் தலைவர் பிரபாகரின் கொள்கை தான். வேறு எங்கிருந்தும் கொள்கை கடன் வாங்கும் வரட்சியில் விடுதலை புலிகள் இல்லை

பிரபாகரன் கொள்கை தான் என்ன? மருணிக்கும் ஒவ்வொரு போராளியும் மரணிப்பது சமதர்மத் தமிழீழத்திற்காக.சமதர்மம் வேண்டும் என்று போராடியவர் பெரியார்.அவரின் கொள்கைகள் பல இன்று தமிழீழத்தில் நடைமுறைப்படுத்தப்படுள்ளது என்றும் சொல்கிறீர்கள்.அவ்வாறெனில் பெரியாருடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் என்ன?

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் திராவிடம் என்ற சொல்லே தமிழர்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிகிறது. தமிழ் சொல்லே இல்லாத ஒரு சொல்லால் தமிழர்களை அடையாளப்படுத்த எவ்வளவு பகுத்தறிவு வேண்டும் என்றும் தெரிகிறது

உங்களிடம் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் திராவிடம் என்றால் என்ன? அது எந்த மொழி?

அதென்ன' வேதங்களின் சரியான விதியின் படி நான் இப்போது சத்திரியன்' , புரியவில்லையே இன்னும் கொன்சம் விளக்கமாகச் சொல்லுங்களே நீங்கள் யார் என்று?

நான் ஒரு தரம் சொன்னால் 100 தரம் சொன்னது போல். இனி நீங்கள் தான் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் :lol::o:D

நான் ஒரு தரம் சொன்னால் 100 தரம் சொன்னது போல். இனி நீங்கள் தான் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் :lol::o:D

இல்லையே நீங்கள் ஒரு தரம் சொல்வதே புரியவில்லை, விளக்கமாகச் சொல்லுங்கள் நீங்கள் எப்படி வேதாகம முறைப்படி சத்திரியன் ஆனீர்கள் என்று?

உங்களிடம் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் திராவிடம் என்றால் என்ன? அது எந்த மொழி?

திராவிடம் என்பது வடமொழி சொல்லின் திரிபு தான். இதற்கு பல்வேறு விளக்கங்கள் இருக்கலாம். எனக்கு தெரிந்த இரண்டு விளக்கங்கள்.

1. வடமொழியில் த்ர என்றால் போரில் திரத்தப்பட்டவர்கள் என்று ஓர் அர்த்தம் உண்டு. இதன் படி பார்த்தால் கைபர் கணவாய் ஊடாக அந்நியர் வந்த போது இந்தியாவின் பரம்பரை குடிகள் (இன்று திராவிடர்கள் என்று கூறப்படுபவர்கள்) மொகொஞ்ஜதாரோ, அரப்பா என்னும் உயர்ந்த நாகரீகங்களை கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே இருந்ததாகவும், கைபர் கணவாய் ஊடாக வந்த அந்நியர்களிடம் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும், அதனால் அந்நியர்கள் இந்தியாவின் ஆதி குடிமக்களை வென்றதாகவும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். இப்படி போரில் திரத்தப்பட்டவர்கள் (த்ர - இதுவே ஆங்கிலத்தில் திரிபடைந்து Throw எனப்படுகிறது.) த்ரவிட என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது

2. வட மொழியில் த்ரவ்ய (திரிபு: திரவியம்) என்பது செல்வத்தை குறிக்கும். நாடோடிகளாக வந்த அந்நியர்கள், மொகொஞ்ஜதாரோ, அரப்பா நாகரீகவாசிகளின் செல்வச்செழிப்பை பார்த்துவிட்டு திரவ்ய-அட (திரிபு: திரவியம் அடர்ந்த - செல்வம் மிகுந்தவர்கள்) என்று அழைத்ததால், அது காலப்போக்கில் திரிந்து த்ரவிட என்று ஆனதாகவும் சொல்வார்கள். அப்படி அழைக்கப்பட்ட இந்தியாவின் ஆதிக்குடிகள் தான் திராவிடர்கள். அப்போது அந்த மக்களிடம் பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கமும் இருந்ததாக சொல்வார்கள்.

உங்களுக்கு வேறு ஏதும் விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்

Edited by vettri-vel

திராவிடம் என்பது வடமொழி சொல்லின் திரிபு தான். இதற்கு பல்வேறு விளக்கங்கள் இருக்கலாம். எனக்கு தெரிந்த இரண்டு விளக்கங்கள்.

1. வடமொழியில் த்ர என்றால் போரில் திரத்தப்பட்டவர்கள் என்று ஓர் அர்த்தம் உண்டு. இதன் படி பார்த்தால் கைபர் கணவாய் ஊடாக அந்நியர் வந்த போது இந்தியாவின் பரம்பரை குடிகள் (இன்று திராவிடர்கள் என்று கூறப்படுபவர்கள்) மொகொஞ்ஜதாரோ, அரப்பா என்னும் உயர்ந்த நாகரீகங்களை கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே இருந்ததாகவும், கைபர் கணவாய் ஊடாக வந்த அந்நியர்களிடம் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும், அதனால் அந்நியர்கள் இந்தியாவின் ஆதி குடிமக்களை வென்றதாகவும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். இப்படி போரில் திரத்தப்பட்டவர்கள் (த்ர - இதுவே ஆங்கிலத்தில் திரிபடைந்து Throw எனப்படுகிறது.) த்ரவிட என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது

2. வட மொழியில் த்ரவ்ய (திரிபு: திரவியம்) என்பது செல்வத்தை குறிக்கும். நாடோடிகளாக வந்த அந்நியர்கள், மொகொஞ்ஜதாரோ, அரப்பா நாகரீகவாசிகளின் செல்வச்செழிப்பை பார்த்துவிட்டு திரவ்ய-அட (திரிபு: திரவியம் அடர்ந்த - செல்வம் மிகுந்தவர்கள்) என்று அழைத்ததால், அது காலப்போக்கில் திரிந்து த்ரவிட என்று ஆனதாகவும் சொல்வார்கள். அப்படி அழைக்கப்பட்ட இந்தியாவின் ஆதிக்குடிகள் தான் திராவிடர்கள். அப்போது அந்த மக்களிடம் பெண்ணை தெய்வமாக வணங்கும் பழக்கமும் இருந்ததாக சொல்வார்கள்.

உங்களுக்கு வேறு ஏதும் விபரம் தெரிந்தால் அறியத்தாருங்கள்

அவ்வாறு ஆதிக்குடிகளான திராவிட மக்களை அடக்கி ஆண்ட வந்தேறு குடிகள் யார்? அவர்கள் எவ்வாறு திராவிடரை ஆண்டனர்?

திரியின் நோக்கம் வெற்றிகரமாக திசை திருப்பப்படுகிறது..

அதற்கு பலியாகிவிடாதீர்கள் நண்பர்களே..!

அவ்வாறு ஆதிக்குடிகளான திராவிட மக்களை அடக்கி ஆண்ட வந்தேறு குடிகள் யார்? அவர்கள் எவ்வாறு திராவிடரை ஆண்டனர்?

ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியரின் நாட்டை அமெரிக்கா ஆக்கினர். அப்படித்தான். ஆனால் இந்தியாவில் இது 5000 வருடங்களுக்கு முன் நடந்ததால் இந்த இரண்டு இனங்களும் தங்கள் தனித்தன்மையை எப்போதோ இழந்துவிட்டன.

அதன் பின் பாரசீகத்தில் இருந்து மொகலாயர்கள், கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர், இது போன்ற எத்தனையோ படையெடுப்புகளின் பின்னால் நீங்கள் பார்க்கும் கலப்பு இனம் தான் இன்றைய இந்தியர்கள். கைபர் கணவாய் ஊடாக வந்தவர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகளை வென்றாலும் அந்த மக்களின் கலாச்சாரம் வந்த அந்நியர்களை வென்றதாகவே சொல்வார்கள். எத்தனை பழந்தமிழ் சொற்கள் தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றிருக்கின்றன என்று நீங்கள் வடமொழியை ஆழ்ந்து படித்தால் தெரியும். சிவ என்ற சொல் கூட தனித்தமிழ் சொல்தான் என்று என்னால் நிருபிக்க முடியும். அது பற்றி வேறு ஒரு களத்தில் உரையாடுவோம். வந்த மதமும் சொந்த மதமும் சேர்ந்து உருவானதே வேதங்கள்

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அழிக்க வில்லையே? அது எப்படி எல்லா இந்திய இன மக்களிடையேயும் பார்ப்பனர் வாழ்கின்றனர்? அது எப்படி தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் வாழ்கின்றனர்? அது எப்படி பார்ப்பனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களை உயர்ந்த சாதி என்று கூறிக்கொள்கின்றனர்? அது எப்படி அவர்கள் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதரம் அரசியல் என எல்லாத் துறைகளிலும் இந்தியௌபகண்டம் முழுக்க ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர்? அது எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வறுமையிலும் ஏழ்மையிலும் கல்வி அறிவில்லாமலும் வாழ்ந்து கொண்டிருந்தனர்? இவை எல்லாம் பெரியாரும் திராவிட அரசிலம் நிகழ முன்னர் இருந்த நிலமைகள்.ஆகவே இதற்கும் பெரியார் தான் காரணம் என்று கூற வராதீர்கள்.

உங்கள் கூற்றின் படியே வெளியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது அது தங்கள் மத்தைக் கொண்டு வருகிறது.பின்னர் அந்தக் கூட்டம் ஆதித் திராவிட மக்களை ஆண்டு கொண்டு இருக்கிறது.இதெல்லம் எப்படிச் சாத்தியம் ஆயிற்று?அந்த மக்களை அடக்கி ஆண்ட கோட்பாடு தான் என்ன?

இந்த இரண்டு இனங்களும் தங்கள் தனித்தன்மையை எப்போதோ இழந்துவிட்டன.

எந்த இரண்டு இனங்களும்?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒன்றும் விளக்கம் தெரியாமல் தான் இங்கே பலர் கருத்தெழுதுகின்றார்களோ? இவர்களின் பகுத்தறிவு என்னாகி விட்டது?

கோவில் இருக்கின்ற இடங்களில் எல்லாம் பிராமணர்கள் இருப்பார்கள் என்பது தெரியாத ஒன்றல்ல. ஆனால் மொழி என்பது குழுநிலை சார்ந்தது. அது பேசப்படுகின்ற வட்டாரத்தால் மட்டுமே அம்மொழியைக் காப்பாற்றிட முடியும்.

வெளியிலால் இருந்து வருகின்ற இனம் பழுப்பு நிறம் கொண்டது. அது இப்போதும் அரேபிய நாடுகளை வைத்துப் பார்த்தால் அறியக் கூடிய தகவல். ஆனால் இந்தியா முழுவதும் எப்படிப் பிராமணர்கள் இருககின்றாரோ, அவ்வாறே கறுப்பினத்தவர்களும் கலந்திருப்பதை வைத்துத் ஆதித் தமிழர்கள் பிரிந்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மொழியழிவு என்பது பேசுகின்ற வித்தில் தான் இருக்கின்றது. தமிழில் இருந்து பிறமொழிகள் தோன்றவில்லையா? இப்போது மதுரைத்தமிழ், திருநெல்வேலித் தமிழ் என்று அடுத்த பிரவசம் தயாரகிக் கொண்டிருக்கவில்லையா?

வெறியால் இருந்து வருகின்ற கூடட்ம் பலமானதாக இருந்தால் அதனால் நிரந்தரக் குடிகளை அடக்கி ஆழ்வதில் என்ன கஸ்டம் இருக்கின்றது. வெற்றிவேல் இதற்கு வேறு ஏற்கனவே பதிலளித்தபின்னரும் திருப்பவும் அதே கேள்வியா?

சிறிய எண்ணிக்கையான போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேர் ஆக்கிரமிக்க அவர்களின் பலம் தான் காரணமாக அமைந்தது போலத் தமிழர்களை ஆரியர்கள் ஆழ்வதில் கஸ்டமாக இருந்திருக்காது

கம்பகா இங்கிபிரிய பகுதியில் இரவு 9.30 மணியளவில் பாரிய இரண்டு குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சுரியன் எப் எம் இல் சொல்கிறார்கள்.

என்ன வெற்றி வேல் வீர வேல் பதிலையே காணோம்.

1) முதலில் வேதாகமப்படி நீங்கள் எப்படிச் சத்திரியர் ஆனீர்கள் என்று நீங்கள் இது வரை விளக்கவில்லை?

2) கைபர் கணவாய் ஊடாக வந்த ஒரு நாடோடிக் கூட்டம் எவ்வாறு இந்திய உபகண்டத்தில் இருந்த அரசுகளை எல்லாம் மண்டியிட வைத்தது?ஒல்லாந்த்தர், அலல்ஸ்ராண்டர்வரை எல்லோருக்கும் பேரரசுகள் இருந்தன படைப் பலம் ஆயுத பலம் இருந்தது.ஆனால் கைபர் கணவாயூடாக வந்த நாடோடிகளான ஆரியரிடம் இருந்தது என்ன? ஏன் அதனைச் சொல்லப் பின் நிற்கிறீர்கள்? :blink:

உங்கள் கூற்றின் படியே வெளியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது அது தங்கள் மத்தைக் கொண்டு வருகிறது.பின்னர் அந்தக் கூட்டம் ஆதித் திராவிட மக்களை ஆண்டு கொண்டு இருக்கிறது.இதெல்லம் எப்படிச் சாத்தியம் ஆயிற்று?அந்த மக்களை அடக்கி ஆண்ட கோட்பாடு தான் என்ன?

இந்த இரண்டு இனங்களும் தங்கள் தனித்தன்மையை எப்போதோ இழந்துவிட்டன.

முதலில் பார்ப்பணன் எப்படி சாதாரண மக்களோடு இருந்து பிரிக்கப்பட்டான் எண்று எப்பவாவது யோசித்து பார்த்து இருக்கிறீர்களா...???? இல்லை உங்களை போலதான் சாதாரண மனிதனாய் ஒரு பார்ப்பணன் இருந்து " கள்ளுத்தவறணைகளிலை உங்களோடை கள்ளுண்டு, மீன் சந்தைக்கு வந்து மீன் வாங்கி களியாட்டங்களிலை எல்லாம் உங்களோடை சேர்ந்து ஆடிப்பாடி இருந்தால் " அவனை கோயிலுக்கை போக விடுவீர்களா...??? இல்லை அப்பிடியான உங்களிலை ஒருவரை பூசை செய்ய விடுவீர்கள் எண்டுறீர்களா...???? சும்மா இருந்த ஐயன்மாரை அதை செய்யாதை இதை செய்யாதை எண்டு அடக்கி வச்சிட்டு இப்ப அவன் வந்து அடக்கிறான் எண்டுறதும் அவந்தான் எங்களை ஆட்டி படைக்கிறான் எண்டுறது, எங்களுக்கு திரணியே இல்லை எண்டுறதும் கேவலமாய் இல்லையா...???

பெரியார் எண்டுற இராம"சாமி" நாயக்கர், சாகும் போது கூட "நாயக்கர்" ராமசாமியாகத்தான் இறந்து போனார்... அவரை அப்பிடி கூப்பிடுறதை அவர் கடைசி வரைக்கும் வெறுக்க இல்லை... அப்படியான கௌரவத்தை அவர் விரும்பினார்.. ஏன் நாயக்கர் என்பது சாதி பெயர் என்பதை அறியாமலா இருந்தார் அவர் .... ??? அவர் நண்பராம் ஆசாரியர் (இராஜாஜி) ... அப்படைத்தான் கடைசிவரை அவரை அழைத்தாராம்.... பார்ப்பணன் எண்டும் ஆரியன் எண்டும் மேடைகளில் முழங்கியவர்.. அப்படியான ஆரியனை குறிக்கிற சொல்லான ஆச்சாரியார் எண்று அழைத்து அப்பிடி ஒரு கௌரவத்தை தன் நண்பனுக்கு வளங்கி வந்தார் என்பதை ஒருக்கா விளங்கப்படுத்துவீர்களா...???

என்ன வெற்றி வேல் வீர வேல் பதிலையே காணோம்.

1) முதலில் வேதாகமப்படி நீங்கள் எப்படிச் சத்திரியர் ஆனீர்கள் என்று நீங்கள் இது வரை விளக்கவில்லை?

2) கைபர் கணவாய் ஊடாக வந்த ஒரு நாடோடிக் கூட்டம் எவ்வாறு இந்திய உபகண்டத்தில் இருந்த அரசுகளை எல்லாம் மண்டியிட வைத்தது?ஒல்லாந்த்தர், அலல்ஸ்ராண்டர்வரை எல்லோருக்கும் பேரரசுகள் இருந்தன படைப் பலம் ஆயுத பலம் இருந்தது.ஆனால் கைபர் கணவாயூடாக வந்த நாடோடிகளான ஆரியரிடம் இருந்தது என்ன? ஏன் அதனைச் சொல்லப் பின் நிற்கிறீர்கள்? :blink:

முதலில் ஆரியர்கள் என்பதே உங்களின் மாயை என்பதை எப்போது உணர்ந்து கொள்வீர்களோ...? முருகனுக்கு பூசை செய்பவர்கள் கப்புறாளை மார் அவர்கள் எப்படி ஐயரானார்கள் என்பதை முதலில் தெரிந்து வைத்து இருங்கள்.... எங்களவர்களில் பூசாரியாக இருந்தவர்களை இப்போ எப்படி " பண்டாரம்" எண்று அழைக்கிறீர்கள்...???

முதலில் பார்ப்பணன் எப்படி சாதாரண மக்களோடு இருந்து பிரிக்கப்பட்டான் எண்று எப்பவாவது யோசித்து பார்த்து இருக்கிறீர்களா...???? இல்லை உங்களை போலதான் சாதாரண மனிதனாய் ஒரு பார்ப்பணன் இருந்து " கள்ளுத்தவறணைகளிலை உங்களோடை கள்ளுண்டு, மீன் சந்தைக்கு வந்து மீன் வாங்கி களியாட்டங்களிலை எல்லாம் உங்களோடை சேர்ந்து ஆடிப்பாடி இருந்தால் " அவனை கோயிலுக்கை போக விடுவீர்களா...??? இல்லை அப்பிடியான உங்களிலை ஒருவரை பூசை செய்ய விடுவீர்கள் எண்டுறீர்களா...???? சும்மா இருந்த ஐயன்மாரை அதை செய்யாதை இதை செய்யாதை எண்டு அடக்கி வச்சிட்டு இப்ப அவன் வந்து அடக்கிறான் எண்டுறதும் அவந்தான் எங்களை ஆட்டி படைக்கிறான் எண்டுறது, எங்களுக்கு திரணியே இல்லை எண்டுறதும் கேவலமாய் இல்லையா...???

பெரியார் எண்டுற இராம"சாமி" நாயக்கர், சாகும் போது கூட "நாயக்கர்" ராமசாமியாகத்தான் இறந்து போனார்... அவரை அப்பிடி கூப்பிடுறதை அவர் கடைசி வரைக்கும் வெறுக்க இல்லை... அப்படியான கௌரவத்தை அவர் விரும்பினார்.. ஏன் நாயக்கர் என்பது சாதி பெயர் என்பதை அறியாமலா இருந்தார் அவர் .... ??? அவர் நண்பராம் ஆசாரியர் (இராஜாஜி) ... அப்படைத்தான் கடைசிவரை அவரை அழைத்தாராம்.... பார்ப்பணன் எண்டும் ஆரியன் எண்டும் மேடைகளில் முழங்கியவர்.. அப்படியான ஆரியனை குறிக்கிற சொல்லான ஆச்சாரியார் எண்று அழைத்து அப்பிடி ஒரு கௌரவத்தை தன் நண்பனுக்கு வளங்கி வந்தார் என்பதை ஒருக்கா விளங்கப்படுத்துவீர்களா...???

முதலில் ஆரியர்கள் என்பதே உங்களின் மாயை என்பதை எப்போது உணர்ந்து கொள்வீர்களோ...? முருகனுக்கு பூசை செய்பவர்கள் கப்புறாளை மார் அவர்கள் எப்படி ஐயரானார்கள் என்பதை முதலில் தெரிந்து வைத்து இருங்கள்.... எங்களவர்களில் பூசாரியாக இருந்தவர்களை இப்போ எப்படி " பண்டாரம்" எண்று அழைக்கிறீர்கள்...???

தயா அது தான் நான் ஒன்றும் சொல்லவில்லையே, வெற்றி வேல் சொல்லியவற்றை அடிப்படையாக வைத்துத் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்,இடையில் நீங்கள் வந்து வேறு எதோ கதை சொல்லிக் கொண்டிருகிறீர்கள். நான் இங்கு உரையாடுவது வெற்றி வேலிடம் ஏனெனில் அவர் கொச்சம் ஆவது அறிவு பூர்வமாக வரலாற்று ஆதரங்களுடன் உரையாடக் கூடியவராக இருப்பதால்.

பார்ப்பனர் செய்யாத களியாட்டங்களா? மாமிசம் உண்பது சோமபானம் அருந்துவது முதல் தேவ தாசிகள் வரை,அவர்களை யார் பிரித்தார்? பார்ப்பனர் எங்கிற அடுக்கை உருவாக்கியது மனு ஸ்ரிமிதி .அதனையும் பெரியார் தான் செய்தார் என்று சொல்வீர்களா? அடப் போங்கப்பா முதலில் பெரியார் வாழ்ந்த காலத்தையும் அதன் முன்னர் இருந்த சமூக கட்டுமானத்தையும் தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.சும்மா உங்கள் வாயில் வந்ததை எல்லாம் போட்டு உளறுவது வரலாறு இல்லை.

மேலும் பெரியார் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிரி 'பார்ப்பனர்கள்' என்று அறியப்பட்ட மனிதர்களுக்கு அல்ல என்பதை எத்தினை தரம் தான் சொல்வது.பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்.அரசியலில் எதிர் நிலை எடுத்த ஆச்சாரியரிடம் தனிப்பட்ட நட்புப் பாராட்டினார்.அது மனித நேயம்.இங்கு சிலர் உமிழும் வெறி கொண்டு பேச்சுக்களைப்போல் அவர் பார்ப்பனர்களைக் கொல்லச் சொல்லவில்லை , பார்ப்பனீயம் என்னும் கோட்பாட்டிற்க்கு எதிராக அதனைத் தூக்கிப்பிடிக்கும் எல்லோருக்கும் எதிராகப் பேசினார்.

ஒருவர் பார்ப்பனக்குடும்பத்தில் பிறந்ததற்காக பார்ப்பனர் ஆவதில்லை அது போல் ஒருவர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்ததால் தமிழர் ஆவதில்லை.சாதிக்கோ இனத்திற்க்கோ தனைத்துவமான பெற்றோரிடம் இருந்து வரும் ஒரு மரபணுவோ கிடையாது.எல்லாம் மனிதர் குடுக்கும் அடையாளங்களும், கருத்து மற்றும் உணர் நிலைகள் தான்.

நீர் கொழும்பில் சிங்களவரான தமிழர்கள் எந்த இனம்.அப்படிப் பார்த்தால் பண்டார நாயக்காவும் தமிழர் தான் .யாழ்ப்பாணத்தவர்களில் எத்தினை பேர் கேரள மற்றும் தெலுங்கு அடியை உடையவர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?சாதியக் கட்டுமானத்திற்கு அடிப்படை இந்து மதம் அதனை உருவாக்கியது ஆரியப்பார்ப்பனர்கள்.இவற்றைத

தம்மை சத்திரியர் என்று ஒருவர் இங்கு எழுதிக் கொண்டே என்னை தமிழர் என்பீர்களா என்று கேட்கிறார்.இவர் தன்னைச் சத்திரியர் என்று சொல்வது எதனால்.தன் பிறப்பின் அடிப்படியில் தானே? அப்படியானால் இவர் பிறப்பின் அடிப்படையிலான சாதியத்தை ஏற்றுக்கொள்கிறார் தானே? இவர் எப்படித் தமிழராக முடியும்? மற்றவன் உன்னைத் தமிழனாக அடையாளம் காண வேண்டும் என்றால் நீ தமிழனாக இருக்க வேண்டாமா?தமிழனாகா உணர வேண்டாமா? தமிழனாக அரசியல் பேச வேண்டாமா? நாளும் இந்து ராம் எழுதுவதும் செய்வதுவும், அவர் போன்ற தமிழ் பிராமணர்கள் செய்வதுவும் எழுதுவதும் அவர்களை தமிழர்கள் என்று அடையாளம் காட்டுகிறதா?

நாரதர் அவர்களே,

வர்ணம் (சத்திரியன் etc) என்பது பிறப்பால் வருவது அல்ல. அது தொழில் சார் வகைப்படுத்தல். இது வேதங்களில் மிகத் தெளிவாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கும் சாதீயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சமூக கோளாறு. வேதம் மனிதர்களை வெள்ளாளன் என்றும் பல்லன் என்றும் பறையன் என்றும் பிரிக்கவில்லை. வேதம் ஓதுபவன் மட்டுமே வேதியன் (அந்தணன்). அப்படி அவன் வேதம் ஓதாத போது அவன் என்ன தொழில் செய்கிறானோ அந்த வர்ணத்திற்குள் சேர்கிறான் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது

மற்றும், வேதங்களில் ஒரு வர்ணம் மற்றொரு வர்ணத்தை விட தாழ்வானது என்று எங்கும் சொல்லப்படவில்லை. சூத்திரன் என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்றாவது உங்களுக்கு தெரியுமா? சூத்திரம் தெரிந்தவன் சூத்திரன். அதாவது தொழில்களை திறம்பட செய்யத்தெரிந்தவன் (skilled) என்று பொருள். இதில் எங்கே உயர்வு தாழ்வு வந்தது.

வேதங்களை பற்றி அவதூறூ சொல்லும் பலரும் வேதங்களை படித்ததே இல்லை (பெரியார் உள்பட). அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று அறிவிழந்து தடுமாறாமல், நேரம் கிடைத்தால், ஆர்வம் இருந்தால் வடமொழி கற்றுக்கொண்டு, வேதங்களை ஆராய்ச்சி பண்ணுங்கள். அப்போது தெரியும் வேதங்கள் உண்மையில் என்ன சொல்கிறது என்று. வேதங்கள் என்பது வெறுமனே இறைவனை பற்றி பேசுகிறது என்று நினைத்து விடாதீர்கள். அதில் மருத்துவம், இராசயனம், பௌதீகம் எல்லாம் அடங்கி உள்ளது. இராசயனத்திற்கு வேதியல் என்று தமிழ் பெயரே உண்டு.

நான் ஒரு தடவை டெல்லியில் வைத்து சந்தித்த ஜேர்மன் நாட்டு பேராசிரியர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் இந்தியாவில் தங்கி வடமொழி கற்று வேதங்களில் ஆராய்ச்சி செய்து கலாநிதி பட்டம் பெற்றவர், என்னிடம் சொன்னது, வேதங்களில் சொல்லப்படும் பல விஞ்ஞான இரகசியங்கள் இன்னும் இந்தியர்களுக்கு சரிவர தெரியவில்லை. நவீன இந்தியாவில் வேத ஆராய்ச்சிகள் போதுமான அளவு நடக்கவில்லை என்பதும் தான்.

அவர் மேலும் சொன்னது, வேத இராசயனத்தின் படி மிகச் சாதாரண மூலப்பொருள்களை வைத்தே சக்திவாய்ந்த பல ஆயுதங்கள் கூட செய்யலாம் என்பதே.

இது பற்றி நாம் மேலும் உரையாடுவதனால் நீங்கள் களத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வேறு திரி ஒன்று ஆரம்பியுங்கள். ஆதாரபூர்வமாகவே உரையாடலாம். ஒரு தலைப்பின் கருத்தை திசை திருப்பி நாம் இவ்வளவு தூரம் உரையாடியதே விதிமுறை மீறல் தான். நீங்கள் வேறு திரி ஆரம்பித்தால் நான் நிச்சயம் வந்து பதில் அளிப்பேன். அடுத்த சில தினங்கள் களத்திற்கு வர இயலாத தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. அதன் பிறகு வேறு திரியில் இது பற்றி நிறைய உரையாடுவோம்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.