Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

உண்மையான  குதிரைகளிலேயே தமிழர்கள்  பயணிக்கணும்

பொய்க்குதிரைகள் என்றால் இனி  தமிழினம் தாங்காது??

அதற்காக நாளைக்கு செத்து விழுந்துவிடும் நிலையிலுள்ள குதிரையில் அடுத்த தீபாவளியையும் பொங்கலையும் நம்பி பயணிக்க முடியாது கண்டீங்களே 

  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதற்காக நாளைக்கு செத்து விழுந்துவிடும் நிலையிலுள்ள குதிரையில் அடுத்த தீபாவளியையும் பொங்கலையும் நம்பி பயணிக்க முடியாது கண்டீங்களே 

ஒருபோதும்  அவர்களை தொடர  சொன்னதில்லை

ஆனால் தமிழ்  மக்கள் இன்னும்  அவர்களுக்கு வாக்களிப்பதற்கு  ஒரு காரணமுண்டு

அது குறைவான இழப்பு இவர்களால்  என்பது மட்டும்  தான்

ஆனால்  இந்த புதுக்குதிரைகளுக்கு எல்லைக்கோடு மற்றும்  இலக்கு எஐமானின்  காலடி  மட்டுமே..

Edited by விசுகு
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மார்ச் 2004

வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் - யோசேப் பரராஜசிங்கம்.

sep-5-4.jpg

"நான் எனது தேர்தல் பிரச்சாரங்களை புலிகளின் கட்டளைகளுக்கு இணங்கவே நடத்துவேன். ஒருங்கிணைந்த வடக்குக் கிழக்கு தாயகத்தின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தை உருவாக்கும்வகையில் எனது அரசியல் செயற்பாடு தொடரும். எனது குறிக்கோள்களிலிருந்து விலகி நடக்குமாறு என்னை நிர்ப்பந்தித்தால் நான் இத்தேர்தலில் இருந்து விலக்கிக்கொள்வேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வியளித்தார்.

"கடந்த சில தினங்களாக கிழக்கில் தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. நான் எனது நிலையினைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறேன். கருணாவின் பிளவின் பின்னர் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். என்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு நான் பதில் வழங்கி வருகிறேன். தந்தை செல்வாவின் வழியில் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்யும் நான் ஒருபோதும் அந்த வழியினை விட்டு விலகி அரசுக்குச் சார்பான நிலையினை எடுக்கமாட்டேன் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் எனது அசைக்கமுடியாத நிலைப்பாட்டினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் கூறியிருக்கிறேன். என்னால் பிரதேசவாதம் பேசமுடியாதென்பதை என்மீது அழுத்தம் செலுத்துபவர்களுக்கு உறுதிபடக் கூறிவிட்டேன். புலிகளால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடமை இருக்கிறது, அதனை நான் நிறைவேற்றப் போராடுவேன்". 

"எங்களை கொக்கட்டிச்சோலைக்கு வரச்சொல்லி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மட்டுமே இனிமேல் பேசவேண்டும், தமிழரின் தாயகம், உரிமைகள் பற்றிப் பேசக்கூடாதென்று நிர்ப்பந்தம் தெரிவித்தார்கள். என்னுடன் வந்த பலர் அதனைப் பயத்துடன் ஏற்றுக்கொண்டபோதும், என்னால் அவர்கள் சொல்வதை ஏற்றுகோள்ளமுடியாதென்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டேன். நான் தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் என்றும், இணைந்த வடக்குக் கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்".

"என்னுடன் இருந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் அவர்கள் சொல்வதற்கு இணங்கியிருக்கலாம். ஆனால், அது அவர்களதும் விருப்பமாக இருந்ததா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை". 

"திருகோணமலை தேர்தல் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் என்கிற வகையில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னைத் தடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன". 

"கிழக்கில் எனது நிலைப்பாட்டினை முன்வைத்து நான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வேன். அவர்கள் என்னைத் தடுக்கும்வரை இது தொடரும்".

"கிழக்கின் மக்களும் அரச அதிகாரிகளும் இணைந்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கே ஆதரவாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. அவர்கள் பலருடன் பேசியதிலிருந்து நான் இதனைப் புரிந்துகொண்டேன்". 

"நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்யவில்லை, எவரையும் தாக்கிப் பேசவில்லை. தமிழ்த்தேசியம் மீதான எனது விருப்பினால் எனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறேன். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசியதனால் இலங்கை ராணுவத்தாலும், உளவுப்பிரிவினராலும் பலமுறை அச்சுருத்தப்பட்டேன்". என்றும் அவர் கூறினார். 
 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மார்ச் 2004

மட்டக்களப்பு மாகாணத்தைச் சாராத பிற மாவட்ட மாணவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை மத்தியிலும்  திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம்

Eastern University closed for second, third year students | Daily News

கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் இரண்டாம் தவணைப் பாடங்கள் ஆரம்பமாகவிருப்பதால் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக தமது தங்குமிடங்களுக்கும், வாளாகங்களுக்கும் மீளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பல்கலைக் கழகத்தினுள் புகுந்த கருணா குழுவினரால் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயிர் அச்சம் காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள எதனையும் செய்யாது நிர்வாகம் இந்த திடீர் முடிவினை எடுத்திருக்கிறது. தமது உயிருக்கான உத்தரவாதத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும்வரை தாம் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்குத் திரும்புவதுபற்றி நினைக்கமுடியாது என்று அம்மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

அதேபோல கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கருணா குழுவால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய தமிழ் மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தம்மால் கடமைகளுக்குத் திரும்பமுடியாதென்று கூறியிருக்கின்றனர்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராத மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கரிசணை காட்ட விரும்பாத கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தனது செயற்பாடுகளைத் தொடர்வதிலும், பரீட்சைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, மார்ச் 2004

கருணா குழுவின் அடாவடித்தனத்தை கண்டிக்கும் களுவாஞ்சிக்குடி மக்கள்

 

வன்னியிலிருக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை எச்சரித்தும், தேசியத் தலைமையிடமிருந்து தம்மை விலத்திக்கொள்ளுமாறும் கருணா குழு களுதாவளை - களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் விநியோகித்துவரும் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதிமக்கள் கிழித்தெறிந்துள்ளனர். கிழக்கில் இயங்கிவரும் நாசகார துரோகக் கும்பலின் அழுத்தத்திற்குப் பயந்து தாம் தேசியத் தலைமைக்கெதிரா ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்றும் இம்மக்கள் கூறியுள்ளனர். 

மக்களின் செயலினால் ஆத்திரமடைந்த கருணா குழு, சுதா என்னும் முக்கிய உறுப்பினர் தலைமையில் இப்பகுதிக்கு வந்து மக்கள்மேல் தாக்குதலில் ஈடுபட்டுச் சென்றிருக்கிறது.

கருணா குழுவின் தேசியத் தலைமைக்கெதிராகச் செயற்படுமாறு கிழக்கு மக்களைக் கோரும் துண்டுப்பிரசுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆரையம்பதி பகுதியில் பலவிடங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

கருணா குழு தொடர்ச்சியாக இப்பகுதியில் தினக்குரல் பத்திரிக்கையினைத் தடைசெய்து வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இப்பத்திரிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் மக்கள் முன்பாக கருணா குழுவினரால் எரிக்கப்பட்டும், விநியோகஸ்த்தர்கள் துப்பாக்கி முனையில் அச்சுருத்தப்பட்டும் இருக்கும் நிலையில் இப்பத்திரிக்கை சிலவிடங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. 

இதேவேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்திருக்கும் சைக்கிள் திருத்தும் நிலையம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கிறது. கருணா குழுவுக்கு வெளிப்படையான ஆதரவாளராகச் செயற்பட்ட இந்த சைக்கிள் நிலைய உரிமையாளர் பார்த்திருக்க இச்சம்பவம் நடந்திருக்கிறது. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

ஒருபோதும்  அவர்களை தொடர  சொன்னதில்லை

ஆனால் தமிழ்  மக்கள் இன்னும்  அவர்களுக்கு வாக்களிப்பதற்கு  ஒரு காரணமுண்டு

அது குறைவான இழப்பு இவர்களால்  என்பது மட்டும்  தான்

ஆனால்  இந்த புதுக்குதிரைகளுக்கு எல்லைக்கோடு மற்றும்  இலக்கு எஐமானின்  காலடி  மட்டுமே..

ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, 
மக்களில்  புரட்சி,போராட்டம்  வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக  உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம்
புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது  என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், 
ஆனால் இந்த பழுத்து  போன திருட்டு  குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை  நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை  முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை  குருட்டு,திருட்டு  குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, 
மக்களில்  புரட்சி,போராட்டம்  வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக  உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம்
புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது  என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், 
ஆனால் இந்த பழுத்து  போன திருட்டு  குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை  நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை  முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை  குருட்டு,திருட்டு  குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்

 

உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை

ஆனால் இந்த  இருபக்கத்தையும்  தாண்டி எமது மக்களுக்கான கனவும் கொண்டு  செல்லப்படணும் என்பதே  அவா...

நன்றி

Edited by விசுகு
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004

கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள்

கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


"தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்".

"தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்".

"கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.

புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ.

"அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே"

"கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்"

"தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்".

"மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்".

"கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்".

"மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை  அனுபவித்துவருகிறார்". 


" தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்".

" தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக  கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்".

“எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம்.

“எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்".

“தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

“மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்"

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004

யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது. 

தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004

கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன

கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது. 

பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர்.

"பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்ச் 2004

யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டக்களப்பிலிருந்து உடனே வெளியேறுமாறு கருணா அறிவிப்பு

இன்று மட்டக்களப்பின் சகலவிடங்களிலிம் இருந்து யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடனேயே மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு துரோகி கருணா எச்சரித்திருப்பதால் மட்டக்களப்பில் அசாதாரணமான அச்சநிலையும் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். 

கருணா துணை ராணுவக்குழுவுடன் இணைந்து சிங்களப் பொலீஸாரும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை உபயோகித்து யாழ்ப்பாணத்தமிழர்களை 12 மணிநேரத்திற்குள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறும் அல்லது விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தமிழர்களை கடுமையாக விமர்சித்த துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டதோடு, "யாழ்ப்பாணத்தமிழர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிணிகள், சாபக்கேடுகள்" என்றும் விழித்திருந்தன. 

மட்டு நகரில் பல்லாண்டுகளாக அரச அதிகாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கானோரை சகல அசையும், அசையா சொத்துக்களையும் அப்படியே விட்டு விட்டு வெறும் 500 ரூபாயோடு மட்டும் 12 மணிநேர அவகாசத்தினுள் வெளியேறவேண்டும் என்கிற எச்சரிக்கை நகர் முழுதும் கருணா குழுவினராலும், சிங்களப் பொலீஸாரினாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004

யாழ்ப்பாணத் தமிழர்களைப் பலவந்தமாக கருணா வெளியேற்றியதையடுத்து மட்டுநகரில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தன

மட்டுநகர், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை ஆகியவிடங்களில் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தமிழருக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படுள்ளன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை கருணா 12 மணிநேர அவகாசத்தில் விரட்டியடித்ததையடுத்து பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் உயிர் அச்சத்தில் வடக்கு நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள். 

முதல் நாளில் மட்டும் குறைந்தது 5000 யாழ்ப்பாணத் தமிழர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் நோக்கிப் பயணித்ததாக மட்டக்களப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் அறியத் தந்தார்.

யாழ்ப்பாண தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கல்வியங்காட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான ஆடை நெசவு ஆலையும் மூடப்பட்டிருந்தது. 

தமக்கு கருணா குழு கொலை அச்சுருத்தல் விடுத்துவருவதால் தாம் வெளியேறுகிறோம் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பொலீஸிடம் கொடுத்த முறையீடுகளைப் பொலீஸார் கண்டுகொள்ளவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர்.


பாண்டிருப்பில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்திவந்த தர்மரத்தினம் எனும் வர்த்தகர் அவரது கடையிலிருந்த அனைத்துப் பண்டங்களும் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரும் அவரது குடும்பமும் கடத்திச் செல்லப்பட்டு, "இனிமேல் இங்கிருந்தால் உங்களைக் கொல்வோம்" என்று கருணா குழுவினரால் எச்சரிக்கப்பட்டு உடுத்திருந்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு செங்கலடி ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணத்தமிழர்களுக்குச் சொந்தமான பெருமளவு வீடுகளும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும் சூரையாடப்பட்டபின்னர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மட்டக்களப்பில் மீதமிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து அன்றைய பொழுதுகளைக் கழித்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று புலிகள் வேண்டுகோள்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் வடபகுதியைச் சேர்ந்த தமிழர்கள் கருணா குழுவின் கொலை மிரட்டலினையடுத்து ஆயிரக்கணக்கில் வெளியேறிவரும் நிலையில், அவர்களை வெளியேற வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.


கருணாவின் முறைகேடான நடத்தைகளுக்காக புலிகளியக்கம் அவரை வெளியேற்றியிருக்கிறது. தனிப்பட்ட ஆளாக இருக்கும் கருணா மட்டக்களப்பு அம்பாறை புலிகள் என்கிற பெயரில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருவதோடு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கெதிரான அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களை துன்புறுத்தி விரட்டிவரும் கருணா, அம்மக்களின் உடமைகளை அவரது துணை ராணுவக் குழு கொண்டும், இன ஒற்றுமையினைச் சிதைக்கும் சக்திகளின் துணைகொண்டும் சூரையாடி வருகிறார்.

கருணாவினால் வெளியிடப்படும் எந்த அறிக்கையினையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழினத்தின் ஒரு பகுதியினருக்கெதிராக கருணாவினால் இன்று மேற்கொள்ளப்படும் கட்டாய சொத்துப் பறிமுதல்கள், சொத்தழிப்புக்கள், கடத்தல்கள் ஆகியவை மனித நாகரீகத்திற்கெதிரான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் என்று நாம் கண்டிக்கிறோம்.  கருணாவினால் விடுக்கப்படும் எந்த அறிவுருத்தல்களையும் செவிமடுக்கவேண்டாமென்றும், தமது வாழிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வடபகுதித் தமிழர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் அயலவர்கள் அத்தமிழர்களின் பாதுகாப்பில் கவனமெடுக்கவேண்டும் என்றும், உதவிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.  என்றும் அவ்வறிக்கை கோரியது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, சித்திரை 2004

யாழ்ப்பாண வைத்தியர்களை கருணா குழு விரட்டியதால் மட்டக்களப்பு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களை துணை ராணுவக்குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பலவந்தமாக விரட்டியதனை அடுத்து ஏனைய வைத்தியர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். ஆறு வைத்திய நிபுணர்கள் அடங்கலாக பதினொரு யாழ்ப்பாணத் தமிழ் வைத்தியர்கள் கருணாகுழுவினரால பலவந்தமாக விரட்டப்பட்டு பொலீஸ் காவலுடன் மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு வெளியேற்றப்பட்டனர். செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் இவ்வாறு கருணா குழுவினரால விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களை வந்தடைந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு நகரிலிருந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையொன்று கருணா ஆதரவாளர்களால் சூரையாடப்பட்டபின்னர் தாக்கிச் சேதமாக்கப்ப்ட்டதாக மட்டக்களப்பு நகரப் பொலிஸார் பதிவுசெய்திருக்கின்றனர்.

கருணா குழுவெனும் துணை ராணுவக்குழுவினரின் பிரதேசவாத சுத்திகரிப்பினைக் கடுமையாகச் சாடிய மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் ஒருவர், "கருணா குழுவினரின் மிலேச்சத்தனமான இந்த பிரதேசவாத சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உண்மையிலேயே பாதிக்கப்படப்போவது மட்டக்களப்பு வாழ் மக்களே அன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்ல" என்று கூறினார்.   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வாகரை நோக்கி முன்னேற்றம்

vaharaiMapV.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வெருகல் ஆற்றினைக் கடந்து வாகரை நோக்கி முன்னேறிவருவதாக அப்பகுதியிலிருந்து வாழைச்சேனையை வந்தடைந்த வாகரை வாசிகள் தெரிவித்தனர். விசேட தாக்குதல் அணிகள் தலைமைதாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் தாக்குதல் அணிக்கு பின்புலத்திலிருந்து ஆட்டிலெறிச் சூட்டாதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. கருணா - துணைராணுவக் குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளின்பொழுது, இக்குழுவின் வாகரைப் பொறுப்பாளர் ஜெயம் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பால்ச்சேனைப் பகுதியில் புலிகள் தற்போது தமது நிலைகளை அமைத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணா குழு என்றால் என்ன? (உண்மையின் தரிசனம்); TMVP Karuna group Coln Karuna  - YouTube

கருணா துணை ராணுவக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம்

கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான நடவடிக்கை தொப்டங்கியதிலிருந்து இதுவரையில் 300 இற்கு அதிகமான இளவயதுப் போராளிகள் சண்டையிடாது புலிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஆற்றின் தென்பகுதியிலும், வாகரைப்பகுதியிலும் கருணாவினால் பலவந்தமாக  நிலைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அணிகளின் தளபதிகளில் ஒருவர் இச்சிறுவர்கள் பற்றி கூறுகையில், "அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டிருக்கிறோம், விரைவில் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதேவேளை கருணா துணை ராணுவக்குழுவினரால் வாகரைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் செலுத்திகளும் சரணடைந்த போராளிகளால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, வாகரையிலிருந்து 12 கிலோம்மீட்டர்கள் தொலைவில் கடலையண்டி அமைந்திருந்த கருணாவின் பாரிய தளம் ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கதிரவெளிப்பகுதியில் முகாமிட்டிருந்த கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர் "மார்க்கானின்" நிலைபற்றி இதுவரை தகவல்கள் வரவில்லை.

இதேவேளை கருணாவின் சகோதரரான, துணை ராணுவக்குழு முக்கியஸ்த்தர் ரெஜி இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா துணை ராணுவக்குழுவின் வாழைச்சேனைக்கு வடக்கேயான மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பிரதேசத்தின் பொறுப்பாளராக இவர் கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல்களின் பொழுது தப்பிவந்த துணை ராணுவக் குழுவினருடன் இவரும் சேர்ந்து காலையில் வாகரைப் பகுதியை வந்தடைந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை நடந்த மோதல்களில் புலிகள் தரப்பிலும், துணை ராணுவக் குழு தரப்பிலும் மொத்தமாக எட்டுப்பேர் மரணமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.


காயப்பட்ட துணைராணுவக்குழுவினரில் 7 பேர் வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் இருவர் மரணிக்க, மீதிப்பேரை கருணா குழு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ராணுவத்தினரின் உதவியுடன் கொண்டுசென்றதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர்.

இதேவேளை வாகரைப்பகுதியில் நடந்த மோதல்களில் காயப்பட்ட 5 பெண்கள் அடங்கலாக 8 துணை ராணுவக்குழுவினர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.


 

Edited by ரஞ்சித்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004

கருணா துணை ராணுவக் குழு மீதான நடவடிக்கையினை புலிகளின் "ஜெயந்தன்" படைப்பிரிவே முன்னின்று நடத்தியது

What was the Jayanthan Brigade? - Quora

புலிகளின் மிகச்சிறந்த தாக்குதல் அணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியே கருணா துணைராணுவக்குழுவுக்கெதிரான பல்முனைத் தாக்குதலை முன்னின்று நடத்தியது. ஜெயந்தன் படையணியின் நடவடிக்கைக்கெதிராக துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர்களான ஜிம் கெலித் தாத்தா மற்றும் ரொபேர்ட் ஆகியோர் நடத்த முயன்ற எதிர்த்தாக்குதல்களை புலிகள் மிகவும் வெற்றிகரமாக முறியடித்து, துணைராணுவக்குழுவுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 

 மட்டு - அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதி ரமேஷ் மற்றும் ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாந்தன் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து மாங்கேணி வரையான நீண்ட கரையோரப் பகுதியினைக் கைப்பற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்துவருகிறது.

Lawfare - Update - US-Lanka Blog

தளபதி ரமேஷ்

புலிகளின் விசேட படையணிகளின் திடீர் தாக்குதல்களில் நிலைகுலைந்துபோன துணைராணுவக் குழுவினர் குறைந்தது எட்டு 120 மி மீ 
 மோட்டார்களுடன் முன்னேறிவந்த புலிகளின் அணிகளிடம் சரணடைந்தனர்.

ஆரம்பத்தில் கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தளபதி பிரபாவேஇத்தாக்குதல்களில் பாலைச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்ட புலிகளின் கட்டளை மையத்தினை வழிநடத்தினார். 

புலிகளின் ஜெயந்தன் படையணி பெரும்பாலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் போராளிகளைக் கொண்டே அமைக்கப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

Thandikulam–Omanthai offensive - Tamil Desiyam - Quora

தாண்டிக்குளம் - ஓமந்தை நடவடிக்கைகளில் புலிகள்

 

இலங்கை ராணுவத்தின் மிகப் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் நடவடிகையான ஜெயசிக்குருவிற்கு எதிராக ஜெயந்தன் படையணி 1997 இலிருந்து 1999 வரை போரிட்டது. 1999 இறுதிப்பகுதியில் வன்னியின் தென்புறத்தே ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சிங்கள ராணுவத்தை தாக்கியழித்து, பின்வாங்கச் செய்ததில் ஜெயந்தன் படையணியே முன்னின்றது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன், சிங்கள ராணுவத்தின் பெருந்தளங்களில் ஒன்றான ஆனையிறவுத் தளம் மீதான புலிகளின் வெற்றிகரமான தாக்குதலிலும்  ஜெயந்தன் படையணி கணிசமான பங்கினைச் செலுத்தியிருந்தது. 

முன்னேறிவரும் புலிகளின் அணிகளுக்கெதிராக எதிர்த்தாக்குதல்களை உப்பாறு மற்றும் கண்டலடி , பனிச்சங்கேணிப் பகுதிகளூடாக நடத்த கருணா துணைராணுவக் குழு முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகதின் நாட்காட்டி : நாள் 10, சித்திரை 2004

வாகரைப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த புலிகள்

சனிக்கிழமை மாலையுடன் வெருகல் ஆற்றிற்கு தெற்கே அமைந்திருந்த வாகரைப் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின்கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டுவந்துள்ளனர். புலிகளின் ஜெயந்தன் படையணி இப்பகுதியினுள் நுழையும்பொழுது கருணா குழுவினரிடமிருந்து எதுவித எதிர்ப்பும் இருக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வாகரையைத் தமது கட்டுப்பாடின்கீழ் கொண்டுவந்துள்ள புலிகள் அப்பகுதியில் தமது நிலைகளைப் பலப்படுத்திவருவதோடு, பனிச்சங்கேணி கரையோரப்பகுதிகளையும் அதனோடு அண்டிய பிரதேசத்தையும் பலப்படுத்திவருகின்றனர்.

புலிகளின் ராணுவ நடவடிக்கை தொடங்கிய நாட்களில் அப்பகுதியினை விட்டு வெளியேறிய மக்கள், அப்பகுதி மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர்.

தமிழர் தாயகத்திலிருந்து துரோகி கருணாவை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம் - விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்குவதாக அறிவித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கெதிரான ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பணிமனை சார்பாக அதன் பேச்சாளர் தயா மாஸ்ட்டர் தெரிவித்தார்.


புலிகளின் அறிக்கையின் விபரங்கள் வருமாறு,

"புலிகளியக்கத்திலிருந்து தனித்துச் செயற்படப்போவதாக அறிவித்திருக்கும் கருணா தலைமைக்கெதிராகவும், மக்களுக்கெதிராகவும் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.தமிழ்த் தேசியத்திற்கெதிரான சக்திகள் அவரின் பின்னால் நிற்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கருணாவின் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரும் முகமாக நாம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பதோடு கிழக்கில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையினையும், அசெளகரியங்களையும் களைய முயன்றுவருகிறோம். ரத்தம் சிந்துதலையும், உயிரிழப்புக்களையும் எம்மால் முடிந்தவரையில் தவிர்க்கும் முகமாக எமது நடவடிக்கைகள் அமையப்பெற்றிருக்கின்றன.

தன்னால் பலவந்தமாக இணைக்கப்பட்ட அப்பாவிச் சிறார்கள் மீண்டும் தமது பெற்றோருடன் இணைவதை கருணா தொடர்ச்சியாகத் தடுத்து வருவதுடன், புலிகளியக்கத்தில் மீள இணையவிரும்பும் போராளிகளையும் தடுத்துவருகிறார்.

 கருணாவின் சுயநலச் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் போராளிகளையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கிருக்கிறது. ஆகவே, கருணாவை எமது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்திருக்கிறோம்.

கருணாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த பல போராளிகள் எம்முடன் வந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள். தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கும் முகமாக இப்போதுவரை கருணாவுடனிருக்கும் ஏனைய போராளிகளையும் அவரை விட்டு விலகி எம்முடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

கருணாவின் நாசகார துரோகச் செயற்பாடுகளுக்குல் பலியாகும் முன்னம் தமது பிள்ளைகளைப் பெற்றோர் கருணாவிடமிருந்து பிரித்து அழைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்".

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004

அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் தென்பகுதிகள் நோக்கி முன்னேறிவரும் புலிகள்


அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டினுள் இருந்த பகுதிகளை புலிகள் சனியிரவு விடுவித்தனர். மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கருணாவின் பிரதான தளமான கஞ்சிகுடிச்சியாறு புலிகளின் அணிகளால் தளபதி ஜனார்த்தனன் தலைமையில் மீட்கப்பட்டது. இதேவேளை புலிகளின் விசேட படையணிகள் மட்டக்களப்பின் தென் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிவருவதுடன், அப்பகுதிகளில் தமது நிலைகளைப் பலப்படுத்தியும் வருகின்றன.

திருக்கோயில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்த கருணா குழுவினர் புலிகள் அப்பகுதிநோக்கி முன்னேறியபோது எதுவித எதிர்ப்புமின்றி விலகிச் சென்றதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

தளபதி ஜனார்த்தன் தலைமையிலான படையணி அம்பாறை மாவட்டத்தில் இன்னும் கருணாவின் கீழிருக்கும் போராளிகளை அவரிடமிருந்து விலகிச் செல்லுமாறு அறிவித்து வருகின்றனர். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004

கருணாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பல போராளிகள் மீட்பு, ஆயுதங்களைக் கைவிட்டு பின்வாங்கிய கருணா குழு 

வாகரையில் கருணா குழு மீது நடத்தப்பட்ட கொமாண்டோ ரகத் தாக்குதல்களில் பலபோராளிகளை புலிகள் விடுவித்ததுடன், பல ஆயுதங்களையும் மீட்டிருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 120 மி மீ எறிகணைச் செலுத்திகள் மூன்று, அவற்றுக்கான எறிகணைகள் 1,000, 82 மி மீ எறிகணைச் செலுத்திகள் 4, அவற்றுக்கான எறிகணைகள் 370, பெருமளவு 5 மி மீ மோட்டார்கள், 50 கலிபர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 2 மற்றும் 300 சிற்றாயுதங்கள் ஆகியவை அடங்குகின்றன.


கருணாவின் ஊதுகுழலாகச் செயற்பட்டுவரும் தமிழ் அலை இணையத்தின் செய்திப்படி குறைந்தது 450 போராளிகள் வாகரைப்பகுதியில் கருணா குழுவை விட்டு வெளியேறியிருக்கின்றனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தளபதிகள் ஆதீஸ்வரன் மற்றும் வினோ  தலைமையிலான 200 போராளிகள் கருணாவை விட்டு வெளியேறி மீள புலிகளுடன் இணைந்திருப்பதாக தமிழ் அலை இணையம் மேலும் தெரிவிக்கிறது.

வாகரையின் வீழ்ச்சியோடு பெருமளவு போராளிகள் கருணா குழுவினை விட்டு வெளியேறி வருவதுடன், இவர்களில் பலர் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்பை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கருணா குழுவின் வீழ்ச்சியை வரவேற்றிருக்கும் வாகரை மக்கள் அப்பகுதியில் தங்கியிருக்கும் புலிகளுக்கு தொடர்ச்சியாக உதவிவருகின்றனர்.

வாகரை மீதான புலிகளின் ராணுவ நவடிக்கை புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஷினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததுடன், தளபதிகள் பிரபா மற்றும் ஜெயாந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகதின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2004

மட்டக்களப்பு நகர் நோக்கி முன்னேறும் புலிகள்

புலிகளின் தாக்குதல் அணிகள் மட்டக்களப்பு நகரின் தென்மேற்குப் பகுதி நோக்கி திங்களன்று முன்னேறி வந்து  நிலைகொண்டிருக்கின்றன. பல பகுதிகளிலிருந்து முன்னேறிவந்த புலிகளின் அணிகள் கொக்கட்டிச்சோலையினை  திங்கள் பிறபகல் தமது பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். கருணாவின் ஊதுகுழலாகச் செயற்பட்டுவந்த தமிழ் அலை காரியாலயமும் அச்சகமும் புலிகளின் அரசியல்த்துறையினரால் பொறுப்பெடுக்கப்பட்டன. கருணாவின் பிரதான தளமாகச் செயற்பட்ட மீனகம் முகாமிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண் பெண் போராளிகள் வெளியேறி தமது வீடுகள் நோக்கிச் செல்வதாகத் தெரியவருகிறது. 

மட்டக்களப்பின் பிரதான பகுதிகள் நோக்கி முன்னேறிவரும் புலிகளுடன் இணைந்துகொள்ளுங்கள், இல்லையேல் உங்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று தமது பிரிவுத்தளபதிகள் தம்மிடம் அறிவுருத்தியதாக இப்போராளிகள் தெரிவிக்கின்றனர்.

karuna3.jpg

கருணாவின் பிரச்சார நிலையம் - தேனகம், கரடியனாறு


கருணாவின் தளங்களில் ஒன்றான தேனகம் மண்டபத்திற்குச் சென்றிருந்த புலிகளின் தளபதியொருவர் அத்தளம் முற்றாகக் கைவிடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவித்தார். தேனகம் மண்டபமே கருணாவின் பிரதான தொடர்பாடல் மற்றும் பிரச்சார நிலையமாக விளங்கியதுடன் இங்கிருந்தே அவர் பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு தனது துரோகம் பற்றிய நியாயப்படுத்தலை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கொக்கட்டிச்சோலைப் பகுதியைக் கைப்பற்றியுள்ள புலிகளின் அணிகளின் பேச்சாளர் தெரிவிக்கையில் கரடியனாறு மற்றும் தேனகம் பகுதிகளை திங்கள் மாலையுடன் தமது பூரண் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிடுவோம் என்று கூறினார். தமது முன்னேற்ற நடவடிக்கைகளின்பொழுது எதுவித எதிர்ப்பும் இருக்கவில்லையென்றும், தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள பல தளபதிகள் போராளிகள் சகிதம் மீளவும் புலிகளியக்கத்தில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்தும் கருணாவின் அரசியல்த் தரகர்களாகச் செயற்பட்ட பலர் தற்போது அவர்களின் காரியாலயங்களை கைவிட்டு விட்டு வெளியேறிவிட்டதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2004

தனது மறைவிடத்திலிருந்து கருணா தப்பியோட்டம்

புலிகளியக்கத்திலிருந்து தனித்தியங்குவதாகக் கூறிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது மறைவிடத்திலிருந்து தனது நெருங்கிய சகாக்கள், மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் தப்பியோடிவிட்டதாக ஆரம்பத்திலேயே கருணாவைவிட்டு வெளியேறிய கரிகாலன் தெரிவித்தார். கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தப்பியோடிய கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் பொலொன்னறுவை மாவட்டத்திலுள்ள சிங்கள ராணுவ முகாமில் அடைக்கலமாகியிருப்பதாகத் தெரியவருகிறது. கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பும், அடைக்கலமும் வழங்குகின்றதா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு ராணுவம் நேரடியான பதிலை வழங்காது, விசாரித்துவிட்டு சொல்கிறோம் என்று கூறியிருக்கிறது.

தனது சகோதரர் உற்பட பலர் கருணாவின் பிடிக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கரிகாலன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் புலிகள் இயக்க அரசியல்த்துறைப் போராளி கெளசல்யன் உடனடியாகத் தனது பயணத்தை இடைநிறுத்திக்கொண்டு கிழக்கில் தனது கடமைகளைப் பொறுப்பேற்று கருணா குழுவிலிருந்து மீள் இயக்கத்தில் இணையும் போராளிகளை பொறுப்பேற்கவும், கிழக்கில் மீண்டும் புலிகளது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கருணாவினால் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மீனகம் முகாம் தொடர்ந்தும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரிவித்த புலிகள், கருணாவின் ஊதுகுழலாக இதுவரை செயற்பட்ட தமிழ் அலை இணையம் மீளவும் தனது வழமையான செயற்பாட்டினைத் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். 

கருணாவின் திடீர் தப்பியோடுதலை வரவேற்றிருக்கும் மட்டக்களப்பு வாசிகள் வரவிருக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட ஆயத்தமாகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏ எப் பி செய்திச் சேவையின்படி, புலிகளுடனான தமது மோதலை தாம் முடித்துக்கொண்டுள்ளதாக கருணா குழு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

"சுமார் 400 இலிருந்து 500 வரையான போராளிகளை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினார்கள். நானும் இன்னும் சிலருமே இறுதியாகப் பெற்றோரிடம் வந்து சேர்ந்தோம், ஏனையவர்கள் ஏற்கனவே சென்றுவிட்டார்கள்" என்று அருள்மொழி எனப்படும் போராளி தெரிவித்தார்.


 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004

கதிரவெளிப் பகுதியில் கருணா துணை ராணுவக் குழுவுடனான மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர்களை புலிகள் இயக்கம் அறிவித்தது

கதிரவெளி மோதல்களில் 9 ஆம் திகதி வீரச்சவடைந்த போராளிகளின் பெயர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அப்பெயர்கள் வருமாறு,

1. வேலு பாண்டியன் (லெப் பொதிகைத்தேவன்) பதுளை வீதி, கித்துள் குளம், கரடியனாறு, மட்டக்களப்பு
2. கந்தசாமி அருள்ச்செல்வம் (2 ஆம் லெப் சங்கோலியன்), கடுக்காய்முனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
3. தங்கராசா குகன் ( மலர்க் குமரன்), மாவளையான், கரடியனாறு, மட்டக்களப்பு

இதேவேளை வாகரை பிரதேச சபைச் செயலாளரின் அறிக்கைப்படி கருணா குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அசெளகரியமான நிலையினை அடுத்து சுமார் 2405 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கதிரவெளி, பால்ச்சேனை, அமனாவெளி, வாகரை ஆகிய பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை தாம் விநியோகித்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004

"மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவை காண முடியவில்லை - புலிகளின் தளபதிகள் கருத்து"

கருணா துணை ராணுவக் குழுவுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் புலிகளின் தளபதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து முகாம்களும் கைப்பற்றப்பட்டு, முழுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த முகாம்கள் எங்கிலும் கருணாவைக் காணமுடியவில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் ஆயுதக் களஞ்சியங்களை நாம் முற்றாக மீட்டுள்ளோம், ஒரு மோட்டார் செலுத்தியும் சில தானியங்கித் துப்பாக்கிகளும் காணாமல்ப் போயிருக்கின்றன. வெடிமருந்துகள் மற்றும் ரவைக்களஞ்சியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன" என்றும் தெரிவித்தார்கள். மேலும், புலிகளின் பிரதான முகாமான மீனகத்தில் பல வாகனங்கள் தப்பியோடிய கருணா துணைராணுவக் குழுவினரால் தீவைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றன.

"இந்த முகாம்களைப் பார்க்கும்போது, கருணாவும் அவரது அடியாட்களும் அவசரத்தில் வெளியேறி ஓடியிருப்பது தெரிகிறது. அரைகுறையாக நிரப்பப்பட்ட வாகனங்கள் மற்றும் கடைசிநேர பொதிகட்டல்களைப் பார்க்கும்போது எமது விசேட படையணிகளின் தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லையென்பதும், அவருக்குப் போதுமான கால அவகாசத்தினை எமது தாக்குதல் அணிகள் கொடுத்திருக்கவில்லையென்பதும் புலனாகிறது. அத்துடன், அவரது கட்டளைகளை ஏற்கமறுத்த பல அணிகள் எம்முடன் தொடர்புகொண்டது போராளிகள் மேலான தனது கட்டுப்பாட்டை அவர் முற்றாக இழந்துவிட்டாரென்பதையும் தெளிவாக்குகிறது".

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு விசுவாசமாக இருந்த நீலன் எனும் போராளியைக் கைதுசெய்து சித்திரவதைப்படுத்தியிருந்த கருணா, ஈற்றில் அவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட போராளிகள் கூறினர்.  

" பெண்டுகல்ச்சேனை பகுதிமக்கள் எம்மிடம் கூறும்போது, கருணாவும் அவரது அடிவருடிகளும் இரு வாகனங்களில் வாலைச்சேனை - பொலொன்னறுவை வீதியிலுள்ள நாலாம் முச்சந்தி நோக்கி விரைந்ததாக கூறுகிறார்கள்" என்று தரவைப் பகுதியைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த விசேட தளபதியொருவர் கூறினார்.

ஆப்ப்குதிக் காடுகளைச் சல்லடைபோட்டுத் தேடிய புலிகளின் அணிகள் கருணாவையோ அல்லது அவரது அடிவருடிகளையோ காண முடியவில்லை என்றும் அவர் கூறினர்.

கருணாவும் அவரது அடிவருடிகளும் கல்லிச்சை - வடமுனைக் காடுகளினுள் பதுங்கியிருப்பதாக வந்த செய்திகளை மறுத்த அத்தளபதி, "நாம் அக்காடுகளை அங்குலம் அங்குலமாகச் சல்லடை போட்டு தேடிவிட்டோம், அவர் அங்கு இல்லை" என்று கூறினார்.

புலிகளின் கிழக்குப் பிராந்திய தகவல்களின்படி கருணாவின் இரு தளபதிகளான ஜிம் கெலித் தாத்தா, ரொபேட் மற்றும் பேச்சாளர் வரதன், நிதிப்பொறுப்பாளர் குஹனேஸ், விசாலகன் அணிப்பொறுப்பாளர் ஜீவேந்திரன், மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதி நிலவினி, கிழக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையாளர் துரை, டீடோர் பொறுப்பாளர் துரை, நெருங்கிய சகா இலங்கேஸ் மற்றும் ஐந்து மெய்ப்பாதுகாவலர்கள் ஆகியோரே தரவைப் பகுதியிலிருந்து ஞாயிறு இரவு தப்பியோடியுள்ளதாக கூறியிருக்கின்றனர்.

இதேவேளை கருணாவினால் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வார இறுதியில் இணைந்துகொள்வதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004

கருணா குழுவினரால கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிறார்கள் உட்பட  269 போராளிகளைப் புலிகள் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

கருணா துணை ராணுவக் குழுவினரின் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்ட பல போராளிகளில் 269 போராளிகள் மீண்டும் அவர்களின் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுள் 168 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

18 வயதிற்கு மேற்பட்ட 33 பெண்போராளிகளும், 68 ஆண் போராளிகளும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். 18 வயதிற்குக் குறைவான 168 போராளிகளில் 113 போராளிகள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சிறார்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளான ராம், கெளசல்யன் ஆகியோரும், அரச பிரதிநிதி தியாகராஜா மற்றும் புலிகளின் சமாதானப் பணியகத்தின் பவானந்தன் மற்றும் யுனிசெப் பிரதிகளும் கலந்துகொண்டனர்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரஞ்சித் said:

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004

கருணா குழுவினரால கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிறார்கள் உட்பட  269 போராளிகளைப் புலிகள் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

கருணா துணை ராணுவக் குழுவினரின் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்ட பல போராளிகளில் 269 போராளிகள் மீண்டும் அவர்களின் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுள் 168 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

18 வயதிற்கு மேற்பட்ட 33 பெண்போராளிகளும், 68 ஆண் போராளிகளும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். 18 வயதிற்குக் குறைவான 168 போராளிகளில் 113 போராளிகள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சிறார்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளான ராம், கெளசல்யன் ஆகியோரும், அரச பிரதிநிதி தியாகராஜா மற்றும் புலிகளின் சமாதானப் பணியகத்தின் பவானந்தன் மற்றும் யுனிசெப் பிரதிகளும் கலந்துகொண்டனர்.
 

ரஞ்சித், இந்த 168 வயது குறைந்த போராளிகளை கருணா பிரிந்து போன பின்னர் சேர்த்தாரா அல்லது புலிகளோடு இருக்கும் போதே சேர்த்தாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

ரஞ்சித், இந்த 168 வயது குறைந்த போராளிகளை கருணா பிரிந்து போன பின்னர் சேர்த்தாரா அல்லது புலிகளோடு இருக்கும் போதே சேர்த்தாரா? 

புலிகளிடமிருந்து பிரிந்துபோகும் முன்னரும், பிரிந்த பின்னரும். புலிகளிடமிருந்து பிரிந்து தனியாக இயங்கும் நிலை வந்தால் தனது பலத்தைத் தக்கவைக்க அவர் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கைகள். பலவந்தமாக தனது ஆளணியைப் பெருக்கிக் கொண்டதுடன், தலைமைக்குத் தெரியாமல் நிதிவசூலிப்பிலும் ஈடுபட்டார். இவை யாவுமே தான் பிரிந்துபோவதாக முடிவெடுத்தபின்னர், அவர் தன்னைத் தயார்படுத்து எடுத்த நடவடிக்கைகள். 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.