Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 23, வைகாசி 2008

கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் உதவியுடன் வாகரையில் சிங்களவர்களைக் குடியேற்றும் சிங்கள ராணுவம்

பிள்ளையானின் ஆதரவுடன், இலங்கை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கோரளைப்பற்று வடக்கில் அமைந்திருக்கும் வாகரைப் பகுதியில் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளிலிருந்து சிங்கள மீனவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் முயற்சியை ஆரம்பித்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வாகரையின் ஊரியான் பகுதியில் இவ்வாறு குடியேற்றப்படும் சிங்களவர்களுக்கென்று சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதேச செயலகம், தொழிற்பயிற்சி மற்றும் கருத்தரங்கு நிலையம், கூட்டுறவுச் சங்கம் ஆகிய கட்டடங்கள் நிறுவப்பட்டுவருகின்றன. 

கல்குடா பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான வசதிகளை இங்கே ஏற்படுத்திவரும் ராணுவம், தனது முயற்சிக்கும் கிழக்கு முதலமைச்சர் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்பகுதியில் கடலட்டைகளையோ, கவர்ச்சியான வண்ண மீன்களைப் பிடிப்பதையோ மாவட்ட அதிகாரிகள்  தடுத்திருக்கும் நிலையில், பிள்ளையானின் ஆசீருடன்  ராணுவம் இப்பகுதிகளில்  சிங்கள மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடியில் ஈடுபடவும், தேவையேற்படும்பொழுது டைனமைட்டுக்களைப் பாவித்து பெருமளவில் மீன்களைப் பிடிக்கவும் உதவிவருகிறது.

இதுபற்றி உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக் கூட்டுத்தாபானத்திடம் முறைப்பாடுகளைச் செய்தபோதும் கூட, பிள்ளையான் குழுவினரின் தலையீட்டினால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பாரிய வலைகளைப் பாவித்து கடல்வளத்தை நாசம்செய்துவரும் சிங்கள மீனவர்களின் செயலினைக் கட்டுப்படுத்த எவருமேயில்லாத நிலையில், சிங்கள மீனவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஆக்கிரமிப்பு ராணுவம் கிழக்கு மாகாணசபயூடாகச் செய்துவருவதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3 ஆனி, 2008

மேசன் தொழிலாளிகளிடமிருந்து கப்பம் கோரும் பிள்ளையான் கொலைக்குழு

batticaloa housing scheme 2008க்கான பட முடிவுகள்

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்டுவரும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கான வீடுகளில் பணிபுரிந்துவரும் மேசன் தொழிலாளிகளிடமிருந்து பெருந்தொகையான பணத்தினை பிள்ளையான் கொலைக்குழுவின் உறுப்பினர்கள் கப்பமாக அறவிட்டு வருவதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.


அவுஸ்த்திரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் உதவியோடு பலாச்சோலை, தளவாய், சித்தாண்டி, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி ஆகிய பகுதிகளில் சுமார் 750,000 பெறுமதிகொண்ட 700 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.


வெளிநாட்டு உதவியுடன் இவ்வீடுத்திட்டத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது இத்திட்டம் முழுமையாகத் தம்மிடம் கையளிக்கப்படவேண்டும் என்று பிள்ளையான் கொலைக்குழு வற்புறுத்தி வந்தது நினைவிருக்கலாம். ஆனால், இத்திட்டத்திற்கான நிதியினை வழங்க முன்வந்த நாடுகள் ஒரு துணைராணுவக் கொலைப்படையினரின் கைகளில் தமது நாட்டு மக்களின் வரிப்பணம் சென்றடைவதை விரும்பாதலால் பிள்ளையானின் அன்றைய முயற்சி வெற்றிபெறவில்லை.

பின்னர், இவ்வீடுகளைக் கட்டும் பொறுப்பு அப்பகுதி மேசன் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் தலா மூன்று வீடுகளைக் கட்டி முடிக்கவேண்டும் என்றும், அதற்கான செலவினை அரச சாரா நிறுவனம் நேரடியாகவே அவர்களிடம் வழங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையறிந்துகொண்ட பிள்ளையான் கொலைக்குழு இவ்வாறு கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலிருந்து குறைந்தது 10,000 முதல் 15,000 ருபாய்கள்வரை தமக்குக் கப்பமாகத் தரப்படவேண்டும் என்று இத்தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்திப் பண வசூலிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு கப்பம் தரப்படாதவிடத்து கட்டப்படும் வீட்டிற்கும், கட்டுமானத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்குமான பாதுகாப்பினை தம்மால் உறுதிப்படுத்தமுடியாதென்றும், மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  அம்மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

சுமார் 525 வீடுகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கொலைக்குழு சுமார் 50 லட்சம் ரூபாய்கள்வரை இதுவரையில் கப்பமாக அறவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6 ஆனி, 2008

பொலீஸ் அதிகாரம் எமக்குத் தேவையில்லை - கிழக்கு மாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமாகிய பிள்ளையான் அறிவிப்பு

chief ministers meeting 2008 Badullaக்கான பட முடிவுகள்

கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள துணைராணுவக் கொலைப்படையின் தலைவன் பிள்ளையான் தனது மாகாணத்திற்குப் பொலீஸ் அதிகாரம் தேவையில்லையென்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும், போக்குவரத்திற்கான அதிகாரமும், கீழ்மட்டத்திலான காணி அதிகாரமும் இருந்தாலே தம்மால் சிற்ப்பாக ஆட்சிசெய்யமுடியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பினையடுத்து அவற்றினை நடைமுறைப்படுத்தும் சட்ட நடவடிக்கைகளில் அவரது குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது


பிள்ளையான் உட்பட 8 மகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பிள்ளையான் இவ்வருடத்திற்கான தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பில் நடக்கவிருக்கும் அடுத்த முதலமைச்சர்கள் மாநாடு நடக்கும் வரை இவரே இப்பதவியில் தொடர்ந்தும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பேசிய பிள்ளையான் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் தமிழரின் பிரச்சினை தீருந்துவிடும் என்று கூறிவிட்டு, ஆனால் பொலீஸ் அதிகாரம் தமக்குத் தேவையில்லை என்றும் கூறினார்.

"20 வருடங்களுக்கு முன்னர் தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்கக் கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை அமைப்பு இன்று செயலற்றுப் போய்விட்டது. ஆனால் மேன்மை தங்கிய எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைத்து வசதிகளையும், சுகங்களையும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், வடக்கில் இருக்கும் ஒரு பிரிவினரால் அம்மக்களுக்கான நலத் திட்டங்களை எமது ஜனாதிபதியினால் செய்யமுடியாமல் இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, ஆடி 2008

துணைராணுவக்குழுவின் தலைவரும் இங்கிலாந்திற்கு போலியான கடவுச்சீட்டில் பயணித்ததனால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீண்டும் மட்டக்களப்பிற்கு தனது ஆதரவாளர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

புலிகளின் மீனகம் முகாமில் நடந்த இந்த சந்திப்பில் துணைராணுவக்குழு உறுப்பினர்கள் பலர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்க்களில் இருந்து வருகைதந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மகிந்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பதே தமது கொள்கையென்று எடுத்துக்கூறிய துணை ராணுவக்குழுத் தலைவர், அண்மையில் தமது கட்சிக்கு வாக்களித்தமைக்காக தமிழ் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

ராணுவத்தின் சிறப்புப் படையணியும், பொலீஸ் அதிரடிப்படையும் துணைராணுவக்குழுவின் தலைவருக்குப் பாதுகாப்பினை அளித்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரான கொலைக்குழுத் தலைவர் பிள்ளையானோ அல்லது அவரது அடிவருடிகளோ இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, ஆடி 2008

மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபடும்பொழுது பொலீஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழு

பிள்ளையான் துணை ராணுவக்குழுவைச் சேர்ந்த 5 கூலிகள் மட்டக்களப்பு கல்லடிப் பகுதி வீடொன்றில் சுமார் ஏழு லட்சம் ரூபாய்கள் பணத்தையும், 15 பவுண் நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோட முயன்றவேளையில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொலைக்குழு உறுப்பினர்கள் விபரங்கள் வருமாறு,

பிரசாத் 22, சுபராஜ் 20, திணேஷ் 29, மகேந்திரராஜா 23, கோணேஸ் 27

சிறையிலடைக்கப்பட்ட இந்தக் கொலைக்கும்பலின் உறுப்பினர்களை விடுவிக்கும் முயற்சியில் பிள்ளையான் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, ஆவணி 2008

பொலொன்னறுவை மாவட்டத்தில் தமிழர்களை மிரட்டிவரும் பிள்ளையான் கொலைக்குழு

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலொன்னறுவை மாவட்டத்தின் எல்லையில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களை எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் தமது கொலைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்று பிள்ளையான் கொலைக்குழு மிரட்டிவருவதாகத் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த எல்லைக் கிராமத்தில் மற்றைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்றவை தமது வேட்பாளர்கள் இப்பகுதிக்குச் செல்வதனை பிள்ளையான் கொலைக்குழு முற்றாகத் தடுத்து விட்டதாகவும், தமது உறுப்பினர்களுக்கு பகிரங்க கொலைமிரட்டலினை இக்கொலைக்குழுவினர் விடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

பிள்ளையான் கொலைக்குழுவின் முக்கியஸ்த்தரும், பல கடத்தல்கள் படுகொலைகளுடன்  நேரடியாக ஈடுபட்டவருமான மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் கொலைக்குழு உறுப்பினரே இந்த வன்முறைச் சம்பவங்களுடனும், கொலைமிரட்டல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார் என்று கூறும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, இப்பகுதியில் பிள்ளையான் கொலைக்குழு சார்பாக இவரே போட்டியிடுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறது.

பொலொன்னறுவை மாவட்ட எல்லைத் தமிழ்க் கிராமங்களில் அண்மைக்காலமாக பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களின் நடமட்டாம் அதிகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் கண்காணிப்பகத்தின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் இதுவரையில் இக்கொலைக்குழுவுக்கெதிராக 161 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, புரட்டாதி 2008

புலிகளின் உறவினரான 60 வயது முதியவரைக் கொன்ற கருணா குழு ஆயுததாரி இனியபாரதி

ராணுவத் துணைக்குழுத் தலைவன் கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி புலிகளின் தளபதிகளின் ஒருவரின் நெருங்கிய, 60 வயது கொண்ட ஒருவரை அவரது இல்லத்தில் மாலை 7 மணிக்குச் சுட்டுக் கொன்றிருக்கிறார். 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு இடையே அமைந்திருக்கும் களுவாஞ்சிக்குடி பகுதியில் எருவில் எனும் இடத்திலேயே இந்தப் படுகொலை நடந்திருக்கிறது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தப்போடி எனும் இந்த குடும்பஸ்த்தரை முன்னரும் வந்து மிரட்டியிருந்த இனியபாரதி, "புலிகளின் உறவினர்கள் அனைவரையும் நான் கொல்வேன்" என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் தளபதி ஒருவரின் தாயாரான தேவராஜா வரதலக்ஷ்மி என்னும் 60 வயது முதியவரை இனியபாரதி சுட்டுக் கொன்றதும் நினைவிருக்கலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, புரட்டாதி 2008

மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பிள்ளையான் கொலைக்குழு

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்புப் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த இரு பாடசாலை மாணவர்கள் மீது தமது அலுவலகத்தின் முன்னால் நின்று பிள்ளையான் கொலைக்குழுவினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருமாணவர் அவ்விடத்திலேயே உயிரிழக்க, மற்றையவர் கடுமையான காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்ட மாணவரின் பெயர் முருகப்பு கேதீஸ் என்பதுடன் காயப்பட்டவரின் பெயர் அல்லிராஜ் கமல்ராஜ் என்றும் தெரியவந்திருக்கிறது.


கேதீஸ் சாதாரண தரப் பரீட்சையில் தேற்றிவிட்டு மேசனாக தொழில்பார்த்துவந்தார் என்றும், மற்றையவர் இவ்வருடம் அப்பரீட்சைக்குத் தயார்ப்படுத்திவந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆலையடிவேம்பு முருகன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இம்மாணவர்கள்மீது பிள்ளையான் கொலைக்குழு தாக்குதலினை நடத்தியிருக்கிறதென்று தெரியவருகிறது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 2, ஐப்பசி 2008

தனது  மீள்வருகைக்காக இன்னொரு துணைராணுவக்குழுத் தலைவன் டக்கிளஸ் தேவானந்தாவிடம் உதவிகேட்கும் துணை ராணுவக்குழுத் தலைவன் கருணா

karuna and douglas with gotabayaக்கான பட முடிவுகள்

கிழக்கில் தனது பலத்தினை தனது முன்னைநாள்  அடியாளும் , இந்நாள் கிழக்குமாகாண முதலமைச்சருமான கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானிடம் முற்றாக இழந்துவிட்ட ராணுவத் துணைக்குழுவின் தலைவன் கருணா, கிழக்கில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்வதற்கு அரச ராணுவத்தின் இன்னொரு துணைக்குழுவான ஈ பி டி பி தலைவன் டக்கிளஸ் தேவானந்தாவிடம் உதவி கோரியுள்ளான்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரனுமான கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுருத்தலின்பேரிலேயே முன்னாள் துணை ராணுவக்குழுவின் தலைவன் கருணா டக்கிளஸைச் சந்தித்து இவ்வுதவியினை வேண்டியிருப்பதாகக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா நாட்டினை விட்டுப் போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாவினைப் பாவித்துத் தப்பியோடி, லண்டனில் குடிவரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சிறையில் 9 மாதகாலம் அடைக்கப்பட்டபின் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டது நினைவிருக்கலாம். கருணா சிறையிலடைக்கப்பட்ட காலத்தில் அவனால் நடத்தப்பட்ட ராணுவத் துணைக்குழுவினை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அவனது அடியாளும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையான் அரசுடனான தனது நெருக்கத்தினைப் பாவித்து பாரிய தேர்தல் முறைகேடுகள் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியதுடன், கிழக்கு மாகாணத்தில் தனது பிடியையும் இறுக்கிக்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்புப் பற்றிக் கருத்துக்கூறிய துணைராணுவக்குழு ஈ பி டி பீ கருணா லண்டன் சிறையில் இருந்தகாலத்திலேயே தனது அரசியல் செயற்பாடுகள்பற்றி தனது அடியாட்களுடன் பேசத் தொடங்கிவிட்டதாகவும், தான் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுமிடத்து தனது அரசியல்க் கட்சியினை மீண்டும் ஆரம்பிக்க நினைத்திருந்ததாகவும், இத்கற்குப் பிள்ளையானிடம் சமரசப் பேச்சிற்குத் தூது அனுப்பியிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

karuna and douglas with gotabayaக்கான பட முடிவுகள்

கொழும்பில் தங்கியிருக்கும் கருணா கிழக்கிலிருந்து தனது ஆதரவாளர்களையும், முன்னாள் கட்சி அங்கத்தவர்களில் முக்கியமானவர்களையும் கொழும்பிற்கு அழைத்து தனது புதிய அரசியல் முயற்சி பற்றிப் பேசிவருவதாகவும், இவ்வாறான ஒரு கூட்டம் ஒன்றிற்கு பாதுகாப்புச் செயலாளர் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு அக்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரியவருகிறது.

கருணா சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் அவனது கட்சிக்கும் ஈ பீ டி பி துணை ராணுவக் குழுவிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலைப்பாடு நிலவியதென்பதும், இரு ராணுவத் துணைக்குழுக்களும் தமக்குள் மோதிக்கொண்டதில் நூற்றுக்கணக்கான துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டதும் நினைவிலிருக்கலாம்.

கருணாவின் கட்சிக்கு தலைவனாக பிள்ளையான் வரும்வரையில் அவன் கொழும்பில் தங்கியிருந்து இலங்கை ராணுவ புலநாய்வுப்படையினரால் இயக்கப்படும் வெள்ளை வான் கடத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்துவந்ததுடன், கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை மிரட்டிக் கப்பம் வாங்குவதற்கும் பொறுப்பாக இருந்துவந்தான் என்பதும் தெரிந்ததே. கிழக்கில் அவன் கருணா துணைராணுவக்குழுவிற்கு தலைமையேற்ற நாளில் இருந்து ஈ பீ டி பி குழுவுடன் மோதல்ப்போக்கினைக் கடைப்பிடித்து வந்ததுடன், தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் பல ஈ பி டி பி துணை ராணுவக் கூலிகளையும் கொன்றிருந்தான். இதனாலேயே கிழக்கில் தனது நடவடிக்கைகளை ஈ பீ டி பீ துணைராணுவக்குழு முற்றாகக் கைவிடவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது.

karuna and douglas with gotabayaக்கான பட முடிவுகள்

தேவானந்தாவிடன் உதவிவேண்டியதை மறைத்துவரும் கருணா, கிழக்கில் தமது துணை ராணுவக்குழுக்களிடையேயான மோதல்களைத் தவிர்த்து ராணுவத்தின் கீழ் ஒரு அமைப்பாக செயற்படுவது தொடர்பாகவே தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறான்.


 

பரராஜசிங்கத்தின் கொலையுடன் கருணாவும் டக்கிளஸும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தமை, கருணா தனது கொலைக்குழுவினை வடமாகாணத்திற்கும் விஸ்த்தரித்திருந்தமை குறித்த விக்கிலீக்ஸின் ஆவணம் ஒன்று.

“The Karuna group is probably the most active Sri Lankan paramilitary in abductions and extrajudicial killings. On March 20, former Tamil MP and legal expert Dr. K. Vigneswaran (strictly protect) confided to PolOff that even MPs fear that the GSL will use Karuna to assassinate them. Colombo-area Tamil MP and Chairman of the Civil Monitoring Commission Mano Ganesan echoed this anxiety to us on March 29. A number of other MPs, Muslims as well as Tamils, have told us privately that they fear for their lives. Vigneswaran stated that he believed Karuna set up the assassination of Tamil MP Joseph Pararajasingham on Christmas Day 2005 (ref G) with the help of EPDP leader Devananda. Vigneswaran was also positive that Karuna cadres were employed in the killing in Colombo of popular Tamil MP Nadarajah Raviraj on November 10, 2006 (ref F).” the US Embassy Colombo informed Washington.

 

The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeaks database. The cable is classified as “SECRET” and discuses Sri Lanka’s paramilitary operations. The cable was written by the Ambassador Robert O. Blake on May 18, 2007.

The ambassador wrote; “Father Bernard, a Catholic priest from Jaffna, confirmed that Karuna has extended his activities to Jaffna from his base in the East. Bernard has documented 52 new abduction cases in Jaffna in the month of March 2007, many of which he believes are the responsibility of the Karuna group. In February 2007, he presented more than 200 files to One-Man Commissioner (and personal friend of the President) Mahanama Tilakaratne. However, Bernard told PolOff that he was discouraged with the One-Man Commission (ref B), since Tilakaratne had not made the effort to investigate even a single case in Jaffna. Father Bernard told us he has evidence of 747 abductions in Jaffna from November 2005 to February 2007. However, because of GSL interference and limited resources, he was only able to document a sample of 200 of these cases for presentation to Tilakaratne. Father Bernard described one abduction in which a man suspected of having ties to the LTTE was taken and a ‘calling card’ was left with a picture of Karuna on the front and a calendar on the back, indicating that the man’s ‘time had run out.'”

 

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணா துணைராணுவக்குழுவினைப் பாவித்து கோத்தாவே கொழும்பில் தமிழர்களைக் கடத்திப் பணம் பறித்தான் என்பதை சிறிரங்கா தெரிவித்திருப்பதாகக் கூறும் விக்கிலீக்ஸ்

srirangawithjaffna-colombotelegraph.jpg

“However, Ranga said that the current government, cash-strapped, has ended this arrangement. Instead, he alleged, Defense Secretary Gothabaya Rajapaksa has authorized EPDP and Karuna to collect the money from Tamil businessmen. This may account for the sharp rise in lawlessness, especially extortion and kidnapping, that many have documented in Vavuniya and Colombo.” the US Embassy Colombo informed Washington.

 

The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeaks database. The cable is classified as “SECRET” and discuses Sri Lanka’s paramilitary operations. The cable was written by the Ambassador Robert O. Blake.

The cable, dated May 18, 2007, updated the Secretary of State on Sri Lanka’s issue of paramilitary operations and asked strictly protect Sri Ranga Jeyaratnam as their source. Sri Ranga is described as a person who has close personal ties to the Rajapaksa family.

Sri Ranga was elected to represent opposition United National Party in 2010 general elections and later crossover to ruling party. Prior to becoming a member of Sri Lankan Parliament, Sri Ranga served in numerous positions at the Shakthi TV (MTV) station. In 2008, the East-West Center invited Sri Ranga to participate in “The New Generation Seminar” (NGS) along with other young leaders from the United States and Asia Pacific. The program is developed around a thematic focus and provides participants with an opportunity to strengthen their understanding of Asia Pacific-U.S. developments and challenges, build a regional network and to become leaders with a more international perspective. He participated in the 18th New Generation Seminar held in Honolulu, Youngstown and Washington D.C. during September and October of 2008

Ambassador Blake wrote “The GSL has a history of funding paramilitary groups. Popular Tamil TV talk show host Sri Ranga Jeyaratnam (strictly protect), who has close personal ties to the Rajapaksa family, pointed out that under former President Kumaratunga, the GSL had begun the practice of paying paramilitaries to refrain from engaging in criminal pursuits. Several Embassy interlocutors have independently confirmed this. However, Ranga said that the current government, cash-strapped, has ended this arrangement.”

“ Instead, he alleged, Defense Secretary Gothabaya Rajapaksa has authorized EPDP and Karuna to collect the money from Tamil businessmen. This may account for the sharp rise in lawlessness, especially extortion and kidnapping, that many have documented in Vavuniya and Colombo. Even though EPDP and Karuna are each comprised nearly exclusively of ethnic Tamils, the crimes that they commit are almost always against other Tamils.” Blake further wrote.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 2, ஐப்பசி 2008

விக்கிலீக்ஸில் வெளியான இலங்கையின் துணைராணுவக்குழுக்கள் தொடர்பாக கொழும்பிலிருந்து அமெரிக்கத் தூதர் வெள்ளைமாளிகைக்கு அனுப்பிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

robert blake sri lanka us ambassadorக்கான பட முடிவுகள்

"சந்திரிக்காவின் காலத்தில் ஈ பி டி பி உட்பட பல தமிழ் ராணுவக் குழுக்கள் கொழும்பில் நாசகார வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் முகமாக அவர்களுக்கு மாதக் கொடுப்பனவு ஒன்றினை அரசாங்கம் செய்துவந்தது. ஆனால், பாரிய பண நெருக்கடியினுள் இன்று சிக்கியிருக்கும் ராஜபஷ அரசின் பாதுகாப்புச் செயலாளர் இக்குழுக்களுக்கான கொடுப்பனவுகளை முற்றாக நிறுத்திவிட்டதால் அக்குழுக்கள் தமக்குத் தேவையான பணத்தினை தமிழ் வர்த்தகர்கள், குடும்பங்கள் ஆகியோரிடமிருந்து கப்பமாகப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்திருந்தார். இதனாலேயே கொழும்பிலும் வவுனியாவிலும் பெருமளவு தமிழர்கள் கடத்தப்பட்டுப் பணம் பறிக்கப்படுவதும், பலர் கொல்லப்படுவதும் நடக்கிறது. இதனாலேயே தற்பொழுது மிகமோசமான அசம்பாவிதங்களும், நீதியற்ற நிலையும் காணப்படுகின்றது".

"கருணாவோ டக்கிளஸோ முழுக்க முழுக்க தமிழ்ச் சமூகத்திலிருந்து வந்திருந்தாலும்கூட, அவர்கள் தமது மக்களையே அரச ஆணையின்பேரில் பணத்திற்காகக் கடத்திக் கொல்கிறார்கள்".

"பராஜசிங்கம் அவர்களை நத்தார் ஆராதனையின் போதும், ரவிராஜைக் கொழும்பிலும் வைத்துக் கொன்றதுகூட கருணாவினதும் டக்கிளஸினதும் செயல்தான். யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்துவரும் பொதுமக்கள் மற்றும் முன்னாள் புலிகளைக் கடத்தும் சம்பவங்கள் கூட கருணா துணைராணுவக் குழுவினராலேயே நடத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன"

என்றும் கூறினார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி 2008

கிழக்குமாகாணத் தமிழர்களின் கலாசாரமும், பழக்கவழக்கங்களும் வடமாகாணத்தவரிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை, ஆகையால் அவர்கள் தனித்து இயங்குவதே சரியானது - சட்டமா அதிபர் சரத் என் சில்வா

sarath n silvaக்கான பட முடிவுகள்

"கிழக்கு மாகாணம் இன்றிருப்பதுபோல வடக்கிலிருந்து முழுதாகப் பிரிந்து இயங்குதல் அவசியம். கிழக்கு மாகாணம் எம்மைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. நாட்டிலிருக்கும் ஏனைய மாகாணங்களுக்குக் கிழக்கு மாகாணம் முன்மாதிரியானது" என்று மட்டக்களப்பில் புதிய நீதிமன்றக் கட்டடத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய சட்டமா அதிபரும், மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியுமான சரத் என் சில்வா கூறினார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ் பரமராசாவினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

சரத் என் சில்வாவின் உரையிலிருந்து மேலும் சில பகுதிகள் கீழே,

" கிழக்கு மாகாண மக்களின் கலாசாரமும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களும் வடக்கு மாகாணத்தவரிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை. அதனாலேயே நான் கிழக்கு மாகாணம் வடக்குமாகாணத்திலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்படவேண்டும் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அன்று வழங்கினேன்"

"எந்த அரசியல்த் தலைவரினதும் அழுத்தத்தினால் நான் அந்தத் தீர்ப்பினை வழங்கவில்லை. கிழக்குமாகாண மக்களினதும், கிழக்கு மாகாண அமைவிடத்தின் முக்கியத்துவத்தினையும் நன்கு அறிந்து வைத்திருந்ததாலேயே  என்னால் அவ்வாறான தீர்ப்பொன்றினை வழங்க முடிந்தது".

"13 ஆம் திருத்தச் சட்டத்தில் கேட்கப்பட்டதற்கும் அதிகமான அதிகாரத்தினை நாம் இன்று கிழக்கு மாகாணத்திற்கு வழங்கியுள்ளோம். இந்த மாகாணத்தின்மீதான ஆளும் அதிகாரம் இந்த மாகாணத்தின் மக்களிடமே இருக்கவேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இந்நாட்டில் நிலையான அமைதியினை ஏற்படுத்த முடியும்".


"இன்று சட்ட அதிகாரம் எல்லோருக்கும் பகிரப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாண மக்கள் தமது வழக்குகள் கொழும்பில் நடைபெறுவதால் அங்கு சென்றுவருவதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலை இப்போது மாற்றப்பட்டு அவ்வழக்குகள் கிழக்கு மாகாணத்திலேயே நடத்தப்படுவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்".

"கிழக்கில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் உயர் நீதிமன்றங்களை நிறுவியுள்ளோம், மிக விரைவில் கல்முனையிலும் உயர் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி 2008

தனது வேட்டைநாய்களுக்கு அரசியல்ப் பதவிகள் எனும் எலும்புத்துண்டுகளை வீசியெறிந்த பேரினவாதம்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவான துணைராணுவக் குழுத் தலைவன் கருணா

karuna elected to parliament through national list 2008க்கான பட முடிவுகள்

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்பேரில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவனான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை ஜனாதிபதி மகிந்த தனது கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்திருக்கிறார்.

இதுபற்றிய வர்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், துணைராணுவக் குழுத் தலைவனின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் செவ்வாயன்று நிகழவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பாராளுமன்ற ஆசனத்தை துறந்து மாகாணசபையில் இணைந்த மக்கள் விடுதலை முன்னணி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டின் உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் இடத்திற்கே கருணா அமர்த்தப்படவிருப்பதாகக் கட்சிவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கருணாவினால் ஆரம்பிக்கப்பட்ட துணைராணுவக் கொலைப்படையின் இரு பிரிவுகளுக்கிடையேயான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அண்மையில் கருணா இன்னொரு துணை ராணுவக் குழுவான டக்கிளசின் ஆதரவினை வேண்டிநின்றதும், இதற்கு பாதுகாப்புச் செயலாளரே அனுசரணை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

கருணா போலியான கடவுச்சீட்டு மற்றும்விசாவினைப் பாவித்து லண்டன் செல்லமுயன்று, அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு 9 மாத காலம் சிறையிலடைக்கப்பட்டபின் நாடுகடத்தப்பட்டதும், இக்காலத்தில் கருணாவின் அடிவருடி பிள்ளையான், கொலைக்குழுவின் தலைமைப் பொறுப்பினை தானே எடுத்துக்கொண்டதும் நினைவிருக்கலாம். இக்காலத்தில் அரசுடன் நெருங்கிச் செயற்பட்ட பிள்ளையான், பாரிய வாக்குமோசடிகள், படுகொலைகள், ஆயுத வன்முறைகளைப் பாவித்து கிழக்கு மாகாணத் தேர்தல்களில் முறைகேடாக வென்று முதலமைச்சர் ஆனதும் நடந்திருந்தது. 

pillaiyan elected as chief minister to eastக்கான பட முடிவுகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, ஐப்பசி 2008

பிள்ளையான் கொலைக்குழுவின் அலுவலகத்தைக் கைப்பற்றிய கருணா துணைராணுவக் குழு

karuna+and+pillayan.jpg

அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தேசியப் பட்டியல் மூலம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட துணைராணுவக் குழுத் தலைவன் கருணாவின் அடிவருடிகள் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரச ஆதரவுடன் பதவிக்கு வந்த இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் பிரதான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. 

முதலில் வந்த தகவல்களின்படி, மட்டக்களப்பு நகரின் கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதான அலுவலகமான மீனகம் மீது கருணா துணைராணுவக் கூலிகள் மதியம் 12:30 மணிக்குத் தமது தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றனர். இத்தாக்குதலில் இருந்து பிள்ளையானைக் காப்பற்றி கனத்த பாதுகாப்புடன் கொழும்பிற்கு கூட்டிவர ஏற்பாடு செய்த மகிந்த ராஜபக்ஷ, உடனடியாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே சந்திப்பொன்றினை ஏற்படுத்த முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

இவ்விரு ராணுவத் துணைப்படைக் கூலிகளுக்கிடையேயான சண்டையினைத் தீர்ப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய் ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் கடுமையான முயற்சிகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

துணை ராணுவக் குழுத் தலைவனான கருணா தொடர்பான இழிவான செய்திகளைப் பிரசுரித்து வெளிவரத் தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான பிள்ளையானின் பிரச்சாரப் பத்திரிக்கைகளையும் எரித்த கருணா துணைராணுவக் குழு அந்த அச்சகத்திற்கும் தீமூட்டியதாகத் தெரியவருகிறது.

இத்தாக்குதலின்பொழுது கருணா துணைராணுவக் கூலிகள் பிள்ளையான் கொலைக்குழுவின் 13 உறுப்பினர்களை உயிருடன் பிடித்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் கருணா துணைராணுவக் குழுவின் பிரச்சாரப் பிரிவு செய்திவெளியிட்டிருக்கிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 22, ஐப்பசி 2008

பணத்திற்காக சொந்த இனத்தையே வேட்டையாடும் பிள்ளையான் துணை ராணுவக் குழு  கடத்தப்பட்ட நீர்கொழும்பு வர்த்தகர் சடலமாக மீட்பு


சில தினங்களுக்கு முன்னர் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுவினரால் பணத்திற்காகக் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் சுப்ரமணியம் தவராஜசிங்கம் அவர்களின் உடல் நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கருகிலிருந்து இன்று மீட்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் மாதம், 8 ஆம் திகதி  நீர்கொழும்பில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு நிலையத்திற்கு வெள்ளை நிற வானில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவரை இழுத்துச் சென்றதாகத் தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் காரைநகரின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இந்த வர்த்தகர் நீர்கொழும்பில் பலவருடங்களாக வசித்துவந்தார். 

அவரது பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, ஐப்பசி 2008

பிள்ளையான், கருணா கொலைக்குழுக்கள் கிழக்கில் ஆர்ப்பாட்டம்

துணை ராணுவக் குழுக்களான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழு ஆகியவை அரசுக்கும் ராணுவத்திற்கும் ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றினை கிழக்கில் நடத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. தமது ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை வருமாறு இவை அழுத்தம் கொடுத்திருக்கின்றன. வருகிற 26 ஆம் திகதி நடக்கவிருக்கும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள்மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இத் துணைராணுவக் குழுக்கள் அச்சுருத்திவருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக , "புலிகளின் ஆயுதங்களை முற்றாகக் களைய வேண்டும், தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்குத் தமது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தல்" ஆகியவையே முன்வைக்கப்படவிருப்பதாக ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்குசெய்திருக்கும் துணை ராணுவக் குழுக்களின் பிரச்சாரப் பிரிவுகள் தெரிவித்திருக்கின்றன.


இலங்கை அரசாங்கத்தினால் தனது துணை ராணுவக் குழுக்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலம், கிழக்கில் மக்கள் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் சுமூகமான சூழ்நிலை நிலவுகிறதென்று வெளியுலகிற்குக் காட்டவும், தனது பாராளுமன்றத்திற்கு துணைராணுவக் குழுத் தலைவனான கருணாவை நியமித்ததை நியாயப்படுத்தவுமே இவ்வார்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு துணை ராணுவக் குழுக்களும் மக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், பதாதைகள் சகிதம் அனைவரும் மட்டு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒன்றுகூடவேண்டும் என்றும் அங்கிருந்தே ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும் என்றும் கூறியிருக்கின்றன.

இவ்வார்ப்பட்டத்திற்காக பொதுமக்களை வாகரை, வாழைச்சேனை, செங்கலடி ஆகிய மட்டக்களப்பின் வடக்கு நகரங்களில் இருந்தும், களுவாஞ்சிக்குடி போன்ற மட்டக்களப்பின் தென்புறத்திலிருந்தும் பலவந்தமாக ஏற்றிவர இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

கிழக்கின் எல்லைப்பகுதியில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களும் இப்போராட்டத்தில் அதிதிகளாகக் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குழுக்களின் உதவியுடன் வடக்கில் இன்னொரு துணை ராணுவக் குழுவான ஈ பி டி பி யும் அரச ஆதரவு ஆர்ப்பாட்டமொன்றினை ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, ஐப்பசி 2008

பிள்ளையான் கொலைக்குழு முகாம் மீது தாக்குதல் - நால்வர் பலி, 6 பேர் சிறைப்பிடிப்பு

மட்டக்களப்பு நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் செங்கலடிப் பகுதியில் இருந்த பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுவின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொலைக்குழுவின் 4 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் புலிகளிடம் பிடிபட்டிருக்கிறார்கள். 


 கடந்த செவ்வாய் அதிகாலை நடைபெற்ற இத்தாக்குதலை கருணா குழுவினரின் நடவடிக்கை என்று பிள்ளையான் குழு ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், பிந்திக் கிடைத்த தகவல்களின்படி இத்தாக்குதலினை மேற்கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளே என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இத்தாக்குதலில் நான்கு துணை ராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதுடன் இன்னும் அறுவர் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டனர். முகாமிலிருந்த ஆயுதங்கள புலிகளால் கைப்பற்றபின்னர், முகாமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில்  ஏழு தானியங்கித் துப்பாக்கிகளும், ரவைகளும் அடங்கியிருந்தன.

கொல்லப்பட்ட நால்வரின் பெயர்களும் வருமாறு,

சிறியன், கண்ணன், நவநீதன், கமலநாதன் (மாறன்)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, கார்த்திகை 2008

தொடரும் கொலைக்குழுக்களிடையான மோதல்கள் :  கருணா துணைராணுவக் குழு முகாம் மீது பிள்ளையான் கொலைக்குழு தாக்குதல்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருந்த கருணா துணைராணுவக் குழு முகாம் மீது இன்னொரு துணை ராணுவக் கொலைக்குழுவான பிள்ளையான் குழு நடத்திய தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு இன்னும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கள் நடந்த இத்தாக்குதல் பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் ஆயுததாரி கருணா துணைராணுவக் குழுவினரால் சுடப்பட்டமைக்குப் பழிவாங்கலாகவே தம்மால் நடத்தப்பட்டதாக பிள்ளையான் கொலைக்குழு தெரிவித்திருக்கிறது.

கொல்லப்பட்ட கருணா துணை ராணுவக் குழுவினரில் ஒருவரது பெயர் சதானந்தம் தினுராஜ் என்று பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

 


 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2008

வவுணதீவு துணைராணுவக் குழு முகாம் மீது தாக்குதல்

வவுணதீவு, மங்கிக்காடு பகுதியில் அமைந்திருந்த துணைராணுவக் குழு முகாம் மீது திங்கள் அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரு துணைராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் புலிகள் கூறியுள்ளனர். காயமடைந்த நால்வரும் தப்பியோடிவிட்டதாக அவ்ர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஐந்து தானியங்கித் துப்பாக்கிகள், ஆர் பி ஜீ க்கள், ரவைகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் உட்பட சில ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில்  இந்த துணைராணுவ முகாம் அமைந்திருந்தது.

மட்டக்களப்பு நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் தென்கிழக்கில் அமைந்திருக்கும் இம்முகாமில் நடந்த தாக்குதல் உள்வீட்டு வேலையாய் இருக்கலாம் என்று மட்டக்களப்பு பொலீஸார் கூறியிருக்கின்றனர். வர்மன் எனப்படும் துணைராணுவக் குழு உறுப்பினரும் இன்னும் மூவரும் இத்தாக்குதலை உள்ளிருந்து நடத்திவிட்டு புலிகளிடம் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, கார்த்திகை 2008

தொடரும் துணைராணுவக் கொலைக்குழுக்களின் உள்வீட்டுப் படுகொலைகள் பிள்ளையானின் ஆலோசகர் ரகு கொழும்பில் கருணாவால் படுகொலை

Pillayan Operative Ragu

ரகு எனப்படும் பிள்ளையான் குழு ஆலோசகர் குமாரசுவாமி நந்தகோபன்

 

அவுஸ்த்திரேலியாவிலிருந்து கிளம்பி இலங்கை சென்று பிள்ளையானின் பிரத்தியேக ஆலோசகராக செயற்பட்டுவந்த ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபன் மற்றும் பிள்ளையானின் இன்னொரு சகா ஆகியோர் கொழும்பில் கடந்த வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். பிள்ளையான் கொலைக்குழுவின் முன்னைநாள் பேச்சாளர் ஆசாத் மெளலானாவின் மோட்டர் வண்டியில் அத்துருகிரியப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போதே கருணா துணைராணுவக் குழு ஆயுததாரிகளால் இவர்கள்  சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Kumaraswami Nandagoban alias Raguக்கான பட முடிவுகள்

லண்டனில் இருந்து நாடுகடத்தப்பட்ட கருணா, தான் நாடுகடத்தப்பட்ட நாளில் இருந்து ரகுவை துணைராணுவக் குழுவிலிருந்து அகற்றுமாறு பலமுறை பிள்ளையானுக்கு எச்சரித்து வந்ததாகவும், பிள்ளையான் தொடர்ந்தும் கருணாவின் கட்டளையினை ஏற்கமறுத்ததாலாயே ரகு கருணாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


38 வயது நிரம்பிய ரகு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய 3 மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்றும் தெரியவருகிறது. பிள்ளையானின் துணைராணுவக் கொலைக்குழு அரசியற்கட்சியாக பதிவுசெய்யப்பட்டதையடுத்து கடந்த வருடம்தான் ரகு அவுஸ்த்திரேலியாவிலிருந்து இலங்கைவந்து இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

Kumaraswami Nandagoban alias Raguக்கான பட முடிவுகள்

ரகுவுடன் கொல்லப்பட்ட மற்றையவர் 29 வயதுடைய சமீர் ராஜ்குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பிள்ளையானுக்கும் கருணாவுக்குமிடையிலான மோதால் தீவிரமடைந்துவருவதாக அரச புலநாய்வுத்துறை அரசுக்கு அறிவித்த சில நாட்களிலேயே இத்தாக்குதல் கருணாவால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ரகு கொல்லப்பட்ட இடத்தினை பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் வந்து பார்த்ததாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர். 

Kumaraswami Nandagoban alias Raguக்கான பட முடிவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, கார்த்திகை 2008

தொடரும் துணைராணுவக் கொலைக்குழுக்களின் உள்வீட்டுப் படுகொலைகள் : பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு முகாமில் தாக்குதல், இருவர் பலி எழுவர் ஆயுதங்களுடன் தலைமறைவு

கரடியனாறு பகுதியில் பங்குடாவெளியில் அமைந்திருந்த பிள்ளையான் துணைராணுவக் குழு முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் மதன் மற்றும் மணி எனப்படும் துணை ராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதோடு மேலும் 7 பேர் அம்முகாமிலிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வியாழன் அன்று நடந்த இத்தாக்குதலில் பிள்ளையான் குழுவினுள் செயற்பட்டுவந்த புலிகளின் உறுப்பினர்களே இதனைச் செய்ததாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். 

செங்கலடி பதுளை வீதியில் அமைந்திருந்த இம்முகாம் மட்டு நகரிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2008

பங்குடாவெளி உள்வீட்டுக் கொலைகளையடுத்து கடத்தப்பட்ட உறுப்பினர்களின் உறவினர்கள்

கடந்த வியாழன் இரவு பங்குடாவெளியில் அமைந்திருந்த துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளைகள் மற்றும் 7 பேரின் தலைமறைவினையடுத்து, இவ்வாறு சகாக்களைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ள 7 பேரின் உறவினர்கள் 9 பேரை துணை ராணுவக் குழு கடத்திச் சென்றிருக்கிறது.

இந்தக் கடத்தலினையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், கடத்தப்பட்டவர்களின் 3 சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளையடுத்து அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட துணைராணுவக் குழுவும் விசேட அதிரடிப்படையுமே சின்னக் கொலனி எனப்படும் பகுதியில் இந்த உறவினர்களைப் பலவந்தமாகத் தமது வெள்ளை வான்களில் ஏற்றிச்சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட 9 அப்பாவிகளினது விபரங்கள்,

பாலப்போடி செங்கமலம் (40), சிவலிங்கம் விமலதேவி (22), லிங்கேஸ்வரன் ஜனூபா (10), லிங்கேஸ்வரன் ஜனுராஜன் (8), செல்வராஜா தேவராஜா ( 42), முத்தைய்யா ராசாத்தி ( 40), தேவராசா குமார் (25), தேவராசா சுமன் (14), தேவராசா சுமேந்திரன் (17)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, கார்த்திகை 2008

முன்னாள் விடுதலைப் புலிகள் இருவரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைராணுவக் குழு

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு முன்னாள் விடுதலைப் புலிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்களுடன் நின்றிருந்த இன்னொருவரை அக்குழு கடத்திச் சென்றிருக்கிறது. கொலைச் சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்கு வந்த பொலீஸ் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரின் மனைவியை விசாரணைக்கென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட முன்னால் போராளிகளின் விபரங்கள்,

பாலகிருஷ்ணன் விஜயராஜ் அல்லது அர்ஜுன், 30, ஒரு பிள்ளையின் தந்தை, 2 ஆம் குறிச்சி கண்ணகிபுரத்தில் வசித்து வந்தவர்.
ர. அன்புமணி, 22, ஆலையடிவேம்பைச் சேர்ந்தவர்.

விஜயராஜாவின் மனைவி விசித்திராவே பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டவராவார். 

கருணா துணைராணுவக் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட மூன்றாவது நபர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. 

கொல்லப்பட்ட இரு போராளிகளின் உடல்களையும்  கருணா துணைப்படை அவ்விடத்தில் இருந்து இழுத்துச் சென்றதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலிருந்து பொலீஸார் டி 56 ரக துப்பாக்கியொன்றையும் கண்டெடுத்திருக்கிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மாசி 2009

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக மட்டக்களப்பில் போட்டியிட துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா முடிவு

மட்டக்களப்பில் அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்துப் பேசிய கருணா தனக்கும் தனது சகாக்கள் 6 பேருக்கும் இத்தேர்தலில் வெல்வதற்கான உதவிகளையும் ஆதரவினையும் அவர்கள் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் நீக்கப்பட்டு, கருணாவுக்கு ஆதரவானவர்கள் அவ்விடங்களுக்கு அமர்த்தப்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பை அவர் நடத்தியிருக்கிறார்.


கிழக்குப் பல்கலை கழகத்தின் உயர் அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகிய பதவிகளை வகித்து வந்த வடமாகணத்தைச் சேர்ந்த பலர் தமது பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் என்று மிரட்டப்பட்டு, அப்பதவிகளுக்கு கருணாவுக்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான அதிகாரிகளும் இலக்குவைக்கப்பட்டு, பதவிகளில் இருந்து அகற்றப்பட்டு வருகிறார்கள் என்று செய்திகள் வந்திருக்கின்றன.

இவ்வாறான பல அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற கருணா குழு ஆயுதமுனையில் அவர்களை மிரட்டி ராஜினாமாச் செய்ய வைத்ததை பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

பிள்ளையான் குழுவுக்குச் சார்பான அதிகாரிகளும் கருணா குழுவால் இலக்குவைக்கப்பட்டு தூக்கப்பட்டு வருவதுடன், வாகரைப் பகுதியில் பாடசாலை அதிபர்களைச் சந்தித்த கருணா, "உங்களின் தலைகள் உடம்பில் இருக்கவேண்டும் என்றால் யோசித்து முடிவெடுங்கள், இல்லையேல் தலை இருக்காது" என்று பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் மிரட்டியதாக அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். 

அவ்வாறே கிழக்கு பல்கலைக் கழக பதிவாளரும் துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டு ராஜினாமாச் செய்யவைக்கப்பட்டிருக்கிறார். 


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2009

சிறுமி வர்ஷா படுகொலை : ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் துணை ராணுவக் குழுக்கள்

varsha.jpg

திருகோணமலைச் சிறுமியான வர்ஷா ஜூட் ரெஜீ என்பவரைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலைசெய்த பாதகத்தினை ஒருவர் மீது ஒருவராக பிள்ளையான் கொலைக்குழுவும் கருணா துணைராணுவக் குழுவும் சாட்டி வருகின்றன.

இம்மாதம் 11 ஆம் திகதி ஆறுவயது நிரம்பிய இச்சிறுமி வழமையாக வீடுசெல்லும் முச்சக்கரவண்டிக்காகக் காத்துநின்றபோது, அவரைக் கடத்திச் சென்ற துணைராணுவக் குழு உறுப்பினர்கள் பின்னர் உரைப்பைய்யொன்றில் கொல்லப்பட்ட அவரது உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

கருணா குழுவே இக்கொலையில் ஈடுபட்டதை தம்மால் நிரூபிக்க முடியும் என்று பிள்ளையான் கூறியதுடன், கருணா அரசாங்கத்துடன் இணைந்தபின்னரும் கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் தமது கட்சியின் பெயரைப் பாவித்து கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

ஆனால், கருணா துணைராணுவக் குழுவின் பேச்சாளர் இனியபாரதி இக்கொலைபற்றித் தெரிவிக்கும்போது, "வர்ஷாவினதும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான கடத்தல்கள், படுகொலைகளை பிள்ளையானே செய்துவருகிறார். இதனையே அவர் இவ்வளவுகாலமும் தொழிலாகச் செய்துவருகிறார்" என்று குற்றஞ்சாட்டியதாக கொழும்புப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறுபேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின்பொழுது பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு துணைப்படை உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இன்னுமொருவர் சயனைட் அருந்தி மரணித்திருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையினை விசாரித்துவரும் பொலிஸார் தமது கடமையினைச் செய்வதை இவ்விரு துணைராணுவக் குழுக்களும் இடையூறு செய்துவருவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, சித்திரை 2009

நான்கு பொதுமக்களை திருகோணமலையில் சுட்டுக் கொன்ற கருணா குழு

இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணை ராணுவக்குழு திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடத்திய கொலைச் சம்பவங்களில் மூன்று தமிழர்களும் ஒரு முஸ்லீமும் கொல்லப்பட்டைருக்கின்றனர். 

கொல்லப்பட்டவர்களின் நொச்சிக்குளம் சமாதானப் பேரவையின் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு,

கோணேஸ்வரன் 48, நொச்சிக்குளம் சமாதானப் பேரவை தலைவர் சேகர் 60, அமீர் 32, ராசமணி 70.

திருமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் இப்படுகொலைகள் பற்றி பொலீஸாரிடம் முறையிட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க மறுத்துவருவதாகத் தெரிகிறது. 

கடந்த இருவாரங்களில் மட்டும்  கருணா குழுவினரால திருகோணமலை மாவட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 15 என்பது குறிப்பிடத் தக்கது. 

வன்னியில் நடந்துவரும் பாரிய இனவழிப்பு யுத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் திருகோணமலைத் தமிழர்கள் ஈடுபடுவதைத் தடுக்கவே இவ்வாறான அச்சுருத்தல் பாணியிலான படுகொலைகளை கருணா குழு நடத்திவருவதாக திருமலை வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 02, வைகாசி 2009

8 வயதுச் சிறுமியைக் கப்பத்திற்காகக் கடத்திக் கொன்ற கருணா

Girl killed in Batticaloa

மகள் தினுசிக்காவை கருணாவின் கொலைவெறிக்குப் பலிகொடுத்த தாய் 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல்ப் போயிருந்த பாடசாலை மாணவி தினுசிகா சதீஸ்குமாரின் உடல் மட்டக்களப்பு நகரில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. கடத்திக் கொல்லப்பட்ட தினுசிகாவின் பெற்றோர் இதுபற்றிக்கூறுகையில் கருணாவே தமது மகளைக் கடத்திச்சென்று முப்பது லட்சம் ரூபாய்களைக் கப்பமாக வழங்கினால் மட்டுமே உங்களின் குழந்தையைப் பார்க்கமுடியும் என்று கூறியதாகவும், பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும்போதே தமது குழந்தையை அவர்கள் கொன்றுவிட்டதாகவும் கூறி அழுதிருக்கின்றனர்.

Paramilitary operative

சதீஸ்குமார்

 

இக்குழந்தையின் தந்த சதீஸ்குமார் சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் கருணாவினால் கடத்தப்படு கப்பப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றுக்கொண்ட பிறகு கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது நினைவிலிருக்கலாம். இக்கடத்தல்களில் கருணாவுடன் முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவரும் இணைந்தே ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.


கொலப்பட்ட சிறுமியின் தந்தையான சதீஸ்குமார் உடற்பயிற்சி ஆசிரியராக வேலைசெய்துவந்த வேளையிலேயே கருணா குழுவால் கடத்தப்பட்டு வெலிக்கந்தைப் பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், கப்பம் பகுதியாக அறவிடப்பட்ட பின்னரும் அவர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது செய்தியாக முன்னர் வந்திருந்தன. 

தினுசிக மட்டக்களப்பு கோட்டைமுனை வித்தியாலயத்தில் பயின்று வந்ததுடன், வழமைபோல  பாடசாலையிலிருந்து வீடு திரும்போதே அவர் கருணாவினால் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Ratheeskumar

 கொலைக்குழு ரதீஷ்குமார்

முன்னாள் கொலைக்குழு புளொட் மோகனின் நெருங்கிய சகாவான கந்தசாமி ரதீஷ்குமாரே கருணாவுக்கு இப்படுகொலைகளில் உதவிவருவதாகக் கூறும் பெற்றோர்கள், இதேபோன்று பல குடும்பங்களிடமிருந்து ஆட்களைக் கடத்திவைத்து 30 லட்சம் ரூபாய்களைக் கப்பமாகக் கேட்டுவருவதாகக் கூறுகின்றனர்.

கப்பம் அறவிடுதலினை நியாயப்படுத்திய ரதீஷ்குமார், தனது சகாக்களை வெளிநாடு அனுப்பிவைக்க இப்பணம் தேவைப்படுவதாகக் கூறியிருக்கிறான். மேலும், இவன் முன்னால் அரச ராணுவ கொலைப்படை உறுப்பினரான லெப்டினன்ட் கேர்ணல் நிசாம் முத்தலிப்புடன் நீண்டகாலம் கொலைகளில் ஈடுபட்டு வந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ரதீஷ்குமார் மற்றும் சீலன் ஆகிய துணைராணுவக் குழுக்களின் கடத்தல் மற்றும் படுகொலை நிபுணர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களுக்கு பல கடத்தல்களில் உதவிவருவதுடன், கப்பம் அறவிடுதல், படுகொலை செய்தல் ஆகியவற்றிலும் உதவிவருகின்றனர்.

Girl killed in Batticaloa

Edited by ரஞ்சித்
  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.