Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இக்கடத்தல்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கிழக்கில் செயற்பட்டு வரும் இரு துணை ராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இப்படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகின்றன. கொல்லப்பட்ட வர்ஷாவின் பாடசாலைப் புத்தகப்பை மற்றும் அவளது இன்னும் சில  உபகரணங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் அலுவலகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பிள்ளையான் குழுவினரே இக்கடத்தல் மற்றும் படுகொலையின் பின்னாலிருப்பதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. அதேவேளை சுமார் 2000 ஆயுததாரிகளோடு அரசாங்கத்தின் சுதந்திரக் கட்சியில் இணைந்த கருணா தனது அலுவலகங்களைச் சூறையாடிச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டும்  பிள்ளையான் தன்மீதான கடத்தல் மற்றும் கொலைப்பழியினை திசைதிருப்ப முயற்சிப்பது தெளிவாகிறது. கிழக்கு மாகாண மக்களின் உண்மையான கவலை இந்த இரு துணை ராணுவக் குழுக்களில் எது வர்ஷாவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறது என்பதல்ல, மாறாக இந்தக் கொலைகாரர்களையே தமது இரட்சகர்களாக, பாதுகாவலர்களாக உலகின் பார்வைக்கு அரசாங்கம் முன்வைத்து வருகிறது என்பதுதான்.

 

திருகோணமலை நகரில் இதே பாணியிலான கடத்தல்கள் கடந்த சில வாரங்களில் நடந்திருக்கிறது. ஒரு வர்த்தகர், சினிமாக் கொட்டகை முகாமையாளர், பஸ் நடத்துனர் ஆகியோர் உட்பட பலர் கப்பப் பணத்திற்காக இக்குழுக்களில் ஒன்றினால் அரச ஆசீர்வாதத்துடன் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

இன்றைய வன்முறைக் கலாசாரம் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள்.

 

1. கடத்தல்கள் என்பது நாளாந்த வாழ்க்கையின் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக இப்பகுதியில் மாறியிருப்பது, சட்டமும் நீதித்துறையும் இப்பிரதேசத்தில் முற்றாகச் செயலிழந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில், போரின் பின்னர் அரசு செய்திருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை சட்டம் ஒழுங்கினை இப்பகுதியில் அமுல்ப்படுத்துவதுதான். ஆனால் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையினையும் அரசு எடுக்க முன்வரவில்லையென்பதே உண்மை. இதற்கான காரணமாக முன்வைக்கப்படுவது, யுத்தம் இடம்பெறாத நாட்டின் தென்பகுதியில் கூட அரசு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கிறது அல்லது அதனால் முடியாமல் இருக்கிறது என்பதைத்தான். சாதாரண நிலைமை இருக்கும் தெற்கின் பல மாவட்டங்களிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறும் ஒரு அரசு போரிற்குள் இருந்து வெளியே வந்திருக்கும் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதுபற்றி அக்கறை கொண்டிருக்கும் என்பதை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது.

 

2. சட்டத்திற்கு உட்படாத, சட்டத்திற்குப் புறம்பான குழுக்களிடம் கிழக்கு மாகாணத்தைக் கையளிப்பது. நாட்டின் தென்பகுதியிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் தனக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு இம்மாகாணத்தின் அதிகாரத்தினை ஒப்படைத்திருப்பதென்பது விளங்கிக்கொள்ளக் கடிணமானது அல்ல. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு மக்கள் மீதான தனது அதிகாரத்தினை நிலைநாட்ட கொலைகாரர்களை, கடத்தல்க்காரர்களை துணைராணுவக் குழுக்களைப் பாவிக்க விரும்புகிறது.

 

 

3. கடத்தல்க்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பொலீஸாரினால் படுகொலைசெய்வதைக் காணும்போது சாதாரண பொதுமக்கள் அடையும் சந்தோஷம் அல்லது திருப்தி. பொலீஸாரைப் பொறுத்தவரை வர்ஷாவின் கொலைகாரர்களைச் சுட்டுக் கொன்றதில் திருப்த்திப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவருமே கொல்லப்பட்டுள்ளதையடுத்து இக்கடத்தல் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அத்துடன் இக்கடத்தல்காரர்களின் படுகொலைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்பினைப் பெற்றிருப்பது அவர்களின் வேலையினை இலகுவாக்கியிருக்கிறது. பொதுமக்களின் இவ்வாறான மனநிலை, ஒரு தோல்வியடைந்த, நீதியற்ற சமூகத்தில், அநாதரவாக அவர்கள் விடப்பட்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இப்படியான சமூகத்தில் கொலைகாரர்களை பொதுமக்கள் அடித்தே கொல்கிறார்கள் அல்லது காவல்த்துறை கொல்லும்போது அகமகிழ்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை நாம் இந்தியாவின் பீகாரிலும் நாள்தோறும் காண்கிறோம். பல சமயங்களில் பீகாரில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் பலர் குழுக்களாக பொலீஸாரினால் என்கவுண்ட்டர் பாணியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில இடங்களில் சந்தேக நபர்களை போலீஸார் தமது வாகனங்களில் கட்டி தெருக்களில் மக்கள் பார்த்திருக்க இழுத்துச் சென்று கொன்றதும் நடந்திருக்கிறது. மனித நேயமும், நீதியும் செத்துவிட்ட தேசத்தில் குற்றவாளிகளை கொடூரமான முறையில் பொலீஸாரோ அல்லது வேறு எவரோ கொல்லும்போது பொதுமக்கள் மகிழ்வதும், தமது பழியினைத் தீர்த்துக்கொள்வதும் நடக்கிறது. குற்றங்களுக்கான சரியான தண்டனை விசாரணைகள் ஊடாக, சட்டத்தினால் சரியான முறையில் வழங்கப்படவேண்டும் என்பது மக்களின் மனதிலிருந்து முற்றாகவே காணாமல்ப் போயிருக்கிறது.

 

4. வர்ஷாவின் கொலைகாரர்கள் இறந்ததாகக் கூறப்படும் பொலீஸாரின் நாடகபாணிக் கதையினை எதுவித கேள்விகளுமின்றி இச்சமூகம் ஏற்றுக்கொள்ள விரும்புவதோடு, இக்கடத்தல் குறித்தோ, இதன்பின்னால் உண்மையிலேயே இருக்கும் அரசுக்கு ஆதரவான கிரிமினல் குறித்தோ மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை அது கேட்க மறுக்கிறது. பொலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் கொலைகாரர்களின் மரணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனாலும்கூட, அரசாங்கமோ அல்லது ஏதும் ஒரு அமைப்போ இதுபற்றிய மேலதிக விசாரணைகளைச் செய்வதை மறுத்தே வருகின்றன. தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் வெளிக்கொணரப்படக்கூடிய உண்மைகள் அரசாங்கத்தையும், அரசுக்கு ஆதரவான சிலரையும், கூடவே மக்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்று அவை கருதுகின்றன. அரசாங்கத்தினது இந்த பாராமுகமும், உண்மையினைக் கண்டறிவதில் அதற்கு இருக்கும் உண்மையான தயக்கமும் வர்ஷாவின் கொலையின் பின்னால் இருக்கும் அரசுக்கு ஆதரவான சக்திகள் இம்மாதிரியான பாதகச் செயல்களைத் தொடர்ந்தும் செய்ய ஊக்கிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, பீகாரில் இருக்கும் மிகச் சிக்கலான சட்டம் ஒழுங்கு பிரச்சினையினை மத்திய அரசே கைவிட்டுள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவின் வன்முறைகள் மிகுந்த  மாநிலமாக மாறியிருப்பதுபோன்று, இலங்கையின் கிழக்கு மாகாணமும் அரசுக்கு ஆதரவான ஆயுததாரிகளால் மாற்றப்பட்டிருக்கிறது.

 

 

அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் அமிழ்ந்திருக்கும் ஒரு சமூகம்

 

இலங்கை இன்று அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் உறைந்திருக்கும் நீதியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. 6 வயதுப் பாலகியின் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்ட வகையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் கூட தகமையற்ற நாடாக அது மாறியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை வர்ஷாவின் படுகொலையானது இன்னொரு நிகழ்வு, இன்னொரு மரணம், அவ்வளவுதான். அம்மக்களைப் பொறுத்தவரை இந்தப் படுகொலையினையும் முடிந்தவரை வெகு சீக்கிரமாகவே மறந்துவிடவேண்டும். பாலகியின் கடத்தலையும், படுகொலையினையும் கொல்லப்பட்ட நான்கு கடத்தல்க்காரர்களின் தலையிலும் போட்டுவிட்டு, அவர்கள் தற்போது உயிருடன் இல்லையெனும் மனத் திருப்தியுடன் கடந்து சென்றால்ப் போதுமானது. மனித உயிரின் மீதான மதிப்பினை இழந்த இச்சமூகத்தின் இன்றைய மனநிலை, இம்மக்களை ஆளும் அரசாங்கத்திற்கு இனிமேல் ஒருபோதுமே நீதியால் வழிநடத்தப்படும் சமூகம் ஒன்றினை உருவாக்க  வேண்டிய தேவையினை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. மனித நேயத்தினை அழித்து, படுகொலைகளை அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வாக்கியிருக்கும் இலங்கையின் இன்றைய அரசாங்கம் இப்போது செய்வது தான் உருவாக்கிய வன்முறைகளுக்குப் பலியாகும் பாலகி வர்ஷா உட்பட அப்பாவிகளின் உயிர்களுக்காக முதலைக் கண்ணீர் சிந்துவதுதான்.  

நீதியினை விட்டு நீண்டதூரம் சென்றிருக்கும் அரசு ஒன்றினால் ஆளப்படும் மக்களே தமது சமூகத்தை மீளவும் நீதியின்பாற்பட்ட , சட்டத்திற்கு உட்பட்ட, மனித உயிர்களை போஷிக்கிற சமூகமாக மாற்றத் தலைப்பட வேண்டும். அவர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றமே வன்முறையற்ற , நீதியான சமூகம் ஒன்றினை உருவாக்க உதவும்.

 

ஆசிய மனிதவுரிமை கமிஷன்

 

இவ்வமைப்பு 1984 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஆசிய நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டது.

ஆங்கில மூலம் : ஆசிய மனிதவுரிமைக் கமிஷன்

https://www.scoop.co.nz/stories/WO0903/S00468/sri-lanka-east-has-become-bihar-like.htm

 

 

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 2
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2004 இற்கு முன்னரான கேர்ணல் கருணாவே, இப்போது நீ எங்கே இருக்கிறாய்?

தமிழ் சங்கம் இணையத்தளத்தில் சச்சி சிறிகாந்தா சித்திரை 2019 இல் எழுதிய கட்டுரை.

2004 இற்கு முன்னர் அனைவராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட கேர்ணல் கருணாவும், இன்று வெற்று விநாயகமூர்த்தி முரளீதரனுமாக மாறியிருக்கும் உனக்கு  நான் எழுதிக்கொள்வது. இன்றைய உனது நிலை என்ன? பங்குனி 2004 இல் எமது இனம் அறிந்திராத துரோகத்தைச் செய்துவிட்டு இறுமாப்புடன் நீ இருந்தபோது உனது புகழைக் காவிவந்த 800 சொற்கள் அடங்கிய பி பி ஸியின் பசப்புகளையும், அது உனக்கு உலகளவில் புகழ்தேடித் தந்ததாக நீ எண்ணியிருந்ததையும் மறந்திருக்க மாட்டாய். 

Karuna-Amman.jpg

உனது துரோகம் நிகழ்ந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் நீ இன்று செய்துவரும் செயல்கள் குறித்து என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் பதில் அளி.

2004 இற்குப் பிறகு நீ செய்துவருவதாகக் கூறும் உனது வீரப் பிரதாபங்கள், நீ யாருக்குத் துரோகமிழைத்து வெளியேறி எதிரியுடன் சேர்ந்தாயோ, அந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ ஆற்றலுக்கு நிகராக இருக்கும் என்று   உண்மையாகவே நம்புகிறாயா? 

 

இன்றைய உனது நிலை என்ன கருணா? இன்றும் ஈழத்தமிழர்களுக்கான தலைவனாக உன்னைக் கருதுகிறாயா? 

 

2004 இற்குப் பின்னர் நீ செய்துவரும் எந்தத் திருகுகுதாலமும் உன்மீது படிந்திருக்கும் நிரந்தரக் கறையான  "இனத்துரோகி " எனும் அவப்பெயரைக் கரைத்துவிட முடியும் என்று நீ நம்புகிறாயா? அண்மைக்காலமாக அரசியலில் இருப்பதாகக் கூறுகிறாயே, அதில் எத்தனை வெற்றிகளை நீ பெற்றிருக்கிறாய்? தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும், பின்னர் அங்கிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாவிக்கொண்டிருக்கிறாய். 2019 இல் நீ இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்குப் பணிவிடை செய்கிறாயா அல்லது அவனையும் விட்டு விலகி மைத்திரியிக்குப் பணிவிடைகள் செய்துவருகிறாயா? 

உனது வீரப் பிரதாபங்களைக் காவிவந்த பி பி ஸி யின் செவ்வியில் உனது மொழிபொஎயர்ப்பாளராக நின்றிருந்த வரதனுக்கு என்னவாயிற்று? அவன் இப்போது உன்னுடன் இருக்கிறானா, அல்லது அவனைக் கொன்றுவிட்டாயா? இதுபற்றியும் எங்களுக்கு நீ கூறமுடியுமா கருணா ? 

2004 இல் நீ அரியணை மீது வீற்றிருந்து பி பி ஸி இற்கு வழங்கிய செவ்வியில், "என்னுடன் 2000 பெண்போராளிகள் உட்பட, 5000 போராளிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று இறுமாப்புடன் கூறியிருந்தாய். இந்தப் பசப்புகளை விரும்பியே காவித்திருந்த இந்திய செய்திச் சேவைகளுக்கு நீ ஒரு பெருந்தளபதியாகவும், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ்ந்த மாபெரும் சேனையாகவும் தெரிந்ததில் எனக்கு வியப்பில்லை. சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீ அன்று கூறிய 5000 "பெரும்படையில்" இன்று உன்னுடன் கூட இருப்பவர்கள் எத்தனை பேர் கருணா? 

உனது இனத்துரோகத்திற்காக புலிகள் உன்னைத் தூக்கி எறிந்தபொழுது. பல புலியெதிர்ப்பு கருத்தாளர்களான கே டி ராஜசிங்கம், டி பி எஸ் ஜெயராஜ், தயான் ஜயதிலக்க மற்றும் தமிழ்நாட்டின் இந்து கற்பனைவாதிகள் உன்னை வராது வந்த மாமணியாகப் பார்த்து ஆரத்தழுவி ஆதரித்து எழுதியதை நான் பார்த்தேன். ஈழத்தமிழனின் புதிய துருவ நட்சத்திரமாக அவர்கள் உன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்ததையும் நான் பார்த்தேன். ஆனால், அவர்களின் பேனாக்களில் இருந்து நீ இன்று முற்றாக மறைந்துவிட்டாயே, அது ஏன் கருணா? 

2004 இற்குப் பின்னரான உனது வீழ்ச்சியென்பது எத்தனை கீழ்த்தரமானது , கேவலமானது என்பதை நீ உணர்கிறாயா? 

1996 இல் தாரகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். அதி அவர் இப்படி எழுதுகிறார்.

"விடுதலைப் புலிகள் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஒரே ராணுவ நிர்வாகப் பிரதேசமாகவே கையாள்கிறார்கள். இப்பிரதேசத்திற்கான ஒட்டுமொத்தத் தளபதியாக கருணாவே திகழ்கிறார். ஒரு சில உயர் தளபதிகளைத் தவிர, கிழக்கின் அனைத்துப் புலிப் போராளிகளும் அவரை கெளரவத்துடன் அம்மான் என்றே அழைக்கின்றனர்".

உன்னை ஒரு ஒப்பற்ற தளபதியாக எண்ணி, 2005 இல் அமெரிக்கச் சஞ்சிகையொன்றில் குடிபோதையில் உளறிய ஒருவர், "கருணா கிழக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியதிகாரத்தை அரசாங்கத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் போராடி நிலைநாட்டப் பார்க்கிறார். ஆனால், பிரபாகரனின் ராணுவப் பலத்தின் முன்னால் கருணாவால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும், ஆகவே அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பிச் சென்றாவது தனது மக்களின் விடுதலைக்காகப் போராடுவார். கிழக்கில் புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் அவர்கள் மீட்டெடுப்பது சாத்தியமில்லை" 

Pattukottai-Kalayanasundaram.jpg
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வெறும் 30 வெள்ளிகளுக்காக நீ ஈழத்தமிழரிடம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த அபிமானத்தையும், கெளரவத்தையும் 2004 துரோகத்துடன் ஒரே இரவில் இழந்தாய். விடுதலைப் புலிகளால் உனக்கு வழங்கப்பட்ட கெளரவமான "கருணா" எனும் பெயர் கூட 2009 உடன் உன்னை விட்டு ஓடிவிட்டது. அதற்குப் பின்னர் வந்த 10 வருடங்களில் உன்னை ஆட்டுவிக்கும் சிங்கள, இந்திய புலநாய்வுப்பிரிவுகளும்  இன்னும் இன்னோரென்ன சக்திகளும், உனது இனத்துரோகத்திற்கான பரிசாக  உன்னை உயிருடன் புதைத்துக்கொண்டிருக்கின்றன. உனது கதைதான் எவ்வளவு கேவலமானது? 1957 இல் மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் உனக்கும் எவ்வாறு பொருந்திச் செல்கிறதென்பதைப் பார்.

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது? நிலை கெட்டுப் போன நய வஞ்சகரின் நாக்குத்தான் அது!".

Edited by ரஞ்சித்
  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணாவின் அரசியல் : புரூட்டஸிலிருந்து லெப்பிடஸ் வரை

ஆக்கம் : சச்சி சிறிகாந்தா, பங்குனி 20, 2009
தளம் : இலங்கை தமிழ் சங்கம்

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பலவீனங்களுக்கும், அவரது திருகுதாலங்களுக்கும் பணமே முக்கியமான காரணமாக அறியப்பட்டாலும் கூட, அதுபற்றி ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலமைக்கும் கருணாவுக்குமிடையிலான  பிணக்கின் அடிப்படைக் காரணமே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நிதி மீதான தனக்கிருக்கும் தங்குதடையின்றிய அதிகாரம் தொடர்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், தனது நிதிக் கையாடல்களை மறைப்பதற்கும், அந்த நிதிமீதான தனது பிடியினைத் தொடர்ந்து பேணுவதற்கும் அவர் பாவித்த காரணமே பிரதேசவாதம் என்றால் அது மிகையில்லை. 

Karuna-and-Pillyan.jpg

அப்படியானால், தான் உருவாக்கிய கட்சியிலிருந்து, தனது அடியாளினால் கருணா தூக்கியெறியப்பட்டு, கிழக்கிலிருந்து துரத்தப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? அதுகூடப் பணம் தான் !

2002 இலிருந்து 2003 வரையான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சமாதானத் தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக கருணா செயற்ப்ட்டுவந்தபோது, சில முக்கிய நாடுகளின் புலநாய்வுத்துறையினரால் விரிக்கப்பட்ட பணத்தின் அடிப்படையிலான தந்திர வலையில் பணத்தாசை பிடித்த கருணா வீழ்ந்தார் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதுதான்.

தனது இனத்திற்குத் துரோகம் இழைத்த கருணாவின் அரசியல் வரலாறு கடந்த 5 வருட காலத்தில் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது? கருணா எனப்படும் முரளீதரன் நான்கு குறிப்பிடத்தக்க பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்.

அவற்றில் முதலாவது, புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சிக்கு தானே தலைமை தாங்குவதெனும் மாயையினைத் தோற்றுவித்திருப்பது. இதில் ஈழத்தமிழருக்கான புதிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதும் அடங்கும்.

இரண்டாவது, தானே உருவாக்கிய கட்சியிலிருந்து தனது அடியாளினால் மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டது.

மூன்றாவது, போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குச் சென்று அங்கே  குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது.

நான்காவது, இனக்கொலையாளி மகிந்த ராகபக்ஷவைத் தொடர்ச்சியாகத் துதிபாடிவருவதால் மகிந்தவின் பெருத்துவரும் கோமாளிகளின் அமைச்சரவையில் அவர் அடைந்த பிரதியமைச்சர் எனும் பதவி.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் கருணா பற்றி நான் எழுதியதை ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்,

"தென்னாசியாவின் அரசியலில், அரசியல் சுயநலம் கொண்டவர்கள் தமது சுயநலத்தினை மறைக்கும் ஒரு கோவணமாக புது அரசியல் கட்சிகளைத் தொடங்குவார்கள். தமிழர்களில் புதிதாக கட்சி தொடங்கி, தமிழரின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொண்டவர் தந்தை செல்வ்நாயகத்திற்குப் பின்னர் எவருமில்லை. ஆனால், செல்வாகூட 1949 இலிருந்து 1956 வரையான காலப்பகுதியில் தனது நம்பகத்தன்மையினை நிலைநாட்ட கடிணமாகப் போராடவேண்டியிருந்தது. ஆனால், மக்கள் நலன் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத அக்கறையும், அதனைப் பெற்றுக்கொடுக்க அவர் பூண்டிருந்த உறுதிப்பாடும் அவருக்கு உதவின. ஆனால், அவருக்குப் பின்னால் வந்த அனைவருமே செல்வாவின் அரசியலைப் போன்று செய்யப் புறப்பட்டு படுதோல்வியையே அடைந்தார்கள் என்பது வரலாறு".

 
அதன்படி, கருணாவின் வீரப்பிரதாபங்களை புளகாங்கிதப்பட்டு பறைசாட்டுவர்களின் கருத்தைப் பார்க்கலாம்,

57ae8-1-d6a4954cb52b252872529.jpg

2004 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கருணா புலிகளின் புதிய தலைமை  இனிமேல் தானே  என்று உரிமை கோரியிருந்தார். கருணாவின் பேச்சாளரின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை முழுவதுமாக விழுங்கிக்கொண்ட கொழும்பையும், சென்னையையும் தளமாகக் கொண்டு இயங்கும் கருணா ஆதரவுப் பத்திரிக்கை ஜாம்பவான்கள் புலிகளை இரு பிரிவுகளாக உடைத்து "வன்னிப் புலிகள்" என்றும் மட்டு புலிகள்" என்றும் அழைத்து சுய இனபம் அடைந்துகொண்டார்கள். 

பாங்கொக்கை தளமாகக் கொண்டியங்கும் ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையின் கே டி ராஜசிங்கம், கருணாவின் ஊதுகுழல் வரதன் ஆகியோர் கருணாவின் தலமையிலான "மட்டு புலிகள்" பிரபாகரன் தலைமையிலான "வன்னிப் புலிகள்" ஐக் காட்டிலும் பலமானவர்கள் என்று பிரச்சாரங்களை ஏவிக்கொண்டிருந்தார்கள். கருணாவின் பேச்சாளரான வரதன் என்பவர் கருணாவுடன் குறைந்தது 6,000 போராளிகள் இருப்பதாக சத்தியம் செய்துவந்தார்.

அவ்வருடத்தின் ஐப்பசி மாதத்தில் கருணா தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும், அதன் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றும் அறிவித்தார். கருணாவின் கட்சியின் பெயரில் இருக்கும் சொற்கள் மிகக் கவனமாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். கருணாவை அன்று வழிநடத்தி வந்தவர்கள் இப்பெயரின் மூலம், புலிகளுக்கான புதிய தலைவராக கருணாவைப் பிரகடனப்படுத்தியதுடன், தமிழரின் இலட்சியமான ஈழம் எனும் சொல்லையும் கருணா நிராகரித்துவிட்டார் எனும் கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், இவை எதுவுமே தமிழ் வாக்காளர்களைக் கவரவில்லை என்பது வேறுவிடயம்.

இலங்கையில் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு முகத்தினையும், எதிராளிகளுக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி பத்தி எழுதும், அரசியல் வியாபாரியான தயான் ஜயதிலக்க தான் கருணா பற்றி பெருமையாக எழுதிய பந்தியொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், 
"கருணா நான்குவகையான வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். முதலாவது இன்றுவரை உயிருடன் இருப்பது. இரண்டாவது சித்திரை மாதத்தில் கொழும்பிற்குப் பின்வாங்கிச் சென்றது, கொட்டாவைப் பகுதியில் தனது சகாக்காளில் எண்மரைப் பலிகொடுத்தது, தனது சகோதரர் ரெஜியை இழந்தது ஆகிய பின்னடைவுகளுக்குப் பின்னரும் கூட  தொடர்ந்தும் இயங்கிவருவது. மூன்றாவது சர்வதேசத்தில் பிரபலமானவராக, பலராலும் பேசப்படுபவராக மாறியது. நான்காவது தனது ராணுவ வல்லமையினையும், சாதுரியத்தையும், அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்துவது". 

z_p04-Is-Karuna1.jpg

ஆனால், 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அன்று கருணா ஆரம்பித்த அவரது அரசியல் கட்சி இன்று அவரிடம் இல்லை. அவரது அடியாளான பிள்ளையான் அக்கட்சியைக் கையகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் கருணாவின் ராணுவ வல்லமையும், சாதுரியமும் போலியானவை என்று அவரது அடியாளினூடாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பற்றிச் சர்வதேசத்தில் பேசப்படும் ஒரே விடயம் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குத் தப்பியோடி, அங்கே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டும் தான். ஆனால், தயான் ஜயதிலக்க கூறுவதில் ஒரு உண்மையிருக்கிறது, அதாவது கருணா இன்றுவரை உயிருடன் இருப்பது. ஆனால் உயிருடன் இருப்பதற்காக அவர் கொடுத்த விலை  அவரது சுய கெளரவம், தன்மானம், தமிழர் எனும் அடையாளம் என்று இப்படிப் பல. இன்று அவர் உயிருடன் இருந்தாலும் அவரது கழுத்தைச் சுற்றியும், விதைப்பைகளை இறுக்கியும் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறுகளை அவர் அறியாமல் இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.
 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணாவும் கே டி ராஜசிங்கமும் : இரு பாம்புகளின் இணைவு

K.T.-Rajasingham-262x300.jpg?resize=262%2C300

கருணாவுக்கான "அன்டன் பாலசிங்கம்" ஆக கே டி ராஜசிங்கமே தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி சில வருடங்களிலேயெ கசத்துப்போனது. வடமாகாணத்தானை எதிர்த்து, கிழக்கு மாகாண மக்களுக்கான விடுதலையினைப் பெறப் போராடுவதாகக தன்னை வரிந்துகொண்டிருந்த கருணாவுக்கு வடக்கு மாகாணத்தான் ஒருவனே அரசியல் ஆலோசகராக செயற்படுவதென்பது நிச்சயமாக ஒரு தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது ரகசியமல்ல.

ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்திருக்காது. ஏசியன் ட்ரிபியூன் எனும் சஞ்சிகையில் 2007 கார்த்திகையில் எழுதிய வோல்ட்டர் ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார்,

"கருணா ராஜசிங்கத்தைத் தொடர்ச்சியாக பயமுறுத்தி வந்திருந்தார். வடமாகாணத்திலிருந்து வந்த கே டி ராஜசிங்கம் தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது, அடிக்கடி கருணாவின் உதவியாளர் ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு மிரட்டி வருவதாகக் கூறியிருக்கிறார். கருணாவின் நெருங்கிய சகாவான ஒருவர் கே டி ராஜசிங்கத்திற்கு விடுத்த அச்சுருத்தலில், ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிபியூன் இதழில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவுக்கெதிரான செய்திகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பிளவுகளைப் பற்றியோ, அல்லது இக்குழுக்களுக்கிடையிலான படுகொலைகள் பற்றியோ ராஜசிங்கம் எதுவும் எழுதக்கூடாதென்றும் அச்சுருத்தப்பட்டிருக்கிறார். இதே காலப்பகுதியில்த்தான் கருணா வெளிப்படையாகவே பிள்ளையான் குழு ஆயுததாரிகளையும், முக்கியஸ்த்தர்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது".

கே டி ராஜசிங்கம் என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதுடன், தற்போது செயலற்றூப்போயிருக்கும் தெவச எனும் சுயாதீனப் பத்திரிக்கையாளர்கள் அமைப்பிலேயே தனது ஊடகவியலாளர் பணியை ஆரம்பித்திருந்தார். தற்போது ஐரோப்பாவில் வாழ்ந்துவரும் ராஜசிங்கத்துக்கு புலிகளாலும் அச்சுருத்தல் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களின் இருப்பிற்கெதிராகவும், புலிகளின் தலைமைக்கெதிராகவும் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதேவேளை, ராஜசிங்கத்தை தொலைபேசியில் மிரட்டிய கருணா குழு முக்கியஸ்த்தர்," உன்னை ஐரோப்பாவில் வைத்துப் போடுவதற்கும் எம்மால் முடியும், அதனால் எம்மைப்பற்றி எழுதுவதை நிறுத்து" என்று கூறியதாகத் தெரிகிறது.


ஆரம்பத்தில், கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று, ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கப் போவதாக கூறியிருந்தபோது, ராஜசிங்கம் அதனை வரவேற்றிருந்தார். ஆனால், பிற்காலத்தில் கருணா பற்றிப் பேசிய ராஜசிங்கம், "கருணாவும் புலிகள் போன்றே செயற்படுவதால், நான் அவரில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

2007 கார்த்திகையில் சண்டே லீடர் பத்திரிக்கையில் சொனாலி சமரசிங்க எனும் ஊடகவியலாளர் எழுதிய கட்டுரையொன்றில், கருணாவை ஓரங்கட்ட அல்லது கொன்றுவிடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஐ நா மன்ற இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அறையிலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மகிந்தவின் உத்தியோக பூர்வ அறையான 1727 இலக்க இன்டர் கொன்டினென்ட்டல் உல்லாச விடுதியில் அவரை 15 ஆம் திகதி, ஜூன் 2007 சந்தித்த கே டி ராஜசிங்கம் கருணாவுக்கான சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என்றும், பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. மகிந்த அப்போது ஐ நா வில் சர்வதேச தொழில் அமைப்பின் கலந்துரையாடல்களில் பங்குபற்ற வந்திருந்தார்.

2007, கார்த்திகை 2 ஆம் திகதி கருணா லண்டனில் கடவுச் சீட்டு மோசடிக்காகக் கைதுசெய்யப்பட்டபோது முன்னர் அவரை வானளவப் புகழ்ந்து கிலாகித்து எழுதிய பி பி ஸி இப்படிக் கூறியது, " அவர் கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் பெருந்தளபதியாக இருந்தவேளையில் அவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தளபதியாக வலம் வந்தார், ஆனால் இன்றோ அவரின் கீழ் வெகு சிலரே இன்னமும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிற கொசுறுச் செய்தியுடன் அவரது கைதுபற்றி செய்தி வெளியிட்டிருந்தது. லண்டனில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து கருணா மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார். வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது இச்சைகளுக்காக துரோகமிழைத்து, அதனை மறைக்க அரசியல் வேடம் பூண்டு, கிழக்கு மாகாண மக்களுக்கான விடிவெள்ளியென்று தன்னை முன்னிலைப்படுத்தி, தனது அவலட்சணங்களை மறைக்க அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவரிடமிருந்து முற்றாகக் கைமாற்றப்பட்டிருந்ததுடன், அவருடைய முன்னாள் அடியாளும், இந்நாள் விரோதியுமான பிள்ளையானின் கைக்குள் சென்றிருந்தது.


மகிந்த ராஜபக்ஷ எனும் தந்திரச் சிங்கள ஜனாதிபதி, தனது நெடுங்கால நண்பனான கே டி ராஜசிங்கத்தின் வேண்டுதல்களைப் புறக்கணித்திருப்பது தெரிகிறது. ராஜசிங்கமும், மகிந்த ராஜபக்ஷவும் 1970 களிலிருந்து மிக நெருங்கிய சிநேகிதர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. ராஜசிங்கம் வடமாகாணத்தின் சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை தனது ஊரான பருத்தித்துறைக்கு அழைத்து விருந்துபசாரம் நிகழ்த்தியது நடந்திருக்கிறது. இக்காலர்த்தில் கருணா கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு விரல் சூப்பும் பாலகனாக இருந்திருக்கலாம். ஆனால், 2009 இல் மகிந்தவைப் பொறுத்தவரையில் கருணா எனும் பெயர் தனது அரசியல் ஆதாயத்திற்கு உதவுவதுபோல, தனது பால்ய நண்பனான ராஜசிங்கத்தின் ஆலோசனைகள் உதவாது என்பதை நன்கே புரிந்துவைத்திருந்தார். அதனாலேயே, ஐரோப்பாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தன் இனத்திற்கெதிராகத் தொடர்ந்து வக்கிரம் கக்கும் பந்திகளை அவர் சிங்கள இனவாதிகளை மகிழ்விக்க எழுதிவந்தபோதும்கூட, அவரைப் புறந்தள்ளி கருணாவை தனது கோமாளிகள் அமைச்சரவையில் ஒரு பிரதியமைச்சராக மகிந்த அமர்த்திக்கொண்டார்.

ஆங்கிலமூலம் : சச்சி சிறிகாந்தா 
தமிழில் : ரஞ்சித்

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எனக்கு கருணா பிரிவில் கருணாவிற்காக கூத்தாடியோரில் ஒரு சந்தேகம்.

இவர்கள் பற்றியும் இத்தொடரில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (இன்று தான் அறிந்தேன். அதான் கொண்டுவந்து போட்டனான்)

  • கருணாவோடு அன்ரன் என்னும் கட்டளையாளர் ஒருவன் இருந்தான். இவனிற்கு என்ன நடந்தது?

May be an image of 1 person and text that says "இனத்துரோகி தளபதி அன்ரன்"

  • கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?

No photo description available.

 

 

  

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, நன்னிச் சோழன் said:

எனக்கு கருணா பிரிவில் கருணாவிற்காக கூத்தாடியோரில் ஒரு சந்தேகம்.

இவர்கள் பற்றியும் இத்தொடரில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (இன்று தான் அறிந்தேன். அதான் கொண்டுவந்து போட்டனான்)

  • கருணாவோடு அன்ரன் என்னும் கட்டளையாளர் ஒருவன் இருந்தான். இவனிற்கு என்ன நடந்தது?

May be an image of 1 person and text that says "இனத்துரோகி தளபதி அன்ரன்"

  • கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?

May be an image of 1 person and text that says "தளபதி சயந்தினி"

 

 

  

"கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?"

இவர் பின்பு புலிகளிடம் வந்து சரணடைய உறவினர்கள் மூலம்  தூது அனுப்பியதாக அறிந்தேன் 
அதற்கு முன்பே கொழும்புவரை கருணாவோடு சென்ற சில பெண் போராளிகள் சரணடைந்து 
இருந்தார்கள் .. அவர்கள் கொடுத்திருந்த தகவலின் அடிப்படையில் இவர் மிக பெருத்த குற்றங்களில் 
ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ........ ரமணன் அவர்கள் இவரை சரணடைய விரும்பவில்லை என்றும் 
நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அறிந்தேன்.

எல்லாம் கேள்வி பட்ட்துகளே 
நாம் முன்பு கேள்விபட்டவைகள் பல பொய்கள் என்று பின்பு அறிந்தேன் 
ஒருவர் மீது சும்மா வீண் பழி சுமத்துவது தேவையற்றது 
ஆதலால் நான் அறிந்ததை எழுதவில்லை. (பல பின்பு பொய் என்பதையும் தெரிந்துகொண்டேன்)

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
9 hours ago, Maruthankerny said:

"கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?"

இவர் பின்பு புலிகளிடம் வந்து சரணடைய உறவினர்கள் மூலம்  தூது அனுப்பியதாக அறிந்தேன் 
அதற்கு முன்பே கொழும்புவரை கருணாவோடு சென்ற சில பெண் போராளிகள் சரணடைந்து 
இருந்தார்கள் .. அவர்கள் கொடுத்திருந்த தகவலின் அடிப்படையில் இவர் மிக பெருத்த குற்றங்களில் 
ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ........ ரமணன் அவர்கள் இவரை சரணடைய விரும்பவில்லை என்றும் 
நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அறிந்தேன்.

எல்லாம் கேள்வி பட்ட்துகளே 
நாம் முன்பு கேள்விபட்டவைகள் பல பொய்கள் என்று பின்பு அறிந்தேன் 
ஒருவர் மீது சும்மா வீண் பழி சுமத்துவது தேவையற்றது 
ஆதலால் நான் அறிந்ததை எழுதவில்லை. (பல பின்பு பொய் என்பதையும் தெரிந்துகொண்டேன்)

தகவலுக்கு மிக்க நன்றி மருதங்கேணி அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நன்னிச் சோழன் said:

எனக்கு கருணா பிரிவில் கருணாவிற்காக கூத்தாடியோரில் ஒரு சந்தேகம்.

இவர்கள் பற்றியும் இத்தொடரில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (இன்று தான் அறிந்தேன். அதான் கொண்டுவந்து போட்டனான்)

  • கருணாவோடு அன்ரன் என்னும் கட்டளையாளர் ஒருவன் இருந்தான். இவனிற்கு என்ன நடந்தது?

May be an image of 1 person and text that says "இனத்துரோகி தளபதி அன்ரன்"

  • கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?

No photo description available.

 

 

  

புலிகளின் கிழக்குப் பிராந்திய தகவல்களின்படி கருணாவின் இரு தளபதிகளான ஜிம் கெலித் தாத்தா, ரொபேட் மற்றும் பேச்சாளர் வரதன், நிதிப்பொறுப்பாளர் குஹனேஸ், விசாலகன் அணிப்பொறுப்பாளர் ஜீவேந்திரன், மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதி நிலவினி, கிழக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையாளர் துரை, டீடோர் பொறுப்பாளர் துரை, நெருங்கிய சகா இலங்கேஸ் மற்றும் ஐந்து மெய்ப்பாதுகாவலர்கள் ஆகியோரே தரவைப் பகுதியிலிருந்து ஞாயிறு இரவு தப்பியோடியுள்ளதாக கூறியிருக்கின்றனர்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரஞ்சித் said:

பேச்சாளர் வரதன்

இப்பவும் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இவர் கருணா பிளவுக்கு முன்னர் புலிகளுடன் வேலை செய்தவரா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, கிருபன் said:

இப்பவும் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இவர் கருணா பிளவுக்கு முன்னர் புலிகளுடன் வேலை செய்தவரா? 

 

இவர் கருணாவின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் . பிரிவின் முன்னர்  இருந்தவரா என்று தெரியவில்லை. 

1 hour ago, நன்னிச் சோழன் said:

தகவலுக்கு மிக்க நன்றி மருதங்கேணி அவர்களே

கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம்  இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை.

பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். 

அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம்

 

புலிகளிடமிருந்து துரோகி கருணா பிரிந்துசென்ற நாட்களில் ர. ஷான் என்பவரால் இலங்கைத் தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தளத்தில் வந்த கட்டுரை

TamilNet: 20.11.02 'Col. Karuna's approach very positive' -Maj. Gen.  Kottegoda

கடந்தச் ஞாயிற்றுக்கிழமை , 20/06/2004 அன்று பி பி ஸி தமிழ்ச் சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் பின்வருமாறு கூறினார், " ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பிலேயே கொழும்பில் தங்கியிருந்தோம். பின்னர் கருணா வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்". 

TamilNet: 24.06.04 SL Government admits SLA complicity in Karuna affair

நிலாவினியும் இன்னும் வேறு நான்கு பெண்போராளிகளும் கடந்த 18/06/2004 அன்று கொழும்பில், கருணா மற்றும் இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பி, புலிகளுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். சோலையகத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிலாவினியுடன் மேலும் மூன்று பெண் போராளிகளும் பிரசன்னமாகியிருந்தனர். கருணாவின் பின்னால் நின்று அவரை இயக்குவிப்பது அரசுதான் என்பதற்கான பலமான சான்றுகளைப் புலிகள் இப்போது வைத்திருக்கிறார்கள் என்பதை அரசு இப்போதாவது உணர்ந்துகொள்ளவேண்டும்.

Ali Zahir Moulana on Twitter: "🌳 ❌ 1️⃣ for the Batticaloa Electorate. Your  support is greatly appreciated!… "

நிலாவினி தொடர்ந்தும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மெளலானாவே தனது சொந்த வாகனத்தில் கருணாவையும், அவரோடு இருந்தவர்களையும் ஏற்றிக்கொண்டுவந்து கொழும்பில் நட்சத்திர விடுதியான ஹில்ட்டன் விடுதியில் 3 நாட்கள்  தங்கவைத்ததாகக் கூறினார். அதன் பின்னர் கருணா,  அவரது ஆலோசகர் வரதன் உட்பட தாம் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புமிக்க வீடொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், கருணாவைச் சந்திக்க ராணுவ புலநாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாம் அங்கு தங்கியிருந்த 7 அல்லது 8 நாட்களில் பலமுறை வந்துசென்றதாகவும் கூறினார்.

பின்னர் அவர்கள் இலங்கை ராணுவத்தின் முகாம்கள் அமைந்திருந்த நாரஹேன்பிட பகுதியில் , அப்பொல்லோ மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருந்த ராணுவப் பாதுகாப்பு வீடொன்றில் தங்கவைப்பட்டதாகத் தெரிகிறது. ஆனி 13 ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து கருணாவும் அவரது தோழர்களும் தப்பியோடி ஏறத்தாள 3 மாதங்களுக்குப் பிறகு தம்மைச் சந்திக்க வந்த கருணா, தானும் தனது குடும்பமும் வெளிநாடொன்றிற்குப் போகப் போவதாகக் கூறிவிட்டு ராணுவ வாகனம் ஒன்றில் ஏறிச்சென்றதைத் தாம் கண்ணுற்றதாக அவர் மேலும் கூறினார்.

கருணா அங்கிருந்து சென்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்த தனது உறவினர் ஒருவருடன் தொடர்புகொண்ட நிலாவினியும் வேறு 4 பெண்போராளிகளும், அவரின் உதவியோடு அங்கிருந்து தப்பிவந்ததாக கூறப்பட்டது. நிலாவினியும் கூற்றுப்படி, கருணா தமது வீட்டிலிருந்து சென்றபின்னர், அவ்வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பினை ராணுவம் வெகுவாகத் தளர்த்தி விட்டிருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தாம் தப்பிவந்துவிட்டதாகவும் அவரால் கூறப்பட்டது.

நிலாவினியின் இந்தப் பகிரங்கமான கூற்று இலங்கை ராணுவமே கருணாவை வழிநடத்துகிறதென்பது உறுதிப்படுத்தப்படுவதோடு, செய்தியாளர்களிடம் கூறிய விடயங்களைக் காட்டிலும் நிலாவினி புலிகளிடம் இன்னும் பல விடயங்களைப் போட்டு உடைத்திருப்பர் என்பதை நாம் ஊகிக்கமுடியும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட தளபதியான ரமேஷ் இச்செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க ராணுவம் முயல்வது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.

கருணா கொழும்பிற்குத் தப்பிச் செல்வதற்கு அலிசாகீர் மெளலான செய்த உதவியென்பது வெறுமனே தனிப்பட்ட ரீதியில் செய்யப்பட்ட உதவியென்று கடந்து சென்றுவிடமுடியாது. இவ்வாறான மிகவும் ஆபத்தான உதவியொன்றைச் செய்வதென்பது அரசியல் ரீதியிலும், அவரின் சொந்தப் பாதுகாப்பு ரீதியிலும் மிகக் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது. கருணாவுடனான சிநேகம் மட்டுமே அலிசாகீர் மெளலானாவுக்கு இந்தச் செயலைச் செய்யும் தைரியத்தை நிச்சயம் கொடுத்திருக்காது. இலங்கை ராணுவத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலும், மெளலானாவின் பாதுகாப்பிற்கான அரசின் உத்தரவாதமும் இல்லாமல் நிச்சயமாக அவர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார் என்பது திண்ணம். இலங்கை ராணுவத்தினருடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் அலிசாகீர், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லயனல் பலகல்லவின் நெருங்கிய நண்பர் என்பதும், அவர்மூலமாக ஜனாதிபதி சந்திரிக்காவின் நட்பைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கை ராணுவம் கருணாவைப் பாதுகாப்பாக கொழும்பிற்குக் கொண்டுவந்ததுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை, மாறாக அவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு,  இயக்கியும் வருகிறது. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம்

DAYA MASTER & KARUNA AMMAN CONFIRM PRABHAKARAN's IDENTITY | Sri Lanka  Army

 

தமது எதிர்கால நடவடிக்கைகளுக்காக மட்டுமன்றி கருணவைப் பாதுகாத்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் இலங்கை ராணுவத்திற்கு இருக்கிறது. தமிழினத்திற்கெதிராகவும், சிங்களவர்களுக்குச் சார்பாகவும் கருணா செய்த காரியம் நிச்சயமாக இலங்கை அரசையும் ராணுவத்தையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. புலிகளுக்கெதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக பல ராணுவத் தளபதிகளோடும் கருணா மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்திருந்தார் என்பது தெளிவாகிறது. சிங்கள பெளத்த இனவாதிகளிடமிருந்து கருணாவுக்குக் கிடைத்துவரும் ஆதரவினையும், பாராட்டுதல்களையும் பார்க்கும்போது சிங்கள தேசத்தின் எதிர்கால நலன்களுக்கு கருணா தேவைப்படுவார் என்பதைக் காட்டிலும் வேறு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் கருணாவின் சிங்களவர்களுக்கான சேவைகள் என்பதைக் காட்டிலும், கருணா பாரிய வெற்றியொன்றினைச் சிங்களவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை இந்த சிங்கள புத்திஜீவிகளும், இனவாதிகளும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். இந்தப் புத்திஜீவிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கத்தின்மூலம், தமிழர்களுக்குக் கருணா இழைத்த துரோகம் சிங்களவர்களைப் பொறுத்தவரை எத்துணை பெறுமதிவாய்ந்தது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது.

பி பி ஸி தமிழ்ச்சேவைக்கு செவ்வியளித்த இன்னொரு ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா பேசுகையில், கருணாவை பிற்காலத்தில் தமிழர்களுக்கெதிரான துரோகச் செயல்களுக்காக அரசு பாவிக்க முயலலாம் என்று தொனிப்படக் கூறியிருந்தார். இப்போதைக்கு, கருணா ராணுவத்தினரின் கடுமையான பாதுகாப்பின்கீழ் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்துவருகிறார் என்பது மட்டும் உறுதியாகிறது. ஆகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காடுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், வெளியேயும் தமிழர்களும், போராளிகளும் கொல்லப்படுதலின் பின்னால் கருணாவின் பெயரைப் பாவித்து ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் ஊகிக்கலாம். 


மட்டக்களப்பில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் படுகொலைகளின்பொழுது, கொலையாளிகள் வெள்ளைவான்களில், ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலமாகியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இவ்வாறான செய்திகளை இலகுவாகப் புறந்தள்ளிவிட  முடியாது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருக்கும் ராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஆயுததாரிகளே இக்கொலைகளில் ஈடுபட்டுவருவதால், நிச்சயமாக அவர்கள் ராணுவத்தினராகவோ அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவோதான் இருக்கவேண்டும். 
இத்தாக்குதல்களை ராணுவமோ அல்லது ராணுவத்தின் தூண்டுதலால் வேறு சிலரோ செய்வதென்பது புரிந்துணர்வு உடன்பாட்டினை வேண்டுமென்றே மீறும் ஒரு செயலாகப் பார்க்கப்படவேண்டும். கருணா இன்னமும் கொழும்பில் தங்கியிருக்கும் நிலையில், மட்டக்களப்பில் புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் ராணுவமே ஈடுபடுவதான பாரிய சந்தேகம் நிலவுகிறது. புலிகள் மீதான ராணுவத்தினரின் தாக்குதல்கள் விபரீதத்தில் முடியவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. புலிகளுக்கெதிரான ராணுவத்தின் இந்த உளவியல்ரீதியிலான தாக்குதல்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. வெற்று அறிக்கைகளுடன் மட்டுமே இவர்கள் நின்றுவிடாது, இந்த சினமூட்டும் தாக்குதல் நிறுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியமானது.  யுனிசெப் அமைப்பினைப் போன்று தமிழரின் விடுதலைப் போராட்டத்தினைகொச்சைப்படுத்த அரசால் பாவிக்கப்படாமல் சுயாதீனமாக இயங்கி தமிழரின் அவலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம்

Sri Lankan President Chandrika Kumaratunga casts her vote for the  parliamentary elections in Attanagalla village in the Gampaha district, Sri  Lanka on April 2, 2004. More than 12 million people are registered

கருணாவுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இருக்கும் மிக நெருங்கிய ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பிலிருந்து  கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையினை புலிகள் மேற்கொண்டபோது ராணுவம் நடந்துகொண்ட விதத்தினைப் பார்த்தல் அவசியம். புலிகளுக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கில் தாம் நடுநிலைமை வகிப்பதாக வெளியே பாசாங்குக் காட்டிக்கொண்டிருந்த ராணுவம், உண்மையில் கருணாவுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சந்திரிக்கா நடத்திக்கொண்டிருந்த தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை வேண்டி நின்றதனால், கருணாவை வெளிப்படையாகவே ஆதரிப்பதென்பது ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும்., அதுமட்டுமல்லாமல், புலிகள் வெறும் 3 நாட்களிலேயே கருணாவை அடித்துவிரட்டுவார்கள் என்பதை ராணுவம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் இந்த நடுநிலைமை நாடகத்தின்மூலம் வெளிச்சமாகிறது. 

கருணாவை வெளியேற்றும் முடிவினைப் புலிகள் தாமதப்படுத்தியிருந்தாலோ அல்லது, இத்தாக்குதல் முயற்சி நீண்டு சென்றிருந்தாலோ, ராணுவம் தனது உண்மையான முகத்தினைக் காட்டியிருக்கும் என்றே கருதமுடிகிறது. 
போர் என்பது தடுக்கமுடியாததாகவே இருந்திருக்கலாம், ஆனால் கருணா மீதான புலிகளின் இலகுவான வெற்றியென்பது ராணுவம் கருணாவின் பெயரில் புலிகள் மீதான வெளிப்படையான போர் ஒன்றிற்குள் இறங்கும் கனவினைத் தவிடுபொடியாக்கிவிட்டது. 


தனது அரசியல் ரீதியான செல்வாக்கிற்கும், அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்ளவும், கருணாவின் மூலம் புலிகள் மீதான ராணுவ வெற்றியொன்று பெருமளவில் உதவியிருக்கும் என்று சந்திரிக்கா நினைத்திருக்கலாம். ஆனால், அது நடைபெறாமல்ப் போயுள்ளதோடு, சமாதானப் பேச்சுவார்த்தையும் பல சங்கடங்கள் ஊடாக இன்னும் பயணித்துக்கொண்டே செல்கிறது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான பிரச்சினையை போரின்மூலம் தீர்க்கமுடியாதென்பதே உண்மை. உண்மையான  சமாதானப் பேச்சுவார்த்தைகளினாலன்றி, கபடத்தனமான ராணுவ அழுத்தங்களின்மூலம் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பதை சந்திரிக்கா உணரவேண்டும். 1995 இல் அவர் இதனை ஏற்கனவே பரீசிலித்துப் பார்த்து அதில் தோல்வியும் கண்டிருக்கிறார். தமிழர்களுக்கெதிரான சமூகமயப்படுத்தப்பட்ட காழ்ப்புணர்வை சிங்களவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களுக்கெதிரான வெளிப்படையான சமூகமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்ய அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களை சகல வழிகளிலும் அடக்கியொடுக்கி, தோல்வியடைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சந்திரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

ஆகவே, தமிழர்கள் சிங்களவர்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், சுயகெளரவத்துடனும் வாழும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது.  இருதுருவங்களக பிரிந்துநிற்கும் தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களைப் பார்க்கும்போது இரு இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்கான சாத்தியம் இல்லையென்றே தெரிகிறது. ஆகவே, நாம் நிச்சயமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, வெற்றிகரமான பொறிமுறை ஒன்றிற்கே வரவேண்டியிருக்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான பரீட்சார்த்த முயற்சிகள் உலகின் பலநாடுகளில் வெற்றியளித்திருக்கின்றன. புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல சிக்கல்களை எதிர்கொண்டு, தற்பொழுது புலிகள் தமது சார்பாக  திட்டம் ஒன்றினை முன்வைத்திருக்கிறார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உண்மையாகவே புதிய அரசாங்கம் அக்கறைகொண்டிருந்தால், உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளை மனதிற்கொண்டு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் உண்மையாக ஈடுபடுதல் அவசியம். புலிகளின் உத்தேச தீர்வினை ஏற்றுக்கொண்டு, அரசு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, சர்வதேச உதவியுடன் மக்களின் உடனடிப்  பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதோடு, நீண்டகால அரசியத் தீர்வுதொடர்பாகவும் தொடர்ந்து செயற்படுதல் அவசியமானது. 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/4/2021 at 00:12, Maruthankerny said:

"கருணாவோடு  சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர்  இருந்தவர், இவரின் முடிவு என்ன?"

இவர் பின்பு புலிகளிடம் வந்து சரணடைய உறவினர்கள் மூலம்  தூது அனுப்பியதாக அறிந்தேன் 
அதற்கு முன்பே கொழும்புவரை கருணாவோடு சென்ற சில பெண் போராளிகள் சரணடைந்து 
இருந்தார்கள் .. அவர்கள் கொடுத்திருந்த தகவலின் அடிப்படையில் இவர் மிக பெருத்த குற்றங்களில் 
ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ........ ரமணன் அவர்கள் இவரை சரணடைய விரும்பவில்லை என்றும் 
நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அறிந்தேன்.

எல்லாம் கேள்வி பட்ட்துகளே 
நாம் முன்பு கேள்விபட்டவைகள் பல பொய்கள் என்று பின்பு அறிந்தேன் 
ஒருவர் மீது சும்மா வீண் பழி சுமத்துவது தேவையற்றது 
ஆதலால் நான் அறிந்ததை எழுதவில்லை. (பல பின்பு பொய் என்பதையும் தெரிந்துகொண்டேன்)

மருதர் பலர் கேள்விப்பட்டதே சிலரால் செய்திகளாகவும் கட்டுரையாகவும் எழுதப்பட்டது பிரிவின் பின்னர் ஊரில் திரிந்த வீடி குடிகள் , கஞ்சா குடிகள் , சாராய குடிகள் எல்லாம் காசுக்கும் , போதைக்கும் , பொண்ணுக்கும் அடிமையாகிய அனைத்து கழுசறைகளும் அந்த நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து சென்ற குழுக்களிடம் சென்று கட்டப்பஞ்சாயத்து , கடத்தல் என்பவற்றை நடத்தியது  அதற்கு ரகுநாதான் எழுதிய குழந்தை கடத்தலும் ஒன்று இரு வருக்கு ஏற்பட்ட முறுகள்குழந்தை கடத்தல் கொலை வரைக்கும் சென்றது . அதுமட்டும் அல்லாமல் செட்டிபாளையம் ஒரு எஞ்சினியர் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார் காரணம் கான்ரக்ட் கொடுக்கவில்லையென தற்போது அந்த குடும்பம் லண்டனில் . தகப்பனார் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு விசுவாசியாவார் . அதுவும் கர்ணா குழுவென செய்திகள் வந்ததது .

குழந்தை கடத்தலும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் பின்னாளில் என்ன நடந்தது என இங்குள்ளவர்களுக்கு தெரியும் அதை நான் சொல்ல விரும்பல அதாவது பிரிவின் பின்னர் பலர் கர்ணா பிள்ளையானின் பெயரை வைத்து விளையாடி விட்டார்கள் ஆனால் அவர்களுக்காக வக்காளத்து வாங்கவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

இன்னுமொரு உதாரணம் மட்டக்களப்பில் வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் அரசும் முன்னாள் புலிகளை சொல்லி வடகிழக்கில் தேடியது அனால் சுட்டது  ஏப்றல் 21 தாக்குதலில் ஈடுபட்ட சகறானின் சகாக்கள் என்பது  அவர்கள் நடத்த தாக்குதலின் பின்னரே உலகத்துக்கு தெரியவந்தது .  

இது போன்ற சம்பவங்கள் இருக்கிறது  சொல்லமுடியாதும் உள்ளது யாரும் ஊக்கிக்க முடியாத சக்திகளும் சல்லடை போட்டு தூர்வாரியது  இரவு வேளைகளில் 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணாவும் கல்க்குடாவும்

இலங்கை தமிழ்ச் சங்கம் இணையத்தில் சிறி காந்தா எழுதிய ஆக்கம்
காலம் : மகிந்த அரியணை ஏறிய காலப்பகுதி

கடந்த சில வாரங்களாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் மீது முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்கள், அதிருப்திகள் பற்றி எவராவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? இவை யாரிடமிருந்து வருகின்றன?

முதலாவதாக, கொழும்பு அதிகார வர்க்கத்தின் அதியுச்சத்தில் இருந்த முன்னாள்  ஜனாதிபதியான சாட்சாத் சந்திரிக்கா பண்டாராநாயக்கவிடமிருந்து. இரண்டாவதாக கருணாவின் பிறப்பிடமான கிரான் அமைந்திருக்கும் கல்குடா தொகுதி வாக்களர்களிடமிருந்து கடந்த கார்த்திகை 17 ஆம் நாள் இருந்து வந்த அதிருப்தி. கருணா தன் செயற்பாடுகள் மீதான இந்த விமர்சனங்கள், அதிருப்திகள் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஊருடன் பகைத்தால் வேருடன் சாயும் எனும் பழமொழி கருணா விடயத்தில் பலித்திருப்பதாகவே படுகிறது. மூன்றாவதாக, தற்போது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து. 

கொழும்பில் வெளியான கருணாவின் செயற்பாடுகள்

ஒருகாலத்தில் கொழும்பிலும், இந்தியாவிலும் இருந்த அரசியல், ஊடக பெருச்சாளிகள் சந்திரிக்காவை "கவர்ச்சியான" தலைவராக பிரகணம் செய்துவந்தன, ஆனால் நான் ஒருபோதும் அதனை நம்பவில்லை. ஆனால், பேயாக இருந்தாலும், அதற்கான இடம் வழங்கப்படத்தானே வேண்டும்? சந்திரிக்காவிடம் ஒருவிடயத்தைச் செய்விக்கும் திறமை இருந்திருக்கலாம், ஆனால் இதுவே கவர்ச்சியாகிவிடாது. அவரின் பெற்றோர்களுடன் நெருங்கிப் பழகிய பலரும் கூறும் ஒருவிடயம், அவரது தந்தையாரான சொலொமொன் பண்டாரநாயக்கா வினைத்திறனும் கவர்ச்சியும் கொண்டிருந்த தலைவர் என்று கூறுகின்றனர். ஆனால், அவரது தாயாரான சிறிமாவோ கண்டிய மேற்தட்டு வர்க்கத்திற்கேயுரிய ஆணவமும், அதிகாரத்தனமும், அதேவேளை வெளிப்படைத்தன்மையில்லாத, ரகசியமான ஒரு தலைவராகவே இருந்தார். 

இந்தியாவின் ஹிந்துப் பத்திரிக்கையுடனான சந்திரிக்கா எனும் "நட்சத்திரத்தின்" அஸ்த்தமக் காலத்தின் வெள்ளையடிக்கும் நாடகச் செவ்வியில் கருணாவைப் பற்றியும், அவரின் பின்னாலிருந்து இயக்குவிக்கின்ற, அவரின் பெயரில் அரசியல் நிலைப்பாடுகளை வெளியிடுகின்றவர்கள் பற்றி பல விடயங்களை பொதுவெளியில் சல்லிகளாகப் போட்டுடைத்துவிட்டார். கருணாவின் கைங்கரியங்கள் பற்றிய சந்திரிக்காவின் வெளிப்படுத்தல்கள் அவராகவே விரும்பி வெளியிடப்பட்டவையா அல்லது சந்தர்ப்பவசத்தால் அவரை அறியாமலேயே வாயால் வந்து கொட்டப்பட்டவையா என்பது அவருக்கே வெளிச்சம். 

புலிகளுடனான சந்ர்திரிக்காவின் தொடர்பாடல்கள் குறித்து ஹிந்துவின் செவ்வியாளர் வி எஸ் சம்பந்தன் அவர்கள் கேட்ட மூன்று கேள்விகளும், இவற்றிற்கான சந்திரிக்காவின் பதிகளும் கீழே விரிகின்றன,

கேள்வி 1 : கடந்த 11 வருடங்களாக புலிகளுடன் நீங்கள் நடத்திவந்த சமாதான முயற்சிகளில் மிக அதியுயர் புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்? 

சந்திரிக்கா : புலிகளின் கிழக்கு மாவட்ட தளபதியாகவிருந்த கருணாவுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக் கிடைத்த அடுதடுத்த சந்தர்ப்பங்கள் மூலமாக அவர் புலிகளிடமிருந்து பிரிந்து செல்லும் வாய்ப்புகள் நான் பதவியிலிருந்த காலத்தில் , வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையே என்னதான் பிணக்குகள் இருந்ததாக கூறப்பட்டாலும்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை நிச்சயமாக என்னால் உறுதிபடக் கூறமுடியும். நான் இதனை கற்பனையாகக் கூறவில்லை, எனது சரித்திரத்தை நான் ஒருநாள் எழுதும்போது, கருணா எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய, இன்றும் மிக ரகசியாமாக இருக்கும் பல விடயங்கள் பற்றி எழுதுவதென்பது என்னைப்பொறுத்தவரையில் நிச்சயமாக சங்கடமாகவே இருக்கும். அவர் என்னுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் ஒருபோதுமே அவருடன் பேசவில்லை, இன்னும் சொல்லப்போனால் ஒரு பயங்கரவாதியுடன் நேராகப் பேசுவதில்லை எனும் வைராக்கியத்துடன் நான் இருந்துவருகிறேன். ஆனால், அவர் அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது....... 

கேள்வி 2 : இது எப்போது நடந்தது? 

சந்திரிக்கா : அவர் புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற போது,  மட்டக்களப்பை விட்டு வெளியேறுமுன்னர். 

கேள்வி 3 : நீங்கள் அவருடன் பேசவேயில்லையா? 

சந்திரிக்கா : நான் ஒருபோதும் அவருடன் பேசியதில்லை, இனிமேலும் பேசப்போவதில்லை. ஆனால், அவருக்கு பாதுகாப்புத் தேவைப்படுமிடத்து என்னால் அதற்கான உதவிகளைச் செய்யமுடியும் என்று நான் செய்தியனுப்பியிருந்தேன், பிரபாகரன் என்னிடம் பாதுகாப்புக் கேட்டிருந்தாலும் இதனையே செய்திருப்பேன். அவரும் இலங்கையின் குடிமகனே. ஆனால், கருணாவுடன் எதுவித தொடர்புகளையும் பேணவில்லை. 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கருணாவும் கல்க்குடாவும்

சந்திரிக்காவின் பாவசங்கீர்த்தனங்கள் பற்றிய சில தெளிவுபடுத்தல்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, கருணா மட்டக்களப்பிலிருந்து வெளியேறும் முன்னர் சந்திரிக்காவுடன் தனது பாதுகாப்பிற்கு ராணுவத்தினரின் உதவிவேண்டிப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டார் என்பது.

இரண்டாவது, சந்திரிக்கா கருணாவோடு நேரடியாகப் பேச விரும்பவில்லையென்பது, இன்னொருவர் மூலமாக கருணாவிடமிருந்து தகவல்களைப் பெற ஒத்துக்கொண்டார் என்பதும்.

மூன்றாவதாக, சந்திரிக்காவின் ஒப்புதலோடு, அவரது முகவர் ஒருவர் கருணாவோடு எப்போதும் தொடர்பிலிருந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வதென்பது.

நான்காவது, கருணா தானது வீரப்பிரதாபங்களை சர்வதேச செய்திச் சேவைகளிலும், உள்ளூர்ச் செய்திச்சேவைககளிலும் மார்தட்டி, பின்னர் புலிகளிடம் மரண அடிவாங்கி ஓடியிருக்காவிட்டால் ,சந்திரிக்கா சிலவேளை அவருடன் நேரடியாகப் பேசியிருக்கலாம் என்பது. ஆனால், கருணாவின் மார்தட்டல்கள் புஸ்வானமாகிப் போக, சந்திரிக்காவும் தனக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பினை மிக இலகுவாக மறுத்துவிட முடிந்தது.

ஐந்தாவது,  சந்திரிக்கா தனது சுய சரித்திரத்தை எழுதும்வரை நாம் காத்திருந்தாலே, கருணா அவருக்கு அனுப்பிய முக்கியமான "அந்த" செய்திகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும், ஆனால் அதை அவர் எப்போது எழுதுவார் என்பது எவருக்கும் தெரியாது. அதுவரையில், சந்திரிக்கா கருணாவை வெளிப்படையாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் என்றே நாம் கருதவேண்டும். அதேவேளை கருணாவும், அவரின் பின்னால் நின்று  இயக்கிவருபவர்களும் இதுபற்றி எதுவுமே பேசமுடியாத நிலையில் மெளனமாகவே இருக்கவேண்டும். அனால், சந்திரிக்காவின் கருணா தொடர்பான வெளிப்படுத்தல்கள் பற்றி அவரது ஊதுகுழலான கேடி ராஜசிங்கம் நடத்தும் மஞ்சள்ப்பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் ஒரு சொல் கூட பதியப்படவில்லை !!

 

கருணாவுக்கெதிராக கல்க்குடா வாக்காளர்கள் வெளிப்படுத்திய அதிருப்தி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நாளான கார்த்திகை 17 ஆம் திகதிக்கு ஓறிரு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவை தான் ஆதரிப்பதாக கருணா வெளிப்படையாக அறிவித்திருந்தார். இதனை அவருடைய ஊதுகுழலான ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையே காவிவந்திருந்தது. 


"விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்த ஜனாதிபதிதேர்தலை தமிழ் வாக்காளர்கள் பகிஷ்கரிக்கக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறது..........மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல மாற்றங்களைச் செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறார். எம்மைப்பொறுத்தவரைக்கும் இது ஒரு முக்கியமான விடயமாகும். அத்துடன், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக புலிகள் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறியிருக்கிறார். எம்மைப் பொறுத்தவரையில் இது மிக மிக முக்கியமானது ….இந்தக் காரணங்களுக்காக மகிந்த ராஜபக்ஷவை இத்தேர்தலில் ஆதரிப்பதென்று முடிவெடுத்திருப்பதாக கருணா அம்மான் தெரிவித்திருக்கிறார்" என்று கேடி ராஜசிங்கம் தனது மஞ்சள்ப்பத்திரிக்கையில் எழுதியிருந்தார்.

கருணாவின் சொந்த இடமான கிரான் அமைந்திருக்கும் கல்க்குடாத் தொகுதி வாக்காளர்கள் கருணாவின் இந்த அரசியல் வேண்டுகோளினைக் கேட்டிருப்பார்களா? இத்தொகுதியின் தேர்தல் முடிவுகள் கருணாவின் வேண்டுகோளுக்கு முற்றிலும் எதிராகவல்லவா அமைந்திருந்தன? இதில் வேடிக்கையென்னவென்றால், கருணாவோ அல்லது அவரது ஊதுகுழல்களோ கல்க்குடாத் தொகுதி மக்கள் வற்புறுத்தலின்பேரிலேயே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென்று  எழுதக் கூடத் திராணியற்றுப் படுத்துவிட்டனர். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், கருணாவின் அரசியல் திருகுதாலங்களை அவரது பிரதேச மக்களே ஊதித்தள்ளிவிட்டார்கள் என்பதுதான். 

புலிகளுக்கெதிரான பத்தியெழுத்தாளரான டி பி எஸ் ஜெயராஜ், கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கும், அவர் வரிந்துகொண்ட மகிந்த விசுவாசத்திற்கும் கிடைத்த மரண அடியை ஜீரணிக்கமுடியாமல், தேர்தல் முடிபுகளை திரிபுபடுத்தி, புனைகதையொன்றை பின்வருமாறு அரை அவியலில் இறக்கிவிட்டிருந்தார். 

“ரணிலுக்குக் கிடைத்த வாக்குகள் முஸ்லீம்களின் வாக்குகள் என்று புலிகள் நிறுவ முயல்கிறார்கள். இது தவறானது, பட்டிருப்புத் தொகுதி 99 வீதம் தமிழர்களைக் கொண்டது. கல்க்குடாத் தொகுதி 65 வீதம் தமிழர்களைக் கொண்டது. மட்டக்களப்பு 75 வீதம் தமிழர்களைக் கொண்டது. இத்தேர்தலில் கிடைத்த வாக்குகள் 1999 ஆம் தேர்தலைக் காட்டிலும் அதிகமானவை.  மட்டக்களப்பில் கருணாவின் தாக்கமும் வாக்களிப்பில் அதிக பங்கினைச் செலுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ஷவுக்கு வக்களியுங்கள் என்று கருணா கேட்டிருந்தாலும்கூட, மக்கள் வேறு வாக்களர்களுக்கு வாக்களிப்பதையும் ஊக்குவித்திருந்தார். இந்த "கலந்த சமிக்ஞைகளே" வாக்களர்களை பெருமளவில் வந்து வாக்களிக்க வைத்திருந்தது ......."

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாவும் கல்க்குடாவும்

கருணாவை அவரது தொகுதி மக்களே எவ்வாறு தோலுரித்து விரட்டினார்கள என்பதையும், ஜெயராஜின் அரை அவியல்கள் எவ்வளவு புனையப்பட்டவை என்பதையும் விளக்க விரும்புகிறேன். முதலில் 2004 பொதுத் தேர்தலில் கல்க்குடாத் தொகுதி மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். தெளிவான புரிதலுக்காக, ஜெயராஜ் செய்திருக்க வேண்டியது 2004 பொதுத்தேர்தலில் இத்திகுதி மக்கள் வாக்களித்த முறையினை இன்றைய தேர்தலுடன் ஒப்பிடுவதேயன்றி, 1999 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடுவதல்ல. 

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் கருணா புலிகளிடமிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர், குடும்பிமலையில் தனது முகாமில் பதுங்கியிருநெதவேளையில்.  கல்குடாத் தொகுதியில் இனவிகிதாசாரம் பின்வருமாறு காணப்படுகிறது. இலங்கைத் தமிழர் 64 வீதம், இந்தியத் தமிழர்கள் 3 வீதம், முஸ்லீம்கள் 28 வீதம், சிங்களவர்கள் 4 வீதம், வேறு இனமக்கள் 1 வீதம்.

2004 சித்திரை மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 86,626. அளிக்கப்பட்ட வாக்குகள் 74,645. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 43,503 (61.5 வீதம்), சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 22,244 (31.4 வீதம்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,706 (3.8 வீதம்), ஐக்கிய தேசியக் கட்சி 1,364 (1.93 வீதம்), டக்கிளஸ் கட்சி 568 (0.8 வீதம்).

கார்த்திகை 17 ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்கள் ரணிலும் மகிந்த ராஜபக்ஷவும். கருணா கல்க்குடாவிலோ அல்லது கிழக்கு ஈழத்தின் எப்பகுதியிலுமோ இருக்கவில்லை. அவரது அப்போதைய மறைவிடம்பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.  கல்க்குடாத் தொகுதியின் 91,410 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கான வேண்டுகோளினை கருணா இணையத்தளம் ஊடாகவே முன்வைத்திருந்தார். இப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 40,369 (44.71 வீதம்). கருணாவின் வேண்டுகோளான தேர்தலினைப் பலிஷ்கரிக்கவேண்டாம் என்பதையும் மீறி 41 வீத வீழ்ச்சியை இப்பகுதி வாக்களிப்பு கண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி 28,484 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது, இவற்றுள் பெரும்பாலானவை 22,244 முஸ்லீம் வாக்காளர்களால் இடப்பட்டவை என்பது இரகசியமல்ல. ஏனென்றால், இதேயளவான வாக்குகளை கடந்த பொதுத் தேர்தல்களில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரித்துநின்ற முஸ்லீம் காங்கிரஸ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவால் ஆதரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ வெறும் 11, 105 வாக்குகளையே பெற்றிருந்தார். கணிப்புகளின்படி 2004 பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளான 43,505 வாக்குகளில் குறைந்தது 30,800 வாக்குகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படவில்லையென்பது, 86 வீதமான பொதுத் தேர்தல் வாக்களிப்பிலிருந்து 45 வீதமான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பாகக் குறைந்திருப்பதன்மூலம் தெளிவாகிறது.. 

கல்க்குடாவில் வசிக்கும் 12,700 தமிழர்களில் 7,800 வாக்காளர்கள் மகிந்தவுக்கும், 4,870 வாக்காளர்கள்  ரணிலுக்கும் வாக்காளித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் மகிந்த 11,105 வாக்குகளை கல்க்குடாத் தொகுதியிலிருந்து பெற்றிருக்கிறார். இதில் கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களித்த 2700 வாக்குகள், டக்கிளஸ்  தேவானந்தாவின் கட்சிக்குக் கிடைத்த 568 வாக்குகள் மற்றும் மீதமான 7800 வாக்குகள் என்பன அடங்கும். இதன்மூலம் தெரியவருவது யாதெனில், கருணாவின் சொந்தப் பிரதேசத்தில் அவருக்கு ஆதரவாண வாக்காளர்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 7800 என்பதுதான். 

தனது சொந்தப் பிரதேசத்திலேயே தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுபற்றி கருணா கவலையடைந்திருக்கலாம். தனது மாவீரர் உரையில் பிரபாகரனையும், தமிழர்களையும் தனது சொல்லைக் கேட்கவில்லையென்று அவர் சாடியிருந்தார்.

"தமிழ்மக்கள் மீது சர்வாதிகாரத்தனமான அதிகாரத்தை பிரபாகரன் செலுத்துகிறார். தனது சர்வாதிகாரத்தனத்தை தமிழ் ஈழம் எனும் மாயைக்குள் அவர் மறைத்துவருகிறார். அவரது வன்முறைத்தனமான சர்வாதிகாரத்திற்கு ஒரு உதாரணம் தான் வடக்குக் கிழக்கில் மக்களை ஆயுதமுனையில் வாக்களிக்க விட முடியாமல் தடுத்து வைத்திருந்தது. வடக்குக் கிழக்கில் நடக்கும் அனைத்து விடயங்களுலும் தானே முழு அதிகாரத்தினையும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தமிழ் மக்களுக்கான சுதந்திர குரலை அவர் அடக்கி வைத்திருக்கிறார். அவர் தனக்கு விரும்பிய நேரத்தில் மக்களை வாக்களிக்கவும், மற்றைய நேரத்தில் வக்களிப்பதை தடுத்தும் வருகிறார்..................." என்று தனது ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிப்யூனில் அழுதிருந்தார்.

கருணாவின் ஊதுகுழல்கள் இந்தநேரத்தில் போலியாகவேனும் தைரியத்தைக் காட்டவேண்டியது அவசியம் என்பதை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், கருணாவின் கல்க்குடாத் தொகுதியில் எப்போது, எவரால், எவ்வாறு வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் பிரபாகரனால் தடுக்கப்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக நான் இருக்கிறேன். என்னால் கல்க்குடாத் தொகுதி மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாமல் தடுக்கப்பட்டார்கள் என்று கூறும் ஒரு பத்திரிக்கைச் செய்தியைத் தன்னும் இதுவரை பார்க்கமுடியவில்லை. இத்தேர்தலில் கல்குடாத் தொகுதி மக்கள் சொல்லிய செய்தி மிகவும் தெளிவானது, அது கருணாவால் இலகுவில் ஜீரணிக்கமுடியாதது. கல்க்குடாத் தொகுதித் தமிழர்கள் கருணாவைப் போல் ஏமாளிகளோ அல்லது ஏமாற்றப்படுபவர்களோ இல்லை. தமிழருக்கு எதிரான சதிகளிலும், நாசவேளைகளும் ஈடுபட்டுவரும் தமது சொந்த ஊர்க்காரனான கருணாவை அவர்கள் முற்றாக ஒதுக்கிவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

கருணாவின் தோல்வியினால் அதிருப்தியுற்றிருக்கும் சிங்கள இனவாதிகள்

கல்க்குடாத் தொகுதியில் கருணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்தினையடுத்து, அவரை ஆதரித்து எழுதுகின்ற சிங்கள இனவாதிகள் கவலையடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கிழக்கில் கருணா விடிவெள்ளியாக, பிரபாகரனை எதிர்த்து மேலெழும்புவார் என்று கனாக் கண்டுகொண்டிருந்த திசராணி மற்றும் மகிந்தபால போன்ற இனவாதிகளின் கனவில் இடிவிழுதிருக்கிறது. 

இலத்திரணியல் ஊடகங்களில் புனைவுகளை அவிழ்த்துவிடும் சிங்கள இனவாதிகளின் பத்திகள் பெரும்பாலும் அடக்கமுடியாத சிரிப்பைத்தான் எனக்குத் தருகின்றன.  திசராணி குணசேகரவின் புனைவு ஒன்று கீழே.....

"கிழக்கில் புலிகளை விட கருணா குழுவே பலம்வாய்ந்ததாகத் தெரிகிறது. கருணாவின் இந்த செல்வாக்கு தேர்தலில் எவ்வாறான தாக்கத்தினைச் செலுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஆனால், இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவிலான வாக்குகளை கருணா சேகரித்துத் தருவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இது அவரது அரசியல் முயற்சியைப் பலப்படுத்தும். கருணா, கிழக்கில் தனது ராணுவ மேலாண்மையினை, அரசியல் அரங்கிலும் உருவாக்குவது அவசியம். தேர்தலில் மகிந்தவுக்கான வாக்குகளை அள்ளி வழங்கி, தனக்கும், புலிகளுக்கெதிரான இலட்சிய அரசியலுக்கும் பலமான அடித்தளம் ஒன்றினை இட்டு, தனது பேரம்பேசும் பலத்தினை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைகளை பழுத்த புலியெதிர்ப்பு அரசியல்வாதியான ஆனந்தசங்கரியிடமிருந்து கருணா பெற்றுக்கொள்ள முடியும். கருணா மற்றும், அனைத்து புலியெதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கும் கிடைத்திருக்கும் இந்த அரியசந்தர்ப்பத்தினைப் பாவித்து ஆனந்தசங்கரி தலைமையில் பாரிய புலியெதிர்ப்பு அரசியல் சக்தியொன்றினை உருவாக்கிடுதல் இன்று அவசியமானது" என்று கருணாவின் ஊதுகுழலான கேடி ராஜசிங்கத்தின் மஞ்சள்ப் பத்திரிக்கையில் அவர் எழுதுகிறார். 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், சிங்கள இனவாதிகள் கிழக்கு மாகாணத் தமிழர்களையும் கருணாவைப் போன்ற ஏமாளிகளாக  பார்த்துவருவதுதான். இத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழினத்திற்கெதிரான எதிர்ப்புக்களையோ அல்லது விமர்சங்களையோ எழுதுவதைக் கற்பனையில்க் கூட நினைத்துப் பார்க்காதவர்கள். ஆனால், அவர்களுக்கு தமது வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் எது அவசியம் என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்த்தான் 2004 இலிருந்து பிரபாகரனுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக கருணா முன்வைத்துவரும் நச்சுத்தனமான விமர்சனங்களையெல்லாம் மீறி இத்தேர்தலில் தமது தெரிவைக் காட்டியிருக்கிறார்கள்.

தேசியத்தை நேசிக்கும் எவருமேயற்ற வெற்று மண்டபத்தில் தனது மாவீரர் உரையினை வழங்கிய கருணா, "2002 இல் நோர்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம்பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீள்பரிசீலினை செய்ய வேண்டும்..............." என்று கேட்டிருந்தார். ஆனால், தந்திரசாலியான மகிந்த கருணாவின் இந்த வேண்டுகோளினை உதாசீனம் செய்தார். கருணாவின் இந்த வேண்டுகோள் பற்றி மகிந்த ஏன் எதுவுமே செய்யவில்லையென்று விளங்கிக் கொள்வது கடிணமானது அல்ல. முதலாவது, கருணா தான் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் செய்யப்போவதாக உத்தரவாதம் அளித்த எதனையும் செய்யவில்லை. இரண்டாவது அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதியான மகிந்தவுக்கு தமிழர்களிடையே உண்மையான பூவிற்கும் "காகிதப் பூவிற்கும்" இடையிலான வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடிணமாக இருக்கவில்லை. 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாரகி (தர்மரட்ணம் சிவராம்) படுகொலை -  கருணாவே அருகிலிருந்து சுட்டுக் கொன்றான் 

sivaram.jpg

"சிவராமின் படுகொலையென்பது ஒரு தனிப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலை என்பதையும் கடந்து, இனிநடக்கவிருக்கும் பல படுகொலைகளுக்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கின்றது என்பது மிகவும் ஆபத்தானது. ஜனாதிபதி சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருக்கும் பலம்வாய்ந்த சில அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் துணைராணுவக் குழுவொன்றின் தலைவன் ஆகியவர்களின் கூட்டினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விசேட கொலைப்படையே இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறது என்பது மிகுந்த அச்சத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. அரச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதமாக உருப்பெற்று வரும் இந்தக் கொலைக்குழுக்களின் நடவடிக்கைகள் உடனடியாகக் கண்டிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்படவேண்டும். சர்வதேச நாடுகளின் தலையீடு ஒன்றின்மூலமே இந்த அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகள் இனிமேல் இடம்பெறாவண்ணம் தடுக்கமுடியும்" - டி பி எஸ் ஜெயராஜ்

 

முடிவுறாத படுகொலைகளை, இனரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டு நிற்கும் அநாதைகளாக்கப்பட்ட தமிழினத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் துணிச்சலானதும், மிகவும் கொடூரமானதுமான தனிநபர் படுகொலையே மும்மொழி வித்தகரும், பிரபல ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியவாதியுமான தாரகி எனப்படும் தர்மரட்ணம் சிவராமின் கடத்தலும் படுகொலையும் என்றால் அது மிகையில்லை.

வாழ்வதற்கான உரிமையென்பதே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படையானது. இந்த வாழ்தலுக்கான உரிமையுட்பட அடிப்படையுரிமைகள் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைளும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதோடு, தமிழ்த்தாயின் பிள்ளைகள் வீதிகளிலே பிணங்களாக தூக்கியெறியப்பட்டு வருகிறார்கள். 

நண்பர்கள் வட்டத்தில் சிவா என்றும், சிவராம் என்றும் அன்பாக அழைக்கப்பட்டுவந்த சிவராம், தான் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இரவில் தனது மூன்று  நண்பர்களுடன் பம்பலப்பிட்டியவில் உள்ள மதுபான விடுதியொன்றிற்குச் சென்றிருந்தார். அவர் கொல்லப்பட்ட சித்திரை 28 அன்று இரவு அவருடன் ஊடகவியலாளர் குசால் பெரேரா, தொழிற்சங்க ஊழியர் ரவி குமுதேஷ், அரச சார்பற்ற அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரட்னாயக்க ஆகியோர் அவருடன் அந்த விடுதியில் இருந்திருக்கின்றனர். இரவு சுமார் 10:25 மணிக்கும், தமது ஒன்றுகூடலினை முடித்துக்கொண்டு அவர்கள் நால்வரும் விடுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். 

கடத்தல்

ரவியும், பிரசன்னவும் தாம் பொரள்ளவுக்குச் செல்லவிருப்பதால், மூன்றுசக்கர வாகனம் ஒன்றை அமர்த்துவதற்காக கொள்ளுப்பிட்டி பக்கமாகச் செல்வதாகக் கூறிவிட்டு சிவராமிடமிருந்து விடைபெற்றுச்  சென்றிருக்கின்றனர்.  மீதமிருந்த குசாலும், சிவராமும் பேசிக்கொண்டே வெள்ளவத்தைப் பக்கமாக நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமது சம்பாஷசணை முடிந்தவுடன் இருவரும் பேரூந்தில் ஏறித் தத்தமது இடங்களுக்குச் செல்வதென்று முடிவாகியிருந்தது. 
பெரேராவும், சிவராமும் டி வொஸ் அவெனியூவினை அடைந்தபோது, சிவராமின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்திருக்கிறது. தமிழில் வந்த தொலைபேசியழைப்பினை ஏற்றுக்கொண்டு பேசத் தொடங்கிய சிவராம் சற்று முன்னால் நடக்க, குசால் பெரேராவோ, எதிர்த்திசையிலிருந்து வரும் பேரூந்திற்காகப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். பெட்டாவிலிருந்து பாணதுறை நோக்கிச் செல்லும் பேரூந்தைக் கண்டதும் தனது நண்பனை சுதாரிக்கச் செய்ய சிவராமின் பக்கம் திருமிபியிருக்கிறார் குசால். 

அப்போது குசால் கண்ட காட்சி அவரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிவராமுக்கு மிக அருகில் ஒரு வெள்ளிநிரத்திலான ஜீப் ரக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. டொயோடா ரகத்தைச் சேர்ந்த அந்த வாகனத்தின் இலக்கத்தகடு WPG 11 என்று எழுதப்பட்டிருந்தது. அவசரத்திலும், அதிர்ச்சியிலும் மீதி இலக்கங்களை குசாலினால் பதிவுசெய்துகொள்ளமுடியவில்லை. இரு நபர்கள் சிவராமை அந்த வாகனத்திற்குள் தள்ளுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். மூன்றாமவன் திறந்திருந்த வாகனத்தின் கதவிற்கு அருகில் நின்றிருந்தான். வாகனத்தின் இயந்திரம் ஒட்டிக்கொண்டிருக்க, சாரதி புறப்பட்டுச் செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.  சிவராமை பின்னாலிருந்து உந்தித் தள்ளி வாகனத்தில் ஏற்ற அவர்கள் முயலும் வேளை, அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க சிவராம் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். அவரைக் கடத்த முயன்று கொண்டிருந்தவர்கள் சாதாரண உடையில் வந்திருந்தாலும்கூட, அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும்பொழுது நிச்சயம் ராணுவம் சார்ந்த அமைப்பொன்றுடன் தொடர்புபட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடத்தல்.............

 

சிவராமை சில நபர்கள் இழுத்துச் செல்ல முயற்சிப்பது கண்டு அவரை விடுவிக்க அவரை நோக்கி "சிவா" என்று கூச்சலிட்டுக்கொண்டே குசால் ஓடவும், "அருகில் வரவேண்டாம்" என்று கடத்தல்க்காரர்களால் அவர் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். அதேவேளை சிவராமை வாகனத்தில் தள்ளி ஏற்றுவதில் அவர்கள் வெற்றி கண்டிருந்தார்கள். குசாலைப் பார்த்து எச்சரிக்கை செய்தபடியே அம்மூவரும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வாகனம் அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட்டது. தன்கண்முன்னே தனது நண்பனை சிலர் கடத்துவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன குசால் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனக்குத் தெரிந்த சிலருக்கு இக்கடத்தல்பற்றிய செய்திகளை அறிவிக்கத் தொடங்கினார். இந்தக் கடத்தல் நிகழ்வு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு நேர் எதிரிலேயே, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், பொலீஸார் பார்த்திருக்க நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்ச்சியான விசாரணைகளின்பொழுது சிவராமைக் கடத்திய அந்த நால்வரும் இரவு 8:30 மணியிலிருந்து அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. அவர்களில் இருவர் தமிழில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஏனைய இருவரும் சிங்களத்தில் பேசியதாகவும் கண்ணால் கண்ட சாட்சியங்கள் உறுதிபடுத்தியிருக்கின்றன.

கடத்தல்க்காரர்களில், தமிழர்களான ஒருவர் தொலைபேசியில் பேசும்போது, "வாகனத்தை அனுப்பு" என்று சிலதடைவைகள் ஏகதொனியில் கேட்டதாக சாட்சியொருவர் தெரிவிக்கிறார். அவ்வாறு அந்த நபர் பேசி சில நிமிடங்களில் அந்த வெள்ளிநிற ஜீப்ரக வாகனம் அவ்விடத்திற்கு வந்ததை தாம் அவதானித்ததாக அவர் மேலும் கூறுகிறார். சிவராமைக்கடத்திச் சென்ற வாகனமும், தான் கண்ட வாகனமும் ஒரே வாகனம்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். சிவராமைக் கடத்திச் செல்வதற்காக அருகில் உள்ள இடமொன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாகனத்தையே தமிழில் பேசிய நபர் வரவழைத்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. 

 தனது கணவன் கடத்தப்பட்டதை அறிந்த மனைவி , யோகரஞ்சினி தனது சகோதரனையும் அழைத்துக்கொண்டு பம்பலப்பீட்டி பொலீஸ் நிலையத்தில் தனது கணவன் கடத்தப்பட்டதுபற்றி புகார் ஒன்றைப் பதிவுசெய்திருக்கிறார், சிவராமின் நண்பரும், இன்னொரு ஊடகவியலாளருமான ராஜ்பல் அபெயநாயக்க சிவராம் கடத்தப்பட்டதுபற்றி ராணுவத்தளபதி லெப். ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்கும் இன்னும் சில அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, வீதிச் சோதனைச் சாவடிகளுக்கு தாம் இதுபற்றி அறியத்தருவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொல்லப்படுமுன் சிவராம் சித்திரவதை செய்யப்பட்டாரா?

 

sivaram2.jpg

காலை 1 மணியிருக்கும், தலங்கமை பொலீஸ் நிலையத்திற்கு தன்னை யாரென்று அறிமுகம் செய்துகொள்ள விரும்பாத ஒருவர் தொலைபேசியில் அழைத்து, இலங்கை - ஜப்பான் நட்புறவு வீதியில், தியவன்னா ஓயா ஆற்றுக்கு அருகில் ஒரு சடலம் கிடப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டிருக்கிறார். பாராளுமன்றம் அமைந்திருக்கும் சிறி ஜெயவர்த்தனபுர கோட்டே பகுதியில், பாராளுமன்றத்திற்குப் பின்புறமாக , சுமார் 500 மீட்டர்கள் தொலைவில், கிம்புலா எலச் சந்தியின் அருகில் இருந்த பற்றைக் காடுகளுக்குள்ளிருந்து ஒரு சடலத்தைப் பொலீஸார் கண்டெடுத்தனர். சடலத்தை அடையாளம் காட்டிய சிவராமின் குடும்பத்தாரும் நண்பர்களும் அது சிவராமினுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தினர்.

புள்ளிபோட்ட கைக்குட்டை ஒன்றினால் சிவராமின் வாய் அடைக்கப்பட்டு, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலைகாரர்கள் அவரது பின்னந்தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியிருப்பதற்கான காயம் தெரிந்தது. தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிவராம் போராடியிருப்பது அவரது உடலில் இருந்த காயங்களூடாக அனுமானிக்க முடிந்தது. தொடர்ச்சியாகத் தம்முடன் முரண்டுபிடித்த சிவராமை மயக்கமடையச் செய்ய கொலைகாரர்கள் அவரைத் தாக்கியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இறுதியாக, அவரைக் கடத்தியவர்கள் அவரின் முன்னால் நின்று, கைக்கெட்டும் தொலைவில் 9 மில்லி மீட்டர் பிறவுனிங் கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். ஒரு சன்னம் அவரது கழுத்தினூடாக நெஞ்சுப்பகுதிக்கும், இரண்டாவது சன்னம் அவரது கையைத் துளைத்துக்கொண்டு உடம்பினுள்ளும் புகுந்திருக்கிறது. அவர் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டிருக்கலாம் எனும் தகவல்கள் அவரது பின்னந்தலையில் விழுந்த அடியை வைத்தே சொல்லப்பட்டிருக்கலாம். அவரது சடலத்தினருகில் 9 மில்லி மீட்டர்கள் சன்னத்தின் இரு வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டதுடன், மிகச்சிறியளவான குருதியே கசிந்து காணப்பட்டிருக்கிறது.

கொழும்பு மருத்துவ பீடத்திற்காகு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்ட சிவராமின் உடலை மருத்துவர் ஜேன் பெரேரா பரிசோதனை செய்திருந்தார். பரிசோதனைகளின் முடிவில் சிவராம் கொல்லப்படுமுன் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சான்றுகள் அவரது உடலில் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.

சர்வதேசமெங்கும் இருந்து வந்த கண்டனங்கள்

Murder scene

மருத்துவர் பெரேரா தொடர்ந்தும் கூறுகையில், "பின்னந்தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு சிவராம் கீழே வீழ்ந்திருக்க, அவரது தோற்பட்டையூடாக நெஞ்சுப்பகுதி நோக்கி இருமுறை சுட்டிருக்கிறார்கள். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சிவராமின் கண்கள் வீங்கியிருந்ததன் காரணம் அவரது பின்னந்தலையில் வீழ்ந்த அடியினால் அன்றி, துப்பாக்கிச் சன்னங்க்கள் உடலினுள் உட்புகும்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்டதாகும். சிவராமின் கொலை அதிகாலை 12:30 மணிக்கும் 1:00 மணிக்கும் இடையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

சிவராமின் கோழைத்தனமான படுகொலை சர்வதேசமெங்கிலும் இருந்து பலத்த கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷெ, ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். சிவராமைப் புலிப்பயங்கரவாதி என்று கடுமையாக விமர்சித்துவந்த ஜே வி பி யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இப்படுகொலைபற்றி மெளனம் சாதித்திருந்தார். 

சர்வதேசத்திலிருந்து வந்த கண்டனங்களில் ஜப்பான் நாட்டு தூதர், அகியோ சூடாவின் கண்டனம் முக்கியமானது. சிவராமுடன் நெருங்கிச் செயற்பட்டுவந்த அகியோ சூடா, சிவராமை ஜப்பானுக்கு விஜயம் செய்யும்படி அழைத்திருந்தார். தென்னாசியாவில் ஜப்பானின் செயற்பாடுகள் தொடர்பில் சிவராமுடன் ஜப்பானிய அரசு பேசிவந்தது. சிவராம் கொல்லப்பட்டு, வீசி எறியப்பட்ட வீதி ஜப்பான் - இலங்கை நல்லுறவு அமைப்பினால் கட்டப்பட்டது என்பதும், ஜப்பானுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்குடனேயே அவரது சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் சரத் லூகொட தலைமையில் நான்கு பொலீஸ் குழுக்கள் சிவராமின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. 75 இற்கும் மேற்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டதுடன், சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டன. ஆனால், விசாரணைகளில் எதுவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. பம்பலப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக கடத்தப்பட்டு, நாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் பின்புறத்தில் கொல்லப்பட்டு வீசப்பட்ட ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைகள் எங்குசென்று முடியும் என்பது ஊகிக்கக் கடிணமானதொரு விடயமாக இருந்திருக்காது.

சிவராமுக்கு இறுதியாக வந்த தொலைபேசியழைப்பு அவரைக் கடத்தியவ்ரிடமிருந்தே வந்ததாகப் பொலீஸார் சந்தேகிக்கின்றனர். சிவராமின் கவனத்தைத் திசை திருப்பவும், தாம் கடத்தப்போவது சிவராமைத்தான் என்பதை உறுதிப்படுத்தவுமே கடத்தல்க்காரர்கள் அவரை தொலைபேசியில் அழைத்ததாக கருதப்படுகிறது. இதேவேளை மதுபான விடுதியில் இருந்தவேளை சிவராமுக்கு நான்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், இருமுறை அவரே அழைப்புக்களை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்திருக்கிறது.  சிவராமின் தொலைபேசி மீடகப்படுமிடத்து அவரைத் தொடர்புகொண்டவர்களையோ அல்லது கடத்திக் கொன்றவர்களையோ அடையாளம் காணமுடியும் என்றபோதும், இதுவரை அவரது தொலைபேசி கண்டுபிடிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. 

"நான்  777 - 311 - 380 என்ற இலக்கத்திற்கு சித்திரை 29 மற்றும் 30 ஆகிய இருநாட்களில் பலதடவைகள் அழைப்புகளை மேற்கொள்ள முயன்றேன். ஆனால், தொலைபேசியைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் வைகாசி முதலாம் திகதி முதல்  5 ஆம் திகதிவரை தொலைபேசிக்கான அழைப்புகளை என்னால் மேற்கொள்ள முடிந்தது, ஆனால் எவரும் பதிலளிக்கவில்லை". 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவராமின் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு

புலிகளின் ஊடகமான நிதர்சனத்தில் வெளிவந்த செய்திக்குறிப்பில் கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி கடத்தல்க்காரர்கள் நால்வரில் ஒருவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவராம் படுகொலை செய்யப்பட்டு சரியாக 24 மணிநேரங்களின் பின்னர் இனியபாரதியும், அவனது முஸ்லீம் சகாவான எம் எம் பெளசரும் அம்பாறைச் சோதனைச் சாவடியொன்றில் பொலீஸாரால் சாதாரண வீதிச் சோதனையொன்றில் கைத்துப்பாக்கி வைத்திருந்தமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து  சிவராமைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட 9 மிமீ பிறவுனிங் ரகக் கைத்துப்பாகியும் இன்னும் 16 சன்னங்களும் மீடகப்பட்டன. நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்ட இவர்கள் இருவரும் சிலநாட்கள் காவலில் வைக்கப்பட்டு, கருணாவின் கட்டளைகளின்படி மொனராகலைப் பகுதியில் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டதாகத் தெரியவருகிறது. 

பொலீஸார் இப்படுகொலை தொடர்பில் உண்மையாகவே விசாரணைகளை மேற்கொள்ள விரும்பினால், இனியபாரதியைக் கடுமையாக விசாரிப்பது அவசியமாகும். மட்டக்களப்பு - பொலொன்னறுவ மாவட்ட எல்லைகளில் நடக்கும் பல படுகொலைகள் கடத்தல்களுடன் அவனது பெயர் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுப் பேசப்பட்டு வருகிறது. சந்திரிக்காவின் அரசாங்கம் கிழக்கில் நடக்கும் படுகொலைகள் பற்றியும், கருணா - பிள்ளையான் போட்டிக் குழுக்களுக்கிடையேயான வன்முறைகள் பற்றியும் உண்மையான கரிசனை கொண்டிருந்தால், இனியபாரதி எனப்படும் இந்த முக்கிய கருணா குழு கொலையாளி தொடர்ந்தும் விசாரிக்கப்படுதல் அவசியம். முறையான, நீதியான முறையில் இடம்பெறும் விசாரணைகள் தனிநபர் கமிஷன்களைவிட பயனுள்ளதாக அமையும். 


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடையளிக்கப்படாத கேள்விகள்

சிவராம் கடத்தப்பட்ட இரவில், அவர் மது அருந்திய விடுதிப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அவருடன் அன்றிரவு மது அருந்திய ஏனைய மூவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். கடத்தல்க்காரர்கள் சிவராம் விடுதியில் இருப்பதை நன்கு அறிந்தே வைத்திருந்ததுடன், அவருக்காக சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அப்பகுதியில் காத்திருந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு எப்படித் தெரியும், எவ்வாறு தெரியும்?

சிவராம் விடுதியிலிருந்து முன்னதாகவே கிளபியிருந்தால், அவர்கள் 2 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. சிவராமும், சகாக்களும் இரவு 9 மணிக்கே தமது மதுபானங்களுக்கான பணத்தைச் செலுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகியிருக்கிறார்கள். ஆனால், மீதி மூவரில் ஒருவர் இன்னும் கொஞ்சம் அருந்தலாம் என்று தொடர்ந்து மதுபானங்களை வரவழைத்திருக்கிறார். முதலில் எண்ணியவாறே 9 மணிக்கு அவர்கள் வெளியேறியிருந்தால், இக்கடத்தல் பிற்போடப்பட்டிருக்கலாம். அப்படியானால், சிவராமும் நண்பர்களும் 9 மணிக்குக் கிளம்பபப்போவதை கடத்தல்க்காரர்கள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியது யார்? 

அடுத்ததாக, சிவராமை பம்பலப்பீட்டி பொலீஸ் நிலையத்திற்கு முன்னால், பொலீஸ் காவலரண் வீதியைப் பார்த்திருக்க அமைக்கப்பட்டிருக்கும்போது, அங்குசென்று தனது முறைப்பாட்டினைப் பதிவுசெய்யாமல் சிவராமின் நண்பர் குசால் வெறுமனே வீடு சென்றது ஏன்? 

இப்படுகொலையில் மிகவும் பாரதூரமான விடயம் யாதெனில், இதன்மூலம் கொலையாளர்கள் சொல்லும் செய்தி. தமிழ் ஊடககங்கள் இருபிரதான விடயங்கள் பற்றிப்பேசுகின்றன.

 
முதலாவது விஅடயம், சிவராம் கடத்தப்பட்ட விடுதியும், அமைவிடமும் பம்பலப்பிட்டி பொலீஸார் அதிகம் நடமாடும், காவலுக்கு நிற்கும் ஒரு பகுதியென்பதும், அவரைக் கடத்திச் சென்றவர்கள் பொலீஸ் நிலையத்தின்முன்பாக குறைந்தது 2 மணித்தியாலங்கள் வரையாவது எதுவித பிரச்சினைகளும் இல்லாமல், சுதந்திரமாக நடமாடித் திரிந்திருக்கிறார்கள் என்பது.


இரண்டாவது, நாட்டின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பாராளுமன்றத்தின் பின்புறத்தில், அரச காவல்த்துறையினதோ ராணுவத்தினதோ கண்களில் படாமல் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு அவரது உடல் வீதியின் அருகில் வீசப்பட்டிருப்பது. 

ஆக, இவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில், இப்படுகொலையுடன் அரசும், பாதுகாப்புத்துறையும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான். 

வேண்டுமென்றே கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள்

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், இவை எதுவுமே தவறுதலாக கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள் அல்ல. மாறாக வேண்டுமென்றே, ஒரு செய்தியை சொல்லும் நோக்கத்துடன் விடப்பட்டவை. அதில் முக்கியமான செய்தி, புலிகளை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க எச்சரிக்கை. சிவராமின் கடத்தலும் படுகொலையும் சொல்லும் இன்னொரு விடயம் இவற்றிற்கு அரச பாதுகாப்புப் பிரிவே பொறுப்பாக இருக்கிறதென்பது. 
தமிழ்மக்களை குறியாக வைத்து நடத்தப்பட்டிருக்கும் இப்படுகொலைமூலம், புலிகளுக்கு ஆதரவாக இருந்தால், அரசே உங்களைக்கொல்லும் என்னும் மிகத் தெளிவான எச்சரிக்கை ஒன்றினை அரசு விடுத்திருப்பதாகவே படுகிறது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட சிவராம் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகில் வீசப்பட்டதன் காரணம், "சிங்கள பெளத்த " அரசின் அதிகாரமே இப்படுகொலையினைச் செய்கிறதென்பதைக் காட்டவே என்று கருதப்படுகிறது. 

இப்படுகொலையில் புரியாத விடயம் என்னவென்றால், சிவராம் கடத்தப்பட்டு இரு மணிநேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டுவிட்டார் என்பது. அவரைக் கொல்வதுதான் கடத்தல்க்காரர்களின் நோக்கம் என்றால், அவரை பம்பலப்பிட்டியில் வைத்தே சுட்டுக் கொன்றிருக்கலாம். கடத்திச்சென்று அல்லற்படவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை !

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுட்டுக்கொன்றபின் சிவராமை வீதியில் எறிந்துவிட்டுச் சென்ற கொலைகாரர்கள்

அவரை வேறு எங்காவது இழுத்துச் சென்று கொன்றிருக்கலாம். வேறு எங்காவது அவரது உடலை வீசியெறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அவரது உடல்  கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறிய அளவிலான இரத்தமே கணப்பட்டிருகிறது. ஆகவே, அவர் வேறு எங்கோ சுடப்பட்டு, இறக்கும் தறுவாயில் இங்கே கொண்டுவந்து வீசப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. அவரது உயிர் தியவன்னா வாவியில் பிரிந்திருந்தாலும்கூட, அவரது உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூடுகள் வேறு எங்கோதான் நடத்தப்பட்டிருக்கின்றன. அருகில் கிடந்த வெற்றுக் கூடுகள் அவரை அங்கே கொன்றதாகக் காட்டுவதற்காக கொலையாளிகளால் வேண்டுமென்றே போடப்பட்டவை என்பது உறுதியாகிறது. இலங்கை காவல்த்துறையிடம் கொலை தொடர்பான விசாரணைகளை திறம்படச் செய்வதற்கான கருவிகள் இல்லையென்பது படுகொலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாமல்ப் போகக் காரணமாயிருக்கிறது.......

அப்படியானால், சிவராம் எங்கே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்? இதற்கான மிக இலகுவான பதில், கொலைகாரன் எங்கே அவருக்காகக் காத்திருந்தானோ, அங்கேதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அப்படியானால் அவரைக் கொன்றது யார்? இதற்கான ஒரே பதில் சிவராமைக் கொல்வதற்கு தனது பதுங்குமிடத்தைவிட்டு வெளியே வந்தால் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி, சிவராமைத் தனது காலடியில் கடத்திவந்து வீழ்த்தும்படி கடத்தல்க்காரர்களை ஏவிய ஒருவன். கிழக்கில் கருணாவுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளின்படி சிவராமை தனது கைத்துப்பாகியால் சுட்டுக் கொன்றது கருணாவே என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான காரணமாக அவர்களால் பின்வரும் சம்பவங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா !

தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார்.  கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார்.  சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம்.

 

கருணாவை எதிர்த்து நின்ற சிவராம்

கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார்.

 

அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை.

 

புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின்  ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.

கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ  புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது.

சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு  வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர்.

ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட,  புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது.

இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும்தனது கையாலேயே அவர்  கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது.

அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.

 

 

 

 

Edited by ரஞ்சித்
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.