Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு-செலவுத் திட்டத்தில் நீதி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பு விவாதத்தில் எம். ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரவு-செலவுத் திட்டத்தில் நீதி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பு விவாதத்தில் எம். ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதன் போது:

- நீதித்துறையில் அரசியல் தலையீடு
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பொறுப்புக் கூறல்
- நீதி கிடைப்பதிலுள்ள நீண்ட தாமதம்,
- சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் நீதித்துறை வெளிப்படுத்தும் பாகுபாடு
- அதிகரிக்கும் தடுப்புக் காவல் படுகொலைகள்
- சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனமின்மை

என்பன குறித்து விரிவாகப் பேசினார்.

“அரசாங்க மாற்றம் நீதித்துறையைப் பாதிப்பதில்லை, ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் மாறினாலும் ஒரே நீதிபதிகளே தொடர்ந்து சேவையிலிருப்பர்.
ஆனால் ஆளும் கட்சி, இன்றைய எதிர்க் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீதித்துறையில் அரசியல் குறுக்கீடு இருந்ததாகச் சொல்கிறது. தற்போதைய பிரதான எதிர்க்கட்சி இன்று நீதித்துறையில் அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு பரபட்சமாக நீதிதித்துறை செயல்படுவதாக அரசாங்க தரப்பினரும், பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை மற்றொருவர் சாடுவது முழு நீதித்துறைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் செயல். இருந்தாலும், இவ்வளவு தூரம் உறுதிபட இரு சாராரும் மாறி, மாறி முன்வைக்கும் புறங்கூறல்கள் உண்மையில் இலங்கையின் நீதித்துறையின் இன்றைய கீழ்நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது,” என்று கூறி சுமந்திரன் தன் உரையை ஆரம்பித்தார்.

பேராசியர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் 42 வருடங்களாக உயர் நீதிமன்றத்திடம் மாத்திரம் இருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கமானது கீழ்மட்ட நீதிமன்றங்களுக்கு - குறைந்தபட்சம் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கு - வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை சுமந்திரன் வரவேற்றார். தற்போது உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் தொடர்பில் முதலும், இறுதியுமான நீதிமன்றமாகச் செயற்படுவது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பிற்கான காரணங்களைக் கூட சரிவர வழங்காமல் சென்று விடும் நிலையைத் தோற்றுவித்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

மேலும் பேசிய அவர்:

“நாட்டின் நீதித் துறை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பல்லாயிரமானோர் தமக்கான நீதியை எதிர்பார்த்து தசாப்தங்கள் தாண்டிக் காத்திருக்கிறார்கள். என்னிடமிருக்கும் நீதி மறுக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது. குறிப்பாக சிறுபான்மையினரது உரிமைகள் பற்றிய தீர்ப்புக்களில் பாகுபாட்டு மனப்பாங்கோடேயே இலங்கையின் நீதித்துறை இயங்கி வந்திருக்கிறது. (இந்திய) குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலேயே இது ஆரம்பித்து விட்டது. இதன் மிக அண்மைக்கால உதாரணம், முஸ்லிம்களின் ஜனசா விவகாரம் தொடர்பான விசாரணை. எதுவிதமான காரணங்களையும் வழங்காமல், நீதிமன்றம் முஸ்லிம்களது இந்த மிக முக்கியமான உரிமை மீதான வழக்கைத் தள்ளுபடி செய்தமை அநாகரீகமானது.

1983 வெலிக்கடையில் நிகழ்ந்தது போலவே இன்று வரை தடுப்புக் காவல் கொலைகள் தொடர்கின்றது. 1997 கழுத்துறையில், 2000 பிந்துனுவெவயில், 2012 வவுனியா சிறைச்சாலையில் . . . சில நாட்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில்; இப்படி முடிவின்றித் தொடரும் தடுப்புக் காவல் படுகொலைகளுக்கு இதுவரை எவருமே தண்டிக்கப்படவில்லை. அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் நிகழ்ந்த இந்தக் கொலைகள் குறித்து (அரசின்) குற்றவாளி ஒருவர் கூடத் தண்டிக்கப்படாமலிருப்பது ஜனநாயக நாடொன்றின் நீதித்துறைக்குப் பெரும் இழுக்கு. வவுனியா சிறைச்சாலையில் நிமலரூபனும், டில்ருக்சனும் அடித்துக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் அவர்களது உடற் காயங்களில் இருந்தது. நிமலரூபன் கொலையைக் கேள்விக்குட்படுத்தி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரிக்காது தள்ளுபடி செய்த அன்றைய நீதியரசர் இன்றைக்கு ஐ.நா. வில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை விட வேறெவெரும் இந்த அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லையா?

மேலும் குமரபுரத்திலும், மிருசுவிலிலும் இடம்பெற்ற படுகொலைகளில் 24 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரேயொருவர் தண்டிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இப்போது ஜனாதிபதி மன்னிப்பளித்து விடுவித்திருக்கிறார். மிக, மிக அரிதாகவே முதற் கட்ட நீதிமன்றங்களில் நீதி கிடைக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட இறுதியில் மேன்முறையீடு மூலம் அல்லது பொது மன்னிப்பினூடாக நீதி மறுக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாகச் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிள்ளையான் நான்கரை வருடங்கள் விளக்கமறியலில் இருந்ததை குறித்து பதறி ஆதங்கம் வெளியிடும் அரசாங்கம் 20 தொடக்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஏன் கவனங் கொள்ளவில்லை? பிள்ளையானின் வழக்கில் பிணை வழங்க அனுமதித்த சட்டமா அதிபர் ஏன் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழுள்ள ஏனைய வழக்குகளில் பிணை வழங்கமறுப்பதேன்?

மேலும் திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள், மூதூரில் கொலைசெய்யப்பட்ட 17 ACF (Action Contre la Faim) ஊழியர்கள், கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போதே கொலைசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஜோசேப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் சிவநேசன் என எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை. லசந்த விக்ரமதுங்க, கீத் நோயர், பிரகீத் ஏக்நாலிகொட மற்றும் கொலை செய்யப்பட்ட 34 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் நீதிக்கான அறிகுறிகளே இல்லை.

அரசின் நீதித்துறை ஏன் இப்படிக் கீழ்த் தரமாக இயங்குகிறது? இவ்வாறு செயற்படுவதனாலேயே நாம் தொடர்ந்தும் இந்த நீதித்துறை மேல் எமக்கு நம்பிக்கையில்லையெனச் சொல்கிறோம். இதனாலேயே போரின் போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ஈடுபாடு, விசாரணை மற்றும் நீதிமன்றம் வேண்டுமென்கிறோம். இன்று பிரதான கட்சிகள் நீங்களே நாட்டின் நீதித்துறையை மாறி, மாறிப் புறங்கூறி இகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இதே நீதித் துறையின் கைகளால் அதிகம் நசுக்கப்பட்ட நாங்கள் உண்மைகளைக் கூறினால் மட்டும் எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்.”

நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹீஜாஸ் ஹிஸ்புல்லா குறித்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்:

“எட்டு மாதங்களுக்கு மேலாக எதுவித குற்றமும் சுமத்தப்படாமல் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் சிறந்த இளம் சட்டத்தரணி ஹீஜாஸ் ஹிஸ்புல்லா. மாறி, மாறி அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. தான் பிரதி நிதித்துவம் செய்யும் மனுதாரருக்கும், குறித்த சட்டத்தரணிக்குமிடையிலான தொடர்பாடல் குறித்து எந்த வித விசாரணையும் நீதிமன்றில் செய்யப்பட முடியாது. இப்படியிருக்க ஹீஜாஸின் வழக்குக் கோவைகளைப் பொலீசார் கையகப்படுத்தியிருக்கிறார்கள். சரி கையகப்படுத்தினீர்கள். அந்தக் கோவைகளில் குற்றங்கள் புலப்பட்டிருந்தால் அதையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு மதரசா பாடசாலையைத் தொடர்புபடுத்திக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால், இப்போதும் அந்தப் பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறெவரும் அந்தப் பாடசாலை தொடர்பில் கைது செய்யப்படவில்லை. ஹீஜாஸ் இதே பாடசாலையோடு தொடர்புபடுத்தப்பட்டு இன்றும் சிறையிலிருக்கிறார். கேலித்தனமான யதார்த்தம். கோமாளித்தனமான நீதி அமைச்சு. கட்டார் அறக்கட்டளையோடு ஹீஜாஸிற்குத் தொடர்பிருப்பதாக அமளி கூட்டப்பட்டது. அது இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசும் அந்த அறக்கட்டளையிடமிருந்து பணம் பெற்றிருக்கிறது.
விசாரணைகளுக்கும், நீதிக்கும் முட்டுக்கட்டையாக வேண்டாமென நான் ஹீஜாஸ் குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மௌனித்திருந்தேன். ஆனல் எட்டு மாதங்கள் ஆகி விட்டது. ஹீஜாஸிற்குக் குழந்தை பிறந்திருக்கிறது. மனைவியைக் கூடப் பார்க்க அனுமதியில்லை. சட்டத்தரணிகளுடன் பேச அனுமதியில்லை. ஒரு சிறந்த, பெயர் பூத்த சட்டத்தரணிக்கு இங்கிந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை. ஹீஜாஸைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரம் பேர் அவலமுற்றிருக்கிறார்கள்?

இன்றைய நீதி அமைச்சர் ஒரு சட்டத்தரணி. வேறெந்தச் சட்டத்தரணியும், நாட்டின் நீதித் துறை சக சட்டத்தரணியை இப்படி நடத்திக் கொண்டிருக்க நீதி அமைச்சர் கதிரையில் குந்திக் கொண்டிருக்கமாட்டார்கள். நாட்டில் நீதியில்லை. நீதி அமைச்சு மட்டும் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் துறைமுக அபிவிருத்தி அமைச்சரை நியமித்து விட்டது போல இங்கே ஒரு நீதி அமைச்சர்.”

இறுதியாக, சுயாதீன ஆணைக்குழுக்களின் இழந்து நிற்கும் சுயாதீனத்தைக் குறித்து சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்:

“சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களைப் பதவிக் காலம் முடியுமுன்னே பதவி விலகக் கோரி அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

கிழக்கின் ஆளுநர் அந்த மாகாணத்தின் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு - ஏற்கனவே ஒரு தலைவர் இருந்த நிலையில் - புதிய தலைவரை நியமித்தார். இதை நீதிமன்றம் சென்று தடுக்க, முழு ஆணைக்குழுவையும் பணி நீக்கம் செய்வதாகக் கடிதம் அனுப்புகிறார். ஆனால் ஆளுநருக்கு சுயாதீன ஆணைக்குழுக்களிலிருந்து பணி நீக்கும் அதிகாரம் கிடையாது.

மின்சாரம், நீர் என்பனவற்றை மேற்பார்வை செய்யும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அரச திறைசேரியின் செயலாளர் தொலைபேசியில் தொடர்பெடுத்து பதவி விலகுமாறு மிரட்டுகிறார். பதவி விலகாவிடின் சிராணி பண்டாரநாயக்காவிற்குச் செய்ததைப் போல பாராளுமன்றத்தினூடாக நடவடிக்கை எடுப்ப்போம் என்று எச்சரிக்கிறார். இது மிக மோசமான செயல்.
பாராளுமன்றச் சட்டமூலங்களூடே உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களை சுற்று நிருபங்களை வெளியிட்டு முற்றாக இல்லாதொழிக்க முனைகிறார் ஜனாதிபதி. ஜானாதிபதி சொல்வதெல்லாம் சுற்றுநிருபமாம். ஜனாதிபதி சேர் ஆகிவிட; அவர் சொல்வதெல்லாம் ‘சேர்’கியூலர் ஆகிவிடுகிறது,” என்றார்

https://www.facebook.com/M.A.Sumanthiran/videos/830837854150512

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் முந்தியிட்டுது தமிழன துரோகி எல்லாம் ஓநாய் அழுகை  அழுவுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.