Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் - விஜய் ஆதரவாளர்களின் டிவிட்டர் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியினருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் டிவிட்டர் யுத்தம் நடந்துவருகிறது.

தன் மீதான வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக புதன்கிழமையன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வந்தார் சீமான். அந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசினார்.

விஜய் விரைவில் கட்சி துவங்குவார் என அவரது தந்தை கூறுகிறாரே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வராது" என்று தெரிவித்தார். விஜயையும் சேர்த்துச் சொல்கிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, "எல்லோருக்கும் சேர்த்துத்தான்" என்று சீமான் பதிலளித்தார்.

மேலும், "நடிக்கிறது மட்டுமே நாடாளத் தகுதி என நினைக்கும் கொடுமையை இதோடு ஒழிக்கனும் என நினைக்கிறோம். நீயும் அங்கேயிருந்துதானே வந்த என்கிறார்கள். நான் ரசிகர்களைச் சந்திக்கவில்லையே? நான் மக்களைச் சந்தித்தேன். என்னை அவர்களோடு ஒப்பிடக்கூடாது. இந்த நாட்டை ஆளும் தகுதி இருக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுதான். அவருக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கிறது?

இது என் நாடு, என் உரிமை. நீங்கள்தானே என் உரிமை என காலா படத்தில் பேசினீர்கள்.

கமல் ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு?

ரஜினி, கமல் இருவருமே எம்.ஜி.ஆரைப் பேசுகிறார்கள். அப்படி நீங்கள் எம்.ஜி.ஆரைப் பேசும்போது வாக்குகள் இரட்டை இலைக்குத்தான் போகும். எம்.ஜி.ஆர் பிரபாகரனை நேசித்தார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும் நீங்கள், ஈழத்தைப் பற்றி உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள்" என்று கூறினார் சீமான்.

'நான் வந்து நல்லாட்சி தருகிறேன்'

"என்.டி.ஆர். அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. எம்ஜிஆர் வந்தது ஒரு காலச் சூழல். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நடக்கவில்லை. ஏன் ஷாருக்கானுக்கெல்லாம் இந்த எண்ணம் வரவில்லை. எடப்பாடி ஆட்சி நன்றாக இல்லை என்றால் நான் வந்து நல்லாட்சி கொடுத்துவிட்டுப் போகிறேன்.

ரஜினி 71 வயதிலும் ஹீரோவாக நடிக்க வேண்டுமா என்று கேட்டோமோ, இதெல்லாம் ஒரு படமா என்று கேட்டோமா, எங்கள் இனத்தை வழிநடத்த மகாராஷ்ட்ராவிலிருந்து ஒருவர் வரவேண்டுமா? இதை ஒரு பெருத்த ஒரு அவமானமாக பார்க்கிறோம்" என்றும் சீமான் பேசினார்.

டிவிட்டரில் மோதல்

சீமான் அவருடைய இந்தப் பேச்சில் ரஜினிகாந்தையே அதிகம் விமர்சித்துப் பேசியிருந்தாலும், பேச்சின் துவக்கத்தில் விஜயையும் குறிப்பிட்டதையடுத்து அவரது ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

புதன்கிழமையன்று பிற்பகலில் இருந்தே #டுபாக்கூர்சீமான் என்ற ஹேஷ்டாகின் கீழ், சீமானை விமர்சித்து ட்விட்டர் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ்டாகின் கீழ் சீமானை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் ட்வீட்களை வெளியிட ஆரம்பித்தனர்.

இந்த இரண்டு ஹேஷ்டாகுகளும் பல மணி நேரங்கள் ட்விட்டர் டிரெண்டிங்கில் முன்னணியில் இருந்தன.

தமிழ்நாடு தேர்தல் செய்திகள்: சீமான் - விஜய் ஆதரவாளர்களின் டிவிட்டர் மோதல், மு.க.அழகிரி அரசியல் அறிவிப்பு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான் பாய்வது ஏன்?

விஜய் - சீமான்

விஜய் மீதான கோபம்... சீமானின் இந்த மன மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

``அரசியல் செய்யாமல் நேரடியாகத் தேர்தலை எதிர்கொள்வது மக்களை மிகக் குறைவாக, தாழ்வாக, கேவலமாக மதிப்பிடுவது.’’
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, சீமான் இப்படி பதிலளிக்க, ``விரைவில் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என அவரின் அப்பா சொல்லியிருக்கிறாரே?'' என பத்திரிகையாளர்கள் பதில் கேள்வி கேட்க, ``ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரக் கூடாது'' என மிகக் காட்டமாக பதிலளித்தார் சீமான். ``நடிகர் விஜய்க்கும் சேர்த்தா...’’ எனப் பத்திரிகையாளர்கள் மீண்டும் கேட்க, ``எல்லோருக்கும் சேர்த்துத்தான்’’ என ஆமோதித்தார் அவர்.

விஜய் | மாஸ்டர்
 
விஜய் | மாஸ்டர்

இதே சீமான், கடந்த வருடம் `உலக காணாமல் போனவர்கள்’ (ஆகஸ்ட் 30 ) தினத்தன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,``யார் யாரோ அரசியலுக்கு வரும்போது, என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு... ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. விஜய் என்னுடைய தம்பி. மக்கள் அவருக்கு வாக்களிச்சா, நான் பாராட்டுகளைத் தெரிவிப்பேன். எனக்கு வாக்களிச்சா நன்றியைத் தெரிவிப்பேன்’’ எனப் பேசியிருந்தார். அதற்கு முன்பாக, ``ரஜினிக்கும் விஷாலுக்கும் அரசியல் ஆசை இருக்கும்போது, மண்ணின் மைந்தன் என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு?’’ எனவும் மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது விஜய்க்கும் சேர்த்தே எச்சரிக்கைவிடும் வகையில் பேசியிருக்கிறார் சீமான் .

சீமானின் இந்த மன மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

 

நாம் தமிழர் கட்சி முதன்முதலில், 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 1.07 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றாலும், அது அந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எந்தவித சோர்வையும் உண்டாக்கவில்லை. அதற்கடுத்ததாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. 20 தொகுதிகளில் ஆண் மற்றும் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி, 16,45,185 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07-லிருந்து 3.87-ஆக அதிகரித்தாலும் அந்தக் கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை. எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரம், நிரந்தரச் சின்னம் என ஆவலோடு காத்திருந்த சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் தேர்தல் முடிவுகள் திருப்தியளிக்கவில்லை.

கமலுடன் சீமான்
 
கமலுடன் சீமான்

நாம் தமிழர் கட்சி எதிர்பார்த்த வாக்குகள் பெறாமல் போனதற்கு, நடிகர் கமலின் திடீர் அரசியல் பிரவேசமும், அவரின் கட்சி வாங்கிய 15.73 லட்சம் வாக்குகளுமே காரணம் எனக் கருதினர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள். கமல் கட்சி ஆரம்பிக்கும்போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சீமான், இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,

``தேர்தலில் அவருடைய (கமல்) பங்களிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்படத்தைப் போலவேதான் அரசியலையும் பார்க்கிறார். 50 வருடங்கள் நடித்திருக்கிறார். என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள், `வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார்' என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவரை ஒரு பர்சனாலிட்டியாகப் பார்ப்பவர்கள்தான் அதிகம்’’ எனக் கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். காரணம், நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளில் கடுமையாகக் களப்பணியாற்றி பெற்ற வாக்குகளை, கமலஹாசன் தன் திரைப் பிரபலத்தின் மூலம், கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் பெற்றுவிட்டார் என்கிற எண்ணம் சீமானுக்கு ஏற்பட்டது.

``திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்றுதான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்துக்காகக் கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத் தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
சீமான், ட்விட்டரில்.
 

தற்போதும்கூட, போராட்டக் களம் எதற்கும் வராமல், நேரடியாக தேர்தல் களத்துக்கு கமல் வருகிறார் எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். ஆனால், கூடவே, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசமும் தற்போது சீமானை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது எனக் கடுமையாக எதிர்த்துவந்த சீமான், பிறகு ``நான் முதலமைச்சராக மாட்டேன்’’ என ரஜினி அறிவித்ததும், வரவேற்றுப் பேசினார். ஆனால், 2019-ம் ஆண்டிலேயே பெற்றிருக்க வேண்டிய எட்டு சதவிகித வாக்குகளுக்குத் தடையாக தற்போது கமலோடு ரஜினியும் வந்துவிட்டார் என்கிற கோபம் சீமானுக்கு இருந்தாலும்,

``என்னுடைய கோட்பாட்டை, தமிழக அரசியல் கட்சிகளில் யாருடைய கோட்பாட்டோடும் ஒப்பிட முடியாது. அப்படியிருக்கும்போது, எனக்கென்று இருக்கிற கூட்டம், என்னோடுதான் தொடரும். இன்னும் சொல்லப்போனால், ரஜினியும் அரசியலுக்கு வரும்போது, என்னுடைய தேவை இன்னும் கூடுதலாகிவிடும்... அதாவது, `சீமான் சொல்வது சரிதானே...’ என்றுதான் மக்கள் சிந்திப்பார்கள். எனவே, ரஜினி வந்து எங்களது வாக்குகளைப் பிரிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை!’’ எனப் பேசிவந்தார் சீமான்.

ரஜினி - கமல்
 
ரஜினி - கமல்

ஆனால், நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அது நிச்சயமாக தன் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என தற்போது நினைக்கிறார் சீமான். ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் சீமானின் நிலைப்பாடுகளுக்கும் பல மாறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஈழ விவகாரம், காவிரி, நீட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழர் உரிமை சார்ந்த விஷயங்களிலெல்லாம் நடிகர் விஜய்யின் நிலைப்பாடும் சீமானின் நிலைப்பாடும் ஒரே மாதிரியானதுதான்.

தமிழக அரசியல் களத்தில், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குப் பிறகு நாம்தான் என நினைத்து வந்தார் சீமான். ஆனால், கமல், ரஜினி, அடுத்ததாக விஜய் எனப் பலர் போட்டியாக வருவதை அவர் விரும்பவில்லை. காரணம், கடுமையான களப்பணியாற்றி தம் கட்சி பெறும் வாக்குகளை திரைப்பிரபலத்தின் மூலம் மிக எளிதாக நடிகர்களின் கட்சி வாங்கிவிடுகிறது என்கிற கோபம்தான். அதனால்தான், விஜய் உட்பட நடிகர்கள் யாருக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வரக் கூடாது எனக் கொந்தளித்திருக்கிறார்.

``கமல், ரஜினி இருவரும் இரண்டு ஜாம்பவான்கள். அரசியலில், மிகப்பெரிய சாதனையைச் செய்வதற்கு கமல் ஆரம்பித்துவிட்டார். இதேபோல் ரஜினியும் வர வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால், தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது. இருவரும் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற என் ஆசையை, இந்த மேடையில் பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன்.''
எஸ்.ஏ.சந்திரசேகர்

``சீமான் முன்னிறுத்தும் தமிழ்த் தேசியக் கொள்கைகளை அவருக்கு முன்பே பலர் இங்கே பேசியும், இயக்கங்களாகச் செயல்பட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு சீமானுக்குக் கிடைத்தது. 2009-ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் உண்டான எழுச்சிதான் அதற்கு முதன்மையான காரணமாக இருந்தாலும், மற்றவர்களைவிட சீமானுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது என்பதற்கு அவர் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதும் ஒரு காரணிதான். அதை நிச்சயமாக அவர் மறுக்க முடியாது.

அடுத்ததாக சீமானுடைய பேச்சாற்றலைச் சொல்லலாம். ஈழப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, மக்கள் அடைந்த துயரங்களை, போருக்குப் பின்னால் இருக்கும் காரணிகளை தமிழக மக்களிடம் பாமர மொழியில் கொண்டு சேர்த்தவர் சீமான். அதனாலேயே அவர் பின்னால் பெருவாரியான இளைஞர்கள் திரண்டனர். தொடர்ச்சியான சிறைவாசமும், அவர் மீதான அடக்குமுறைகளும் இளைஞர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை உயர்த்தியது.

இன்று, நாம் களப்பணியாற்றிச் சிறுகச் சிறுகச் சேர்க்கும் வாக்குகளை, நடிகர்கள் எளிதாக தங்களின் பிரபல்யத்தின் மூலம் பெற்றுவிடுகிறார்கள் என சீமான் குற்றம்சாட்டினால், அவருக்கு முன்பாக ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த, அதற்காக சிறை சென்ற, கொடுமைகளை அனுபவித்த பலரையும்விட சீமான் அதிக கவனம் பெற்றிருக்கிறாரே, அதற்காக அவர்கள் சீமான் மீது கோபப்பட முடியுமா... ஆனால், நடிகராக இருந்தாலும் குறைந்தபட்சம் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் விஜய்யை எதிராக சீமான் நிறுத்துவது தேவையற்றது'' என்பதே சீமானைப்போல தமிழ்த் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்பவர்களின் கருத்தாக இருக்கிறது.

சீமான்
 
சீமான்

ஆனால், ''விஜய்யின் அரசியல் வருகை, ரஜினி, கமலுக்கு ஆதரவாகப் போக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ரஜினி, கமல் இணைந்து அரசியலுக்கு வர வேண்டும் என என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் `கமல் 60' நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்திருந்தார். அப்போதே, சீமான் உள்ளிட்ட பலருக்கும் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. அதனால்தான் சீமான் இப்போதே விஜய்யையும் எதிர்த்து அரசியல் செய்கிறார்'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், ``வாக்குவங்கிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பத்திரிகையாளர்கள் விஜய் குறித்துக் கேட்கவும்தான் எங்கள் அண்ணன் பதில் சொன்னார். எங்கள் அண்ணன் இயக்கம் ஆரம்பித்து மக்களைச் சந்தித்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. அதனால், ரஜினி, கமலையும் எங்கள் அண்ணன் சீமானையும் திரைத்துறையிலிருந்து வந்தவர்கள் என ஒப்பிடுவது சரியல்ல. இது குறித்து எங்கள் அண்ணனே விளக்கமும் கொடுத்துவிட்டார்'' என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-seaman-attacking-on-actor-vijay

  • கருத்துக்கள உறவுகள்

கமல் கட்சி ஆரம்பித்த போது வீட்டுக்கு சென்று பாராட்டி கமலின் அரசியல் வரவை சீமான் வரவேற்ற நியாபகம். 

இப்போ இப்படி சொல்கிறார். அப்போதும் கமல் ஒரு நடிகர்தானே?

அப்போ கமலுடன் சேர்ந்து பயணிக்கலாம் என்று நினைத்ததால் வரவேற்பு. இப்போ கூட்டணி சரியே வராது என்று உறுதியான பின் எதிர்ப்பா?

இதையும் “லெப்டு சிக்னல், ரைட்டு டெர்ன்” லிஸ்டில் சேர்த்து விடலாம்.

இதே போல் லைக்காவின் படத்துக்கு மகிந்த பினாமி பணம் என தமிழ்நாட்டில் எதிர்ப்பு பலமாக கிளம்பிய போது, விஜய் என்ற ஒரு பச்சை தமிழனுக்காக களம் இறங்குவதாக சீமானுக் தம்பிகளும் சொல்லி கொண்டார்கள்.

இப்போ? சமூகவலைத்தளங்களில் சோபா சந்திரசேகர், சுரேந்தர் மலையாளி எனவே விஜை பாதி மலையாளி, என்ற வகையில் ஒரு சாரார் எழுத தொடங்கி இருக்கிறார்கள்.

சிறு வயதில் எனக்கு பழைய தமிழக சஞ்சிகைகளை படிக்கும் பழக்கம் இருந்தது, அதில் எம்ஜியாரை குறித்து ஜூனியர் விகடன் வரைந்த தலையங்கம் 

“முரண்பாடே உன் மறு பெயர்தான் முதலமைச்சரோ?”.

இந்த செய்தியை வாசித்த போது இதுதான் நினைவுக்கு வந்தது.

பிகு: யாழின் எல்லா செய்தி திரிகளிலும் கருத்து எழுதுவதற்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும் உரிமையை பயன்படுத்தி, எனது பேச்சு சுதந்திரத்தையும் பயன்படுத்தி, இந்த செய்தி பற்றிய, இதன் பின்னான அரசியல் பற்றிய எனது பார்வையை வைத்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவில் கமலுக்கு 25 சீட்டா?

 

spacer.png

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மதுரையில் கடந்த 14ஆம் தேதி பிரச்சாரத்தை துவங்கினார். தேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொன்ன வார்த்தைகள், அளித்த வாக்குறுதிகள் ஊடகங்களில் கவனம் பெற்றன. தேர்தலில் 3ஆவது அணி அமைப்பது சாத்தியம் எனக் கூறிய கமல்ஹாசன், அதிமுக மற்றும் திமுக மீது விமர்சனங்களை முன்னிறுத்தி வந்தார். சமீபத்தில் கமல்ஹாசன் -சீமான் -ஒவைசி கூட்டணி உருவாவதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். தேர்தலில் ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமே வரக்கூடாது. நடிப்பது மட்டுமே நாடாள்வதற்கு தகுதி என்பதற்கு இத்துடன் முடிவு கட்ட வேண்டும் என்று வார்த்தைத் தாக்குதல் தொடுத்தார்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்திற்குச் சென்று பூங்கொத்து அளித்து அளவளாவியவர் சீமான். அண்ணன் கமல்ஹாசன் என உரிமையோடு அழைத்து அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்தினார். சமீபத்திய நாட்கள் வரை ரஜினியை மட்டுமே விமர்சித்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசனை சீமான் கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று விசாரித்தோம்...

 

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமானிடம் கமல்ஹாசன் பேசினார். இதுபற்றிய தகவலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் சீமான் பகிர்ந்துகொண்டார். இந்த முறை நாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். மக்கள் நீதி மய்யம்-ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். இன்னும் சில கட்சிகள் கூட நம்முடன் கூட்டணிக்கு வரும் என்று சொன்னார்.

ஆனால், இப்போது கமல்ஹாசன் ரஜினியிடம் தொடர்ந்து ஆதரவு கேட்டு வருகிறார். ஈகோ பார்க்காமல் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என கமல்ஹாசன் வெளிப்படையாகவே பேட்டி கொடுக்கிறார். கமல்ஹாசன் அரசியல் வருகையை ஆதரித்த சீமான், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆரம்பம் தொட்டே எதிர்த்து வருகிறார். நடிகராக ரஜினியை கொண்டாடுகிறோம். ஆனால் தமிழ் மண்ணை தமிழன்தான் ஆள வேண்டுமென்ற விளக்கத்தையும் அவர் முன்னிறுத்துகிறார்.

ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி பேசி வரும் கமல்ஹாசன், ரஜினியுடன் இணையத் தயார் என ஏன் சொல்கிறார். அப்படியென்றால் ரஜினியை கடுமையாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சியுடன் அவர் எதற்காக கூட்டணி பற்றிப் பேச வேண்டும். ரஜினியுடனே பேசி கூட்டணி அமைத்துக்கொண்டு செல்லலாமே.

அத்துடன் திமுகவை ஒருபக்கம் எதிர்ப்பது போல எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் அக்கட்சியுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தையை கமல் நடத்துகிறார். காங்கிரஸுக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுக்கு 25 சீட் வரை தர திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனால்தான் கமல்ஹாசனை எப்போதும் இல்லாத அளவுக்கு விமர்சித்துள்ளார் சீமான் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில்.


 

https://minnambalam.com/politics/2020/12/25/21/why-ntk-seeman-criticize-actor-turn-politicial-kamalhasan

 

  • கருத்துக்கள உறவுகள்

கமலுக்கு 25 சீட்டா🤣 

பிறகு வைகோ, திருமா எல்லாம் 50 கேட்பாங்களே🤣 

கடைசியா திமுகவுக்கு ஒன்றும் மிஞ்சாது போலிருக்கே🤣

கருணாநிதி இருந்திருந்தால் “நண்பர் கமல்ஹாசனுக்கு இதயத்தில் இடம் இருக்கு” என்று மேட்டரை முடித்திருப்பார்😀.

#வாத்தியார் பிள்ளை மக்கு

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

பிகு: யாழின் எல்லா செய்தி திரிகளிலும் கருத்து எழுதுவதற்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும் உரிமையை பயன்படுத்தி, எனது பேச்சு சுதந்திரத்தையும் பயன்படுத்தி, இந்த செய்தி பற்றிய, இதன் பின்னான அரசியல் பற்றிய எனது பார்வையை வைத்துள்ளேன். 

பேச்சு சுதந்திரமா? எழுத்து சுதந்திரமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

பேச்சு சுதந்திரமா? எழுத்து சுதந்திரமா?

இதை பற்றி நானும் யோசித்துள்ளேன். Freedom of speech என்ற பதத்தினுள் பேசுவது, எழுதுவது, கார்டூன் வரைவது, சைகை செய்வது, முகம் சுழிப்பது கூட வரும் என நினைக்கிறேன்.

அண்மைய சில பத்தாண்டுகளில் freedom of expression என்ற ஆங்கிலபதத்தை பாவிக்கிறார்கள். 

தமிழில் கருத்து சுதந்திரம் என்பது சரியாக இருக்கலாம்.

ஆனால் பேச்சு சுதந்திரம் தனியே பேச்சுக்கு மட்டுமானதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அந்தம்மா வந்து வீடியோ ஒண்டு வெளியிடப் போகுது!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

இனி அந்தம்மா வந்து வீடியோ ஒண்டு வெளியிடப் போகுது!😂

ரஜனி கமல் சீமான் மூவருக்கும் ஒரு விசித்திரமான, நகைசுவையான ஒற்றுமை உண்டு. மூவரும் “சினிமாகாரன்”. அதைவிட

1. சீமான் - அடிக்கடி வீடியோ வெளியிடும் ஒரு முன்னாள் இணையின் தொல்லை.

2. ரஜனி- சம்பள/வாடகை பாக்கி தொல்லை.

3. கமல் - சம்பள பாக்கி தரவில்லை என முன்னாள் இணை வீடியோ வெளியிட்டுத்தொல்லை 😀

தட்ஸ்தமிழில் இருந்து 

 

 

ஓஹோ.. கமல், ரஜினியை சீமான் தாளித்து எடுக்க இதுதான் காரணமா.. கமலும் தன் வாயால் கெட்டாரா..!

HemavandhanaPublished:December 25 2020, 19:21 [IST]
Why Seeman slams MNM Kamalahasan

சில தினங்களுக்கு முன்பு சீமானும், கமலும், இணைவதாக ஒரு பேச்சு எழுந்தது.. பிறகு கமலும், ஓவைசியும் இணைவதாக ஒரு பேச்சு எழுந்தது.. ஆனால், இதை பற்றி உறுதியாக தெரிவதற்கு முன்பேயே, கமல் ரஜினியை வெளிப்படையாக அழைக்க ஆரம்பித்துவிட்டார்.. மக்களுக்காக ஈகோவை விடவும் தயார் என்றும் அறிவித்தார்.

இப்போது, மக்கள் இருக்கும் மனநிலையில், திமுகவின் வாக்குகளை பிரிப்பவர்களாக ரஜினி, கமல், சீமான், ஓவைசியும்தான் பார்க்கப்படுகிறார்கள்.. ஆரம்பத்தில் சீமான் கமலுடன் இணைவதாகத்தான் இருந்துள்ளது.. தன் பிடிவாதத்தை விட்டு, இறங்கிவிட சீமானும் முடிவு செய்திருந்தாராம்.

ஆனால், ரஜினி வருகை தங்களுக்கு ஆகாது என்று தெரிந்தும், ரஜினியை கமல் வம்படியாக அழைத்து கொண்டிருந்ததுதான் சீமான் தரப்புக்கு கடுப்பை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. மற்றொருபுறம் திமுகவுடன் பேச்சு நடத்துவதாகவும், 25 முதல் 30 சீட்டுக்கள் வரை மநீம ஒதுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் கசிந்தபடியே இருந்துள்ளது.

அதனாலேயே நேற்று முன்தினம் ரஜினி, கமல், விஜய் என மொத்த பேரையும் சீமான் சரமாரியாக தாளித்து எடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள். இதில், இவ்வளவு காலம் நல்ல இணக்கத்துடன் இருந்த விஜய் போல கமலையும் ஓபனாக சீமான் அட்டாக் செய்தது சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது..

சீமான்

இவரைப் பற்றி தெரிந்து கொள்க

சீமான்

எனினும், தன்னுடைய தத்துவத்துக்கும், கருத்தியலுக்கும் யாருடனும் கூட்டு சேர முடியாது என்பதாலும், ஓட்டரசியல் ஒரு பொருட்டே அல்ல. உரிமை அரசியலே முக்கியம் என்ற தன்னுடைய ரூட்டில் சீமான் தன் பயணத்தை தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறோமா? | இடும்பாவனம் கார்த்திக் | தம்பி |

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.