Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு

 

கொறோணாவைரஸின் மூலத்தைத் தேடி ஆராய்ச்சிக்காக வூஹானுக்குப் பயணம் செய்யவிருந்த உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.

சீனாவின் இந் நடவடிக்கை தனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அவ்வமைப்பின் தலைவர் ரெட்றோஸ் அடனோம் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார்.

கொறோணாவைரஸ் எங்கிருந்து உருக்கொண்டது என்பதனை அறிவதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவைச் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக இக்குழுவிலுள்ள இருவர் முதலில் சீனாவிற்குச் செல்வதற்காக சீனா, உலக சுகாதார நிறுவனம், இடைத் தரிப்பு நாடுகள் ஆகியவற்றிடையே போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சீனா அவர்களுக்கு அனுமதி கொடுக்கத் தவறியிருக்குகிறது.

“சீனாவின் மூத்த அதிகாரிகளுடன் நான் பேசி, உலக சுகாதார அமைப்பின் குழுவிற்கு இப் பயணம் மிக முக்கியமானது எனபதை மீண்டும் வலியுறுத்தியிருந்தேன். பயண ஒழுங்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தமது உள்ளக ஒழுங்குகளை விரைவாக முடித்துத் தருவதாக சீன அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்தனர்” என ரெட்றோஸ் தெரிவித்துள்ளார்.

விலங்கினங்களிடையே பரவும் நோய்களில் நிபுணத்துவம் பெற்றவரான பீட்டர் பென் எம்பாரெக் அவர்களின் தலைமையின் கீழ் செல்லவிருந்த இக் குழு, கொறோணாவைரஸ் தொற்று ஆரம்பித்த இடமான வூகானிலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில், நோய்த்தொற்றியல் (epidemiologic), வைரஸ் தொற்றியல் (virologic), இரத்தக்கூற்றியல் (serologic) ஆகியன தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கெனப் பயணம் மேற்கொள்ளவிருந்தது.

இப் பெருந்தொற்றிலிருந்து சீனா ஓரளவு மீண்டுவிட்டதாயினும், நோய்க் கட்டுப்பாட்டு விடயங்களில் அது மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. புதனன்று, ஹெபேய் மாகாணத்தை ஊடறுத்துச் செல்லும் பெருந்தெருக்களையும், மாகாணத் தலைநகரிலுள்ள பிரதான பஸ் நிலையத்தையும் மத்திய அரசு மூடியிருக்கிறது.

ஜனவரி 5 இல் சீனாவில் பதியப்பட்ட 23 தொற்றுக்களில் 20 பேர் ஹெபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று நாட்களில் இம் மாகாணத்தின் தொற்று எண்ணிக்கை 19. அதே வேளை, அறிகுறியற்ற 64 நோயாளிகளில் 43 பேர் இம் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகளாவிய ரீதியில் 86.2 மில்லியன் மக்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகியும், அவர்களில் 1,895,267 பேர் மரணமாகியுமுள்ளனர்.

https://marumoli.com/கொறோணாவைரஸின்-மூலத்தை-அற/?fbclid=IwAR0Sp4NL33Sx4E-6RMt2gV3nxwxC3eeN_3rnwpWNKyvM5zQEAkJyZ1K1W0U

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை உருமாறியா  கொரனோ  சைனீஸ் புத்தாண்டுக்கு போகும் அவர்களால் அங்கு போகணும் போகுமா ? போகாதா ?

 

 

சைனீஸ் புத்தாண்டு முடிந்த பின்தான் உலகெங்கும் பரவியது இனிமையாய்  பையை சுழட்டி கொண்டு நோயை பரப்பினார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ட்ரம்பர் முன்னர் சொன்னது உண்மையா இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

அப்ப ட்ரம்பர் முன்னர் சொன்னது உண்மையா இருக்குமோ?

சைனீஸ் பொருளாதாரம்  கடந்த 10 மாதங்களில் அதிக வளர்ச்சியில் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

சைனீஸ் பொருளாதாரம்  கடந்த 10 மாதங்களில் அதிக வளர்ச்சியில் உள்ளது .

அதுமட்டுமல்ல.. அது உலகில் முதலாம் இடத்தை எதிர்பார்க்கப்பட்ட காலத்தை விட முன்னரே எட்டக் கூடிய நிலையை இந்த சீனக் கொவிட்-19 உலக உயிர் கொல்லி நோய்ப்பரவல் ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில்.. இது சீனாவின் உயிரியல் உலக யுத்தம் என்று சொல்லலாம். இதுதான் 3ம் உலகப் போர். 

Chinese economy to overtake US 'by 2028' due to Covid

US and Chinese economies 2010-2035. Gross domestic product in $US trillions (constant prices). Chart shows Chinese and US economic output over time with China overtaking the US around 2028 .

https://www.bbc.co.uk/news/world-asia-china-55454146

China will overtake the US to become the world's largest economy by 2028, five years earlier than previously forecast, a report says.

 
  • கருத்துக்கள உறவுகள்

2008 மாவீரர் தின உரையில் தேசிய தலைவர் சொன்னது..

எனி உலகப் பொருண்மியம் ஆசியாவைச் சார்ந்தே பெரிதும் இருக்கும் என்று....

அவர் பெரிய பொருண்மிய வல்லுனரோ இல்லையோ.. காலத்தை துணியத் தெரிந்தவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.