Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் உரை குறித்து சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் உரை குறித்து சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மாவை

mavai-400.png
 12 Views

இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்டம், உஹனையில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மட்டு மல்ல தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத் தையும் எதிர்த்து அச்சுறுத்தி பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயற்பட முடியும் எனவும் போர் முழக்கம் செய்துள்ளார்.

பத்திரிகைகளில் இந்தச் செய்திகள் வெளிவந்தபோது நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் 2009 வரையில் போரின் காலத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை மட்டுமல்ல அதற்கு யார் பொறுப்பாக இருந்தார் என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்துக்கு முன்னால் இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டையும் நிறுவியுள்ளது.

அதற்கு அப்பால் ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல இலங்கை நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்துக்கும் இராணுவ மயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும், இப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேசமக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தையும், இனப் படுகொலை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

ஜனாதிபதி, நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப்புலிகளைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறுவது அவர் போர்முனையில் இருந்திருக்கின்றார் என்பதுதானே. பிரபாகரனையும் இழுத்துச் சென்று சுட்டேன் என்றால் உயிருடன் நந்திக் கடல் போர்முனையில் பிடிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றிலல்லவா நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்? அது அல்லாமல் சுட்டுக் கொன்றேன் என்றால் அது போர்க்குற்றம்தானே. இப்படித்தான் பல ஆயிரம் மக்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா? நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா? நான் அறிந்தவரையில் பிரபாகரன் களத்தில் போராடியிருப்பாரே தவிர சரணடைந்துவிடாத சுபாவம் கொண்டவர். அவரது மகன் பாலச்சந்திரன் அந்தப் போர்க்களத்தின் நடுவே எவ்வளவு அப்பாவித்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதை உலகம் அறியும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூவான் வெலிசாயாவில் பதவி ஏற்பு நிகழ்வில் பதவி ஏற்றார்.

அந்தச் செய்கையானது நாட்டை ஆண்ட எல்லாளன் மன்னனைத் துட்டகாமினி போரில் தோற்கடிக்கப்படான் என்பதை நினைவூட்டுகின்றது. அதுபோல்தான் பிரபாகரனைக் கொன்று வென்றென்என்று தானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார். ஆனால், போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி. துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன். வரலாறு கூறும், மகாவம்சத்தில் “சிங்கள’ என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறில்லாமல் இறுதிப்போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, தமிழ்த் தேச மக்களை இழிவுபடுத்திநாட்டின் தலைமைத்துவப் பண்புகளை இழந்து நாகரிகத்தை மண்ணில் புதைக்கலாமா? ஜனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்” என்றுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39545

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப்புலிகளைச் சுட்டுக் கொன்றேன்

"மதிகேடர் தம் வாயால் அழிவார், அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்." தமது ராணுவத்தினர் போரில் பொது மக்களை  கொலை செய்யவில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் செய்த கொலைகளை வர்ணித்து பொறியில் தானாகவே மாட்டிக்கொண்டார். இறுதி யுத்தம் மட்டுமல்ல நாட்டில் நடந்த ஜனநாயகத்துக்கு விரோதமான அனைத்து படுகொலைகளுக்கும் இவரே காரணம் என்பதோடு இது வரும்காலத்தில் தொடரும் எனவும் எச்சரிக்கிறார்.

 

11 hours ago, உடையார் said:

போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி. துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன்.

 நயவஞ்சகமாக எல்லாளனை  போரில் வென்ற துஷ்ட கைமுனு தனது கோழைத்த தனத்தை மறைத்து தன்னை பெருந்தன்மையாளனாய் காட்டிக்கொள்ள செய்த ஏற்பாடு அது. வரலாறு தெரியாதோர் அதை  பெருந்தன்மையாக எண்ணலாம் ஆனால் அடக்குவோரும், அதை ரசிப்போரும் அடக்கியாளும், தோல்வி அடைந்தவர்களை அச்சுறுத்தும்  சின்னமாகவே பயன்படுத்துகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

நயவஞ்சகமாகவும், ஏமாற்றியும், காட்டிக்கொடுக்கப்பட்டும் தோல்வியடைந்து, அடக்கப்பட்ட இனம் தமிழினம் என்பதே வரலாற்று உண்மை. எல்லாளனை வெற்றி கொண்ட நினைவிடத்தில் பதவிப் பிரமாணம் செய்தவர், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை கண்டு அஞ்சுவதுமேனோ? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

"மதிகேடர் தம் வாயால் அழிவார், அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்." தமது ராணுவத்தினர் போரில் பொது மக்களை  கொலை செய்யவில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் செய்த கொலைகளை வர்ணித்து பொறியில் தானாகவே மாட்டிக்கொண்டார். 

இவ்வளவு அப்பாவியா நீங்கள்? கோத்தபாயவுக்கு சீன ஆதரவு உள்ளவரை தன்னை எவரும் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் அறிவார்.  தமிழர்களை மட்டுமல்ல எவரை கொன்றது பற்றியும் மறைத்துப் பேசவேண்டிய தேவை அவருக்கு இனி இல்லை.

11 hours ago, satan said:

 நயவஞ்சகமாக எல்லாளனை  போரில் வென்ற துஷ்ட கைமுனு

  • அந்த மன்னின் பெயர் “துட்டு காமினி” - பல்லு முன்தள்ளிய காமினி. உங்கள் தேவைக்காக பெயரை மாற்றலாமா?
  • துட்டு காமினி நயவஞ்சகமாக எல்லாளனை கொல்லவில்லை. நேருக்கு நேர் மோதி, இருவரும் ஏற்றுக்கொண்ட போர்முறையிலேயே கொன்றார். பின்னர் எல்லாளனுக்கு சமாதி கட்டி இன்றுவரை அந்த சமாதியை கடந்து போபவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி மரியாதை செலுத்தி செல்ல வைத்த மதிப்புக்குரிய மன்னரே துட்டு காமினி.
  • இலங்கைத்தீவில் ஒரே நாட்டுக்குள்ளோ அல்லது அயலவர்களாகவோ சிங்களவரும் தமிழரும் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ்வதை தடுக்கும் முயற்சிகளுள் மேற்படி புனைகதையும் ஒன்று. இந்த புனைகதை இந்திய வல்லாதிக்கத்துக்கு தமிழரை இரையாக்குவதற்கு மட்டுமே பயன்பட்டது, மேலும் பயன்படும். 

 

11 hours ago, satan said:

நயவஞ்சகமாகவும், ஏமாற்றியும், காட்டிக்கொடுக்கப்பட்டும் தோல்வியடைந்து, அடக்கப்பட்ட இனம் தமிழினம் என்பதே வரலாற்று உண்மை.

எல்லாரிடமும் ஏமாறும் அளவுக்கு வாழத்தெரியாத அறிவிலிகளா தமிழினம்? அப்படியா சொல்கிறீர்கள்?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

 

83cbd0a17bbe499cb3b203b40e35312d_18.jpeg

 

புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக் கடலில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து போரை முடித்து வைத்ததாக வீராதிவீரன் கோத்தபாயா ராஜபக்ச பேசியிருக்கிறார். அம்பாறையில் நடந்த கூட்டம் ஒன்றில் வைத்து அவர் தனது மீசையை முறுக்கி தனது வீரத்தை இலங்கை மக்களுக்கு மறுபடியும் எடுத்து சொல்லியிருக்கிறார். பாதுகாப்பு செயலாளராக கோத்தபாயா ராஜபக்ச   இருந்த போது தன் மீது தாக்குதல் நடத்திய புலிகளை "என் மேலேயே கை  வைக்க பார்க்கிறீர்களா" என்று வெகுண்டு எழுந்து கதையை முடித்து விட்டதாக அவர் தம்பட்டம் அடித்திருக்கிறார்.

 

இலங்கையின் நவீன இராணுவ வரலாறு பிரித்தானியர்களது காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1881 ஆண்டளவில் தொடங்குகிறது. அண்மைய புள்ளி விபரங்களின் படி இலங்கை இராணுவத்தில் இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்ட நிரந்தர இராணுவத்தினரும், எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சிறீ லங்கா தேசிய காவல் படை  என்னும் தொண்டர்கள் என்று சொல்லிக்  கொள்ளும்  குண்டர்கள் படை  இராணுவத்தினரும் இருக்கிறார்கள். இலங்கை கடற்படையில் நாற்பத்தெட்டாயிரம் கடற்படையாளர்கள் இருக்கிறார்கள். இலங்கை விமானப் படையில் இருபத்தெட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எட்டாயிரம் பேர்களை கொண்ட சிறப்பு அதிரடிப்படை, நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொண்ட இலங்கை சிவில் பாதுகாப்பு படை என்னும் இரு துணை இராணுவ அமைப்புகள் இயங்குகின்றன. 

இவற்றை விட எழுபத்தாறு ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை வைத்திருக்கும் இலங்கை காவல்துறை இருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தின் வெள்ளைவான் கடத்தல் கும்பல் இருக்கிறது. பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் இலங்கை அரசுகளின் அடியாட்களாக அலையும் தமிழ் ஆயுதக்க குழுக்கள் இருக்கின்றன, தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் பிரிப்பதற்காக இலங்கை அரசுகளால் ஏவி விடப்படும் முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் எனப்படும் மதவெறிக் கும்பல்கள் இயங்குகின்றன.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டில் முப்படைகளுக்கு 1249 பில்லியன் ரூபாக்கள் செலவிட்டு இருக்கிறார்கள். இலங்கை காவல்படைக்கு 64 பில்லியன் ரூபாக்களை அண்ணளவாக ஆண்டுகள் தோறும் செலவிடுகிறார்கள். ஏவல் வேலைகள் பார்த்ததற்காக தமிழ், முஸ்லீம், சிங்கள குண்டர் படைகளுக்கு எறிந்த எலும்புத்துண்டுகளுக்கான செலவுக் கணக்குகள் எத்தனை கோடிகள் என்று என்றைக்கும் தெரியாது. 

மூன்று இலட்ச்சத்திற்கும் மேற்பட்ட முப்படைகளையும், பல ஆயிரக்கணக்கான ஆயுத குழுக்களையும்,  ஆயிரம் பில்லியன்கள் ரூபாக்கள் பணத்தையும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை கொன்றார்கள்.  இந்தியா, பாகிஸ்தான்,  சீனா, இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கடன்கள், இராணுவ பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கின.

மறுபக்கத்தில் பத்தாயிரத்திற்கும் உட்பட்ட சில ஆயிரம் போராளிகளே புலிகள் அமைப்பில் இருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்த மக்களிடம் இருந்து பெற்ற பணம், வியாபார நிறுவனங்களிடம் வாங்கிய வரி வருமானங்கள், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து பெற்று கொண்ட பணம், வெளிப்படையான சில வர்த்தகங்கள், மறைமுகமான சில நடவடிக்கைகள் என்பவற்றால் வந்த பணம் என்று அவர்களின் நிதி நிலைமை இருந்தது

இவ்வாறு புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்திற்குமான ஆளணி, நிதி என்பன ஒப்பிடவே முடியாத அளவில் மிகப் பெரும்  வேறுபாட்டில் இருந்தன. இலங்கை அரசு என்னும் மிகப் பெரும் கட்டமைப்பை வைத்துக் கொண்டு புலிகள் அமைப்பை தோற்கடித்து விட்டு வீர வசனம் பேசுகிறார்கள் ராஜபக்ச கும்பல்கள்.  1983 ஆம் ஆண்டு தொடங்கிய போரை முடிக்க 2009 ஆம் ஆண்டு வரை இருபத்தைந்து வருடங்கள் என்னும் நீண்ட நெடிய காலங்கள் ஏன் எடுத்தன என்று இந்த வீர சிங்கம் சொல்லுவாரா?

தனி மனித சாகசம், வலதுசாரி அரசியல், சர்வாதிகாரம், ஜனநாயக மறுப்பு, நட்பு சக்திகளை எதிரிகள் என்று அழித்தது, முஸ்லீம், சிங்கள பொது மக்களை கொன்று அவர்களை எதிரிகள் ஆக்கி அவர்களை  சிங்கள  இனவாதத்திற்கு ஆதரவாக தள்ளி விட்டமை போன்றவையே புலிகள் அமைப்பின் தோல்விக்கு காரணம். வலதுசாரி பாசிச அரசியலின் காரணமாகத் தான் இன்று ஒரு சிறு தொடர்ச்சி கூட இல்லாமல் புலிகள் அமைப்பு தன்னைத் தானே தோற்கடித்து கொண்டது. ராஜபக்சக்கள் போன்ற ஊழல் கொள்ளையர்களினால், கொலைகார்களினால் மக்கள் அரசியலை என்றைக்குமே தோற்கடிக்க முடியாது.

 

-21/01/2021

 

http://poovaraasu.blogspot.com/2021/01/blog-post_41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.