Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழின சுத்திகரிப்பு; இரங்க மறுத்த இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்களை இலங்கையரசு பலவந்தமாக வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக உலக நாடுகளே குமுறிக்கொண்டிருக்க, அயல் நாடும் இலங்கைத் தமிழர்கள் பாசமாக தம் தந்தைநாடென அழைப்பதும் அஹிம்சாவழியின் பிறப்பிடமான இந்தியா மட்டும் மௌனம் காத்தமை ஈழத்தமிழரை மட்டுமின்றி உலகத் தமிழரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக அன்று தொட்டு செயற்பட்டு வரும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கையரசின் இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தன. உலகிலுள்ள அத்தனை பொது அமைப்புகளும் இலங்கையரசுக்கு எதிரான தீர்மானங்களை வெளியிட்டன. பல நாடுகள் தமது தூதுவர்களை நேரில் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தன. ஐ.நா. செயலார் கூட தனது கடும் கண்டனத்தை இலங்கையரசுக்கு தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையால் தமிழகமே கொதித்தெழுமென பலரும் எதிர்பார்த்தார்கள். ஏன் இலங்கையரசு கூட இந்தியாவிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்புமென நினைத்தது. ஆனால், அனைத்தும் தலைகீழாகவே நடந்தது. இது இலங்கையரசுக்கு உற்சாகத்தையும் ஈழத்தமிழர்களுக்கு பேரதிர்ச்சியையும் கொடுத்தது.

கொழும்பில் வியாழக்கிழமை இரவோடிரவாக இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு சனிக்கிழமை விமானத்தில் பறக்கும்போது கவலை தெரிவித்த இந்தியப் பிரதமர், மறைமுகமாக இலங்கையரசின் நடவடிக்கை சரியானதென்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அவர் தனது கருத்தில் `இலங்கையரசின் நோக்கத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், தமிழர்களை அவர்கள் நாகரிகமாக நடத்தியிருக்க வேண்டும். இது எமக்கு கவலையளிக்கிறது' என `திருக்குறள்' அளவில் கவலை தெரிவித்துள்ளார்.

அவ்வாறானால் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியமை சரியானது. ஆனால், கொஞ்சம் கௌரவமாக அவர்களை வெளியேற்றியிருக்க வேண்டும் என்பதே இந்தியப் பிரதமரின் நிலைப்பாடாக இருந்திருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தின் நிலைப்பாடோ இன்னும் கவலைக்கிடமாக இருந்தது. முன்னர் ஒரு காலத்தில் தமிழருக்கு சிறு பிரச்சினை என்றால் கூட ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பரிக்கும் பல தலைவர்கள் இந்த விடயத்தில் அடக்கியே வாசித்தார்கள்.

முதலமைச்சராகவிருந்த ஜெயலலிதாவின் உத்தரவினால் நள்ளிரவில் கருணாநிதியின் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கருணாநிதியை இரவோடிரவாக கதறக்கதற இழுத்துச் சென்ற போது ஈழத்தமிழர்கள் கொந்தளித்தனர். இலங்கையில் ஜெயலலிதாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை எரித்தனர். கருணாநிதி மீது ஈழத்தமிழர் வைத்திருந்த பாசத்தின் வெளிபாடுகளாக இவை அமைந்திருந்தன.

காலச் சுழற்சியில் கருணாநிதி மீண்டும் முதல்வரானபோது தமிழ் நாட்டு மக்களைவிட ஆனந்தப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். தமது துயரங்களுக்கெல்லாம் விடிவு கிட்டப்போகுதென நம்பினார்கள். தமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான சக்தி தமிழகத்தின் ஆட்சியை பிடித்ததையிட்டு பெருமிதமடைந்தார்கள். ஆனால், உறவுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்பதை கருணாநிதி ஈழத்தமிழருக்கு புரியவைத்து விட்டார்.

கருணாநிதியை பொலிஸார் அவரது வீட்டில் வைத்து நள்ளிரவு கைது செய்தபோது `ஐயோ என்னை கொல்கிறார்களே' யென அவர் கதறிய கதறல் ஈழத்தமிழர் நெஞ்சைத் தொட்டது. ஆனால், கொழும்பிலுள்ள விடுதிகளில் வைத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தமிழர்கள் கதறிய கதறல் கருணாநிதியின் நெஞ்சை தொடவுமில்லை, இதயத்தை உருக்கவுமில்லை. இதுதான் கருணாநிதியின் 50 வருட அரசியலின் சாணக்கியம்.

தமிழின காவலன், உலகத் தமிழரின் காப்பரண், தமிழுக்கு உயிர்கொடுக்கும் உத்தமனென்றெல்லாம் தனக்குத்தானே மகுடங்களை சூட்டிக்கொள்ளும் தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதியின் வாயிலிருந்து ஒரு கண்டனச் சொல்கூட உதிரவில்லை. ஈழத் தமிழருக்காக ஒரு காலத்தில் உள்ளம் பதறிய,இதயம் உருகிய கருணாநிதி இன்று கீழ்த்தரமான ஒரு அரசியல்வாதியாகிவிட்டார்.

தமிழக அரசியல் நிலைமை தற்போது மிகவும் கேவலமான நிலையிலேயே உள்ளது. அங்கு இப்போது எந்தக் கட்சித் தலைவர் அல்லது தலைவி சிறந்த குடிகாரர் என்ற பட்டிமன்ற விவாதமே தலை தூக்கியுள்ளது.

இந்த சாக்கடை அரசியலில் கருணாநிதியும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதும் ஜெயலலிதாவைப்பற்றி தரக்குறைவாக, ஆபாசமாக கவிதைகள் எழுதுவதுமாக பொழுதை போக்கிக் கொண்டுள்ளார்.

ஈழத் தமிழருக்கு விடுதலை கிடைக்க தனது முதலமைச்சர் பதவியையும் இழக்க வேண்டுமானாலும் அதற்கும் தயாரென அறிவித்த கருணாநிதிக்கு கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்களை நாயைப் பிடிப்பதுபோல் பிடித்து பஸ்களில் பலவந்தமாக ஏற்றி வெளியேற்றியபோது ஒரு கண்டனம் கூட வெளியிட முடியாதளவுக்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை.

முன்னரெல்லாம் ஈழத்தமிழர் தொடர்பாக அடிக்கடி உள்ளம் துடிக்கும், இதயம் உருகும் கருணாநிதிக்கு தற்போது மட்டும் உள்ளம் உருகுவதுமில்லை, இதயம் துடிப்பதுமில்லை.

எத்தனை கொடூர செயல்களை செய்தவன் கூட தனது இறுதிக்காலத்தில் நல்லதையே செய்ய விரும்புவான். ஆனால், அந்த எண்ணம் கூட 83 வயது கருணாநிதிக்கு வரவில்லை.

அரசியல் உறவா, தொப்புள்கொடி உறவா என்ற கேள்வியில் அரசியல் உறவுக்கே கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் பக்கம் முழுவதுமாக சாய்ந்துவிட்டார்.

இந்தியாவில் ஈழத்தமிழரின் பிரசார பீரங்கி என்றழைக்கப்பட்ட வைகோவும் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளதால் தற்போது அடக்கியே வாசிக்கிறார். அவரால் சிறு கண்டனத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. ராமதாஸ், பழநெடுமாறன், விஜயகாந்த் போன்றோர் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செயலர் தொல். திருமாவளவன் மட்டும் கண்டனத்தோடு நிற்காது சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார். அத்துடன் மேலும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் இவ்வாறான மெத்தனப் போக்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள மத்திய அரசு, இலங்கை இராணுவத்துக்கு பகிரங்கமாகவே பேரழிவு ஆயுதங்களையும் இராணுவத் தளபாடங்களையும் வழங்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் பரபரப்பான பத்திரிகையான `தினமலர்' பார்ப்பன செய்திகளை வெளியிட்டபோதும் தமிழகத் தலைவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இலங்கையிலுள்ள இந்திய நிறுவனங்களை பாதுகாப்பதென்ற போர்வையிலேயே இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதாகவும் இலங்கைப் பிரச்சினையில் நடுநிலைப் போக்கை கடைப்பிடித்து வந்த இந்தியா தற்போது முழுவதுமாக இலங்கை அரசின் பக்கம் சாய்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை இலங்கையரசுக்கு உதவி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சிக்குப் பின்னர் மத்திய அரசும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்குப் பின்னர் தமிழகமும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக எந்தத் துடுப்பையும் அசைத்ததில்லை. அதேவேளை, இலங்கையரசுக்கு ஆதரவாகவும் பாரிய செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. ஆனால், இப்போது மத்திய அரசு இலங்கையரசுக்கு ஆதரவாக செயற்படும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் எதற்கும் மௌனம் காக்கும் நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தினால் அவர்களை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் இந்திய மத்திய அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் முழு ஈழத்தமிழர்களையே பாதிக்கும். இவ்வாறான மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும் ஆதரவு வழங்குமாகவிருந்தால் தற்போது கொழும்பில் நடந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை விரைவில் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி முழுநாட்டிலுமே தமிழர் இனப்படுகொலையாக உருவெடுக்கும்.

தமிழக அரசின் மறைமுக ஒப்புதலுடன் இலங்கையரசின் பக்கம் சாய்ந்து விட்ட இந்தியா இலங்கையரசுக்கு தேவையான இராணுவ உதவிகளை பகிரங்கமாகவே வழங்கத் தொடங்கிவிட்டது. அத்துடன் இலங்கையரசின் மனித உரிமை மீறல்கள் , அடாவடித்தனங்கள் , இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தமிழின படுகொலைகள் , அகதிகள் பிரச்சினை என எவற்றையுமே கண்டு கொள்ளாத நிலைப்பாட்டையும் எடுத்து விட்டது.

இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சினைகள் விவகாரத்தில் இந்தியா தலையிடும், தமிழர்களுக்கு அநீதி இடம்பெற அனுமதிக்காது, சமஷ்டியுடனான தீர்வைப் பெற்றுத் தருமென இனியும் யாராவது நம்புவார்களாயின் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

தினக்குரல்

ஈழத்தமிழர்கள் விடயத்தில்யார் யார் அக்கறை காட்டுவார்களோ அவர்கள் எல்லாம் தனியாக அழைக்கப்பட்டு சொல்லவேண்டியதை சொல்லவேண்டியவிதத்தில் சொல்லியிருப்பார்கள்.சாம பேத தாண்டம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கல

இலங்கை தமிழ் மக்களின் வேதனைக்கும் கண்ணீருக்கும் இந்தியா ஆற்றிவரும் பங்கு சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்தது தான்.தனது சகோதர அனம் துடிதுடித்து சாகும் பொழுது கூட கண்ணீர் வடிக்க யோசிக்கும் கரிய நெஞ்சம் படைத்த ஒரு கொடுங்கோல் நாட்டரசு.

ஈழத்தமிழர்களின் துயரத்திற்கு முக்கால் வாசி காரணமே இந்தியாவின் குருட்டு வெளியுறவு கொள்கைகளும் ஊழல் மிகுந்த நிர்வாக கட்டமைப்பும் தான். அடுத்த 10 வருட காலங்களின் பின் தன் தவறான வெளிநாட்டுக் கொள்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை இந்தியா பல திசைகளில் இருந்தும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஈழத்து உடன்பிறப்பே உன் தமிழுன்னை காத்திடுமே கலங்காதே

என் பதவியை நான் காத்திடல் தலையாய கடமை அன்றோ!

மத்தியில் உள்ளவர்கள் சுத்தியல் கொண்டென்னை

சுடச்சுடவே நைவார்கள் - உன் சுகம் தன்னை நான் கேட்டால்!

இன்றோ நாளையோ நான் போய் சேர்ந்தாலும்

இறங்காது ஒரு தமிழன் ஆட்சி செய்தான் தமிழ் மண்ணை!

என வரலாறு சொல்லட்டும் எவன் கெட்டால் எனக்கென்ன

மானமிகு தமிழா அப்படி சொல்வதுவே பகுத்தறிவு!

நிதி வேண்டுமானால் கொஞ்சம் கிள்ளி தந்திடலாம்

கருணையை அள்ளி தந்து ஆண்டி ஆக மாட்டேன் நான்!

----------------------------------- அன்புடன் கருணைச்செல்வம்

Edited by vettri-vel

ஈழத்தமிழர்களின் துயரத்திற்கு முக்கால் வாசி காரணமே இந்தியாவின் குருட்டு வெளியுறவு கொள்கைகளும் ஊழல் மிகுந்த நிர்வாக கட்டமைப்பும் தான். அடுத்த 10 வருட காலங்களின் பின் தன் தவறான வெளிநாட்டுக் கொள்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை இந்தியா பல திசைகளில் இருந்தும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஈழத்து உடன்பிறப்பே உன் தமிழுன்னை காத்திடுமே கலங்காதே

என் பதவியை நான் காத்திடல் தலையாய கடமை அன்றோ!

மத்தியில் உள்ளவர்கள் சுத்தியல் கொண்டென்னை

சுடச்சுடவே நைவார்கள் - உன் சுகம் தன்னை நான் கேட்டால்!

இன்றோ நாளையோ நான் போய் சேர்ந்தாலும்

இறங்காது ஒரு தமிழன் ஆட்சி செய்தான் தமிழ் மண்ணை!

என வரலாறு சொல்லட்டும் எவன் கெட்டால் எனக்கென்ன

மானமிகு தமிழா அப்படி சொல்வதுவே பகுத்தறிவு!

நிதி வேண்டுமானால் கொஞ்சம் கிள்ளி தந்திடலாம்

கருணையை அள்ளி தந்து ஆண்டி ஆக மாட்டேன் நான்!

மாற்றப்பட வேண்டிய "இந்திராணி"!

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறை ஆணையாளர் முகர்ஜி தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கை பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 11 பேரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவருமாக மொத்தம் 12 பேர் கடந்த 04.03.07 அன்று கடலுக்கு சென்றவர்கள் இன்று வரை திரும்பி வரவில்லை. பின்பு 29.03.07 அன்று கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் "மரியா" என்னும் படகில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் "மரியா" என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு படகில் வந்தவர்களை இந்திய கடலோரக் காவற்படை கைது செய்தது. ஆரம்பத்தில் மீனவர்களை கொலை செய்த சிங்களவர்கள் ஆயுதங்களுடன் கைது என்று தமிழ்நாட்டின் காவல்துறை அறிவித்தது. பின்பு அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்றது. பின்பு அவர்கள் சிங்களவர்கள் அல்ல, ஈழத்தை சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்றது.

கைது செய்யப்பட்ட உண்மைக் குற்றவாளிகளான சிங்களவர்களை காப்பாற்றிய இந்தியப் புலனாய்வுத்துறை, பதிலுக்கு 6 தமிழர்களை கைது செய்து கதையை மாற்றி எழுதியது. 6 தமிழர்களும் கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவு தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் அவதூறுகளை பரப்புவதையே தன்னுடைய பணியாகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு பிரிவு. கியூ பிரிவு பொலிஸ் சித்திரவதைகளுக்கு பெயர் போன ஒரு பிரிவாக கருதப்படுகிறது.

கியூ பிரிவு பொலிஸாரின் "விசாரணையின்" மூலம் இந்த 6 தமிழ் மீனவர்களும் தம்மை கடற்புலிகள் என்று "வாக்குமூலம்" கொடுக்க வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாக்குமூலம் வீடியோவிலும் பதியப்பட்டது. கடற்புலிகள் தமது படகுத் தேவைக்காக 12 தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களுடைய படகுகளுடன் கடத்தினார்கள் என்றும், ஆயுதக் கடத்தலுக்கு இடைஞ்சலாக வந்த 5 மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்றும் கதை புனையப்பட்டது.

இந்தக் கதையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக 5 மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கடற்புலிகளின் பொறுப்பாளர் விடுதலைப்புலிகளின் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என்ற இன்னொரு கதையும் இணைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்வதை தடுப்பதற்கு இந்தியப் புலனாய்வுத்துறை தொடர்ச்சியாக செய்து வரும் முயற்சிகளில் ஒன்றாக இந்த சதி முயற்சி நடந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்புவதன் மூலம் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல்களையும் கொடுக்க முடியும் என்று இந்திய, சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர்.

தமிழீழம் இந்தியாவிற்கு நேசக் கரத்தை நீட்டியபடி இருக்க, இந்திய அரசு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றதே என்கின்ற வேதனை தமிழ் மக்கள் பலரிடம் உண்டு. ஆனால் இதில் இந்திய அரசை குற்றம் சாட்டுவது எவ்வளவு தூரத்திற்கு சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இந்திய அரசு சுயமாக இயங்கக்கூடிய நிலையில் இருக்கிறதா என்கின்ற கேள்வி எழுகிறது.

புராணக் கதைகளில் "இந்திரன்" என்கின்ற பாத்திரம் உண்டு. தேவர்களுக்கு எல்லாம் அரசனாக தேவலோகத்தில் வீற்றிருப்பவன் இந்திரன். ஆனால் இந்த இந்திரப் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. அதை அடிக்கடி யாராவது கைப்பற்றி விடுவார்கள். அசுரர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் போர் புரிந்து இந்திரனை துரத்தி விட்டு இந்திரப் பதவியை அடைவார்கள். வேறு சிலர் கடும் தவம் செய்து இந்திரப் பதவியை பெற்று விடுவார்கள். ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடைய முடியும் என்று வேதங்கள் சொல்லுகின்றன.

இப்படி இந்திரப் பதவியை பலர் கைப்பற்றி பலர் இந்திரனாக ஆகி இருக்கிறார்கள். ஆனால் இந்திராணி என்று அழைக்கப்படும் இந்திரனின் மனைவி மாறுவதில்லை. இந்திராணி என்பது ஒருவர்தான். யார் இந்திரனாக வந்தாலும், அவருக்கும் மனைவியாக மாறி இந்திராணி என்னும் பதவியில் தொடர்ந்து இருப்பார்.

இந்திரன்கள் மாறுவது போல் இந்தியாவில் பல அரசுகள் மாறி இருக்கின்றன. ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றிய கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. புதிய சிந்தனைகளோடு வந்த இந்திரன்களும் முன்னையவர்கள் போன்றே செயற்பட்டார்கள். அதற்கு காரணம் மாறாத இந்திராணியாக இருக்கின்ற இந்தியாவின் புலனாய்வுத்துறை. சக்திமிக்க இந்த இந்திராணியை மீறி எதுவும் நடந்துவிட முடியாத வண்ணம், அதனுடைய கரங்கள் அனைத்து இடத்திலும் படர்ந்துள்ளன.

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் தங்கள் தாய்நாட்டிற்காக பாடுபடுபவை. தமது நாடு வலிமை மிக்க நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்படுபவை. எதிரி நாடுகளிடம் இருந்து தமது நாட்டை பாதுகாத்து நிற்பவை.

ஆனால் தன்னுடைய நாட்டில் தமது பார்ப்பன சாதியினர் தொடர்ந்து அதிகார மையத்தில் இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை மட்டும் கொண்டு செயற்படுகின்ற ஒரு புலனாய்வுத் துறையை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்திய புலனாய்வுத்துறையாகிய "றோ" அமைப்பை ஆராய்கின்ற போது அதனுடைய அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்ப்பனர்களாகவும், அதனுடைய செயற்பாடுகள் அனைத்தும் பார்ப்பனியம் சார்ந்ததாக இருப்பதை காணலாம்.

இந்தியாவில் பார்ப்பனியம் தோற்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக "றோ" இருக்கிறது. தன்னுடைய நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு எதிராக உலகில் செயற்படுகின்ற ஒரே ஒரு புலனாய்வுத்துறை இந்த "றோ" அமைப்பாகத்தான் இருக்க முடியும்.

பார்ப்பனியத்திற்கு பொருந்தாத எதையும் "றோ" அனுமதித்தில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தின் கூறுகள் பார்ப்பனியத்திற்கு பொருந்தாதவை. ஆகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிரான நிலையை "றோ" எடுத்திருக்கிறது. எத்தனை இந்திரன்கள் வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாதவாறு "றோ" பார்த்துக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞரும் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக சில வேளைகளில் "றோ"வின் செயற்பாடுகளுக்கு துணை போய்விடுவதுதான் இதில் மேலும் வேதனை தரும் விடயம். இம்முறையும் கலைஞர் அவ்வாறு நடந்து கொண்டாரோ என்ற சந்தேகம் சிலர் மத்தியில் எழுந்துள்ளது.

வான்புலிகளின் தாக்குதலினால் பெரும் பூரிப்படைந்திருந்த வைகோ விடுதலைப்புலிகளை பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளிவந்த அதே நாள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி முகர்ஜியின் அறிக்கையும் வெளிவந்தது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு அறிக்கையை முகர்ஜி வெளியிட்டிருக்க முடியாது என்பதால், வைகோவின் அறிக்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கலைஞர் இதை அனுமதித்தாரா என்ற கேள்வி எழுகிறது.

விடுதலைப்புலிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிற்பாடு, சில தரப்பினரால் ஒரு செய்தி உலாவவிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க விரும்புவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற சில தலைவர்கள் மீனவர்களை விட வேண்டாம் என்றும், அவர்களை விடுவித்தால் விடுதலைப்புலிகள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாகி விடும் என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆலோசனை சொல்லி உள்ளார்கள் என்பதே அந்தச் செய்தி.

வைகோ இலக்கு வைக்கப்படுகிறார் என்பது இந்த இடத்தில் மேலும் தெளிவாகிறது.

இப்படி றோவும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தமது சொந்த நலன்களுக்காக விடுதலைப்புலிகள் மீது ஏற்படுத்த முயன்ற களங்கத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பவில்லை. மீனவர் சங்கத் தலைவர் கூட விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு செய்தியை சுட்டிக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும். இதுவும் தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திதான். ஓரிரு மாதங்களுக்கு முன்பு கடற்புலிகளின் படகு ஒன்றை இந்தியக் கடலோர காவற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த கடற்புலிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடத்திய விசாரணையில் அவர்கள் கடற்கரும்புலிகள் என்றும், அந்தப் படகு வெடிகுண்டு நிரம்பிய படகு என்றும் தெரிய வந்தது. அந்தப் படகு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று கைதான கடற்புலிகளின் உதவியோடு வெடிக்க வைக்கப்பட்டது.

இது தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திகளில் உள்ள விபரங்கள். இதை உண்மை என்று எடுத்துக் கொண்டு பார்ப்போமானால், சில விடயங்கள் தெளிவாகின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகை இந்தியக் கடலோர காவற்படை தடுத்து நிறுத்திய போது, கடற்புலிகளின் கையில் அவர்களின் உயிர் இருந்திருக்கிறது. கடற்புலிகள் நினைத்திருந்தால், படகை வெடிக்க வைத்து அனைவரையும் அழித்திருக்க முடியும்.

ஆனால் கடற்புலிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்த வெடிகுண்டு படகினால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படதவாறு வெடிக்க வைப்பதற்கு உதவி உள்ளார்கள். தங்களை கைது செய்ய வந்தவர்களுடனேயே மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட கடற்புலிகள், அப்பாவி மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள் என்பதை சிந்திக்கக்கூடிய அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதராவாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வலைகளை குலைப்பதற்கு இந்தியாவின் புலனாய்வுத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த நேரத்தில், இலங்கைத்தீவில் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக இராணுவ வலுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட வருகிறது.

கடந்த 29.04.07 அன்று கொழும்பில் உள்ள இரண்டு எரிபொருள் குதங்கள் மீது வான்புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். சிறிலங்காப் படைகள் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டும், வான்புலிகள் வருவது 20 நிமிடங்களுக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டும், வான்புலிகள் வெற்றிகரமாக இலக்குகளை தாக்கிவிட்டு தளம் திரும்பி உள்ளார்கள். அதுவும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த இலக்குகளின் மீது, பொதுமக்களுக்கு எந்த சேதமும் வராதவாறு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வான்புலிகளால் மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியாது என்று சிங்கள அரசு சவால் விட்டிருக்க, வான்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி விட்டுப் போயுள்ளார்கள். சிங்கள தேசம் அவமானத்தால் கூனிக் குறுகிப் போய் நிற்கிறது. "விடுதலைப்புலகளுக்கு தைரியம் இருந்தால் பகலில் வான் தாக்குதலை நடத்திப் பார்க்கட்டும்" என்று ஒரு சிங்கள அமைச்சார் சவால் விட்டார். விடுதலைப்புலிகள் பதிலுக்கு சவால் விடாது அமைதியாக இருந்து 30.04.7 அன்று பகலில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த சிங்கள வான்படையின் மிக்-27 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் நடத்துகின்ற இந்த தீரம் மிக்க சாதனைகள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதம் அடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில் "றோ" செய்கின்ற சதி முயற்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. தமிழர்கள் வெற்றி கொள்வதை தடுக்கவும் போவதில்லை.

ஆனால் இந்திய உபகண்டத்தில் வாழும் மக்கள் தங்களை சுற்றி உள்ள ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பார்ப்பனியம் வாழவும், ஆளவும் வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தமது நாட்டின் புலனாய்வுத்துறை செயற்பட்டு வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாத இந்திராணி போன்று இருக்கின்ற "றோ" என்கின்ற இந்த அமைப்பு மாற்றியமைக்கப்படாது விட்டால், அது இந்தியாவினது எதிர்காலத்தையே நாசமாக்கி விடும்.

- வி.சபேசன் (04.05.07)

http://www.webeelam.com/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இனச்சுத்திகரிப்பை இலங்கை அரசு செய்த போது இந்திய இரங்காதது கவலைக்குரிய விசயம்.

Edited by sukan

மாற்றப்பட வேண்டிய "இந்திராணி"!

புராணக் கதைகளில் "இந்திரன்" என்கின்ற பாத்திரம் உண்டு. தேவர்களுக்கு எல்லாம் அரசனாக தேவலோகத்தில் வீற்றிருப்பவன் இந்திரன். ஆனால் இந்த இந்திரப் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. அதை அடிக்கடி யாராவது கைப்பற்றி விடுவார்கள். அசுரர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் போர் புரிந்து இந்திரனை துரத்தி விட்டு இந்திரப் பதவியை அடைவார்கள். வேறு சிலர் கடும் தவம் செய்து இந்திரப் பதவியை பெற்று விடுவார்கள். ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடைய முடியும் என்று வேதங்கள் சொல்லுகின்றன.

இப்படி இந்திரப் பதவியை பலர் கைப்பற்றி பலர் இந்திரனாக ஆகி இருக்கிறார்கள். ஆனால் இந்திராணி என்று அழைக்கப்படும் இந்திரனின் மனைவி மாறுவதில்லை. இந்திராணி என்பது ஒருவர்தான். யார் இந்திரனாக வந்தாலும், அவருக்கும் மனைவியாக மாறி இந்திராணி என்னும் பதவியில் தொடர்ந்து இருப்பார்.

- வி.சபேசன் (04.05.07)

http://www.webeelam.com/

ஈழவன் நாம் எல்லாக் கருத்துக்களுக்கும் மதச்சாயம் பூசுவதால் எம்மையும் அறியாமல் எமது போராட்டத்திற்கு பெரும் தீங்கு செய்து கொண்டிருக்கிறோம். எதிரிகள் எமது போராட்டத்தை பாசிச வாதமாக காட்ட எங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் அரசியல் கருத்து என்று எழுதும் வக்கிரங்களையே இந்து மதத்திற்கெதிரான அசிங்கமான பிரசாரமாக காட்டி துணைக்கு கோவிலில் உள்ள ஒரு சிலருக்கு லஞ்சமும் கொடுத்து சாட்சிகளாக்கி, மேற்கத்திய நாடுகளில் ஈழத்தில் மத சுதந்திரம் அற்ற பாசிச வாதமே தலையெடுக்கும் என்று சிங்கள பேரினவாதிகளும், இந்திய கொள்கை வகுப்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை முடுக்கி விடத்தான் மேற்சொன்ன மதம் சார்ந்த அரசியல் விமர்சனங்கள் பயன்படும். மேற்கு நாட்டாரிடம் இப்படியான பிரசாரங்கள் சீக்கிரமே எடுபடும். மேற்கு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களை ஈழப் போராட்டத்திற்கு எதிராக திருப்புதலை அரசியல் மடையர்கள் தான் செய்வார்கள்

சுழழும் நாற்காலியில் இருந்து இப்படி விமர்சனம் செய்பவர்களினால் வரப்போகும் சிக்கல்களின் பாதிப்பு களத்தில் நிற்பவர்களுக்குத் தான்.இவர்களுக்கல்ல. இந்து தர்மத்தை அழித்துத் தான் தீருவதென்றாலும் ஈழ விடுதலையின் பின் இவர்கள் அந்த விளையாட்டுக்களை வைத்துக் கொள்ளட்டுமே.

On basis of what Mr.Sabesan is claiming that Indrani was shared among too many males. They should give evidence before writng this kind of foolish comments which will hurt religious believes of millions. This kind of quotes are even punishable crimes according to western laws

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

டில்லியில் குடிகொண்டிருப்பவர்கள் எல்லோரும் பிராமணியர் என்ற உங்களின் அறிவிலித்தனம் இருக்கும் வரை எப்படி மத்திய அரசு மாறப் போகின்றது? உங்களுக்கு இந்தக் குறுகிய எண்ணவோட்டங்களுக்கு அப்பால் சிந்திப்பதையோ, அல்லது பார்ப்பானி இல்லாமல் யார் இருந்தாலும், இது தான் நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழகம் சிந்திக்கத் தெரியாமல் இருப்பதாக நீங்கள் ஒன்றும் பூச்சாண்டி காட்டாதீர்கள். அவர்கள் அவ்வளவு முட்டாள்களுமல்ல. உலகத்தில் மற்றய விடுதலை இயக்கங்களுக்கு அது சார்ந்த இனங்கள் உதவியதைப் போல, எமக்கு நாம் சார்ந்த இனமே ஒன்றும் செய்யவில்லை. வடநாட்டவன் செய்வான் என்று அங்கலாய்ப்பு எதற்கு?

இங்கே நீங்கள் கூட எங்கே பார்ப்பானியைத் திட்டலாம், எங்கே இந்தியாவைத் திட்டலாம் என்று சிந்திக்கின்றீர்களே தவிர, இந்தக் கட்டுரையாளர் தொடக்கி நான் வரை உண்மையாக நாட்டில் பற்றிருந்தால் இப்படிப் புலம் நோக்கிய பாய்ச்சல் தேவைப்படுமா?

அடுத்தவனைப் பகைக் கண்ணோடு பார்ப்பதில் மட்டும் குருரமான திருப்தி மட்டும் உண்டு.

டெல்லியில் இருப்பவர்கள் பார்பனியர்களோ எவரோ, இந்து மதத்திற்கு எதிரான துவேசத்தை கொட்டி திராவிட வெறி கொண்டவர்கள் போல் எம்மைக் காட்டிக் கொள்வதால் எம்மை பாசிச வாதிகளாக மேற்கிற்கு காட்ட நினைக்கும் எதிரிகளின் சதித்திட்டத்திற்கு தான் துணை போகிறோம். ஒரு கோடியே உள்ள சிங்களவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் கோடிக் கணக்கான இந்துக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வண்ணமான உங்கள் திராவிட பிரசாரத்திற்கு சிங்களவர்கள் இன்னும் 1000 வருடத்திற்கு நன்றி சொல்வார்கள்.

இந்திய கொள்கைவகுப்பாளர்கள் தான் ஈழப் போராட்டத்திற்கு எதிராக உள்ளார்களே ஒழிய உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்கள் அல்ல. மேற்கு நாடுகளில் உள்ள இந்துக்களை நம் பக்கம் நெருங்கி வரச் செய்வதன் மூலம் எவ்வளவோ சாதிக்கலாம். ஈழத்தமிழர்களாகிய நாம் உலகில் மிகச் சிறிய இனம். தேவையில்லாமல் இந்து மத எதிர்ப்பு பிரசாரம் செய்ய வெளிக்கிட்டு, சர்வதேச நாடுகளில் ஊடகத்துறைகளிலும், வர்த்தகத்திலும் கொடி கட்டி பறக்கும் பல்லாயிரக் கணக்கான இந்துக்களை பகைத்துக் கொள்வதை விட இனிப்பான செய்தி சிங்கள அரசுக்கு இருக்க முடியாது.

பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலம் வாய்ந்த ஒரு சில ஊடகவியலாளர்களை எமக்கெதிராக தூண்டி விடுவதில் சிங்கள அரசு சாதிக்க முடியாததை, இந்த பகுத்தறிவு சிங்கங்கள் சிங்களவருக்கு சாதித்து கொடுத்து விடுவார்கள் போல் இருக்கிறது. நம்மில் ஒரு சிலர் இணையதளங்களில் செய்யும் பகுத்தறிவு பிரசாரங்களை விட Washington Post, The Guradian போன்றவற்றில் வரும் கட்டுரைகளின் வீச்சு அதிகமாகவே இருக்கும். அவை தான் மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்களை போய் அடையும்.

1000 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் வரம் போல ஒரு மாபெரும் தலைவன் எமக்கு கிடைத்திருக்கிறான். நீங்கள் திராவிடம் என்றும் மதச்சண்டை என்றும் சேறு பூசிக்கொண்டு, அந்த தலைவனுக்கும் பாசிச வாதி என்று அவப்பெயரை வாங்கி கொடுத்து, அந்த தலைவனின் விடுதலை வேள்விக்கும் ஊறு விளைவித்து அழிந்து போவதென்றால் போங்கள். நீங்கள் திராவிட வாதம் பேசி மதச்சண்டை செய்து ஒருவரை ஒருவர் கடித்துக் குதறுவதானாலும் அதை சுதந்திர ஈழத்தில் செய்யுங்கள். அது வரை உங்கள் செப்புக் காசு பெறாத பேதங்களை எல்லாம் மறந்து விட்டு நான் வணங்கும் ஒரே மனிதன் எங்கள் மாபெரும் தலைவர் பிரபாகரனுக்கு தோள் கொடுங்கள்.

இந்த தலைவனை விட்டு விட்டால் நீங்கள் நாடிழந்து வீடிழந்து அழிந்தே போவீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற சில்லறை கணக்கெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். விட்டு விடுங்கள்.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாடுடைய லண்டன் வாழ் எத்தனையோ வட இந்திய இந்துக்களை எனக்கு தெரியும். இவர்களை எல்லாம் கூட நாம் சிங்களத்தின் ஆதரவாளர்களாக மாற்றி விட வேண்டுமா?

சிந்திப்பீர் செயல்படுவீர்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இனச்சுத்திகரிப்பை இலங்கை அரசு செய்த போது இந்திய இரங்காதது கவலைக்குரிய விசயம்.

Edited by sukan

சுகனின் கருத்தே எனது கருத்தும்

சுகனின் கருத்தே எனது கருத்தும்

இங்கே எது சரி எது பிழை என்பதை விட எது தேவை எது தேவையற்றது என்று நிதானமாக கணித்து செயல் பட வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். இதுவும் புரியவில்லையென்றால் சிலரின் சதித்திட்டங்கள் சில அரங்கேறும் போது அதன் பாதிப்புகள் புரியும். விழித்துக் கொண்டால் வெற்றி கொள்வோம்

இந்திய ஆதிக்க சக்தி எப்போது பார்பணியத்தில் இருந்து விடுபடுகின்ரதோ அன்றே எம் சார்பான நிலையை எடுக்கும் இந்தியா என்பது என்கருத்து வெற்றி வேல்

நான் குறை கூறவில்லை இதுதான் உண்மையும் யதார்த்தமும் கூட றோ முதற்கொண்டு உள்விவகார அமைச்சுவரை பார்பணிய ஆதிக்கத்துள் சிக்கி தவிகின்றது இந்தியா என்பது என் கருத்து

இந்திய ஆதிக்க சக்தி எப்போது பார்பணியத்தில் இருந்து விடுபடுகின்ரதோ அன்றே எம் சார்பான நிலையை எடுக்கும் இந்தியா என்பது என்கருத்து வெற்றி வேல்

நான் குறை கூறவில்லை இதுதான் உண்மையும் யதார்த்தமும் கூட றோ முதற்கொண்டு உள்விவகார அமைச்சுவரை பார்பணிய ஆதிக்கத்துள் சிக்கி தவிகின்றது இந்தியா என்பது என் கருத்து

அது அவர்கள் பிரச்சினை ஈழவன். இந்திய ஆதரவை எதிர்பார்க்காமலும், மேலும் மேலும் ஈழ எதிர்ப்புணர்வை இந்தியாவில் வளர்க்க நினைக்கும் ஒரு சிலரின் சதிகளை முறியடித்தும், நாம் எமது இலட்சியத்தை அடைய சரிவர திட்டமிடுவது தான் புத்திசாலித்தனம். நமது சக்தி யாவும் ஒரு முகப்படுத்தப்பட்டு விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாடுகளில் மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

எதிரிக்கு கூட்டம் சேர்க்கும் எந்த செயற்பாடுகளும் மிகவும் விபரீதமாகிவிடும். உலகின் பலம் வாய்ந்த சக்திகள் சில நமக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் எந்த செயற்பாடுகளும், எதிரிக்கு மிகுந்த மனோவலிமையை தான் கொடுக்கும். நமக்குள் தீர்க்கப்பட வேண்டிய உள் முரண்பாடுகள் ஏதும் இருந்தால் ஈழ விடுதலையின் பின் அதை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே எனது நிலைப்பாடு.

ஈழ விடுதலையின் பின் ஈழத்தின் அரசியல், பொருளாதார, சமூக, மதக் கொள்கைகளை விடுதலை புலிகளே தீர்மானித்துக் கொள்ளட்டும். அதையிட்டு நாம் விவாதங்கள் செய்வதும் தேவையற்ற இசங்களை புகுத்த முனைவதும் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். இத்தனை தூரம் இந்த போராட்டத்தை நகர்த்திய தலைவருக்கு ஈழத்தின் அரசியல், சமூக கொள்கைகளை நிர்ணயிக்கும் எல்லா தகுதிகளும் உள்ளது

Edited by vettri-vel

தமிழகத்தில் மீண்டும் தமிழீழ ஆதரவு அலையை உருவாக்க என்ன செய்யலாம்???????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் மீண்டும் தமிழீழ ஆதரவு அலையை உருவாக்க என்ன செய்யலாம்???????????????

முதலில் கருணாநிதி ஆட்சியில் இருந்து அகலவேண்டும். அதே நேரம் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வரக்கூடாது. வைகோ நல்ல தெரிவு ஆனால் அவர் சேராத இடம் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சினைகள் விவகாரத்தில் இந்தியா தலையிடும், தமிழர்களுக்கு அநீதி இடம்பெற அனுமதிக்காது, சமஷ்டியுடனான தீர்வைப் பெற்றுத் தருமென இனியும் யாராவது நம்புவார்களாயின் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

மறுக்க முடியாத இன்னும் ஒரு உண்மை இந்தியாவால் எமக்கு விடுதலை வாங்கி தரும் என்னம் அன்றும் இல்லை இன்றும் இல்லை என்றும் இருக்காது ஆனா நாமாக வெற்றி பெறும் போது அதை தட்டி கழிச்சு அழிக்கும் ஒரு கெட்ட என்னம் இந்தியாவிடம் அன்றும் இன்றும் என்றும் இருக்கும் அண்ட் இருக்கிறது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.