Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை

 

 

 

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பாராளுமன்றத்தில் நேற்று  கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tamilmirror Online || அடக்கம் குறித்து இறுதி முடிவு இல்லை

சடலங்கள் அடக்கம் – பிரதமரின் அறிவிப்பிற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் வரவேற்பு

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/s960_Sarah_Hulton_photo-720x450.jpg

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறித்து இலங்கைகான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், கொவிட் 19 தொற்றுக்குள்ளான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உறவினர்களை இழந்தவர்கள் அவரின் மத சடங்குகளுக்கு அமைவாக மற்றும் சர்வதேச பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வாய்ப்பளித்து இது விரைவில் செயற்படுத்தப்படும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Welcome Prime Minister Rajapaksa’s announcement in Parliament today on the burial of Covid 19 victims. Hope this is soon policy, allowing those sadly bereaved to follow their religious practices and international public health guidelines.

— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) February 10, 2021

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமைக்கு அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் முன்னதாக பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமைக்கு அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் முன்னதாக பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு.... கொடுத்த பாராட்டுக்களை, இவர்கள் திரும்பப் பெறுவார்களா?

மஹிந்த,  எல்லார் முகத்திலேயும்... கரியை அப்பி விட்டார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றால் இறப்போரை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லையாம் – கோகிலா

கொரோனா தொற்றால் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று பிரதமர் கூறவில்லை. மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்று மரிக்கார் கேட்டார். அதற்கு அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்றே கூறினார் என்று ஆளும் கட்சி எம்பி கோகிலா குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

கொரோனாவினால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு விசேட குழுவொன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொற்றால் இறப்போரை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லையாம் – கோகிலா – உதயன் | UTHAYAN (newuthayan.com)

‘பிரதமரின் அறிவிப்பில் எம்.பிக்கள் துள்ளுகின்றனர்’

ஜனாஸா நல்லடத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பிரதமரின் ஒரேயொரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, அதற்குக் கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்றும் 20க்குக் கை உயர்த்திய இந்தச் சமூகத் துரோகிகள், இவ்வளவு காலமும் “மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு” போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.

தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷர்களை மிக மோசமாக விமர்சித்து  மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளைச் சூறையாடி வெற்றி பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே இவர்கள் பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Tamilmirror Online || ‘பிரதமரின் அறிவிப்பில் எம்.பிக்கள் துள்ளுகின்றனர்’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.