Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது - இது என்ன செய்யும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 பிப்ரவரி 2021
படம்

பட மூலாதாரம்,NASA

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சி பொங்கியது.

ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.

செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.

"இப்போதுவரை ரோவர் சமதளத்தில் தான் இருகிறது. இதுவரை 1.2 டிகிரி தான் சாய்ந்திருக்கிறது" என ரோவரின் தரையிறங்கும் அணியின் தலைவர் ஆலென் சென் குறிப்பிட்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பெர்சவரன்ஸ் ரோவரின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் ரோவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.

படம்

பட மூலாதாரம்,NASA

இனி வருங்காலத்தில், பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கும்.

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோளில் உள்ள டெல்டா பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும், அதன் பின், பெரிய பள்ளத்தின் விளிம்பை நோக்கி நகரும். இந்த பெரிய பள்ளத்தின் விளிம்பில் தான் கார்பனேட் பாறைகள் இருப்பதாகச் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாறைகளைக் கொண்டு பூமியில் உயிரியல் ரீதியிலான நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் உபகரணங்களை வைத்து, இந்த விவரங்கள் அனைத்தையும் மிக நுண்ணிய அளவு வரை ஆராயும்.

ஏன் ஜெசெரோ பள்ளம்?

45 கிலோமீட்டர் அகலம் கொண்ட செவ்வாயின் பள்ளத்துக்கு ஜெசெரோ எனப் பெயர் வைக்கப்பட்டது. ஜெசெரோ என்றால் ஏரி என்று அர்த்தம். நீர் இருக்கும் இடத்தில் தானே உயிரினங்கள் இருக்கும்? அது தான் இந்த இடத்தைத் தேர்வு செய்யக் காரணம்.

ஜெசெரோ பகுதியில் பல தரப்பட்ட பாறை வகைகள், களி மண் வகைகள், கார்பனேட்டுகள் என உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளைக் காட்டக் கூடிய பொருட்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பாத் டப் ரிங் பகுதி. இந்த பகுதி ஏரியின் கரையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பூமியில் ஸ்ட்ரொமடொலைட்ஸ் (Stromatolites) என்றழைக்கப்படும் ஒரு வகையான நுண்ணுயிரிப் பாறையை, பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் கண்டுபிடிக்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கும் வித்தியாசமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய பாறை மாதிரிகளை தனியாக சிறிய குழாய்களில், செவ்வாயின் மேற்பரப்பிலேயே வைக்கும்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அந்த பாறை மாதிரிகள் வைக்கப்படும் சிலிண்டர்களைச் சேகரித்துக் கொண்டு வர, பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அத்தனை சுலபமான நடவடிக்கைகளாக இருக்காது. ஜெசெரோவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வர பெரிய ராக்கெட், பெரிய செயற்கைக் கோள் என பல விஷயங்கள் தேவை.

செவ்வாய் கோள் தொடர்பான ஆராய்ச்சியில், செவ்வாயில் இருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவது தான் அடுத்த சரியான மற்றும் தேவையான நடவடிக்கையாக இருக்கும்.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது - இது என்ன செய்யும்? - BBC News தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெர்சவரன்ஸ் ரோவர் ஸ்வாதி மோகன்: 'நாசாவின் மார்ஸ் 2020 திட்டத்தால் என் தூக்கம் போனது'

  • வினீத் கரே
  • பிபிசி
3 மணி நேரங்களுக்கு முன்னர்
நாசாவில் நுழைந்தது எப்படி? - 'பெர்சவரன்ஸ்' ஸ்வாதி மோகன் நேர்காணல்

பட மூலாதாரம்,@DRSWATIMOHAN TWITTER

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாகத் தன் 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தியை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாய் கோளில் தரை இறக்கிவிட்டது.

இதில் முக்கிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன். விண் ஊர்தியின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக இவர் உள்ளார்.

மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தி விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, விண் ஊர்தி தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான்.

குறிப்பாக மார்ஸ் 2020 மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தியை செவ்வாயின் மண்டலத்துக்குள் நுழையச் செய்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது. அவரைத் தொடர்பு கொண்டு பிபிசி பேட்டி கண்டது.

கேள்வி: பல வருட உழைப்புக்குப் பிறகு, இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகான சில மணி நேரங்களை எப்படிக் கடந்தீர்கள்?

பதில்: அது கொஞ்சம் கனவு போல இருந்தது. சமீபத்தைய மார்ஸ் 2020 விண்வெளித் திட்டம் கொஞ்சம் சிக்கலானது. எனவே அது வெற்றியாக கொண்டாடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இறுதி நிமிடத்தில் எல்லாமே ஒருங்கிணைந்து வந்தது தான் வெற்றி.

கே: அந்த கடைசி சில நிமிடங்களில் உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது எனக் கூற முடியுமா?

ப: ஒரு திட்ட விவரிப்பாளராக என்ன நடக்கிறது, நான் என்ன கூற வேண்டும் என்கிற என் பணியில் கூடுதல் கவனத்தோடு இருந்தேன். பல விஷயங்கள் மிகக் கச்சிதமான வரிசையில் நடக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு விஷயம் நடந்து முடிந்த உடன், நான் அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். என்ன நடக்கிறது என்பதை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ளப் போதுமான திறன் என்னிடம் இல்லை.

கே: ஒரு திட்டத்துக்கு எட்டு வருடம் முதலீடு செய்வது என்பது மிக நெடிய காலம். இந்தப் பணிக் காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்துக் கூறுங்களேன்?

DR SWATI MOHAN

பட மூலாதாரம்,@ DRSWATIMOHAN / TWITTER

ப: எட்டு வருடங்கள் இந்த திட்டத்தில் பணியாற்றியதை என் வாழ்நாளில் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இருப்பினும் இந்த எட்டு ஆண்டுகளில் நான் முதலில் இழந்தது என் தூக்கத்தைத் தான். இந்த திட்டத்தின் வன்பொருட்கள் (hardware) வரத் தொடங்கியதில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்பு வரத் தொடங்கின. காரணம் நாங்கள் அதை பல்வேறு சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தோம். எனவே எப்போதும் என் தொலைபேசியை என்னுடனேயே வைத்திருந்தேன்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது, என்ன சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வது, தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற வேகமும், ஊக்கமும் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்கையில் தொய்வை ஏற்படுத்தியது. அதோடு எனக்கு தொலை பேசி அழைப்போ அல்லது அலுவலகத்துக்கு வருமாறு திடீர் அழைப்போ வரும் போதெல்லாம் என் குடும்பம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது. இந்த விஷயத்தில் என் குடும்பம் எனக்கு மிகவும் பக்கபலமாகத் துணை நின்றது.

தா பாட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கோடை கால விடுமுறையை இந்தியாவில் ஊர் சுற்றிக் கழித்திருக்கிறேன்.

கே: இந்தியா போன்ற பல நாடுகளும் செவ்வாயில் விண் ஊர்தியைத்தரையிறக்க இலக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கருத்து மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன?

எந்த ஒரு கோளிலும் தரையிறங்குவது என்பது சவாலான விஷயம் தான். பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். எந்த கோளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தரையிறக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து பல வேறுபட்ட சூழல்கள் நிலவும். பல தடைகள் ஏற்படும்.

அதே குறிக்கோளோடு இருப்பவர்கள் மேற்கொண்ட விஷயங்களில் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் என்னால் கொடுக்க முடிந்த நல்ல ஆலோசனை. சில நேரங்களில் நம் வெற்றியை விட, நம் தோல்வியில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள கொள்வோம்.

பெர்சவரன்ஸ் ரோவர் ஸ்வாதி மோகன்: 'நாசாவின் மார்ஸ் 2020 திட்டத்தால் என் தூக்கம் போனது' - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

 சுவாதி மோகன் இந்தியரா அமெரிக்கரா என பலத்த வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of sky
 
செவ்வாயில் வீசும் காற்றின் ஒலி
பூமிக்கு அனுப்பியது நாஸா ஹெலி
அரிய வீடியோ காட்சிகளும் அங்கு பதிவு
மர்மங்கள் நிறைந்த சிவப்புக் கிரகமாகிய செவ்வாயில் தரையிறங்கிய நாஸாவின் மினி ஹெலிக்கொப்ரர் ட்ரோன் அங்கு வீசும் காற்றின் ஓசையைத் துல்லிய மாகப் பதிவு செய்து(First Audio Recording) பூமிக்கு அனுப்பி உள்ளது.
'Perseverance robot' என்கின்ற தானியங்கி ஊர்தியுடன் இணைக்கப்பட்ட அந்தச் சிறிய ஹெலியில் பொருத்தப்பட்ட நுண் கமெராக்கள் உலகம் இதுவரை கண்டி ராத செவ்வாயின் தரைத் தோற்றப்படங் களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ள ளன.
கடந்த வியாழனன்று (பெப்ரவரி 18) விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட புதிய வீடியோ, ஓடியோ பதிவுகளை நாஸா விஞ்ஞானி கள் குழு நேற்று வெளியிட்டிருக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தரையிறக்கத்தின் போது எழுந்த இரைச்சலையும் செவ்வாயில் சாதாரண மாகக் கேட்கும் காற்றின் ஓசையையும் நாஸா தனித்தனியே ஓடியோப் பதிவுளாக வெளியிட்டிருக்கிறது. அங்கு வீசும் காற்றொலியை பூமியில் மனிதர்கள் செவிமடுப்பது இதுவே முதல் முறையாகும்.
பல ஆண்டுகளாக உலகம் கண்ட கனவின் நிஜங்கள் இவை என்று நாஸா விஞ்ஞானி Allen Chen தெரிவித்திருக் கிறார்.
செவ்வாயில் தரையிறங்கிய நாஸா விண்கலத்துடன் புத்திக் கூர்மை மிகுந்த சிறிய ஹெலி (Ingenuity helicopter) ஒன்றும் இணைந்துள்ளமை தெரிந்ததே. மிக நவீன தொழில் நுட்பம் ஊட்டப்பட்ட அந்த சிறிய வான் ஊர்தியே மனிதர்கள் வேற்றுக்கிரகம் ஒன்றுக்கு வெற்றி கரமாக அனுப்பிய முதலாவது விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது.
ரோவர் விண்கலத்தின் பிந்திய நிலைவரத்தையும் அதன் மின் சக்தி சேமிப்பு தொடர்பான விவரங்களையும் மினி ஹெலிக்கொப்ரர் அமெரிக்காவில் உள்ள நாஸா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.
வரலாற்றில் இரண்டு கோள்களுக்கு இடையிலான முதலாவது தொலைபேசிப் பரிவர்த்தனை இது என்று நாஸா விஞ்ஞானிகள் அதனைப் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கின்றனர்.
----------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.
22-02-2021
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/2/2021 at 21:26, nunavilan said:

 சுவாதி மோகன் இந்தியரா அமெரிக்கரா என பலத்த வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன.

அமெரிக்கனிட்டை பொட்டு கலாச்சாரம் துண்டற இல்லை.
சுவாதி பொட்டு வைச்சிருக்கிறா.....ஆகவே     மிச்சம் ஓட்டமெற்றிக்காய் விளங்குமெண்டு நினைக்கிறன் :cool:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.