Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை?

சீனாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகளில் குத வழி (மலம்) கோவிட் பரிசோதனை?
சீனாவின் சில நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் குத வழி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகக் கிடைத்த செய்திகளைத் தொடர்ந்து பல நாடுகள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்த வாரம் தனது குடிமக்களில் இப்படியான பரிசோதனைகளைச் செய்ததாகவும் இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டதாகவும், யப்பானிய அரசு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் சில அமெரிக்க ராஜதந்திரிகள் இப்படியான பரிசோதனைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் அதை மறுதிருந்ததுடன் உடனடியாக இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன. (அமெரிக்கர்கள் இப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனச் சீன அதிகாரிகள் பின்னர் தெரிவித்திருந்தனர்)

பெஜ்ஜிங், ஷாங்காய் நகரங்களில் சர்வதேசப் பயணிகள் மீது இப்படியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ‘தி நியூ யோர்க் டைம்ஸ்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறிகுறிகளைக் காட்டாத சில கோவிட் தொற்றாளர்களின் மலத்தில் கொறோணாவைரஸ்கள் நீண்டகாலமாக மறைந்திருக்க வாய்ப்புகளுண்டு எனவும் தமக்கே தெரியாமல் சில முன்னாள் நோயாளிகளும் அறிகுறிகளற்ற நோயாளிகளும் வைரஸ்களின் காவிகளாக இருக்கலாமென்ற சந்தேகத்தில் இப்பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், தொண்டையில் செய்யப்படும் பரிசோதனைகள் இந்தளவுக்குத் திறமையானவையல்ல எனவும் லி ரொண்ஜெங் என்ற சீன மருத்துவர் சி.என்.என். செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு 9 வயது மாணவனுக்கு கோவிட் நோய் தொற்றியிருந்தமைக்காக, ஜனவரி மாதம் சீனாவின் பேஜிங் நகரிலுள்ள ஒரு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 1000 த்தும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் குத மற்றும் மூக்கு வழிகளிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள் என இன்னுமொரு செய்தி கூறுகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பல சீன பயணிகள் தங்க வைக்கப்படும் தனிமைப்படுத்தும் ஓட்டல்களில் இப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.

சீனாவிலுள்ள பல நிபுணர்களும் இம் மலப் பரிசோதனை தொடர்பாகத் தமது சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். மலத்தில் வைரஸ் கிருமிகள் இருப்பது நிரூபிக்கப்பட்டதொன்றெனினும், நோய் பரவலுக்கு அது காரணமில்லை; நாசி, தொண்டை வழியாக வெளியேறும் ஈரத் துணிக்கைகளின் மூலமாகவே அதிகம் நோய்ப்பரவல் ஏற்படுகிறது என வூஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான யாங் ஜான்கியூ சீன செய்தி நிறுவனமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

https://marumoli.com/சீனாவுக்குச்-செல்லும்-பய/

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை?

Скачать vadivel bathroom comedy hd scenes collection from middleclass  madhavan movie vadivelu - смотреть онлайн

இதுக்குப் பிறகு.... சீனாவுக்கு போகிற ஐடியா,  யாருக்கும் இருக்கா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் வளர்ச்சியால் வரும் மேலாண்மையால் நாடுகள் பயப்படுவது இதனால் தான்.

மேற்கிடம்  செருக்கும், அகங்காரமும் உள்ளது ஆயினும், வழங்கங்கள், விழுமியங்களுக்கு மாறாக இப்படியான செய்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஆதாரம் இருந்த போதிலும், வெளியில் அறிவித்து வாதத்துக்கு விட்டே முடிவுக்கு வரும் செய்ய வேண்டியது கட்டமாயினும்.

அல்காயிதா இற்கு எதிரான  அல்லது சதாமுக்கு  எதிரான யுத்தங்களில் கூட, UN வந்து கேட்டு வாதித்து மறுத்த பின்பே, coalition of the willing  என்று US, UK அவைக்கு கூட்டு சேர்த்து.

மேற்கு, குறிப்பாக US சொல்லும்ம்,  சீன பல யுத்தம் பாரிய அழிவின் வழியாக அடைந்த  இப்பொது அடைந்த  ஒழுங்கு  மற்றும்   மனித விழுமிய முண்டேற்றங்களையும், சீன தலை கீழாக  அதன் மேலாண்மை மூலமாக மாற்ற  நினைக்கிறது என்பதில் ஓட்டைகள் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு குதவழி (மலம்) கோவிட் பரிசோதனை?

சீனாவுக்குச் செல்லும் சர்வதேச பயணிகளில் குத வழி (மலம்) கோவிட் பரிசோதனை?
சீனாவின் சில நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகாரிகள் குத வழி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகக் கிடைத்த செய்திகளைத் தொடர்ந்து பல நாடுகள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்த வாரம் தனது குடிமக்களில் இப்படியான பரிசோதனைகளைச் செய்ததாகவும் இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டதாகவும், யப்பானிய அரசு முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் சில அமெரிக்க ராஜதந்திரிகள் இப்படியான பரிசோதனைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் அதை மறுதிருந்ததுடன் உடனடியாக இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன. (அமெரிக்கர்கள் இப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனச் சீன அதிகாரிகள் பின்னர் தெரிவித்திருந்தனர்)

பெஜ்ஜிங், ஷாங்காய் நகரங்களில் சர்வதேசப் பயணிகள் மீது இப்படியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ‘தி நியூ யோர்க் டைம்ஸ்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறிகுறிகளைக் காட்டாத சில கோவிட் தொற்றாளர்களின் மலத்தில் கொறோணாவைரஸ்கள் நீண்டகாலமாக மறைந்திருக்க வாய்ப்புகளுண்டு எனவும் தமக்கே தெரியாமல் சில முன்னாள் நோயாளிகளும் அறிகுறிகளற்ற நோயாளிகளும் வைரஸ்களின் காவிகளாக இருக்கலாமென்ற சந்தேகத்தில் இப்பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், தொண்டையில் செய்யப்படும் பரிசோதனைகள் இந்தளவுக்குத் திறமையானவையல்ல எனவும் லி ரொண்ஜெங் என்ற சீன மருத்துவர் சி.என்.என். செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு 9 வயது மாணவனுக்கு கோவிட் நோய் தொற்றியிருந்தமைக்காக, ஜனவரி மாதம் சீனாவின் பேஜிங் நகரிலுள்ள ஒரு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 1000 த்தும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் குத மற்றும் மூக்கு வழிகளிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள் என இன்னுமொரு செய்தி கூறுகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பல சீன பயணிகள் தங்க வைக்கப்படும் தனிமைப்படுத்தும் ஓட்டல்களில் இப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.

சீனாவிலுள்ள பல நிபுணர்களும் இம் மலப் பரிசோதனை தொடர்பாகத் தமது சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். மலத்தில் வைரஸ் கிருமிகள் இருப்பது நிரூபிக்கப்பட்டதொன்றெனினும், நோய் பரவலுக்கு அது காரணமில்லை; நாசி, தொண்டை வழியாக வெளியேறும் ஈரத் துணிக்கைகளின் மூலமாகவே அதிகம் நோய்ப்பரவல் ஏற்படுகிறது என வூஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான யாங் ஜான்கியூ சீன செய்தி நிறுவனமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

https://marumoli.com/சீனாவுக்குச்-செல்லும்-பய/

இந்த வேலையை போனவருடம் 2020ல் சைனீஸ் புதுவருட கொண்டாட்டம் முடிந்தபின் ஐரோப்பிய அமெரிக்க ஆசிய நாடுகள் திரும்பி வரும் சைனீஸ் குடிமக்களுக்கு செய்து இருந்தால் எபோலா  தொற்று நோய்  போல் கொரனோ  அடங்கி இருக்கும் .வந்த கொர்னோவும்  சும்மா போகும் என்றால் அதுவும் அப்கிரேட் ஆகிக்கொண்டு இருக்கு .

போன கிழமை வேலை சம்பந்தமாய் குரைடன்  பக்கம் போக திடீரென வாகனம்களை ஓடவிடாமல் நிப்பாட்டுகிறார்கள் வானத்தில் மூன்று கெலி பறக்குது  கெலிகளின்  சத்தம் ஊர் நினைவை கொண்டுவருகிறது அம்புலன்ஸ் அலறியபடி போகுது என்னடா விடயம் என்றால் அப்கிரேட் ஆன பிரேசில் கொர்னோ வுடன் ஒருத்தர் வந்து அங்கு ஒளித்து இருந்து இருக்கிறார் நோயின் வீரியம் கூட தாங்கமுடியாமல் அவசர உதவிக்கு அடித்து கூப்பிட்டு உள்ளார் . இப்போதைக்கு அது அடங்கும் போல் தெரியவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.