Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும். 40 members have voted

  1. 1. மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும்.

    • ஆம்
      27
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

இந்த அம்மணி யாரையும் முறை வைத்தே அழைக்கிறார்.

எங்க பாணியே அதுதானே பாட்டி :(:(

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை வீணாக வம்பக்கிழுக்கிறேனோ என்று யோசித்து கொண்டே இதை எழுதுகிறேன்.................. உங்களின் கருத்தில் நியாயமிருப்பதாக படுகின்றதே தவிர அதில் நியாயமில்லை. நீங்கள் வேறொருவருக்காக எழுதும் பதிலை பல வேறு பேர்கள் வந்து பார்கிறார்கள் உங்களை பொறுத்த வரையில் அது உங்கள் இருவருக்கிடைணிலான கருத்தாடல். ஆனால் மட்டுறுத்தினருக்கு அது நாகரிகாமானதாக இருக்க வேண்டுமென்ற எத்தணிப்பு அதனால் பல வெட்டுக்கள்....

வேண்டியவரின் நெஞ்சில் காயங்கள் அதன் தாக்கங்களை மேலே நீங்கள் எழுதி விட்டதில் பார்க்க கூடியாதாக இருக்கின்றது. உண்மையென்பது நிருபிக்கப்டுவதல்ல......... நிருபிக்க முடியாதது! காரணம் நிருபிக்க எடுக்கும் முயற்சிலேயே உண்மை கறைபடிந்து விடுகின்றது.

நீங்கள் எந்த இருவரைப் பற்றிக் கதைக்கிறீங்க என்பதே புரியல்ல. நீங்க உங்க மனசில எதையோ நினைச்சுக் கொண்டு எதுக்கோ பதில் எழுதிறதா மட்டும் புரியிது. முன்னர் யாரேனும் எங்களைப் போல எழுதிறவங்க கூட பிரச்சனைப்பட்டிங்களோ..??! இங்க இதுதான் பிரச்சனையே. பழைய விவாதப் புடுங்குப்படுதல்கள் அப்புறம் புதிய புடுங்குப்பாடுகளுக்கான ஆரம்பமாகின்றன..! :(

நாம் குறிப்பிட்டது.. கள நிர்வாகமாக இருக்கட்டும் சாதாரண உறுப்பினர்களாக இருக்கட்டும்.. ஒரு பொதுக்களத்தில் விவாதத்துக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு.. போறவ போகலாம். போக்கிடமில்லை.. ஒட்டுக்குழு நண்பர்.. இப்படி எழுதுவதில் எந்த நியாயமும் இல்லை. வருபவர் போறதைத் தீர்மானிக்கிறது இங்குள்ள நடைமுறையிலும் தங்கியுள்ளது. பகிரங்க விவாவதக்களத்துக்கு ஒட்டுக்குழுவினனும் வரலாம்.. போக்கிடமில்லாதவனும் வரலாம்.. வாறவனுக்கு இதுதான் தகுதி என்று இங்கு ஒன்றில்லை. ஆரம்பத்தில் இணைய உள்ள நிபந்தனைகளைத் தவிர.

உள்ள வந்த பின்னர் களவிதிக்கு உட்பட வேண்டும். இதைத் தவிர ஏதோ ஒரு உந்துதலில் இங்கு வருபவர்களை நோக்கி.. போறவன் போ.. போக்கிடமில்லாததுகள்.. ஒட்டுக்குழு என்று திட்டவா களம் நடத்தி ஆட்களைச் சேர்கிறீங்க சார்.

இன்று யாருக்கோ பெயர் குறிப்பிடாமல் விழுவது... நாளை நமக்கும் ஆகலாம்... இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஆகலாம். அந்த வகையில் இவை புரிந்துணர்வுக்கு எந்த வகைல இடமளிக்கும் என்றுதான் நாம் அந்தக் கருத்தை முன் வைத்தோம். அதை நீங்க எப்படி விளங்கிக் கொண்டிங்க பாருங்க.. அப்படிப் பலர் தவறாத்தான் புரிஞ்சுக்கினம்.

போக்கிடமில்லாம வாறாங்க என்றா இங்குள்ளவங்க அனைவரும் அப்படியா வாறாங்க..! எழுதியவர் உட்பட. போறவங்க போகலாம் என்று உப நிர்வாகி எழுதும் போது அவரே சிந்திக்கனும்.. அப்ப எதுக்கு பொதுக்களம் நடத்தனும் என்று. பேசாம தங்கள் நம்பிக்கைக்குரியவங்களைக் கொண்டு புதினம் இல்ல சங்கதி.. இல்ல தமிழ்நாதம் போன்ற ஒன்றை நடத்தலாம் தானே..???!

விவாதக்களத்தில விவாதம் புரிய ஒட்டுக்குழுவினன் தான் வரனும் என்றில்ல. அவன் வரக் கூடாதும் என்றில்ல. வாரவன் கள விதிக்குள்ள நின்றால் சரி..! தமிழ் ஆர்வம் உள்ளவனானால் சரி..!

அந்நிய நாட்டில் அந்நியனுக்கு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அகதி அந்தஸ்து வாங்கி குந்திக்கொண்டு.. தமிழீழம்.. தமிழன் என்று புலம்புபவர்கள் மத்தியில் தாய் நாட்டில் இருந்து எதிரியோட இருக்கிறவனை எப்படி நாங்க ஒட்டுக்குழுவினன் என்று சொல்ல முடியும். தமிழீழ மண்ணில் வாழும் மக்களுக்கும் போராளிகளுக்கும் உள்ள உரிமைகளை எல்லோரும் பாவிக்க முற்படக் கூடாது. அவங்களோட ஒப்பிடேக்க இங்குள்ள பலரும் ஒட்டுக்குழுவினர்தான். அதை உணர்ந்து திருந்திக்கோங்க..!

அந்த வகையில் எவனும் தனக்குள்ள தோன்றிற மாற்றுக் கருத்தை வெளியிடவும் விளக்கம் பெறவும் உரிமை இருக்கனும். இல்லைன்னா மறைக்கப்படுவது.. விவாததுக்கு இடமளிக்காதது எல்லாமே உண்மை என்றுதான்.. தவறா விளங்கிக்கப்படும்.

இப்ப நீங்களே நாங்க எழுதினதின்ர பொருளை சரிவர விளங்கிக் கொள்ள முடியாத போது.. உலகில் அரசியலில் நடப்பவற்றை மக்கள் எப்படி ஒரே திசையில் மறுகேள்விக்கு இடமில்லாம விளங்கவும் ஏற்கவும் செய்வாங்க என்பதை சிந்திங்க..! :( :P

Edited by nedukkalapoovan

வானவில் ,பேபி.................

முதல் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!!!

உங்கள் கறுத்தை முன்வைத்து, யார் என்ன சொன்னாலும் அதுக்காக போராடி வெற்றி அடைந்தமைக்கு

மீண்டும் என் வாழ்த்துக்கள் :rolleyes::D B)

கண்மணி அன்போடு காதலன் நான்.....என்று எழுத நினைக்கையில் நீங்கள் கோர்வையாக எழுதிவிட்டீர்கள்.

நெடுக்கால போவானின் கருத்துகளுக்கு நன்றி!

வேலையில் இருக்கும் போது ஒரே யோசினை யார் யார் எப்படி எல்லாம் பேசியிருப்பினம் என்டு. இங்க வந்து பார்த்தால் எல்லாம் தலைகீழா கிடக்கு. நல்ல மாற்றம். நன்றி வலைஞன் அண்ணா மற்றும் களஉறவுகள்.

நான் இங்கு தலைப்பு சம்மந்தமாக கருத்து ஒன்றும் கூறவிரும்பவில்லை. ஏற்கனவே இது சம்மந்தமாக களத்தில் கருத்தாடல் செய்துள்ளோம்...

ஒரு தனிப்பட்ட செய்தியை கள உறவுகளிற்கு அறிவிப்பதற்காக நான் இங்கு எழுதவேண்டியுள்ளது. இதற்காக வேறு தலைப்பை ஆரம்பிக்க முடியவில்லை. மன்னிக்கவும்...

சிலர் விசமத்தனமான முறையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் யாழ் கள நிருவாகி இணையவன் நான் என வதந்தி பரப்பி வருகின்றார்கள். இதில் எதுவித உண்மையும் இல்லை. உங்களைப் போல் எனக்கும் இணையவன் உண்மையில் யார் என்று தெரியாது.

குறிப்பிட்ட சிலர் மட்டறுத்துனர்கள் யாழ் களத்தில் இல்லாத நேரத்தை அறிந்துவைத்துக்கொண்டு, அந்த நேரத்தில் களத்திற்கு வந்து பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள். மேலும், மட்டறுத்துனர்கள் களத்தில் இல்லாத நேரங்களில் வரும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கள உறுப்பினர்கள் சிரமப்பட வேண்டி இருந்தது. இதனால், ஒருவரும் கிடைக்காவிட்டால் மட்டறுத்துனராக வருவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று முன்பு ஒருமுறை நிருவாகத்திடம் எனது விருப்பத்தை தெரிவித்து இருந்தேன். மற்றும்படி மட்டறுத்துனர் விடயங்களிற்கும் எனக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை.

மட்டுறுத்தினராக இருப்பதை சிலர் ஏதோ ஐ.நா சபையில் கிடைக்கின்ற உயர்பதவிபோல் நினைக்கின்றார்கள் போல இருக்கின்றது. இதனாலேயே அடிக்கடி மட்டறுத்தினர்களை வம்புக்கு இழுக்கின்றார்கள்...

நன்றி!

  • தொடங்கியவர்

வேலையில் இருக்கும் போது ஒரே யோசினை யார் யார் எப்படி எல்லாம் பேசியிருப்பினம் என்டு. இங்க வந்து பார்த்தால் எல்லாம் தலைகீழா கிடக்கு. நல்ல மாற்றம். நன்றி வலைஞன் அண்ணா மற்றும் களஉறவுகள்.

ஹீ ஹீ வாசகன்!

இப்போ சந்தோசமா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுறுத்தினராக இருப்பதை சிலர் ஏதோ ஐ.நா சபையில் கிடைக்கின்ற உயர்பதவிபோல் நினைக்கின்றார்கள் போல இருக்கின்றது. இதனாலேயே அடிக்கடி மட்டறுத்தினர்களை வம்புக்கு இழுக்கின்றார்கள்...

மாப்பு அப்படியென்றால் எமது மட்டுறுத்தினர்களை எந்த நிலையில் வைத்திருக்கின்றீர்கள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு அப்படியென்றால் எமது மட்டுறுத்தினர்களை எந்த நிலையில் வைத்திருக்கின்றீர்கள்? :D

என்னய்ய்யா இதைக்கூடாவா ஊகிக்கமுடியல்ல? அப்புறம் எப்படிப்பா 1200 கருத்துக்கள் எழுதினியள்? என்னோட சேர்ந்து 10 கருத்துக்கள் எழுதியும் புரியல்ல எண்டா?? சா......:angry: :angry: ஆண்கள் வயசானவர் வர்க்கத்துக்கே தலை குணிவு தங்களால்... B)

நான் யாழ் இணைய மட்டறுத்தினர்களை எந்த நிலையில் வைத்திருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நாங்கள் கள விதிகளிற்கமைய கருத்தெழுதினால் மட்டறுத்துனர்களுடன் பிரச்சனைப்பட வேண்டி வராது.

எனது கருத்துக்கள் பல தடவைகள் அகற்றப்பட்டுள்ளன அல்லது எடிட் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நான் கவலைப்படவில்லை. ஆயிரம்பேர் பார்க்கின்ற இடத்தில் நான் எழுதும் கருத்தை இன்னொருவரும் பார்வையிட்டு பிழைகளை திருத்துவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

நிருவாகத்துடன் பிரச்சனைகள் வரும்போது நான் அடிக்கடி தனிமடல்களில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்பதால் அல்லது எனது விமர்சனங்களை தெரிவித்து வருவதால் எனக்கு மட்டறுத்தினர்களுடன் மற்றைய சில கள உறவுகள் எதிர்கொண்டதுபோன்ற பிரச்சனைகள் அல்லது மனத்தாபங்கள் ஏற்படவில்லை.

இங்கு மட்டறுத்தினர்களை பிடிக்கவில்லை, நிருவாகம் பிடிக்கவில்லை என்றால் நான் என்பாட்டில் நடையைக் கட்டிக்கொண்டு வந்தவழியில் திரும்பிப் போய்விடுவேன் ஒழிய யாழ் இணையத்தில் கள்ள ஐடிக்களை உருவாக்கி, வேறு பெயர்களில் வந்து அநாகரிகமான செயல்களை செய்து குழப்பங்கள் விளைவிக்க மாட்டேன்.

மேலும், நிருவாகத்திற்கு எச்சரிக்கைகள் விடுவதற்கு அல்லது நிருவாகத்துடன் மல்லுக்கட்டுவதற்கு இது எனது காசை, உழைப்பை செலவழித்து நான் உருவாக்கிய இணையம் அல்ல. யாரோ தமது பணத்தை, நேரத்தை செலவழித்து நீண்ட காலம் 10 வருடங்களாக கஸ்டப்பட்டு உருவாக்கிய இணையம்.

எனவே, இங்கு நடப்பவை பிடிக்கவில்லை என்றால், எனது பணத்தை, நேரத்தை செலவழித்து ஒரு புதிய இணையத்தை உருவாக்குவது உசிதமானது ஒழிய இங்கு சிலர் செய்வதைப் போல் கேவலமான வேலைகளில் ஈடுபடுவது வெட்கக்கேடு.

நீங்களும் (கு.சா அண்ணாவை சொல்லவில்லை) ஒரு கருத்துக்களத்தை சொந்த செலவில் உருவாக்கி நடாத்திப் பார்த்தால் பிறகு தெரியும், வரும் கஸ்டங்கள் என்னவென்று...

நாங்கள் எழுதும் கருத்துக்களை நேரம் உள்ளபோது திரும்பவும் வாசித்து பார்ப்பது நல்லது. பல தடவைகள் நான் முன்பு யாழ் இணையத்தில் எழுதிய கருத்துக்களை வாசித்து வெட்கப்பட்டுள்ளேன். அட இதையும் போய் எழுதினேனா என்று மனம் சங்கடப்படும். நெடுக்காலபோவான், சமாதானம் மற்றும் பலருடன் ஆரம்பத்தில் தேவையில்லாமல் பிடுங்குப்பட்டுள்ளேன். மாற்றுக் கருத்து கொண்டவர்களை திட்டுவதால், மன அலைச்சலைத் தவிர வேறு ஒன்றும் எமக்கு கிடைத்துவிடப்போவதில்லை.

இதனால் தான் திருவள்ளுவர்

"யாகாவாராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

என கூறுகின்றார்.

எனவே, படிமுறை வளர்ச்சியின் மூலம் எனது கருத்து எழுதும் பாணியை தினமும் திருத்தி வருகின்றேன். நாங்கள் நிருவாகத்திடம் குறைபிடிப்பதை நிறுத்திவிட்டு எம்மில் உள்ள குறைகளை முதலில் படிப்படியாக நீக்க முயன்றால் இவ்வாறான தலைப்புக்கள் யாழ் இணையத்தில் தேவைப்படாது. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்ய்யா இதைக்கூடாவா ஊகிக்கமுடியல்ல? அப்புறம் எப்படிப்பா 1200 கருத்துக்கள் எழுதினியள்? என்னோட சேர்ந்து 10 கருத்துக்கள் எழுதியும் புரியல்ல எண்டா?? சா......:angry: :angry: ஆண்கள் வயசானவர் வர்க்கத்துக்கே தலை குணிவு தங்களால்... B)

*நான் சிதறு தேங்காய் உடைச்சு கனகாலம் இதை கேட்ட உடனை ஒண்டுக்கு வர்ர்ர்ர்ர்ர்ர்ருதல்ல* :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எழுதும் கருத்துக்களை நேரம் உள்ளபோது திரும்பவும் வாசித்து பார்ப்பது நல்லது. பல தடவைகள் நான் முன்பு யாழ் இணையத்தில் எழுதிய கருத்துக்களை வாசித்து வெட்கப்பட்டுள்ளேன். அட இதையும் போய் எழுதினேனா என்று மனம் சங்கடப்படும்.

5 வயதிற்கு முன்னர் ஆடையின்றி ஓடித் திரிந்ததை நினைத்து வெட்கப் படமுடியுமா? அந்த அந்த நேரத்தில் இப்படி, அப்படித்தான் இருக்கவேண்டும்..

காலவோட்டத்தில் மாற்றங்கள் வந்தாலும், முன்னர் எழுதியவை அந்த நேரத்தில் உங்கள் உள்ளத்தில் இருந்துதானே வந்தது.. இதற்காக வெட்கப்படலாமா?

கொள்கைகள் கருத்துக்கள் கிடைக்கும் அனுபவங்களினூடாக மாறிக்கொண்டே இருக்கும். எனவே முன்னர் சரியென்று நினைத்தது தற்போது பிழையென்று தெரிந்தால், அதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலே போதும்!

இந்த தலைப்புக்கு என் கருத்து சொல்ல தேவையில்லை. எல்லாம் சுபமாகவே முடிந்திருக்கு என்று கருத்துக்களை பார்க்க தெரியுது. :lol: ஆனாலும் சில விடயங்கள் தவறாக விளங்கப்பட்டு சொல்லப்படுகின்றது. டூ லேட் என்றாலும் சொல்ல விருப்பமில்லாவிட்டாலும் இப்படி மட்டுறுத்தினர்கள் மீதான பிழையான கருத்துக்கு...சொல்ல வேண்டிய அவசியம் இருக்கென்று நினைக்குறன்...

இப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கும் ஏற்பட்டது. பழைய புதிய உறுப்பினரை பாகுபடுத்தல் வாக்குவாதத்தின் போது சில மட்டுறுத்தினர் சிலருக்கு தனிமடல் போட்டு சமாதானமாக போக சொன்னார்களாமே. அப்போதே பொங்கி எழணும் போல இருந்திச்சு. ஏன் சிலருக்கு தான் தனிமடலா என. ஆனாலும் பேசாமல் இருந்துட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாக நடந்தது என்னவென்றால்..உறுப்பினர் நிர்வாகத்துக்கு தனிமடல் போட்ட பின்னரே நிர்வாகத்தில் ஒருவர் உறுப்பினருக்கு பதில் போட்டார். அந்த மடல் பற்றியதே மேலுள்ள விடயம்.

நிர்வாகம் தானாக ஒருவருக்கு போட்டு மற்றவருக்கு போடாமல் விடவில்லை. இதுதான் உண்மை! சிலவேளை கசக்கலாம்..ஆனால் அதுவே இது உண்மை என்பதற்கு அத்தாட்சியும் :)

Edited by பிரியசகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.