Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தேர்தல், வாக்களிப்பு ஆரம்பமாகியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஆரம்பமாகியது!

தமிழக சட்டசபை தேர்தல், வாக்களிப்பு ஆரம்பமாகியது!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த  தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 372 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர முன்னாள் இராணுவத்தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களான ஜெயலலிதா மற்றும், கருணாநிதி ஆகிய இருவரும் இன்றி நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2021/1207753

################   ##############   ###########

கொரோனா அச்சம் – இறுதி பிரசாரத் தினத்தில் கேரளாவில் பொதுக்கூட்டங்களுக்கு தடை

தமிழக சட்டசபை தேர்தல் : ஒரு மணி நேரம் கடந்துள்ள நிலையில்,தற்போதைய நிலைவரம்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அத்துடன் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் மக்கள் மிக அவதானத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன் தேர்தல்களை எதிர்கொள்கிறார்கள்.

காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் கடந்துள்ள நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்களிப்பு தாமதமாக ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு வாக்களிக்க முடியாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1207788

 

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to தமிழக சட்டசபை தேர்தல், வாக்களிப்பு ஆரம்பமாகியது!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்

(UPDATES) சட்டப்பேரவை தேர்தல் : ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்  என நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டப்பேரவை தேர்தல் : மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.  அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினும் வாக்களித்துள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “ குடும்பத்துடன் வந்து ஜனநாய கடமையை ஆற்றியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து வருகின்றனர்.  இதனுடைய முடிவு மே 2ஆம் திகதி சிறப்பாக இருக்கும்.  இது உறுதி” எனத் தெரிவித்தார்.

அதேசமயம் திமுக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த அவர்,  ஆளும் கட்சிக்கு தோல்வி பயத்தினால் எப்படியாவது தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம் பா.ஜ.க தமிழக தலைவர் எல்.முருகன் வாக்களித்துள்ளார். அத்துடன் விருகம்பாக்கத்தில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்துள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை, தெலுங்கான ஆளுநராக இல்லாம் ஒரு பிரஜையாக தனது வாக்கினை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா பரவலை கருத்திற் கொண்டு பாதுகாப்பாக வாக்களிக்குமாறும், உரிய நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருமாறும் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2021/1207779

 

#############    ################    ##################

(update) தமிழக சட்டசபை தேர்தல் : நடிகர் விஜய் வாக்களிப்பு!

(update) தமிழக சட்டசபை தேர்தல் : நடிகர் விஜய் வாக்களிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் : ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஜனநாயக கடமையாற்றினார்.

இவரை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாக்களித்தார்.

அதேபோல் நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் வாக்ளித்தார். மனைவி சாலனியுடன் அவர் வாக்களித்துள்ளார்.  அதேநேரம் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் தந்தை சிவகுமாருடன் வாக்களித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1207776

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது – சீமான்

கேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக் கூத்துதான் – சீமான்

கேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் தொகுதியில் தனது வாக்கினை அளித்த அவர், பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ இயந்திரத்தின் உதவியுடன் வாக்களிக்கும் முறை ஒரு துயரம் தான் எனவும் அவர் குறிப்பட்டார். வாக்கு இயந்திரங்கள் பழுதானால் பெருமளவான மக்கள் காத்திருக்க நேரிடுவதாக தெரிவித்த அவர், இந்த முறை துயரம் தான் எனவும் விமர்சித்துள்ளார்.

வாக்களிப்பு இயந்திரங்களை கண்டுப்பிடித்த, உற்பத்தி செய்கின்ற நாடுகளே அதனை பயன்படுத்தாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் அதனை பயன்படுத்துவது கேலி கூத்து எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் நேர வித்தியாசத்திற்கும் மத்தியில் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஒரேநாளில் நடைபெறுவதாக தெரிவித்த அவர், மே 2 ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகுவது சந்தேகத்திற்கு உரியது எனவும்  குறிப்பிட்டார்.

தேர்தல் அமைப்பு முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவை எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றம் தேவை என்பதையும் அவர்  வலியுறுத்தினார்.

https://athavannews.com/2021/1207826

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் : 9 மணி நிலைவரம்!

தமிழக தேர்தல் : 9 மணி நிலைவரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி நிலைவரப்படி 13.80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரையில் 10.58 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்த முறையுடன் ஒப்பிடும் போது 5 வீதம் குறைவாக இருப்பதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஜய், அஜித், ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஸ்ருதிஹாசன், சாலனி, உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.

அதேநேரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தனது குடும்பத்தினருடன் வாக்களித்துள்ளார், ஓ.பன்னர் செல்வம், சீமான், தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பா.சிதம்பரம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இதுவரை வாக்களித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1207828

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தலில் வாக்குகளை பதிவு செய்த அரசியல்வாதிகள், பிரபலங்கள்

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை 07.00 மணி அளவில் ஆரம்பமானது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே மக்கள் வாக்களிக்க ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்தனர். 

இன்று இரவு 7 மணி வரை பதிவு நடைபெறுகிறது. 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 411 பெண்கள், மீதம் உள்ளவர்கள் ஆண்களாக இருப்பினும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில், 3.19 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி, அமமுக- தேதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. முதல்வர் கே பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரி ரி வி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வாக்கு பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ' இந்த தேர்தலுக்காக 88 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 91,180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 91,180 ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்களும் பயன்படுத்த உள்ளதாக' தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

காலை நேரத்திலேயே தமிழ் திரையுலகத்தை சேர்ந்த 'தல' அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மூத்த நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ஷாலினி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

202104060908057580_mkstalinuthuyaniti._L

மகன் உதயநிதியுடன் மு.க.ஸ்டாலின்

EyQ6eNcUYAAZYmC.jpg

தமிழிசை சவுந்திரராஜன்

EyQ2IJYVgAkcDpP.jpg

கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவுடன்

ba7ecaec-3d78-4aca-a7bf-64be2c35be69-e16

நடிகர் ரஜினிகாந்த்

IMG-20210406-WA0035-e1617680698487.jpg

நடிகை குஷ்பு

image_poli_64_ajith.jpg

நடிகர் அஜித்,நடிகை ஷாலினி

EyQ2b6tU4AMNyzo.jpg

EyRDEXBUUAEoUMb.jpg

நடிகர் விஜய்

202104060908057580_surya-karthi._L_styvp

 நடிகர் சூர்யா,  நடிகர் கார்த்தி

IMG-20210406-WA0030-e1617680628817.jpg

நடிகர் சிவகார்த்திகேயன்

 

 

https://www.virakesari.lk/article/103344

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  See the source image  Image result for மின்னணு வாக்கு இயந்திரம்

 கடவுளை வணங்குவதை விட்டு வாக்கு இயந்திரத்தை வணங்கினால் வெற்றி நிச்சயம். 🕺💃

  • கருத்துக்கள உறவுகள்

தலயும் , தளபதியும் கறுப்பு சிவப்பில் வந்து குறியீடாக(Symbolic) வாக்களித்துள்ளனர்  😜

 

May be an illustration of flower and text

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

May be an illustration of flower and text

கவனமப்பு.... சைக்கிள் ரயர், “பஞ்சராகப்” போகுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கவனமப்பு.... சைக்கிள் ரயர், “பஞ்சராகப்” போகுது. 🤣

சைக்கிள் ரயர் பஞ்சரா போனாலும் பரவாயில்லை, தாமரை சினைந்த சரி.😜

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

கவனமப்பு.... சைக்கிள் ரயர், “பஞ்சராகப்” போகுது. 🤣

கறுப்பு டயர் பஞ்சர் ஆனாலும் என்றுதான் 
பச்சை சேட்டு போட்டு வந்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்
 
May be an image of 1 person and text that says "ELECTION BREAKING 06.04.2021 தேர்தல் திருவிழா சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு நடிகர் விஜய் சேதுபதி தந்தி /thanthitv /thanthitv YouTube/thanthitv /thntv www.thanthitv.com THANTHITV"
 
May be an image of one or more people and text that says "NEWS 7 JUST IN வாக்களித்த பின் ஜெயம்ரவி பேட்டி "இந்த வருடம் நல்ல ஆட்சி வர வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன்; தைரியமாக வாக்களியுங்கள்""
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

 
Today at 9 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப்பதிவு முடிவடைந்தது!

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு
 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரிக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் அஸ்ஸாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவும் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

image_poli_64_ajith.jpg

நடிகர் அஜித்,நடிகை ஷாலினி

EyQ2b6tU4AMNyzo.jpg

EyRDEXBUUAEoUMb.jpg

நடிகர் விஜய்

May be an image of ‎3 people, people standing and ‎text that says '‎நாங்கெல்லாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவாவேனும்! 5 Npaaa நெடுமான் அஞ்சி žž×D வேளியே Cu ய ות நாம் தமிழர் கட்சி'க்கு சின்னமே வாக்களித்தது‎'‎‎

நாம் தமிழர் கட்சிக்கு... சின்னமே, வாக்களித்தது.  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.