Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்

வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்

     — வேதநாயகம் தபேந்திரன் — 

வடக்கு மாகாணத்தின் விரைவான அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணத்திற்கும், மேல் மாகாணம் கொழும்புக்கும் இரண்டு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி, வெருகல், வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு வரையான பெருந்தெரு போர் நிறைவு பெற்றதும் உருவாக்கப்பட்ட பெருந்தெரு. 

யாழ்ப்பாணத்திலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று மணலாறு (வெலிஓயா) பிரதேசம் ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதையொன்று தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தப் பாதை தூரம் கூடியது. 

அதற்கு மாற்றாகத் தூரம் குறைந்த பாதையாக முல்லைத்தீவு, சிலாவத்தை, உடுப்புக்குளம், அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், புல்மோட்டை, நிலாவெளி ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதை உள்ளது. 

கொக்கிளாய்ப் பாலம் அமைக்கப்பட்டு, அந்தக் கரையோரப் பாதை தார்ப்படுக்கை பாதையாகத் (காப்பெற் பாதை) திருத்தப்படுமாயின் திருகோணமலைக்கான பயணத் தூரம் 40 கிலோ மீற்றரால் குறைக்கப்படும். 

பயண நேரமும் ஒரு மணித்தியாலம் குறையும். வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு எல்லையாகத் திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆகவே முல்லைத்தீவு ஊடான குறுகிய பாதையைப் புனரமைப்புச் செய்வதற்கு அரசியல், நிர்வாகத் தரப்பிலுள்ள உயர்பீடங்கள் உரிய முயற்சியை எடுக்கவேண்டும். 

இதன் மூலமாக மீன்பிடி, விவசாயத்துறைகளில் பெரிதும் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டமும், திருகோணமலை மாவட்டமும் அபிவிருத்தியை நோக்கி மேலும் முன்னேற முடியும்.  

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்புக்கான குறுகிய பாதையாக இந்தப் பாதை அமைவதன் மூலமாக இந்த இரு மாகாணங்களுக்குள்ளும் சனத்தொகை நகர்வுகள் அதிகரிக்க சேவைத் துறைகளும் வளரும். 

வடக்கு மாகாணத்திலிருந்து வடமேல் மாகாணம் ஊடாக மேல் மாகாணம் கொழும்பு செல்வதற்காக இன்னொரு குறுகிய தூரப் பாதையும் உள்ளது. 

மன்னார் முருங்கனிலிருந்து, சிலாபத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, இலவங்குளம் ஊடாக புத்தளம் நகர் வரையான பாதையே அது. 

இப் பாதையைப் புனர் நிர்மாணம் செய்வதன் மூலமாக வடக்கிற்கும் மேல் மாகாணம் கொழும்புக்கும் இடையே குறுகிய தூரப் பயணமொன்று சாத்தியமாகும். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், அது போல வெளி மாவட்டங்களிலிருந்தும் நாளாந்தம் சில ஆயிரம் பேர் பயணம் செய்துவருகின்றனர். 

சனத்தொகை விகிதாசார அடிப்படையில் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் வந்து போகும் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகி உள்ளது.  

ஆகவே யாழ்ப்பாணத்திற்கும் மேல் மாகாணத்திற்குமான குறுகிய தூரப்பாதையொன்று அமைக்கப்படுதல் பொருளாதார, பண்பாட்டு நலன் சார்ந்த ஒன்றாகும்.  

வழமையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு எனப் பயண மார்க்கம் அமைந்து கொள்ளும். 

இது ஏறத்தாழ 400 கிலோ மீற்றர் தூரப்பயணம். 

ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி, முருங்கன் ஊடாக சிலாபத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, இலவங்குளம் ஊடாக புத்தளம் நகர்வரை பயணம் செய்து கொழும்பைச் சென்றடையும்போது 300 கிலோ மீற்றர் பயணம் செய்து கொழும்பை அடையலாம்.  

அதாவது பயணத் தூரம் 100 கிலோமீற்றரால் குறையும். அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததாக சனநெருக்கடி மிக்க நகராக புத்தளம் நகரே இருந்து கொள்ளும்.  

இதனால் வீதிப் போக்குவரத்து நெருக்கடிகளைப் பெருமளவில் சந்திக்காமல் வடக்கிலிருந்து மேற்கு மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யலாம். 

அதிகாலையில் யாழ்ப்பாணம் அல்லது கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒருவர் அல்லது ஒரு வாகனம் ஒரே நாளில் போய் வந்து தமது கருமத்தை ஆற்ற முடியும். 

இரவு தங்கும் தேவையில்லாமல் பயணத்தை மேற்கொள்ளும் நிலை வந்தால் அதிகமானோர் பயணத்தை மேற்கொள்ள முன்வருவார்கள். 

அதிகமான சனத்தொகை நகர நகர நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். 

மன்னார் முருங்கனில் இருந்து புத்தளம் செல்லும் இந்தப் பாதையில் வில்பத்து சரணாலயம் உள்ளது.  

பறவைகள், மிருகங்களுக்கு இடையூறு ஏற்பட்டு இயற்கைச் சமநிலை குழம்பும் என்ற ஒரு காரணத்தால் தான் இந்தப் பாதை பெருந்தெருவாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் காரணமொன்று சூழலியலாளர்களால் கூறப்படுகின்றது. 

ஆனால் மன்னார் நகரிலிருந்தும், புத்தளம் நகரிலிருந்தும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தப் பாதையின் இரு மருங்குமுள்ள 5000 ஏக்கர் வனப் பகுதியை முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமாக அழித்து முஸ்லீம் மக்களைக் குடியேற்ற முற்பட்டதான செய்தி ஒன்றும் உள்ளது. 

வில்பத்து சரணாலயத்தின் சூழலைச் சீர்குலைக்காதவாறு இந்தப் பாதையை தரமான ஒரு பெருந்தெருவாக அபிவிருத்தி செய்ய வேண்டும். 

மேல் மாகாணம் மட்டுமே நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை வழங்குகின்றது. ஏனைய மாகாணங்கள் அந்தளவுக்கு முன்னேறவில்லையென மத்தியவங்கி அறிக்கைகள் மூலமாக அறிய முடிகிறது. 

ஆகவே மேல் மாகாணத்தில் குவிந்துள்ள சனத்தொகையை, சேவைத் துறைகளை ஏனைய மாகாணங்களை நோக்கி நகரவைப்பதன் மூலமாக நாட்டின் அனைத்து மாகாணங்களது வளர்ச்சியையும் துரிதப்படுத்தலாம்.  

வீதி விபத்துகள் குறைவதுடன் நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்தியும் ஏற்பட்டுக்கொள்ளும். 

அதி விரைவுப் பெருந்தெருக்களே அதனை நிறைவு செய்யும். இது போன்ற தூரம் குறைந்த பாதைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் இருக்கும். அவையும் கண்டறியப்படல் வேண்டும்.  

அவை யாவும் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். 

 

https://arangamnews.com/?p=5044

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இது சம்பந்தமான ஆக்கங்கள் அதிகரித்துள்ளது, நல்ல ஒரு திட்டம். நமது அரசியல்வாதிகளும் அரசுக்கு நெருக்கமானவர்களும் இந்த திட்டங்கள் சம்பந்தமாக அரசை கோரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றதொரு மிக முக்கிய திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு ஓரிரு நாட்களின் முன்னர்தான் முன்னாள் சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டார். 

கையெழுத்திட்டிருந்தால் ஆயுதப் போராட்டமும், இலங்கையின் எதிர்காலமும்  வேறு விதமாக நகர்ந்திருக்கும். 

இலங்கை இன்னொரு சிங்கப்பூராகவும் சிங்கப்பூருக்குப் போட்டியாகவும் வளர்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதே போன்றதொரு மிக முக்கிய திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு ஓரிரு நாட்களின் முன்னர்தான் முன்னாள் சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டார். 

கையெழுத்திட்டிருந்தால் ஆயுதப் போராட்டமும், இலங்கையின் எதிர்காலமும்  வேறு விதமாக நகர்ந்திருக்கும். 

இலங்கை இன்னொரு சிங்கப்பூராகவும் சிங்கப்பூருக்குப் போட்டியாகவும் வளர்ந்திருக்கும்.

பகிடிக்கு சொல்கிறீர்களா... சீரியசாக சொல்கிறீர்களா... என்று கண்டு பிடிக்க முடியவில்லை. :)

புத்த பிக்குகளை வைத்துக் கொண்டு.... நடக்கிற காரியமாக, கதையுங்க ராசா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ கரையோரத்தால வடக்கிற்கு வீதி போட போறாங்கள் எண்டு ஆர்வமாய் வாசிச்சால், வழமைபோல ஈழ தமிழ் ஊடகங்களின் பரம்பரை தொழிலான ஆய்வு என்ற பேரில் அதே வாய்வை விட்டிருக்கினம்

1 hour ago, Kapithan said:

இதே போன்றதொரு மிக முக்கிய திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு ஓரிரு நாட்களின் முன்னர்தான் முன்னாள் சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டார். 

கையெழுத்திட்டிருந்தால் ஆயுதப் போராட்டமும், இலங்கையின் எதிர்காலமும்  வேறு விதமாக நகர்ந்திருக்கும். 

இலங்கை இன்னொரு சிங்கப்பூராகவும் சிங்கப்பூருக்குப் போட்டியாகவும் வளர்ந்திருக்கும்.

உண்மை பிரேமதாஸ ரோட்டு போட்டிருந்தால் பிரபாகரன் அப்போதே போராட்டத்தை கைவிட்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பகிடிக்கு சொல்கிறீர்களா... சீரியசாக சொல்கிறீர்களா... என்று கண்டு பிடிக்க முடியவில்லை. :)

புத்த பிக்குகளை வைத்துக் கொண்டு.... நடக்கிற காரியமாக, கதையுங்க ராசா. :grin:

உண்மையாகத்தான் கூறுகிறேன். 

யாழ்களத்திலுள்ள ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம்

அனுராதபுரத்திலிருந்து (மையம்) படையினரை வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பிற்கும், மன்னாரிற்கும் மிக இலகுவாக, சில மணித்தியாலங்களில் ஏற்றி இறக்குவதற்கு வசதியாக இந்தப் பாதை போடப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

உண்மை பிரேமதாஸ ரோட்டு போட்டிருந்தால் பிரபாகரன் அப்போதே போராட்டத்தை கைவிட்டிருப்பார்.

பிரேமதாசவின் திறமையை விளங்கிக்கொண்ட மிக மிகச் சிலரில் விபு களின் தலைமையும் ஒன்று. 

கைவிடுதல்(சுயமாக)/அழித்தல்(பலப் பிரயோகம்) ஆகிய இரண்டு சொற்களிற்கும் இல்லாமற் செய்தல்/ முடிவிற்கு வருதல் என்கின்ற கருத்தும் உண்டு.

(ரஜீவ் காந்தி : இந்தியாவை ஒன்றிணைத்து வழிநடாத்தக்கூடிய வசீகரம் அவரிடம் இருந்தது. இந்தியாவை ஒன்றிணைக்கக்கூடிய வேறு தலைமை அவருக்குப் பின்பு எதுவுமே இருக்கவில்லை.

பிறேமதாச: நாட்டைக் கட்டியெழுப்பும் தூர நோக்கும் தலைமைத்துவப் பண்புகளும் கொண்ட மக்கள் ஆதரவு பெற்ற தலைவர். அவரின் மரணத்தின் பின்னர் அப்படியொரு தலைமைப் பண்பு வேறு எவரிடமும் இருக்கவில்லை) 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

உண்மை பிரேமதாஸ ரோட்டு போட்டிருந்தால் பிரபாகரன் அப்போதே போராட்டத்தை கைவிட்டிருப்பார்.

அதாவது இத்திட்டம் செயற்படுத்த படும் பட்சத்தில் தமிழர்களுக்கு தனி நாட்டுக்கான தேவை இல்லாமல் போய்விடும்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதாவது இத்திட்டம் செயற்படுத்த படும் பட்சத்தில் தமிழர்களுக்கு தனி நாட்டுக்கான தேவை இல்லாமல் போய்விடும்??

விசு,

சிலரின் கருத்துக்களைப் பார்க்கையில் உண்மையில் வருத்தமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.  எங்கள் சிந்தனை எங்கே இருக்கிறது? பிற இனங்களின் சிந்தனை எங்கேயிருக்கிறது ? 

போக்குவரத்துப்பாதைகளின் முக்கியத்துவத்தை இன்னும் பலர் உணராமல் இருப்பது துரதிட்டவசமானது.

மிகச் சாதாரண விளக்கம் ஒன்றைத் தருகிறேன்.

பூனகரி, மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு போன்ற வட மாகாணத்தின் மேற்குக் கரையோரமாக உள்ள அபிவிருத்தி செய்யப்படாத, விலை குறைவான காணிகள் ஏராளமாக உள்ளது எங்கள் எல்லோருக்குமே தெரியும்.  இப்போது இந்தப் பிரதேசங்களுக்கு மிகவும் தரமான வீதிகள் போடப்பட்டால் காணிகளின் விலை உயருமல்லவா ?  அது ஏன் ?காரணம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.  

இப்போது,  

புத்தளத்திலுள்ள முசல்மான் ஒருவர் அல்லது பலர், பூனகரியிலுள்ள விலை குறைவான நிலங்களை நீண்டகால குத்தகைக்கோ (49 வருடங்கள்  -99 வருடங்கள்) அல்லது சொந்தமாக வேண்டியோ முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைந்தால் நிலைமை எவ்வாறு மாற்றமடையும் ?

அவர்கள் தங்கள் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல முசல்மான்களை கூட்டிவருவர். அவர்கள் தொழுகை மேற்கொள்வதற்கு பள்ளிவாயல் கட்டுவர். அவர்களுக்குத்தேவையான கலால் உணவகம் திறப்பர். அதனுடன் கூடிய மளிகைக் கடை உருவாக்கப்படும். அங்கு வேலை செய்வோர் குடியிருக்க குடியிருப்புக்கள் கட்டப்படும். மேலும்......

இப்போது எல்லா வசதியும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அந்த முதலீட்டுத் திட்டத்தில் பணியாற்றுவோர் பூநகரியில் காணி வேண்டி தங்கள் குடும்பங்களை அங்கு கொண்டுவந்து குடியேற்றுவதற்கு தடை ஏதும் இருக்கிறதா ?

உண்மையில் இதுதான் அங்கு நடைபெறுகிறது. 

ஒரு பாதையின் ஆகக் குறைந்த முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தவே இதனைக் கூறினேன். 

 

இந்த விளக்கத்துடன் கீழேயுள்ள திட்டத்தை ஒப்பிட்டுப்பாருங்கள். (நாங்கள் எப்போதுமே இரண்டறக் கலக்க ஆயத்தமாக உள்ள இனம் என்பதை மனதிலிறுத்தி......)

Project 1

இலங்கையின் தென் பகுதியில் (Deep south) பாரிய விசேட முதலீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி அதில் வரும் ஆயிரக் கணக்கான வேலைவாய்ப்புக்களில் வடபகுதி இளவயதினருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதும்

Project 2

அதே போன்று வடபகுதியில் திட்டங்களை ஏற்படுத்தி, சிங்கள இள வயதினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது என்பது.

 இப்படி பல திட்டங்களை ஏற்படுத்த ஆயத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டபோது அந்த அரசாங்கம் மாறிவிட்டது. ஆனாலும் திட்டங்கள் அப்படியேதான் உள்ளன. 

Oxford Uni educated முன்னாள் கடும்போக்கு அமைச்சரின் திட்டம் இது. 

இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வடபகுதி 50,000 இளையோரை தென்பகுதிக்குள் இரண்டறக் கலந்துவிட்டால்..? 

வடபகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டத்தில் தென்பகுதி சிங்கள இளையோரைக் கலந்துவிட்டால்...?

மிகுதி எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு...

 

[நாங்கள் மோட்டுத் தமிழர்

மோட்டுத் தமிழர்களின் குணமே தாங்கள் மட்டுமே புத்திசாலிகள். மற்றவன் எல்லோருமே மோடர் (மூடர்). இந்த நினைப்பு இந்த மோட்டுத் தமிழனை இதற்கப்பால் யோசிக்க/சிந்திக்க விடுவதில்லை.

அதன் விளைவு, இந்த மோட்டுத் தமிழன் தனது சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் தோற்கிறான்.சிங்களமும் முசல்மான்களும் வெற்றிபெறுகின்றனர்.

அவர்களுக்குள்ள பொதுவான எண்ணம், நாங்கள் பலவீனமான நிலையில் இருக்கிறோம், எப்படியும் தப்பிப் பிழைக்க வேண்டும். எனவே கையில் அகப்படும் துரும்பைப் பிடித்தாவது மேலேற முயற்சிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். 

நாங்களோ, எப்போதும் விமரிசனம் செய்தே எங்களவனை கீழே இழுத்து வீழ்த்திவிடுகிறோம். ஆதலினால் முயற்சிகள் வெற்றியளிப்பதில்லை]

 

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்

 

☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.