Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்?
 
காட்சிப்படுத்தலும் அதன் மீதான பேச்சாடலும் விவாதமும் நிகழப்படும் பொழுதுதான் அக்காட்சிப்படுத்தலில் இருக்கும் கருத்தின் மீது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் கருக்கட்டும் என்பதில் நான், நாங்கள் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்காகவே, இந்த முக நூலில் வலிந்து அரசியல் பேச முயற்சிக்கிறோம். ஆனால், தமிழ் மக்களைப்போலவே அங்கிருந்து மேலெழுந்த, உருக்கொண்ட மனிதர்கள், அரசியல் அமைப்புகள் இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய குறைந்த பட்சம் மன எண்ணத்திற்குள்கூட வர முடியாத அரசியல் வரலலாற்றுக்குள் கதாபாத்திரங்களாக, காட்சிகளாக கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பற்றிய எந்தக் கேள்விகளுக்கோ அல்லது மன நெருடல்களுக்கோ விடை தேடமுற்படாத, வரலாறுகளில் இருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்காத தொண்டர்களாகவும், தலைமைகளாகவும் வாரிந்து கட்டிக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.
 
மிக அண்மைக் காலத்தில் 'தினமுரசு" ஆசிரியர் அற்புதன் பற்றிய முகநூல் வாசிப்புக்கொன்றுள் செல்ல நேரிட்டது. அப்பதிவானது அற்புதன் பற்றிப் பேசத் தூண்டியது. அற்புதனைப் பற்றிப் பேசுவதென்பது அவர் மீதான விமர்சனம் மட்டுமல்ல, அன்றைய கால கட்டத்தில் அற்புதன் சார்ந்த அரசியல்க்கட்சி பற்றியும், அதன் தலைமை பற்றியும், அன்றைய இலங்கை அரசியல் பற்றியும் பேசுவதாக அமையும். அற்புதன் பற்றிப் பேசத் தொடங்கும் பொழுது அவரது படுகொலையில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இப்படுகொலை என்கிற புள்ளியை ஒரு நாளில் அற்புதன் வந்தடையவில்லை. அவராகவே நாளொரு மேனியாக, மனமும் அயலுமாக உருமாறி, சாதாரணமான சிந்திக்கும் பகுத்தறியும் மனோநிலையையும் தாண்டி ஏகாந்தமான கனவுப் பாதுகாப்புக்குள் தங்களை நிறுத்திக் கொள்ளும் மனம் தழும்பிய நிலைக்குச் சென்றே இந்நிலைக்குள் வந்து சேர்ந்தார்.
 
'தினமுரசு' பத்திரிகையென்பது இலகுவில் உச்சத்தை ஒரு நாளில் தொட்டதல்ல. ஆரம்ப காலங்களில் அது ஒரு மஞ்சள் பத்திரிகையென்ற பார்வை, வாசகன் கைகளில் கிடைத்தவுடன் சுருட்டி மறைத்துக் கொள்ளும் போக்கே காணப்பட்டது. தமிழீழத்தேசியத்தின் சார்புநிலைக்கு என்றைக்குப் பத்திரிகையின் போக்கு திரும்பியதோ அன்று தொடக்கம் தினமுரசுக்கு ஏறுமுகம்தான். அற்புதனின் கொள்கை நிலைப்பாடும் பேச்சும் போக்கும் அவர் சார்ந்த அமைப்பின் கொள்கைக்கு முரணாக இருந்தது. இது பற்றி பேசத்தலைப்பட்ட சூழல் வேறு திசை நோக்கித் திட்டமிட்டே திருப்பப்படுகிறது.
 
1990 ஆம் ஆண்டு, அற்புதனும் அவர் சார்ந்த அரசியல் அமைப்பும் இலங்கை அரசுடனும், அதன் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுவதனூடாக தம் சொந்த நிலத்தையும் சொந்த குடிமக்களையும் சென்றடைவதென்ற முடிவோடு கொழும்பு நோக்கித் திரும்புகிறார்கள். 1986 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தினால் நிராகரிக்கப்பட்ட தம் நிலங்களில் தம் மக்களுக்கான சுதந்திரமான அரசியலைப் பெற்றிடவே இம்முயற்சியாகும். இங்கு அற்புதனும் அவர் சார்ந்த தலைமை மட்டுமல்ல தமிழீழத்தேசியத்தினால் நிராகரிக்கப்பட்ட தமது உரிமைக்காக இழைக்கப்பட்ட அநீதிக்காக, இறந்த குடும்ப, தோழமைக்காக ஒன்றிணைந்தவர்களும் அடங்குவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு நோக்கி, தீவகம் நோக்கிச் செல்கிறார்கள். தனிமனிதர்களாக அல்ல, பெரும்பாலானோர் தமக்கான குடும்பங்களை தமிழக அகதி முகாம்களில் விட்டு வந்திருந்தனர். இவர்களில் அற்புதனின் அரசியல் அமைப்பில் பல வகை, நிலைப்பிரிவுக்குட்பட்டு பார்க்கக்கூடிய உறுப்பினர்களைக் கொண்டதாக உருவம் கொண்டது. இதனால் ஏறுமுகப் போக்கு கொண்ட அகல, வளர்நிலையில் முரண்நிலையும் சேர்ந்தே வளர்கிறது. இச்சூழல் பற்றி வெவ்வேறு அத்தியாயங்களில் பேசலாம். இந்த அத்தியாயம் அற்புதனாகவே இருக்கட்டும்.
 
இச்சூழலில் ஓர் முக்கியமாக அற்பதனின் அரசியல் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பை வடிவமைத்தவரும், அதனூடாக அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களிடத்தில், பெரும் பகுதி அடிமட்ட உறுப்பினர்கள் அவ்வமைப்பின் இராணுவக் கட்டமைப்புக்காக பயன்படுத்தப்பட்டார்கள்; இச்சூழ்ல்நிலை காரணமும் சேர்ந்து செல்வாக்குமிக்க, தவிர்க்க முடியாத நபராக இன்றுவரைக்கும் பார்க்கப்படும் நபருடன் பேசுகின்ற பொழுது, அற்புதன் பற்றிய, அவர் சார்ந்த முன் அமைப்புக்கும் அற்புதனுக்குமான கருத்தொன்றைப் பகிர்ந்து கொள்கிறார். அற்புதனுடன், இன்னொரு முக்கிய அரசியல் செயல்பாட்டாளர் ஒருவரையும் சேர்த்து அந்த அற்புதனின் பழைய அமைப்பு வெளியேற்றுகிறது. இதில் இந்த அற்புதனின் புதிய தலைமை தலையீடுகிறது. இதன் வளர்ச்சிதான் பிற்பாடு பெரும் முரணாகி புதிய அமைப்புக்குள் வந்து நிற்பதாகக் கூறுகிறார். அத்தோடு அற்புதன் ஓர் நிலையான, மற்றவர்களால் புரிந்திட முடியாத போக்கைக் கொண்ட குழப்பல் மனநிலையைக் கொண்டவரெனக் கூறுகிறார். அற்புதனின் பிற்கால இரண்டை நிலை நடைமுறையென்பது தான் எதிர்பார்த்ததொன்றெனவும், இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லையெனச் சொல்கிறார்.
 
அற்புதனின் அரசியல் அமைப்பின் தலைமை, மனித கெளரவத்திற்கான மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளருடன் களுத்துறை சிறைச்சாலைக்கு தமிழ் அரசியல்க் கைதிகளைப் பார்க்கச் சென்று, தமிழீழத்தேசியம் சார்ந்த அரசியல் கைதியினால் தாக்கப்பட்டச் சம்பவத்தின் பின்னான மூன்று நாள்களின் போக்கு, அற்புதன் போன்ற முக்கிய உறுப்பினர்களின் மனநிலை என்பவற்றை நாம் அலசத் தொடங்கும் பொழுதுதான், ஏன்? குறைந்த பட்சம் அற்புதனை அற்புதனின் அமைப்பும் உறுப்பினர்களும் அற்புதனைக் கொண்டாடுவதற்குத் தயாராக இருக்கவில்லையென்பதை மக்களும், இன்று அவ்வமைப்பில் சர்வதேசம் ரீதியாக பொறுப்புக்களை தாங்களாகவே பிரித்துக் கொண்டு அளந்துவிடும் கதைகளைப் பற்றியும் அற்புதனின் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இருந்து கொண்டு கட்டமைக்க முயலும் தலைமை மீதான விம்பங்கள் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். இச்சூழலை 20 வருட அஞ்ஞானவாசத்தை முடித்துக் கொண்டு வெளியில் எட்டிப் பார்க்கும் பொழுது கதாபாத்திரங்களும் அதற்கான கதைக்களமும் அப்படியே இருக்க, அந்த கதாபாத்திரங்களுக்குரிய நபர்கள் மட்டும் மாறியிருக்கிறார்கள்.
 
'தினமுரசு' பத்திரிகைக்கான மூலதனம் அற்புதனுக்கு, அற்புதனின் கட்சித் தலைமையினால் வழங்கப்படுகிறது. அம்மூலதனம் என்ற புள்ளியில் இருந்தும்தான் தினமுரசு பத்திரிகையின் பத்திரிகா தர்மத்தைப் பற்றி நோக்கப்பட வேண்டும். அற்புதனின் அமைப்பு முழுமையும் அந்தப் பத்திரிகையின் நிலைப்பாடு, போக்கின் கருத்தியலுக்கு எதிர்நிலையில், கொள்கை, மனரீதியாக உடன்படாச் சூழலில், தம் இலக்கொன்றே பிரதானமாகப் பார்க்கப்பட்ட நிலையில் உயிரையும் உறவையும் புறம்தள்ளிய சிந்தனையில், இலச்சியம் என்பதற்கு திசை மாறிப்போன, மறுத்து எதிர்த்து நின்றாடும் சூழலில், அதை வலிந்து நியாயம் படுத்தும் போக்கென்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத புள்ளிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இச்சூழலை அற்புதனின் அமைப்புத் தலைமையானது நீண்ட ஓர் எதிர்காலம் பற்றிய முடிவுக்கு சென்றிருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த இரு எதிர் நிலை மேல்நிலை உறுப்பினர்களோடு பயணப்பட்டிருக்க முடியும். இன்றுவரை அவ்வப்போது அல்லது தொடர்ந்தும் அற்புதன்கள் அவ்வமைப்பில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அவ்வமைப்பில் மேல்நிலை உறுப்பினர்களாகவும், அவ்வமைப்பின் அதன் தலைமையின் போக்கிற்கும் இருப்பிற்கும் எதிரான கருத்து நிலையை தனிநபர் கருத்தாக முன்வைப்பதும், அதை நியாயப்படுத்துவதற்காக சனநாயக விழுமியங்களோடு அவ்வமைப்பு இயங்குவதாக கூறிக்கொள்ளும் காட்சிகளுமாக காணப்படுகிறது.
1993 ஆம் ஆண்டு கடைசிக் காலப்பகுதியில் அற்புதனின் அரசியல் அமைப்பின் தீவகப் பகுதியில் இருந்தும் 'பாதை' என்ற தலைப்பிலான மாதாந்திரச் சஞ்சிகை வெளிவந்தது. இச்சஞ்சிகை அச்சுப்பிரதிக்காக கொழும்புக்கு டம்மி பிரதி அனுப்பி வைக்கப்படுவதுண்டு. இச்சஞ்சிகையில் கேள்வி பதில் என்ற பக்கம் 'பாதையார்' என்ற தலைப்பில் உண்டு. அந்தப் பாதையார் பகுதியில்கூட ஒரு கேள்விக்கு, 'தினமுரசு தீவுப் பகுதியில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?' என்ற பாதை வாசகனின் வினாவுக்கு, பாதை ஆசிரியர், "அரசியல் விமர்சனங்களோடு பல்சுவை அம்சங்களும் இடம் பெறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் எதற்குள்ளும் அடியோடிய ஒரு சமூக நோக்கு வேண்டும். சமூக வளர்ச்சிக்கு உதவாத அம்சங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை" என்று தினமுரசு பற்றிப் பதில் அளித்திருப்பார். இது பின்னாடி, 'பாதை' சஞ்சிகை அச்சில் இருந்து வெளிவந்த பிறகு இக்கேள்வி பதிலுக்கான விமர்சனம் அற்புதனால் தீவக தலைமை மீது முன் வைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சி எப்படி உள் முறுகலாக, அமைப்புக்குள் பொதுப்படுத்தப்பட்டதாக உரு மாறுவதையும் பின்னாடி பேசிக் கொள்வோம். இப்பாதை சஞ்சிகை அச்சுக்காக கொழும்பு செல்கிறது. அதிலுள்ள விடயங்கள் அச்சேறுவதற்கு முன்பே இதைப் பற்றிய கருத்தாடலுக்குள் அற்புதனால் அல்லது அற்புதனின் தலைமையினால் வந்திருக்க முடியும். இங்கு நாம் கண்டுணர வேண்டியதொன்றாகிறது, இவ்விடயம் பேசப்படுவதற்கு முன்பே அற்புதனின் அமைப்புக்குள் முரண்பாடு ஏற்பட்டிருப்பதையே இப்பாதை விமர்சனச் சூழல் வலியுறுத்தி நிற்கிறது. பாதை ஆசிரியருடன் இவ்விடயம் பற்றி பேசிய பொழுது, இக்கருத்தின் அடிப்படையில் 'பாதை' சஞ்சிகையும், அதன் ஆக்கங்கள் பற்றியும் நீண்ட பல படிநிலை விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும், அதனால் உருவான சங்கடங்களை களைவதற்காக பாதையை நிறுத்துவதென்ற முடிவுக்காக தான் வந்ததாகவும் என்று அன்றைய சூழலை, துரியோதனின் அவைதனில் துச்சாதனனால் துகிலுரிய முற்பட்ட திரெளபதி மனநிலை ஒத்தே தான் இருந்ததாகவும், கண்ணனாக, கை கொடுப்பனாக எதிர்பார்த்த யாரும் வராமல் போன கதையை முதல்மரியாதை சிவாஜி கணேசன் கணக்காய் எதிர்பாட்டுக்கு ஆள் இல்லாமல் தவித்தார்.
 
தினமுரசும் சர்வதேச அளவில் வெள்ளிக்கிழமையின் விடியலை தமிழ் மக்கள் மனங்களில் எதிர்பார்ப்போடு புலர்வதற்கான கணதியை ஏற்படுத்தியிருந்தது. சம கணத்தில் தமிழீழத்தேசியத்தின் இலங்கை இராணுவத்துக்கு எதிரான தாக்குதலுக்கு பின்னான வெள்ளிக்கிழமைக்கு பெரும் எதிர்பார்ப்பை அற்புதனின் தாக்குதல்கள் பற்றிய கட்டுரைகள் தமிழ் வாசகர் பரப்பில், தமிழீழத்தேசிய அரசியல் பரப்பிலும் ஏற்படுத்தியிருந்ததெனலாம். இச்சூழலில் ஆனையிறவுத் தாக்குதல் முடிந்து விடிந்த வெள்ளியில் வந்த தினமுரசில் வந்த அற்புதனின் கட்டுரையை வாசித்த வாசகர்கள் அனைவர்க்கும் தம் மனங்களில் ஆனையிறவுத் தாக்குதலை காணொளியாக, அச்சொட்டாக துப்பாக்கிகள் ரவைகளை துப்புவதையும், இராணுவ வீரர்கள் பின்வாங்கிச் செல்லுவதையும் கள நிலவரத்தை இருளின் கடுமைக்குடாக வடித்திருப்பார். வாசகனை ஆங்கிலப்படம் பார்த்த மனநிலைக்கு கொண்டு சென்று சொல்ல முடியா மனவெழுச்சிக்குள் கட்டிப்போட்டதோடு, ஒரு வாசகனைக் கடந்து, தமிழீழத்தேசிய மக்களைத் தாண்டி, தமிழ் மாற்றுக் கருத்தாளர்களையும், தமிழ் ஆங்கிலப்பட ரசிகர்களையும் தினமுரசுக்காக காக்க வைத்த அற்புதனின் எழுத்து வல்லமையை மெச்சித்தான் ஆக வேண்டும். இந்த ஆனையிறவுத் தாக்குதலை தினமுரசில் வந்த அற்புதனின் கட்டுரையை வைத்தே தமிழீழத்தேசியத்தின் தலைமை ஆனையிறவுத் தாக்குதலின் பின்னான கூட்டமர்வில் களநிலமையை புரிந்து கொண்டதைச் சொன்னதாக கதையொன்று என் காதுக்கூடாக வந்து வெளியேறியது. இந்த ஆனையிறவுத் தாக்குதலுக்குப் பின் வந்த வெள்ளிக்கிழமை நான் வெள்ளவத்தையில் லீலா கொம்பினிக்கேசனுக்கு முன்னாடி நின்றிருந்த பொழுது, தமிழ் வயதான, கூனல் விழுந்த ஆச்சி தினமுரசைக் கையில் பிடித்தபடியே விறாப்போடு, திமிரோடு தமிழ்க்கிழவியாய் நடந்த போனது ஓர் உண்மையை உரத்துச் சொன்னதாக, மஞ்சள் பத்திரிகையென வார்த்தையை வீசியெறிந்த காட்சி போய், இதுதான் தமிழன் வீரம், தமிழன் பாசறையை, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும் என்ற குருதி மரபைச் சொல்லும் பத்திரிகையென காட்சிப்படுத்தியது. காகிதத்தால் யுத்தச் சூழலை கட்டியமைக்க, சிங்களத் தேசம் முழுவதும் கொதிநிலைக்குத் தூக்கி நிறுத்தியதுமல்லாமல் சிங்கள ஆட்சியாளர்களின் நெருக்குவாரத்துக்குள் அற்புதனின் அமைப்பும், அதன் தலைமையும் வந்து நிற்கிறது. அற்புதனும் பாராளுமன்றத்திற்கான உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார். இங்குதான் அரசியல் சதுரங்கப் பலகையில் காய்கள் இடமாறி, நிற மாறி விட்டதாக சந்தேகம் கிளம்புகிறது. காலம் அடுத்த கதையொன்றைச் சொல்லத் தயாராகியது.
May 29, 2021
 
192835777_1212543172549323_6638092832492
  • கருத்துக்கள உறவுகள்

1. தினமுரசு வெளிவந்தது வியாழக்கிழமையில் என நினைக்கிறேன்.

2. அற்புதன் ஒரு முரண்பாட்டு மூட்டை என்பதை வாசகர்கள் எல்லோரும் உய்தறிய கூடியதாக இருந்தது. அவரது எழுத்துக்கும் அவர் இயக்க கொள்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

3. ஆனாலும் இப்போ யாழில் அதிகம் சொல்லப்படும் “கருத்தை பாருங்கள், கருத்தாளரை பாராதீர்கள்” என்பதை அநேக தமிழ் வாசகர்கள் அன்றே கடைபிடித்தமைதான் தினமுரசை வெல்ல வைத்தது.

4. 95-2001 வரை தினமுரசுக்கு இருந்த வாசகர் வட்டம் போல் முன்பும், இனியும் இருக்குமா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் வட கிழக்கில் அது தடை செய்யபட்டிருந்தது.

5. தினமுரசு வாங்குவதால் ஈ.பி.டி.பி சந்தாதாரர் என என்னை வீட்டில் திட்டுவார்கள். ஆனாலும் ஒருவர் மிச்சம் விடாமல் படித்து முடித்து விட்டு அடுத்த கிழமைக்கு காத்திருப்பார்கள் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

1. தினமுரசு வெளிவந்தது வியாழக்கிழமையில் என நினைக்கிறேன்.

2. அற்புதன் ஒரு முரண்பாட்டு மூட்டை என்பதை வாசகர்கள் எல்லோரும் உய்தறிய கூடியதாக இருந்தது. அவரது எழுத்துக்கும் அவர் இயக்க கொள்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

3. ஆனாலும் இப்போ யாழில் அதிகம் சொல்லப்படும் “கருத்தை பாருங்கள், கருத்தாளரை பாராதீர்கள்” என்பதை அநேக தமிழ் வாசகர்கள் அன்றே கடைபிடித்தமைதான் தினமுரசை வெல்ல வைத்தது.

4. 95-2001 வரை தினமுரசுக்கு இருந்த வாசகர் வட்டம் போல் முன்பும், இனியும் இருக்குமா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் வட கிழக்கில் அது தடை செய்யபட்டிருந்தது.

5. தினமுரசு வாங்குவதால் ஈ.பி.டி.பி சந்தாதாரர் என என்னை வீட்டில் திட்டுவார்கள். ஆனாலும் ஒருவர் மிச்சம் விடாமல் படித்து முடித்து விட்டு அடுத்த கிழமைக்கு காத்திருப்பார்கள் 🤣.

 

பிரான்சில் தினமுரசு தடை செய்யப்பட்டிருந்தது

அதையும் மீறி விநியோகம் செய்தவன் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பி தான்

கன  காலத்தின் பின் அவனைக்கண்டபோது 

அதிகம்  உடம்பு வீங்கியிருந்தான்

என்னடா  ஆச்சு என்று  கேட்டதற்கு 

அண்ணா உங்கட  ஆக்கள் நல்லதும் செய்வார்கள் கெட்டதும் செய்வார்கள்

எனக்கு அவர்கள் தந்த  நல்லது?  இந்த  வீக்கம்  என்றான் சிரித்தபடி...😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

பிரான்சில் தினமுரசு தடை செய்யப்பட்டிருந்தது

அதையும் மீறி விநியோகம் செய்தவன் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பி தான்

கன  காலத்தின் பின் அவனைக்கண்டபோது 

அதிகம்  உடம்பு வீங்கியிருந்தான்

என்னடா  ஆச்சு என்று  கேட்டதற்கு 

அண்ணா உங்கட  ஆக்கள் நல்லதும் செய்வார்கள் கெட்டதும் செய்வார்கள்

எனக்கு அவர்கள் தந்த  நல்லது?  இந்த  வீக்கம்  என்றான் சிரித்தபடி...😂

🤣🤣🤣 

தினமுரசு பத்திரிகை எழுதியது போல் போரட்டத்தின் நியாயத்தை, புலிகளின் தீரத்தை போற்றிய பத்திரிகையை (புலிகளின் வெளியீடுகளுக்கு அப்பால்) நான் கண்டதில்லை.

இன்றுவரை நான் யோசிப்பது

1. தமிழ் தேசியம்தான் விலை கோரல் உள்ள பொருள் என அறிந்து இலாபத்தை மட்டும் கருதி இப்படி எழுதினார்களா?

பேப்பர் விற்றாலும், தமிழ் தேசியத்தை வளர்த்தல் தமது முதலுக்கே ஆபத்து என்பதை அவர்கள் அறியவில்லையா?

2. புலிகள் இதை ஏன் தடை செய்தார்கள்? இதனால் ஈ பி டி பிக்கு கணிசமான பணம் போனாலும், அதில் சொல்லபட்ட விடயங்கள் புலிகளின் வேலையை மிக இலகுவாக்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣🤣🤣 

தினமுரசு பத்திரிகை எழுதியது போல் போரட்டத்தின் நியாயத்தை, புலிகளின் தீரத்தை போற்றிய பத்திரிகையை (புலிகளின் வெளியீடுகளுக்கு அப்பால்) நான் கண்டதில்லை.

இன்றுவரை நான் யோசிப்பது

1. தமிழ் தேசியம்தான் விலை கோரல் உள்ள பொருள் என அறிந்து இலாபத்தை மட்டும் கருதி இப்படி எழுதினார்களா?

பேப்பர் விற்றாலும், தமிழ் தேசியத்தை வளர்த்தல் தமது முதலுக்கே ஆபத்து என்பதை அவர்கள் அறியவில்லையா?

2. புலிகள் இதை ஏன் தடை செய்தார்கள்? இதனால் ஈ பி டி பிக்கு கணிசமான பணம் போனாலும், அதில் சொல்லபட்ட விடயங்கள் புலிகளின் வேலையை மிக இலகுவாக்கி இருக்கும்.

1- நீங்கள் சொல்வது சரி

2 - புலிகளின் தூர பார்வை. எந்த நேரத்திலும் கவிட்டு விடுவார்கள் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

1- நீங்கள் சொல்வது சரி

2 - புலிகளின் தூர பார்வை. எந்த நேரத்திலும் கவிட்டு விடுவார்கள் என்று 

2. நானும் இப்படி யோசிப்பதுண்டு. ஆனால் இதை ஓமந்தையில் ஒரு நாள் வைத்திருந்து செக் பண்ணி உள்ளே விடுவதன் மூலம் சாதித்து இருக்கலாம். மற்றது போக்கு மாறுகிறது என்றால் அடுத்த கிழமையில் இருந்து முழுத்தடை போட்டிருக்கலாம்.

 என்னை பொருத்தவரை இரெண்டு பகுதியும் தூர நோக்கில் பார்க்கவில்லை.  என்றே நினைக்கிறேன்.

ஒரு பகுதிக்கு நீண்ட பிரதிகூலத்தை விட லாபம் முக்கியம்.

மற்றையவர்களுக்கு நீண்ட அனுகூலத்தை விட கொள்கை முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2. நானும் இப்படி யோசிப்பதுண்டு. ஆனால் இதை ஓமந்தையில் ஒரு நாள் வைத்திருந்து செக் பண்ணி உள்ளே விடுவதன் மூலம் சாதித்து இருக்கலாம். மற்றது போக்கு மாறுகிறது என்றால் அடுத்த கிழமையில் இருந்து முழுத்தடை போட்டிருக்கலாம்.

இல்லை பத்திரிகைகளை மக்கள் நம்ப தொடங்கி வாசிக்க பழகிவிட்டால் பின்னர் அவர்களை மாற்றுவது சமாதானப்படுத்துவது கடினம் தாமதமாகும்

Edited by விசுகு

  • 2 weeks later...
On 29/5/2021 at 18:18, விசுகு said:

இல்லை பத்திரிகைகளை மக்கள் நம்ப தொடங்கி வாசிக்க பழகிவிட்டால் பின்னர் அவர்களை மாற்றுவது சமாதானப்படுத்துவது கடினம் தாமதமாகும்

தினமுரசு பத்திரிகையை படித்து தான் தமிழ் வாசிக்க கற்று கொண்ட நான்(8வயதில்) ஊகித்த விடயம் தாக்கத்தை ஏற்படுத்தா விடயங்களை புலிகள் செய்தாலும்  ஒட்டுகுழுக்கள் செய்ததாக நிறுவி புலிகளை நல்லவர்களாக்கி சர்வதேச அரங்கில் பிரச்சனை வர கூடிய விடயங்களை ஓட்டு குழு செய்தாலும்  மற்ற சம்பவங்களின் சூத்திரதாரி ஒட்டு குழு தான் ஆனால் இதை புலிகள் தான் செய்தார்கள்  என்று நம்ப வைத்து கழுத்தை அறுத்த அற்புதனின் எழுத்தால் தான் அதனை புலிகள் தூர வைத்தார்கள் என்றாலும் தினமுரசில் வரும் இலக்கிய நயத்துக்கு இன்று வரை நான் அடிமை

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை பாராளுமன்றில் பயங்கரவாத தடை சட்டத்துக்கு ஆதரவாக கைதூக்கியவர் 

எத்தனையோ அப்பாவி தமிழ் இளைஞர்கள் காணமால் போகவும் 
கேள்வி இன்றி தடுப்பில் வைக்கவும் அதுவே காரணம் 

ஒரு இக்கட்டான சூழலில் புலிகள் இவரின் உதவியை நாடி 
தமது இலக்கை அடித்து சிங்கள மொத்த நேவிக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2021 at 00:37, goshan_che said:

4. 95-2001 வரை தினமுரசுக்கு இருந்த வாசகர் வட்டம் போல் முன்பும், இனியும் இருக்குமா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் வட கிழக்கில் அது தடை செய்யபட்டிருந்தது.

2005-2007 இலேயே மொத்த வாசக கூட்டமும் காலியாகி, கருணாக்குழு மட்டுநகர் முழுவதும் சைக்கிள் /மோட்டார்சைக்கிளில் பயணிப்பவர்களை நிறுத்தி கையில் தின முரசை வலுக்கட்டாயமாக திணித்து 29 ரூபாவை பிடுங்கியதும், பணத்தை இழந்தவர்கள் ஆற்றாமையில் பத்திரிகையை திறந்து கூட பார்க்காது சற்று தள்ளிவந்து கிழித்து போட்டுவிட்டு சென்றதும்  இப்போதும் மனக்கண் முன்னாள் வந்து போகிறது, ஒருகாலத்தில் வீட்டிற்கு தெரியாமல் ஒழித்துக்கொண்டு  கண்ணீரில் கரைந்த இரவுகளை வாசிக்க வைத்த பத்திரிகைக்கு இந்த நிலைமையா எனபதை அன்றே நினைத்து வருந்திய காலம் அது       

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

2005-2007 இலேயே மொத்த வாசக கூட்டமும் காலியாகி, கருணாக்குழு மட்டுநகர் முழுவதும் சைக்கிள் /மோட்டார்சைக்கிளில் பயணிப்பவர்களை நிறுத்தி கையில் தின முரசை வலுக்கட்டாயமாக திணித்து 29 ரூபாவை பிடுங்கியதும், பணத்தை இழந்தவர்கள் ஆற்றாமையில் பத்திரிகையை திறந்து கூட பார்க்காது சற்று தள்ளிவந்து கிழித்து போட்டுவிட்டு சென்றதும்  இப்போதும் மனக்கண் முன்னாள் வந்து போகிறது, ஒருகாலத்தில் வீட்டிற்கு தெரியாமல் ஒழித்துக்கொண்டு  கண்ணீரில் கரைந்த இரவுகளை வாசிக்க வைத்த பத்திரிகைக்கு இந்த நிலைமையா எனபதை அன்றே நினைத்து வருந்திய காலம் அது       

தினமுரசுக்கு நேர்ந்த கதியை பார்க்கும் போதுதான் விகடன், குமுதம்,  (ஓரளவுக்கு) உதயனின் நீடித்து நிற்கும் சாதனை வியப்பை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

தினமுரசுக்கு நேர்ந்த கதியை பார்க்கும் போதுதான் விகடன், குமுதம்,  (ஓரளவுக்கு) உதயனின் நீடித்து நிற்கும் சாதனை வியப்பை தருகிறது.

அங்கே இருக்கிறது உண்மை

புலிகள்  இல்லையென்றால்?????

புலிகள்  எதிரிக்கும்  துரோகிக்கும்  கூட  சோறு  போட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

அங்கே இருக்கிறது உண்மை

புலிகள்  இல்லையென்றால்?????

புலிகள்  எதிரிக்கும்  துரோகிக்கும்  கூட  சோறு  போட்டார்கள்

நீங்கள் சொல்வது சரி. ஆனால் தினமுரசு விடயத்தில் அவர்கள் தேசியம் சார்ந்து எழுதுவதை நிறுத்தியதுமே பத்திரிகை படுத்து விட்டது.

புலிகள் இருக்கும் போதே படுத்துவிட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.