Jump to content

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
34 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நன்னிச்சோழன்! நீங்கள் இங்கே அரிய படங்களை பதிவிட ஆரம்பித்ததும் டிவிட்டர்,பேஸ்புக் எல்லாம்  ஈழ வரலாறும் படங்களும் களைகட்டுது.

உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும் வாழ்த்துக்களுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடருங்கள் 👍🏽

 

அப்படியா.. பேரானந்தம்.
 
மிக்க மகிழ்ச்சி அண்ணை... 

  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகோதரர் நன்னிச் சோழன் .. உங்களின் இந்த பெரும் பணிக்கு உதவியாக ஏதாவது பொருளாதார உதவி தேவை என்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள், என்னால் முடிந்ததை செய்வேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
13 hours ago, Sasi_varnam said:

சகோதரர் நன்னிச் சோழன் .. உங்களின் இந்த பெரும் பணிக்கு உதவியாக ஏதாவது பொருளாதார உதவி தேவை என்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள், என்னால் முடிந்ததை செய்வேன். 🙏

 

அண்ணை, இப்போதைக்கு  அதுவெல்லாம் வேண்டாம் அண்ணை.

நீங்கள் உதவி செய்ய விரும்பினால்.. ஒன்றே ஒன்று செய்யுங்கள். 

நான் இங்கே பதிவிடுபவற்றை(நிகழ்படம் & நிழற்படங்கள்) எடுத்து நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்... அது காணும் எனக்கு... 
 இவையெல்லாம் நான் ஒரு காலத்தில் சேமித்தவை... நீங்கள் இன்று சேமித்து வைத்துக் கொண்டால் நாளை எனது கணக்கு இல்லாமல் போனாலும் நீங்கள் யாரேனும் இவற்றை வெளியுலகிற்கு கொண்டு செல்லலாம்...

உலகில் எதுவும் நிரந்தரமல்ல... ஆதலால் இதுவே நான் உங்களிடம் வேண்டுவது, உறவே. இதை மட்டும் செய்து விடுங்கள்.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எல்லாவற்றையும் இணைத்தனான், இதை மறந்தே போனேன்... 


 

இவை வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள் தமிழீழத்  தமிழர்களுக்காக எழுதிய கடிதத்தின் பக்கங்கள்

 

rooban_letter_01.jpg

 

rooban_letter_page_02.jpg

 

rooban_letter_page_03.jpg

 

rooban_letter_page_04.jpg

 

rooban_letter_page_05.jpg

 

rooban_letter_page_06.jpg

 

rooban_letter_page_07.jpg

 

rooban_letter_page_08.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இவை வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள் தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்காக எழுதிய கடிதத்தின் பக்கங்கள்

 

tn_diaspora_letter_01.jpg

 

tn_diaspora_letter_02.jpg

 

 

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மார்ச் 26, 2007 அன்று வான்புலிகள் நடாத்திய குண்டு வீச்சிற்குப் பின்னர் கிளிநொச்சியில்

 

இந்த பொத்தகசாலை, ஏ 9 வீதியில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு கொஞ்சம் முன்னதாக அமைந்திருந்தது. 

 

நேரம்: காலை ஒரு பத்து மணி இருக்கும்... நல்ல ஞாபகம்

 

 

"வேர்த்து வேர்த்து ஒழுக நாங்கள் வெடிகள் கொளுத்தனும் - அது 
கோத்தபாய குடும்பம் வாழும் தெருவில் கேட்கணும்"🤣🤣

 

 

546282_108667812605230_343307733_n.jpg

 

26_03_07_vanni_people_02.jpg

 

26_03_07_vanni_people_01.jpg

 

 

 

 

 

 

அன்று வெளியான ஈழநாதம்:

 

இந்த நாளேட்டினை வாங்கத்தான் மேலே இவ்வளவு கூட்டம்... வாங்கினது மட்டுமல்ல... கொஞ்சப்பேர் செய்தியைப் பார்த்து ஆடி மகிழ்ந்தவங்கள் என்பதுதான் இஞ்ச சிறப்புக்கூறு!

 

(இதில் உள்ள கவிதைதான் வான்புலிகளுக்கென வந்த முதலாவது கவிதை!)

 

27_03_07_eelanatham_03.jpg

 

27_03_07_eelanatham_04.jpg

 

 

 

குறிப்பு: மேலுள்ள ஈழநாதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'உலங்கு வானூர்தி சேதம்' என்ற செய்திக்கான ஆதாரத்தினை அடுத்த மறுமொழிப் பெட்டியில் காண்க

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மார்ச் 26, 2007 அன்று கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது வான்புலிகள் வீசிய வான்குண்டில்  '5 உலங்குவானூர்திகள்  ' மற்றும் இசுரேலிய 'கிபிர்' ஒன்று ஆகியவை  சேதம் 💪😍 

 

About the TAF attack on Kattunaayakkaa on march 26, 2007.jpg

 

TAF air attack on Sri Lankan Air base on March 26, 2007-  First Attack.png

 

 

இவை மட்டுமின்றி, சன்டே ரைம்ஸின் (https://www.sundaytimes.lk/070401/Columns/sitreport.html) செய்தியின் படி 5 உலங்குவானூர்திகள் சேதமாகி திருத்தப்பட்டனவாம்.

"The destruction left behind became clear. Three bombs had exploded at the zinc sheet covered building that housed the Aeronautical Engineering Wing. The roof and the walls had crumbled. Nearby, airmen, all members of the Air and Sea Rescue team, were sleeping. They were on call any time of the day or night when there is an emergency rescue mission. Three died and 16 were injured. Air Force officials said helicopters in the adjoining Four Squadron suffered slight damage. The shattering effect of the bombs had led to glass windows breaking. At least five such helicopters were later repaired."

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அநுராதபுரத்தில்வான்புலிகளின் வான்குண்டு வீச்சில் சிங்கள வான்படையின் 'எம்.ஐ.-24' உலங்குவானூர்திகள் இரண்டு சேதம்  💪😍

 

LTTE Anuradhapura air attack.png

 

LTTE Anuradhapura air attack 2.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னாரில் வான்புலிகளின் வான் குண்டு வீச்சில் சிங்கள வான்படையின் 'ஒரு எம்.ஐ.-24  & ஒரு பெல்' என இரண்டு உலங்குவானூர்திகள் சேதம் 💪😍

 

Tamil Eelam Air Force(Sky Tigers) bombing on SL Air Force.png

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

29, ஏப்ரல் 2007

 கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எண்ணெய்க் குதங்கள் மீதான வான்புலிகளின் குண்டுவீச்சு

 

 

இத்தாக்குதல் குறித்து தவிபுவின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்கள் தெரிவிக்கையில், படைத்தரப்பிற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்தவித தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லையெனவும், ஆனால் இரு இடங்களில் இருந்தும் நெருப்பெழுந்ததை தம் வானோடிகள் கண்டதாகவும் செவ்வி வெளியிட்டிருந்தார்.

 

oiltank_01 Gas and Oil storage tanks in Keravelapitiya in Wattela, 10 km north of Colombo were hit, and three oil tanks are on fire, Wattela residents said..jpg

'பெற்றோல் மற்றும் எண்ணெய்க் குதங்கள் இருந்த வத்தளையின் கெரவலப்பிட்டிய என்ற இடத்தில் வான்புலிகள் வீசிய குண்டில் எண்ணெய்க் குதம் ஒன்றிற்கு அருகில் நெருப்பெரிவதைக் காண்க... இக்குதங்களிற்கு அருகில் வசித்த மக்கள் வழங்கிய செய்திகளின் அடிப்படையில் இங்கிருந்த மூன்று எண்ணெய்க் குதங்கள் தீப்பிடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது, தமிழ்நெற்.| படிமப்புரவு: Tamilnet.com (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020)'

 

 

ஆனால் சிங்களமோ முத்துராஜவெலவில் "ஒரு வான்குண்டு வெடித்ததில் தீயணைப்பு ஏந்தனத்திற்கு சிறிய சேதம் எனவும், மற்றொரு வான்குண்டு வெடித்ததில் நீர் வழங்கல் முறைமைக்கு சிறிய சேதம். மொத்தமாக குறைந்தளவு சேதம்" என மட்டும் தகவல் வெளியிட்டது.(https://www.hindustantimes.com/world/ltte-aircraft-bomb-oil-installations-in-colombo-but-damage-minor-says-govt/story-0HoKXd8qvvkRa3G6zAtGeM.html)

ஆனால் சிங்களத்தின் அறிவிக்கப்படாத படைய எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் மூன்று வீரர்கள் உட்பட ஐந்துபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், காயங்களுக்கு காரணம் தரையில் ஏற்ப்பட்ட தீயே எனவும் கூறியிருந்தார்.(https://www.hindustantimes.com/world/ltte-aircraft-bomb-oil-installations-in-colombo-but-damage-minor-says-govt/story-0HoKXd8qvvkRa3G6zAtGeM.html)

 

மொத்தத்தில் உண்மையான சேத விரிப்புகளை சிங்களம் வெளியிடவில்லை, வழக்கம் போல!

 

 

அதேநேரம் செல் நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது "எங்கள் தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய சேதம் ஏற்பட்டது, பொருட்களை மற்றிட எங்களுக்கு 75 மில்லியன் உரூபாய்க்கும் ( 700,000 டொலர்) அதிகமாக செலவாகும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்."

ஆத்தீ... ஒரு சின்ன நெருப்பில எவ்வளவு ஆட்டம் ஆடிட்டங்கள்...😍

 

 

LTTE Sky Tigers attack on oil facilities in Colombo - Lanka business online.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • வான்புலிகளின் முதலாவது இயக்கப் பாடல்: 'வான்படை எழுந்து'

இது 'வானுயரும் புலிவீரம்' என்ற இறுவெட்டில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் ஆகும்.

 

இப்பாடல் கொண்ட இறுவெட்டு 1998 ஆம் ஆண்டில் வான்புலிகளின் இலகு கீழிதை(Light Glider) ஒன்று மாவீரர் துயிலுமில்லத்தின் மேல் பறந்து பூத்தூவியதை அடுத்து சில மாதங்கள் கழித்து வெளியாகி இருக்கலாம் என எண்ணுகிறேன்.

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இப்படத்தில் இருப்பவை வான்புலிகளின் வானூர்திகள் என்று சிங்கள ஆதரவு வலைத்தளத்தில் (http://www.srilankaguardian.org/2007/10/two-mi-24s-damaged-in-ltte-air-attack.html) அக்காலத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதில் இருப்பவை சியா மாசெட்டி எஸ்.எஃவ் - 260 ஆகும்.

எனவே, இவை புலிகளின் வானூர்திகள் 'இல்லை' என்பதாகும்.

 

main-qimg-c36c8e1065a0a4bbcf067f1a9ed4a954.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான விடுதலைப் புலிகள் மீதும் அதன் மக்கள் மீதும் குண்டுவீச சிங்கள வானோடிகளோடு தொடக்க காலத்திலிருந்து பங்குபெற்றியவர்கள் உக்ரேனிய கூலிப்படை வானோடிகள் ஆவர். இவர்களோடு நான்காம் ஈழப்போரில் பாக்கிசுத்தான் வானோடிகளும் இந்திய வானோடிகளும் பங்கு பெற்றியிருந்தனர். பங்கு பெற்றியமைக்கான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (இந்தியனும் ஓட்டினவன். இந்தியன் ஓட்டினதுக்கான வெளிநாட்டு ஆதாரங்கள் எம்மிடம் இல்லை. ஆனால் இவனது வானோடிகள் எம்மக்கள் மீது குண்டு வீசுவதற்கு குண்டுதாரிகளை ஓட்டியமை உண்மையே. வடபோர்முனை முன்னரங்க நிலைகளை உளவு பார்க்க அவ்வப்போது இவனது வண்டுகள் வந்து செல்வது வழமையான ஒன்றாகும்).

 நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், உலகில் உறுப்பாக்கப்பட்ட நாடாக சிறீலங்கா இருந்தும் உருப்படியான வானோடிகள் இல்லதலால் பிற நாடுகளின் வானோடிகளை பெற்றும், கூலிக்கு அமர்த்தியும் குண்டுவீசியது சிங்களம். ஆனால் எமது தமிழீழ வான்படையானது குண்டு வீசுவதற்கு தனது சொந்த வானோடிகளையே பயன்படுத்தியது கவனிக்கத் தக்கதாகும்.

 

  • உக்ரேனிய கூலிப்படை வானோடிகள்:

Ukreninan mercenery pilots for SLAF.jpg

 

  • பாக்கிசுத்தான் வானோடிகள்:

Pakistan pilots in Sri Lankan SLAF.png

Pakistan pilots in Sri Lankan SLAF 2.png

 

 

https://www.business-standard.com/article/economy-policy/pakistan-played-major-role-in-ltte-defeat-sources-109052800127_1.html

Pakistan pilots in Sri Lankan SLAF 3.jpg

 

 

  • இந்திய வானோடிகள்:

ஓராண்டிற்கு முன்னர் நான் சேகரப்படுத்தி எடுத்து வைத்த செய்தி இது: 

வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் 
[புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி]

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.

சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது.

இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை.

மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு.

இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்புலி வானோடியும்
முதல் வான்கரும்புலிகளில் ஒருவருமான 
கேணல் ரூபன் 

 

 

"ஏழிரண்டு வயதினிலே களம் புகுந்தவன் - ரூபன் 
ஈழமண்ணின் விடுதலைக்கு உயிர்கொடுத்தவன்!"

 

 

  • குறிப்பு: இவருடைய புயத்தில் இருக்கும் வில்லையானது(Badge) தரைக்கரும்புலியின் வில்லையாகும்; வான்கரும்புலிகளினது அன்று.

 

Sky Black Tiger pilot Col. Ruuban.png

 

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்கரும்புலி வானோடிகளான கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன்

 

 

"வானோடி எங்கள் கரும்புலி ரூபன் போராடி வென்றிடப் போனான் - கொடும்
சிங்களப் பேய்களை சிதைத்துமே அவனுடன் சிரித்திரன் சரித்திரமானான்!"

 

 

Sky Black Tiger Pilot Colonel Ruupan, Sky Black Tiger Pilot Lt. Colonel Siriththiran.jpg

'படிமப்புரவு(Img. Court.) : எரிமலை, பெப்ரவரி 2009'

 

Edited by நன்னிச் சோழன்
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ நடைமுறையரச வான்படையின் பறவாடியிலிருந்து(Hanger) வெளியே இழுத்துவரப்படும் வான்புலிகளின் செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரி வானூர்தியான சிலின் சி 143

 

 

"பல தடவை எதிரிப்படை கலங்கடித்தவன் - எங்கள்
தலைவனுக்கு சிரித்திரனே செயல்நடத்துனன்!"

 

 

 

பின்னால் தெரியும் அந்த கட்டிடமே பறவாடி ஆகும். அது எப்படி கரவும்படியாக உருமறைக்கப்பட்டிருக்கிறது என்பதை உற்றுநோக்கவும். அந்த பறவாடியின் வெளிப்புறச் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அதன் உருமறைப்பை இன்னும் கடினப்படுத்துகிறது.

 

LTTE Skytigers improvised bomber aircaft being pulled from the hanger. Skytigers hanger was located at Kepapulavu.jpg

'லெப் கேணல் சிரித்திரன் கொடிஞ்சியிலுள்ள(cockpit) வானோடி இருக்கையில் அமர்ந்துள்ளார்'

 

 

புலிகளின் பறவாடி ஒன்று கேப்பாபுலவில் இருந்தது. அதன் நிறம் அ உருமறைப்பு முழுப்பச்சை நிறத்தில் உள்ளது. ஆனால் மேற்கண்ட பறவாடியின் உருமறைப்பு நிறமோ நிறக்கலவையிலான உருமறைப்பை உடையதாக உள்ளது. ஆகையால் இவ்விரண்டும் ஒன்றா அ வெவ்வேறா என்பது தெரியவில்லை.

 

புலிகளின் கேப்பாபுல பறவாடி தொடர்பான நிகழ்படம்: https://eelam.tv/watch/க-ப-ப-ப-ப-லவ-வ-ன-ப-ல-லம-kepaapulavu-airstrip-ப-ல-கள-ன-பறவ-ட-ltte-hangers-வ-ன-ப-ல-கள_h69zbefNYdceQ7B.html

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கேப்பாப்பிலவு வான்பொல்லத்தில் இருந்த ஓர் குறியீட்டுப் பலைகை 

 

 

இந்தக் குறியீட்டுப் பலகைக்கு அருகில் - இடது கைப்புறமாக - ஓர் சிறு ஒழுங்கை காடு நோக்கி உட்சென்றது.

 

இப்பலகையின் உச்சியில் ஓர் வானூர்தியின் வடிவங்கொண்ட குறியீடு உள்ளது. அதன் கீழ் உள்ள வட்ட வடிவ பலகையில் சில விதிமுறைகள் உள்ளன. அவையாவன,

'நில்
200 ??????
(மீற்றர்?)
பார்த்து உள்
வரவும்
(?)'

 

A board sign in LTTE Air Tigers' airstrip in Keppapilavu.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்கரும்புலிகள் பயணித்த வான்தடம்

 

 

"வான்புலிகள் கரும்புலியாய் முதலெழுந்தவர் - நீரிர்
வான்பறந்து ஈழமதன் அழகறிந்தவர்!"

 

 

புலனக் கிட்டிப்பு: defence.lk, 20-02-2009 | அறிய வேறு வழியில்லையாதலால் இதையே உண்மையென எடுத்துக்கொள்கிறேன்.

  • இரவு 8.30 - புதுக்குடியிருப்பில் தரைப்படையினரின் ஊடாக வான்வெளியில் வான்புலிகளின் குண்டுதாரி வானூர்தி பற்றிய முதல் தகவல் வெளியானது.
  • இரவு 8.35 - ஒலுமடு மற்றும் மன்னார் பரப்புகளில் ஐயத்திற்கிடமான இரண்டு வானூர்திகள் வான்வெளியில் இருப்பதாக தரைப்படையினர் தெரிவிக்கின்றனர்.
  • இரவு 8.40 - வவுனியாவில் சிங்கள வான்படையின் கதுவீயில் இரண்டு வானூர்திகள் முதலில் தெரிகின்றன.
  • இரவு 8.50 - சிங்கள வான்படையின் எஃவ்-7 இடைமறிப்பு தாரை வானூர்திகள், கட்டுநாயக்காவிலிருந்து வான்வழியாக புறப்படுகின்றன.
  • இரவு 9.00 - பாலாவியில் உள்ள கதுவீகள் தெற்கு நோக்கிச் செல்லும் இரண்டு வானூர்திகளைக் கண்டறிகின்றன.
  • இரவு 9.15 - இரண்டு வானூர்திகளும் மீரிகம பகுதியில் தெரிகின்றன.
  • இரவு 9.30 - இரண்டு வான் கரும்புலிகளின் வானூர்திகள் கட்டுநாயக்கா வானூர்தி நிலையம் மற்றும் வான்படைத் தளத்தின் பொதுப்பரப்பைக் கடந்து கட்டுநாயக்கவைக் கடந்தன.
  • இரவு 9.47 - கொழும்பு வான்வெளிக்குள் நுழைகின்றன.
  • இரவு 9.51 - மோதுவதற்காக பதிந்த போது சிங்கள வான்காப்பு வீரர்களின் சூட்டால் சேதமடைந்து கட்டுப்பாட்டையிழந்த 'நீலப்புலி' வான்கரும்புலி கேணல் ரூபன் செலுத்திய கரும்புலி வானூர்தியானது கொழும்பின் கொம்பனி வீதி என்னுமிடத்திலிருந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்ததில் அக்கட்டடம் சேதத்திற்குள்ளானது. அன்னாரும் வீரச்சாவடைந்தார். மற்றையது கட்டுநாயக்கா பரப்பை நோக்கிச் செல்கிறது. மெய்யில் இலக்கு வைக்கப்பட்டது இ.தி. கட்டடத்திற்குப் பின்னிருந்த வான்படைத் தலைமையகமேயாகும்.
  • இரவு 9.55 - எஞ்சிய கரும்புலி வானூர்தி கட்டுநாயக்கா வான்வெளிக்குள் நுழைந்தது.
  • இரவு 9.59 - சிங்கள வான்காப்புப் படையினரின் சூட்டில் கையிலும் நெஞ்சிலும் ஏவுண்ணியதாலும் வானூர்தியிலும் சூடு பிடித்ததாலும் நீர்கொழும்பின் கட்டுநாயக்காவிலுள்ள வான்படைத்தளத்திற்கு அருகிலிருந்த சீதுவை என்னுமிடத்திலிருந்த சதுப்பு நிலத்தில் 210 கிலோவிற்கும் அதிகமான சி-4 உயர் வெடிமருந்துகள் நிரம்பிய 'நீலப்புலி' வான்கரும்புலி லெப் கேணல் சிரித்தரன் செலுத்திய கரும்புலி வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது; அன்னாரும் வீரச்சாவடைந்தார். ஆயினும் மெய்யில் இலக்கு வைக்கப்பட்டது கட்டுநாயக்கா வான்படைத் தளமேயாகும்.

2009-02-20 Sky Black Tigers attack.jpg

'படிமப்புரவு: defence.lk | படிமத்தை திருத்தியவர்: நன்னிச்சோழன்'

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்கரும்புலித் தாக்குதல் காட்சிகள்

 

20-02-2009 | நீர்கொழும்பில் வான்கரும்புலி வானூர்திகளை இலக்குவைத்து சிங்களவரின் வான்காப்புச் சூடு: https://eelam.tv/watch/20-02-2009-ந-ர-க-ழ-ம-ப-ம-த-ன-வ-ன-கர-ம-ப-ல-த-த-க-க-தல-sky-black-tigers-attack-on-negambo_QWj3SkQcIRsygEA.html

 

20-02-2009 | கொழும்பில் வான்கரும்புலி வானூர்திகளை இலக்குவைத்து சிங்களவரின் வான்காப்புச் சூடு: https://eelam.tv/watch/20-02-2009-க-ழ-ம-ப-ல-வ-ன-கர-ம-ப-ல-வ-ன-ர-த-கள-இலக-க-வ-த-த-ச-ங-களவர-ன-வ-ன-க-ப-ப-ச-ச-ட_5tPb5DCD5PVfAk9.html

 

 

 

20-02-2009 | கொழும்பு இறைவரித் திணைக்களம் மீதான வான்கரும்புலித் தாக்குதல்:     https://eelam.tv/watch/20-02-2009-க-ழ-ம-ப-வ-ன-பட-த-தல-ம-யகம-ம-த-ன-வ-ன-கர-ம-ப-ல-த-த-க-க-தல-sky-black-tigers-attack_zFLV171wi9Bmayh.html

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்புலிகளின் வான்குண்டு வீச்சுக் காட்சிகள்

 

 

28-10-2008 |களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் வான்புலிகளின் குண்டுதாரி வானூர்தி 2 வான்குண்டுகளை வீசுகிறது:   https://eelam.tv/watch/28-10-2008-களன-த-ஸ-ஸ-ம-ன-ந-ல-யத-த-ல-வ-ன-ப-ல-கள-ன-க-ண-ட-த-ர-வ-ன-ர-த-2-வ-ன-க-ண-ட-கள-வ-ச-க-றத_5sWch3NuzmLjdNa.html

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காலத்தாலும் அழியா வான்புலிகள் பற்றிய ஒரு கவிதை....

-தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரை

 

(இக்கவிதையை சேகரப்படுத்தி வைக்கவும். முக்கியத்துவம் வாய்ந்தது)

11.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

வான்புலிகள் போய் எங்கையாவது குண்டுவீசினால், அன்றைக்கு வரும் நாளிதழ் காலையில் வழக்கத்திற்கு மாறாக 10 மணிக்கு 2 அல்லது 4 பக்கங்களோடு மட்டுமே வரும், சிறப்பு பதிப்பாக. 

முதல் தடவைக்குப் பிறகு காலையில் நாளேடு வரவில்லையென்றால் எல்லோருக்கும் தெரிந்துவிடும், வான்புலி போய் எங்கையோ அடித்துவிட்டாங்கள் என்று .

முதலாவது வானூர்தி குண்டு வீசியபோது தெருவில்  நின்று சனம் ஆடி மகிழ்ந்தது, கிளிநொச்சியில் ஒருசிலர் எல்லாம் ஊர்திகளில் போய்வந்தவர்களை மறித்து இனிப்புகள் கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்... அவ்வளவு பெருமகிழ்வு, வான்புலி போன போனது!😍

எங்களுக்கு நாளாந்தம் வந்து குண்டு வீசினவையளுக்கு அதே மாதிரி போய் வீசி  அவனுக்கும் அச்சம் காட்டியவங்கள் வான்புலிகள். பேரழிவுகள் இல்லையென்றாலும் அது அவனுக்கு ஒரு உளவியல் தாக்கதை ஏற்படுத்தியது என்பது உண்மையே.

 

இவங்கள் அடித்ததில் சிங்களத்திற்கு ஏற்பட்ட அழிவுகளில் குறிப்பிடத்தக்கவை:-

  • கொழும்பில் ஒரு கிபிர் மற்றும் 5 உலங்கு வானூர்திகளை சேதப்படுத்தியமை,
  • அநுராதபுர வான்படைத்தளம் மீதான குண்டுவீச்சில் சிங்களவனின் இரு எம்.ஐ.- 24 வகை உலங்குவானூர்திகளை சேதப்படுத்தியமை,
  • மன்னாரில் ஒரு எம்.ஐ.- 24 மற்றும் ஒரு பெல் ஆகியவற்றை சேதப்படுத்தியமை

ஆகும்.

(எங்கட வான்படை அடிச்சதில அவன்ர வான்கழுகுகள் சேதமாகியிருக்கிறது, பாருங்கோ!)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Posted June 11, 2021 (edited)

நான்கு இலகு வகை வானூர்திகள் தரிபெற்றிருப்பதை காட்டும் நிழற்படம்:

 

படம் விளக்கம்:-

  • இவையாவும் மாதிரி வானூர்திகள்... உண்மையான வானூர்திகள் இல்லை.😝

 

ffjh.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
  •    வான்புலிகளின் படிமங்கள் இதற்குள்ளும் உண்டு:

 

 

 

 

  •   வான்புலிகளின் படிமங்கள் இதற்குள்ளும் உண்டு:

 

 

 

 

 

  • வான்புலிகளின் எரியூட்டப்பட்ட ஒரு கீழிதையின்(Glider) பாகங்கள் இதனுள் உண்டு

 

http://www.airforce.lk/news.php?news=443

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி உடையார், அடுத்த முறை எவ்வளவு செலவு என்றாலும் பரவாயில்லை   "சான்ட்விச்"  மசாஜ் தான், செய்யிறது. 😂 🤣
    • 13 DEC, 2024 | 02:41 PM பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும்போது அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் தவறுதலாக “கலாநிதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற இணையதளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பில் பாராளுமன்றம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறோம். அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்.  அத்துடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/201157
    • அனுபவமில்லாமல் செய்பவர்கள் பலர் ரிப்ஸுற்காக, எனக்கு பிரச்சனையில்லை, பல வருடங்களுக்கு முன்பே மொட்டை விழுந்திடுச்சு😂
    • 13 DEC, 2024 | 01:36 PM Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், நிலைபேறான தன்மை எனும் சாதனைக்கான உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் பெறும் இலங்கையின் 50ஆவது கட்டிடமாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் LEED பசுமைக் கட்டிடம் எனும் நிகழ்ச்சித் திட்டமானது, ஆற்றல் வினைத்திறன், நீர் முகாமைத்துவம், வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை அங்கீகரிக்கிறது. நடைமுறையில் நிலைபேறானதன்மை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான மீண்டெழும் தன்மை ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான தூதரகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மதித்தல் ஆகியவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த அடைவு விளங்குகிறது. இச்சாதனையினை நினைவுகூரும் வகையிலும், டிசம்பர் 14ஆம் தேதி வரவிருக்கும் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், தூதரகத்தின் அதிநவீன வசதிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் சந்தித்தார். கட்டிடத்தின் ஆற்றல் திறன் கொண்ட புத்தாக்க வடிவமைப்பு, உள்ளூர் கூறுகளை உள்ளடக்குதல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் நிலைபேறான செயற்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை இதன்போது தூதுவர் வலியுறுத்தினார். “LEED Gold சான்றிதழைப் பெறுவதானது, நிலைபேறான தன்மையினை அடைவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “இக்கட்டிடம் ஒரு தூதரகம் என்பதையும் தாண்டி, இலங்கையின் கலாச்சார மற்றும் இயற்கை மரபுரிமைகளை கௌரவிக்கும் அதே வேளை, சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பசுமையான நடைமுறைகள் எவ்வாறு எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பதற்கான ஒரு அடையாளமாக விளங்குகிறது. இலங்கையின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், நாட்டில் 50ஆவது LEED Gold சான்றிதழ் பெற்ற கட்டிடமாக நிமிர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்கத் தூதரகம் LEED Gold சான்றிதழைப் பெற்றமையானது, நிலைபேறான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு LEED Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் 50ஆவது கட்டிடமாக மாறிய கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் போன்றவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம் விளங்குகிறது. இது எதிர்கால செயற் திட்டங்களுக்கான ஒரு அளவுகோலை நிறுவுவதுடன் இலங்கையில் நிலைபேறான இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான வலுவான பங்காண்மையினை இது பிரதிபலிப்பதுடன் சிந்தனைமிக்க வடிவமைப்பானது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.” என அமைச்சர் பட்டபெந்தி கூறினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகள் பணியகத்தினால் (OBO) முகாமை செய்யப்படும், அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் தூதரக சொத்துக்கள் தொடர்பான துறையானது, புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் LEED Silver சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது. LEED சான்றிதழைப் பெற்றுள்ள உலகெங்கிலுமுள்ள 63 அமெரிக்க தூதரகங்களுடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இணைகிறது. அவற்றுள் 23 Gold சான்றிதழ்களைப் பெற்றவை. Gold சான்றிதழ்களைப் பெற்றவற்றுள் 17 கட்டிடங்கள் அந்தந்த நாடுகளில் முதன் முதலாக LEED சான்றிதழ் பெற்றவையாகும்.  கட்டிட செயற்திறன் தொடர்பான சிறப்பம்சங்கள்: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது, இலங்கையின் வளமான கலாச்சாரம் மற்றும் உயிரினப் பல்வகைமையினை வெளிப்படுத்தும் அதே வேளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை மிகவும் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: எரிசக்தித் திறன்: காலநிலைக்கு ஏற்ற மேலோடு, ஆழமான கூரை மேலடுக்குகள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் பசுமைக் கூரை என்பன சூரிய வெப்பத்தை குறைப்பதன் காரணமாக கட்டிடத்தை குளிர்விப்பதற்கான எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கின்றன. வருடாந்த எரிசக்தி நுகர்வினை 40% குறைப்பதற்கு சோலார் பெனல்கள் பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது.   நீர் சேமிப்பு: உயர்தர மழைநீர் முகாமைத்துவ அமைப்பு மற்றும் தூதரகத்திற்குள்ளேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு என்பன ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீரை பாசனத் தேவைகளுக்காக மறுசுழற்சி செய்வதன் மூலம் மனித பயன்பாட்டிற்கு உகந்த நீரை சேமிக்கின்றன.   பசுமையான இடங்கள்: உள்ளூர் சூழலுடன் ஒரு இணக்கமான தொடர்பை உருவாக்குதல் மற்றும் மேலதிக நீர்ப்பாசனத்திற்கான தேவையைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் தூதரக நிலங்கள் இலங்கையின் பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியுள்ளன.  போக்குவரத்து: பணிக்குழுவினர்களுக்கிடையில் துவிச்சக்கர வண்டிகளை பகிர்ந்து பயன்படுத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சித் திட்டமானது, குறுகிய பயணங்களுக்கு மோட்டார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைக்கிறது. மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல்: செயற்திறனை மேம்படுத்துவதற்காகவும் எரிசக்தி நுகர்வினைக் குறைப்பதற்காகவும், மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் செயன்முறையானது, கட்டிடத்தின் அனைத்து கட்டமைப்புகளும் வினைத்திறனுடனும் எதிர்பார்க்கப்பட்டவாறும் தொழிற்படுவதை உறுதிப்படுத்துகிறது.  மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்துதல்: பொருட்களுடன் மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களை இணைப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படுகிறது.   குறைவாக உமிழும் பொருட்கள்: குறைவாக உமிழும் வண்ணப்பூச்சுகள், பூச்சுகள் மற்றும் தரை அமைப்புகளைப் பயன்படுத்துவது உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உலக எரிசக்தி பாதுகாப்பு தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது எரிசக்தி நுகர்வினைக் குறைத்து நிலைபேறான ஆற்றல் நடைமுறைகளுக்கு மாற வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூதரகத்தின் LEED Gold அத்தாட்சிப்படுத்தலானது ஆற்றல் சேமிப்பு மற்றும் செயற்திறன் வினைத்திறன்களுக்கான புத்தாக்க அணுகுமுறைகளுக்கான ஒரு தெளிவான உதாரணமாக விளங்குவதுடன் பசுமையான, மிகவும் நிலைபேறான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொதுவான விழுமியங்களையும் மீளவலியுறுத்துகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்: Gold LEED சான்றிதழ் வழங்கப்பட்ட இலங்கையின் 50ஆவது கட்டிடம்.  இலங்கையின் இயற்கை சூழலுடன் ஒரு தொடர்பை பேணி, தூதரகத்தின் பசுமையான இடங்கள் உள்ளூர் விலங்கினங்கள் மற்றும் பறவையினங்களை ஈர்த்து அவற்றிற்கு ஒரு அனுகூலமான சூழலை எவ்வாறு வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தூதரக மைதானத்தில் உலாவும் ஒரு சுறுசுறுப்பான மயில். ஆற்றல் வினைத்திறன், இயற்கையான வெளிச்சம் மற்றும் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும், LEED அத்தாட்சிப்படுத்தலின் தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தினுள் உள்ள ஒரு பணியிடப் பரப்பு. இலங்கையின் இயற்கை அழகைத் தழுவிய, LEED Gold சான்றிதழைப் பெறுவதற்கு உதவிய நிலைபேறான வடிவமைப்புக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் தூதரகத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் கடலின் அற்புதமான காட்சி. PV தொகுதி : அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது.  புத்தாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்-வினைத்திறனுள்ள தரைத்தோற்றவமைப்பு மற்றும் நீரின் பயன்பாட்டைக் குறைத்தல் என்பன LEED அத்தாட்சிப்படுத்தல் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பாக கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய அம்சங்களை எடுத்துக் காட்டும் அமெரிக்கத் தூதரகத்திலுள்ள நீர் வடிகட்டும் தொட்டிகள். https://www.virakesari.lk/article/201158
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.