Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலக எரிப்பு என்ற வரலாற்று கொடுமையையும் அதன் பின்புல நிகழ்வுகளையும் பதிவு செய்த, அந்த ஈனச்செயல் நடந்தேறிய சில மாதங்களில் வெளிவந்த நூலின் pdf இணைப்பை கீழே காணலாம்.

தொகுப்பு: நீலவண்ணன்

வெளியீடு: வரதர்

படங்கள்: பி டி சாமி & ஏ வி எம்

https://noolaham.net/project/95/9487/9487.pdf

இணைப்புக்கு நன்றி கோஷான். இந்நூலை எழுதியவர் புவியியல் ஆசிரியர் க் குணராசா. செங்கை ஆழியான், நீலவண்ணன் இரண்டும் அவரின் புனை பெயர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

'இறந்தவனை, சுமந்தவனும் இறந்திட்டான்.... அதனை இருந்தவனும் எண்ணிப் பார்க்க தவறிட்டான்' பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

கிருபன் இணைத்த பதிவில் இப்படி மிக சரியாக  சொல்கிறார்கள்:

****

பிரேமதாஸவுக்கு அவருக்குரிய இடத்தை வழங்கி, அவரையும் அரவணைத்து, சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு ஜே.ஆர் செயற்பட்டார். இங்கு, ‘செயற்பட்டார்’  என்பது கவனிக்க வேண்டிய சொல்.   

அந்த விடாமுயற்சி, 1977இல், ஜே.ஆருக்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்தது. 5/6 பெரும்பான்மையுடன், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, வௌிநாட்டுக் கொள்கையும் மாறிய சந்தர்ப்பம் அது. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக, இலங்கையில் பெரும் உற்பத்தித்துறை உருவாகத் தொடங்கியது. இலங்கையர்கள் வீடுகளில் தொலைக்காட்சிகள் வந்தன.   உற்பத்தி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பொருளாதார ரீதியில் இலங்கை குறிப்பிட்டளவு முன்னேற்றத்தைச் சந்தித்தது. இனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கும்.   

ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாதிகளைத் தொற்றிக்கொண்டுள்ள நோய், ‘இனவாத அரசியல்’. அதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவேதான், அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் இன்னும்கூட, முடியாத காரியமாக இருக்கிறது.   .....

****

இவ்வளவும் செய்த நாட்டின் முதல் ஜனாதிபதி ஜேஆர் மரணித்த போது, அரச மரியாதை கூட செய்ய சந்திரிகா இணங்கவில்லை. காரணம் தாயாருக்கு செய்த கொடுமைகள் ஆனால் வெளியே சொன்னது.... இனவாத அரசியல் செய்தார் என்று.

சாதாரண மனிதராகவே புதையுண்டார்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இணைப்புக்கு நன்றி கோஷான். இந்நூலை எழுதியவர் புவியியல் ஆசிரியர் க் குணராசா. செங்கை ஆழியான், நீலவண்ணன் இரண்டும் அவரின் புனை பெயர்கள். 

நன்றி துல்பென். செங்கையாழியான் என் அபிமான எழுத்தாளர். தமிழகத்து எழுத்தாளரை விட எனக்கு அவரை பிடிக்கும்.

நான் எமது பிரச்சனை பற்றி முதன் முதலில் வாசித்த புத்கங்களில் இதுவும் ஒன்று. வாசிக்கும் போது எனக்கு 8/9 வயாதாய் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் விளங்கவில்லை. ஆனால் படித்து முடிந்ததும் மனதில் எழுந்த ஆற்றாமையும், கோபமும் இன்னும் நினைவிருக்கிறது. 

இது அவர் எழுதியது என்று இன்றுதான் அறிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

'இறந்தவனை, சுமந்தவனும் இறந்திட்டான்.... அதனை இருந்தவனும் எண்ணிப் பார்க்க தவறிட்டான்' பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

கிருபன் இணைத்த பதிவில் இப்படி மிக சரியாக  சொல்கிறார்கள்:

****

பிரேமதாஸவுக்கு அவருக்குரிய இடத்தை வழங்கி, அவரையும் அரவணைத்து, சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு ஜே.ஆர் செயற்பட்டார். இங்கு, ‘செயற்பட்டார்’  என்பது கவனிக்க வேண்டிய சொல்.   

அந்த விடாமுயற்சி, 1977இல், ஜே.ஆருக்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்தது. 5/6 பெரும்பான்மையுடன், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, வௌிநாட்டுக் கொள்கையும் மாறிய சந்தர்ப்பம் அது. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக, இலங்கையில் பெரும் உற்பத்தித்துறை உருவாகத் தொடங்கியது. இலங்கையர்கள் வீடுகளில் தொலைக்காட்சிகள் வந்தன.   உற்பத்தி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பொருளாதார ரீதியில் இலங்கை குறிப்பிட்டளவு முன்னேற்றத்தைச் சந்தித்தது. இனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கும்.   

ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாதிகளைத் தொற்றிக்கொண்டுள்ள நோய், ‘இனவாத அரசியல்’. அதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவேதான், அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் இன்னும்கூட, முடியாத காரியமாக இருக்கிறது.   .....

****

இவ்வளவும் செய்த நாட்டின் முதல் ஜனாதிபதி ஜேஆர் மரணித்த போது, அரச மரியாதை கூட செய்ய சந்திரிகா இணங்கவில்லை. காரணம் தாயாருக்கு செய்த கொடுமைகள் ஆனால் வெளியே சொன்னது.... இனவாத அரசியல் செய்தார் என்று.

சாதாரண மனிதராகவே புதையுண்டார்.

நாதம்ஸ்,

இனவாதமே இலங்கையின் அரசியலில் ஒரே ஒரு செல்லும் காசு. பெரும்பான்மையான சிங்கள மக்களின் மனங்களில் இந்த விஷச்செடி துட்டு கெமுனு காலத்தில் இருந்து போசித்து வளர்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு வகை குழுநிலை வாதம்தான்.

யாழில் பரஸ்பரம் அன்னியோன்யமாக பழகும் நாங்கள், ஏதோ ஒரு திரியில் குழுக்களாக பிரியும் போது - கடும் போக்காளாராக மாறுகிறோம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. 

அதை போலதான் இனவாதமும்.

தென்னிலங்கையில் வாழ்ந்த உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

என்னை பொறுத்தவரை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு இனவாதமற்ற அரசியல்வாதி இருந்தாலும், இனவாத அரசியல் செய்தால்தான் அவரால் பிழைக்க முடியும்.

ஆகவே மக்கள் மனதில் ஒரு மாறுதல் ஏற்படாதவிடத்து மாற்றம் சாத்தியமில்லை.

Racism is engrained in the voters’ mind, the politicians are simply exploiting it.

20 minutes ago, goshan_che said:

நன்றி துல்பென். செங்கையாழியான் என் அபிமான எழுத்தாளர். தமிழகத்து எழுத்தாளரை விட எனக்கு அவரை பிடிக்கும்.

நான் எமது பிரச்சனை பற்றி முதன் முதலில் வாசித்த புத்கங்களில் இதுவும் ஒன்று. வாசிக்கும் போது எனக்கு 8/9 வயாதாய் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் விளங்கவில்லை. ஆனால் படித்து முடிந்ததும் மனதில் எழுந்த ஆற்றாமையும், கோபமும் இன்னும் நினைவிருக்கிறது. 

இது அவர் எழுதியது என்று இன்றுதான் அறிகிறேன்.

ஈழத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது இலகுவான மொழி நடை அபாரமானது.  அதை விட இலங்கையில் மிக அதிகமான புவியியல் பாட நூல்களை  எழுதியவர்.  புவியியல் பாடத்ததின் கடினமான விடயங்களை  கூட அவர் தனது கற்பித்தல் திறமையால் ( art of teaching) மிக இலகுவாக மாணவர்களுக்கு புரிய வைப்பதோடு   தனது மாணவர்களுக்கு புவியியல்  பாடத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுவார். உலக/ பிரதேச பட வரைகலையை(map projection) அவர் கற்பிக்கும் முறை அலாதியானது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

* ingrained 

4 hours ago, goshan_che said:

Racism is engrained in the voters’ mind, the politicians are simply exploiting it.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு இனவாதமற்ற அரசியல்வாதி இருந்தாலும், இனவாத அரசியல் செய்தால்தான் அவரால் பிழைக்க முடியும்.

இனவாத அரசியல் இலகுவானது - முட்டாள்களும் செய்யக்கூடியது. அமெரிக்க டொனால்ட் ரம் முதல், மோடி, ஜெயவர்த்தன வரை இனவாத அரசியலை பயன்படுத்துவதற்கு காரணம் அது இலகுவாக பெரும் வெற்றி தரக்கூடியது என்பதே.

சிங்களவர்கள் மட்டும் இலங்கையில் இனவாத அரசியலை செய்யவில்லை, முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாத அரசியலே செய்கிறார்கள். மாறாக, போராளிகள் - தமிழீழ போராளிகளும், சிங்கள ஜே.வி.பி. போராளிகளும் இனவாதத்தை மேவியவர்களாக செயற்பட்டார்கள். ஆனால், விமல் வீரவன்ச போன்ற போலிகளும், அரச இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் போராளிகளின் சில செயற்பாடுகளும் இனவாதத்தில் இருந்து வேறுபட்டு காணப்படவில்லை. 

ஊழல்களுக்கும் சர்வதேச புவிசார் பொருளாதார பலியிடலுக்கும் எதிரான போராட்டத்தில், இனவாதத்தை மேவிய புதியதொரு இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்படும் காலம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

இனவாத சிந்தனை எல்லா சமூகங்களிலும் புரையோடிப்போயுள்ளதை மறுக்க முடியாது.

ஆனால் சிறுபான்மை இனங்களின் இனவாதம் என்பது, ஒரு எதிர்வினையாகவே அமைகிறது. பெரும்பான்மை இனவாதம் அற்று போகுமிடத்து இதன் இருப்பும் நலிவடையும்.

உங்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் அதே சமயம் - எனது வாழ்நாளில் மஹாவம்ச மனோநிலையின் இலங்கை மீதான அழுங்குபிடி அகலும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, கற்பகதரு said:

ஊழல்களுக்கும் சர்வதேச புவிசார் பொருளாதார பலியிடலுக்கும் எதிரான போராட்டத்தில், இனவாதத்தை மேவிய புதியதொரு இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்படும் காலம் வரும்.

இலங்கையில் வராது.
வாய்ப்பில்லை ராஜா 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.