Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளைப் பெற அனுமதித்து சீனா தனது குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, ‘தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது.

இது உலகெங்கிலும் உள்ள கடுமையான குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

எனினும், வயதான தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத் தேக்க நிலை குறித்த அச்சம் காரணமாக கடந்த 2016இல் இரண்டு குழந்தைக் கொள்கையை சீனா அறிவித்தது.

இந்நிலையில், தம்பதியினருக்கு குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பதற்கான அரசாங்க முயற்சிகள் இருந்தும்கூட, 2020ஆம் ஆண்டில் சீனாவின் வருடாந்த பிறப்புகள் தொடர்ந்து 12 மில்லியனாகக் குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிவரப் பணியகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இதன்படி, 2050இற்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் முதியவர்களைப் பராமரிக்க வேண்டிய நிலை வரும் எனவும் பொருளாதாரத்தை இயக்க இளம் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதையும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் பங்குபற்றிய சீனாவின் உயரடுக்கு பொலிட்பீரோ தலைமைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் பின்னர், நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் அறிக்கையில், 2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஒரு தசாப்தத்தில் சீன மக்கள் தொகை மெதுவான விகிதத்திலேயே வளர்ச்சியடைவதைக் காட்டுகிறது.

அதாவது, 1960-களின் பின்னர் சீனாவின் மக்கள் தொகை மிக மெதுவான விகிதத்தில் வளர்ந்து 1.41 பில்லியனை எட்டியது என்பதைக் காட்டுகிறது.

இது உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கையில் ஒரு பெரும் வீழ்ச்சியைக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1219498

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு வந்த ஒரு பேட்டியை இங்கே இணைக்கிறேன்..சாதாரன சீன மக்களின் எண்ணம் எப்படியென்பதை அறியலாம்..

https://www.abc.net.au/radionational/programs/breakfast/chinas-three-child-policy-unlikely-solve-population-problem/13371510

After announcing a major shift on its one-child policy, now allowing couples to have up to three children, some say China's new policy won't fix its population problem: that China is "too old, too male and too few". 

Many Chinese couples say they can't afford to have three children and it's unclear how the policy shift will boost China's long-term economic prospects and its falling birth rate.


Guest: Mei Fong, Pulitzer Prize winning journalist; human rights activist; author of 'One Child: The Story of China's Most Radical Experiment'

Producer:

Linda LoPresti

Duration: 8min 4sec
Broadcast: Thu 3 Jun 2021, 6:35am
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு வந்த ஒரு பேட்டியை இங்கே இணைக்கிறேன்..சாதாரன சீன மக்களின் எண்ணம் எப்படியென்பதை அறியலாம்..

சாதாரண மக்களின் எண்ணங்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் எடுபடாது என்பது உலகறிந்த உண்மை.

இருந்தும் கம்யூனிசம், சனநாயகம் இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் தந்த அனுபவம்:- 

கம்யூனிசம்: உலகையே வாங்கக்கூடிய அளவிற்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது.!

சனநாயகம்:  அரசாங்கத்தையே வாங்கக்கூடிய அளவிற்கு ஒரு சிலரை உருவாக்கியுள்ளது.!! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

சாதாரண மக்களின் எண்ணங்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் எடுபடாது என்பது உலகறிந்த உண்மை.

இருக்கலாம் ஆனால் ஒரு குழந்தை சட்டத்தினால் கருக்கலைப்பு செய்தவர்கள் எத்தனை பேர்? மனிதர்கள் தனியே பிள்ளைபெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல இல்லை என்பதால் இந்த சித்தாந்தம் எவ்வளவு தூரம் இந்த விஷயத்தில் சரிவரும் என தெரியாது..

வேலையின்மை..வீட்டு விலையுயர்வு.. பிள்ளைகளின் கல்விக்கான பொருளாதார வசதி.. அதைவிட வயதான பெற்றோரை கவனிக்கவேண்டிய தேவை என அவர்களின் நாளாந்த நிலை இருக்கும் பொழுது இவர்கள்/இந்த கம்யூனிஸ்டுகள் இப்பொழுது சட்டதை விலக்குவார்கள்.. பின் எப்பொழுது திரும்ப போடுவார்கள் என்பதில் தெளிவில்லை  என்பதால் இது எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என தெரியவில்லை..

 

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப வருமானம் இடவசதி பிள்ளைகள் எதிர்காலம் எதுவும் சிந்திக்காமல் இந்தியா பிள்ளைகள் பெற்று தள்ளி இப்போ படும்பாட்டை கண்டபின்பும், இந்தியாவில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் வேலை இழந்து  தங்கள் சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய நிலைமை தலையில் மூட்டைகள், கையில் பிள்ளைகளையும் சுமந்த படி பெண்கள் ஆண்கள் பல நுறு  கிலோ மீற்றர் நடந்தே வழியில் பலர் இறந்தும் சென்ற கொடுமையை பார்த்த சீன மக்கள் சீன அரசின் இந்த திட்டத்தை விரும்புவார்களா
சீன அரசு சாவாதிகாரமாக ஆட்சி செய்வதற்கும் தொழிலாளர்களை ஒடுக்கவதற்கு கம்யூனிசத்தையும் பொருளாதரத்தில் ஜனநாயக நாடுகளின் முறையையும் பயன்படுத்துகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

குடும்ப வருமானம் இடவசதி பிள்ளைகள் எதிர்காலம் எதுவும் சிந்திக்காமல் இந்தியா பிள்ளைகள் பெற்று தள்ளி இப்போ படும்பாட்டை கண்டபின்பும், இந்தியாவில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் வேலை இழந்து  தங்கள் சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய நிலைமை தலையில் மூட்டைகள், கையில் பிள்ளைகளையும் சுமந்த படி பெண்கள் ஆண்கள் பல நுறு  கிலோ மீற்றர் நடந்தே வழியில் பலர் இறந்தும் சென்ற கொடுமையை பார்த்த சீன மக்கள் சீன அரசின் இந்த திட்டத்தை விரும்புவார்களா
சீன அரசு சாவாதிகாரமாக ஆட்சி செய்வதற்கும் தொழிலாளர்களை ஒடுக்கவதற்கு கம்யூனிசத்தையும் பொருளாதரத்தில் ஜனநாயக நாடுகளின் முறையையும் பயன்படுத்துகிறது.

சீனா  தனது  நாட்டின் உள் கட்டமைப்பில்... இந்தியாவை விட பல படி முன்னே உள்ளதால், அவர்களின் தொழில் வளர்ச்சியை தொடர அடுத்த தலைமுறைக்கு... மேலதிக இளையவர்கள் தேவைப் படுகின்றார்கள்.

இங்கும் சில தொழிற்சாலைகளில், சென்ற ஆண்டுகளில் குறிப்பிட்ட ஆட்கள் இல்லாத போது.... சிரியாவில் இருந்து வந்த இளைஞர்களை குறுகிய கால பயிற்சி கொடுத்து, அவசர தேவைக்கு பயன் படுத்தினார்கள்.

சீனா... இதனை, நீண்ட கால நோக்கில் அணுகுகின்றது என நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

என்னாகப்போகுதோ தெரியவில்லை

சீனனுக்கு ஒரு ஒறியினல் செய்யச் சொன்னால் அதற்கொரு டுப்ளிக்கேற்றும் செய்து தானே பழக்கம்??😀

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

என்னாகப்போகுதோ தெரியவில்லை

சீனனுக்கு ஒரு ஒறியினல் செய்யச் சொன்னால் அதற்கொரு டுப்ளிக்கேற்றும் செய்து தானே பழக்கம்??😀

சீனமக்களை வரவேற்போம்.

சீனா டுப்ளிக்கேற் நாடுகளுக்காக டுப்ளிக்கேற்றுகள் செய்யலாம். ஆனால் உலகின் ஒறியினல் மொழியான எங்கள் தமிழையும் அதன் கலாச்சார மரபையும் எப்படி வரவேற்றுப் போற்றி மகிழ்கிறார்கள் பாருங்கள்.😁 

  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.