Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..!

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும்  இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

193103592_810147112969459_45712180528570

போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.  

194508519_474843430447194_51571243304154

மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று,  அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.  

194829157_2863674473948930_4562092540521

இந்நிலையில், சம்பவ இடத்து வருகை தந்த மாவட்ட நீதவான் நீதிபதி கருப்பையா செல்வராணி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரை விசாரணை நடத்த பணித்துள்ளதாக தெரியவருகிறது. 

194829157_2863674473948930_4562092540521

 

https://www.virakesari.lk/article/106797

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது அண்ணாவை அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் ; கதறும் தங்கை

நேற்று முன்தினம்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த  21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார் .

எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு'இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .

194757173_3140657392828405_3765228739581

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில்  எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ்  போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும்என தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

196227685_161461649279388_85206161925847

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.

நேற்று  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

https://www.virakesari.lk/article/106868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. இளைஞன் மரணம் தொடர்பில் முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இச்சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பொலிஸாரின் காவலின் கீழ் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அளவுக்கதிகமாக ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுத்தமையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘அந்த இளைஞர் கைவிலங்கிடப்பட்டதுடன் தாக்கப்பட்டார். அதுமாத்திரமன்றி அவர் உயிரிழக்கும்போது பொலிஸ் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, நீதியை உறுதிசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘என்னுடைய சகோதரன் புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டதுடன் எங்களுடைய வீட்டிற்கு முன்னால்வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவன் உயிரிழந்து விட்டதாக வியாழக்கிழமை காலை அறிவிக்கின்றனர்’ என்று விதுஷனின் சகோதரி இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பிடம் தெரிவித்துள்ளார். பொலிஸார் எனக்கூறி இருதயபுரம் கிழக்குப்பகுதி வீடொன்றிலிருந்து கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் அழைத்துச்செல்லப்பட்ட சந்திரன் விதுஷன் (22 வயது) இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அந்த இளைஞனின் இல்லத்திற்கு நேற்றுமுன்தினம் சென்று அவரது தாயாரைச் சந்தித்து இச்சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும். மேலும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் கையாள்வதுடன் தொடர்புடைய விடயங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மிகையான ஐஸ் போதைப்பொருள் பாவனையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எனினும் அந்த இளைஞன் வீட்டிற்கு முன்னாலேயே தாக்கப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்திருப்பதால், சித்திரவதை இடம்பெறவேயில்லை என்று கூறமுடியாது என தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பிகா சற்குணநாதன்மேலும் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/மட்டு-இளைஞன்-மரணம்-தொடர்/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

அளவுக்கதிகமாக ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுத்தமையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

On 3/6/2021 at 17:12, கிருபன் said:

நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன்

கைது செய்யப்பட்டவரிடம் எப்படி போதைப்பொருள் வந்ததாம்? ஒருவேளை கைது செய்தவர்களே ஊட்டினார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 

கைது செய்யப்பட்டவரிடம் எப்படி போதைப்பொருள் வந்ததாம்? ஒருவேளை கைது செய்தவர்களே ஊட்டினார்களோ?

தமிழ் புலனாய்வு துறையினர் விசாரித்து பதில் சொல்வார்கள்...

ஆயுதம் வைத்திருந்தார்கள் என குற்றம் சாட்டி கொலைசெய்தார்கள் அன்று
ஐஸ் வைத்திருந்தார் என கொலை செய்கிறார்கள் இன்று ....
எல்லாம் அவன் அறிவான் பராபரனே😁

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழர் அழிக்கப்படவேண்டியவர்கள்  இந்நாட்டிலிருந்து, அதற்கு ஒரு காரணம் தேடிப்பிடிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

தமிழ் புலனாய்வு துறையினர் விசாரித்து பதில் சொல்வார்கள்...

ஆயுதம் வைத்திருந்தார்கள் என குற்றம் சாட்டி கொலைசெய்தார்கள் அன்று
ஐஸ் வைத்திருந்தார் என கொலை செய்கிறார்கள் இன்று ....
எல்லாம் அவன் அறிவான் பராபரனே😁

எப்படி யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சா வந்து விழுகிறதோ அது போலதான் ஐஸ் போதையும் வந்து  விழுகிறது எறியிறது யாரோ ஆனால் இறப்பவன் நம்மவனாத்தான் இருக்கிறான் . இன்னும் நம்மவர்களை நம்மவர்கள் அப்படி செய்திருக்க மாட்டான் என நம்புவது தான் வேடிக்கை .  அவர் குற்றம் செய்தாரோ இல்லையோ ஆனால் மட்டக்களப்பில் ஐஸ் போதை தலைவிரித்தாடுகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.