Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் - கொழும்பு விமானம் பெற்றோல் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இறக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் - கொழும்பு விமானம் பெற்றோல் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இறக்கம் 

Former SriLankan Airlines CEO nabbed over Airbus bribery scam | TTG Asia

லண்டனில் இருந்து, கொழும்பு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் போதியளவு எரிபொருள் இல்லாமல் போனதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் தரை இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு கொழும்பு பறந்தது.

இது குறித்து பயணிகள் விசனம் தெரிவித்த போது, குவைத் விமான நிலையத்தின் ரேடார் பழுதாகிய காரணத்தினால், அந்த நாட்டின் வான் பரப்பில் பறக்க அனுமதி கிடைக்காமல் நீண்ட தூரம் சுத்தி பறக்க வேண்டி இருந்ததால், எரிபொருள் முடிந்து விட்டதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் இறக்க வேண்டி இருந்ததாக சொல்லி உள்ளார்கள்.

நல்லா விடுறீங்கப்பு ரீலு என்கிறார்கள் பலர்.... குவைத் மீது பறக்க முடியாவிடில், அமெரிக்கா பக்கமாக சுத்தியா பறந்தீர்கள் என்று கேட்கிறார்கள் பயணிகள் சிலர்.

எதுக்கும், பிளேன் ஏற வாசலுக்கு வந்து ஆயுபோவன் சொல்லும் பெண்ணிடம், 'தேவையான பெற்றோல் அடிச்சு இருக்கிறியளோ' என்று கேட்டு தான் உள்ள போகவேணும் போல என்கிறார் இன்னோருத்தர்.

கடந்த யூலை முதலாம் திகதி, லண்டன் - கொழும்பு விமானம் காக்பிட் கண்ணாடி வெடித்து இருக்கிறது என்பதனை அறிந்து, கடைசி நேரத்தில் பறப்பினை கான்சல் பண்ணி உள்ளார்கள் என்று வேறு செய்தி வருகிறது.

https://www.dailymirror.lk/breaking_news/SriLankan-Airlines-rejects-claims-that-its-flight-suffered-mid-air-fuel-shortage/108-215736

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

 நல்லா விடுறீங்கப்பு ரீலு என்கிறார்கள் பலர்.... குவைத் மீது பறக்க முடியாவிடில், அமெரிக்கா பக்கமாக சுத்தியா பறந்தீர்கள் என்று கேட்கிறார்கள் பயணிகள் சிலர்.

எதுக்கும், பிளேன் ஏற வாசலுக்கு வந்து ஆயுபோவன் சொல்லும் பெண்ணிடம், 'தேவையான பெற்றோல் அடிச்சு இருக்கிறியளோ' என்று கேட்டு தான் உள்ள போகவேணும் போல என்கிறார் இன்னோருத்தர்.

கடந்த யூலை முதலாம் திகதி, லண்டன் - கொழும்பு விமானம் காக்பிட் கண்ணாடி வெடித்து இருக்கிறது என்பதனை அறிந்து, கடைசி நேரத்தில் பறப்பினை கான்சல் பண்ணி உள்ளார்கள் என்று வேறு செய்தி வருகிறது.

நாதம் சொல்லுறன் எண்டு குறை நினைக்க வேண்டாம் - செய்தியின் தலைப்பு - உள்ளே உள்ள செய்தி எதுக்கும் நீங்கள் மேலே எழுதியுள்ளதுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

While rejecting claims that on July 6, SriLankan flight (UL504 en route from London to Colombo) had suffered a mid-air fuel shortage, SriLankan Airlines said a technical stop was planned in Trivandrum to refuel the aircraft after it had to take a longer flight path from its regular journey

In a statement, it said a technical stop was planned in Trivandrum as an additional precaution after coordinating with the Airline Operations Control Center to refuel the aircraft in Trivandrum and flew into Colombo.

“On July 6, 2021, SriLankan Airlines flight UL504 en route from London to Colombo had to take a longer flight path from its regular journey as the Kuwait Air Traffic Control denied entry into their airspace as their primary radar was unserviceable. The Aircraft had to be rerouted via a longer route avoiding Kuwait airspace,” the statement said.

“The safety of our passengers and crew is of paramount concern as we strive to keep our flights safe and secure. Sri Lankan Airlines continues to keep safety at the forefront without jeopardizing the safety of our passengers, crew, and equipment,” the statement added.

நீங்கள் கீழே உள்ள வாசகரின் கொமெண்ட்சையும், செய்தியையும் ஒன்றாக போடுவதால் வரும் குழப்பம் என நினைகிறேன்.

பார்த்து செய்யுங்கப்பு. 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

நான் மொழிபெயர்ப்பு செய்யவில்லை அப்பு.

அது எனது நோக்கமும் இல்லை அப்பு. மூலம் கேட்கும் மூல கொதிகாரருக்கு தான் அப்பு, மூலம் இணைப்பு. 

நான் எழுதியது, வேறு இடங்களிலும் வாசித்ததன் சுருக்கம்.

விசயம் என்னவெண்டா, லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாபோற அளவுக்கு எரிபொருள் போதுமான அளவு, இருக்க வேண்டிய ஒரு விமானம் எரிபொருள் இல்லாமல் போனதன் காரணம் வேறு ஏதாவது குளறுபடியாக இருக்கும். அதனை மறைக்கிறார்கள்.

மத்திய கிழக்கிலே குவைத் இல்லாவிடில், பக்கத்து ஊர் விமான கட்டுப்பாட்டு நிலையம்.... இருக்கும். அது யுத்த பிரதேசம் அல்ல, நீண்ட தூரம் சுத்திப்போக. இவ்வளவுக்கும், அவர்களது, மிக சிறிய நாடும், மிக சிறிய வான் பிரதேசமும்.

தவிர, குவைத் போன்ற பெரும் வளமிக்க நாடுகளில், ராடர் பழுதாகிப்போய் விட்டது என்பது, உண்மையாக இருக்க முடியாது. ஒரு ராடாரோடை விமான நிலையம் இயங்கும் என்பது, எந்த மடையனும் நம்பான். மேலும், இது எமக்கு, ஐரோப்பாவுக்கு தெரியாமல், செய்தியில் வராமல்,  இருந்திராது.

இவர்கள் சொல்வது பச்சைப்பொய் என்பதே செய்தியின் மூலம். அவர்களது கவனக்குறைவுக்கு, அல்லது வேறு ஏதோ பிரச்னையை மறைக்க சும்மா ஏதோ சாட்டு சொல்கிறார்கள். அதுதான் செய்தியின் முக்கிய அம்சம். 

ஓகே அப்பு. 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நான் மொழிபெயர்ப்பு செய்யவில்லை அப்பு.

அது எனது நோக்கமும் இல்லை அப்பு. மூலம் கேட்கும் மூல கொதிகாரருக்கு தான் அப்பு, மூலம் இணைப்பு. 

நான் எழுதியது, வேறு இடங்களிலும் வாசித்ததன் சுருக்கம்.

விசயம் என்னவெண்டா, லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாபோற அளவுக்கு எரிபொருள் போதுமான அளவு, இருக்க வேண்டிய ஒரு விமானம் எரிபொருள் இல்லாமல் போனதன் காரணம் வேறு ஏதாவது குளறுபடியாக இருக்கும். அதனை மறைக்கிறார்கள்.

மத்திய கிழக்கிலே குவைத் இல்லாவிடில், பக்கத்து ஊர் விமான கட்டுப்பாட்டு நிலையம்.... இருக்கும். அது யுத்த பிரதேசம் அல்ல, நீண்ட தூரம் சுத்திப்போக.

தவிர, குவைத் போன்ற பெரும் வளமிக்க நாடுகளில், ராடர் பழுதாகிப்போய் விட்டது என்பது, உண்மையாக இருக்க முடியாது. ஒரு ராடாரோடை விமான நிலையம் இயங்கும் என்பது, எந்த மடையனும் நம்பான். மேலும், இது எமக்கு, ஐரோப்பாவுக்கு தெரியாமல், செய்தியில் வராமல்,  இருந்திராது.

இவர்கள் சொல்வது பச்சைப்பொய் என்பதே செய்தியின் மூலம். அவர்களது கவனக்குறைவுக்கு, அல்லது வேறு ஏதோ பிரச்னையை மறைக்க சும்மா ஏதோ சாட்டு சொல்கிறார்கள். அதுதான் செய்தியின் முக்கிய அம்சம். 

ஓகே அப்பு. 🤗

ஓகே உங்கள் இஸ்டம்👍🏿

9 minutes ago, Nathamuni said:

இவர்கள் சொல்வது பச்சைப்பொய் என்பதே செய்தியின் மூலம்

இல்லை. செய்தி அவர்கள் சொன்ன மறுப்பை மட்டும்தான் வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் சொன்ன மூலம் இல்லை. 

ஏன் செய்தியின் மூலத்தை இணைக்க வேண்டும் என்ற விதி? இணைத்த செய்தி உண்மையானதா என உறுதி செய்ய.

நீங்கள் எங்கோ கேள்வி பட்டதை எல்லாம் எழுதிவிட்டு, சம்பந்தபட்ட இன்னும் ஒரு செய்தியின் லிங்கை தந்து விட்டு போக முடியாது.

உங்கள் கருத்தையும் செய்தி போல் தி(ணி)ரிக்க முடியாது. 

இரெண்டுமே விதி மீறல்தான். 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஓகே உங்கள் இஸ்டம்👍🏿

பெற்றோலை கொஞ்சமா அடிச்சுப் போட்டு, கூடுதலா அடிச்ச மாதிரி, பில்லை போட்டு காசு அடிச்சுரப்பாங்கள் எண்டு ஏதாவது பகிடியோட வருவியல் எண்டு பார்த்தால்..... 😁

அதுசரி.... ஒரு பிசினஸ் ஐடியா: மேல ஒரு மிதக்கும் பெற்றோல் ஸ்டேஷன் போட்டு, இப்படி  அந்தரப்பட்டு வருகிற பிளேனுகளுக்கு அடிச்சு விட்டு, நல்ல காசு பார்க்கலாமா?  😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பெற்றோலை கொஞ்சமா அடிச்சுப் போட்டு, கூடுதலா அடிச்ச மாதிரி, பில்லை போட்டு காசு அடிச்சுரப்பாங்கள் எண்டு ஏதாவது பகிடியோட வருவியல் எண்டு பார்த்தால்..... 😁

அதுசரி.... ஒரு பிசினஸ் ஐடியா: மேல ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போட்டு, இப்படி வருகிற அந்தரப்பட்டு வருகிற பிளேனுகளுக்கு அடிச்சு விட்டு, நல்ல காசு பார்க்கலாமா?  😜

🤣 என்ன பார்த்தா உங்களுக்கு பிஸினஸ் கன்சல்டன் மாரியே தெரியுது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣 என்ன பார்த்தா உங்களுக்கு பிஸினஸ் கன்சல்டன் மாரியே தெரியுது🤣

இல்லை, பிராக்கிரசியார்.... அது வந்து வெள்ளிக்கிழமை இரவு, மாட்டிடீங்க... 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஓகே உங்கள் இஸ்டம்👍🏿

இல்லை. செய்தி அவர்கள் சொன்ன மறுப்பை மட்டும்தான் வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் சொன்ன மூலம் இல்லை. 

ஏன் செய்தியின் மூலத்தை இணைக்க வேண்டும் என்ற விதி? இணைத்த செய்தி உண்மையானதா என உறுதி செய்ய.

நீங்கள் எங்கோ கேள்வி பட்டதை எல்லாம் எழுதிவிட்டு, சம்பந்தபட்ட இன்னும் ஒரு செய்தியின் லிங்கை தந்து விட்டு போக முடியாது.

உங்கள் கருத்தையும் செய்தி போல் தி(ணி)ரிக்க முடியாது. 

இரெண்டுமே விதி மீறல்தான். 

அது கிடக்குது... இந்த செய்தி, அவர்கள் மீதான குற்றசாட்டுக்கு மறுப்பு...

குற்றசாட்டு தான் நான் தந்த விபரம்....

விமான பயணம் சும்மா, இவர்களது மறுப்புடன், ஒகே என்று போக நாம் ஒன்றும் இலங்கையில் இருக்கவில்லை.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்றால், நாலு தலை உருண்டு இருக்கும்.

தும்பை விட்டு, வாலை பிடிக்காமல், இந்த செய்தியில் உள்ள பாரதூரத்தினை பார்ப்போம். 

இந்த செய்தியின் முக்கியத்தை திசை திருப்பாமல்..... நகர்வோம்....

இன்னும் சொல்லப்போனால், எரிபொருள் ஒழுக்கு (லீக்) பண்ணி இருக்குமோ என்று சந்தேகமும் உள்ளது.

ஒகே, தல....

நித்தா கொள்ள போறன்... வாறன் போட்டு...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அதுக்கு செய்தியை உள்ளபடி போட்டுட்டு, கீழ உங்கள் கருத்தை போட்டால் - நாமும் வந்து அவங்கள ரெண்டு சாத்து சாத்துவம்தானே.

சரி எனக்கும் நித்திரை வருது சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

நித்தா தேவிககு நனறி.😆

ஓவரா குசி ஆக வேண்டாம், மீளும் துயில்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கோல்மால் பண்ணுற விமான சேவை என்று தான் இதில பறக்கிறதில்ல. புறக்கணி சொறீலங்கன் எயார்லைன்ஸ். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

நித்தா தேவிககு நனறி.😆

இண்டைக்கு கொஞ்சம் தெளிவா பார்த்தபோது தான் தெரிஞ்சுது, தலைக்கு கிழமை முழுக்கு பெரிசா யாரும் சிக்கேல்ல... சரி நம்மளை பிடிச்சு ஒரு கடி கடிப்போம் என்று செல்லமா விளாடி இருக்கிறார்....

அட... வேற யாரு... நம்ம தல தானே... 

நீ(ங்க) விளையாடு(ங்க) சித்தப்பு....  😁

பகிடிக்கு தான்... கோவிக்கக்கூடாது தல ... 🙏

  • nunavilan changed the title to லண்டன் - கொழும்பு விமானம் பெற்றோல் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இறக்கம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் கோல்மால் பண்ணுற விமான சேவை என்று தான் இதில பறக்கிறதில்ல. புறக்கணி சொறீலங்கன் எயார்லைன்ஸ். 

வடிவேலு, அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கின கதைபோல, (சிராணியை கொடுத்து), ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சர்மன் பதவியை வாங்கிப் போட்டவர் மகிந்தா மனைவி சிராணியின் அண்ணன் நிசாந்த விக்கிரமதுங்க.... 

அதில் இருந்து அவர் அடித்த கூத்துக்கள் குறித்து ஓர் தனி திரி திறந்து எழுதி இருந்தேன்.

இது ஒரு முழு 100% ஊழல் கம்பெனி.... இதன் செயல்பாடுகளில் ஒரு வெளிப்படையுமே இல்லை.

விமான பணிப்பெண்களில் பலர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, வேலையே வேண்டாம் என்று ஓடுகின்றனர். 

லண்டனில் GSA ஒரு தமிழர் இருந்தார். அவர், திவால் நோட்டிஸ் கொடுத்து, விமான நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு டிமிக்கா கொடுத்தார். அந்த பணத்தினை, GSA பெற்றுக் கொடுத்த சிங்கள அரசியல்வாதியுடன் பகிர்ந்து கொண்டார். அவரது வீட்டில், பியர் அடித்துக்கொண்டு இருந்தவர், அதி வணக்கத்துக்குரிய, தென் இலங்கை மூன்று பௌத்த பீடாதிபதிகளில் ஒருவர்.   

நேர பார்த்து, பீர் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறன்.... 😁

மஞ்சள் உடுப்பு இல்லை. அதை கழட்டி பக்கத்தில் வைத்து விட்டு, கட்டைகாற் சட்டையுடன் இருந்தார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானம்

எரிபொருள் பற்றாக்குறையால் UL504 என்ற இலங்கை விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக நேற்று தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை முடித்துக் கொண்டு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுடன் பறந்த நிலையில் இவ்வாறு தரையிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறைக்கு அவசர செய்தி அனுப்பினார்.

முதலில் ஓமானின் மஸ்கட்டின் விமானத்தை தரையிறக்க முயற்சிகள் செய்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் ஓடுபாதையில் அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் தயாராக நின்றனர்.

இதன் பின்னர் விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பிய பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விமானம் கொழும்புக்கு பறந்தது. . 

https://tamilwin.com/article/sri-lankan-plane-makes-emergency-landing-at-1625658501

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

இண்டைக்கு கொஞ்சம் தெளிவா பார்த்தபோது தான் தெரிஞ்சுது, தலைக்கு கிழமை முழுக்கு பெரிசா யாரும் சிக்கேல்ல... சரி நம்மளை பிடிச்சு ஒரு கடி கடிப்போம் என்று செல்லமா விளாடி இருக்கிறார்....

அட... வேற யாரு... நம்ம தல தானே... 

நீ(ங்க) விளையாடு(ங்க) சித்தப்பு....  😁

பகிடிக்கு தான்... கோவிக்கக்கூடாது தல ... 🙏

அட நாங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணு உள்நாக்கில புண்ணுதானே. 

செல்லமா இன்னும் கொஞ்ச கடிகள்:

1. நீங்க வச்ச தலைப்பு ஏதோ அப்செட் போல? நுணா வந்து மாத்தி இருக்கிறார்? சரி அவருக்கும் வேலை கொடுக்கும் உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.

2. 

40 minutes ago, Nathamuni said:

நிசாந்த விக்கிரமதுங்க.... 

நிசாந்த விக்கிரமசிங்க

3.

40 minutes ago, Nathamuni said:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாங்கிப் போட்டவர்

சிறிலங்கன் ஏர்லைன்சை அவர் வாங்கவில்லை முன்பு அதன் சேர்மனாக இருந்தார். சிறிலங்கன் முன்பு அரச உடமையாய் இருந்து பின்னார் கொஞ்சகாலம் எமிரேட்சின் பகுதி- கட்டுப்பாட்டில் இருந்து பின் 2008இல் மீளவும் அரசு முழு பங்குகளையும் எமிரேட்சிடம் வாங்கி, இப்போ அரச உடமையாய் ஆகி விட்டது.

நான் சிறீலங்கனில் பறப்பதில்லை -மிக மோசமான சேவை. மிக விரைவில் எங்காவது கொண்டு போய் இறக்குவார்கள் என நினைக்கிறேன். அந்தளவுக்கு ஊழல், cutting corners with safety measures. 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அட நாங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணு உள்நாக்கில புண்ணுதானே. 

செல்லமா இன்னும் கொஞ்ச கடிகள்:

நுணா, எதுவும் பெரிசா மாத்தவில்லை.... அது நான் போட்ட தலைப்பு தான். மாத்தியிருந்தால் குத்து, கமா போட்டிருப்பார். 

விக்கிரமதுங்க விசயம் update பண்ணி இருக்கிறேனே, கவனிக்கவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

விக்கிரமதுங்க விசயம் update பண்ணி இருக்கிறேனே, கவனிக்கவில்லையா? 

ஓம் நான் சுட்டிகாட்டிய பின் மாற்றியுள்ளீர்கள், கவனித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.