Jump to content

அந்த மர்ம மனிதர்... -- எம்.கே. நாராயணன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மர்ம மனிதர்...

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதி வெளி வந்திருக்கும் நூல் "ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி".எண்பதுகளின் தொடக்க காலம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப் பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. பாண்டி பசாரில் நடந்த துப்பாக்கிச் சூடு முதல், அண்மையில் நடந்த மீனவர்கள் கடத்தல் வரை, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவும், தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும், இந்திய உளவுத் துறை தொடர்ந்து திட்டமிட்ட சதி வலைகளைப் பின்னியதையும், அதற்கு இந்தியாவை ஆண்ட கட்சிகள் துணை போன அவலத்தையும் மிகுந்த துணிச்சலோடு இந்நூல் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த நூலிலிருந்து...எம்.கே. நாராயணன்!

அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிங்கள அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது.பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்த அகதிகளுக்கு மனிதாபிமானத்தோடு உதவுவதற்கு, இந்தியாவின் கப்பல்படைகளும், உளவு நிறுவனங்களும் தயாராக இல்லை. சிங்களக் கப்பல் படையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிணமாகிக் கொண்டிருக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் முனைப்பான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை.

மாறாக - சிங்கள ராணுவம் நடத்திவரும் போரில், அந்த ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் மறைமுக முயற்சிகளில் இந்த அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியிருப்பதாகவே தெரிகிறது. எப்படி?அலுமினிய குண்டுகள், அலுமினிய பால்ரசுகள் தயாரிப்போர் தமிழகம் முழுதும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு, ஆயுதம் தயாரிக்கவே இவைகள் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்க வேண்டிய அவசியமின்றியே ஓராண்டு வரை உள்ளே வைக்க ஆட்சியாளர்களுக்கு உதவக்கூடிய ஆள் தூக்கிச் சட்டம் தான், தேசப் பாதுகாப்புச் சட்டம்!தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகி விட்டதைப்போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமிழர்களை அச்சுறுத்தி, அவர்களை ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவிடாமல், வாயடைக்கச் செய்யவே இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.இந்தச் செயல்பாடுகளை முடுக்கி விடும் ‘மூளைக்குச் சொந்தக்காரராக ஒருவர் செயல்படுவதாக - தமிழக காவல்துறையின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.அவர்தான் எம்.கே. நாராயணன்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் உளவுத் துறை அதிகாரி. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வரை இப்பதவியிலிருந்த ஜே.என் தீட்சத் மரண மடைந்தார். அடுத்த மூன்று வாரங்களில் ஜன.25, 2005 இல் மயன் கோத்தே கீயாத் நாராயணன் (எம்.கே. நாராயணன்) இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தைச் சீர்குலைக்க - கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் புதுடில்லி பார்ப்பன அதிகார மையத்தோடு நெருக்கமாகச் செயல்பட்டு வந்தவர் தான் இந்த அதிகாரி. அந்த அனுபவங்கள் தான் இப்போது, பிரதமருக்கு ஆலோசகராகச் செயல்படும் பதவியை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கொழும்பு ஊடகங்கள் - எம்.கே. நாராயணனை எப்போதுமே தங்கள் நேச சக்தியாகவே கருதி வருகின்றன. பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் வந்தவுடன், சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கின. இந்தியப் பார்ப்பன ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் இவர் மிகவும் கைதேர்ந்தவர், சாதுர்யமானவர் என்று இவரைப் புகழ்கின்றன. ஆனால் அப்படி என்ன சாதனையை இவர் செய்து காட்டியுள்ளார் என்ற கேள்விக்குப் பதில் வராது. உண்மையான போராளிகளுக்கு எதிராக இருந்தாலே போதும் - இத்தகைய புகழ் மகுடங்கள் சூட்டப்பட்டு - அவர்கள், உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டு விடுகிறார்கள். இதுதான் இந்திய தேசியப் பார்ப்பன அதிகார அமைப்பின் இயங்குமுறை.

கடந்த பிப்ரவரி மாதம் ஆங்கில, சிங்கள கொழும்பு நாளேடுகள் எம்.கே. நாராயணனைப் புகழ்ந்து தள்ளி, அவரது உரை ஒன்றைப் பெரிய அளவில் வெளியிட்டன. 2007 பிப்.11 ஆம் தேதியில் 43 ஆவது மூனிச் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புக் கொள்கை பற்றி உரையாற்றிய அவர், தீவிரவாத இயக்கங்கள் எப்படி நிதி திரட்டுகின்றன என்று விவரித்தார். அப்போது விடுதலைப்புலிகள் நிதி திரட்டுவது பற்றிக் குறிப்பிடும்போது, விடுதலைப்புலிகள் போதை மருந்து விற்பனை மூலம் நிதி திரட்டுவதாக, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்; ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா என்று எவ்வித தரவுகளும் இன்றி, சர்வதேச மாநாடு ஒன்றில் - நாராயணன் பொறுப்பின்றி சுமத்திய அவதூறு இது. இதைத்தான் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சியோடு வெளியிட்டன.

தமிழ் ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் பல நாட்கள் தங்கி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கக் காத்துக் கிடந்தனர். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாது, தவிர்த்தார் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன். இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் படுகொலைகளை நேரில் எடுத்துச் சொல்வதே, அந்த மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். இவர்கள் - விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள்கூட அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் கியுபாவில், ஹவானா நகரில் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, அங்கே, பிரதமருடன் இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை - கியுபாவுக்கு வரச் சொல்லி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தவர், இந்த அதிகாரிதான்!

1985 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படுகொலையில் நேரடித் தொடர்பு கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா! சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, போராடும் தமிழர்களுக்குத் துரோகம் செய்து, பலரைப் படுகொலை செய்து, இறுதியில் சிங்கள அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டார். நாடாளுமன்றப் பிரநிதிகளை பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்த எம்.கே.நாராயணன், தமிழ்நாட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய டக்ளசை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதோடு, ஹவானாவில் பிரதமர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்பதிலிருந்தே - எம்.கே.நாராயணன் சிங்கள ஊடகங்களால் ஏன் போற்றிப் புகழப்படுகிறார் என்பதன் காரணம் புரிந்திருக்கும்.

1987 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு ஒப்பந் தத்தைச் செய்தனர். அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று இந்தியா கட்டாயப்படுத்தியது.இந்தச் சதி வலையைப் பின்னிய அதிகார வட்டத்தில் - எம்.கே. நாராயணனுக்கும் முக்கிய பங்கு உண்டு.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவசர அவசரமாக ஈழத்திலிருந்து டெல்லிக்கு 1987 ஜூலை 23 ஆம் தேதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்தியாவுக்கான தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் என்ற பார்ப்பனர், ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஒப்பந்தத்தை முழுமையாகப் படித்து, சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், விடுதலைப்புலிகளை ஊதித் தள்ளிவிடுவோம் என்றும், வாயில் "சிகாரை"ப் பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார். அந்தச் சூழலில் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்தவர் அன்றைக்கு புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான்.

மிரட்டல்களும், அழுத்தங்களும் பலிக்காமல் போனது வேறு சேதி! ஆனால் தமிழ் ஈழப் பிரச்சினை பற்றியோ, போராடும் இயக்கங்கள் பற்றியோ சரியான புரிதலோ, மதிப்பீடுகளோ இல்லாது, அவசர கோலத்தில் அதிகார வெறியில் அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாக்கக் காரணமாக இருந்தவர்களில் எம்.கே. நாராயணனும் ஒருவர். இத்தகைய அதிகாரிகள்தான், இலங்கைப் பிரச்சினையைக் கையாளுவதில் சமர்த்தர்களாக - பார்ப்பன-சிங்கள ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார்கள்.ஜே.

??ன்.தீட்சித் - எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள் தான், ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவதில் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள்.தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டங்களை மிஞ்சு மளவுக்கு ராணுவ வேட்டை நடத்தியது இந்திய அமைதிப் படை. கடைசியில் அவமானப்பட்டு வெளியேறியதுதான் நடந்தது. உலக அரங்கில் இந்தியாவின் முகத்தில் கரிபூசச் செய்த இந்த முடிவை எடுத்தவர்களில் ஒருவரான எம்.கே. நாராயணன்தான், இப்போதும் ஈழப் பிரச்சினைக்கு பிரதமரின் ஆலோசகர்.

1991-ல் ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, இலங்கை அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து, இந்தியா ஒதுங்கிக் கொண்டாலும், இந்தியாவின் உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்து திரை மறைவுச் செயல்களில் ஈடுபட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு, 2003 ஆகஸ்டு மாதத்தில் - ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஜே.என்.தீட்சித், ஒரு கட்டுரை எழுதினார்.

அதில் - இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இந்தியா ஆதரித்துக் கொண்டே, இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், தீவிரமான உதவிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான், இலங்கை அரசு, பலமான நிலையிலிருந்து விடுதலைப் புலிகளோடு பேச முடியும் - என்று எழுதினார். 2004 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் ‘இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் - ஜே.என்.தீட்சித் இதையே வலியுறுத்தினார். ஜே.என்.தீட்சித், வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரி. இலங்கையில் இந்தியாவின் தூதுவராகவும் இருந்தவர். ராஜீவ் காந்தியோடு நெருக்கமாக இருந்த பார்ப்பனர். ஆக - ஈழப் பிரச்சினையில் உளவுத் துறையின் தலையீடு என்பது இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர்கள், அமைச்சர்கள் எவரும் இப்பிரச்சினை பற்றி வாய்மூடி மவுனம் சாதித்த நேரம் அது. ஆனால், வெளியுறவுத் துறை அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் - இப்படி வெளிப் படையாகக் கருத்து தெரிவிக்கும் அதிகாரம் படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இதே வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உளவுத்துறை அதிகாரிதான் எம்.கே.நாராயணன்.

-தென் செய்தி

தொடர்புடைய செய்தி

http://www.yarl.com/advert/files/viduthalai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம்

நூல் கிடைக்குமிடம் :

புரட்சிப் பெரியார் முழக்கம்

29, பத்திரிகையாளர் குடியிருப்பு

திருவான்மியூர், சென்னை-600 041.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் இல்லாதவர்கள் அழுது புலம்புகிறார்கள்.

அதிகாரம் உள்ளவர்கள் துணை போகிறார்கள்.

Link to comment
Share on other sites

கந்தப்பு அவர்களின் இணைப்புக்கு மிக்க நன்றி.

ஈழத்தமிழரின் குருதியிலும் வேதனையிலும் நீச்சலடிக்கும் தீட்சித் மற்றும் நாராயணன் போன்ற அதிகார வர்க்க வெறித்தனத்தை உலகம் அறிய ஒரு நூல் எழுதிய விடுதலை இராசேந்திரன் அவர்களின் மனித நேயத்திற்கும் இனமான உணர்வுக்கும் நன்றிகள். ஏராளமான சதிகளை அம்பலப்படுத்தியுள்ளார். முழு நூலையும் உடனே படிக்க வேண்டும் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.