Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தீவிரமாகும் கடன் நெருக்கடி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

யாருட்டை கடன் வேண்டினாலும் நாட்டை தங்கட கைக்குள் தானே வைத்திருக்கினம்  

எங்கை வச்சிருக்கினம்?

வந்த இந்தியன் ஆமியை அடிச்சு திருத்தி, பாதுகாப்பா தந்த நாட்டை, துண்டு துண்டா பிச்சு, சீனாக்காரனுக்கும், அமெரிக்காகாரனுக்கும், இனி இந்தியக்காரனுக்கும் கொடுக்குறதுக்கு, தமிழரோட பகிர்ந்து நிம்மதியா இருந்திருக்கலாம்.

அம்மான் முதல்வராக வந்திருப்பார் எல்லோ...  😁

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்ப கொஞ்ச காலமா 3 விசயத்தில ஓவரா பில்டப் கொடுக்கிறம், கொடுக்கப்படும் பில்டப்பை நம்புறம் என நான் நினைக்கிறன்.

1. திரு கோண மலையை அமெரிக்காவிடம் கொடுக்கும் ஒப்பந்தம். இதை பற்றி கோட்டவுக்கு நெருக்கமான அமைப்பை தவிர வேறு யாரும் எழுதவில்லை. ஆகவே இது உண்மைதானா என யோசிக்க வேண்டி இருக்கு. அந்த இயக்கம் இப்போ நாட்டில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை திசை திருப்ப இப்படி ஒரு கதையை கிளப்பி விட்டு இருக்கலாம். பின்னர் பார்தீர்களா, அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும் நாம் திருமலையை விட்டு கொடுக்கவில்லை என மார்தட்டவும் இது உதவும். 

இது ஒரு ஊகம்தான். ஆனால் வேறு இடங்களில் இந்த செய்தி உறுதியாகும் வரை இதை நம்ப முடியாது.

2. இலங்கை திவாலாகி விட்டது அல்லது ஆக போகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எத்தனை பேருக்கு கிறீஸ் திவாலாகிறது வரை போய் ஈயூ உதவியால் மீண்டது நியாபகம் இருக்கு? இத்தாலிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்தது. போர் காலத்தில் இலங்கை நாணய மதிப்பு பவுண்டுக்கு 240 வரை போய் மீண்டது. ஒரு நாடு திவாலாவது என்பது அத்தனை சுலபம் அல்ல. அடுத்து currency swap என்பதும் நாம் வாங்கும் கடனும் ஒன்றல்ல. பாண் வாங்க வீல் பரோவில் காசு அள்ளி போன நாடுகளும் உண்டு. அவை இப்போதும் உள்ளன. யெல்சின் காலத்தில் இருந்த ரஸ்யாவா இப்போது? 2ம் உலக போர் முடிவில் முழு ஐரோப்பாவும், யூகேயும் திவால்தான். கிரேட் டிப்ரெசன் என்று அமெரிக்காவை புரட்டி போட்ட காலமும் உண்டு. பிரட்மென் காலத்து அவுசிலும் இது நடந்தது. ஆகவே பொருளாதார சரிவு, வரலாறு காணாத சரிவு என்பவை உண்மையாகிலும், இது மக்களை பாதிக்கும் என்பதும் உண்மையாகிலும் - இதனால் தனி மனிதர்கள் திவாலாவது போல் ஒரு நாடு ஆகாது. 

3. சீன பூச்சாண்டி - பல தடவை இதை எழுதிவிட்டேன். இலங்கையில் சீனா விரும்புவது மென் வலு. சீன ஆளுமை இருக்கும் ஆதிக்கம் இராது. இலங்கை மக்களை சீனர் ஆக்குவது அல்ல சீனர்கள் நோக்கு. அவர்களுக்கு தேவை வளங்களும், கேந்திர அமைவும். அதை கொடுத்தால் வேறு ஏதும் அவர்களுக்கு தேவையில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இலங்கை திவாலாகி விட்டது அல்லது ஆக போகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எத்தனை பேருக்கு கிறீஸ் திவாலாகிறது வரை போய் ஈயூ உதவியால் மீண்டது நியாபகம் இருக்கு? இத்தாலிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்தது. போர் காலத்தில் இலங்கை நாணய மதிப்பு பவுண்டுக்கு 240 வரை போய் மீண்டது. ஒரு நாடு திவாலாவது என்பது அத்தனை சுலபம் அல்ல. அடுத்து currency swap என்பதும் நாம் வாங்கும் கடனும் ஒன்றல்ல. பாண் வாங்க வீல் பரோவில் காசு அள்ளி போன நாடுகளும் உண்டு. அவை இப்போதும் உள்ளன. யெல்சின் காலத்தில் இருந்த ரஸ்யாவா இப்போது? 2ம் உலக போர் முடிவில் முழு ஐரோப்பாவும், யூகேயும் திவால்தான். கிரேட் டிப்ரெசன் என்று அமெரிக்காவை புரட்டி போட்ட காலமும் உண்டு. பிரட்மென் காலத்து அவுசிலும் இது நடந்தது. ஆகவே பொருளாதார சரிவு, வரலாறு காணாத சரிவு என்பவை உண்மையாகிலும், இது மக்களை பாதிக்கும் என்பதும் உண்மையாகிலும் - இதனால் தனி மனிதர்கள் திவாலாவது போல் ஒரு நாடு ஆகாது. 

நீங்க கை  காட்டிய நாடுகள்  அனைத்தும் முன்பு பொருளாதார பலத்தில் நின்று சரிவை சந்தித்தவை சிலோன் அப்படியா தலை ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

3. சீன பூச்சாண்டி - பல தடவை இதை எழுதிவிட்டேன். இலங்கையில் சீனா விரும்புவது மென் வலு. சீன ஆளுமை இருக்கும் ஆதிக்கம் இராது. இலங்கை மக்களை சீனர் ஆக்குவது அல்ல சீனர்கள் நோக்கு. அவர்களுக்கு தேவை வளங்களும், கேந்திர அமைவும். அதை கொடுத்தால் வேறு ஏதும் அவர்களுக்கு தேவையில்லை.

எல்லோரும் அப்படித் தான். இப்பொது கூட உண்மையாக சீன கூட மென்வலுவைத் தான் விரும்புவதாக இருக்கலாம்.

போத்துக்கேயர், கிழக்கிந்திய கம்பனி எல்லாமே வர்த்தக நோக்கத்துடன் வந்தன. அவர்களை அறியாமலே அவர்களாகவே உள்ளுக்கு வந்தார்கள், உள்ளேயும் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டார்கள்.   

அம்பாந்தோட்டையை ரணில் சீனா இடம் கொடுத்த போது, ரணில் சொன்னது தான் Don Juan போத்துக்கேயரை கொண்டுவந்ததாகவே அதை  செய்வதாக (அதாவது சங்கிலியனை சிறைபிடித்தது போல பிரபாவை  அடக்கியதுக்கு சீனா துணை, யுத்தக்குற்றங்கள்  மற்றும் இனப்படுகொலை என்று மேற்கு மற்றும் கிந்தியவால் (ரணில் சொன்னது) இருக்கும் ஆபத்துக்கு சீனா-அம்பாந்தோட்டை பேரம்.

ஆனால், சீன ரணிலுக்கு கொடுத்தது, கண்டிய சரணடைவு (அம்பாந்தோட்டையை பொறுத்தவரை) ஒப்பந்தம். இதில் இரண்டுமே நடைபெற்றுள்ளது,   சீன உள்ளுக்கு வந்தது,  உள்ளேயும் வலுக்கட்டாயமாக இழுக்கவும் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்க கை  காட்டிய நாடுகள்  அனைத்தும் முன்பு பொருளாதார பலத்தில் நின்று சரிவை சந்தித்தவை சிலோன் அப்படியா தலை ?

ரஸ்யா, இத்தாலிக்கு நீங்கள் சொல்வது பொருந்துனாலும் கிறீஸ் பல நூற்றாண்டாகவே பொருளாதாரத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. அவுஸ் கூட கடந்த 50 வருடத்தில்தான் வளர்ந்தது. இன்னும் சிம்பாம்வே, எதியோப்பியா, ருவாண்டா இப்படி ஒரு சமயம் நொடித்துப்போய் இப்போ கொஞ்சம் மேலே வந்துள்ள நாடுகள் பல உள்ளன. 

உண்மையில் இலங்கை போல் வெளிநாட்டு காசை எதிர்பார்த்து இருக்கும் நாடுகளுக்கு கொவிட் பலத்த அடி என்பதில் சந்தேகமில்லை. சுற்றுலா பயணிகள் மட்டும் அல்ல, நாடு திரும்பும் நிரந்தர புலம் பெயரிகள், நாட்டுக்கு காசை கொண்டு வரும் வேலையாட்கள், உள்வரும் முதலீடு, ஏற்றுமதி என எல்லாமும் ஒரே அடியாக அடிவாங்குகிறது.

ஆனால் பெரும் பெரும் நாடுகளும் கூட இப்படி பின்னடைவுகளின் போது ஐ எம் எப் இடம் அல்லது மாஎஷல் பிளான் போல இன்னொரு நாட்டுடன் கடன்பட்டு மீண்டுள்ளன.

The great reset என்று உலக பொருளாதாரத்தையே கொவிட்டை கொண்டு மாற்றி அமைக்க திட்டமிடுகிறார்கள் என சதி கோட்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். இதை நான் நம்பவில்லை. ஆனால் அப்படியே ஆகினும் கூட இது உலக நகர்வின் ஓரங்கமாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லோரும் அப்படித் தான். இப்பொது கூட உண்மையாக சீன கூட மென்வலுவைத் தான் விரும்புவதாக இருக்கலாம்.

போத்துக்கேயர், கிழக்கிந்திய கம்பனி எல்லாமே வர்த்தக நோக்கத்துடன் வந்தன. அவர்களை அறியாமலே அவர்களாகவே உள்ளுக்கு வந்தார்கள், உள்ளேயும் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டார்கள்.   

அம்பாந்தோட்டையை ரணில் சீனா இடம் கொடுத்த போது, ரணில் சொன்னது தான் Don Juan போத்துக்கேயரை கொண்டுவந்ததாகவே அதை  செய்வதாக (அதாவது சங்கிலியனை சிறைபிடித்தது போல பிரபாவை  அடக்கியதுக்கு சீனா துணை, யுத்தக்குற்றங்கள்  மற்றும் இனப்படுகொலை என்று மேற்கு மற்றும் கிந்தியவால் (ரணில் சொன்னது) இருக்கும் ஆபத்துக்கு சீனா-அம்பாந்தோட்டை பேரம்.

ஆனால், சீன ரணிலுக்கு கொடுத்தது, கண்டிய சரணடைவு (அம்பாந்தோட்டையை பொறுத்தவரை) ஒப்பந்தம். இதில் இரண்டுமே நடைபெற்றுள்ளது,   சீன உள்ளுக்கு வந்தது,  உள்ளேயும் வலுக்கட்டாயமாக இழுக்கவும் பட்டது.

ரணில் சொன்னது பற்றி நான் அறியவில்லை. ஆனால் டொன் யுவான் போல என சிங்களவர்கள் சொல்வது ஒருவன் தனக்கு நெருக்கமானதை இழந்து அந்நிய அடிமையாவது என்பதையே.

7ம் விஜயபாகுவின் மகன்கள் மூவர் அவனை கொன்று விட்டு கோட்டே ராஜ்ஜியத்தை கோட்டே, சீதாவாக்கை, ரைகம என பிரித்தாளுகிறனர்.

இதில் சீதாவாக்கையை ஆண்ட மாயாதுன்னையை வீழ்த்த, கோட்டேயை ஆண்ட 7ம் புவனேகபாகு போர்துகேயர் உதவியை நாடி, தனது முடிகுரிய மகனை கிறீஸ்தவராக்கவும் ஒத்துகொள்கிறார்.

மகனை வாரிசாக அறிவித்த பின் ஒரு போர்த்துகேய சிப்பாய் “தவறுதலாக” சுட்டு 7ம் புவனேகபாகு மேலே போக, மகன் போர்த்துகேயரின் கைப்பொம்மையாக ஆட்சி ஏறி, மதம் மாறி, டொன் யுவான் ஆகி, ராணியும் டொனா கதரினா ஆகி -ஈற்றில் கோட்டையை போர்த்துகேயருக்கு கைமாற்றுகிறார்.

ஆகவே ரணில் சொன்ன அர்த்தம் என்ன என்பதை அந்த கட்டுரையை நீங்கள் தந்தால் ஆராயலாம்.

நிச்சயமாக ரணில் தன் செயல்பாட்டை டொன் யுவானோடு ஒப்பிட்டிருக்கமாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால் சிங்களவர் மத்தியில் டொன் யுவான் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை.

முன்னைய காலனியவாதிகள் எல்லாரும் வரும் போது வியாபாரம் செய்யவே வந்தார்கள் பின்னர் இழுபட்டார்கள் என்பது என்னை பொறுத்தவரை மேம்போக்கான பார்வை. அமெரிக்காவில் கடும் நில பிடிப்பு போட்டி நடந்து முடிந்த கையோடுதான் ஆசியா வருகிறார்கள் எல்லா ஐரோப்பிய நாடுகளும். ஆகவே இவர்கள் வரும் போதே நிலம் பிடிக்க, ஆட்சி, காலனி அமைக்கவே வந்தார்கள். ஆனால் வியாபார வேடத்தில். தவிரவும் அப்போ முதலில் நிறுவனங்களை அனுப்பி விட்டு, பின்னர் அரசுகள் வந்தன.

இப்போ அரசுகள் வந்து டீல் போட்ட பின் நிறுவனங்கள் வருகிறன.

இப்போ அமெரிக்காவும், சீனாவும் செய்வது நவகாலனியம். ஜெர்மனியை போல ஜப்பானை போல இஸ்ரேலை போல சவுதியை போலை ஒரு அமெரிக்க காலனி இருக்க முடியுமா? ஆனால் நிலப்பிடிப்பு, ஆட்சியில், மொழியில், மதத்தை கைபிடிப்பதில் அமெரிக்கா தலையிடாது.

அதே அணுகுமுறைதான் சீனாவின் பட்டு பாதை, பட்டு வார் திட்டமும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

குடுத்திட்டாலும் :LOL:
 
தங்கட நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...இங்கிருக்கும் சிலர் "இலவு காத்த கிளி" மாதிரி காத்திருக்க வேண்டியது தான் 😆

அவர்களின் நாட்டை காற்றிய இலட்சணம் புரிகின்றது ....எந்த ஒரு சிரிய நாடும் சுதந்திரத்திற்கு பின்பு இவ்வளவு இரத்தளரியை கண்டத்தில் (சிங்களவர்கள், தமிழர்கள் இரு பகுதியும் சிந்திய இரத்தம் ) 
சிறிலங்காவின் அரச தலைவரை வெளிநாடுகள் தீர்மாணிக்கும் நிலைக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்......
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

காப்பாற்றிய இலட்சணம்

10 hours ago, ரதி said:

குடுத்திட்டாலும் :LOL:
 
தங்கட நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...இங்கிருக்கும் சிலர் "இலவு காத்த கிளி" மாதிரி காத்திருக்க வேண்டியது தான் 😆

அவர்களின் நாட்டை காற்றிய இலட்சணம் புரிகின்றது ....எந்த ஒரு சிரிய நாடும் சுதந்திரத்திற்கு பின்பு இவ்வளவு இரத்தளரியை கண்டத்தில் (சிங்களவர்கள், தமிழர்கள் இரு பகுதியும் சிந்திய இரத்தம் ) 
சிறிலங்காவின் அரச தலைவரை வெளிநாடுகள் தீர்மாணிக்கும் நிலைக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்......
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2021 at 23:00, goshan_che said:

ஆகவே ரணில் சொன்ன அர்த்தம் என்ன என்பதை அந்த கட்டுரையை நீங்கள் தந்தால் ஆராயலாம்.

நிச்சயமாக ரணில் தன் செயல்பாட்டை டொன் யுவானோடு ஒப்பிட்டிருக்கமாட்டார் என நினைக்கிறேன்.

ரணிலுடன் இருந்த அதிகாரிகளுடன் ரணில் கதைத்தது தீர்மானம் எடுக்கும் போது. எனவே ஆதரங்கள் இல்லை. அந்த அதிகாரிகள் திரித்து சொல்ல  வேண்டிய தேவையும் இல்லை.

ரணிலின் மனதில் இருந்தது தெரியாது. அனால்,  தீர்மானம் எடுக்கும் போது ரணில் கருதி சொன்னது சீன அப்படி செய்யாது என்று,   நடந்தது ரணிலின் வெளியில் சொல்லிய எதிர்பார்ப்புக்கு தலை கீழ், போத்துக்கேயரிடம் Don Juan இழந்தது போல.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2021 at 20:47, goshan_che said:

2. இலங்கை திவாலாகி விட்டது அல்லது ஆக போகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எத்தனை பேருக்கு கிறீஸ் திவாலாகிறது வரை போய் ஈயூ உதவியால் மீண்டது நியாபகம் இருக்கு? இத்தாலிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்தது. போர் காலத்தில் இலங்கை நாணய மதிப்பு பவுண்டுக்கு 240 வரை போய் மீண்டது. ஒரு நாடு திவாலாவது என்பது அத்தனை சுலபம் அல்ல. அடுத்து currency swap என்பதும் நாம் வாங்கும் கடனும் ஒன்றல்ல. பாண் வாங்க வீல் பரோவில் காசு அள்ளி போன நாடுகளும் உண்டு. அவை இப்போதும் உள்ளன. யெல்சின் காலத்தில் இருந்த ரஸ்யாவா இப்போது? 2ம் உலக போர் முடிவில் முழு ஐரோப்பாவும், யூகேயும் திவால்தான். கிரேட் டிப்ரெசன் என்று அமெரிக்காவை புரட்டி போட்ட காலமும் உண்டு. பிரட்மென் காலத்து அவுசிலும் இது நடந்தது. ஆகவே பொருளாதார சரிவு, வரலாறு காணாத சரிவு என்பவை உண்மையாகிலும், இது மக்களை பாதிக்கும் என்பதும் உண்மையாகிலும் - இதனால் தனி மனிதர்கள் திவாலாவது போல் ஒரு நாடு ஆகாது. 

இதில் கிரீஸ் நிலை ஓரளவு சொறி சிங்களத்திற்கு ஒத்து போகிறது. அனால், வெளி உதவி தேவை.      

கிறீஸ் இற்கு EU  உதவி மற்றும்  சீனாவிடம் துறைமுகசத்தை விற்றமை மூலம் முறிவில் இருந்து தப்பி கொண்டது.

இதே நிலை. சொறி சிங்களத்துக்கு, கிந்தியா 1 billion USD ஐ எதோ ஒரு விதத்தில் சொறி சிங்களம் எடுக்க கூடிய நிலையை கொண்டு வருவதற்கு கிந்தியா பகீரதப் பிரயத்தனம் செய்வதாகவும், பேரம் நடப்பதாகவும் ஓர் உள் தகவல் இருக்கிறது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

2009 இல் நிச்சயமாக கிந்தியாவே பிணை நின்றது Balance of Payment க்கு , அதாவது cashflow நிதி இல்லாமல் போனபோது. அந்த நேரம் IMF ஐ மிரட்டியது, அதாவது IMF கொடுக்காவிட்டால் கிந்தியா கொடுக்கும் என்று, பிரணாப் முகர்ஜி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

இதே நிலை. சொறி சிங்களத்துக்கு, கிந்தியா 1 billion USD ஐ எதோ ஒரு விதத்தில் சொறி சிங்களம் எடுக்க கூடிய நிலையை கொண்டு வருவதற்கு கிந்தியா பகீரதப் பிரயத்தனம் செய்வதாகவும், பேரம் நடப்பதாகவும் ஓர் உள் தகவல் இருக்கிறது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மறந்து விட்டேன்.

சீமான், மற்றும் தமிழ் நாடு கட்சிகள்  கூவ வேண்டிய நேரம் இது.

"கிந்தியர்கள், சிங்களத்தின் பாதத்தை காவுகிறார்கள், கழுவுகிறார்கள், தமிழ் நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்து என்று."   

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

சீமான், மற்றும் தமிழ் நாடு கட்சிகள்  கூவ வேண்டிய நேரம் இது.

வேலியில்  போனதை எடுத்து ....................போட்டாயிற்று இனி நம்மாள்  ஆட்டம் தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம், சீனாவிடம் வாங்கியும் காணாது, 3 மத இருப்பில் கைவைக்கிறது. 

சிறி லங்கா அரசின் முடிவின் தொடக்கமா?

அரசுகள் இடையேயான யுத்தங்களை தவிர்த்து, வரலாற்றில் அரசுகள் பொதுவாக உள் இருந்து தான் சிதறின. 

சீனாவின், tributary சிற்றரசு முறை, நவீனமயமாக சிறிலங்காவுடன் தொடங்கலாம். 

https://www.bnnbloomberg.ca/sri-lanka-to-repay-1-billion-bond-ending-default-threat-1.1632739

Asantha Sirimanne and Anusha Ondaatjie, Bloomberg News

  •  
 
(Bloomberg) -- Sri Lanka plans to repay a $1 billion bond by the Tuesday deadline, keeping intact its reputation for honoring debt as concern mounts about the nation’s overseas financing.

Authorities will transfer the required funds on Monday, Ajith Nivard Cabraal, the state minister for money and capital markets, said by phone Sunday. He didn’t share details. Moody’s Investors Service placed Sri Lanka’s ratings under review for a downgrade last week, citing its assessment of the country’s increasingly fragile external liquidity position and the risk of default.

“I have been saying right throughout that we will pay. Unfortunately some bondholders panicked due to rating actions and analyst reports and sold off at huge discounts,” Cabraal said. “Those who came last profited most.”

The payment marks the clearing of only the first test. Two more payments -- a $500 million bond and $1 billion of debt -- become due next year, with Colombo saying arrangements have been made for the transactions.

Doubts about Sri Lanka’s ability to service debt began growing last year after the International Monetary Fund prematurely ended a $1.5 billion loan facility in the midst of the pandemic. While steps to control the coronavirus’s spread hurt the government’s capacity to generate earnings through sectors such as tourism, a downgrade of the sovereign’s rating deeper into junk hit investors’ confidence.

The island nation has since secured a $1.5 billion currency swap agreement with China, besides negotiating funding lines from its South Asian neighbors India and Bangladesh.

Sri Lanka’s central bank earlier this month said that while the government is expecting some inflows, it will dip into its foreign exchange reserves to bridge any shortfall in repaying the bonds. The stockpile stood at about $4 billion in June, enough to cover about three months of imports.

(Updates with details throughout)

©2021 Bloomberg L.P.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

சிங்களம், சீனாவிடம் வாங்கியும் காணாது, 3 மத இருப்பில் கைவைக்கிறது. 

சிறி லங்கா அரசின் முடிவின் தொடக்கமா?

அரசுகள் இடையேயான யுத்தங்களை தவிர்த்து, வரலாற்றில் அரசுகள் பொதுவாக உள் இருந்து தான் சிதறின. 

சீனாவின், tributary சிற்றரசு முறை, நவீனமயமாக சிறிலங்காவுடன் தொடங்கலாம். 

பெரிசா கவலைப்படாதீங்கோ....

அதெல்லாம் எட்டாம்பு பசிலர்... வெட்டி ஆடுவார் எண்டு தானே, பத்தாம்பு பெயில் கோத்தா போட்டிருக்கிறார்... 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 04:45, பெருமாள் said:

வேலியில்  போனதை எடுத்து ....................போட்டாயிற்று இனி நம்மாள்  ஆட்டம் தான் 🤣

பெருமாள் அந்த வாங்கி வைத்த பொப்கோர்னை (b)பின்னுக்க அடியுங்கோ. சக்கு பிடிச்சிட்டு🤣.

43 minutes ago, Kadancha said:

“I have been saying right throughout that we will pay. Unfortunately some bondholders panicked due to rating actions and analyst reports and sold off at huge discounts,” Cabraal said. “Those who came last profited most.”

இதில் நிச்சயமாக ராஜபக்சேக்கள் market manipulation செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது?

இலங்கை காசு கட்டமாட்டாது என்று FUD ஐ கிளப்பிவிட்டு, அறாவிலையில் பிணைமுறி உரிமைகளை வாங்கி, இப்போ கொழுத்த லாபம்?

உங்கள் கருத்தை அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கை காசு கட்டமாட்டாது என்று FUD ஐ கிளப்பிவிட்டு, அறாவிலையில் பிணைமுறி உரிமைகளை வாங்கி, இப்போ கொழுத்த லாபம்?

உங்கள் கருத்தை அறிய ஆவல்.

இருக்கலாம். 

ஆனால், rating  agencies சொன்னதை வைத்து தான் விற்றது (விற்றவர்களுக்குத் தான் தெரியும்) என்றால், அது manipulation ஆகாது.

மற்றது, இது sovereign bond ஆனபடியால், அப்படி வாங்கி இருந்தால் தெரிய வேண்டி வந்து இருக்கும். கம்பனிகளும் வாங்கி இருக்கலாம். 

அனால், இந்த கையிருப்பில் கைவைப்பதை, மத்திய வாங்கி அவ்வப்போது பூடகமாக தெரிவித்தது. 

 Ajith Nivard Cabraal உம  தெரிவித்தது இருந்ததாக எங்கோ வாசித்த நினைவு. முதலில் சொன்னது, அந்த காலப்பகுதியில் (அதாவது பங்குனி அல்லது சித்திரை மட்டத்தில்), 2021 இல் உள்ள வருவாய்க்கு (நிகர இலாபம் அல்ல), 1.5 billion ஒன்றும் பெரிது இல்லை என்று.

ஆனால், இப்பொது சீனாவோ ( அல்லது கிந்தியாவோ), துணை போய் இருக்கிறார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kadancha said:

நன்றி. 

ஆனால் இப்படி ஒரு கிலியை கிளப்பி ரேட்டிங் ஏஜென்சியளை எச்சரிக்கை கொடுக்க வைத்து, விலையை வேண்டும் என்றே குறைத்தார்களோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

ஆனால் இது நீண்டகால நோக்கில் முதலீட்டாளர் நம்பிக்கையை குறைக்கும். ஆனால் அவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லைத்தானே. உடனடி தனி லாபம் கிடைக்கும் போது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஆனால் இப்படி ஒரு கிலியை கிளப்பி ரேட்டிங் ஏஜென்சியளை எச்சரிக்கை கொடுக்க வைத்து, விலையை வேண்டும் என்றே குறைத்தார்களோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

இவர்கள் சொல்வதை மட்டும் வைத்து கிலி  கொள்ளவோ அல்லது நம்பிக்கை கொள்ளவோ, ரேட்டிங் agencies இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை காணாதது அல்ல.

ரேட்டிங் agencies பல, பன்முக்கப்படுத்தப்பட்ட தரவுகளை கொண்டே முடிவு.  இருக்கும் extreme தெரிவுகளை ரேட்டிங் agencies கருத்தில் எடுக்கும்.  உ.ம். எவ்வளவு வேகமாக, தனியார் சொத்துக்களை, தேசிய மயப்படுத்த முடியும், அதற்கான சட்ட சூழ் நிலைகள் என்ன போன்றவை (20 ஆம் திருத்தம் மூலம் ஒரு விதத்தில் தனியார் சொத்துக்களை தேசிய மயப்படுத்த வசதிப்படுத்தப்படும்???), அது ஒரு பக்கமாக என்று  பல முகம், நிலைகள், கோணங்களில் தரவுகள். கொண்டே முடிவு. இதானால் தான்சிங்கள லங்கா ccc உடன் தப்பிக்கொண்டதோ தெரியவில்லை.         

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். இப்படி எத்தனை மலை விழுங்கிகளை, ஆபிரிக்கா, உலகெங்கும் கண்டிருக்கும் இந்த ஏஜென்சிகள். ஆகவே ஏமாற்றுவது கடினம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.