Jump to content

ஒரு நீதிக்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு நீதிக்கதை

marktwain.jpg

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார்.

அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்களுக்குச் சொல்லியும் தரும். ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, காட்டு விலங்குகள் மிகவும் குஷியாகிவிட்டன. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலுடன், அவை பூனையிடம் நிறைய கேள்விகள் கேட்டன. முதலில், ஓவியம் என்றால் என்ன என்று கேட்டன. அதற்குப் பூனை,

“ஓவியம் என்பது ஒரு தட்டையான பொருள். அற்புதமான, பிரமாதமான, வசீகரமான தட்டைப் பொருள். அது எவ்வளவு அழகாக, தட்டையாக இருக்கும் தெரியுமா!”, என்றது.

இதைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மீண்டும் குஷியாகிவிட்டன. எப்படியாவது அந்த ஓவியத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டன. காட்டு விலங்குகளில் ஒன்றான கரடி, பூனையிடம் கேட்டது,

“அந்த ஓவியம் எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறது?”

“அந்த ஓவியத்தின் தோற்றமே அப்படித்தான்”, என்று பூனை சொன்னது.

காட்டு விலங்குகளுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இதையெல்லாம் எப்படி நம்புவது என்றும் நினைக்கத் தொடங்கியிருந்தன. அப்போது, மாடு பூனையிடம் கேட்டது,

“சரி, கண்ணாடி என்றால் என்ன?”.

“அது சுவரில் இருக்கும் ஒரு துளை தான். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, அதில் தெரியும் ஓவியம், உங்கள் கற்பனைக்கு எட்டாத பேரழகோடும், வசீகரத்தோடும் இருக்கும். அது தரும் பரவசத்தில் நீங்கள் தலை சுற்றிப் போவீர்கள்”, என்று பூனை பதிலளித்தது.

இதுவரை எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்த கழுதை, இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டது. இதற்குமுன் இந்த உலகில் அவ்வளவு அழகான பொருள் எதுவும் இருந்ததில்லை என்றும், இப்போதும் இருக்க முடியாது என்றும் கூறியது. அதோடு இல்லாமல், பூனை வேண்டுமென்றே நீண்ட நீண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அதன் அழகைப் பெரிதுபடுத்திக் காட்ட முயல்கிறது என்றும் கூறியது

 

. mirror_cat_is_watching_you_contemplate_b

கழுதையின் பேச்சு காட்டு விலங்குகளையும் சந்தேகப்பட வைத்துவிட்டது. அதனால் கோபமடைந்த பூனை, அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது.

அடுத்த இரண்டொரு நாட்கள் எந்த விலங்கும் இதைப்பற்றிப் பேசவில்லை. ஆனால், அந்த ஓவியத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் துளிர்விட்டது. அப்போது எல்லா விலங்குகளும் கழுதையைத் திட்டத் தொடங்கின. ‘உன் சந்தேக புத்தியால் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டாய். அந்த ஓவியம் அழகாக இருக்காது என்பதற்கு நீ ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா’ என்று கேட்டன. கழுதையோ அசரவே இல்லை. ‘நான் சொன்னது உண்மையா இல்லை அந்தப் பூனை சொன்னது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நானே சென்று அந்தச் சுவரில் உள்ள துளையைப் பார்த்துவிட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன்’, என்று அமைதியாகச் சொன்னது. காட்டு விலங்குகள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டன.

கழுதை அதைப் பார்க்கச் சென்றபோது அங்கே ஓவியமும் அதன் எதிரே கண்ணாடியும் இருந்தன. எங்கு நின்றுகொண்டு எதைப் பார்க்கவேண்டும் என்று தெரியாததால், கழுதை ஓவியத்திற்கும் கண்ணாடிக்கும் நடுவில் நின்றுகொண்டு கண்ணாடியைப் பார்த்தது. பார்த்துவிட்டு வந்து,

“அந்தப் பூனை சொன்னது சுத்தப் பொய்! அங்கே ஓவியமும் இல்லை சுவரில் துளையும் இல்லை, அங்கே இருந்தது ஒரே ஒரு கழுதை! அழகான கழுதை, என்னுடன் நட்பாகப் பழகியது, ஆனால் அது வெறும் கழுதைதான். வேறொன்றும் இல்லை”, என்று கழுதை தன் நண்பர்களிடம் சொன்னது.

“சரியாகப் பார்த்தாயா? அருகே சென்று பார்க்கவேண்டியது தானே?”, என்று யானை ஹாதி கேட்டது.

“விலங்குகளுக்கு எல்லாம் தலைவனே ஹாதி, நான் அதை நன்றாகப் பார்த்தேன், அருகே நின்று பார்த்தேன். எவ்வளவு அருகே என்றால் என் மூக்கால் அதன் மூக்கைத் தொடும் அளவிற்கு அருகே நின்று பார்த்தேன்”, என்று கழுதை, ஹாதி யானையிடம் கூறியது.

“ஒரே மர்மமாக இருக்கிறதே! இதற்கு முன்பு வீட்டுப் பூனை நம்மிடம் பொய் எதுவும் சொன்னதில்லையே. சரி, வேறு யாராவது சென்று பார்த்துவரட்டும். பாலு, நீ போய் அந்தத் துளையில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வா!”, என்று ஹாதி, பாலு என்ற கரடியிடம் சொன்னது.

பாலு கரடி சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது, “பூனை சொன்னதும் பொய். கழுதை சொன்னதும் பொய். அங்கே இருந்தது ஒரே ஒரு கரடி!”.

இதைக் கேட்ட எல்லா விலங்குகளுக்கும் ஆச்சரியம் அடைந்து, தாமே போய் பார்த்துப் பரிசோதனை செய்யவேண்டும் என்று விரும்பின. ஹாதி யானை ஒவ்வொரு விலங்காக அனுப்பியது.

முதலில், மாடு சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு மாடு தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

புலி சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு புலி தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

சிங்கம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிங்கம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

சிறுத்தை சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிறுத்தை தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

ஒட்டகம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு ஒட்டகம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.

இதையெல்லாம் கேட்ட ஹாதி யானைக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. தானே சென்று, உண்மை என்ன என்று அறிந்து வருவதாகக் கூறிச் சென்றது. திரும்பி வந்ததும், தன் ஆட்சியின் கீழ் இருக்கும் காட்டு விலங்குகள் எல்லாவற்றையும் பொய்யர்கள் என்று கடிந்து கொண்டது. மேலும், வீட்டுப் பூனையின் கெட்ட எண்ணத்தை நினைத்து ஆத்திரம் அடைந்தது. பின்பு சொன்னது, “ஒரு முட்டாளுக்குக் கூட இது தெளிவாகத் தெரியும், அங்கே இருந்தது ஒரு யானை மட்டுமே”.

[அமெரிக்க எழுத்தாளர் Mark Twain 1909-ல் எழுதிய ‘A Fable’ என்னும் நீதிக்கதையின் தழுவல் இது. ஒரு கலைப்படைப்பை அணுகும்போது, அதை நம் கற்பனை என்னும் கண்ணாடியைக் கொண்டு பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் பிரதிபலிப்பே  அந்தக் கண்ணாடியில் தெரிகிறது. நான் காண்பது மட்டுமே சரியானது என்று சொல்லமுடியுமா? ஒருவேளை, நம்மால் சில விஷயங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம். ஆனால், அவை படைப்பில் இருக்கும். இவ்வாறு இந்தக் கதையின் நீதியைப் புரிந்துகொள்ளலாம்.]

மார்க் ட்வெய்ன்

தமிழில் – ஈஸ்வர்
 

https://kanali.in/ஒரு-நீதிக்கதை/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் களத்தில் நடக்கும் சில தள்ளு முள்ளுகளைப் பிரதிபலிக்கும் கதை போல இருக்கிறதே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Justin said:

யாழ் களத்தில் நடக்கும் சில தள்ளு முள்ளுகளைப் பிரதிபலிக்கும் கதை போல இருக்கிறதே? 🤣

வாசித்தபோது அப்படித்தான் தெரிந்தது!

ஹாதி யாராக இருக்கும்?🧐

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

வாசித்தபோது அப்படித்தான் தெரிந்தது!

ஹாதி யாராக இருக்கும்?🧐

 

ஒவ்வொரு திரியிலும் ஒவ்வொரு ஹாதி இருக்க முடியும்!

ஹாதி என்பது ஒருவரல்ல! அது ஒரு வாழ்க்கை முறை! (இதை குணா படத்தில் வரும் "மனிதர் உணர்ந்து கொள்ள..." என்ற ஸ்ரைலில் சொல்ல வேண்டும்!🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கதையில் எனக்குப் பிடித்த வசனம்:

"..எங்கு நின்று கொண்டு எதைப் பார்க்க வேண்டுமென்று  தெரியாத கழுதை.."  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 "கழுதைக்கு.... தெரியுமா?  கற்பூர வாசனை...."என்று சொல்லி,  
அந்தப்  பெரியவர்... புர்,புர், என்று... பின் பக்கத்தால்.... சிரித்து விட்டு,
அமைதியாக... நடக்கிறதை, பார்த்துக் கொண்டு இருந்தார்.  😂  🤣

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான ஒரு நீதிக் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி கிருபன்.......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.